Pages

பக்கத்து வீடு




பக்கத்து வீட்டிற்கு மீண்டும் வாகனம் வந்த சத்தம் கேட்டது. சில மாதங்களாகவே காலியாயிருந்த  பக்கத்து பங்களாவிற்கு வரப்போவது யாராக இருக்கும் என்று ஆர்வமாக இருந்தது.  இரண்டு மூன்று நாட்களாக க்ளீனிங், பெயிண்டிங், மெயிண்டெனன்ஸ் எல்லாம் முடிந்து, இன்று வீட்டு உபயோகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் - அதுவும், “ராயல் ஃபர்னிச்சர்”, “ஜம்போ எலக்ட்ரானிக்ஸ்”, “ஜஷன்மால்” போன்ற உயர்ரகக் கடைகளிலிருந்து!! நான் நினைத்தது போலவே வரப்போவது ஒரு அமீரகக் குடும்பம்தானாம், என்னவர் சொன்னார்.

பெரிய குடும்பமில்லையாம், புதுமணத் தம்பதியராம். ஓ, அதான் புதுப்புது சாமான்செட்டு வருதா? எல்லாம் பெண்வீட்டு சீதனம் என்று நினைச்சிட்டீங்களா? இல்லை, இங்கே தலைகீழ்!!

இத்தனை வருஷமா இங்கே அமீரகத்தில் இருந்ததில், அமீரக மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் ஓரளவு தெரிஞ்சுகிட்டேன்.  அமீரக அரசு, தன் குடிமக்களை எப்படித் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறதுன்னு விலாவாரியாச் சொல்லி உங்களையும் புகைய விட்டாத்தான் எனக்கும் மனசு ஆறும்!! :-)

அமீரகத்தில் ஒரு திருமணம் முடிவானதும், மணமகன் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஒரு தொகையும், இஸ்லாமிய சட்டப்படி பெண்ணுக்குத் தனியே “மஹர்” என்ற தொகை அல்லது அசையாச்சொத்து கொடுக்க வேண்டும். கல்யாணம் என்பது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறு வைபவம்; அதன்பிறகு
ஒருநாள் மணமகன் தன் செலவில் இருவீட்டு உறவுகளுக்கும் பெரிய விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். பிறகே தனிக்குடித்தனம்.

மணமகளுக்கான திருமண உடை தொடங்கி, fully-furnished தனி வீடு, உதவிக்கு பணிப்பெண், வெளிநாடுகளுக்குத்  தேனிலவுப் பயணம், சிலசமயம் மனைவிக்குத் தனிக் கார் உட்பட எல்லாச் செலவுமே முழுசா மணமகனோடதுதான். நம்ம ஊர்ல கட்டுன சேலையோட வர்றதுன்னு சொல்வாங்களே -  அது இங்கே நிஜம்! கண்ணுமுழி பிதுங்குதா??!! இவ்வளவுக்கும் சம்பாதிச்சுட்டு கல்யாணம் பண்றதுன்னா, வழுக்கை விழுந்திடுமேன்னு தோணுதா?

அப்படியெல்லாம் இல்லை. அமீரகத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் பலவித சலுகைகள் தரப்படுகின்றன. கல்வி, மருத்துவம் எல்லாமே இலவசம். தவிர தேவையைப் பொறுத்து வீடு கட்ட நிலம்+பணம் அல்லது கட்டிய புதுவீடே இலவசமாகக் கொடுக்கப்படும். வீடுகளில் தண்ணீர், மின்சாரமும் இலவசம்!! மேலும், படித்து முடித்தவுடன், தகுதிக்கேற்றவாறு அரசாங்க நிறுவனங்களில்  வேலை அல்லது தனியே தொழில் தொடங்க அரசு முதலீடு தரும்.  அப்புறமென்ன, திருமணத்துக்கு சேமிச்சு ரெடியாகிடலாம். இதுதவிர, மணமகனுக்கு அரசாங்கமே “திருமண உதவித் தொகை” என்று ஒரு பெருந்தொகையைக் கொடுக்கிறது. பெற்றோர்களும் முடிந்தால் உதவலாம். அப்புறமென்ன?

ஒருமுறை ஒரு அரபுத் தாயிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “எனக்கு மூன்று மகள்கள்; நல்லவேளை ஒரே ஒரு மகன். இறைவனுக்கு நன்றி.” என்றார்.

