Pages

எதிர்கால சக்தி





அபுதாபியில்  சில வருடங்களாக நடந்துவரும்  World Future Energy Summit (உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு) போன வருஷம் முதன்முறையா போய்ப் பார்த்துட்டு வந்ததிலருந்து, இந்த வருஷம் எப்படா வருதுன்னு வெயிட் பண்ணிகிட்டிருந்தோம்.இந்த வருஷம் ஜனவரியில நடந்துது. மாநாடுன்னவுடனே, நமக்கு வழக்கமா லாரி, மேடை, பிரியாணி, கூட்டம், ப்ளெக்ஸ் போர்டு இதெல்லாம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, இது நிஜமான “அறிவுஜீவிகள்” கலந்துகொள்ளும் மாநாடு + கண்காட்சி + கருத்தரங்கம்.

 சுருக்கமா இந்த மாநாடு பத்தி சொல்லணும்னா:  குறைந்து வரும் எண்ணெய் வளம், அழிந்து வரும் சுற்றுச் சூழல், பெருகி வரும் உலக வெப்பமயமாதலும், அதன் விளைவுகளையும் முன்னிருத்தி, இவற்றிற்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை அழிக்காமல், வெப்பமயமாதலைத் தடுக்கவும் விழிப்புணர்வை மேம்படுத்தி, நாம் என்னென்ன செய்யலாம் என்பதைக் கலந்துரையாடி, அவற்றிற்கான பொருட்களைச் சந்தைப்படுத்துவதுமே இதன் நோக்கம்

விரிவான விளக்கத்திற்கு இங்கே போகவும்: WFES 2011  (இது என் போன வருட பதிவுதான், தைரியமாப் படிக்கலாம்)

வழக்கம்போல, கண்காட்சி முழுதும் சோலார் பேனல்கள், காற்றாலைகள், பேட்டரி கார்கள், ஸ்கூட்டர்கள்னு போன வருஷம் பார்த்தவைதான். குறிப்பிடத்தக்க புதிய பொருட்கள் அறிமுகங்கள் எதுவும் இல்லை.  ஆனா,  பழைய அறிமுகங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
உதாரணமா, வழக்கமான சோலார் பேனல்கள் ஒரே இடத்துல நிலையா இருக்கும்படி இருக்கும். இப்போ, சுழலும் பேனல்கள் வந்திருக்கு. அதாவது, சூரியன் செல்லும் திசைக்கு இந்தப் பேனல்களும் திரும்பும் - சூரியகாந்தி மாதிரி!! இதனால, உற்பத்தி அதிகமாகும். படத்தில் இருப்பதுபோல ஒரு செட் வச்சா, ஒரு குடும்பத்துக்குப் போதுமான அளவு மின்சாரம் தாராளமாக் கிடைக்குமாம். விலை என்னான்னு கேட்டேன். நேரடியாச் சொல்லாம, மொத்தமா ஒரு குடியிருப்புக்குத் தேவையான அளவுக்காவது வச்சாத்தான் செலவுகள் பலன் தரும்னு சொல்லிட்டார்!! :-( 

மேலும், இந்த சோலார் பேனல்கள் அதிக சூரிய ஒளியை உறிஞ்சுவதற்காக வேண்டி பேனல்களின் அளவைச் சுருக்கி, பின்னர் இரண்டு, மூன்று பேனல்களை ஒன்றிணைத்து, அதன்மேல் ஒரு கண்ணாடியை (total internal reflection lens) அதன்மீது வைத்திருக்கின்றனர். இதனால், உள்ளே வரும் ஒளி, வெளியே செல்லமுடியாததால்,  முழுதும் கிரகிக்கப்படும்.



இப்ப சோலார் பேனல்களை எங்கும், எதிலும் வைக்கலாம்கிறதுக்கு உதாரணமா, இந்த மாடல். ஒரு கார் பார்க்கிங் ஷெட் மீது சோலார் பேனல்.

