சமீபத்தில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், இயற்கை விவசாயத்தால் விளைந்த உணவுப்பொருட்களும், ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் ஒரே அளவிலான சத்துக்கள் கொண்டவையே. இயற்கை விவசாயத்தால் அதிகப்படி சத்துக்கள் ஒன்றும் கிடைப்பது இல்லை என்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதையொட்டி, பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்றவாறு மொத்த உணவு உற்பத்தி செய்வது ரசாயன உரங்களினால்தான் சாத்தியப்படும் என்று ஒரு கட்டுரை New York Times பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதன் வலைத்தளக் கருத்துப் பகுதியில் வாசகர்கள் “அதிகச் சத்துக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நஞ்சுகள் இல்லாத உணவே வேண்டும்” விளாசித் தள்ளிவிட்டார்கள்.
‘சத்யமேவ ஜெயதே’யில் அமீர் கானும், இயற்கை விவசாயத்தை ஆதரித்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அவர், அமீரகத்திற்கு வந்திருந்தபோது, ஒரு பத்திரிகையில் ‘இந்தியா குறுவிவசாயிகளின் நாடு. அதனால்தான் இயற்கை விவசாயம் இங்கு சாத்தியமாகிறது’ என்கிற தொனியில் பேட்டியளித்திருந்தார்.
அப்படின்னா, பலநூறு ஏக்கர் பரப்புள்ள பெரிய விவசாய பண்ணைகளில் இயற்கை விவசாயம் சாத்தியமில்லை என்று கூறப்படுவது சரிதானோ?
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
இதோ இந்த தர்பூசணியில் ரோஜாப் பூக்களைப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு, பூ செய்யும்போது வெட்டிப் போட்ட பழத்தை வேஸ்ட் பண்ணாமச் சாப்பிட்டிருப்பாங்களா, இந்தப் பூ(பழம்)வையும் இப்படியே வச்சு, பிறகு வீணாக்கிடக் கூடாதேன்னுதான் தோணுது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் (food festival) அதுதான் நடக்கிறது.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
நம்ம ஊரில், கட்சிக் கூட்டங்களுக்கு, உண்ணாவிரதத்துக்கு ஆட்களைக் கூட்டி வந்து பலத்தை ’நிரூபிப்பார்கள்’! நம்ம ஊர்லதான் இப்படி, வெள்ளைக்காரங்கள்லாம் அப்படி கிடையவே கிடையாதுன்னு நம்புற வெள்ளை மனசுக்காரங்க நாம.
வெளிநாட்டுக் கட்சிக் கூட்டத்தை விடுங்க. ட்விட்டர்லயே ஆயிர-லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்கள், எல்லோருக்குமே அது ‘தானா’ வந்தவங்க கிடையாதாம். ‘வாங்கின’ கூட்டமாம்!! வாங்கித்தருவதுக்குன்னே நிறைய தளங்கள் இருக்காம். விலையும் ரொம்ப சல்லிசுதான் - அஞ்சு டாலருக்கு, ஆயிரம் பேர்!!
ப்ளாக்குக்கும் இந்த மாதிரி (தமிழ்) ஃபாலோயர்ஸ் மொத்தமா கிடைப்பாங்களான்னு விசாரிக்கணும்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் தனிப்பட்ட படங்களை ஐரோப்பாவில் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதைக் கண்டித்து, அரச குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததில், படம் வெளியிடுவதற்குத் தடை விதித்து, ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரவேற்கவேண்டியது.
அவதூறான செய்தி, படங்கள் வெளியிடுவதென்பதில் இரட்டை நிலை எடுக்காமல், நாடுகளும், நீதிமன்றங்களும் ஒரே நிலையைப் பின்பற்றவேண்டும்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
தேக்கடி படகு விபத்து மறந்திருக்காது. நடந்து மூன்று வருடங்களாகியும், இன்னும் குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லையாம். காரணம் - அதில் சம்பந்தப்பட்ட இரு அரசு (சுற்றுலாத்துறை) ஊழியர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கு இன்னும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையின் அனுமதி கிடைக்கவில்லையாம். கிடைச்சுட்டாலும்....