முன்பு என்னுடன் வேலை பார்த்த அமீரகப் பெண்ணின் தங்கையின் திருமணத்திற்குச்  சென்றிருந்தேன். நிகழ்வுகளைப் பார்த்துக் கொஞ்சமல்ல, ரொம்பவேப் பொறாமையாக இருந்தது. முக்கியமாக, பெண்களுக்கான மண்டப வாசலில், இரு தரப்பு அம்மாக்கள், சகோதரிகள் இணைந்து நின்று, வருபவர்களை வரவேற்கிறார்கள்.  ”மாப்பிள்ளையோட, மச்சானோட சின்னம்மாவோட ரெண்டு விட்ட அண்ணனை உங்க அம்மா வாங்கன்னு சொல்லலை” என்று எந்தக் கம்ப்ளெயிண்டும் கிடையாது!!

அரங்கம் ஓரளவு நிரம்பியதும், மணமகளை அழைத்து அமர வைக்கிறார்கள்.  மேடைக்குப் போய் மோதிரம் போடுறது, டின்னர் செட் கொடுக்கிறது,  மொய் எழுதுறது - ஊஹும்... எதுவ்வும் இல்லை!! போலவே விருந்துக்கும் எல்லாரும் ஒரே மாதிரி அழைக்கப்பட்டு அமரவைக்கப்படுகிறார்கள். மேசைகளில் உணவு பரிமாறப்பட்டு ரெடியாக இருக்கிறது. மைனிகளுக்கும், அவர்களின் மாமியார்களுக்கும் தனியாக ஸ்பெஷல் பொறிச்ச கறியெல்லாம் கிடையாது!!

இவ்வளவுதான் திருமண விழா!! கல்யாணமும் முடிஞ்சுது, கத்தரிக்காயும் காய்ச்சுதுன்னு கிளம்ப வேண்டியதுதான். நம்ம ஊர் ஜமாத்களிலிருந்து மக்களை இந்த ஊர் கல்யாணங்களுக்கு அழைச்சு வந்து காமிக்கணும்!! :-(

நம்ம ஊர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் காணப்படுற உணவு வீணடித்தல் இங்கும் இருக்கிறது. நேற்று செய்தித்தாளில், மிக முதிய அமீரகப் பெண்மணி ஒருவர் இதைச் சுட்டிக்காட்டி,  ”எங்கள் காலங்களில் நாங்கள் தேவைக்கு மட்டும் சமைத்து உண்டோம். இன்றோ உணவு பெருமளவு வீணடிக்கப்படுகிறது.” என்று வருத்தப்பட்டுக் கண்டித்திருந்தார்.

உண்மைதான், நம் நாட்டைப் போலவே இளந்தலைமுறையினரிடம் அதிகப் பணப்புழக்கம் இருப்பதால், உயர்ரகக் கார்கள், எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகள் பயன்பாடு அதிகம் உள்ளது. பணத்தின் அருமை முதியவர்களுக்குப் புரிந்ததுபோல,  இளையவர்களுக்கு இன்னும் புரிபடவில்லை.

எனினும், இளைய தலைமுறையினர் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நம் நாட்டுக் இளைஞர்களைப் போலவே, மேலைநாடுகளில் படித்து பட்டம்/முதுநிலைப் பட்டம் பெறுகிறார்கள். மேலும், இங்கே அமீரகத்திலேயே நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்  கல்லூரிகள் இருக்கின்றன. இந்தியாவின் பிட்ஸ்-பிலானி கிளைகூட உண்டு தெரியுமா?

பெண்கள் முன்னேற்றமும் - படிப்பு, வேலை, தொழில்கள் ஆகியவை நம் நாட்டுக்கு இணையாகவே உள்ளது. அநேகம் பெண்கள் படிச்சு, நல்ல வேலைகளில் இருக்காங்க அல்லது சுயதொழில் செய்றாங்க.  ஆனால் இதனால் வீட்டில் பணியாளர்களை அதிகம் சார்ந்து இருக்க வேண்டியிருப்பதால், குழந்தைகள் வளர்ப்பில் இதன் பக்க விளைவு எதிரொலிப்பதாகவும் அமீரகப் பெரியவர்கள் வருத்தப்படுறாங்க.  இன்னொன்று,  இந்தியாவைப் போலவே இங்கும் லேட் மேரேஜ், விவாகரத்து விகிதம், விவாகரத்தான பெண்கள் தனித்து வாழ விரும்புவது ஆகியவை அதிகரித்து வருகிறது. நாட்டுக்கு நாடு வாசப்படி!!!