 



 இது எங்க துபாய்ல வரப்போற “சோலார் பார்க்”கின் மாடல்.









 
இது எங்க ஊர் “கூடங்குளம்” - ஆமாம், வரப்போகும் அணுமின் நிலையத்தின் முன்மாதிரி. என்னது, போராட்டமா, உஷ்!!






இந்த பெரீய்ய தொட்டி பெரிய்ய பெரிய்ய ஹோட்டல்களுக்கானது. மிஞ்சின உணவை இதில போட்டா, அது உரமாகிடுமாம்!! ஜீபூம்பா!

வழக்கமான, “Vending machines"ல, காசு போட்டா தண்ணி பாட்டில் வரும். இதுல காலி பாட்டிலைப் போட்டா, காசு(க்கான கூப்பன்) வரும்!! பிளாஸ்டிக் மறுசுழட்சியை ஊக்கப்படுத்த வரப்போவுது எங்கூர்ல!!










பெரியவன் உள்ளே, சின்னவன் வெளியே
இது Shell நிறுவனம் வச்சிருந்த ரேஸிங் கார் (மாதிரி). ஆனா, இதுல என்ன விசேஷம்னா, வழக்கமான ரேஸிங் கார்ல வேகமாப் போய் முதலிடத்துக்கு வந்தாப் பரிசு கிடைக்கும். ஆனா, இதில் "Fuel-intelligent" ஆகப் போகணும். அதாவது, மெதுவாகவும் போகக்கூடாது, வேகமாகவும் போகக்கூடாது. அதே சமயம், எரிபொருளும் வீணாகக்கூடாது. (அவ்வ்வ்வ்...)

என் பெரியவன் ஓட்டி, முதல் பரிசு வாங்கினான். வெளியே முன்பக்கம் வைத்திருக்கும் டிவி திரையில் கார் போகும் சாலை, வேகம், எரிபொருள் செலவு விவரங்கள் தெரியும். (அதாவது வீடியோ கேம் மாதிரி) கண்காட்சியில் அந்த வண்டிய ஓட்டுவனங்கள்லயே அவன்தான் ரொம்ப "Fuel-intelligent"- ஆம்.

ந்த மாநாட்டில், உலகம் முழுவதும், எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்வளம் பேணுதல் இந்த மாதிரி காரணங்களுக்கானக் கண்டுபிடிப்பு மற்றும் பங்களித்தலுக்காக சிறப்புப் பரிசு "Sheik Zayed Energy Prize" என்று வழங்கப்பட்டது. (பரிசுத் தொகை $500,000-ங்கோவ்!!)

இந்தப் பரிசின் “வாழ்நாள் சாதனையாளர்” பிரிவில் வெற்றி பெற்றவர் இயற்பியலாளரான, டாக்டர். அஷோக் கேட்கில் என்பவர். இவர் பிறந்தது இந்தியாவில், வசிப்பது அமெரிக்காவில். இவரது “தர்ஃபூர் ஸ்டவ்” என்கிற கண்டுபிடிப்புக்குத்தான் இந்தப் பரிசு.

சாதாரண ”மூணு கல்” அடுப்பும், “தர்ஃபூர்” அடுப்பும்
பின்தங்கிய பல நாடுகளில் இன்றும் சமையல் என்பது விறகு அடுப்புகளில்தான். அதற்கான விறகைச் சேகரிக்கக் காட்டிற்குச் செல்லும் பெண்கள் பல்வேறு ஆபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது; மேலும் அதிலேயே நேரமும் அதிகம் செலவாகிறது. ஆப்பிரிக்க நாடான தென் சூடானில், தர்ஃபூர் நகரில் இதுபோல அவதிப்படும் பெண்களுக்கு உதவத் தயாரிக்கப்பட்ட அடுப்புதான் “தர்ஃபூர் ஸ்டவ்”. இதன் விசேஷ வடிவமைப்பால், 55% குறைந்த எரிபொருளே தேவைப்படுகிறது என்பதால் அங்கே பெண்களுக்கு கொஞ்சம் விடிவுகாலம்!! மரங்களையும் காப்பாற்ற முடிகிறது.

