Pages

ஆணாதிக்கவாதியா நீ?






தலை காது மறைத்து உளர்
கையும் கண்ணும் மட்டும் தெரிய சிலர்
கால் முழுதும் மறைக்காதவர் இலர்
கைவிரல்கூட மறைத்துப் பலர்
என்ன இது புதுமை
இனம் மொழி நாடு மதபேதமில்லை

குளிர்காற்றே நீ செய்வதென்ன
அனைவருக்கும் கட்டாய பர்தா
அணிவித்தாய்
ஆணாதிக்கவாதியோ நீ

குளிர்காலமெனும் கயவனிடமிருந்து
காத்து மீட்டெடுக்கக்
கடமைப்பட்டக் காலைக்
கதிரவா எங்கே நீ போனாய்?

தமிழ்மண ஓட்டுகள் குத்திப்
பிரபல பிராப்ளமாக ஆக்கி
சூடான இடுகையுஞ் சமைத்து
மகுடமும் சூட்டி
பின்னூட்டங்கள் அள்ளித் தந்து
ஹிட்ஸைக் கொட்டிக் கொடுத்து
அலெக்ஸா ரேங்கும் தருகிறோம்
பொதியப்பட்டிருக்கும் அப்பாவிகள்
எங்களை மீட்க ஓடோடிவா!!

டிஸ்கி:

ஸ்வெட்டர் போட்டு, குல்லாய் போட்டு, அதற்குமேலே கம்பளி போர்த்தி, கையுறையும் போட்டு, ரூம் ஹீட்டரும் போட்ட பின்னும் குறையாத நடுக்கத்துடன் “உக்காந்து யோசிச்சது”!! அப்படியொரு குளிர் இங்கே!!


இன்னும் சிரிக்கணும்னா, முன்னொரு காலத்தில எழுதப்பட்ட இன்னொரு பதிவையும் பாருங்க.


Post Comment

50 comments:

Prathap Kumar S. said...

குளிரடிச்சுதுன்னா சூடா காஃபி சாப்பிடுவாங்க பார்த்திருக்கே்ன....கவிதை எழுதறதை இப்பத்தான் பார்க்கறேன். ஆமா இது கவிதைதான...? :)))

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

//குளிர்காற்றே நீ செய்வதென்ன
அனைவருக்கும் கட்டாய பர்தா
அணிவித்தாய்
ஆணாதிக்கவாதியோ நீ//

அப்படி போடுங்க... வெரி குட்.

குளிர்(காற்று) என்னும் ஆணாதிக்கவாதியை எதிர்த்து போராட்டம் பண்ணுவோம்... :)

இந்த ஆணாதிக்கம் இருக்கவே கூடாது. என்னா குளிரா இருந்தாலும் பர்தா போடவே கூடாது. அது பெண்களின் உரிமையை பறிக்கின்றது (ஆண்களுக்கும் பர்தா உண்டு. ஆனா அதயெல்லாம் நாங்க கண்டுக்க மாட்டோம்).

ஆகையால் குளிர்காற்றை எதிர்த்து போராட்டம். பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பது போல நினைத்துக்கொண்டு அதனை தரையில் போட்டு மிதிக்கும் எல்லாரும் இதில் கலந்துக்கொள்ளலாம். ரெடி ஸ்டார்ட்

அசத்தல் வரிகள்...ஜசாக்கல்லாஹ்

வஸ்ஸலாம்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Naazar - Madukkur said...

என்னங்க இது, இந்த குளிருக்கு இப்படி ஒரு புலம்பலா?

Riyas said...

சில்லென்ற குளிர்காற்று
தடவிச்செல்லும் போது
குளிர்ந்தே விடுகிறது
மனசும் சேர்ந்து..!

காற்றும் ஆணாதிக்கவாதிதான்.. உடலை மறைக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறதே.. இதற்கு யாராவது எதிர்பதிவு போடுவினமோ..?

அபுதாபியில் லேட்டாகத்தான் குளிர் தொடங்கியிருக்கு.

நட்புடன் ஜமால் said...

லேபிள் செம செம ...

Mohamed Faaique said...

குளிர்’ல நடுங்கினாலும், கவிதைல எரிமலையா குமுறி இறுக்கீங்க....