நான் கேட்டு வியந்த ஒரு சம்பவம் உண்டு. ஒரு நண்பருக்கு அறிமுகமான அமீரகக் குடிமகன் ஒருவருக்கு (முதல்)  திருமணம் ஆனது. திருமண ஒப்பந்தம் கையெழுத்தான ஒருசில தினங்களில் அப்பெண் விவாகரத்து வாங்கிக் கொண்டாள். அப்பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம், முதல் முறையும் இதேபோலவே ஒப்பந்தம் கையெழுத்தானதும் விலகினாளாம்!! இதில் யார் பக்கம் சரியோ, தவறோ. ஆனால், அப்பெண் துணிச்சலாக இருமுறை உடனடி விவாகரத்து கோரும் சாதகமான சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்!!

ஆம், இங்கு விவாகரத்து அதிகம் இருந்தாலும்,  விவாகரத்தான பெண் மறுபடி முதல் தாரமாகவே வாழ்க்கைப் படுமளவுக்கு, மறுமணம் என்பதும் மிக சகஜமான ஒன்று.

ஒரு குடும்பத்தில் பல சகோதர சகோதரிகள் இருந்தால், முதலில் அக்காவுக்குக் கல்யாணம், பிறகு தங்கைக்கு என்றெல்லாம் கிடையாது. யாரைப் பெண் கேட்டு வருகிறார்களோ, அது கடைசிப் பெண்ணாக இருந்தாலும், உடன் திருமணம். போலவே சகோதரர்களுக்கும் - சகோதரிகளின் திருமணம் முடிந்துதான் அண்ணனுக்குக் கல்யாணம் என்கிற சம்பிரதாயங்களெல்லாம் கிடையாது.  இதற்கு வரதட்சணை, சீர்கள், கூட்டுக்குடும்பம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

ஆண்கள் திருமணமானதும் (பொருளாதாரத்தைப் பொறுத்து) உடனே தனிக்குடித்தனம் போய்விடுவார்கள்!! இதனாலேயே மாமியார்/நாத்தனார்-மருமகள் பிரச்னைகளெல்லாம் இல்லையோ என்னவோ. அதற்காக பிள்ளைகள் தம் பெற்றோரை அப்படியே விட்டுவிடுவதில்லை. வார இறுதி நாட்களில் இருதரப்பு பெற்றோர் வீடுகளிலும் அனைத்து மக்களும் கூடுவது கட்டாயக்கடமை!! அமீரகக் குடும்பங்களில் தாய்க்கே அதிகாரம் அதிகம். பல அமீரகத் தொழிலதிபர்கள் பேட்டி கொடுக்கும்போது, தன் தாய்க்கு இன்றும் கட்டுப்படுவதுண்டு என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். மேலும், வீடு, மருத்துவம், உதவித் தொகை உள்ளிட்ட பெரிய செலவுகளுக்கெல்லாம் அரசே பொறுப்பேற்றுக் கொள்வதால், பணத்திற்காக பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் அவசியமும் இல்லை!!

எங்கள் பக்கத்து வீட்டுத் தம்பதியரும் வாரம் தவறாமல், வேறு மாநிலமான ராஸ்-அல்-கைமாவில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிடுவர். கணவர், விண்வெளித் துறையில் வேலை பார்க்கிறார். மனைவியும் ஒரு அரசு நிறுவனத்தில்.

உறவுமுறைத் திருமணங்கள் அதிகம் என்பதால், அவசியத்தை உணர்ந்து, திருமணத்திற்குமுன் மருத்துவப் பரிசோதனைகள் பல வருடங்களுக்குமுன்பே கட்டாயமாக்கப்பட்டுவிட்டன.  இந்நாட்டு மக்கள் மனவளர்ச்சிக் குறைபாடுள்ள சிறப்புக் குழந்தைகளை ”இறைவனின் நன்கொடையாகக்” கருதுகிறார்கள் என்று செய்தித்தாளில் வாசித்து ஆச்சரியப்பட்டேன். அதேசமயம் மரணத்தை மிக இலகுவாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இங்கும் கிராமங்களும், அங்கு வாழும் எளியவர்களும் உண்டு. ஏன் நாகரீகம் பெரிதும் எட்டாத மலைவாழ் மக்கள்கூட உண்டு. ஆனால், சுகாதாரம், கல்வி வசதிகள் எட்டாத இடம் இல்லை.

