Pages

வேண்டும் பொறுமை!!

என்னோடு பள்ளியில் படித்த தோழிகளோடு இப்போ சுத்தமா தொடர்பில்லை. கல்லூரியில் படித்த நண்பர்கள்தான் அதிகம் தொடர்பில் உள்ளார்கள். கல்லூரி முடித்து 16 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையில்!!  நாங்கள் சந்தித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இணையம் மற்றும் தொலைபேசி மூலம் நட்புகளை பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.

பிரிவுநாளன்று என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு சக மாணவி என்னிடம் இனி என்ன செய்யப்போகிறாய் என்றாள். என் வீட்டில் ஏற்கனவே திருமணத்திற்குப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் முதலில் கல்யாணம் அதன்பின் வேலை செய்ய முடியுமா என்று பார்க்கவேண்டும் என்றேன். ஹும் நீ கொடுத்து வச்சவ, எங்கம்மா நான் மாஸ்டர் டிகிரி படிச்சாத்தான் கல்யாணம்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டா என்று நொந்துகொண்டே போனாள். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. எனக்கு 3 வருடங்கள் கழித்து திருமணம் நடந்தது.ஒரு சிலர் நல்ல வேலையில், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு சுமாரான வேலை என்றாலும் திருப்தியான வாழ்வு அமைந்திருக்கிறது. சில பெண்கள் வேலை பார்க்கவில்லை. அநேகம் பேருக்கு எல்லாமே சிறப்பாய் அமைந்திருப்பது மகிழ்வாய் இருக்கிறது. ஒரு சிலருக்கு ஒன்று (வேலை, நிதி நிலைமை) சிறப்பாக இருந்தால் மற்றொன்று (குடும்ப வாழ்வு) சுமாராக இருக்கிறது. உலக நியதி அதுதானே!!படித்துமுடித்த அடுத்த வருடத்திலேயே என் வகுப்புத் தோழி கேன்சரால் இறந்தது பேரிடி. இறப்பதற்குச் சில தினங்கள் முன்பு அவளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது நோய் முற்றிலும் நீங்கி விட்டதாகவும், இனி வாழ்க்கையை இனிமையாகத் தொடரப் போவதாகச் சொல்லியது இன்னும் கண்ணில் நிற்கிறது. 


ஒரு தோழி, சந்தேகப் பேர்வழியான கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கி மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறாள்.  அவளிடம் கேட்டேன், இப்ப நீ நினைச்சா சமைக்கலாம்; நினைச்சா சமைக்காம இருக்கலாம் இல்லையா? என்று. அது ஒரு வசதிதான். ஆனால், இந்த இன்கம்டாக்ஸ், ஹவுஸ் லோன், பெர்ஸனல், கார் மற்றும் வீட்டு இன்ஷ்யூரன்ஸ் போன்ற விஷயங்களும் இப்ப என் தலையில் விழுந்துவிட்டது. அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு என்றாள்.


இன்னொரு தோழி, திருமணமான ஒரு வாரத்திலேயே பிரிந்துவிட்டாள். படிப்பு, வேலை குறித்து ஏமாற்றிவிட்டானாம்.  வெளிமாநிலத்தில் தனியே வேலைபார்க்கும் அவள், வேறொரு தோழியின் வற்புறுத்தல் காரணமாக மறுமணத்திற்குச் சம்மதித்திருக்கிறாள். ஆனால் பொருத்தமானவர் கிடைப்பது சிரமமாக உள்ளது இப்போது.


மற்றொரு தோழி, அமெரிக்காவில் கணவனுடன் வசிக்கும்போது பிரசவத்திற்குப் பின்  ஏற்பட்ட டிப்ரெஷனுக்கு இன்ஷ்யூரன்ஸ் இல்லாததால் சிகிச்சை அளிக்க கணவன் மறுத்ததாக வந்த செய்திகள்... தற்போது மிக நலமாக இருக்கிறாள்.