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இப்ப நடக்கிற மோதலுக்குக் காரணம், இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் ஒரு தீவு. இந்தியா - பாகிஸ்தானுக்கு ஒரு காஷ்மீர் போல!! ஆனா, ஒரு வித்தியாசம், பிரச்னை இருந்தாலும், இரண்டு நாடுகளுமே அதை, காஷ்மீர் என்றுதான் அழைக்கின்றன. அங்கு சீனா பிரச்னைக்குரிய அந்தத் தீவை ‘டையாவூ’ என்ற பெயரிட்டு அழைக்க, ஜப்பான் அதை ‘சென்காகு’ என்றழைக்கிறது. இப்ப சீனாவில் ஜப்பானிய தூதரகத்தின்முன் போராட்டம், ஜப்பானிய பணியாளர்களைத் திருப்பி அனுப்புவது என்று எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுக்கின்றன்.
நம்மளப் போலவேத்தான் மத்த மெத்தப் படிச்ச நாட்டுக்காரங்க(ன்னு சொல்லிக்கிறவங்க)ளும்னு தெரியும்போது, ஒரு அல்ப சந்தோஷம்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
’பர்ஃபி’ ஹிந்தி திரைப்படம்: வழக்கமாக, படங்களிலும், நிஜத்திலும், ஆணுக்கு மனவளர்ச்சி குன்றியிருந்தாலும், காதல்-காமம் எல்லாம் இருக்கும்; திருமணமும் நடக்கும். ஆனால், அதுவே பெண் என்றால், அந்த உணர்ச்சிகளே இருக்காது - இருக்கக்கூடாது. அந்த வகையில், நல்ல முயற்சி. படம் பார்க்கும்போது, இந்த மாதிரி படங்கள் தமிழில் வருவதில்லையே என்று தோன்றியது. தமிழில் எடுத்திருந்தால், க்ளைமேக்ஸில் தாலி செண்டிமெண்ட் சீன் அல்லது பிரசவ சீன் வச்சு, ஜில்மில் (ப்ரியங்கா) குறைபாடு நீங்கி, அக்மார்க் தமிழ்ப் பெண்ணாக ஆகியிருப்பாள். படமும், இன்னொரு ‘சின்னத்தம்பி’ ஆகியிருக்கும்.
’பர்ஃபி’ பார்த்து, ரெண்டு நாள் கழிச்சு என்னவர் கேட்டார், “இந்தப் படத்துல ப்ரியங்கா சோப்ரா நடிச்சிருக்காப்லயாமே. கெஸ்ட் ரோலா? வரும்போது நான் தூங்கிட்டேனோ?”!!!!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
|
Tweet | |||
25 comments:
மீ தெ ஃபர்ஸ்ட்டூ....வடையெல்லாம் வேண்டாம்.....ஒரு இறால் பிரியாணி பார்சல் அனுப்பிடுங்க.....
நீங்க எப்படா பதிவு போடுவீங்க பின்னூட்டமிடலான்னு காத்திருந்தேன். அதுக்காகவாவது பார்சல் அனுப்பிடுங்க.....
பதிவ படிச்சுட்டு மீதி கமன்ட்.
அனைத்து தகவலும் அருமை.. நானும் காய்கறி, பழகளில் சின்ன சின்ன கர்விங் செய்வேன், ஆனால் மீஞ்சி போகும் காய், பழங்களை அன்றே மற்ற உணவில் சேர்த்துவிடுவேன்.
“அதிகச் சத்துக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நஞ்சுகள் இல்லாத உணவே வேண்டும்”
உண்மை.
ஆகவே உலகம் பூராவும் நம்ம சப்ஜெக்ட்டுக்கு (இயற்கை விவசாயம்) மார்க்கெட் இருக்கு போல.
அனைத்து தகவல்களும் நன்று.