விவசாயம் பெரிதும் போற்றப்படுகிறது. மானியங்களும், இலவச தண்ணீர்-மின்சாரம், உற்பத்திப் பொருளை அதிக விலைக்குக் கொள்முதல் எல்லாம் உண்டு. புதிய முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறார்கள். இதனால், கடும் கோடையிலும் குறையாத உற்பத்தி தரும் Green-house farming பயன்பாட்டில் உள்ளது. மண் இல்லாமல், தண்ணீரில் பயிர் செய்யும் Hydroponics முறையும்  ஒரு (படித்த) விவசாயி மேற்கொள்கிறார்!!

கல்வி, மருத்துவத்துறைகளை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது அரசு. அரசுப் பள்ளிகளில், பாடங்கள் அரபிமொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, எல்லா ஆசிரியர்களுக்கும் தற்போது ஒரு வருட பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் புலமையை அதிகரிக்க பிரைமரி வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆங்கிலேய ஆசிரியையும் பிரத்தியேகமாக வரவழைத்து நியமித்துள்ளார்கள்.

அரசு மருத்துவமனைகளும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் போன்ற பிரபல மருத்துவமனைகளோடு இணைந்து செயலாற்றும்படி சீரமைக்கப்பட்டு, பல அரிய சிகிச்சைகள் இங்கேயே கிடைக்குமளவு தரம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.  



நாட்டின் வளர்ச்சிக்குரிய இத்தனை ஏற்பாடுகளும், நாட்டின் பெட்ரோலிய மற்றும் இதர வருமானங்களைக் கொண்டே செய்யப்படுகிறது. தனிநபர் வருமான வரிகள் உட்பட பல வரிகள் இங்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


அமீரகத்தின் தொடர் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்நாட்டின் தொலைநோக்குள்ள ஆட்சியாளர்களே காரணம். மக்களோடு மக்களாகக் கலந்து பழக முனையும் முயற்சியாகவும், நிர்வாகத்தைக் கண்காணித்து முறைப்படுத்தவும் ஆட்சியாளர்கள் அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சேவை மையங்களுக்கு திடீர் வருகைகள் தருவதுண்டு. அமீரக “தேசிய தினமான” நேற்று (டிசம்பர் 2) வெளிநாட்டு மக்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் மொபைல் ஃபோனில் வாழ்த்துச் சொல்லி, உப ஜனாதிபதியான துபாய் ஆட்சியாளரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி!! 




நேற்றைய தேசிய தினத்தின் கொண்டாட்டங்களில், இந்நாட்டு குடிமக்களுக்கு இணையாக, வெளிநாட்டினரும் குறைவில்லாத உற்சாகத்துடன் தம் வீடுகள், கார்களை அலங்கரித்துக் கலந்துகொண்டது ஒன்றே சாட்சி, அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் நாடு இது என்பது!!

Post Comment

31 comments:

Seeni said...

ada nalla pakirvu...!


neril kaatchikalai paarththathu pola....

ராமலக்ஷ்மி said...

பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்லவை நிறைய. சிறப்பான பகிர்வு.


Menaga Sathia said...

அழகான கட்டுரை,படிக்கவே வியப்பாக இருந்தது...தேசிய தினத்திற்கு வாழ்த்துக்கள்.

அஜீம்பாஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தேசிய தின பேரணியில் மலையாளிகள் மற்ற நாட்டுகாரர்களோடு ஊர்வலமாக போனதை ஆசியாநெட் டிவியில் பார்த்தேன் நம் தமிழர்கள் இதில் கலந்து கொள்வதில்லையா.

ஸ்ரீராம். said...

அட சொல்ல வைக்கிறது பல தகவல்கள். உடனடி விவாகரத்து சரி, வாங்கின மெஹர் திருப்பித் தரப்படுமா? அல்லது அவ்வளவுதானா? ஜீவனாம்சம்?

//வார இறுதி நாட்களில் இருதரப்பு பெற்றோர் வீடுகளிலும் அனைத்து மக்களும் கூடுவது கட்டாயக்கடமை!!//

ச.அ. மி. லக்ஷ்மி யோசனை போல!!