வேறொரு தோழி, மூளையில் கட்டி வந்து, அறுவை சிகிச்சைக்குப்பின் தேறி, முழுநலத்துடன் அண்ணா பல்கலையில் ஒருநாள் வேலை முடித்து வரும்போது விபத்தில் இறந்தாள். குழந்தைகள் அவள் அம்மாவின் பராமரிப்பில். வீட்டில் ஒரே மகள் என்பதால் மிக மிக செல்லமாக வளர்த்தார்கள் அவளை.இன்னொரு நண்பன், திருமணமான ஒரு மாதத்திலேயே, பிரெயின் டியூமர் வந்து, மனைவி பிரிந்து, சிகிச்சை பலனில்லாமல் சென்ற வருடம் இறந்தான். அவனிடம் கல்லூரியில் ஐந்தாறு பெண்களாவது காதல் ஓலை நீட்டியிருப்பார்கள். இவன் ஏற்கவில்லை!!தற்போதைய படிப்பினையாக, நெருங்கிய உறவினர் இரு கிட்னிகளும் செயலிழந்ததினால், வாரம் 3 முறை டயாலிசிஸ் செய்துகொண்டே வேலை பார்த்துகொண்டு.. டைப்-2 டயபடிக் வேறு!! அவரது மன உறுதியையும், மனைவியின் அர்ப்பணிப்பையும் கண்டு வியக்காத நாளில்லை நான். மனைவி அவருக்கு கிட்னி கொடுப்பதாக முடிவு செய்து, இன்று அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப் பட்டிருந்தது. இன்று காலை பல்வித சோதனைகளுக்குப் பின், முன் தயாரிப்பாக  இருவருக்கும் தோளில் டியூப் போடும் சிறிய அறுவை சிகிச்சையும் முடிந்து,  பெரிய அறுவை சிகிச்சைக்குத் தயாரான நேரத்தில் சுவாசப் பிரச்னை வரவே, தள்ளிவைத்திருக்கிறார்கள். அதனால் தோளில் போட்ட டியூபை எடுக்க மீண்டும் அறுவை சிகிச்சை!!

இவையெல்லாம் எப்பவும் ஞாபகம் வரும்.  நான் நல்ல நிலைமையில் இருப்பதை நினைத்து, அறிவான பிள்ளைகள், பொறுமையான கணவன், இன்னும் பலவற்றை நினைத்து இறைவனுக்கு நன்றிகூறி விட்டு, இனி பிள்ளைகளிடமும், கணவனிடமும் கோபப்படக்கூடாது. பொறுமையாக இருக்கவேண்டும்.  பிள்ளைகளிடம் அன்பாக எடுத்துச் சொல்லவேண்டும். சின்னக் குழந்தைகள்தானே, எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்று நல்லமுறையில் நினைத்துக் கொண்டே  வீட்டுக் கதவைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது, டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவும், பிள்ளைகளும், தெறித்து வீசப்பட்ட ஷுக்கள், காலில் தட்டும் புத்தகப் பைகள், சோஃபாக்களில் தோரணமாகப் போடப்பட்டிருக்கும் உடைகள் ....”எத்தனை தரம் சொன்னாலும் தெரியாதா உங்களுக்கெல்லாம் அதது வைக்கிற இடத்தில வைக்கணும்னு? வந்தவுடனே டி.வியைப் பாக்க உக்காந்திடணுமா?”.....

Post Comment

27 comments:

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

வாழ்க்கையின் எதார்த்தம்!! நல்ல பகிர்வு, படிப்பினையும் கூட‌, கால ஓட்டத்தில் என்னன்ன மாற்றங்கள், எத்தனை நிகழ்வுகள்!! நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கு.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

உங்க வீட்டுல டி.வி. முன்னாடி உக்காந்தா திட்டு, எங்க வீட்ல கம்புய்ய்ட்டர் முன்னாடி உக்காந்தா திட்டு, ஆக பொருள் வேறு பலன் ஒன்றே!!

ஹுஸைனம்மா said...

நன்றி ஷஃபிக்ஸ்!!

//நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கு.//

ஆமாம். வாழ்க்கை தரும் பாடங்கள் நிறைய... ஆனாலும் சில சமயம்...

