Pages

தொடர் புரட்சிகள்






புரட்சி.. புரட்சி.. எங்கே பார்த்தாலும் ஒரே புரட்சிமயமா இருக்கு!! முத முதல்ல, சூடான் நாட்டைப் பிரிக்கணும்னு ஆரம்பிச்சு அதுக்காக ஓட்டெடுப்பு நடத்தி, பிரிச்சேயாகணும்னு முடிவு பண்ணிட்டாய்ங்க. அடுத்து, எண்ணெய்க் கிணறுகளின் வருவாய் குறித்து ரெண்டு நாடுகளும் - வட, தென் சூடான்கள் - அடிச்சுக்காம இருக்கணும்.

அடுத்தது, துனீஷியா நாட்டுல, வேலையில்லாத் திண்டாட்டத்தால ஒரு இளைஞர் அரசு அலுவலகம் முன் தீக்குளிக்க, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியாலும், ஊழல்களாலும் வெறுத்துப் போயிருந்த அந்நாட்டு மக்கள் ஆரம்பிச்ச புரட்சி அந்த நாட்டுத் தலைவரை தப்பிச்சோம், பிழைச்சோம்னு நாட்டைவிட்டு ஓட வச்சுடுச்சு.

இப்ப, அந்தப் புரட்சி சூறாவளி கரைகடந்து, பக்கத்தில இருக்க எகிப்து நாட்டை  சுழட்டியடிச்சுகிட்டு இருக்குது. எகிப்து அதிபரின் வாரிசு (அடுத்த அதிபரா ஆகியிருக்க வேண்டியவர்) குடும்பத்தோட லண்டனுக்கு தப்பிச்சு ஓடிட்டார். 30 வருஷ அதிபர் முபாரக் ‘அஞ்சாநெஞ்சரா’ ஈடுகொடுத்து நிக்கிறார். எகிப்திலும் அதே பொருளாதார நெருக்கடியும், ஆட்சியாளர்களின் உறவினர்களின் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம்தான் பிரச்னை.

இன்னுமொரு அரேபிய நாடான ஏமனிலும் புரட்சியாளர்கள், 32 வருட ஆட்சியாளரான சாலேஹ்-விற்கு எதிராகத் தலைதூக்க ஆரம்பிக்க, கொஞ்சம் தட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், அதுவும் நீறு பூத்த நெருப்பாகத்தான் இருக்கு. புரட்சியிலும் இன்னொரு புரட்சியா, ஏமனில் புரட்சிக்குத் தலைமை தாங்குவது “தவக்குல்” என்ற பெண்மணி!! (பெண்)குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கிறதென்றும், தீவிரவாதிகளுக்குப் புகலிடம் என்றும் குற்றம் சாட்டப்படும் அரபு நாடான ஏமனில் இதுவே ஒரு பெரும்புரட்சியாகத் தெரிகிறது.


அந்த புரட்சி, இந்தப் புரட்சின்னு நாமெல்லாம் பள்ளிக் கூடத்துல வரலாறு பாடத்துல படிச்சுத்தாம் பார்த்திருக்கோம்.  நாம வாழுங்காலத்திலேயே பாக்கக் கொடுத்து வச்சிருக்கணும்!! என்ன ஒண்ணு, இந்த புரட்சிகள் எல்லாம் அந்தந்த நாட்டின் பிரச்னைகளுக்கு விடிவு தந்தால் சந்தோஷம்தான். காரணம், இந்த நாடுகளில் ஏற்கனவே சில தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வந்தாலும், இந்த அதிபர்கள்தான் அவற்றைக் கடுமையாக அடக்கி வச்சிருக்காங்க. அப்புறம், வாணலிக்குத் தப்பி அடுப்பில விழுந்த கதையா ஆகிடக் கூடாதுங்கிறதுதான் நம்ம கவலை.

இந்த நாடுகளின் பொதுவான பிரச்னைகள் என்னன்னா, பொருளாதாரத் தேக்கமும், வேலையில்லாத் திண்டாட்டங்களும் என்றாலும், நீண்டகாலமாக ஆட்சிபுரியும் ஆட்சியாளர்கள் மற்றும் உறவினர்களின் ஊழல்களும், வாரிசு அரசியலும்தான் முக்கிய காரணங்கள். பாவம், இந்த ஆட்சியாளர்களுக்கு இலவசங்களின் மகிமையை யாரும் சொல்லவில்லை போல!!

