Pages

வருமுன் காப்போம்





நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை போட்டி
 
கேன்ஸர் இலச்சினை
வீன உலகம் பல துறைகளில் அசாத்திய முன்னேற்றங்களைக் கண்டுவருகிறது. அதற்கு நாம் கொடுக்கும் விலையாகவோ என்னவோ, புதுப்புது வகை நோய்கள் அறிமுகமாவது மட்டுமின்றி, இருக்கும் நோய்களும் புதுப்புது வகைகளில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அதில், புற்று நோயும் ஒன்று. 

ஒரு காலத்தில், அவ்வப்போது யாரோ ஒன்றிரண்டு பேருக்கு கேன்ஸர் என்று கேள்விப்பட்டதுபோய், தற்காலத்தில் சாதாரணக் காய்ச்சல் போல பெருகிவிட்டது. மருத்துவ முன்னேற்றங்கள் இதை “உயிர்கொல்லி” நோயாக இல்லாமல் ஆக்கிவிட்டன என்பது மகிழ்ச்சியே.  கேன்ஸர் நோய் வருவதற்கான காரணங்கள் என்ன என்று கேட்டால், மருத்துவர்களின் பதில் “இன்னதென்று வரையறுத்துச் சொல்ல முடியாது” என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

ஆனால், மருத்துவம் மற்றும் விஞ்ஞானத்துறைகளின் பல ஆராய்ச்சிகள், பல்வேறு காரணிகளை முன்வைத்து, இவையாகவும் இருக்கலாம் என்று கூறுகின்றன. அக்காரணிகளை அறிவதும், விழிப்புணர்வே!! எங்ஙனமெனில், ஒருவேளை நாம் இந்தக் காரணிகளின் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்க நேர்ந்திருக்குமெனில், முறையானப் பரிசோதனைகளைக் குறித்த காலத்தில் செய்து, நம்மைப் பாதுகாத்து,  வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வோம்.


1. வாழ்க்கைத் தரம் (Lifestyle)

நமது உடல்நிலையில் நமது வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிவோம். ஆரோக்கியமாக வாழ்வதும், நோயை அடைவதும் நமது உடலின் பராமரிப்பின் அடிப்படையிலேயே அமையும் என்பது கண்கூடு.


மேற்கண்ட வரிகளை வாசித்தவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது, புகை மற்றும் குடிப்பழக்கம் ஆகியவையே!! ஆம், புற்றுநோயின் முதல் எதிரி அவை. புகை/குடிப்பவர்களுக்கெல்லாருக்கும் புற்று வந்துவிடவில்லையே என்பதே இவர்களின் வாதமாக இருக்கும். ஒரு ஆராய்ச்சியின்படி, நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களில் 85 சதவிகிதத்தினர் புகைப்பழக்கம் உள்ளவர்கள் என்பதுதான் இதற்குரிய பதில்.  அதுபோல, கேன்ஸர் வந்த 100 பேரில் 4 பேர் மது அருந்துபவர்கள்


பீர் (Beer) மட்டுமே குடிப்பவர்களுக்கும் இதிலிருந்து விலக்கில்லை. அதில் இருக்கும் நைட்ரோசமைன் எனப்படும் பொருளும் ஒரு கான்ஸர் உண்டாக்கும் பொருளே!!

அடுத்தது, நமது உணவுப்பழக்கங்கள், உடல் பருமன், உடற்பயிற்சி ஆகியவை.  இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.  காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துகள்,  அதிகம் சேர்த்துக் கொள்வதோடு,  பதனப்படுத்தப்பட்ட அல்லது செயற்கையாகக் கூடுதல் சுவையூட்டப்பட்ட (preservatives and additives) உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.  ரெடிமேட் உணவுகள், துரித உணவுகள் (frozen foods, fast food), பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், பானங்கள் போன்றவை இதில் அடங்கும்.  இவற்றில் கவனம் செலுத்தினாலே உடல் பருமன் கட்டுக்குள் வரும். 