ஹுஸைனம்மா said...

//உங்க வீட்டுல டி.வி. முன்னாடி உக்காந்தா திட்டு, எங்க வீட்ல கம்புய்ய்ட்டர் முன்னாடி உக்காந்தா திட்டு,//

அய்யோ அந்தக் கதையக் கேக்காதீங்க!! கம்ப்யூட்டரை ஆன் பண்ணிவிட்டு அது ஆன் ஆகி வர்ற வரைக்கும்தான் டி.வி.!! இடையில் ஃபோன் வந்தால் மட்டும் பேசிக்கொள்வார்.

இது பத்தாதுன்னு நேத்து லேப்டாப் வேற வாங்கி வந்தாச்சு!! இதுவரை எப்படியோ தடுத்து வச்சிருந்தேன். நடக்கலை!!

நாஸியா said...

கிட்டத்தட்ட கண்ணீர் வந்துவிட்டது எனக்கு.. அல்லாஹ் subhaana wa ta'ala நமக்கு புரிந்த அருட்கொடையை நினைத்து அவனுக்கு ஒவ்வொவொரு நொடியும் நன்றி சொல்ல வேண்டும்.. alhamdhulillah

எல்லாருக்கும் அல்லாஹ்வின் சோதனை-fitnaa இருக்கிறது... அல்லாஹ் நமக்கு அருள் புரியும்போது எவ்வாறு அவனுக்கு நன்றி செலுத்தி, அதை நல்வழியில் செலவு செய்கிறோம் என்பதையும், துன்பத்தின் மூலம் எவ்வாறு பொறுமையுடன் இருந்து அவனுடைய அருளை தேடுகிறோம் என்பதையும் சோதிக்கிறான்..


சூரா அல் பகராவில் நம் அனைவருக்கும் ஓர் படிப்பினை இருக்கிறது:

(155) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (156) (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். (157) இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் பொறுமையை தருவானாக..

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//சூரா அல் பகரா 155-157//

இந்த ஒரு வசனம் போதும் நாஸியா எந்த ஒரு சோதணையையும் நாம் சந்திக்க, நினைவூட்டியதற்க்கு மிக்க நன்றிமா!!

ராஜவம்சம் said...

உங்கள் மனபாரத்தை எங்கள் மீது இறக்கிவைத்து விட்டீர்கள்

கடைசி இரு வரிகள்தான் மனித இயல்பு

பீர் | Peer said...

யதார்த்த பகிர்வு.

நமக்கு கிடைத்திருக்கும் வாழ்விற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

ஹுஸைனம்மா said...

நன்றி நாஸியா.

//அல்லாஹ் நம் அனைவருக்கும் பொறுமையை தருவானாக..//

நிச்சயமாக.

ஹுஸைனம்மா said...

ஆஃபீஸ் ஷிஃப்டிங்க் ஆரம்பித்திருப்பதால் 2, 3 நாட்கள் அடிக்கடி வர முடியாது. படிச்சு பின்னூட்டங்கள் போடுங்க. நிதானமா பதில் சொல்றேன்.

நன்றி!!

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//ஆஃபீஸ் ஷிஃப்டிங்க் ஆரம்பித்திருப்பதால் 2, 3 நாட்கள் அடிக்கடி வர முடியாது. படிச்சு பின்னூட்டங்கள் போடுங்க. நிதானமா பதில் சொல்றேன்.//

நாங்க பொறுமையா இருப்போம், கம்ப்யூட்டர மட்டும் கடைசி கடப்பாசியா பேக் செய்ய சொல்லுங்க ஹுசைனம்மா!!

தராசு said...

எதார்த்தம்.

ரசித்தேன்.

அபி அப்பா said...

வாழ்க்கை என்பதே போராட்டம் என நினைக்காமல் டேக் இட் ஈசின்னு எடுத்துக்கனும்.

