Pages

காதலர் தினம் - அஞ்சலிக் கவிதைகள் எழுதவா?





காதலர் தினமாம் இன்னிக்கு. காதல்ங்கிறது கல்யாணத்துக்கு முன்னாடி மட்டுமே செய்ற விஷயமா இருந்தது போய், இப்ப கல்யாணத்துக்கு அப்புறமாவும் செய்ற விஷயமா ஆகிடுச்சு!! சரிதானே, கல்யாணத்துக்கு அப்புறந்தானே கணவன் - மனைவியிடையே காதல், புரிதல் அதிகமா இருக்கணும்னு பின்னூட்டம் போட ரெடியானீங்கன்னா, ஸாரி, நீங்க ரொம்ம்ம்ப அப்பாவியாருக்கீங்க இன்னும் - என்னை மாதிரியே!!

கல்யாணத்துக்கப்புறம் அடுத்தவரைக் காதலிப்பதுதான் இப்ப அதிகமாகிட்டிருக்கு. சில ‘பெரீய்ய்ய மனசுள்ள’ இளைஞர்களும் கல்யாணமாகி, பிள்ளைகள் பெற்றாலும் பரவாயில்லை; என்னோடு வந்துடுன்னு பெண்கள் முன்னே தியாகியாகிடுறாங்க!! அப்பேர்ப்பட்ட தியாகிகள் கிடைத்தவுடன், இவுங்களும் தன் தற்போதைய கணவன் -பிள்ளைகளை விஷம் வச்சுக் கொன்னுட்டு, கிளம்பிடுறாங்க!! ஆண்களைப் போல குடும்பத்தை அம்போன்னு விட்டுடாமப் போறாங்களாமாம்!!

இப்ப லேட்டஸ்டா உள்ள ட்ரெண்ட் என்னன்னா, காதலர் தினம்கிறது, தன் முன்னாள் காதல்(என்ற தவறான புரிதல்)களை நினைவுகூர்ந்து அஞ்சலிக் கவிதைகள்  எழுதுவதுற்குத்தானாம்!! அதிலும், மூணாங்கிளாஸ் படிச்சப்போ, பக்கத்து பெஞ்ச் மகேஸ்வரி, ஒழுகும் மூக்கைத் துடைத்த கையைத் துடைக்காமலே தந்த தேன்மிட்டாயை, நீ தொட்டுத் தந்ததால்தான் தேன்மிட்டாய் இனிப்பு இன்னும் என் நாவில் தித்திக்கிறதோ (கருமம், அதுக்கப்புறம் பல்லே விளக்கலையோ?? தொடாமத் தந்தாலும் தேன்மிட்டாய் இனிக்கத்தானேடா செய்யும்?)ன்னு கவிதையெழுதத்தான் காதலர் தினமாம்!!


அநேகப் பதிவர்களின் பதிவுகளைப் பாத்தீங்கன்னா, பழைய காதல்களை, அல்லது சிறுவயது பெண் நட்புகளை காதலா அர்த்தப்படுத்தி, அதைப் பாராட்டி, சிலாகித்து, அல்லது ஏங்கி, கவிதை/கதை/பதிவு எழுதுறாங்க. ஏன் பழசுலயே உழண்டுகிட்டிருக்காங்க இன்னும்? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை அமைந்த பின்னும் பழசை நினைச்சுகிட்டிருந்தா வாழ்க்கை எப்படி சுகிக்கும்?

பெண்கள், தற்காலத்துலே, எல்லா ஆண்களுக்கும் இப்படியொரு முன்கதை இருக்கும்னு புரிஞ்சுகிட்டாலும், அது ஒரு சின்ன வயசு infatuationதான்; தன்னைத்தான் தன்னவர் முழுமையா விரும்புறாருன்னுதான் நம்பிகிட்டிருக்காங்க. ஆனா, திருமணம் செஞ்சு செட்டிலாகி பலவருடங்கள் ஆன பின்னும் இப்படி பழங்கதைகள் பேசினா, நிச்சயம் பிரச்னைதான் வரும். அப்புறம், அரசனை நம்பி, புருஷனைக் கைவிட்ட கதைதான்!!

இப்போ ஆணுக்கு நிகர் பெண்ணென்று சொல்வதாலயோ என்னவோ, இப்போவெல்லாம் கதைகளில் (நல்லவேளை கதைகளில் மட்டும்) பெண்களும் அப்படி முந்தைய ஆண் நட்பைத் தம் கணவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதாகக் கதைகளில் எழுதுகிறார்கள். கல்லானாலும்.. புல்லானாலும்... என்ற ரகமல்ல நான். எனினும், இது பொறுக்க முடியாததாக இருக்கிறது.