உணவு சமைக்கும்போது, உணவை அதிக வெப்பத்தில் சமைக்கும்போது வெளிப்படும் வேதிப்பொருட்களும் ஆபத்தானவை. எண்ணெயை அதிகம் சூடாக்கிப் பொரிப்பது, அதிக வெப்பத்தில் கிரில்/ பார்பெக்யூ செய்வது போன்றவைவிட, கொதிக்க வைத்து வேக வைப்பதுபோன்ற முறைகளே நல்லவை.

2. வேதிப்பொருட்கள் (Chemicals):

கெமிக்கல்கள் என்றதும் ஆலைகள் பற்றிப் பேசப் போகிறோம் என்று நினைப்பீர்கள். இல்லை, அன்றாடம் நம் தினப்படி வாழ்வில் நாம் எத்தனையெத்தனை வேதிப்பொருட்களைப் புழங்குகிறோம் என்று அறிந்தால் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள்!! உணவுகளில் பதனப்படுத்தவும், சுவையூட்டவும், நிறம் கூட்டவும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். 

thedailygreen.com
அழகுசாதனப் பொருட்கள் இன்று பெண்களுக்கு மட்டுமல்ல,  ஆண்களுக்கும் இன்றியமையாதவை ஆகிவிட்டன. குளியல் சோப்புகள், ஷாம்பூ, டியோடரண்ட், ஷேவின் க்ரீம், லோஷன்கள் ஏன் பற்பசைகள் உட்பட்ட அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில், அவை நீண்ட நாள் கெடாமலிருக்க வேண்டி  “பாராபென்” எனப்படும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது நம் உடலில் சேரும்போது, எஸ்ட்ரோஜன் ஹார்மோன் போல செயல்படும்.  மேக்கப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன கெமிக்கல்கள் இருக்கின்றன என்பதை இங்கு விபரமாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மார்பகப் புற்று வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட திசுக்களில் பரிசோதனை செய்தபோது, 60 சதவிகிதத்தில் இந்த பாராபென் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

ewg.org
தலைக்கு அடிக்கும் “டை” க்கும், கேன்ஸருக்கும் தொடர்பு இல்லையென்று அறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்பதால், வழமையாக ‘டை’ அடிப்பவர்கள், இயற்கைப் பொருட்களுக்கு மாறுவது சிறந்தது.


இதுதவிர, ஆஸ்பெஸ்டாஸ் உடல்நலத்திற்குக் கேடானது என்று அறிந்திருக்கிறோம். இதன் துகள்கள் நம் மூச்சுக்குழலுக்குள் நுழைந்தால் நுரையீரல் கேன்ஸர் ஏற்படுத்தலாம்.  போலவே பெயிண்ட், பூச்சிக்கொல்லி மருந்து, பெட்ரோல் போன்ற வேதிப்பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்பவர்கள் அததற்குரிய பாதுகாப்பு உபகரணங்களையும், நடைமுறைகளையும் தவறாது கடைபிடித்தல் இன்றியமையாதது.


3. நோய்த்தொற்று மற்றும் எதிர்ப்புச் சக்தி குறைபாடு:

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் சில நோய்த் தொற்றுகள் தொடர்ச்சியாகக் காணப்பட்டால், அவை நாளடைவில் புற்றாக மாற சாத்தியமுள்ளது. உதாரணமாக, HIV  வந்தால் கேன்ஸரும் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் ஹெச்.ஐ.வி. என்பதே உடலின் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தை அடியோடு அழிக்கும் நோய். எதிர்ப்புச் சக்தி இல்லா இடம் புற்றுநோய்க்கு ஏற்றதல்லவா?

அதுபோல, HPV - Human papillomaviruses - கருப்பை வாய் புற்றையும்,
Hepatitis B & C - ஈரல் புற்றுநோயையும் கொண்டுவரும் வாய்ப்புகள் உண்டு.