மத்தபடி ஹுசைன் அம்மா சமீபத்திய என் பதிவிலே உங்க பின்னூட்டம் பார்த்தேன். துபாய் தானா நீங்க. நன்றி. நான் லீவ் முடிந்து வந்த பின்னே ஒரு பதிவர் சந்திப்பிலே பார்க்கலாம் ஆண்டவன் அருள் இருந்தா!! நல்லா எழுதுங்க. நிறைய எழுதுங்க!! வாழ்த்துக்கள்!!!

coupdecoeur said...

Hello
a small mark at the time of my passage on your very beautiful blog!
congratulations!
thanks for making us share your moments
you have a translation of my English space!
cordially from France
¸..· ´¨¨)) -:¦:-
¸.·´ .·´¨¨))
((¸¸.·´ ..·´ -:¦:-
-:¦:- ((¸¸.·´* ~ Chris ~ -:¦:-
http://www.blogcatalog.com/blog/sweetlelody

சந்தனமுல்லை said...

அழகா எழுதியிருக்கீங்க! முடிவு - ரசிக்க வைத்தது!!

ஹுஸைனம்மா said...

ஆஹா, என்னா ஒரு இன்ப அதிர்ச்சி!! பல பெருந்தலைகள் என் பதிவிலும் தலைகாட்டியிருக்கின்றார்கள்!! ஏற்கனவே இருக்கும் பெருந்தலைகளின் ரெகமென்டேஷனோ?

எல்லாருக்கும் நன்றி!!

ஹுஸைனம்மா said...

//ராஜவம்சம் Says:
25/10/09 22:45

கடைசி இரு வரிகள்தான் மனித இயல்பு//

நன்றி ராஜவம்சம்.

ஹுஸைனம்மா said...

//பீர் | Peer Says:
26/10/09 00:57

யதார்த்த பகிர்வு. //

நன்றி பீர்.

ஹுஸைனம்மா said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix Says:
26/10/09 10:03

நாங்க பொறுமையா இருப்போம், கம்ப்யூட்டர மட்டும் கடைசி கடப்பாசியா பேக் செய்ய சொல்லுங்க ஹுசைனம்மா!!//

என் கம்ப்யூட்டர் கடைசியாத்தான் எடுத்தாங்க. ஆனா, சர்வரை முதல்லயே கழட்டிட்டாங்க!!

ஹுஸைனம்மா said...

//தராசு Says:
26/10/09 10:04

எதார்த்தம்.

ரசித்தேன்.//

எதார்த்த ரசிகருக்கு நன்றி!!

ஹுஸைனம்மா said...

//அபி அப்பா Says:
26/10/09 10:25

வாழ்க்கை என்பதே போராட்டம் என நினைக்காமல் டேக் இட் ஈசின்னு எடுத்துக்கனும்.

மத்தபடி ஹுசைன் அம்மா சமீபத்திய என் பதிவிலே உங்க பின்னூட்டம் பார்த்தேன். துபாய் தானா நீங்க. நன்றி. நான் லீவ் முடிந்து வந்த பின்னே ஒரு பதிவர் சந்திப்பிலே பார்க்கலாம் ஆண்டவன் அருள் இருந்தா!! நல்லா எழுதுங்க. நிறைய எழுதுங்க!! வாழ்த்துக்கள்!!!//


வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி அபி அப்பா!! ரொம்ப லாங் லீவ் போலருக்கு??

அந்த பின்னூட்டம் போட்டது நானேதான்.

ஹுஸைனம்மா said...

//coupdecoeur Says:
26/10/09 12:06

Hello
a small mark at the time of my passage on your very beautiful blog!
congratulations! //

Thank you very much!!

ஹுஸைனம்மா said...

//சந்தனமுல்லை Says:
26/10/09 12:35

அழகா எழுதியிருக்கீங்க! முடிவு - ரசிக்க வைத்தது!!//

நன்றி சந்தனமுல்லை. தொடர்ந்து வாசித்து கருத்து சொல்லுங்க.

Busy said...