என் கணவரைவிட மிகைத்தவர்கள் இருக்கலாம்; இருப்பார்கள்; எனினும், என்னவரிடம் உள்ள சிறந்த குணங்களை நினைத்துப் பார்த்து, திருப்தியடைந்து மகிழ்ச்சிகொண்டு, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

சில நாட்களுக்குமுன் ஒரு பிரபல பதிவில் ஒரு கதை வாசித்தேன். தன் கணவர் நல்லவரேயாயினும், தன் நண்பனிடம் தான் ரசித்த சில கலகலப்பான குணங்கள் இல்லாததால், அந்நண்பனின் நினைவோடே வாழ்கிறாள். அவனைச் சந்திக்க நேரும்போது, அதை அவனிடம் குறிப்பால் உணர்த்தவும் செய்கிறாள்.  இக்கதையை அநேகர் பாராட்டி, சிலாகித்து எழுதியிருந்தனர். நல்ல எழுத்தோட்டமுள்ள கதை. எழுதியவர் திறமையானவர், அதனால் வசீகரமான எழுத்துக்கும், ரசனைக்கும் கேட்கவேண்டுமா?

நான் அவரின் திறமைக்குமுன் ஒன்றுமில்லைதான். விமர்சிக்கக்கூடத்  தகுதியில்லையென சிலர் வாதிடலாம். எனினும், இக்கதைக்கருவை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

இதேபோல, இன்னொரு பதிவர், தன் எழுத்தார்வமில்லா மனைவியை, தன் நண்பரின் எழுத்தாள மனைவியோடு ஒப்பிட்டிருந்தார் ஒரு பதிவில். இதைச் சுட்டிக்காட்டி நான் எழுதிய பின்னூட்டத்தை வெளியிடாமல், ”என்னைப் பற்றிய முன்முடிவோடு எழுதுகிறீர்கள்” என்று பதில் அனுப்பினார்!! அவரை எனக்கு அவரின் பதிவு மூலம்தான் தெரியும். அவர் மனைவியையும் அவர் எழுதிய பதிவுகளின் மூலம்தான் தெரியும். அப்புறம் எப்படி முன்முடிவு செய்ய முடியும்?

ஒப்பிடுதல் என்பது குழந்தைகளுக்கே செய்யக்கூடாது என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஏன், சொந்த சகோதரன்/சகோதரியோடுகூட ஒப்பிடாதீர்கள் என்கிறார்கள். எனில், கணவன்/மனைவியை ஒப்பிட ஆரம்பித்தால்? ஒரு மனைவி, “எங்க அப்பா வீட்டில..”ன்னு ஆரம்பிச்சாலே வீட்டு ஆணுக்கு எகிறும். அதுவே, பிற ஆணோடு ஒப்பிடுவதென்பது எதில் கொண்டு விடும் என்று தெரியாதா? 

அதேபோலத்தான் பெண்களுக்கும் இருக்கும். “என்னவானாலும் எங்கம்மா கைப்பக்குவம் உனக்கு வராது”ன்னு அம்மாவோட தன்னை ஒப்பிடுவதே வீட்டில் வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தும். அப்படியிருக்க, விவரமில்லா வயதில் கண்ட பெண்களோடு ஒப்பிட்டால்? இல்லை, இது ஒப்பு இல்லை; அது ஒரு அனுபவம், சம்சார சாகரம் இன்னொருவித அனுபவம் என்பவர்களுக்கு - நீங்க சொல்றது என்னன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா? நீங்க இப்ப நினைச்சுப் பார்க்கிற அந்தக் கால காதலி இன்னிக்கு இன்னொருவருக்குச் சொந்தமானவர். பிறன்மனை நோக்கா பேராண்மைங்கிற ஒழுக்கம், உங்க மனைவியைப் பார்க்கிறவங்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தேவையே!!

ஒன்றிருக்கும்போதே நாம் இன்னொன்றை நினைவு கூறுகிறோம்னா, அதற்கு நாம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையவில்லை, அல்லது கிடைத்திருப்பதின் அருமையை அறியவில்லை என்றே பொருள். பொருளுக்கே இப்படின்னா, கவனமாக் கையாளப்படவேண்டிய உறவுகளுக்கு?