எனவே தொற்று ஏற்படாதவாறு காத்துக் கொள்ளுதல் வேண்டும்; மீறி வரும் நோய்களுக்குத் தகுந்த சிகிச்சையை அவசியமான கால அளவுக்கு முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. ஹார்மோன்கள்:

இத்தலைப்பைக் கண்டதும் உங்கள் புருவங்கள் வியப்பால் உயர்ந்திருக்கும், இல்லையா? ஆம், நம் உடலின் கிட்டதட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அல்லது தொடர்புடைய ஹார்மோன்களும்கூட புற்று ஏற்படுத்தும் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இயற்கையான ஹார்மோன்களால் என்றுமே பிரச்னையில்லாதபடிக்குத்தான் இருக்கும்படியானதுதான் இறைவன் படைப்பு. அந்த ஹார்மோன் அளவு புறக்காரணிகளால் தூண்டப்படும்போதுதான் பிரச்னை தொடங்கும். அந்தப் புறக்காரணிகள் எவையென கண்டு அவற்றில் கவனம் செலுத்துவோம்:

(அ) உடல் பருமன்:   என்னாதுன்னு துள்ளி எழுந்துட்டீங்களா? ஆம், உடல் எடை அதிகமானால், இன்சுலின், எஸ்ட்ரோஜன் போன்ற சில ஹார்மோன் சுரப்புகள் அதிகமாகும் என்பதால், அவை மார்பகம், உணவுக்குழல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் புற்று வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.

(ஆ) ஹார்மோன் சிகிச்சை: பெண்களுக்கு மெனோபாஸ் சம்யத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கான சிகிச்சையாக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. மேலும் கருத்தடை மாத்திரைகளும் ஹார்மோனைக் கொண்டவையே. இவைகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்வது மார்பக, கருப்பை, ஓவரி கான்ஸர் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

(இ) வேதிப்பொருட்கள்: அழகுசாதனப் பொருட்கள், அடர்ந்த நிற தலைச்சாயங்கள் (hair dye) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் “பாராபன்” போன்ற வேதிப்பொருள்கள், உணவுகளில் காணப்படும் பூச்சிகொல்லி மருந்துகள்,  மாசடைந்த சுற்றுச்சூழல் ஆகிவையும் நமது உடலின் ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் உண்டாக்கக்கூடியவை.

5. சுற்றுச்சூழல்:

i.  சிகரெட், பீடி, புகையிலை போடும் பழக்கம் இல்லாவிட்டாலும்கூட, சிகரெட்/பீடி  பிடிப்பவர்கள் வெளிடும் புகையால் பாதிப்படைவது. (Passive smoking)

ii.  அதிகப்படியான சூரிய வெளிச்சம்: 



சூரிய ஒளிதான் நமக்கு விட்டமின்-டி தருகிறது. ஆனால், அதில்தான் புற ஊதாக் கதிர்களும் வெளிப்படுகின்றன. எனவே குறிப்பிட்ட அளவு வரைதான் சூரிய ஒளி நல்லது. அதற்குமேல், சருமம் பாதிக்கப்பட்டு தோல் கேன்ஸர்கூட ஏற்படலாம்.   ஆகவே நேரடி சூரிய ஒளி  மற்றும் மண், பனி, நீர் ஆகியவற்றால் பிரதிபலிக்கப்படும் சூரியஒளியைத் தவிர்க்க, உடல் முழுவதையும் மறைக்குமாறு உடை அணிவதே சிறந்தது. சன் க்ரீம்களால், உடைக்கு நிகரான முழுமையான பயன் இராது.

iii. கதிர்வீச்சு: 

கதிர்வீச்சு என்றால் அணுஉலைகள், அணுகுண்டுகளின் கதிர்வீச்சுதான் நினைவுக்கு வரும். ஆனால், இன்னும் எத்தனையோ வகைகளில் கதிர்வீச்சை நாம் தினம்தினம் எதிர்கொள்ளத்தான் செய்கிறோம்.


