Pages

ஹை..புது ஆஃபிஸ்!!
     
ஒரு வழியா புது ஆஃபிஸ் வந்து செட்டில் ஆகியாச்சு. இந்த பில்டிங்ல 89 அலுவலகங்கள் இருக்கிறதா சொன்னாங்க. ரொம்பப் பெரிய பில்டிங்னு நெனச்சிராதீங்க. 2 மாடிக் கட்டடம்தான். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் ஒரே ஒரு ரூம்தான். ஒரு ஹோட்டல் போல, அவரவர் ரூமுக்குள் இருந்து வேலை (இருந்தா) பாத்துக்க வேண்டியதுதான்!! என்னை பொறுத்த வரை பழைய ஆஃபிஸுக்கும், புதுசுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்லை. என்ன, அங்கே நானே டீ போட்டுக்கணும்; இங்க அதுக்கு ஒரு "டீ பாய்" இருக்காப்ல. ஆனாலும் நான் எப்பவுமே அந்த ரிஸ்க் எடுக்குறதில்ல. வேணும்னா நானே போட்டுப்பேன். இந்த ஆம்பிளைங்க போடுற டீ/காஃபிய குடிக்கிறத விட பச்சத்தண்ணிய குடிச்சுட்டு போலாம். (என் வீட்டுக்காரர் தவிர;  அதான் நல்லா டிரெய்னிங் கொடுத்துட்டன்ல!!)

ஆஃபிஸ் ஷிஃப்ட் பண்ண‌லாம்னு முடிவெடுத்து "Packers & Movers "ம், கிடங்கு அறையும் ( அதாங்க, "Warehouse") தேடினா கெடைக்க என்னா கஷ்டமாயிருக்கு?! என்னானு விசாரிச்சா, இந்த ரெஸஷனால நிறைய ஆஃபிஸுங்களை இப்படித்தான் எங்கள மாதிரி இழுத்து மூடிட்டாங்களாம், அதனால ரொம்ப பிஸியாம் இவங்கள்ளாம். ஹூம், ரெஸஷனால வாழ்றவங்களும் இருக்காங்க பாருங்க!!


எங்களுக்கு வந்த Packers & Movers கம்பெனியில் மலையாளிப் பசங்களும், தமிழ்ப் பசங்களும் இருந்தாங்க. எல்லாம் சின்ன சின்னப் பசங்க. நான் அபுதாபி வந்த புதுசுல எங்கப் பாத்தாலும் மலையாள மொழிதான் காதுல விழும். இப்ப ரெண்டு, மூணு வருஷமா எங்கும் தமிழ், தமிழ்தான்!!  முன்னெலாம் வெளியே போனா, தைரியமா தமிழ்ல சத்தமாப் பேசுவேன். ஆனா இப்ப கொஞ்சம் அக்கம்பக்கம் பாத்துதான் பேச வேண்டியிருக்கு!! இதோ இந்த புது ஆஃபிஸுலயும் தமிழ்ப் பசங்கதான் ஹவுஸ் கீப்பிங்கில் இருக்காங்க.

பக்கம் பாத்து பேசறதைப் பத்திச் சொல்லும்போது ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. இப்பவெல்லாம் அநேகம் பேருக்கு ஹிந்தி தெரிஞ்சுருக்கு. ஒரு இருபது இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஹிந்தி தெரிஞ்சவங்க ரொம்ப ரொம்ப குறைவு. என் அத்தை ரெண்டு பேர், அப்போ டீனேஜ் வயசு. ரெண்டு பேரும் டெல்லியில படிச்சவஙக. அதனால ஹிந்தி நல்லா தெரியும். வெளியே எங்க போனாலும் ஹிந்திலத்தான் அவங்களுக்குள்ள பேசிக்குவாங்க. வழக்கமா ஒரு கடைக்குப் போவாங்க. அப்படி ஒருநாள் போனப்ப கடையில புதுசா ஒரு இளைஞன் இருந்தான். பெரிய அத்தை, “ஏ நயா லட்கா கோன் ஹே. தூஸ்ரா ஆத்மி கஹான் கயா?” என்று சின்ன அத்தையிடம் சொல்ல, உடனே கடையில் இருந்தவன், “மே உன்கா பாய் ஹூம். கல் துபாய்ஸே ஆயா” என்று சொல்ல ரெண்டு பேரும் “ஙே”

(”எப்பவும் கடையில் இருப்பவனைக் காணோமே; இவன் யார் புதிதாக இருக்கான்?”  “நான் அவரின் தம்பி. நேற்றுதான் துபாயிலிருந்து வந்தேன்.”)
                                     
                                        
                            

Post Comment

19 comments:

எம்.எம்.அப்துல்லா said...