//தற்போதைய படிப்பினையாக, நெருங்கிய உறவினர் இரு கிட்னிகளும் செயலிழந்ததினால், வாரம் 3 முறை டயாலிசிஸ் செய்துகொண்டே வேலை பார்த்துகொண்டு.. டைப்-2 டயபடிக் வேறு!! அவரது மன உறுதியையும், மனைவியின் அர்ப்பணிப்பையும் கண்டு வியக்காத நாளில்லை நான். மனைவி அவருக்கு கிட்னி கொடுப்பதாக முடிவு செய்து, இன்று அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப் பட்டிருந்தது. இன்று காலை பல்வித சோதனைகளுக்குப் பின், முன் தயாரிப்பாக இருவருக்கும் தோளில் டியூப் போடும் சிறிய அறுவை சிகிச்சையும் முடிந்து, பெரிய அறுவை சிகிச்சைக்குத் தயாரான நேரத்தில் சுவாசப் பிரச்னை வரவே, தள்ளிவைத்திருக்கிறார்கள். அதனால் தோளில் போட்ட டியூபை எடுக்க மீண்டும் அறுவை சிகிச்சை!! //


Is it From Nagercoil, Because i heared same news yesterday

Jaleela said...

ஹுஸைம்மா நேர‌ம் இல்லாத‌தால் ப‌ல‌ ப‌திவுக‌ள் ப‌டிக்க‌ முடிய‌ல‌.

ஆனால் இதில் இத்த‌னை ந‌ண்ப‌ர்க‌ளின் சோக‌ம் ரொம்ப‌வே க‌ல‌ங்க‌ வைக்கிற‌து,

நானும் இப்போது 4 வ‌ருட‌மா கேள்வி ப‌டும், கேட்கும் செய்தியெல்லாம் கேன்ச‌ரை ப‌ற்றி தான்.

போன‌வார‌மும் ஒருவர் அவர் தம்பிக்கு நடந்த கேச்சர் ட்ரீட்மெண்ட் பற்றி சொல்லிட்டு போனார் .

ம‌ற்றொருவ‌ரின் அம்மா தொட‌ர்ந்து புகையிலை போட்ட‌தால் கேன்சார் போன‌ வார‌ம் இற‌ந்து விட்டார்.

இடையில் எல்லாம் கேள்வி ப‌ட்டு ப‌திவு கூட‌ போட‌ பிடிக்காம‌ல் இருந்தேன்.

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரிதான், நாம் ஒன்றூ பிள்ளைக‌ளை திட்ட‌வே கூடாது என்று நினைத்து கொண்டு நுழைவோம் ஆனால் அங்கு நுழைந்த‌தும் டீவி, க‌ம்புயுட்ட‌ர் என்று இன்னும் ந‌ம் பிர‌ஷ‌ரை ஹ‌யி லெவ‌லுக்கு கொண்டு போய் விடும், ஆனால் நாம் பொறுமையை கையாண்டால் எல்லாம் ச‌ரியாகும்.


அல்லாஹ் ந‌ம் அனைவ‌ருக்கும் பொறுமையை கையாளும் ப‌க்குவ‌த்தை கொடுப‌ப‌னாவக‌.

ஹுஸைனம்மா said...

அக்கா,

நேரம் கிடைச்சதும் என்னோட பதிவுகளைத் தேடிப் படிக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி அக்கா.

ஆமாக்கா, கேன்ஸர்தான் ரொம்ப பயங்காட்டுது. அல்லாதான் காக்கணும். அப்புறம் என்னோட உறவினருக்கு நேத்து அறுவை சிகிச்சை நல்லபடியா முடிஞ்சுது. துஆ செய்ங்க.

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

பத்தாவது இடுகையில் தான் இத்தனை மறுமொழிகள் - பல புதிய ( உங்களுக்குப் புதிய ) பதிவர்கள் மறுமொழி இட்டிருக்கிரார்கள் - வாழ்க

நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அது நடக்கும்

ஆம் என்ன அது - கூடப்படித்தவர்களில் ஒருவர் கூட நல்லா இல்லையா - அத்தனை பேரும் துன்பத்தினை அனுபவித்த அனுபவிக்கிறவர்கள் தானா

ம்ம்ம் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்