       ##  இயற்கையாகவே சில இடங்களில் கதிர்வீச்சுத் தன்மையுடைய ரேடான் போன்ற வாயுக்கள், கனிமங்கள் நிறைந்திருக்கும். இவற்றால் கதிர்வீச்சுக்கு ஆளாக நேரலாம். மேலும், சுரங்கம் போன்ற இடங்களில் பணிபுரிவோருக்கு இதுபோன்ற இயற்கைவளங்களினால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சு பாதிப்பு வர வாய்ப்பு அதிகம்.
 
       ##  எக்ஸ்-ரே போன்ற மருத்துவப் பரிசோதனைகள். பொதுவாக மருத்துவப் பரிசோதனைகளுக்காக எடுக்கப்படும் எக்ஸ்-ரேக்களில் மிக மிகக் குறைந்த அளவே கதிர்கள் செலுத்தப்படும். அதனால் கேன்ஸர் விளைவது அரிதே.

       ##  கதிர்வீச்சு சிகிச்சை: கேன்ஸருக்குக் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையும் இந்தப் பிரிவில் வரும். இது விஷத்தை விஷத்தால் முறிப்பதுபோலத்தான். இங்கு வந்திருக்கும் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்பதே முதல் நோக்கம். அதனால், இச்சிகிச்சை தவிர்க்க முடியாததே. எனினும், இந்த ரேடியஷன் சிகிச்சை, கேன்ஸர் கட்டிகளை மட்டுமே குறிவைத்துச் செய்யப்படுவதால், அதிகப் பாதிப்பு இராது.

       ##  செல்ஃபோன் மற்றும் செல்ஃபோன் டவர்கள் - இவையும் ஆபத்து இருக்கா இல்லியா ரேஞ்சுக்கு பயமுறுத்துபவையே. அளவாகப் பயன்படுத்துவது, உடல்நலம், மனநலம், பணநலம் தரும்.

iv. மாசடைந்த சுற்றுச் சூழல்:

* வாகனங்களால் வெளியிடப்படும் புகைகள்
* ஆலைகளிலிருந்து வெளிப்படும் புகைமண்டலம்
* சுத்திகரிக்கப்படாத ஆலைக்கழிவுகள்
* தரம் பிரிக்காமல் குப்பைக் கிடங்குகளில் இடப்படும் பிளாஸ்டிக், மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்துள்ள குப்பைகள்

இவையும், இவை போன்ற பலவும் நாளடைவில் காற்று, குடிநீர், மண் என எல்லாவற்றிலும் கலந்து உண்டாக்கும் கடுமையான பாதிப்புகளில் கேன்ஸரும் ஒன்று என்பது வேதனையான உண்மை.

6.  பரம்பரை காரணங்கள்:

குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு இருந்தால், மற்றவர்களுக்கும் வரும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைந்த அளவே. அதுவும் ஒருசில வகை கேன்ஸர்கள்தான் பரம்பரையாக வரும் வாய்ப்புண்டு. அப்படியே, குடும்பத்தில் யாருக்கேனும் ஏற்கனவே வந்திருந்தால், நமது வாழ்க்கை முறையை (lifestyle) அதற்கேற்றவாறு மருத்துவர் அறிவுரையோடு மாற்றிக் கொண்டால் வரும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

en.wikibooks.org
 மேலும்,  ஒருவர் பரம்பரை காரணமாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர் என்பதால், அவர் அடிக்கடி பரிசோதித்துக் கொண்டும் இருப்பதால்,  ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுகொள்ள முடியும் வாய்ப்பும் உண்டு!! அதாவது, பரம்பரை காரணம் அமையப் பெற்றவர்களை சீட்-பெல்ட்/ ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக வண்டி ஓட்டுபவர்களோடு ஒப்பிடலாம்!!