எகிப்திலும் போராட்டங்கள் ஒரு வாரமா நடந்துகிட்டிருந்தாலும், இணையம், தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, செய்திகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் அதிபரின் பிடி இறுக்கமாகத்தான் இருக்கிறது என்ற செய்திகள் ஒருபுறமும், இல்லையில்லை ராணுவமும் அவருக்கு எதிராக திரும்புகிறது என்ற செய்திகளும் வருகின்றன. என்ன நடக்கிறது பார்ப்போம். இதுக்கிடையில், சந்துல சிந்து பாடுன கதையா, ‘பிக் பாஸ்’ அமெரிக்காவும், புரட்சியாளர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் வேணும்னு தன் ஆதரவை மறைமுகமாத் தெரிவித்துள்ளது. ஆமை நுழைஞ்ச வீடுகூட உருப்பட்டுடும், அமெரிக்கா நுழைஞ்ச நாடு என்னாகும்னு, ஈராக் ஒண்ணே உதாரணம்!!

இந்தத் தொடர் புரட்சிகளைப் பார்த்து அரண்டு போயிருக்கும் நாடுகளில் ஒன்று சீனா!! அவசர அவசரமாக, தன் நாட்டு இணையத்தில் “எகிப்து ” என்ற வார்த்தையைத் தேடுயந்திரத்தில் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது.

புரட்சின்னதும், நம்ம நாட்டுல கம்யூனிஸமும், அப்புறம் கேரளாவும் கண்டிப்பா ஞாபகம் வரும்.  கேரளாவில கொஞ்ச நாள் முன்னாடி, கேரளாவில்  பிரபல வி-கார்ட் நிறுவனத்தின் தலைவர் கொச்சோஸஃப், தானே லோடுமேனாக மாறி, தன் நிறுவனத்திற்கு வந்த  வண்டியிலிருந்து சுமைகளை இறக்கினார்.  தமிழ்நாட்டிலதான் இலவசங்களாலும், நூறு நாள் திட்டத்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேங்குதுன்னா, அங்கே ஆட்கள் இருந்தாலும் வெளியிலிருந்து சிலர் தலையிட்டு செய்ய விடமாட்டேங்கிறாங்களாம். தொழிலாளர் பிரச்னைகள் தீராவிட்டால், வி-கார்ட் நிறுவனத்தை வேறு மாநிலத்திற்கு இடம் மாற்றப் போவதாகவும் சொல்லிருக்கார்.

தமிழநாட்டுல வீட்டு கட்டுமான வேலைகளுக்கு தினச்சம்பளம் 400 ரூபாயாம். உறவினர் ஒருத்தர், அமீரகம் வந்து இருவது வருஷங்களுக்குப் பிறகு, எல்லாக் குடும்பக் கடமைகளையும் முடிச்சுட்டு இப்பத்தான் இந்தியாவுல வீடு கட்ட முடிஞ்சிருக்கு. ஒரு வருசம்  முன்னாடி கட்ட ஆரம்பிச்சப்போ, 300 ரூபாயா இருந்தது, அப்புறம் 350 ஆகி, இதோ போன வாரம் பெட்ரோல் விலை கூடினதைக் காரணம் காட்டி(!!) 400 ஆக்கிட்டாங்க!! ”அட, அப்படின்னாலும் வேலைக்கு ஒழுங்கா வந்தாச் சர்தான்னு இருக்கு. ரெண்டு நா வந்தா, நாலு நாள் வரமாட்டேங்கிறாங்க. வேற எங்கயும் வேலைக்கும் போறமாதிரி தெரியலை. எப்படித்தான் அவங்களுக்குக் கட்டுப்படியாகுதோ”ன்னு புலம்புறார் அவர்.