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நேரம் உட்காராதிங்க, நிறைய யோசிக்கிறீங்க - நல்லதுக்கில்லை

எங்கள சொன்னேன் ...

:) :) :)

suvanappiriyan said...

ஹா..ஹா..ஹா... சிறந்த கவிதை. இங்கும் குளிர வாட்டி எடுக்கிறது. வெளியில் செல்வதற்கு தயங்கி

வீட்டிலேயே முடக்கம்.

அதனால் என்ன தயக்கம்

எழுதுகிறோமே பல பக்கம்

கிடைக்காதோ பல விளக்கம்!

(ஹி..ஹி.. நாங்களும் கவிதை எழுத முயற்ச்சிப்போம்ல...) :-)

Unknown said...

:)
ம் கவிதை நல்லாயிருக்கு!

நீங்க என்ன ரஷ்யாவிலா இருக்கீங்க
சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன்

ஹேமா said...

குளிர்லயும் கவிதை என்னமா வந்திருக்கு !

Yaathoramani.blogspot.com said...

த்துடன் பதிவும் அருமை
ஆணையும் தானே குளிர் படுத்தி எடுத்து
போர்த்திக் கொள்ளச் செய்கிறது
என்வேஆணாதிக்கவாதி எனச் சொல்லலாமல்
மனித குல ஆதிக்கவாதி எனச் சொல்லலாமா?
த.ம 6

ஆமினா said...

லொள்ளு + குத்து

சூப்பர்

கீதமஞ்சரி said...

நச்சுனு இருக்கு. நறுக்குனு இருக்கு. பாராட்டுகள் ஹூஸைனம்மா.

Vidhya Chandrasekaran said...

கவுஜ...கவுஜ...

அரபுத்தமிழன் said...

கவிதாயினியா நீ(ர்) ..
இத்தனை நாளாய் எங்கிருந்தீர் ..

ஹஜ் செய்தவர்களுக்கு ஆயுள்/செல்வம்
கூடும் என்பது தெரியும் ; கவிதையும்
பொங்கும் என்று இன்றுதான் அறிந்தேன். :)

Avargal Unmaigal said...

உங்கள் ஊர் ஆணாதிக்கவாதியை(குளிர்) எனக்கு ரொம்பபிடிக்கும். ஆனால் நான் உங்கள் ஊருக்குவந்த போது நான் பார்த்த பெண்ணாதிக்க வாதியை(அணல்காற்று) பார்த்தது துபாய் மேல் இருந்த ஆசை எனக்கு போயே போய்விட்டது

எப்படிதான் நீங்கள் துபாயில் வசிக்கிறிர்களோ. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கலை நினைத்தால் எனது மனம் வலிக்கிறது

Avargal Unmaigal said...

நல்ல வேளை நீங்கள் அமெரிக்காவில் வசிக்கவில்லை இல்லை என்றால் அடுப்பு மேலே உட்கார்ந்துதான் நீங்கள் கவிதை எழுதீருப்பீர்கள்

எம் அப்துல் காதர் said...

சலாம் சகோ!!

கவிதையால் குளிரவைப்பதென்பது இதுதானோ? ஆமா, "குளிர்" ஆணாதிக்கவாதியா? ஹி.. ஹி.. அப்படிஎன்றால் வெயில்?? (அதுக்கும் ஏப்ரலில் ஒரு கவிதை எழுதுவீங்க தானே? அவ்வவ்..)உவமை ரொம்ப நல்லா இருக்குக்கம்மா... ஹுசைனம்மா!!

ஸ்ரீராம். said...

கவிதைக் குளிர்...!

வெங்கட் நாகராஜ் said...

குளிர் கவிதை.... :)

இங்கேயும் நடுங்கியபடியே மக்கள்...

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

கவிதை அழகு...

RAMA RAVI (RAMVI) said...

குளிருக்கு கவிதை..அருமை.

கோமதி அரசு said...

பொதியப்பட்டிருக்கும் அப்பாவிகள்
எங்களை மீட்க ஓடோடிவா!!//

ஆஹா! கதிரவனுக்கு நல்ல வேண்டுகோள் கவிதை.