ஆனால், பரம்பரை காரணங்கள் இல்லாதவர்கள், ‘நமக்குத்தான் வர வாய்ப்பில்லையே’ என்று அலட்சியமாக இருந்துவிட நேருகிறது.  மேலும், பலர் தம் வாழ்க்கை முறையால் (சிகரெட், குடி, தவறான உணவுப்பழக்கங்கள்) தனக்கு கேன்ஸர் வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், தம் பரம்பரைக்கும் அதன் ஆபத்தைத் தந்துவிடும் காரணியாக அமைந்து விடுகின்றனர்!!


ரு காலத்தில், ”இன்னதென்று காரணமே சொல்லமுடியாது” என்று கூறப்பட்ட கேன்ஸருக்கு, இன்று இவைகளாகவும் இருக்கலாம் என்று பல காரணங்கள் அறிவியல் உலகால் நம்முன் வைக்கப்பட்டுள்ளன. இனி வருங்காலத்தில், இவைஇவைதான் அறுதியான காரணங்கள் என்று கண்டறியப்படலாம்.  அப்போது கேன்ஸரும் முழுமையாக “வருமுன் காக்க” வாய்ப்புள்ள நோயாக மாறலாம். அதுவரை, கவனமாக இருப்பதன்மூலம், வாழ்வை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன்மூலம், வரக்கூடிய நோய்களையும் கட்டுப்படுத்த உறுதி கொள்வோம். 

நல்ல சுற்றுச்சூழல், மாசுபடாத காற்று, விஷமாகாத குடிநீர் முதலியனவற்றைப் போல, நமது தலைமுறைக்கு நல்ல உடல்நிலையைத் தந்து செல்வதும் நம் கடமைதானே!!

Ref:
1. http://cancerhelp.cancerresearchuk.org/
2. http://www.cancer.gov/
3. http://www.cancer.org/
4. http://www.medicalnewstoday.com/
5. http://quitsmoking.about.com/
6. http://www.reloveplanet.com/
7. http://medicmagic.net/
8. http://www.webmd.com/
9. http://urbanlegends.about.com

Post Comment

39 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

மிக அருமையான கட்டுரை. நல்ல தெளிவான விளக்கங்களோடு கேன்சர் விழிப்புணர்ச்சி கட்டுரை. நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி ஹூசைனம்மா.

suvanappiriyan said...

சிறந்த மருத்துவ குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி!

baleno said...

தேவையான அருமையான பதிவு.

ஸ்ரீராம். said...

ஒவ்வொன்றுக்கும் சம்பந்தப்பட்ட லிங்க்குகளுடன் ஒரு முழுமையான அலசல். கிட்டத் தட்ட எல்லாமே அளவோடும், கட்டுப் பாட்டோடும் இருக்க வேண்டும் என்பதை வரி வரியாகச் சொல்லும் எச்சரிக்கைகள். பரம்பரைக் காரணமாக வரும் என்று எதிர்பார்க்கப் பட்ட நண்பர் ஒருவர் அவ்வப்போது செக் செய்தும் ஒருமுறை செக் செய்து கொண்ட மூன்றாம் மாதம் ஒரு பிரச்னை காரணமாகச் சென்ற போது புற்று இருப்பதாக அறியப் பட்டு, சிகிச்சை தொடங்க, எனினும் அடுத்த ஒன்பது மாதத்தில் அவர் மறைந்தது ஒரு சோகம்.

RAMA RAVI (RAMVI) said...

நீங்க சொல்லியிருப்பதைப்போல கேன்ஸர் இப்போது சாதாரண ஜிரம் மாதிரி ஆகித்தான் விட்டது.இது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை.மிகவும் அருமையான தகவல்கள் மற்றும் படங்களுடன் சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள்,ஹுஸைனம்மா.

pudugaithendral said...

அவசியமான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் ஹுசைனம்மா. பகிர்வுக்கு ரொம்ப நன்றி

ஸாதிகா said...