இந்தப் பரிசின் இன்னொரு பிரிவான, லாபநோக்கில்லாத சிறுதொழில் பிரிவில், ”Carbon Disclosure Project” என்கிற இங்கிலாந்து நிறுவனம் வென்றுள்ளது. இவர்கள் மற்ற நிறுவனங்கள்/ ஆலைகளின் கார்பன் வெளியீட்டையும் (carbon emissions), தண்ணீர் பயனீட்டையும் கணக்கிடவும், அவற்றை முறைப்படுத்திக் குறைக்கவும் ஆலோசனை வழங்கி உதவுகிறார்கள்.  இவ்வாறு சுற்றுச் சூழலுக்கு உதவுவதால் இந்தப் பரிசு பெறுகிறார்கள்.

இந்தக் கண்காட்சியில, "How energy  industry works"னு ஒரு புக் கிடைச்சுது. ஒவ்வொரு விதமான எரிசக்தி, மின்சக்தி கிடைக்கப் பெறும் முறைகளும் பற்றி விளக்கமாக் கொடுத்திருக்கு. வாசிக்கவும் ஈஸியா இருக்கிறதனால், மீ த வாசிச்சிங். அதைபத்தி இன்னொரு பதிவுல. (இன்ஷா அல்லாஹ். ஆனா உடனே &ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்) நானும் இதுவரை புத்தக விமர்சனம் எதுவும் எழுதுனதில்லை. இதை வச்சுப் போட்டுத் தாக்கிற வேண்டியதுதான்!!

நீர்க் கோலங்கள்:


தண்ணியாலேயே படங்காட்டுறாங்க. பாத்து எஞ்சாய்!!
மேலேயிருந்து விழுற தண்ணி கீழே ஒரு சொட்டுகூட வெளியே விழாத மாதிரியான அமைப்புதான் என்னைக் கவர்ந்தது. (ஹி.. ஹி..)


தொடர்புடைய பதிவுகள்:

Post Comment

26 comments:

ஸாதிகா said...

வித்தியாசமான படஙக்ளுடன் தகவல்கள்.

Fuel-intelligent க்கு என்ன பரிசு கிடைத்தது?அதை சொல்ல வில்லையே?

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

//இது நிஜமான “அறிவுஜீவிகள்” கலந்துகொள்ளும்//

அப்ப எனக்கு தொடர்பில்லாதது.

:) :) :)

ஸ்ரீராம். said...

எல்லாமே சுவாரஸ்யமான விவரங்கள். அந்த தர்ஃபூஸ் மன்னிக்கவும் தர்ஃபூர் அடுப்பிலும் விறகுதானே வைத்து எரிக்க வேண்டும்? அல்லது வேறு எதாவதா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு. சோலார் எனர்ஜி கண்காட்சியில் இடம்பெற்ற அறிவியல் சாதனங்களும் அதை பற்றிய தகவல்களும் மிக அருமை. இன்னும் இதே மாதிரி தகவல்களை உங்களிடமிருந்து நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறோம்.

/// என் பெரியவன் ஓட்டி, முதல் பரிசு வாங்கினான். வெளியே முன்பக்கம் வைத்திருக்கும் டிவி திரையில் கார் போகும் சாலை, வேகம், எரிபொருள் செலவு விவரங்கள் தெரியும். (அதாவது வீடியோ கேம் மாதிரி) கண்காட்சியில் அந்த வண்டிய ஓட்டுவனங்கள்லயே அவன்தான் ரொம்ப "Fuel-intelligent"- ஆம். ///


என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்

Thava said...