வோட்டுக்கு காசு மாதிரி ஃபாலோயர்ஸ்க்கும் காசா? இனிமே யாரும் சும்மா ஃபாலோ பண்ணமாட்டாங்க போலிருக்கே.
கம்மென்ட்சுக்கும் ஏதாவது கிடைக்குமா?
பல்சுவைப் பெட்டி.
- இப்போதெல்லாம் கொஞ்சகாலமாகவே திருமணங்களில் கூட சமையல் காண்ட்ராக்ட் காரர் தன் திறமையைக் காட்ட ஏகப் பட்ட காய்கறிகளில் பொம்மை செய்து காட்சிக்கு வைப்பது வழக்காகியிருப்பதும் நினைவுக்கு வருகிறது.
- ட்விட்டர்ல ஆயிரம் பேர் பின்தொடர்வதால் என்ன பயன்?
- தாமதம் செய்யவும், மறைக்கவுமே அரசு யந்திரங்கள்...!
- 'பர்ஃபி' பார்க்க நினைத்திருக்கும் படம்.
அப்பாவிகள் நிறைந்த உலகமிது..
டிரங்கு பெட்டியிலிருந்து வந்த செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது ஹுஸைனம்மா.
“அதிகச் சத்துக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நஞ்சுகள் இல்லாத உணவே வேண்டும்”//
எல்லோரும் விரும்புவதும் அதுவே.
இயற்கை விவசாய விளைபொருட்களை தொடர்ச்சியாக உண்பதால நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் படிச்சேன்.
பர்ஃபி பார்க்க வேண்டும்.
கடைசி பாராவை மிக ரசித்தேன்.
எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே பிரபல கார்விங் பள்ளி.கற்றுக்கொள்ளும் நிமித்தமாக அங்கு சென்றால் அவர்கள் கூறும் பீஸைப்பார்த்து திரும்பி வந்து விட்டேன்.பக்காவாக பிசினஸ் பண்ணுபவர்கள் மட்டும் கற்றுக்கொள்ளக்கூடைய வகையில் பீஸ் உள்ளது.
மீ தெ ஃபர்ஸ்ட்டூ....வடையெல்லாம் வேண்டாம்.....ஒரு இறால் பிரியாணி பார்சல் அனுப்பிடுங்க.//பானு..போயும் போயும் ஹுஸைனம்மாவிடம் போய் இறால் பிரியாணி கேட்டீர்களே .ரொம்ப பச்சைப்பிள்ளைப்பா நீங்க.
டிரெங்கு பெட்டியில் உள்ள தகவல்கள் அருமை
கார்னிஷிங், அழகுக்காக வைக்கிறார்கள் எனக்கு இதில் உடன் பாடு இல்லை
எல்லாம் வேஸ்ட் ஆகுதேன்னு.
உண்மைதான்..தமிழ்ப் படமாய் இருந்தால் இறுதியில் அப்படித்தான் நடந்திருக்கும்....
ஏனோ எனக்கு இதைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு காதல் கதை நினைவில் வந்து போனது..
டிரங்குப் பெட்டி வழக்கம் போல் அருமை!
அனைத்து தொகுப்புகளும் அருமை...இயற்கை விவசாயம் பற்றி விஷயம் உண்மை தான்...சத்தான உணவாக இல்லை என்றாலும் மருந்து அடிக்காமல் இருக்கின்ற உணவே வேண்டும் என்பது தான் முக்கியம்..
நானும் இங்கே Food carving க்ளால் போகலாம் என்று நினைத்தேன்..அப்பறம் அதனை கற்று கொள்வதற்கு நேரம் கிடைக்கவேயில்லை...அப்பறம் நம்மூர் கல்யாணத்தில் எல்லாம் இந்த பழம் காய்கறிகளினை வைத்து சூப்பராக அலங்கரிப்பாங்க..ஆனால் அவ்வளவு சில மணி நேரங்களுக்காக ...பிறகு வீண் தான்..
டிரங்கு பெட்டியில் உள்ள எல்லா விஷயங்களுமே சுவாரசியமாக இருந்தன. எனக்கும் கார்விங் பார்க்கும் போது உங்க மாதிரியே தான் தோன்றும்.
