Pages

ஆம்பளை அழலாமா!






சென்ற மாதம் விம்பிள்டன் போட்டியில், (வழக்கம்போல) ரோஜர் ஃபெடரர் வென்றார். அதுவல்ல செய்தி, அவர் அழுததுதான் செய்தி!! அவர் ஜெயிப்பது வழக்கமாகிப் போனதைவிட, ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் - ஜெயித்தாலும், தோற்றாலும்- அவர் அழுவது வழக்கமாகிவிட்டிருக்கிறது.

(அழத் தொடங்கிய) ஆரம்பத்தில், ஒரு ஆணாக இருந்துகொண்டு அழலாமா, அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில், எல்லார் முன்பும் அழுவது இழுக்கல்லவா என்ற ரீதியில்தான் அவரது அழுகை பார்க்கப்பட்டது. இன்று அவர் தனது (தொடர்) அழுகையைக் குறித்து கூறும்போது, “மனிதனாகப் பிறந்த எல்லாருக்கும் மனசு உடைந்துபோவதுண்டு. அழுவதில் தவறொன்றுமில்லை. என் அழுகையை, என் ரசிகர்களின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகவே நான் உணர்கிறேன். அழுகை, என்னை ரசிகர்களோடு நெருக்கமாக்குகிறது.” என்று கூறுகிறார்.

அதாவது, அழுகின்ற ஒரு ஆண் அழுவது ஏன் என்று தன்னிலை  விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. (பெண்கள்னா கதையே வேற, அழலைன்னாதான் விளக்கம் கொடுக்கணும்!!) உலகம் முழுவதுமே, ஆம்பளைன்னா வீரம், தீரம், உறுதி எல்லாம் நிறைந்தவர்கள். கட்டுப்பாடுடையவர்கள். (சுயகழிவிரக்க)  உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள் அல்லது கூடாது என்ற ஒரு பொதுவான வரைமுறை உள்ளது.

ஒரு முறை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஹர்பஜனிடம் அடிவாங்கிவிட்டு அழுததற்கு  ’சின்னப் புள்ள மாதிரி அழுவுறான் பாரு’  எனத் தொடங்கி எத்தனை விமர்சனங்கள்!!

இயக்குனர்-நடிகர் சேரன், தன் படங்களில் கதாநாயகன் அழுவதாகக் காட்டுவார்.  அதுவும் பின்பக்கமாக சன்னமாக முதுகு குலுங்குவது போலத்தான். முதல் படம் ஆட்டோகிராஃபில் அதைச் சகித்துக் கொண்ட ஆண்களால், அடுத்தடுத்த படங்களிலும் அதே சீன் (அவசியத்தினால்) வந்தபோது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ அவமானமான செயலைக் காட்டுவதைப் போல விமரிசனங்களில் அலுத்துக் கொண்டார்கள்.

ஏன், வீட்டில் ஆண் குழந்தைகள் அழுதால்கூட, “ஆம்பளைப் புள்ள அழக்கூடாதுடா” என்றே கண்டிக்கப்படுகிறார்கள். அதைக் கேட்டுக் கேட்டு வளர்வதாலேயோ என்னவோ, பதின்ம வயது இளைஞர்கள்கூட சிலசமயம் கல்லைப் போல இறுகி விடுகிறார்கள்.  சார்லி சாப்ளின் சொன்னதுபோல, ஆண்கள், யாருக்கும் தெரியாமல் மழையில் அழுவதைத்தான் விரும்புகிறார்கள்.

சில வருடங்கள்முன், எனக்கு ஒரு சிகிச்சைக்காக மயக்க நிலையில் ஆபரேஷன் தியேட்டர் சொண்டு செல்லப்படும்போது, என் தந்தை குலுங்கிகுலுங்கி அழுததை உறவினர் ஒருவர் சிலாகித்துச் சொன்னார். அதே இடத்தில் என் தாயும் அழுதுகொண்டுதான் இருந்தார், ஆனால் அம்மாக்கள் அழுவதென்பது இயல்பான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஆண்கள் பலர், உடலின் வலிகளைக் கூட, முகத்தில் அதன் பாதிப்பே தெரியாதபடிக்குக் கஷ்டப்பட்டு பொறுத்துக் கொள்வார்கள். ஆஸ்பத்திரிகளில் ஊசி போடப்படும்போது ஒன்றுமே நடவாததுபோல அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, குழந்தைப்பேறு ஆண்களுக்கானது என்றிருந்தால், பிரசவ வார்டுகளில் அசாத்திய அமைதி நிலவுமோ என்று தோன்றும்!!