சார்..எத்தனை தகவல்கள்..தங்களது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனதை தொட்டுவிட்டன..எரிசக்தியை பற்றி நிறையவே தெரிந்துக்கொண்டேன்...அடுத்த பதிவான புத்தக விமர்சனத்தை சீக்கிரம் எதிர்ப்பார்க்கிறேன்..இனி நானும் தங்களது வாசகர்களில் ஒருவன்..மிக்க நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

சாந்தி மாரியப்பன் said...

எக்கச்சக்க விவரங்கள்.. நன்றி ஹுஸைனம்மா..

baleno said...

நல்ல பல தகவல்கள். அபுதாபியில் இப்படி மாநாடு நடப்பதையும் அறிந்து கொண்டேன்.

RAMA RAVI (RAMVI) said...

எரிசக்தி பற்றிய சிறப்பான தகவல்கள்.

உங்க மகன் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள், ஹுஸைனம்மா.

//“தர்ஃபூர் ஸ்டவ்”//நல்ல விஷயம். நம்ப ஊரு குமுட்டி அடுப்பு மாதிரியே இருக்கு.

ராமலக்ஷ்மி said...

சிறப்பான பகிர்வு ஹுஸைனம்மா.
காடுகளை வெட்டி, பருவமழை இழந்து, தண்ணீர் இல்லாமல், மின்சாரம் தட்டுப்பாடாகித் திகைத்து நிற்கு உலகுக்குத் ரொம்பத் தேவையான கண்டுபிடிப்புகள். “தர்ஃபூர் ஸ்டவ்”வினால் மரங்கள் காக்கப்படும்.
சோலார் பேனல் அருமை. உர மெஷின் சூப்பர்.

பெரிய மகனுக்கு போட்டியில் வென்றதற்கு பெரிய பூங்கொத்து:)!

suvanappiriyan said...

பயனுள்ள பதிவு! உங்கள் பையன் பரிசு வாங்கியதற்கும் பாராட்டுக்கள். சுகாதாரமான சூரிய எரிசக்தியை நம் நாட்டில் இன்னும் பரவலாக்க வேண்டும். விலையும் மலிவாக இருக்க அரசு இதற்கு மான்ய உதவி கொடுக்க முயற்ச்சிக்கலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மாதாஜி ஆசிர்வாதம்..மகன் பெரிய இண்டலிஜெண்ட் ..:)

கீதமஞ்சரி said...

வருங்காலத்தில் வரப்போகும் எரிசக்தி பற்றிய ஆக்கபூர்வமான அறிவியல் தகவல்களுக்கு நன்றி. மகனுக்குப் பாராட்டுகள்.

அந்த நீர்க்கோல நடனம் அழகு.

Avargal Unmaigal said...

எக்கச்சக்கமான தகவல்கள். மற்றும் நல்ல பல விவஷங்கள் கொண்ட பதிவு ..வாழ்த்துக்கள் & நன்றி ஹுஸைனம்மா..

அரபுத்தமிழன் said...

//Fuel Intelligent//
பின்னே! சிக்கனப் (பெண்) புலிக்குப்
பிறந்தது பூனையாகுமா :)

இந்த மாநாடு நடப்பதற்கு முன் ஒரு தகவல் தந்திருக்கலாமே :(

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - வாங்கக்கா. அவனுக்கு, "Ferrari” கார்கள் படங்கள் போட்ட ஒரு பெரிய வண்ணமயமான காலண்டர் கொடுத்தாங்க. நான் ”இதுதானா”ன்னு பார்க்க, அவனுக்கு Ferrari காரையே கொடுத்த மாதிரி பெருமை!! :-))))

பாஸித் -
///இது நிஜமான “அறிவுஜீவிகள்” கலந்துகொள்ளும்//
அப்ப எனக்கு தொடர்பில்லாதது.//

அப்ப, நீங்க எழுதுற பதிவுகள், தொடர்கள் எல்லாம் மண்டபத்துல யாரும் எழுதிக் கொடுத்ததா? ;-)))))

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //தர்ஃபூஸ்// :-)))

ஆங்கிலத்தில் Darfur என்று சொல்வார்கள். தமிழில் எழுதும்போது எனக்கும் சிரிப்பாத்தான் இருந்துச்சு. இதிலும் அதே விறகுதான். ஆனா தேவைப்படும் அளவு பாதியாகக் குறைகிறது.

