அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்ற கதையா, ஃபிளைட் என்ன, பஸ்ல கூட இப்பல்லாம் எல்லாரையுமே சந்தேகக் கண்ணோடத்தான் பாக்குறாங்க. அந்த வகையில, மூணு வாரம் முன்னாடி, பாகிஸ்தான் கராச்சி ஏர்போர்ட்ல ஒருத்தரைப் பிடிச்சாங்க. அவரோட ஷூவில பேட்டரி, ஸ்விட்ச்செல்லாம் இருந்ததால, வெடிகுண்டை இயக்கும் ரிமோட்டா இருக்குமோன்னு பயந்துபோய், முதல்ல அவரைப் பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டு, அப்புறம் ஷூவைச் செக் பண்ணா, அது ”மஸாஜ் ஷூ”வாம்!! கால்வலிக்கு நல்லதுன்னு வாங்கினாராம். பாவம்!! இதுக்கு கால்வலியையே பொறுத்துக்கிட்டிருந்திருக்கலாம்!!
இந்தியாவிலயும் இந்தப்பக்கம் இப்படி ஓவர் கவனமாயிருந்ததாலத்தான், அந்தப் பக்கம் மாவோயிஸ்ட் தீவிரவாதம் இவ்வளவு வளர்ந்ததைக் கவனிக்கலபோல!!
^^^^^^^^^***********^^^^^^^^^***********^^^^^^^^^***********
கை மற்றும் தரைவழி தொலைபேசிகளின் கீ-பேட்ல 5-ம் எண் பொத்தான்ல லேசா மேடு போல ஒரு புள்ளி இருக்குமே, கவனிச்சிருக்கீங்களா? அதே போல, கம்ப்யூட்டர் கீ-போர்ட்லயும், “F", "J" எழுத்துகளின் பட்டன்கள் மேலேயும் அதுபோல ஒரு சிறு கோடு போல மேடு இருக்கும். இதெல்லாம் பார்வைக் குறைபாடு உள்ளவங்களுக்கான வசதிகள்.
அவங்க பணத்தை எண்ணும்போது, பொதுவா, தடவித் தடவி கைகளால் அளவை உணர்ந்து எண்ணுவதைப் பார்த்திருப்போம். கனடாவுல சமீபத்துல அச்சடிக்கிற டாலர் நோட்டுகள்லயும் இதே மாதிரி பணத்தாளின் அளவீடுகளைக் குறிக்கும்படியா புள்ளிகள் வைக்கிறாங்களாம். (கனடாவில இருக்கவங்க உறுதிப்படுத்துங்க ப்ளீஸ்!)
^^^^^^^^^***********^^^^^^^^^***********^^^^^^^^^***********
அலுவலங்களில் மேனேஜ்மெண்ட் பாலிஸிகள் புரிபடவே மாட்டேன்கிறது!! பிராஜக்ட்கள் ஒண்ணும் இல்லாததால, ஏற்கனவே இருக்கவங்களே, ஆளில்லாத கடையில டீ ஆத்திகிட்டிருக்கும்போது, சிலரைப் புதுசா வேலைக்குச் சேத்திருக்காங்க!! வந்தவங்களும் “பிராஜக்ட் எப்ப கிடைக்கும்”னு அப்பாவியா கேட்டுகிட்டிருக்காங்க. இன்னிக்கு கேட்டவர்ட்ட, FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன். வேறென்ன செய்ய? இதுல, வெற்றிகரமா மூணாவது சம்பளக் கமிஷனும் வருதாம், பட்சி சொல்லுச்சு!! (சம்பளக் கமிஷன் = வெட்டு!!)^^^^^^^^^***********^^^^^^^^^***********^^^^^^^^^***********
சென்ற வாரம், இங்கே அபுதாபியில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த 25 வயது இளைஞர் மாரடைப்பால் காலமானார். (கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்). இளைய வயது, அக்குடும்பத்தின் ஒரே வருமானதாரர் என்ற வகையில் மிகுந்த வருத்தமாயிருந்தது. அவர் வேலை செய்த (இந்திய) நிறுவனம், அவரின் உடலைக் கொண்டு செல்ல உதவியதோடு, இன்னும் மூன்று வருடத்திற்கு அவரின் அடிப்படை சம்பளமும் (basic salary) அவரின் குடும்பத்திற்குச் சேரும் வகையில் செய்துள்ளார்களாம். இதுபோல எதிர்பாராத நிகழ்வின்போது பயன்படவென, 'Employee relief fund" என்று மாதாமாதம் சிறு தொகை வசூலித்துள்ளார்கள். கேட்க கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.