இன்னொரு உறவினரின் வீட்டில் பராமரிப்பு வேலை நடக்கிறது. அங்கேயும் இதே கதைதான். வீட்டுத் தலைவி சொல்கிறார், “காலையில  9 மணிக்கு இங்கே வந்ததுக்கப்புறம் காலைச் சாப்பாடுக்கொரு முக்கா மணிநேரம். 11 மணிக்கு டீ டைம் அரைமணி நேரம். அப்புறம் லஞ்சுக்கு ஒரு மணிநேரம். 3 மணிக்கு டீ குடிக்கப் போனா, முக்கா மணி நேரம். அப்புறம், அஞ்சு மணிக்கே எல்லாத்தையும் ஏறக்கட்ட ஆரம்பிச்சிடுறாங்க. இப்பம்லாம் டீ குடிக்க வெளிய போவேணாமுன்னு சொல்லி, நானே வீட்டுல ரெண்டு வேளை டீ போட்டுக் கொடுத்துடுறேன். ஒரு மணிநேரம் கூடக் கிடைக்குமே? மொத்தத்துல ஒரு நாள்ல ஆறு மணிநேரம் வேலை பாத்தாங்கன்னா அதிகம். ஒரு வார்த்தைச் சொல்லிட்டோம்னா  அவ்ளோதான், அப்புறம் வேலைக்கு வரமாட்டாங்க. வேற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்க மின்ன பெரும்பாடு. வர்றவங்களும் நம்பிக்கையான ஆளா இருக்கணுமேயின்னு பயம். அதனால, என்னைய வாயத் தொறக்கக்கூடாதுன்னு எங்கூட்டுக்காரர் சொல்லிருக்கார். ஒவ்வொரு நாளும் கூலி கொடுக்கும்போது வயிறு எரியத்தான் செய்யுது. எங்கூட்டுக்காரருக்கென்ன கவுர்மெண்டு வேலையா இல்லை துபாய் காசா?” அவ்வ்வ்வ்... துபாய்ல மட்டும் மரத்துலயா காய்க்குது காசு?

இதன் விளைவுதானோ, பெரும் கட்டிடங்களின் பணிகளில் பீஹாரிகளும், நேப்பாளிகளும், வடகிழக்கு மாநிலத்தவர்களும் தமிழகத்தில் பெருமளவில் காணப்படுகிறார்கள்? இப்படியே போனால், இங்கும் வெளிமாநிலத்தவர்களை வேலைக்குக் கூட்டி வரக்கூடாதென்று தாக்கரே-பாணி புரட்சி  வெடித்தாலும் ஆச்சர்யமில்லை.

கேரளத்துக்கதையொன்று: வறுமையில் வாடும் வயதான அம்மா, தன்னைக் கவனிக்காத மகனிடம், “மகனே! உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்? சுடுசோற்றை உனக்குத் தந்துவிட்டு, வெறும் கஞ்சியை நான் குடித்தேனே!” என்று சொல்ல,  மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்?” என்றானாம்.

  

Post Comment

32 comments:

அரபுத்தமிழன் said...

புரட்சித்தலைவி ஹுசைனம்மா வாழ்க :)

அரபுத்தமிழன் said...

//சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்//

ஸ்பெக்ட்ரத்தையே முழுங்கி விட்டு வெறும் டீவி மட்டும்தானே தந்தீர் என்று
தமிழகப் பிள்ளை அரசாங்கத்தாயிடம் சொல்லுதோ.:)

வல்லிசிம்ஹன் said...

சூப்பர் ஹுசைனம்மா. நீங்க தோட்டம் போடுறதையும் செய்து கிட்டு,பதிவு எழுதற வேகத்தையும் பார்த்தா,அடுத்தாப்புல இன்னும் ஒரு திட்டம் வச்சு இருக்கீங்கான்னு புரியுது.
அதான் புரட்சித் தலைவி பட்டம் வந்துட்டது.
நம்ம ஊரு ஆளுங்களைப் பத்தி எழுதி இருக்கிறது அத்தனையும் கரெக்ட்.ரொம்ப நாட்களாப் பழகினவங்களே இப்ப ஒரு இருவரா வந்து செய்து இரட்டைக் கூலியும் வாங்கிட்டுப் போறாங்க.
நல்லா இருக்க்ப் பதிவு வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

இங்கேயும் மண்ணின் மைந்தர்கள் செய்யும் நக்ரா கொஞ்ச நஞ்சமில்லை.. அதனாலதான், வெளியாட்கள் வர்றாங்க. அவங்களையும் சேனை துரத்தறது :-(

அமுதா கிருஷ்ணா said...