ஹுஸைனம்மா, குளிருக்கு கதிரவனை வரச்சொல்லும் நீங்கள் வெயில் காலத்தில் கதிரவனை ஒடச்சொல்லி கவிதை எழுதுவீர்களா?

சாந்தி மாரியப்பன் said...

கவுஜ செம ;-)

நல்ல வேளை உங்கூர்ல பனி மழை பொழியலை :-)

vanathy said...

குளிரால் பிறந்த கவிதை. தலைப்பு பொருத்தமா இருக்கு. இந்த முறை குளிர் உங்களுக்கு அதிகமா இருக்கும் போல. எங்க ஊர் பக்கம் கொஞ்சம் குறைவா இருக்கு.

asma said...

ஸலாம் ஹுஸைனம்மா. சொற்ப வரிகளில் பற்பல அர்த்தங்களைப் பொதிந்த அருமையான கவிதை!! கடைசி பேராவில் எத்தனை உள்குத்துகள்...! ;)) சும்மா நச்சுன்னு இருக்கு :-)))

ஸாதிகா said...

ஹை..தங்கச்சி..குளிருல் உடல் தூக்கிப்போடும் கைகால் நடங்கும்,உதடு தந்தி அடிக்கும்.உங்களுக்கு கவிதை பிறந்து இருக்கு.குளிரில் பிறந்த கவிதையை நன்றாகவே ரசித்தேன்.

baleno said...

கவிதை நல்லாவே இருந்தது. குளிருக்கு இரண்டு மூன்று மாதம் பல்லை கடித்து கொண்டு இருக்க வேண்டியது தான்.

Ayushabegum said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

//குளிர்காற்றே நீ செய்வதென்ன
அனைவருக்கும் கட்டாய பர்தா
அணிவித்தாய்
ஆணாதிக்கவாதியோ நீ//

ஜசாக்கல்லாஹ் ஹைர்..:-))

அம்பலத்தார் said...

குளிரிலும் கற்பனை நன்றாகத்தான் வந்திருக்கு. என்னமா யோசனை பண்ணியிருக்கிறிங்க.

அம்பலத்தார் said...

குளிரிலும் கற்பனை நன்றாகத்தான் வந்திருக்கு. என்னமா யோசனை பண்ணியிருக்கிறிங்க.

enrenrum16 said...

இந்த குளிர்காலங்களில் (பெண்களுக்கு? ;-))இன்னொரு வசதி... வெளியிடங்களில் போகும்போது நேரா நிமிர்ந்து பார்த்து நிம்மதியா நடக்க முடியுது....

பாச மலர் / Paasa Malar said...

குளிருக்கு வித்தியாசமாய் விளக்கம்....வாழ்த்துகள்...

pudugaithendral said...

ஆஹா.... கை வெடவெடன்னு குளிரில் ஆடினாலும் என்னம்மா கவிதை தோணுது. சூப்பர் ஹுசைனம்மா

ADHI VENKAT said...

குளிர் கவிதை சூப்பர்ங்க....

இப்படிக்கு,

ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், சாக்ஸ் போட்டு கம்பளி போர்த்திக் கொண்டு நடுங்கிக் கொண்டே பின்னூட்டமிடுபவள்....

ஹுஸைனம்மா said...

பிரதாப் - “கவிதைதானே”ன்னுதானே கேட்டுருக்கீங்க, அப்ப இது கவிதையேதான்!!
“கவிதையா இது?”ன்னு கேட்டிருந்தா எனக்கே டவுட் ஆகியிருக்கும்!!
எந்த விதிகளுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட முடியாத கவிதை இது!! (எப்பூடி, ஒரு கவுஞ்சரின் டயலாக் மாதிரியே இருக்கா??) :-))))

ஹுஸைனம்மா said...

ஆஷிக் அஹமது - வ அலைக்கும் ஸ்லாம்...
//பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பது போல நினைத்துக்கொண்டு அதனை தரையில் போட்டு மிதிக்கும் // இது, இதுதான் பாயிண்ட்!! :-)))

பீர் - இதுக்கும் ஸ்மைலிதானா?? என்ன செஞ்சா கமெண்ட் எழுதுவீங்க பாஸ்?