ஒரு நண்பர், தன் மனைவி இறந்தபோதும் தான் அழவில்லையென்றும்,  அவரின் நண்பர் ‘அழுதுவிடு’ என்று தன்னைச் சொன்னபோதும் இறுக்கமாய் இருந்ததாகச் சொல்லியிருந்தார். ஒருவரின் மரணத்தின்போது உறவுகள் அழுவது, இறந்துபோனவர் உலக வாழ்வை இழந்துவிட்டதற்காக என்பதைவிட, அவரைப் பிரிந்தபின் தன் நிலை என்னவாகுமோ என்பதற்கானக் கவலையாகத்தான் அழுகையின்  பெரும்பகுதி இருக்கும். ஆக, தன்னில் பாதியான ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அழுகை வரவில்லையென்றால், அது ‘நீ இல்லாமற் போனதால் எனக்கு எந்த இழப்புமில்லை’ என்று சொல்லாமல் சொல்லுவது போலாகாதா என்று கேட்கத் தோன்றுகிறது.



இறப்பின் இழப்பினைக் கூட வாய்விட்டு அழாமல், கீழுதட்டைக் கடித்து, இமைகளில் லேசான ஈரத்தோடு தாங்கிக் கொள்ளும் இதே ஆண்கள், ஏதேனும் ஒரு பாடலையோ இசையையோ கேட்டு, அட ஒரு சூர்ய அஸ்தமனத்தைக்கூடப் பார்த்து ’ஓ, வாட் எ டிவைன் ஃபீலிங்’ என்று உணர்ச்சி வசப்பட்டு  கண்கள் பனித்தால், அது அவரைக்  ‘கலையுணர்ச்சிகள்’ மிகுந்தவரென்றும்; ஒரு சமூக அவலத்தைக் கண்டு கண்ணீர் விட்டால்,  ’ஸாஃப்ட் கார்னர்’ உடையவர் என்றும் பெருமிதத்துடன் அடையாளப்படுத்தும்.

பெண்களால் விடப்படும் கண்ணீர், ‘பெண்களின் ஆயுதம்’,  நீலிக்கண்ணீர், ‘முணுக்குன்னா அழுவுறதே வேலையாப் போச்சி’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படும் அதே சமூகத்தில், ஆண் எப்போதாவது அபூர்வமாய் ஒருமுறை சொந்தக் காரணங்களுக்காக அழுதுவிட்டால்கூட,  “ஆம்பளையே அழுதுட்டானே” (அ) “ஆம்பளயையே அழவச்சிட்டாளே” என்று  வேறுவிதமாய்க்  கையாளப்படும்!!

இப்படியான சமூகச் சூழலில் வளர்ந்ததாலேயே என்னவோ, முதன்முறை ஒரு பொது இடத்தில் நிறைய ஆண்கள் எந்தவித சங்கோஜமுமின்றி அழுவதைப் பார்த்தபோது எனக்கு வெகு  ஆச்சர்யமாக இருந்தது. மக்காவில், இறையில்லத்திற்கு முன், கையேந்தியவாறு கண்களில் நீர்வழிய ஆண்கள் நின்றிருப்பதைப் பார்க்கப் பார்க்க  அதிசயமாகத்தான் இருந்தது.

சின்ன வயசில் கேட்ட நாகூர் ஹனீஃபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலில்,  ”அன்பு நோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள்” என்ற வரி வரும். ஆனால், எனக்கான பாடலாகவே நினைத்து கேட்டு வந்ததாலும், ஆண்கள் அழுது பார்த்திராத்தாலும், என்னால் அந்தவரி ஆண்-பெண் எல்லாருக்கும் பொதுவானதாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒருவர், தான் செய்த தவறுகளை உணர்ந்து, மனம்வருந்தி, கண்ணீர்விட்டு  மன்னிப்பு கேட்டால், தவறுகள் மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் சொல்கிறது.                                     