அருமையான மகன்..

ஸாதிகா said...

//கேரளத்துக்கதையொன்று: வறுமையில் வாடும் வயதான அம்மா, தன்னைக் கவனிக்காத மகனிடம், “மகனே! உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்? சுடுசோற்றை உனக்குத் தந்துவிட்டு, வெறும் கஞ்சியை நான் குடித்தேனே!” என்று சொல்ல, மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்?” என்றானாம்.
// ஏன் ஹுசைனம்மா இதனையும் புரட்சின்னா சொல்லுறீங்க?

Thenammai Lakshmanan said...

சரியா சொன்னீங்க ஹுஸைனம்மா.. வேலையாட்கள் படுத்துவதும் இப்படித்தான் இருக்கிறது ..

அப்புறம் இந்தமாதிரி ஆட்கள் சேர்ந்து மண்ணின் மைந்தர்கள்தான் பணிபுரியவேண்டும் என்று போராட்டம் வேறு..

தமிழ் உதயம் said...

சர்வாதிகாரிகள், ராணுவ தளபதிகள் ஒரு நாள் புரட்சிக்கு முகம் கொடுத்து தான் ஆகணும். உலகெங்கும் அது தான் நடக்கிறது. ஜனநாயகம் போன்ற அருமருந்து எது,

தமிழக அரசின் இலவசங்கள், மற்றும் சில திட்டங்கள் தமிழர்களை மிக சோம்பல் படுத்தி விட்டது. அதன் விளைவே நீங்கள் சொன்னது. சமூக அக்கறையுடன் நல்ல பதிவு.

அன்புடன் மலிக்கா said...

புரட்சிகளின் அணிவகுப்புகள் தொடர்கிறதோ. மகனே என்ன சொல்ல உன்னை . அப்படின்னு அம்மாவின் மனம் சொல்வதுபோல் கேட்குது

கோமதி அரசு said...

//இந்த ஆட்சியாளர்களுக்கு இலவசங்களின் மகிமையை யாரும் சொல்லவில்லை போல!!//

நல்லா சொன்னீங்க! இதை தெரிந்து கொள்ளவில்லையே.

கேரள கதை அருமை.

Avargal Unmaigal said...

தமிழ் நாட்டுல புரட்சியா நோ சான்ஸ். தமிழ் நாட்டுகாரனுக்கு மனதில் திடமும் உடம்பில் வலுவும் கிடையாது. நல்லதுக்கெல்லாம் தமிழன் புரட்சி பண்ணமாட்டான் இலவசம் ஏதும் கிடைக்கலானாதான் அல்லது ரஜினி படத்தில் நடிக்கலைனாதான் கொஞ்சம் சவுண்டு வுடுவான்

Prathap Kumar S. said...

//புரட்சித்தலைவி ஹுசைனம்மா வாழ்க//

hahaha....அப்போ புரட்சி பத்தி எழுத்தித்தான் புரட்சி தலைவி ஆகுறாங்களா....தெரியாம பேச்சே:)

//இங்கும் வெளிமாநிலத்தவர்களை வேலைக்குக் கூட்டி வரக்கூடாதென்று தாக்கரே-பாணி புரட்சி வெடித்தாலும் ஆச்சர்யமில்லை//

இப்பவும் நடந்துகொண்டுதானிக்கிறது. நிறைய பார்த்திருக்கேன்... மற்ற மாநிலத்தவர்கள் வேலைபார்த்தாலும், சம்பளம் லோக்கல் ஆளுங்களுக்கு கொடுக்கனுமாம்...எப்படி இருக்கு.

வி-கார்ட் பிரச்சனை ஏஷியாநெட்டில் பார்த்தேன்....கேரளாவுல இது ஒரு உளுத்துப்போன மேட்டர். பெரிய கம்பெனியானதால மீடியா வரைக்கும் வந்துச்சு...அவ்ளோதான்...