^^^^^^^^^***********^^^^^^^^^***********^^^^^^^^^***********
அதைவிட சுவாரஸ்யமான தகவல், இந்த நட்சத்திர விடுதியின் உணவகங்களில் ஒரு வருடத்திற்கு ஐந்து கிலோ தங்கம் பயன்படுத்துகிறார்களாம்!! தங்க பஸ்பம் செய்ய இல்லை!! இனிப்பு பதார்த்தங்களை அழகுபடுத்தவாம்!!
ஏன் இப்படி பெருமூச்சு??
|
Tweet | |||
44 comments:
//கால்வலிக்கு நல்லதுன்னு வாங்கினாராம். பாவம்!! இதுக்கு கால்வலியையே பொறுத்துக்கிட்டிருந்திருக்கலாம்!!///
படிச்சதும் சிரிப்பு வந்துடுச்சு.... சுவராஸ்யமான இடுகை...
எத்தனை சுவாரசியமாய் தகவல்கள்..
நன்றி ”ஹுஸைனம்மா”
செய்திகள் சுவாரஸ்யம் சகோதரி.
//அலுவலங்களில் மேனேஜ்மெண்ட் பாலிஸிகள் புரிபடவே மாட்டேன்கிறது!! பிராஜக்ட்கள் ஒண்ணும் இல்லாததால, ஏற்கனவே இருக்கவங்களே, ஆளில்லாத கடையில டீ ஆத்திகிட்டிருக்கும்போது, சிலரைப் புதுசா வேலைக்குச் சேத்திருக்காங்க!! வந்தவங்களும் “பிராஜக்ட் எப்ப கிடைக்கும்”னு அப்பாவியா கேட்டுகிட்டிருக்காங்க. இன்னிக்கு கேட்டவர்ட்ட, FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன். வேறென்ன செய்ய? இதுல, வெற்றிகரமா மூணாவது சம்பளக் கமிஷனும் வருதாம், பட்சி சொல்லுச்சு!! (சம்பளக் கமிஷன் = வெட்டு!!)//
ஹஹஅஹா. இப்ப எங்க நிறுவனத்தில வேலைக்கு ஆள் கிடைக்காம கஷ்டப் படுறோம் :(
சுவராஸ்யம்....
டிரங்குபொட்டியிலிருந்து நல்லநல்ல தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி ஹூசைனம்ம்ம்ம்ம்ம்மா...
சகோ தொலைபேசி பட்டன்களின் விளக்கம் அறியாத விஷயம்... தகவலுக்கு நன்றி சகோ...
//அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்ற கதையா//
என்ன செய்ய நிலமை இப்படி ஆயிப்போச்சு
//5-ம் எண் //
தெளிவான விளக்கம்.
எல்லாமே நல்லதகவல்கள்.. எதைஎதையோ பிடிக்கிறோமுன்னு அப்பாவியதான் காச்சி எடுக்காங்க. கீபேட் தகவல்கள் நன்று. இந்திய நிறுவனத்தின் மனிதாபிமான செயலினால் அவர் குடும்பம் என்றும் வாழ்த்தும். கஷ்டம் கொடுக்கிறதுதான் மேனேஜ்மென்ட்டோட பாலிசிபோல..
அருமையான வாசம் டிரங்குபொட்டியிலிருந்து...
//ஆளில்லாத கடையில டீ ஆத்திகிட்டிருக்கும்போது, சிலரைப் புதுசா வேலைக்குச் சேத்திருக்காங்க!! //
இனி லிப்டன் டீக்கு பதிலா வேற ப்ராண்டு தான் வரும் :)
தங்கத்தானி - அங்கீகாரத்திற்கு நன்றி ஹூசைனம்மா.
பொட்டி கொஞ்சம் காலியா இருக்கற மாதிரி இருக்கு.
25 வயசுல மாரடைப்பா???? ஆச்சரியம்.
நல்ல தொகுப்பு ஹுஸைனம்மா.
//அதைவிட சுவாரஸ்யமான தகவல், இந்த நட்சத்திர விடுதியின் உணவகங்களில் ஒரு வருடத்திற்கு ஐந்து கிலோ தங்கம் பயன்படுத்துகிறார்களாம்!!// :-O
நல்லா சுடச்சுட நியூஸ்! டாங்கூ!