ஒவ்வொரு வருடமும், ரமலான் மாதத்தில் - பாவமன்னிப்பு அதிகம் தேடப்படும் இம்மாதத்தில் - சிறப்புக் கூட்டுத் தொழுகையின்போது, தொழுகையை வழிநடத்துபவர், உருக்கமாகக் கரைந்து அழுது பிரார்த்திக்கும்போது - நம்மையும் அந்த அழுகை தொற்றிக் கொள்ளும்போது... இதுதான் நிஜமான “டிவைன் ஃபீலிங்”!!

அறிவியல்  ரீதியாகவும், அழும்போது, மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் அழிவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அழுதுமுடிந்ததும், மனம் ரிலாக்ஸாகிறது. மனமுருகித் தானாக வரும் அழுகையின் கண்ணீர் எல்லா அழுக்கையும் கரைத்துவிடும் என்பது பொய்யில்லை. ஒருமுறை அழுதுதான் பாருங்களேன்!!

அழுகைக்கும் ஆண்-பெண் பேதமின்மை இருக்கட்டும்.

Post Comment

45 comments:

இமா க்றிஸ் said...

கட்டுரை அருமை ஹுஸைனம்மா. பாராட்டுக்கள்.

ப.கந்தசாமி said...

அழுதா கோழைன்னு நெனச்சுக்குவாங்கன்னுதான் எல்லா ஆண்களும் அழுகையை மறைச்சுக்குறாங்க. உலக வழக்கம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அழுகை பொதுவானதே.அழுகை பற்றிய அலசல் அசத்தல்

CS. Mohan Kumar said...

நீங்க வேற சினிமால நெகிழ்வான சீன் பாத்தாலே நானெல்லாம் அழுது தீதுடுவேனாக்கும் ! சீரியஸா சொல்றேங்க ! இந்த விஷயத்தில் என்னை மாதிரி நிறைய ஆண்களை பார்த்திருக்கேன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அப்படியெல்லாம் ஏதும் பொது விதி இல்லைங்க..

நான் பெரும்பாலும் வழிபடும் நேரங்களில் அழுதிருக்கிறேன்..இத்தனைக்கும் எனது உலகியல் வாழ்வு திருப்தி கரமானதாவும்,மகிழ்ச்சியாகவுமே இருக்கிறது..

அழுகை என்பது உள்ளம் விகசிக்கின்ற ஒரு நேரத்தில் இயல்பாக வரும்.இதற்கு கவலை அல்லது வருத்தம் என்ற ஒரே உணர்ச்சிதான் தூண்டுதலாக இருக்க வேண்டுமென்பதில்லை.

பொங்கும் ஆனந்தமும், மிதமிஞ்சிய பயமும், வெடிக்கும் ஹாஸ்யமும் கூட அழுகையை வரவழைக்கும்..

அழக் கூடிய சமயங்களில் அழுவதே சிறந்தது, இதில் ஆண், பெண் பேதத்திற்கு வேலை இல்லை.

ஆண் அழுவது அவனது இயலாமை என்ற உருவகம் ஆண்கள் அழுவதைத் தடை செய்து கொள்ளக் கூடிய காரணியாக இருக்கலாம்; இது மேலும் அவர்களது உடல் நலனுக்குத் தீங்குதான் ஏற்படுத்தும்.

வல்லிசிம்ஹன் said...

எனக்கு மறுப்பு எதும் கிடையாது.கண்டது காணாததுக்கும் கடவுள் தரிசனத்தின் போதும் கண்ணீர் நிச்சயம்.

தணல் said...