நானும் அபுதாபில் ஒரு வருஷம் இருந்தேன் 1999 ல். அப்பகூட அங்க மலையாளிகள்தான் அதிகம். என்னோட அக்கா இன்னும் அங்க இருக்காங்க 26 வருஷமா

:)

பீர் | Peer said...

//இந்த ஆம்பிளைங்க போடுற டீ/காஃபிய குடிக்கிறத விட பச்சத்தண்ணிய குடிச்சுட்டு போலாம்.//

ஹலோ... பீ கேர் ஃபுல்...

நாங்க அனுபவிக்கிற சிரமத்த வெளிய சொல்றோமா?

(உங்க சார் கிட்ட பேசணுமே...)

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா Says:
28/10/09 22:35

நானும் அபுதாபில் ஒரு வருஷம் இருந்தேன் 1999 ல். அப்பகூட அங்க மலையாளிகள்தான் அதிகம். என்னோட அக்கா இன்னும் அங்க இருக்காங்க 26 வருஷமா

:)//

வருகைக்கும், பின்தொடர்வதற்கும் நன்றி அப்துல்லா!!
இந்தப் பக்கம் அக்கா வீட்டுக்கு வரும்போது சொல்லுங்க.

அன்புடன் மலிக்கா said...

அப்ப அண்ணத்தபோடுற டீ சூப்பராக இருக்குமுன்னு சொல்லுங்க

பேஷ் பேஷ் நல்லா கத்துகொடுத்து ”டீ”ஈஈஈ ங்க...

ஹுஸைனம்மா said...

//பீர் | Peer Says:

ஹலோ... பீ கேர் ஃபுல்...//

இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுறதுக்கு வேற ஆள் பாருங்க. நாங்கல்லாம் அஞ்சாநெஞ்சங்களாக்கும்!!//நாங்க அனுபவிக்கிற சிரமத்த வெளிய சொல்றோமா?//

சொல்லமுடியாமத்தான் குவைத்துக்கு ஓடி வந்து சொந்தமா சமைச்சு சாப்பிடுறீங்களா?//(உங்க சார் கிட்ட பேசணுமே...)//

தாராளமா பேசிக்கோங்க, பெர்மிஷன் கிராண்டட்!!

ஹுஸைனம்மா said...

//அன்புடன் மலிக்கா Says:
பேஷ் பேஷ் நல்லா கத்துகொடுத்து ”டீ”ஈஈஈ ங்க...//

வாங்க மலிக்கா.

எனக்கு சமையல்ல நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்ததே அவர்தான். (சாப்பிடறவருக்குத்தானே கஷ்டம் தெரியும்)

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//2 மாடியில் 89 அலுவலகமா, 89 மாடியில 2 அலுவலகமா? காலம் மாறிப்போச்சு!!//

//(அதான் நல்லா டிரெய்னிங் கொடுத்துட்டன்ல!!) நீங்க டிரெய்னிங் கொடுத்தா அத ஃபால்லோ பண்ணிருவாகளா, அவுகளுக்கும் டெக்னிக் தெரியும்ல, ஹுசைன் காக்கா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!!!//

//அந்தப் பசங்களுக்கு நீங்க பிரபல பதிவர்னு தெரியாது போல, தெரிஞ்சிருந்தா ஆட்டோகிராப் வாங்கி இருப்பாங்களே!!//

ஹுஸைனம்மா said...

//நீங்க டிரெய்னிங் கொடுத்தா அத ஃபால்லோ பண்ணிருவாகளா, அவுகளுக்கும் டெக்னிக் தெரியும்ல, ஹுசைன் காக்கா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!!!//

நீங்க சொன்னது ரொம்ப சரி ஷஃபி, நம்பி ஏமாந்த கதைய ஒரு பதிவுல சொல்றேன்!!

நாஞ்சில் பிரதாப் said...

//இந்த ஆம்பிளைங்க போடுற டீ/காஃபிய குடிக்கிறத விட பச்சத்தண்ணிய குடிச்சுட்டு போலாம்//

நாங்க பண்ணாலும் குத்தம் பண்ணலைண்ணாலும் குத்தம்...
உங்களை ஆண் சமுதாயம் வன்மையாகக் கண்டிக்கிறது...

ஹுஸைனம்மா said...