Post Comment

65 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மிக துனிச்சலான பதிவு
தமிழகம் போகிற திசைகளை நல்ல நக்கலான வசைமொழிகளோடு எழுதியிருக்கிறீர்கள்

”விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக,அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது”
அல்குர்ஆன் 17:32

என்று இறை வசனம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது

ரொம்ப நன்றி சகோ

Avargal Unmaigal said...

காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையில் வேறுவிதமாக தெரிகிறது. உங்கள் பார்வையில் பட்டகாதல் அது எல்லாம் காதல் அல்ல சாக்கடை.. என் ப்ளாக்கிற்கு வந்து படித்து பாருங்கள். அதன் பின் காதல் என்ன வென்றால் தெரியும்

http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_14.html

முடிந்தால் Note Book என்ற ஆங்கில படத்தை பாருங்கள். அந்த காதலை பார்த்து உங்கள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்.

R. Gopi said...

நல்ல பதிவு ஹுசைனம்மா.

நான் இதை மனதில் வைத்துத்தான் இந்த இரண்டு சிறுகதைகள் எழுதினேன்.

நீங்க சொல்லும் அளவிற்கு அழுத்தமாக நான் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது.

சமயம் கிடைக்கும்போது படியுங்கள். நன்றி.

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_26.html

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_28.html

ILA (a) இளா said...

தொவைச்சு காயப் போட்டுடீங்க போங்க.
//பழைய காதல்களை, அல்லது சிறுவயது பெண் நட்புகளை காதலா அர்த்தப்படுத்தி, அதைப் பாராட்டி, சிலாகித்து, அல்லது ஏங்கி//
நச்

அம்பிகா said...

நகைசுவையாகவும், நக்கலாகவும் இருந்தாலும், அருமையான பதிவு. அவசியமானதும் கூட.

Anonymous said...

WOW!

Prathap Kumar S. said...

நீங்க ஒரு பிற்போக்குவாதி. அப்படின்னு நான் சொல்லலை யாராச்சும் சொல்லலாம்.:))

என்னமோ போங்க... நிறைய கதைகளை உக்காந்து படிக்கிறீங்கனு தெரியுது....... வேற வேலைக்கு முயற்சி பண்ணலையோ...:))

பீர் | Peer said...

தமிழ் குடி'தாங்கிப் பதிவர்களின் அடுத்த இலக்கு நீங்கதான்.

@பிரதாப், LOL.

தமிழ் உதயம் said...

எதை வேண்டுமானாலும் ஓப்பிடலாம். வாழ்க்கையை துணையை ஒப்பிட்டு பார்த்தல் சரியல்ல.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஸாரி, நீங்க ரொம்ம்ம்ப அப்பாவியாருக்கீங்க இன்னும் - என்னை மாதிரியே!!//

ஹி ஹி.. நானும்..

//ஏன் பழசுலயே உழண்டுகிட்டிருக்காங்க இன்னும்? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை அமைந்த பின்னும் பழசை நினைச்சுகிட்டிருந்தா வாழ்க்கை எப்படி சுகிக்கும்?//

நினைவு கூறுதல்.. அவ்வளவே.. அதுலயே உழண்டுகிட்டு இருக்காங்கன்னு ஏன் நினைக்கணும்?

//தன்னைத்தான் தன்னவர் முழுமையா விரும்புறாருன்னுதான் நம்பிகிட்டிருக்காங்க//
மனைவிகளும் படிப்பாங்கன்னு தான் தோணுது..

நீங்க சொல்லியிருக்கும் இடுகைகளை நான் படித்ததில்லை. அப்படியே வாசித்திருந்தாலும், அது அந்தக் கதை மாந்தர்களின் மனநிலையைச் சொல்வதாகவே கடந்து போயிருப்பேன். சரி என்றோ தவறு என்றோ அவர்கள் நமக்காவோ அல்லது நாம் அவர்களுக்காகவோ பேசிட முடியாது.. நாம் நம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து கொள்ள வேண்டியது தான்..

ஒப்பிடுவதில் எனக்கும் ஏற்பில்லை..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நான் படிச்சதுலையே வித்தியாசமான காதலர் தின பதிவு... ஆன நல்ல மெசேஜ் அக்கா... நல்லா எழுதியும் இருக்கீங்க... :)

GEETHA ACHAL said...

அருமையாக சொல்லி இருக்கின்றிங்க...