// நம்மையும் அந்த அழுகை தொற்றிக் கொள்ளும்போது... இதுதான் நிஜமான “டிவைன் ஃபீலிங்”!!//

நீங்கள் தொழுகையின் போது அப்படி உணர்கிறீர்கள் என்பதிப் புரிந்து கொள்கிறேன். தங்களுக்கு இது 'டிவைன்' என்று படுகிறதென்றால், மற்றவருக்கு நீங்கள் கூறியிருக்கும் இசையோ பாடலோ சூரிய அஸ்தமனமோ 'டிவைன்' என்று தோன்றலாம்! அந்த மனம் எதை எவ்வாறு உணர்கிறதோ அது அவ்வாறே. அவர்களுள் இருப்பது உங்கள் மனமில்லை. எனவே இதுதான் 'டிவைன்' மற்றதெல்லாம் டுபாக்கூர் என்று பொதுப்படுத்துதல் வேண்டாம்.

R.Ravichandran said...

Good Post, best wishes

ஸ்ரீராம். said...

அழுவதில் தவறில்லை. மனதை லேசாக்கும் மருந்து அது! அழுவதில் ஆணென்ன பெண்ணென்ன? திருப்பதி திருமலையில் பெருமாளைப் பார்க்க, கூட்டத்தைச் சமாளிக்க அவர்கள் கையாளும், அலுப்பு தரும் நிறைய நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டும். கொஞ்சம் சலிப்பு வரும். ஆனால் பெருமாள் சன்னதிக்குள் நுழையும்போது காரணமின்றி கண்கள் கலங்கும்! இறையுணர்வில் கண்கள் கலந்குவதைத் தவிர்க்க முடிவதில்லை. குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா என்ற எம் எஸ் பாடல் ஒன்று பாடலுக்கு நடுவே 'ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா' என்ற வரி வலியுறுத்திச் சொல்லப் படும்போதும் கண்கள் kalangum .

எனக்கும் அடிக்கடி கண்கள் கலங்கி விடும் மனதுதான். ஆனால் மற்றவர்களால் உடனே கவனிக்கப்பட்டு ஆச்சர்யப் படும்போது உடனே மறைக்கத் தோன்றுவது வாடிக்கையாகி விடுகிறது! :))

ஸ்ரீராம். said...

கடற்கரையில், பார்க்கில் ஒன்று கூடி சிரிப்புப் பயிற்சி செய்வது போல மூடிய அறைக்குள்ளாவது உங்கள் மனதின் சோக எண்ணங்களை எதையாவது நினைவு கூர்ந்தாவது ஒருமுறையாவது அழுது விடுங்கள் என்று அழுகைப் பயிற்சியும் கூடச் செய்யலாம். உடம்புக்கு நல்லது!

துபாய் ராஜா said...

அருமையான கருத்துக்களோடு அழகான பதிவு.

துபாய் ராஜா said...

'அழுகை' குறித்து அருமையான கருத்துக்கள்.

Prathap Kumar S. said...

பெண்கள் பொது இடத்தில் சிரிக்க கூடாது, ஆண்கள் பொது இடத்தில் அழக்கூடாது. என்னமாதிரியான வழக்கம் இது.?
வித்தியாசமான பதிவு... அப்பப்ப இதுமாதிரி பதிவு போட்டு "அழவச்சுடறீங்க" ஹுசைனம்மா:)

பெருநாள் வாழ்த்துக்கள்... ?:)

ஹுஸைனம்மா said...

// இதுதான் 'டிவைன்' மற்றதெல்லாம் டுபாக்கூர் என்று பொதுப்படுத்துதல் வேண்டாம்//

நான் எங்கே பொதுப்படுத்தியிருக்கேன்?

சிலர் இறப்பின் வலிக்குக் கூட அழாமல் மனதைக் கல்லாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களில் சிலரே இசை, கலை போன்றவற்றில் ஒன்றி கண்ணீர் விடுகிறார்கள். அதைத்தான் சொல்லிருக்கேன்.

மற்றபடி, எது டிவைன் என்பது அவரவர் மனம் சார்ந்தது என்பதே என் கருத்தும்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆணாக இருந்ததாலும், பெண்ணாக இருந்தாலும் அழக் கூடிய சமயங்களில் அழுவதே சிறந்தது...