// உப ஜனாதிபதியான துபாய் ஆட்சியாளரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி!! //

மறுபடியும் அட! ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வை உள்ளிட்ட பல செய்திகள் உண்மையிலேயே ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன.

//என் பாட்டுக்கு எசப்பாட்டு இங்க...//

ஓ... வை. வார்த்தைகள் மாறி விட்டனவே....!

வல்லிசிம்ஹன் said...

படிக்கப் படிக்க இனிமை.

இந்த வார இறுதிக் கலாச்சாரம் ரொம்பப் பிடித்திருக்கிறது.

உலகின் இசைபட வாழும்நாடாக அபுதாபியைச் சொல்லலமா.

மனம் நிறைந்த ஹார்மனி டே வாழ்த்துகள் ஹுசைனம்மா.

ஸாதிகா said...

ஒரு அருமையான சமுதாயதினூடே பயணித்த உணர்வு உங்கள் பகிர்வை படிக்கையில்.வித்தியாசமான பகிர்வு.நம் நாட்டிலும் இப்படி இருந்தால்..கற்பனையே சுகமாக உள்ளது ஹுசைனம்மா.

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வு. ஆச்சரியப்பட வைக்கின்றன தகவல்கள்.

நல்லது தொடரட்டும்....

அமுதா கிருஷ்ணா said...

எல்லாம் பெட்ரோல் படுத்தும் பாடு.

பெண்களை பெற்றவர்கள் கவலையே படவேண்டாம்.சூப்பர்.

Unknown said...

Appa appa enna oru kalasaram. Pala thakaval thanthu irukeega.. Padikavey viyapaaga iruku.. Nalla pakirvu valthukal akka

Sangeetha said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள், எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் ஆசிர்வதிகபட்ட மக்களும் நாடும். படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது.

அப்பாதுரை said...

நிறைவாக இருக்கிறது படிக்க.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு. நல்ல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது சகோ.

இமா க்றிஸ் said...

தேடிப் போய் அறிந்துகொள்ள மாட்டேன். இப்படி எங்காவது படித்தால்தான் உண்டு. தகவல்களுக்கு நன்றி ஹுசைனம்மா.

ezhil said...

அவர்களின் வாழ்வியல் தெரிய எங்களுக்கு ஒரு வாய்ப்பு. நிஜமாகவே பொறாமையாகத்தான் இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி

Ranjani Narayanan said...

நிஜமாகவே பொறாமையாத்தான் இருக்கு. நாம அங்க பொறந்திருக்கலாம்!

Mahi said...

சமீபத்தில் சவுதி சென்று வந்த தோழி ஒருவர் இந்த மஹர்-வழக்கங்கள் பற்றி சொன்னார். அமீரகம் பற்றி படிக்க மனசுக்கு நிறைவாக இருக்கிறது ஹூஸைனம்மா![கவனிக்க,காதில் புகை வரலை!;) :)]
பகிர்வுக்கு நன்றி!

enrenrum16 said...

அமீரகத்துக்குத் தேங்க்ஸ்கிவிங் பண்ண மாதிரி இருந்தது. அதுவும் ஷேக் முஹம்மதுவிடமிருந்து வந்த மெஸேஜ் உண்மையிலேயே கிடைத்த அனைவருக்கும் புது அனுபவம் தான். 'ஷேக் எனக்கு மெஸேஜ் அனுப்பியிருக்கார்'னு இவரோட அலம்பல் தாங்கமுடியல :))...

இங்குள்ள குடும்ப அமைப்பின் பல நிலைகளை அறியத்தந்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

அட.. இந்த ஏற்பாடு நல்லாருக்கே. பெண்ணைப்பெத்தவங்களுக்கு கவலையே இல்லை.

Kanchana Radhakrishnan said...

சிறப்பான பகிர்வு.

அன்புடன் மலிக்கா said...

உங்க பாட்டுக்கு எசப்பாட்டு.

உண்மைதான் ஹுசைன்னம்மா. அங்குள்ள வாழ்க்கை முறைகளை நம்மவர்கள் கடைப்பிடித்தால் ஏழைக்குமருகள் ஏக்கம் காணாது.
வாழாவெட்டியாகும் குமருகள் வாட்டம் காணாது

பேச்சுக்கள் மட்டும் வீண்ஜம்பமாக பேசக்கற்றுகொண்டுள்ளார்கள் எல்லாம் முறைப்படிதான் நடக்கிறோமென..

பகிர்வு அருமை..