// நாஞ்சில் பிரதாப் Says:

நாங்க பண்ணாலும் குத்தம் பண்ணலைண்ணாலும் குத்தம்...//

அதெப்படிங்க ஆம்பளைங்க எல்லாரும் அதே டயலாக் பேசுறீங்க?

Jaleela said...

புது ஆபிஸா வாழ்த்துக்கள், டீ பாய் போடும் டீ என்ன அவ்வளவு மோசமாக வா இருக்கும்,

எனக்கு இஞ்சி டீ சூப்பரா வந்துடும்..

என்ன‌ இர‌ண்டு மாடிதானா? அதில் 89 அலுவ‌ல‌ங்க‌ளா?

நீங்க‌ள் த‌மிழ் ச‌ங்க‌த்துக்கு கூட்டிட்டீங‌க‌, அங்கு ப‌தில் போட்டேன் பார்க்க‌லையா?

தராசு said...

//இந்த ஆம்பிளைங்க போடுற டீ/காஃபிய குடிக்கிறத விட பச்சத்தண்ணிய குடிச்சுட்டு போலாம்.//

இதை ரங்கமணிகள் பாதுகாப்பு சங்கத்தில் இருந்து வன்மையாக கண்டிக்கிறோம்.

டேய், பஸ்ஸூக்கு தீ வைங்கடா, ரெண்டு கடை கண்ணாடி எல்லாம் உடைங்கடா, ஆட்டோ ஓடறத நிப்பாட்டு, ஸ்கூலுக்கெல்லாம் லீவு விடு. இன்னும் என்னென்னமெல்லாமோ நடக்கும் பார்த்துக்குங்க.

☀நான் ஆதவன்☀ said...

அடுத்த பதிவர் சந்திப்புல கண்டிப்பா ‘டீ’யோட தான் வரனும் :)

☀நான் ஆதவன்☀ said...

//என் வீட்டுக்காரர் தவிர; அதான் நல்லா டிரெய்னிங் கொடுத்துட்டன்ல!!//

அவ்வ்வ்வ் உலக ஆண்கள் தினமான இன்று உங்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள்!

ஹுஸைனம்மா said...

//Jaleela Says:
16/11/09 09:59

புது ஆபிஸா வாழ்த்துக்கள், டீ பாய் போடும் டீ என்ன அவ்வளவு மோசமாக வா இருக்கும்,//

ஆமாக்கா, அதனால வெறும் க்ரீன் டீ தான் குடிக்கிறேன் இப்பல்லாம். :-(

ஹுஸைனம்மா said...

//தராசு Says:
19/11/09 08:06

டேய், பஸ்ஸூக்கு தீ வைங்கடா, ரெண்டு கடை கண்ணாடி எல்லாம் உடைங்கடா, ஆட்டோ ஓடறத நிப்பாட்டு, ஸ்கூலுக்கெல்லாம் லீவு விடு. இன்னும் என்னென்னமெல்லாமோ நடக்கும் பார்த்துக்குங்க.//

எல்லாம் வீட்டுக்கு வெளியதானே? வீட்டுக்குள்ள ஒரு டீ கப்பையாவது உடைக்க முடியுமா உங்களால?

ஹுஸைனம்மா said...

☀நான் ஆதவன்☀ Says:
19/11/09 11:52

அடுத்த பதிவர் சந்திப்புல கண்டிப்பா ‘டீ’யோட தான் வரனும் :)//

டீ போடுவது எப்படின்னு ஒரு டெமோவே நடத்திரலாம்!! (பதிவர் சந்திப்புல பதிவு எப்படி போடுவதுன்னு மட்டுந்தான் பேசணுமா என்ன?)

//அவ்வ்வ்வ் உலக ஆண்கள் தினமான இன்று உங்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள்!//

நான் பதிவுகள்ல அவரப் பத்தி எழுத ஆரம்பிச்சதிலருந்து அவருக்குத்தான் ஆதரவு ஜாஸ்தியாகுது!! ஹூம்..

ஹுஸைனம்மா said...

/☀நான் ஆதவன்☀ Says:
19/11/09 11:52

அடுத்த பதிவர் சந்திப்புல கண்டிப்பா ‘டீ’யோட தான் வரனும் :)//

நீங்க என்ன கொண்டு வருவீங்க, 5000 - ஆ?

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனனம்மா

நல்வாழ்த்துகள் புது அலுவலகத்திற்கு

ஆண்களை முறைத்துக் கொள்ளாதீர்கள் - வீட்டில் ஹூஸைன் - முகம்மது - ஹூஸைன் முகம்மது என மூவர் இருக்கிறார்கள் -நீங்க்ளோ ஒருவர் - பீ கேர் புஃல்