நிறைய பேர் (ஆண்கள்) மனதில் பல விசயங்களை அடக்கி வைத்துக் கொள்வதால் தான், அவர்களுக்கு மட்டும் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக தகவல்....

சிரிப்பை விட சிறப்பான மருந்து ஏது ?

நன்றி சகோதரி... (TM 7)

ஷர்புதீன் said...

எனது வாழ்வின் மிக அதிக பட்ச சோக நிகழ்வில் கதறி அழ நேர்ந்தது... தனிமையில்!

சிநேகிதன் அக்பர் said...

வெளியில இத மாதிரி பேசிக்கிட்டாலும். பேசிக்காவே ஆணும் அழத்தான் செய்வான் ஆனா வெளியில தெரியாது அவ்வளவுதான். :)

அழகான பதிவு ஹுஸைனம்மா.

அப்பாதுரை said...

// ‘முணுக்குன்னா அழுவுறதே வேலையாப் போச்சி’

இல்லேன்றீங்களா? நிஜ்ஜ்ஜம்ம்மாஆ சொல்லுங்க?
இயற்கையா இருக்கலாம்.. மென்மையான மனசு பாருங்க, அதான் :-)

கோமதி அரசு said...

ஹுஸைனம்மா அருமையான பதிவு.
பக்தியோ , மகிழ்ச்சியோ,இழப்போ,
கண்ணீர் வருவது இயல்பு.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று தேவாரத்தில் சம்பந்தர் பாடி இருக்கிறார்.

ஆனந்த கண்ணீர்- மகிழ்ச்சி.
நீலி கண்ணீர்- கண்ணீர் வருவது போல் நடிப்பது.
கசிந்து உருகுவது- அன்பு, காதல், பக்தியால் வருவது.

நம் சோகத்தை வெளி படுத்தினால் பிறர் துன்ப படுவார்கள்என்று மனதுக்குள்ளேயே வைத்து மறுகுவது. உடலுக்கு கேடு.

உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது உங்கள் அப்பா மனம் விட்டு அழுதார்கள் என்று சொன்னீர்கள்.

அது போல் இல்லாமல் என் அப்பா என் அக்காவின் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது மனம் வருத்தப் பட்டு, என் அக்கா இறந்தவுடன், அவர்களும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல் ஆண்கள் தங்கள் துக்கத்தை அடக்கி வைப்பதால் அவர்களுக்கு மாரடைப்பு அதிகம் வர வாய்ப்பு உள்ளது.

தன் துக்கத்தை வெளி காட்டாமல் மனதுக்குள்ளேயே வைத்து எங்களை விட்டு பிரிந்து விட்டார்கள் என் அப்பா தன் 51வது வயதிலேயே.
(என் அக்காவுக்கு 25 வயது )

வாய் விட்டு அழுதுவிடவேண்டும்.
மனபாரம் குறைந்து விடும்.
அறிவன் அவர்கள் சொல்வது போல்
அழுவதை தடை செய்தால் உடல் நலனுக்கு தீங்குதான் ஏற்படும்.

கோமதி அரசு said...

அறிவியல் ரீதியாகவும், அழும்போது, மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் அழிவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அழுதுமுடிந்ததும், மனம் ரிலாக்ஸாகிறது. மனமுருகித் தானாக வரும் அழுகையின் கண்ணீர் எல்லா அழுக்கையும் கரைத்துவிடும் என்பது பொய்யில்லை. ஒருமுறை அழுதுதான் பாருங்களேன்!!

அழுகைக்கும் ஆண்-பெண் பேதமின்மை இருக்கட்டும்.//

ஆம் , நீங்கள் சொன்ன மாதிரி மன்முருகி அழுவது நல்லது தான்.
அதில் ஆண், பெண் பேதமில்லாமல் இருப்பதும் நல்லது தான்.

உங்கள் பதிவு என் அப்பாவை எனக்கு நினைவு படுத்தி விட்டது அதனால் அதை பகிர்ந்து கொண்டு விட்டேன்.

ஹுஸைனம்மா said...

