Pages

ஃபார்முலா 1 ரேஸ்




  
   
அபுதாபியில் எஃப்-1 ரேஸ் நடந்துகொண்டிருக்கிறது. இன்று கடைசி நாள்.  ரேஸ் டீம்களில் நமக்குத் தெரிந்த ஷூமேக்கர், நரேன் கார்த்திகேயன் பெயர்களெல்லாம் இல்லை. ”Force India F1 team" என்ற பெயரில் ஒரு டீம் இருக்கிறது. ஆனால் அணி உறுப்பினர்கள் இந்தியர்கள் இல்லை. (ஷூமேக்கர் வேறொரு பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கு பெறவில்லையாம்.  என் வீட்டுக்காரர் ரேஸ் நடக்கும் யாஸ் தீவில் ( Yas Island) வேலை பார்ப்பதால் ஃபிரீ பாஸ் கிடைக்குமா என்று நிறைய விசாரிப்புகள்.  ம்ஹூம், பயங்கர டைட் செக்யூரிட்டி. அங்கே உள்ள எல்லா கம்பெனிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை விட்டுவிட்டார்கள் என்றால் பாருங்கள், எவ்வளவு பாதுகாப்பு என்று. எமெர்ஜன்ஸி ட்யூட்டியில் இருப்பவர்களுக்கு சிறப்பு செக்யூரிட்டி பாஸ் என்று ஏக அமர்க்களம்.

போன வாரம் வெள்ளி, சனி இரண்டு நாளும் டிரையல் ரேஸ் நடந்தது. அதற்குத்தான் ஃபிரீ பாஸ் கிடைத்தது. அப்பாவும் பிள்ளைகளும் போய் வந்தார்கள். சின்னவனுக்கு அங்கு இருந்த பயங்கர சத்தம் பிடிக்கவில்லை. அவன் சொன்னது சரிதான், டிரையல் ரேஸில் எடுத்த வீடியோவைக்கூட சவுண்ட் ம்யூட் போட்டுவிட்டுத்தான் பார்க்க முடிகிறது. ஜெட் பிளேன் போவதுபோல என்னா சத்தம். சின்னவன் வீடியோவில் காதை மூடிக்கொண்டே இருக்கிறான், பாவம். பெரியவன் நன்றாக இருந்தது என்றான்.  ஆனாலும் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருக்கப் பொறுமையில்லை இருவருக்கும். “சும்மா சும்மா காரெல்லாம் வந்து வந்து போயிட்டிருக்கு. இதைப் போய் யார் அவ்வளவு நேரம் உக்காந்து பாக்கறது?” என்றார்கள். அதனால்தானே நான் போகவேயில்லை. ரேஸ் சாலைகள், ஹோட்டல்கள், மெரினா என்று யாஸ் தீவில் உள்ள மற்ற இடங்களை நன்றாகச் சுத்திப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.


 இந்திய அணி

சில பதிவர்கள் இந்த ரேஸ் பார்த்து, பதிவு எழுதப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். பார்ப்போம், யார் யார் எழுதுகிறார்கள் என்று. ஆனால் நாந்தானே ஃபர்ஸ்ட்!! (பாக்கலைன்னாலும் எழுதிட்டேன்ல!!)

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சில பத்திரிகையாளர்கள் ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்கள். முதல்முறையாக இவ்வளவு அதிகம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்ப்பதாகவும், மற்ற நேரங்களில் பத்திரிகையாளர் என்றால் கேள்வியே இல்லாமல் கிடைக்கும் அனுமதி, சலுகைகள், இலவசங்கள், எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள். ஒரு மூத்த பத்திரிகையாளர் கூறுகையில், யூ.ஏ.இ. யில் தனது 18 வருட சர்வீஸில், ஒரு நிகழ்ச்சியை கவர் செய்யும்போது,  முதன்முறையாக உணவுக்குக் காசு கொடுத்ததாக எழுதியிருக்கிறார். (”And for the first time in my 18 years in the UAE, media persons will also have to pay for their snacks and food!”) ஹூம் அவர் கவலை அவருக்கு!!

இந்த ரேஸை வைத்துதான் இனி யாஸ் தீவிலும், பக்கத்தில் உள்ள ராஹா பீச், சாதியாத், ஃபலாஹ் தீவுகளில் சரிந்து கிடக்கும் ரியல் எஸ்டேட்  நிலவரத்தை நிமிர்த்த வேண்டிய கட்டாயம் அபுதாபிக்கு. இந்த ரேஸ் எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டினால்தான் அது சாத்தியம். அவர்கள் ஆசை நிறைவேறட்டும், நிறைவேறினால்தான் பொருளாதாரச் சீர்குலைவால் வேலை இழந்த/ இழக்கும் அபாயத்தில் உள்ள நம்மவர்களுக்கும் நல்வாழ்வு மலரும்.
   
    
 

Post Comment

16 comments:

SUFFIX said...

வாவ் ஹுசைனம்மா!! சூப்பர்ப் கவரேஜ், போகாமலேயே இப்படி ஒரு லைவ் டெலிகாஸ்ட், அங்கே போனால் கலக்கிடுவீங்க, உங்களுக்கு ஒரு பத்திரிகையாளர் பாஸ் தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டிக்கொள்கிறேன்.

Yousufa said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix Says:

வாவ் ஹுசைனம்மா!! சூப்பர்ப் கவரேஜ், போகாமலேயே இப்படி ஒரு லைவ் டெலிகாஸ்ட், அங்கே போனால் கலக்கிடுவீங்க//

உண்மையிலேயே பாராட்டுதானே? இதுல உள்குத்து எதுவுமில்லையே?