மிகவும் அருமையாக தெளிவாக,படவிளக்கங்களுடன் பகிர்ந்துள்ளது பிரமாதம்.போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பாச மலர் / Paasa Malar said...

அவசியமான உபயோகமான பகிர்வு....சமீபத்திய செய்தி கேட்டீர்களா? புடவை கட்டுபவர்கள் இறுக்கமாக உள்பாவாடை கட்டுவதாலும் புற்று நோய் வரும் வாய்ப்பிருப்பதாக வெளியிட்டுள்ளார்கள்...

சாந்தி மாரியப்பன் said...

அவசியமான விழிப்புணர்வூட்டும் அருமையான தொகுப்பு. இப்பல்லாம் எதால கேன்சர் வராதுன்னு ஒரு பட்டியல் தயாரிச்சா ஒரு பத்திக்குள்ள அடங்கிடும் போலிருக்கு.

அவ்வளவுக்கு ஏராளமான வழிகளில் கான்சர் வருது :-(

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வைத் தரும் அருமையான தெளிவான பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

இன்ன காரணம் என்று ஏதுமில்லாமலேயே நிறைய பேருக்கு இது சகஜமாகி விட்டது...

நிறைய தகவல்களுடன் விழிப்புணர்வூட்டும் பதிவு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Very useful post akka... very well written... thanks

எம் அப்துல் காதர் said...

அழகாக தொகுக்கப்பட்ட விழிப்புணர்வு. வரிவரியாய் படங்களுடன் விளக்கமும் துல்லியமாய் வந்துவிழும் வார்த்தைகள். சிறிதுநேரம் ஒரு கைதேர்ந்த டாக்டரிடம் சந்தேகங்களை தெளிவுப் படுத்திக்கொண்ட மாதிரி மனநிறைவு. இதைவிட வேறென்ன வேண்டும் ஹுசைனம்மா! போட்டியில் வெற்றி பெற்ற மாதிரி தான். வாழ்த்துகள்!!

கீதமஞ்சரி said...

மிகவும் பயனுள்ளதும், அருமையானப் பங்களிப்புமான இக்கட்டுரையின் பின்னணியில் உங்களுடைய அதீதமான உழைப்பும் விழிப்புணர்வைத் தூண்டும் ஆர்வமும் தெரிகிறது. போட்டியில் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

enrenrum16 said...

//பரம்பரை காரணங்கள் இல்லாதவர்கள், தனக்கு கேன்ஸர் வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், தம் பரம்பரைக்கும் அதன் ஆபத்தைத் தந்துவிடும் காரணியாக அமைந்து விடுகின்றனர்!! //- சூப்பர் ஹுஸைனம்மா... இந்த ஒரு பாயிண்ட்ட யோசிச்சாவது இந்த பழக்கத்தைக் கைவிட்டா நல்லாயிருக்கும்.அவங்க பரம்பரை மட்டுமல்ல்..சம்மந்தமே இல்லாத அடுத்தவர்களையும் மனதார கஷ்டப்படுத்துகிறார்களே ;-((

நிறைய தெரிந்த விஷயங்கள் தானென்றாலும் சுவாரஸ்யமான எழுத்து கட்டுரை முழுவதையும் படிக்க வைக்கிறது... குட்டி ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க... வெற்றி பெற வாழ்த்துக்கள்.

//பாசமலர் - புடவை கட்டுபவர்கள் இறுக்கமாக உள்பாவாடை கட்டுவதாலும் புற்று நோய் வரும் வாய்ப்பிருப்பதாக வெளியிட்டுள்ளார்கள்...// உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே காரணமாயிருந்தது இப்ப இதுவுமா... ஹ்ம்... ரொம்ப கஷ்டம். :-((

இந்த கொடும் நோயிலிருந்து நம்மை இறைவன் பாதுகாப்பானாக... ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசாக்கி தருவானாக!.

Jaleela Kamal said...