@கோமதிக்கா,

உண்மைதான்க்கா. உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவதற்காக ஆண்கள் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொள்வது தவறு. உணர்ச்சிகளை - கோபம், அழுகை, மகிழ்ச்சி - என்று எதையும் ரொம்ப அடக்கி வைக்கக்கூடாது. தனிமையிலாவது வெளிப்படுத்திவிட வேண்டும்.

பெண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுவதால்தான், மாரடைப்பு விகிதம் அவர்களிடையே குறைவாக உள்ளது.

Vijayan Durai said...

பெருநாள் வாழ்த்துக்கள் அக்கா.

சாந்தி மாரியப்பன் said...

உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறதால் கண்டிப்பா உடல் மற்றும் உளவியல் ரீதியா பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். அடக்கி அடக்கி வெச்சு கடைசியில் ஒரு நாள் குக்கர் மாதிரி வெடிக்கிறதை விட அப்பப்ப வெளிப்படுத்திடறது ரொம்பவே நல்லது.

தணல் said...

//மற்றபடி, எது டிவைன் என்பது அவரவர் மனம் சார்ந்தது என்பதே என் கருத்தும்.//

"இது தான் நிஜமான டிவைன் ஃபீலிங்" என்ற வரியை வைத்துக் கூறியிருந்தேன். நீங்கள் அப்படிப் பொதுப்படுத்திச் சொல்லவில்லை என்றதற்கு நன்றி!

Naazar - Madukkur said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
ஈதுல் பித்துர் வாழ்த்துக்கள்.
பெருநாள் நாளில் ரொம்பவே சிந்திக்க வைத்து விட்டீர்கள்,

காரணமே இல்லாமல் இருந்தாலும் சிரிக்க சொல்கிறார்கள்,
காரணம் இருந்தாலும் அழ வேண்டாம் என்று சொல்கிறார்கள் (சில நேரங்களில் விதி விலக்கு) தன்னால் ஒரு காரியத்தை செய்ய முடியாதபோது, தோற்கு
ம் பொது, தன்மீது கழிவிரக்கம் கொண்டு அழுவது.
அதே போல் ஒருவர் மீதான கோபத்தையும் தனிமையில் திட்டி தீர்க்க சொல்கிறார்கள்.

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!!

Vijiskitchencreations said...

Eid Mubarak to u and your family.

அருமையான பதிவு.

Anonymous said...

தனிமையில் அழுவது ஆண்களின் குணம்.

நட்புடன் ஜமால் said...

(பெண்கள்னா கதையே வேற, அழலைன்னாதான் விளக்கம் கொடுக்கணும்!!)

ஹுஸைனம்மா ...

உங்க நேர்மை தாங்க, எங்களையெல்லாம் ...

அப்பாதுரை said...

பெருநாள் வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது$ said...

// சன்னமாக //

// சிலாகித்து //

// பதின்ம வயது //

ஹூசைன‌ம்மா.. உங்க‌ வ‌ழ‌க்க‌மான‌ பேச்சு ந‌டையில ( அதான் உங்க பலமே ) ஏன் இந்த‌ மாதிரி ஆளுங்கெல்லாம் நொழையுறாங்க‌..அதுவும் தேவையில்லாத‌ இட‌த்துல‌...

பை தி வே....கிளைமாக்ஸ்ல‌ பேக் டூ ஃபார்ம் வ‌ந்திருக்கீங்க‌...ர‌சிக்க‌ வைத்த‌ ப‌திவு.

இப்படிக்கு,
வலையுலக நக்கீரர்கள்.

Unknown said...

Good Post. Congrats. hi, I am very Happy to share an award with you in the following Link: http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/fabulous-blog-ribbon-award.html

அமுதா கிருஷ்ணா said...

கட்டுரை அருமை.
இப்படிக்கு அழுமூஞ்சி அமுதா

ஹுஸைனம்மா said...

இமா - நன்றி!

கந்தசாமி சார் - ஆமா சார், மத்தவங்களுக்காகத்தான் ஆண்கள் அழுகையை அடக்கிக்கிறாங்க.

முரளிதரன் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

மோகன் - சினிமா பாத்து அழுற ஆண்கள் ரொம்ப ரேர். (நான் பாத்ததிலே). அதனால நீங்க சொல்றது ஆச்சர்யமா இருக்கு.