கோமதி அரசு said...

பெண்களுக்கான மண்டப வாசலில், இரு தரப்பு அம்மாக்கள், சகோதரிகள் இணைந்து நின்று, வருபவர்களை வரவேற்கிறார்கள். ”மாப்பிள்ளையோட, மச்சானோட சின்னம்மாவோட ரெண்டு விட்ட அண்ணனை உங்க அம்மா வாங்கன்னு சொல்லலை” என்று எந்தக் கம்ப்ளெயிண்டும் கிடையாது!! //

சிரிக்கும் படி சொன்னாலும் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள். இங்கு கல்யாணவீடுகளில் நடக்கும் உண்மையான குறைகள் தான். இதனால் எத்தனை இருவீட்டாரிடம் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருக்கும்.

அங்குள்ள நிறைவுகளை அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி ஹுஸைன்ம்மா.

pudugaithendral said...

பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்லவை நிறைய. சிறப்பான பகிர்வு.
//

நானும் ரிப்பீட்டிக்கறேன்

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வதை கேடகவே நல்லா
இருக்கிறது.

நல்ல விஷயங்கள் எங்கு இருந்தாலும் பாராட்ட வேண்டும்.

உங்கள் பகிர்வு மிக அருமை.

இராஜராஜேஸ்வரி said...

ஆச்சரியமளிக்கும் பகிர்வுகள்..!

ஹுஸைனம்மா said...

சீனி
ராமல்க்ஷ்மிக்கா
மேனகா
வல்லிமா
ஸாதிகாக்கா
கோவை2தில்லி
ஃபாயிஸா
சங்கீதா
அப்பாதுரைஜி
வெங்கட்
இமா
எழில்
மஹி - :-)))
என்றென்றும் 16
அமைதிக்கா
காஞ்சனா
தென்றல்
இராஜ ராஜேஸ்வரி மேடம்

வருகை தந்து கருத்தளித்த அனவைருக்கும் மிக மிக நன்றி!!

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - “கல்யாணம் கட்டிப் பாரு” என்பது நம்மூரைப் பொறுத்த வரை பெண்வீட்டினருக்கும், இங்கு மணமகனுக்கும் பொருந்தும்.

ஹுஸைனம்மா said...

மலிக்கா - அதேதான், பேச்சுதான் பெரூஸ்ஸா இருக்கு நம்மூருல.

ரஞ்சனி மேடம் - முதல் வருகை!! மிகவும் நன்றி மேடம். தொடர்ந்து வாங்க. பொறாமையா இருந்தாலும், நம்ம நாட்டை விட்டுக் கொடுக்க முடியாதே.

ஹுஸைனம்மா said...

அஜீம் பாஷா - தமிழர்களும் கொண்டாடுவதுண்டு. தமிழ் மனறங்களிலும், தேசிய நிகழ்ச்சிகளிலும் தமிழர்கள் கலந்துகொள்வதுண்டு. மலையாளிகளுக்கு வளைகுடா நிகழ்ச்சிகளுக்கெனவே தனி டிவி சேனல்கள் உண்டு என்பதால் பிரதானப்படுத்தி காட்டுவர். நம்மூர் சன்/கலைஞர்/ஜெயா/விஜய் யாரும் வளைகுடா மக்களைக் கண்டுகொள்வதேயில்லை.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - பெண்ணே விரும்பி விவாகரத்து கேட்பதால், மஹரைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். மக்களைத் தாங்கும் அரசும், மறுமண வாய்ப்புகளும், குடும்பப் பொறுப்பாளர்களும் இருக்கும்போது ஜீவனாம்சம் தேவையில்லையே.

//ச.அ. மி. லக்ஷ்மி யோசனை போல!!// - யாரிந்த லக்ஷ்மி?? புரியலையே? :-)))

ஹுஸைனம்மா said...

அமுதா - ஆமாப்பா, பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஜாக்பாட்தான் இங்கு!!

//எல்லாம் பெட்ரோல் படுத்தும் பாடு.//

இந்நாட்டிலுள்ள ஏழு மாநிலங்களில், அபுதாபி மட்டுமே பெட்ரோல் வருமானம் உடையது. மற்றவை எல்லாம் வர்த்தகம், சுற்றுலா மூலம் வரும் வருமானங்கள் மட்டுமே. எனினும், மக்களுக்கு எந்த வரியும் கிடையாது. :-))