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் கவரேஜ். நானும் பேப்பர்ல பார்த்தேன் இன்னைக்கு.

//இதைப் போய் யார் அவ்வளவு நேரம் உக்காந்து பாக்கறது?” என்றார்கள். அதனால்தானே நான் போகவேயில்லை//

அட! உண்மை தான் :)

பீர் | Peer said...

நான் உங்க சின்ன பையன் செட். ரேஸ் சம்பந்தமான செய்திகளில் கூட ஆர்வம் இல்லை. இதுவே கிரிக்கெட்டிற்கும் :(

ஆனால் ப்ளே ஸ்டேஷன் ரேஸ் பிரியன் நான்.

Sanjai Gandhi said...

ரொம்ப நல்ல கவரேஜ். இண்ட்ரஸ்டிங்கா எழுதறிங்க மேடம்.

//”Force India F1 team" என்ற பெயரில் ஒரு டீம் இருக்கிறது//

இந்திய சாராய சாம்ராஜ்யத் தலைவர் விஜய் மல்லையாவின் நிறுவனம் இது. வெளிநாட்டு வீரர்களை பணியில் வைத்திருக்கிறார். கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உட்பட அந்த பெயரில் விற்பனையாகும் அனைத்திற்கும் தலைவர். ஐபிஎல் கிரிக்கெட்டின் பெங்களூர் அணி உரிமையாளர். இதெல்லாம் அவருக்கு பொழுது போக்கு.

Yousufa said...

//☀நான் ஆதவன்☀ Says:
01/11/09 17:08

கலக்கல் கவரேஜ். நானும் பேப்பர்ல பார்த்தேன் இன்னைக்கு.//

வாங்க “நீங்க ஆதவன்”. நன்றி.

Yousufa said...

//பீர் | Peer Says:
02/11/09 02:01

நான் உங்க சின்ன பையன் செட்.//

இப்படிச் சொல்லிட்டா நீங்களும் சின்னப் பையனா?

Yousufa said...

//SanjaiGandhi™ Says:
02/11/09 13:45

ரொம்ப நல்ல கவரேஜ். இண்ட்ரஸ்டிங்கா எழுதறிங்க மேடம்.

//”Force India F1 team" என்ற பெயரில் ஒரு டீம் இருக்கிறது//

இந்திய சாராய சாம்ராஜ்யத் தலைவர் விஜய் மல்லையாவின் நிறுவனம் இது. //

வருகைக்கு நன்றி சஞ்சய். தகவலுக்கு நன்றி. ஆமாம், அவருக்கெல்லாம் இது பொழுதுபோக்குதான்!!

அ.மு.செய்யது said...

ஓஹ்...சூப்பர்.....எக்ஸலன்ட் கவரேஜ் !!!

நான் பயங்கர எஃப் ஒன் ஃபேனுங்க...!!!!

பூனே வந்ததுக்கு அப்புறம் பாக்கறத விட்டுட்டேன்.எனக்கும் வாழ்நாள்ல ஒருமுறையாவது
எஃப் ஒன் நேர்ல அதுவும் போடியம்ல உக்காந்து பாக்கணும்னு ஆசை..!!! இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

( 2010-2011 வாக்கில் இந்தியாவுலயும் எஃப் ஒன் வருதுங்கோ !! )

அ.மு.செய்யது said...

//அப்பாவும் பிள்ளைகளும் போய் வந்தார்கள். சின்னவனுக்கு அங்கு இருந்த பயங்கர சத்தம் பிடிக்கவில்லை.//

யு.கே வில் நேரில் ஃபார்முலா ஒன் ரேஸ் பார்த்து வந்த நண்பர் சொன்னார்.

ரேஸ் முடிந்த இரண்டு நாட்களுக்கு,கார்களின் சத்தம் காதில் ரீங்காரமடித்தாம்.

Yousufa said...

//அ.மு.செய்யது Says:
02/11/09 19:00

ஓஹ்...சூப்பர்.....எக்ஸலன்ட் கவரேஜ் !!!//

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி செய்யது.

ஸோ, நீங்க 2010 - 2011ல எழுதப் போற கவரேஜுக்கு என் இந்தப் பதிவு ஒரு முன்மாதிரின்னு சொல்லுங்க!!
(கொஞ்சம் ஓவரா இருக்கோ? அட இருந்துட்டு போகட்டும்)

எம்.எம்.அப்துல்லா said...

:)

Anonymous said...

(ஷூமேக்கர் வேறொரு பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கு பெறவில்லையாம். Wrong info. He retired from F1 couple of years back.

Yousufa said...

//Anonymous Says:
03/11/09 22:58

(ஷூமேக்கர் வேறொரு பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கு பெறவில்லையாம். Wrong info. He retired from F1 couple of years back.//


ஆத்தா, நானும் பேமஸாயிட்டேன்!! என் ப்ளாக்லயும் அனானி கமென்ட் வர ஆரம்பிச்சுடுச்சு!!

Yes, he retired after his 2006 win, but check this statement of him:

I really tried everything to make that temporary comeback possible

Thanks for your comments.

Yousufa said...

//எம்.எம்.அப்துல்லா Says:
03/11/09 15:53

:)//


அப்துல்லா,

நன்றி. :-D

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

நல்லா எழுதறீங்க - பாக்காமேயே - அதான் தெறமை

நல்வாழ்த்துகள்