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நீங்க சொன்னது போன்ற பழைய கதைகள் இப்போதான் 3 பதிவுகளில் படித்துவிட்டு எரிச்சலோடு உங்க பக்கம் வந்தால் நல்லா சுளுக்கு எடுத்திருக்கிறீர்கள் :) வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா! (நீங்க சொன்ன) விட்டுப்போன இன்னொரு பாயிண்ட்டும் சேர்த்துவிட்டேன், பார்த்தீர்களா?

http://payanikkumpaathai.blogspot.com/2011/02/blog-post_13.html

ஸ்ரீராம். said...

//"ஆண்களைப் போல குடும்பத்தை அம்போன்னு விட்டுடாமப் போறாங்களாமாம்!"//

ஹா..ஹா..

தேன் மிட்டாய் கதை சிரிப்பு வந்தது. பழையகதை எப்பவும் ஞாபகம் வராது. இந்த மாதிரி ஸ்பெஷல் நாள் வந்தால் எதையாவது தோண்டி எடுத்து நினைவு 'படுத்துவார்கள்' என்று நினைக்கிறேன்!

//"ஒரு மனைவி, “எங்க அப்பா வீட்டில..”ன்னு ஆரம்பிச்சாலே வீட்டு ஆணுக்கு எகிறும்"//

//"“என்னவானாலும் எங்கம்மா கைப்பக்குவம் உனக்கு வராது”ன்னு அம்மாவோட தன்னை ஒப்பிடுவதே வீட்டில் வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தும்"//

உணர்ந்த, ரசித்த வரிகளில் சில. கடைசி பாராவும் அருமை. நகைச்சுவையாய் ஆரம்பித்து நன்றாக சாடியுள்ளீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலைப்பிலேயே அடிச்சிட்டீங்களெ..?:)

ஷர்புதீன் said...

:)
வருகையை பதிவு செய்ய ..

தராசு said...

ஹுஸைனம்மா,

விடுங்க, இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க.

நீங்க சொல்றதையெல்லாம் பார்க்கும் போது நாஸ்டால்ஜியாங்கறது ஒரு வகை வியாதியோன்னு தோணுது.

இப்ப இருக்கற இந்த பிறன் மனை நோக்கும் பண்பை, இதுவும் கடந்து போகும்னு விட்டுட்டு கடந்து போறது கஷ்டம்தான், ஆனால் இந்த ஆலகால விஷத்தை ஜீரணித்து தொலைக்க வேண்டியிருக்குது. பார்ப்போம், எதுவுமெ நிரந்தரமில்லைதானே....

Vidhya Chandrasekaran said...

தேன் மிட்டாய் - ROFL:)))))))))))

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு ஆட்டோகிராஃப் படம் பிடிக்காதுன்னு நினைக்கிறேன்.

அரபுத்தமிழன் said...

ஆஹா, புரட்சித் தலைவி பட்டம் நல்லா வேலை செய்யுதே :)) Jokes Apart.

ஹுசைனம்மா, கோபமாகச் சொல்லப் படும் விஷயம் காதலர்களைத்
திருத்துமா என்று தெரிய வில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹுஸைனம்மா said...

LK
by mail

show details 10:32 AM (32 minutes ago)

ஹுசைனம்மா நல்ல கருத்தாழமிக்க பதிவு . இன்றைக்கு இருக்கறதை விட்டு விட்டு பறக்கறதுக்கு அலையராங்கலோன்னு தோணுது .

நாஸியா said...

ஸ்ஸ்ஸ்.... அப்பா!!! செம்ம சூடு!

Loved reading it!!!!

ஸாதிகா said...

தலைப்பைப்பார்த்தௌமே எப்படி எழுதப்போறீங்க என்று யூகித்து விட்டேன்.சூப்பர் ஹுசைனம்மா.உங்கள் தைரியத்திற்கு ஒரு ராயல் சல்யூட்.

சிநேகிதன் அக்பர் said...

//கல்யாணத்துக்கப்புறம் அடுத்தவரைக் காதலிப்பதுதான் இப்ப அதிகமாகிட்டிருக்கு. சில ‘பெரீய்ய்ய மனசுள்ள’ இளைஞர்களும் கல்யாணமாகி, பிள்ளைகள் பெற்றாலும் பரவாயில்லை; என்னோடு வந்துடுன்னு பெண்கள் முன்னே தியாகியாகிடுறாங்க!! அப்பேர்ப்பட்ட தியாகிகள் கிடைத்தவுடன், இவுங்களும் தன் தற்போதைய கணவன் -பிள்ளைகளை விஷம் வச்சுக் கொன்னுட்டு, கிளம்பிடுறாங்க!! ஆண்களைப் போல குடும்பத்தை அம்போன்னு விட்டுடாமப் போறாங்களாமாம்!!//

இது நிச்சயமாக சமுதாய சீரழிவுதான்.