என் பெரியவனும் இப்படித்தான் படம் பார்க்கும்போது அழு அழுன்னு அழுவான் - நான்கூட அழாத சீன்களுக்கும்!! சமீபமா ‘தோனி’ படம் பார்க்கும்போது பிழியப் பிழிய அழுதான். எனக்கு கவலையே வந்துடுச்சு!! :-))))

ஹுஸைனம்மா said...

அறிவன் - அழகான கருத்துகள். நன்றி.

வல்லிமா - நன்றிமா.

தணல் - நன்றி.

ரவிச்சந்திரன் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - ஆம், பெரும்பாலும் ஆண்கள் மற்றவர்களுக்காகத்தான் அழுகையைக் கட்டுப்படுத்துகீறார்கள். நன்றி சார்.

துபாய் ராஜா - நன்றிங்க.

பிரதாப் - அதானே என்ன ரூல்ஸ் அது? நாளைக்கே souk பக்கம்போய் ஓன்னு சத்தம் போட்டு அழுது, ரூல்ஸை மீறிடுங்க, சரியா!! :-))))

ஹுஸைனம்மா said...

தனபாலன் - மாரடைப்பு தகவல் ரொம்பவும் உண்மைங்க. நன்றிங்க கருத்துக்கும், ஓட்டுக்கும்.

ஷர்புதீன் - அப்பவும் தனிமையில்தான் அழுதீங்களா? இறைவன் மீண்டும் வசந்தத்தைத் தரட்டும் உங்களுக்கு.

அக்பர் - ஆமாங்க. நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அப்பாத்துரை!! பாயிண்டைப் பிடிக்கிறீங்க பாருங்க!!

//மென்மையான மனசு பாருங்க, அதான்// ஹி..ஹி...

இயலாமையை வெளிப்படுத்திக் கொள்கிறோம், ஐ மீன், பெண்கள் அப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். :-))))

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - கருத்துக்கு மிகவும் நன்றிக்கா.

விஜயன் - தம்பி, நலமா? ரொம்ப நாளா ஆளக் காணோம்? வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நாஸர் மதுக்கூர் - ஆமாங்க, ஒரு அளவுவரைதானே பொறுமையா இருக்க முடியும். அதற்குமேல், தனிமையிலாவது ஆற்றாமையை அழுது/திட்டி தீர்த்துக்க வேண்டியதுதான். இறைவனிடம் முறையிட்டுப் புலம்புவதும் ஒரு வழி.

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா - மிக்க நன்றி அக்கா.

விஜி - நன்றிப்பா.

மழை - நன்றிங்க.

ஜமால் - ஓகே, ஓகே!!

ஹுஸைனம்மா said...

அனா மூனா செய்யது - // உங்க‌ வ‌ழ‌க்க‌மான‌ பேச்சு ந‌டையில ( அதான் உங்க பலமே ) ஏன் இந்த‌ மாதிரி ஆளுங்கெல்லாம் நொழையுறாங்க‌..//

ம்க்கும்... கொஞ்சம் அப்படியிப்பிடி எழுதி நாங்களும் எழுத்தாளராகலாம்னு நெனச்சா விடமாட்டீங்களே!! :-)))

நலந்தானா? ஆளையேக் காணோம்?

ஹுஸைனம்மா said...

அப்பாதுரை - பெருநாள் வாழ்த்துக்கு நன்றிங்க.


சிநேகிதி - நன்றிங்க விருதுக்கு!

அமுதா - நீங்களுமா?? :-)))))

ezhil said...

எல்லா உணர்ச்சிகளையுமே அடக்குதல் பின் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். அதற்கான நல்ல வடிகாலை ஏற்படுத்திக்கொள்வது இரு பாலருக்குமே நல்லது. நல்ல பதிவு.

ezhil said...

எல்லா உணர்ச்சிகளையுமே அடக்குதல் பின் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். அதற்கான நல்ல வடிகாலை ஏற்படுத்திக்கொள்வது இரு பாலருக்குமே நல்லது. நல்ல பதிவு.