ஸ்டார்ஜன் - பாராட்டிற்கு நன்றி.

குமரன் - என்னது, சார்-ஆ?? :-))))

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - நன்றிக்கா.

பலேனோ - வாங்க. அபுதாபியும் எரிசக்தி மிச்சப்படுத்த வேண்டியிருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகளை ஆர்வத்துடன் நடத்துகின்றனர்.

ராம்விக்கா - ஆமாக்கா, வடிவமைச்சவரும் நம்ம ஊர் ஆள்தானே, அதனாலயா இருக்குமோ? :-)))
பாராட்டுக்கு நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

ராமலக்ஷ்மிக்கா - இந்தியாவிலும் சில பகுதிகளி இந்த அடுப்பை அறிமுகப்படுத்தப் போவதாகப் படித்த ஞாபகம். ராஜஸ்தான் போன்ற இடங்களிலும், பழங்குடி கிராமங்களிலும் உதவும்.

பூங்கொத்துக்கு நன்றிக்கா.

சுவனப்பிரியன் - நன்றி. கண்காட்சியில் சோலார் பேனல் விலை கேட்கும்போது நம் நாட்டிற்குக் கட்டுப்படியாகுமா என்ற எண்ணத்தோடுதான் கேட்டேன். ஐரோப்பிய நாடுகளில் கடல் அலை சக்தியைக்கூட விடாமல் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஏக்கப்பெருமூச்சு விடுவதைத் தவிர என்ன செய்வது.

இந்தியாவில் சோலார் பேனலுக்கு மான்யம் தருகீறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கீறேன். ஆனாலும் கையைக் கடிக்கும் விலைதான்.

ஹுஸைனம்மா said...

முத்தக்கா - ரொம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வந்திருக்கிங்க, அவ்ளோ பிஸீயா? நலமா எல்லாரும்?

மகன் இண்டெலிஜன்ஸ் அவங்க அப்பா மாதிரின்னுதான் சொல்லணும். நானெல்லாம், எடுத்தோம்-கவுத்தோம் ரேஞ்சுதான்!!

கீதா - மிக நன்றி. நீர் நடனம் - நானும் பலமுறை ரசித்துப் பார்த்தேன். இங்கே துபாயில் “dancing water fountain” ஒன்று இருக்கிறது. பார்த்தா பாத்துகிட்டேயிருக்கலாம்!!

அவர்கள் உண்மைகள் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அரபுத்தமிழன் - வாங்க.

//Fuel Intelligent//
பின்னே! சிக்கனப் (பெண்) புலிக்குப்
பிறந்தது பூனையாகுமா //

அட, ஆமால்ல!! இது புரியாம, நான் முந்தின கமெண்ட்ல பெருமைய அவங்கப்பாவுக்கு வாரிக் கொடுத்திட்டேனே!! ஏமாளி பெண் இனம்!! :-))))

அந்தக் காரை ஓட்டுவதற்கான விதிமுறைகளைச் சொன்னபோது, No fast, no slow-ன்னு சொன்னப்போ ஆம்பளப்புள்ளையப் போயி ஸ்லோவா ஓட்டுன்னா நடக்குற காரியமான்னு நானே நம்பிக்கையில்லாம, ஃபோட்டோ மட்டும் எடுத்துட்டு நகண்டு போயிட்டேன். அப்புறம் பாத்தா, கையில காலண்டரோட வர்றான்!!
சில சமயம் நாமே(னே) நம்புவதில்லை நம் வாரிசுகளை!! :-)) :-(((

/இந்த மாநாடு நடப்பதற்கு முன் ஒரு தகவல் தந்திருக்கலாமே//
ஹல்லோ, பேப்பர் படிக்கிற வழக்கமில்லியா? தொடங்கறதுக்கு ஒரு வாரம் முன்னாலருந்தே தினம் விளம்பரம், செய்தி, போட்டியில் பங்கேற்பவர்கள்னு போட்டுத் தாக்கிட்டிருந்தாங்களே!!