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் பதிவின் மையக்கருத்து மிக உண்மை. ஆனால் அதை கவிதைகளோடு சம்பந்தப்படுத்தி பார்ப்பதுதான் முரணாக இருக்கிறது.

☀நான் ஆதவன்☀ said...

:)) ஆவ்வ்வ் இனி கதை எழுதும் போது கூட கவனமா இருக்கனும் போலயே :)

எம் அப்துல் காதர் said...

அவசியமானதும், அறிவுறுத்தலுடன் கூடிய பதிவு!!

கோமதி அரசு said...

நல்ல பதிவு ஹீஸைனம்மா.

ஹுஸைனம்மா said...

ஹைதர் அலி - வ அலைக்கும் ஸலாம். நன்றி ஹைதர்.

அவர்கள் உணமைகள் - நன்றிங்க.

கோபி - அந்தக் கதையை நானும் வாசிச்சேங்க; பின்னூட்டம்தான் போடலை. ரொம்பப் பிடிச்சிருந்துது. அதேதான் நான் சொல்லியிருப்பது இந்தப் பதிவில். அந்தப் பெண்கள் தத்தம் வாழ்வை அழகாகத் தொடர்ந்துகொண்டிருக்க, இவர்களால் ஏன் அவர்களைப் போல கொண்ட மனைவியை மட்டும் கொண்டாடமுடியவில்லை?

இளா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அம்பிகா - வாங்க. நன்றி.

அனாமிகா - நன்றி.

பிரதாப் - யார் என்னவாதின்னு பேர்சூட்டுனாலும், உள்ளது உள்ளபடி சொல்லத்தான் செய்வேன்.
வேறு வேலை தேடிகிட்டுத்தான் இருக்கேன். வேலைக்குப் போயிருந்தபோது பிளாக்கை வலம்வந்த அளவு, வீட்டில இருக்கும்போது முடியலை, அதான்!! :-))))))

ஹுஸைனம்மா said...

பீர் - அட, வாங்க. தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கே! தொடருமா?
”மருத்துவக் குடிதாங்கி ஐயா” தெரியும். இதுயாரு, “தமிழ்க் குடிதாங்கி”? எதுவானாலும், நாம இடிதாங்கிதான், ஸோ, நோ வொர்ரீஸ்!! :-)))

தமிழ் உதயம் - நன்றிங்க. வாழ்க்கைத் துணையை ஒப்பிடுவது குடும்பத்தில் நல்ல விளைவ்கள் ஏற்படுத்தாதுதானே?

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - எப்பவுமே “மாத்தி யோசி”தான் நீங்க!! குட்!!
//நினைவு கூறுதல்.. அவ்வளவே//
வருஷா வருஷம் (அதுவும் கரெக்டா பிப்-14) நினைவுகூற இதென்னா வருடாந்திர நினைவு நாளா? அதுகூட நம் உறவுகளை நினைவுகூறத்தான் அந்த சம்பிரதாயங்களெல்லாம்!!

சம்பந்தப்பட்ட இடுகைகளை மனைவி வாசித்திருந்தாலும், அதை எத்தனை பேரால், பாதிப்பில்லாமல், சாமான்யமாகக் கடந்து வந்துவிட முடியும்? இன்றில்லாவிட்டாலும், அது என்றாவது ஒருநாள் ஒரு விரிசலுக்கு வழிவகுக்கவே செய்யும்.

எதற்காகவும், யாருக்காகவும் நாம் பேசி மாற்ற முடியாதுதான். ஆனா, ஊதுற சங்கை ஊதுவோம்னு தோணுமில்லையா?

ஹுஸைனம்மா said...

அப்பாவி தங்ஸ் - நன்றிப்பா.

கீதா - நன்றிப்பா.

அஸ்மாக்கா - வ அலைக்கும் ஸலாம். நன்றிக்கா. ஆமா, அதைக் கவனித்தேன்.

ஸ்ரீராம் சார் - நன்றி.
//ஸ்பெஷல் நாள் வந்தால் எதையாவது தோண்டி எடுத்து நினைவு 'படுத்துவார்கள்' //
அவரின் துணையும் ஒரு ஸ்பெஷல் அக்கேஷனில் இதை தோண்டி எடுத்து, சொல்லிக்காட்டி, அவர்களைப் ‘படுத்துவார்கள்’!! :-))))

ஹுஸைனம்மா said...