Chitra said...

கேரளத்துக்கதையொன்று: வறுமையில் வாடும் வயதான அம்மா, தன்னைக் கவனிக்காத மகனிடம், “மகனே! உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்? சுடுசோற்றை உனக்குத் தந்துவிட்டு, வெறும் கஞ்சியை நான் குடித்தேனே!” என்று சொல்ல, மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்?” என்றானாம்.


.....உங்கள் ஒவ்வொரு பதிவும், மிகவும் சுவாரசியமானது. தொடர்ந்து அசத்துங்க. பாராட்டுக்கள்!

Vidhya Chandrasekaran said...

\\புரட்சித்தலைவி ஹுசைனம்மா வாழ்க :)\\

நானும் கூவிக்கிறேன்:)

CS. Mohan Kumar said...

//இப்படியே போனால், இங்கும் வெளிமாநிலத்தவர்களை வேலைக்குக் கூட்டி வரக்கூடாதென்று தாக்கரே-பாணி புரட்சி வெடித்தாலும் ஆச்சர்யமில்லை//
.நடக்காது; நாம் எப்போதும் வந்தோரை வாழ வைப்போம்..

தராசு said...

இலவச டி.வி. இருக்கு, அப்புறம் டாஸ்மாக் இருந்தே இருக்கு, ஒரு ரூபாய்க்கு அரிசி இருக்கு, அப்புறம் எங்கிருந்து புரட்சியைப் பத்தி யோசிக்க....

புரட்சியெல்லாம் சொரணை இருக்கறவன் பண்ரது, எங்களுக்கு எங்க தலைவன் படம் அடுத்து எப்ப ரிலீஸ் ஆகும், எங்க எப்ப எவ்வளவு பெரிசா பேனர் கட்டணும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகமா, இல்ல வெறும் மாலையே போதுமா, ......
இப்பிடி கவலைப் படறதுக்குனு நெறய விஷயங்கள் இருக்கு ஹுஸைனம்மா.

நீங்க வேற புரட்சி அது இதுன்னு பேசிகிட்டு,,, கொஞ்சம் சும்மா இருப்பீங்களா?????

எம் அப்துல் காதர் said...

புரட்சி நடந்திருந்தா இந்நேரம் தமிழ் நாடு முன்னேறி இருக்குமே ஹுசைனம்மா!!

vanathy said...

//புரட்சி நடந்திருந்தா இந்நேரம் தமிழ் நாடு முன்னேறி இருக்குமே ஹுசைனம்மா!!//
repeatu...

R.Gopi said...

ஒற்றுமையே உயர்வுக்கு வழி என்பதை உணராத மக்கள் உள்ள நாடுகள் இது போன்ற பிரிவினைவாதிகளிடம் சிக்கி தன் தாய்நாட்டையே கூறு போடுவது காண சகிக்கவில்லை...

வர வர உலகில் சகிப்பு தன்மை என்பது குறைந்தோ / மறைந்தோ விட்டதோ!!?

ஹுஸைனம்மா said...

அரபுத்தமிழன் - பட்டமெல்லாம் சரிதான்; காலில் விழுவதற்கு ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டீர்களா??

வல்லிம்மா - நன்றி. ஆனா, வேற எந்தத் ‘திட்டமும்’ இல்லை, நம்புங்க. அதெல்லாம் நமக்குச் சரிவராது.

அமைதிசாரல் - ஆமா, ‘சேனைகள்’ துரத்துவதற்குத்தானே? ;-))))

ஹுஸைனம்மா said...

அமுதாக்கா - ஆமா, ‘புரட்சி’ மகனாச்சே!!

ஸாதிகாக்கா - கதைப் புரட்சி அது!!

வெங்கட் சார் - நன்றி.

தேனக்கா - சில வேலையாட்கள் படுத்தும் பாடு - சொல்லி முடியாது!!

ஹுஸைனம்மா said...

தமிழ் உதயம் - தற்போது புரட்சி நடக்கும் நாடுகளில் ‘ஜனநாயகம்’தான் நடக்கிறது, அதான் கொடுமையே!! நன்றி.