ஹுஸைனம்மா said...

நாஸர் - மதுக்கூர் - ஹி.. ஹி.. இந்த குளிருக்கே இப்படியான்னு கேக்குறீங்க, புரியுது!!

ரியாஸ் - //இதற்கு யாராவது எதிர்பதிவு போடுவினமோ..?// ஆஹா, பயபுள்ள என்னமா எடுத்துக்குடுக்குது!! பதிவுலக ட்ரெண்டே அப்படி ஆகிப்போச்சு!! :-)))

ஹுஸைனம்மா said...

நட்புடன் ஜமால் - பார்றா, என்னா கஷ்டப்பட்டு கவுஜ எழுதிருக்கோம், அத்தக் கண்டுக்காம, “லேபிள்” நல்லாருக்காம்!! :-))))

//நல்லதுக்கில்லை... எங்கள சொன்னேன்// Be careful!! :-))))

ஃபாயிக் - //கவிதைல எரிமலையா// அப்படியாவது குளிர் குறயாதான்னுதான்.... :-))))

ஹுஸைனம்மா said...

சுவனப்பிரியன் - அட, உங்களுக்கும் கவித பொங்கிருச்சா??!! பதிவுல கவித எழுதுங்க, ‘எதிர்ப்பதிவு’ எழுதறதுக்குன்னே இருக்கவங்களுக்கு அப்படியாவது ஓய்வு கிடைக்கட்டும்!! :-))))

கரிகாலன் - //ரஷ்யாவிலா இருக்கீங்க// நக்கலு.... ம்ம்... கவிதை நல்லாருக்குன்னு ஒத்துகிட்டதுனால விடுறேன்!! :-)))))))

ஹேமா - வாங்கப்பா. சும்மா, சூடா டீ குடிக்கும்போது தோணுச்சு!! :-)))

ஹுஸைனம்மா said...

ரமணி சார் - //மனித குல ஆதிக்கவாதி எனச் சொல்லலாமா?// தாராளமா... ஆனா, “ஆணாதிக்கவாதி”ன்னு குற்றம் சொன்னாத்தான் ஒரு... ஒரு.. ம்.. “மனித உரிமை ஆர்வலர்”, “மக்கள் நல விரும்பி” அப்படின்னெல்லாம் நம்மளை நினைப்பாங்க... ஹிட்ஸ், பின்னூட்டம் எல்லாம் எகிறும்... பிரபலமாகலாம்... :-))))

வருகைக்கு மிக நன்றி சார்.

ஹுஸைனம்மா said...

ஆமினா - நாமெல்லாம் ஒரே இனமாச்சே - லொள்ஸ் இனம்!! :-)))

கீதா - நன்றிங்க.

வித்யா - ஹி.. ஹி... நன்றி.

ஹுஸைனம்மா said...

அரபுத்தமிழன் - /கவிதையும் பொங்கும் என்று இன்றுதான் அறிந்தேன்//
ஹலோ, நாங்க அப்பப்போ பதிவுகள்ல எண்டர் தட்டுறது உண்டு; எல்லா கவுஜைகளையும் படிச்சுட்டு (அப்புறமும் திடமா இருந்தா), வந்து கருத்து எழுதுங்க பாப்போம்!! :-)))

வாஞ்சூர் வாப்பா - நன்றி சுட்டிகளுக்கு.

ஹுஸைனம்மா said...

அவர்கள் உண்மைகள் - //பெண்ணாதிக்க வாதியை(அணல்காற்று) பார்த்தது துபாய் மேல் இருந்த ஆசை எனக்கு போயே போய்விட்டது// நீங்க ஆண் அல்லவா, அதான் பெண்ணாதிக்கவாதம் பிடிக்காமல் போய்விட்டது!! :-)))

//எப்படிதான் நீங்கள் துபாயில் வசிக்கிறிர்களோ//
நீங்கள் உறைபனியில் வசிப்பதைப் பார்த்து நானும் இதைத்தான் நினைக்கிறேன்!! :-)))))