ADHI VENKAT said...

நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

மகனுக்கு வாழ்த்துகள்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நல்ல பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா!

நட்புடன் ஜமால் said...

recycling the bottle is very interesting ...

சுற்று சூழல் பாதுகாப்பிற்கு நல்லதொரு ஊக்கம் ...

எரிபொருள்-புத்திசாலிக்கு நீங்க என்னா கொடுத்தீங்க ...

enrenrum16 said...

இந்த மாநாடு உண்மையில் ரொம்ப நல்ல விஷயம்... இது மாதிரி வேறு எங்கும் நடப்பதில்லை என்று நினைக்கிறேன்... இந்த சோலார் பேனல் விலை மட்டும் கொஞ்சம் சீப்பாகட்டும்... உலகில் நல்ல முன்னேற்றங்கள் நடக்கும் இன்ஷா அல்லாஹ்.. நல்ல விளக்கங்களுடன் புரிய வைத்தமைக்கு நன்றி.

/ஹல்லோ, பேப்பர் படிக்கிற வழக்கமில்லியா?// யக்கோவ்...இப்ப நியூஸ் பேப்பர்லாம் படிக்கிறடில்லீங்க...உங்க ப்ளாக்தான்... நாங்க படிச்சா ஒரு நியூஸ்பேப்பர்... உங்க ப்ளாக்ல நிறைய மீடியாக்களின் நியூஸ் கொட்டிக்கிடக்குதுங்க...அதுக்குன்னு ஃபீஸ் கேட்டுடாதீங்க... இப்படி எத்தனையோ பேர் பேப்பர் வாங்காததனால் பேப்பர் உபயோகம் குறையுது பாருங்க.. (அப்பாடா... ஹுஸைனம்மா தலையில பெரிய ஐஸ் பாறாங்கல் வச்சாச்சு.. காசு கேக்கமாட்டாங்க ;))

Congrats to the Fuel-intelligent ;)

பாச மலர் / Paasa Malar said...

நல்ல தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஹுசைனம்மா..

enrenrum16 said...

இந்த மாநாடு உண்மையில் ரொம்ப நல்ல விஷயம்... இது மாதிரி வேறு எங்கும் நடப்பதில்லை என்று நினைக்கிறேன்... இந்த சோலார் பேனல் விலை மட்டும் கொஞ்சம் சீப்பாகட்டும்... உலகில் நல்ல முன்னேற்றங்கள் நடக்கும் இன்ஷா அல்லாஹ்.. நல்ல விளக்கங்களுடன் புரிய வைத்தமைக்கு நன்றி.

/ஹல்லோ, பேப்பர் படிக்கிற வழக்கமில்லியா?// யக்கோவ்...இப்ப நியூஸ் பேப்பர்லாம் படிக்கிறடில்லீங்க...உங்க ப்ளாக்தான்... நாங்க படிச்சா ஒரு நியூஸ்பேப்பர்... உங்க ப்ளாக்ல நிறைய மீடியாக்களின் நியூஸ் கொட்டிக்கிடக்குதுங்க...அதுக்குன்னு ஃபீஸ் கேட்டுடாதீங்க... இப்படி எத்தனையோ பேர் பேப்பர் வாங்காததனால் பேப்பர் உபயோகம் குறையுது பாருங்க.. (அப்பாடா... ஹுஸைனம்மா தலையில பெரிய ஐஸ் பாறாங்கல் வச்சாச்சு.. காசு கேக்கமாட்டாங்க ;))