டிரங்கு பெட்டியில தங்க காசெல்லாம் கிடைக்குதே! ;)
அதைவிட சுவாரஸ்யமான தகவல், இந்த நட்சத்திர விடுதியின் உணவகங்களில் ஒரு வருடத்திற்கு ஐந்து கிலோ தங்கம் பயன்படுத்துகிறார்களாம்!! தங்க பஸ்பம் செய்ய இல்லை!! இனிப்பு பதார்த்தங்களை அழகுபடுத்தவாம்!!
ரெம்ப சந்தோஷமா இருக்கு. அந்த செய்திய கேட்க.
25 வயசுலே மாரடைப்பா-??? கடவுளே...பக்குன்னு இருக்கு...
//இன்னிக்கு கேட்டவர்ட்ட, FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன் //
என்னா வில்லத்தனம்......
நல்லாயிருக்குங்க... நல்லாயில்லன்னு சொன்னா மனசுக்குள்ள திட்டுவிங்கள்ள..
ஒன்னு.. என்ன சொல்றதுன்னு தெரியல :))
ரெண்டு.. நீங்க சொல்லித் தான் தடவிப் பார்த்தன் லேட்டாப்ல.. நல்ல தகவல்.. நன்றி.. இந்த மாதிரி லிஃப்ட் ல நம்பர்களுக்குப் பக்கத்துல வச்சிருக்காங்க பார்வையற்றவர்களுக்காக..
மூணு.. ஹி ஹி..
நாலு.. ரொம்ப நல்ல விஷயம்.. மூணு வருஷத்துக்குன்னா அதுக்குள்ள அவங்க வேறெதாவது வழி கண்டுபிடிச்சிடுவாங்க..
அஞ்சு.. பொன்னு விளையற பூமி உங்க பூமி :))
டிரங்க் பெட்டி வெயிட் கூடுதலுங்கோ!!
:-))
F, J key களில் உள்ள தடயங்கள் எதுக்காக என இப்பத்தானே அறிந்தேன்(தடயம் இருப்பதுகூட இப்பத்தான் பார்த்தேன் என்பது வேறு கதை:)). சரிசரி அடுத்தவர்கள் பார்ப்பதுக்குள் படித்ததும் கிழித்திடுங்க.
ரங்குப்பெட்டி என்றதும் ஏதோ பழைய புதையலாக்கும் என நினைத்தேன்.
சுவாரசியமாய் தகவல்கள்.
நன்றி !
//கால்வலிக்கு நல்லதுன்னு வாங்கினாராம். பாவம்!! இதுக்கு கால்வலியையே பொறுத்துக்கிட்டிருந்திருக்கலாம்!!//
=((
//இன்னிக்கு கேட்டவர்ட்ட, FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன் //
எப்படீங்க? சூப்பர்.
அந்த இளைஞரின் குடும்பத்துக்கு நேர்மையாக நடந்து கொண்ட கம்பனி எதுங்க? இப்படியானவங்க இருக்கிறதால தான் கொஞ்சமாவது மழை பெய்யுது. அந்த கம்பனி சீ.ஈ.ஓ நன்றாக இருக்க வேண்டும்
மனுசனுக்கு சாப்பிட ஒரு பிடி உணவு இல்லையாம். இவங்களுக்கு தங்கம் போட்ட ஸ்வீட் வேணுமாமாம். சை. அப்படியாக ஹொட்டல்களுக்கு சீல் வைக்கணும்.
நீங்க சொன்ன பின்னர் தான் கீ போர்டை பாத்தேன். அதிராவே தைரியாம உண்மையை ஒத்துக்கிட்ட பிறகு நான் என்னத்த மறைக்கிறது. =))
இந்த ரங்குபெட்டி தான் தெ பெஸ்ட் அக்கா.
:)
நல்ல தகவல்கள்.
சில அறியாத தகவல்கள் மற்றும் சுவரஸ்யமான தகவல்களும்... பகிர்வுக்கு நன்றி..
டிரங்கு பெட்டியில் சுவாரசியம் கூடிக்கிட்டே போகுது. அசத்துங்க..
//தங்கத் தானி// - ஒரு அட்சய த்ரிதய்க்கு இந்தியாவுக்கு வராமல் இருந்தால் சரி.
/FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன்./-என்ன கொடுமை மேடம் இது....
அந்த இளைஞரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் அந்த கம்பனிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவிச்சுக்கறேன்.
மற்ற தகவல்களும் சூப்பர்.