ட்ரங்குப்பொட்டின்னால் ட்ரங்குப் பொட்டிதான். எத்தனை விஷயங்கள்.
அமெரிக்கால என்ன வேணா செய்துக்கட்டும், நாம் இயற்கை உணவை உண்போம்.
பர்ஃபி படம் அவ்வளோ நல்லா இருக்கா.
டிரங்குப் பெட்டி தகவல்கள் அனைத்தும் அருமை... மிக்க நன்றிங்க...
நன்று :)
இயற்கை உணவு என்றால் என்ன? இதுவே relative இல்லையா?
நான் பர்ஃபி பார்க்கும் போது தூங்காமல் பார்க்கணும்.
பூங்கொத்து!
yellaame nalla vishangal..
yenakkum puthuthu.
வாவ்... சூப்பரா தர்பூஸ் பழத்தில் கார்வ் பண்ணியிருக்காங்க ..... அடேங்கப்பாஆ..... இவ்ளோ டூல்ஸா.... ஒரு மெகானிக் கூட இவ்ளோ வச்சிருக்க மாட்டாங்க....:(
///’பர்ஃபி’ பார்த்து, ரெண்டு நாள் கழிச்சு என்னவர் கேட்டார், “இந்தப் படத்துல ப்ரியங்கா சோப்ரா நடிச்சிருக்காப்லயாமே. கெஸ்ட் ரோலா? வரும்போது நான் தூங்கிட்டேனோ?”!!!! ////
இனிமே தமிழ் படம் உள்பட.... படம் பார்க்க ஆரம்பிக்கும்போதே மாதுரி தீட்சித் நடிச்சிருக்கிறதா சொல்லிடுங்க... தூங்காம பார்ப்பாங்க.... :)))
//பானு..போயும் போயும் ஹுஸைனம்மாவிடம் போய் இறால் பிரியாணி கேட்டீர்களே .ரொம்ப பச்சைப்பிள்ளைப்பா நீங்க//// அப்ப கிடைக்காதா...?அட்லீஸ்ட் ஒரு சிக்கன் பக்கோடா.....????
/ “அதிகச் சத்துக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நஞ்சுகள் இல்லாத உணவே வேண்டும்” /
ஆம் இதுதானே முக்கியம்.
நல்ல தகவல்கள்.
---
திருமண வீடுகளில் காய்கனி அலங்காரம் பற்றி சொல்லியுள்ளார் ஸ்ரீராம். லால்பாக் மலர்கண்காட்சிகளில் கிலோ கணக்கில் காய்கறிகள் பார்வைக்கு அடுக்கப்பட்டு (சில உருவங்களாக அலங்கரிப்பட்டு) முடிவு தினங்களில் வாடி வதங்கி, பிறகுக் குப்பைக்குப் போவது வாடிக்கை.
உங்க பதிவைப் படிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்.
இன்னிக்குத் தான் வழி தெரிஞ்சது. வலைச்சரத்துக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லணும்.
நல்லா விசயங்க போட்டிருக்கீக. ட்ரங்க் பொட்டி எல்லாம் எங்க காலத்து சமாசாரம்.
ஒரு சூட் கேஸ் வி. ஐ.பி லே வாங்கி வச்சுக்கங்க.
அது என்னவோ !! மத்தவங்க விசயத்த போட்டோவை எல்லாம் போட்டு பிரபலமானவங்களை
எம்பாராஸ் பண்ணுவது மேல் நாட்டிலே கொஞ்சம் அதிகமாகவே கீது.
இங்கன இருக்குது. இல்லேன்னு சொல்ல முடியாது. இல மறைவு காய் மறைவு ஆக நடக்குது.
அங்கன பப்ளிக்கா நடக்குது. பேப்பரீஸு என்ரு ஒரு கும்பலே இது போல இருக்காமே.
உங்களுக்குத் தெரியாம இருக்குமா என்ன ?
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
Post a Comment