மலிக்கா - வாங்கப்பா. நீங்க பண்ற புரட்சி தனிக்கதை!! :-))))

கோமதிக்கா - வாங்க. அதானே, இது தெரியாம என்ன அரசியல் பண்றாங்களோ!! :-)))

அவர்கள்-உண்மைகள் - சேம் பிளட்!! நன்றி.

ஹுஸைனம்மா said...

பிரதாப் - புரட்சி பத்தி எழுதவும் தனித்திறமை வேணும் தெரியுமா? அதனாலத்தான் சரியான பட்டம் சரியானவங்களைத் தேடி வந்திருக்கு!! யூனியன்காரங்க சிலசம்யம் பண்ற அழும்பு பொறுக்க முடியல!!

சித்ரா - நன்றிப்பா.

வித்யா - கூவினதை மைண்ட்ல வச்சிக்கறேன்!!

மோகன் - வந்தாரை வாழவெச்சிட்டு, நாம வேற மாநிலத்துக்கு/நாட்டுக்குப் போய்டுவோம், அப்படித்தானே? :-))))))

ஹுஸைனம்மா said...

தராசு - அதானே, நான் சும்மா இருக்கமாட்டாமே...

அப்துல்காதர் - அது என்ன புரட்சிங்கிறதைப் பொறுத்துதான் முன்னேற்றமா இல்லையான்னு தெரியும்!!

வானதி - வாங்க; நன்றி.

ஆர்.கோபி - ஒற்றுமையாத்தானே இப்ப போராட ஆரம்பிச்சிருக்காங்க? “பொறுத்தது போது பொங்கியெழு”ன்னு...

RAZIN ABDUL RAHMAN said...

நல்ல புரட்சி...

/புரட்சித்தலைவி ஹுசைனம்மா வாழ்க :)/

வாழ்க வாழ்க...

அன்புடன்
ரஜின்

போளூர் தயாநிதி said...

அருமையான மகன்..

Anisha Yunus said...

எகிப்தை அமெரிக்கா கை கழுவி விட்டதையும், ஜனநாயகத்தை கொண்டு வான்னு அறிக்கை விட்டதையும் (இல்லைன்னா இன்னொரு ஈராக் தயார்), அதே நேரம் மிக கவனமான வார்த்தைக?ளை போட்டு யெமெனுக்கு அறிக்கை கொடுத்ததையும் கவனிச்சீங்களா???

ஆதி மனிதன் said...

//அந்த புரட்சி, இந்தப் புரட்சின்னு நாமெல்லாம் பள்ளிக் கூடத்துல வரலாறு பாடத்துல படிச்சுத்தாம் பார்த்திருக்கோம். நாம வாழுங்காலத்திலேயே பாக்கக் கொடுத்து வச்சிருக்கணும்!! //

அது என்னவோ உண்மைதான். ஆனா இந்த புரட்சியெல்லாம் நாம எங்க நேர்ல பாக்கறது? அது மாதிரி இந்தியாவிலும் ஒரு வாட்டி வந்தா இந்த அரசியல் வியாதிகள் திருந்துவார்களோ என்னவோ?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice post akka..

ஸ்ரீராம். said...

எங்கே குழப்பம் இருக்கோ அங்க போய் ஆதாயம் பார்க்க அமெரிக்கப் பெரியண்ணன் ரெடி!

இராஜராஜேஸ்வரி said...

புரட்சிப் பதிவு.
வேலையாட்கள் ஏமாற்றுதல் அனைவருக்கும் ஏற்படும் அனுபவம்.

ஹுஸைனம்மா said...

ரஜின் - நன்றி!!

போளூர் தயாநிதி - ஆமா டாக்டர், அருமையான மகன்!!

அன்னு - அமெரிக்கா இப்ப ‘(ஈராக்/ஆஃப்கானிஸ்தான்) சூடு கண்ட பூனை’யாக ஆகிடுச்சோ?

ஆதிமனிதன் - நன்றி.

அப்பாவி தங்ஸ் - நன்றி.

ஸ்ரீராம் சார் - அதானே!!

இராஜராஜேஸ்வரி - நன்றிங்க. உங்க பேரை எழுதும்போதே ஒரு கம்பீரம் வருது!!