முத்துலெட்சுமிக்கா - நன்றிக்கா.

ஷர்புதீன் - அட்டெண்டன்ஸ் நோட் பண்ணிகிட்டேன்.

தராசு - வாங்க. உண்மைக்காதல்னா, கல்யாணம் வரை கொண்டு வரணும்; முடியலையா, எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டு, நம்ம வேலையப் பாக்கணும். அதவிட்டுட்டு, வருஷா வருஷம் அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் “அவள் பறந்துபோனாளே”ன்னு பாடிகிட்டிருந்தா... ஜீரணிக்கவே முடியலங்க.

ஹுஸைனம்மா said...

வித்யா - தேன் மிட்டாயைக் கவனமாக் கவனிச்சிருக்கீங்க உங்க ஏரியா இல்லியா? :-)))

அரபுத் தமிழன் - காதலர்களுக்கு நான் புத்தி சொல்லவே இல்லியே? கல்யாணமானவங்களே திருந்துற வழியைக் காணோம்!!

எல்.கே. - நன்றி. ஆமாம், துணையை "Taken for granted" ஆக எடுத்துக் கொள்ளும் அலட்சியம்!!

ஹுஸைனம்மா said...

நாஸியா - சுடுதா? லேப்டாப்பைச் செக் பண்ணுங்க!! :-)))

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

கோமதிக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

அக்பர் - எல்லா கவிதைகளையும் நான் சொல்லவில்லையே? முந்தைய காதலிகளை - இந்நாளில் இன்னொருவர் மனைவியாக இருப்பவரை - குறித்து எழுதப்படும் கவிதை/கதை/கட்டுரைகளைப் பற்றித்தான் சொன்னேன். உங்களிடம் இருக்கும் ஒன்றைப் போற்றாமல், இன்னொருவருக்குச் சொந்தமானதைக் கண்டு ஏங்குவதைத்தான் தவறென்று சொல்கிறேன்.

ஆதவன் - இப்பவே கவனமாக இருங்கள். அது பின்னாளில் மனைவியிடம் பேசும்போதும் கவனமாக இருக்க உதவும்!! :-))))))

Angel said...

YES .ITS TRUE EVEN KIDS DO'NT LIKE TO BE COMPARED.Fantastic and well said.
good post

ஹுஸைனம்மா said...

அப்துல் காதர் - நன்றி.

ஏஞ்சலின் - நன்றிங்க.

ADHI VENKAT said...

சரியா சொல்லியிருக்கீங்க.

அன்புடன் மலிக்கா said...

//கல்யாணத்துக்கப்புறம் அடுத்தவரைக் காதலிப்பதுதான் இப்ப அதிகமாகிட்டிருக்கு//

உண்மையான உண்மைதான் ஹுசைன்னமா.
அடிச்சி தூள் கிளப்பிட்டீங்க்ஜ.
இதப்போல்
நேரிலும் கண்டாச்சி, கண்டிச்சாச்சி. அதை வச்சி கவிதையெழுத நினைச்சி மண்டைகாஞ்சிபோச்சி..

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

சரியான நாளில் சரியான அலசல்.

ஒப்பிடுவது, குறிப்பாக குழந்தைகளை ஒப்பிடுவதை முக்கியமாக தடுக்க வேண்டும்.

ஒப்பிடும் குழந்தைகள் மேலே ஒப்பிட்ட குழந்தைக்கு வெறுப்பு வர வாய்ப்பிருக்கிறது.ஒப்பிடுபவர்கள் உடன்பிறந்தவர்களாக இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஹுசைனம்மா...

நான் இப்படி சொல்கிறேன்...

"என் மனைவியைவிட மிகைத்தவர்கள் இருக்கலாம்; இருப்பார்கள்; எனினும், என்னவரிடம் உள்ள சிறந்த குணங்களை நினைத்துப் பார்த்து, திருப்தியடைந்து மகிழ்ச்சிகொண்டு, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்."

--இது மிக நல்ல விஷயம்... பதிவு முழுக்க அருமையான வரிகள்... மிக்க நன்றி.

தூயவனின் அடிமை said...

சரியா சொல்லி இருக்கீங்க.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. தொவைச்சு காயப்போட்டுட்டீங்க ஹுஸைனம்மா :-))))

Ahamed irshad said...

நாம ஏதாச்ச‌ம் சொல்லி..

ஜெய்லானி said...