மிக அருமையான அலசலும், விழிப்புணர்வும்.
புற்றுநோய், இப்ப எங்க பார்த்தாலும் அனுவருக்கும் பல வகைகளில் பரவி வ்ருகிறது.
இது போல விளக்கங்கள் பல பேரை சென்றடையனும்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஹுஸைனாம்மா..

அரபுத்தமிழன் said...

அருமையான கட்டுரை.
அத்துடன் உணவு விஷயத்தில் இதனையும் கவனிப்பது நல்லது. உர்தூவில் சொல்வார்கள்.

"ஜல்கே/ஜலாக்கே/ஜலாஹுவா" நஹீ கானா என்று. அதாவது

கோபமான நிலையில் சாப்பிடக்கூடாது ;

அடுத்தவரைக் கோபப்படுத்திய நிலையில் சாப்பிடக்கூடாது ;

தீய்ந்த உணவைச் சாப்பிடக்கூடாது. (தீய்ந்து போன உணவுகளால்
கேன்சர் ஏற்படுவதாக எங்கோ படித்த ஞாபகம்)

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அவசியமான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் ஹுசைனம்மா. பகிர்வுக்கு ரொம்ப நன்றி

ஹேமா said...

மிக மிகத் தேவையான பிரயோசனமான பதிவு.எனக்கு மிகவும் உதவும் ஹூஸைனம்மா.நன்றி.போட்டியிலும் வெற்றிதான் !

vanathy said...

Very good post. Thanks for the information.

கோமதி அரசு said...

நல்ல சுற்றுச்சூழல், மாசுபடாத காற்று, விஷமாகாத குடிநீர் முதலியனவற்றைப் போல, நமது தலைமுறைக்கு நல்ல உடல்நிலையைத் தந்து செல்வதும் நம் கடமைதானே!!//

நிச்சியம் நம் கடமைதான்.
வரும் முன் காப்போம், வந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்ப்போம்.
முதலில் வந்து விட்டதே என்ற கழிவிரக்கமே ஆளை கொன்று விடும்.
அதனால் நோயை தைரியமாய் எதிர் கொண்டால் சீக்கிரம் நோயிலிருந்து விடு படலாம்.


நல்ல விரிவான , தெளிவான விழிப்புணர்ச்சி கட்டுரை ஹூஸைனம்மா.

நன்றி.

கோமதி அரசு said...

ஹுஸைனம்மா, உங்களுக்கு மீலாடி நபி வாழ்த்துக்கள்.
நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்தநாள் தானே!

நபிகளின் அன்பும், கருணையும் எங்கும் நிறைந்து அருள் செய்யட்டும்.

அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் மீலாடி நபி வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

ஹுஸைனம்மா, உங்களுக்கு மீலாடி நபி வாழ்த்துக்கள்.
நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்தநாள் தானே!

நபிகளின் அன்பும், கருணையும் எங்கும் நிறைந்து அருள் செய்யட்டும்.

அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் மீலாடி நபி வாழ்த்துக்கள்.

அமைதி அப்பா said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மீலாடி நபி வாழ்த்துக்கள்.

**************

மிக நல்ல பதிவு!

**********

//வழமையாக 'டை' அடிப்பவர்கள், இயற்கைப் பொருட்களுக்கு மாறுவது சிறந்தது. //

இப்படி எங்கள் தலையில் கை வைக்கலாமா? இயற்கை பொருளில் 'டை' கிடைக்கிறதா?
கெமிக்கல் கலக்காத 'டை'
இல்லை என்கிறார்களே? தெரிந்தால் சொல்லவும்.

அப்பாதுரை said...

நல்ல ஆய்வு.
கடைசியில் சுருக்கமாக உங்கள் பரிந்துரைகளை (top 5 list) சேர்த்திருக்கலாமோ?

அப்பாதுரை said...

நேசம்+யுடான்ஸ் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

ஹுஸைனம்மா, உங்களுக்கு ஒரு விருது, என் வலைத்தளத்தில்.