என்றென்றும்16
ஃபோன்/கீபோர்ட் தகவல் புதுசு
தங்கமும் இப்போ ஏடிஎம் புதுசு (இனிமேல் கேன்டீன்லே உண்வும் வந்தாலும் வரலாம்)
//அலுவலங்களில் மேனேஜ்மெண்ட் பாலிஸிகள் புரிபடவே மாட்டேன்கிறது!! பிராஜக்ட்கள் ஒண்ணும் இல்லாததால, ஏற்கனவே இருக்கவங்களே, //
சும்மா பேசி பொழுது போக்க நாலுபேர் இருந்தாதானே நல்லா இருக்கும்.
நல்ல தகவல் தொகுப்பு சகோதரி.
ஏன் இப்படி பெருமூச்சு??//
பெருமூச்சில்ல.. மயக்கம் வருது.. யாராவது ஒரு பன்னீர்ச் சோடா குடுங்க :-)
ட்ரங்குப்பெட்டியில கிடைச்ச அத்தனையும் சூப்பர் ஹுசைனம்மா.
25 வயசில் மாரடைப்பு??? அதிர்ச்சி.
தங்கத்தானி, தங்கத்தீனி - ஆச்சரியம் :)
டிரங்கு பெட்டி தகவ்ல் சுவாரசியமா இருக்கு.
இருபத்தைந்து வயசுல, மாரடைப்பா?
படிக்கும் போதே இதயம் கனத்தது.
சகோதரி, சுவாரஸ்யமான தகவல்கள்
கால்குகேட்டரிலும் அதேபோல் 5ஆம் எண்ணில் சிறு மேடு போல இருக்கும் என்பது கூடுதல் செய்தி.
இப்போது வரும் கைபேசிகளில் (E71) நாம் வாயால் கேமரா என்று சொன்னால், கேமராவை activate செய்கிறது. இதுவும் பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக என்று நான் என் நண்பர்களிடம் சொல்லுவேன்.
//“பிராஜக்ட் எப்ப கிடைக்கும்”னு அப்பாவியா கேட்டுகிட்டிருக்காங்க. இன்னிக்கு கேட்டவர்ட்ட, FBIக்கு சொல்லிருக்கோம்; சீக்கிரமே தேடிக் கொடுத்துடுவாங்கன்னு சொன்னேன். //
படித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
எங்களுடைய நிறுவணத்திலும் அதே போல் நருடம் ஒரு முறை Employee Relief Fund என்று தொழிலார்களிடம் (Staffs) வசூல் செய்து அதை இது போன்ற இழப்புகளுக்கு ஈடாக கொடுப்பார்கள். கடைநிலை ஊழியர்களிடம் (Labour) இதை வசூல் செய்வதில்லை.
சுவாரஸ்யமான தகவல்கள் ஹுஸைனம்மா.
சகோதரி நல்ல தகவல்கள்.
ஹா ஹா ஹா
இது அந்த கால் வலிக்கு.
----------
3 வருடம் பேஸிக் சாலரி - இதை பார்த்ததும் மனசுக்கு கொஞ்சம் ரிலீஃபாக இருந்திச்சி.
அன்பு சகோதரி,
உங்கள் பெற்றோர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் ஆசிகளை பெற்றுக் கொள்கிறேன்.
ஏன் டிங்குபெட்டியின் பக்கம் ஆளைக்காணோம் பாத்து இருங்கோம்மா..
அனைத்தும் சுவாரஸ்யமான தகவல்கள் ஹுஸைனம்மா!
அப்பா டிரெங்கு பெட்யடி ரொம்ப நாள் கழித்து திறந்து இருக்கீஙக
வழக்கம் போல தகவல் கள் அருமை
25 வயது வாலிபர் மரணம் ரொமப் வே வருந்ததக்க செய்தி.
எத்தனை தகவல்கள் பா. தங்கத்தில சாப்பாடு போடறாங்களா. கண்டிப்பாப் போய்ச் சாப்பிட்டுப் பார்க்கலாம்:)
அந்தச் சின்னப் பையனுடைய உறவுகளை நினைத்து வருத்தமாக இருக்கு. அதே சமயம் உங்க ஊரு கவர்ன்மெண்ட் இப்படி உதவி செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கிறது.
என்னது தங்கக் காசா. ஏன்பா டிஸ்கவுண்ட் ஏதாவது உண்டா:)
நன்றி ஹுசைனம்மா. நல்லா இருந்தது பொட்டி.
Post a Comment