என்னது இது கொஞ்சமாவது ஆயில் போடவேனாமா, அப்படியே சுலுக்கெடுத்தா என்ன ஆகுறது உடம்பு .. :-))

அருமையான செய்தி :-)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா ஹுசைனம்மா டாப் க்ளாஸ்!!
ஒருத்தருக்கு ஒருத்தி போதும்.

அப்படி ஒத்துப் போகலைன்னால் பிரிந்து போகட்டும். இவளும் வேணும் இன்னோருத்தியும் வேணும்கற கதைகளை என்ன செய்யறது. நாங்க கண்ணை மூடிக்கிட்டு இருந்தபோது , நீங்கள் விழித்தெழுந்து விளாசி விட்டீர்கள். வணக்கமும் வாழ்த்துகளும்.

Jaleela Kamal said...

அட டா இப்படி எல்லாம் வேற நடக்குதா?
இன்னும் நிறைய கதைகள் பதிவுகள் படிக்கவே இல்லையே./

தேன் மிட்டாய், ஹிஹி
பதிவு மூலம் கொடுத்த அடி சூப்பர்

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க...

//http://www.aathi-thamira.com/2011/02/blog-post.html
இந்தப் பதிவில், ஒரு டாக்டர் ஓட்ஸ் என்பது மனிதர் சாப்பிடவேண்டிய உணவே அல்ல என்று சொன்னதாக பதிவர் எழுதியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தையும், விளக்கத்தையும் தாருங்களேன். //அந்த டாக்டர் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை...ஆனால் ரொம்ப காலமாக ஒட்ஸினை குதிரைக்களுக்கு மட்டுமே சாப்பிட கூடியது என்று சில நாட்டினர் நினைத்து கொண்டு இருந்தனர்...

இங்கிலாந்தில் உள்ள குதிரைகளுக்கு இன்னமும் ஒட்ஸ் வழங்கப்படுக்கின்றது..அதற்காக அது நாம் சாப்பிட கூடியது கிடையாது என்று அர்த்தம் இல்ல...

அப்படி பார்த்தல் நிறைய நாடுகளில் முக்கிய உணவாக ஒட்ஸ் இடம் பெற்று இருக்கின்றது...

சுமார் 1 கப் ஒட்ஸில் பார்லி, ராகியினை விட மூன்று மடங்கு கலோரிஸ் அதிகம் என்பதால் சொல்லி இருக்ககூடும்...

கூடவே நம்மூரில் கிடைக்கும் பார்லி, ராகி, கோதுமை, சோளம் போன்றவைற்றினை சாப்பிடலாமே ...எதற்காக Costlyயான ஒட்ஸ் என்பதால் கூட சொல்லி இருக்கலாம்...

அதே போல் பார்லி, ராகியினை ஒட்ஸுடும் compare செய்யும் பொழுது ஒட்ஸில் இவற்றைவிட அதிக அளவு Carbohydrate இருக்கும்..

ஒட்ஸில் பார்லி, ராகி போன்றே Soluble Fiber இருக்கின்றது....ஒட்ஸினை தனியாக சாப்பிடாமல் இத்துடன் எதாவது ஒரு வெஜ்ஜீஸ் அல்லது பழத்துடன் சாப்பிடால் கூடுதல் நன்மை...

அப்துல்மாலிக் said...

ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல பதிவு படிச்ச திருப்தி...

அன்புடன் அருணா said...

நச்!

ப.கந்தசாமி said...

காலம் செய்யும் கோலங்கள் எல்லாக் கோலங்களும் அழகாய் அமைவதில்லை.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - நன்றிங்க.

மலிக்கா - நன்றிப்பா.

அபுநிஹான் - உடன்பிறந்தவர்களை ஒப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சரிதான். நன்றி.

ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம். நன்றி.

ஹுஸைனம்மா said...

தூயவன் - நன்றி.

அமைதிச் சாரல்க்கா - காய்ஞ்சுடுச்சான்னு பாத்து, எடுத்து அயர்ன் பண்ணிடலாம். ;-))))) நன்றி.

இர்ஷாத் - சொல்லவே பயமா? :-)))

ஹுஸைனம்மா said...

வல்லி மேடம் - சில புலம்பல்களைக் காணச் சகிக்கலை. அதான்.. நன்றி.

ஜலீலாக்கா - படிக்கலையா? நல்லதாப் போச்சு. படிச்சிடாதீங்க.

கீதா - சிரமம் எடுத்து, இங்கயும் பதில் எழுதினதுக்கு நன்றி கீதா.

ஹுஸைனம்மா said...

மாலிக் - ஆளையே காணோமே, நலந்தானா?