வாருங்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

சிராஜ் said...

சலாம் சகோ ஹுசைனம்மா,

அற்புதமான பதிவு. மிக நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன்
சுவனபிரியன்
பலேனோ
ஸ்ரீராம் சார்
ராம்விக்கா
பு. தென்றல்
ஸாதிகாக்கா
ராமல்க்ஷ்மிக்கா
கோவை2தில்லி
அப்பாவி தங்கமணி
அப்துல் காதர் பாய்
கீதா
என்றென்றும் 16
ஜலீலாக்கா
காஞ்சனா
லக்ஷ்மி மேடம்
வானதி
சிராஜ்

அனைவருக்கும் மிக்க நன்றி!!

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - கருத்துக்கும், விருதுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிக்கா.

பாச மலர் - //புடவை கட்டுவதால்// ம்ம்.. இதுவும் எப்படின்னா, இறுகக் கட்டுவதால், புண்ணாகி, புண்ணைக் கவனிக்காமல் விடுட்வதால்தான் என்று சொல்கிறார்கள். அதனால், ஆறாத புண்ணை அலட்சியப்படுத்தக்கூடாது என்பதுதான் இதன் அடிப்படைன்னு நினைக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - //எதால கேன்சர் வராதுன்னு ஒரு பட்டியல் தயாரிச்சா// இயற்கை உணவுகள் & இயற்கை சூழ்நிலைகள்னு மட்டும்தான் வரும்போல!!

அரபுத் தமிழன் - எனக்கும் இப்போத்தான் கருகிய உணவும் கேன்ஸருக்குக் காரணமாகலாம் என்று தெரிந்தது. பொறிப்பது, க்ரில், பார்பெக்யூவில் கரிவதற்கு வாய்ப்பு அதிகமல்லவா. மேலும் பெண்கள்தான் பாத்திரத்தின் அடியில் இருக்கும் கரிந்த உணவை வழித்துச் சாப்பிடுவார்கள் (என்னைப் போல). கோபம் - ம், அதுவும் மனதைக் கரிப்பதுதானே!! இருக்கலாம்.

ஹுஸைனம்மா said...

ஹேமா - //எனக்கு மிகவும் உதவும் // ஏன்ப்பா, உங்களுக்கு மட்டும் அதிகம்?

அமைதி அப்பா- ஹெர்பல் ஹேர் டைன்னு விசாரிச்சுப் பாருங்களேன்? மேலும் மருதாணியும் முயற்சி செய்யலாம். ”கெமிக்கல் டை” நிச்சயம் தவிர்க்கப்படணும்.

அப்பாதுரை - ”டாப் 5” லிஸ்ட் படமாக இருக்கிறதே, அதான் தனியாச் சொல்லலை. எனினும், ஐடியாவுக்கு நன்றி. பிற்பாடு பயன்படலாம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசினை வெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

HEARTIEST CONGRATULATIONS ! ;)))))

அன்புடன் மலிக்கா said...

ஹுசைன்னம்மா ஊருக்கு வந்ததின் நேரம் பார்த்து சூப்பரோ சூப்பரான முதல் பரிசு. அசத்திட்டீங்க போக உங்கள் கட்டுரைகள் 2 ம் முதலிடத்தை பிடித்துள்ளது.. வாழ்த்துகளோ வாழ்த்துகள். இன்னும் இதுபோன்ற விழிப்புணவு கட்டுரைகள் நிறைய நாட்டுக்கும் நமக்கும் தேவை எழுதுங்கள் வெல்லுங்கள்..

http://nesampeople.blogspot.in/

இத லிங்கில்போய் பார்க்கவும்..

ஸ்ரீராம். said...

முதல் பரிசுக்கு வாழ்த்துகள்

நேசம் said...

ஹுசைனம்மா,

உங்களுக்கான பரிசு குறித்து மெயில் அனுப்பியுள்ளோம். தயவுசெய்து பதில் அளிக்கவும்

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_9.html?