ஒரு ஜூன் மாதம்தான் அமெரிக்காவில் வசிக்கும் என் இந்தியத் தோழியும் என்னைப் பார்க்க வந்திருந்தாள். வெயிலைக் கண்டு பயந்து, ஸ்பாகெட்டி டாப்ஸும், ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அதுதான் காற்றோட்டமாக இருக்கும், சூடு தாக்காது என்று நினைத்து. பல இடங்களைப் பார்த்தபின், பெரிய பள்ளியைப் பார்க்கச் சென்றோம். அங்குள்ள விதிப்படி, பெண்கள் பர்தா அணிந்துதான் செல்ல வேண்டும் என்பதால், நுழையுமுன் வெளியே நின்று அணிந்துகொண்டாள். சுற்றிப் பார்த்து, திரும்பி வந்து, பர்தாவைத் திருப்பிக் கொடுக்கும்போது சொன்னாள். “நான் போட்டிருப்பதுதான் வெயிலுக்கு ஏற்ற உடை என்று நினைத்தேன். ஆனால், முழு உடை அணிவதுதான் வெயிலிலிருந்து உடலுக்கும், சருமத்திற்கும் முழுமையானப் பாதுகாப்பு என்று இப்போது அறிந்துகொண்டேன்.” என்று சொன்னாள்.

ஹுஸைனம்மா said...

அப்துல்காதர் - /அப்படிஎன்றால் வெயில்??// மேலே உள்ள பதிலில் பார்க்கவும்.
//அதுக்கும் ஏப்ரலில் ஒரு கவிதை எழுதுவீங்க தானே?// உங்க ஆசையைக் கெடுப்பானேன்? ஆனா, பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!! :-)))

ஸ்ரீராம் சார் - நன்றி!!

வெங்கட் நாகராஜ் - உங்க குளிருக்கு முன்னாடி எங்க குளிரெல்லாம் ஜுஜுபிதாங்க!!

ஹுஸைனம்மா said...

சிநேகிதி - நன்றி!

ராம்வி - நன்றிங்க!!

கோமதி அக்கா - //வெயில் காலத்தில் கதிரவனை ஒடச்சொல்லி// அப்போ மேகத்தைக் கூப்பிடுவேன்!! :-)))

அமைதிக்கா - இங்கயும் இப்போ ரெண்டு வருஷமா, ஒரு மலையில மட்டும் பனி படருது!! ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. பாலைவனத்துலயும் பனி என்பது க்ளோபல் வார்மிங்கின் விளைவோ என்னவோ?

ஹுஸைனம்மா said...

வானதி - ரெண்டுமூணு வாரமா பயங்கரக் குளிர்ப்பா. இப்பத்தான், நான் கவிதை எழுதுனலாயோ என்னவோ, வெயில் வர ஆரம்பிச்சிருக்கு!! :-))))

அஸ்மாக்கா - ஸலாம்க்கா. நன்றிக்கா!!

ஸாதிகாக்கா - கவிதை எழுதி சூடாகலாமேன்னுதான்!! :-))))

பலேனோ - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஆயுஷா பேகம் - வ அலைக்கும் ஸலாம். //ஜசாக்கல்லாஹ் ஹைர்// வ அலைக்கும் இன்ஷா அல்லாஹ்!! :-)))

அம்பலத்தார் - குளிர்ல வேற ஒண்ணும் பண்ண முடியாதே, அதான் “சிந்திச்சேன்”!! :-))))

என்றென்றும் 16 - //நேரா நிமிர்ந்து பார்த்து நிம்மதியா நடக்க முடியுது// ஏன்? நானெல்லாம் எப்பவுமே பராக்கு பார்த்துட்டுத்தான் நடப்பேன்... (அப்படியே தொலைஞ்சும் போவேன், ஆனா கிடைச்சுடுவேன்... :-)))) )

ஹுஸைனம்மா said...

பாசமலர் - நன்றிங்க.

புதுகைத் தென்றல் - தேங்கீஸ்!!

கோவை2தில்லி - எப்படிங்க, உங்க ஊர்க்குளிரைச் சமாளிக்கிறீங்க? எனக்கு இதுவே போதும் போதும்னு இருக்கு!! :-))))

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு

ஆமா இந்த தடவை இங்கு குளிர் கம்மி தானே?