அருணா டீச்சர் - நன்றிங்க.

டாக்டர் ஸார் - எல்லாம் அழகாய் இல்லைதான். இருந்தாலும், நான் போட்ட கோலத்தை நானே ரசிக்கலைன்னா எப்படி? :-)))) நன்றி சார்.

Thenammai Lakshmanan said...

என் கணவரைவிட மிகைத்தவர்கள் இருக்கலாம்; இருப்பார்கள்; எனினும், என்னவரிடம் உள்ள சிறந்த குணங்களை நினைத்துப் பார்த்து, திருப்தியடைந்து மகிழ்ச்சிகொண்டு, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

// அருமை சரியா சொன்னீங்க ஹுசைனம்மா..:))

ரிஷபன் said...

ஒன்றிருக்கும்போதே நாம் இன்னொன்றை நினைவு கூறுகிறோம்னா, அதற்கு நாம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையவில்லை, அல்லது கிடைத்திருப்பதின் அருமையை அறியவில்லை என்றே பொருள். பொருளுக்கே இப்படின்னா, கவனமாக் கையாளப்படவேண்டிய உறவுகளுக்கு?

மிக அருமையான பதிவு. சபாஷ்

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹுஸைனம்மா...
காலத்திற்க்கேற்ற சும்மா நச்சென்ற பதிவை போட்டு தாக்கிட்டீங்க... ஒவ்வொரு வார்த்தையும் கனீர் கனீரென இருந்தது.
\\\என் கணவரைவிட மிகைத்தவர்கள் இருக்கலாம்; இருப்பார்கள்; எனினும், என்னவரிடம் உள்ள சிறந்த குணங்களை நினைத்துப் பார்த்து, திருப்தியடைந்து மகிழ்ச்சிகொண்டு, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.///

நீங்கள் எழுதியதில் இதை மிகவும் ரசித்து படித்தேன்.
இதை போன்று எண்ணம் ஒவ்வொரு கணவன் மனைவிக்கு வந்தாலே போதும்ங்க.பல அசிங்கங்கமெல்லாம் நடக்காம இருக்குமே...
இன்றை காலகட்டங்களில் கல்யாணத்திற்க்கு பிரகு அடிக்கும் கூத்துகள் தான் ஊர் ஊருக்கு நடந்துட்டு இருக்கு.ஒவ்வொண்ணும் கேள்விபடும்போது கேவலமாகவும்,அசிங்கமாகவும் இருக்கு.
நல்ல பகிர்வு ஹிஸைனம்மா...

அன்புடன்,
அப்சரா.

இராஜராஜேஸ்வரி said...

ஒப்பிடுவதில் எனக்கும் ஏற்பில்லை..

ஹுஸைனம்மா said...

ரிஷபன் சார்
தேனக்கா
அப்ஸரா
இராஜராஜேஸ்வரி

கருத்துகளுக்கு நன்றி.

சுசி said...

நன்று,நன்று, நன்று சொன்னிர்கள். பெண்களுக்கும் "ஐயோ!, நீ எவ்வளவு பெரிய அழகி, அறிவாளி, (இரும்பு வாளி) நீ இங்க இருக்க வேண்டியவளே இல்லன்னு" யாராவது சொன்னா போதும் புல்லரிச்சு போயிடுத்தே, உடனே அவங்க பின்னாலே போக ரெடி ஆகிடரங்களே! தான் யாருன்னு தனக்கே தெரியலேன்னா என்ன செய்யறது ?

ஹுஸைனம்மா said...

முதல் வருகைக்கு நன்றி தானைத்தலைவி அவர்களே!! (பேரப் பாத்தவுடனே “அவர்களே” தானாவே வந்துடுச்சுங்க!)

//இரும்பு வாளி//
ரசிச்சேன்..

நிஜம்தான் நீங்க சொல்றதும் - பெண்கள் மயங்குவது. இதுபத்தியும் இன்னொரு பதிவு போட்டிருக்கேன் - ‘சைவப் புலிகள்’னு. பாருங்களேன்: http://hussainamma.blogspot.com/2011/04/blog-post_24.html

Unknown said...

ஏன் பழசுலயே உழண்டுகிட்டிருக்காங்க இன்னும்? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை அமைந்த பின்னும் பழசை நினைச்சுகிட்டிருந்தா வாழ்க்கை எப்படி சுகிக்கும்?//

தெளிவான சிந்தனை,நன்றி காலத்திற்கு ஏற்ற நினைவுட்டலுக்கு. :-)