Pages

மெக்கானிக்கல் இஞ்சிநீர்




அடுத்தப் பதிவு உருப்படியா எழுதணும்னு நினைச்சு, ஆரம்பிச்சா, என்ன எழுதன்னே தெரியலை; ஸோ, பேக் டு மொக்கை!! மொக்கைன்னா ரங்ஸைக் கலாய்க்கிறதுதான்னு சொல்லித்தான் தெரியணுமா?

என் ரங்ஸ் ஒரு மெக்கானிக்கல் இஞ்சிநீர் தெரியுமோ? அதுல என்ன வசதின்னு கேட்டீங்கன்னா, வீட்டில் என்ன பொருள் ரிப்பேர் ஆனாலும், சரி பண்ணித் தந்துடுவார். இன்னும் சொல்லப் போனா, அவர் சரி பண்ணிடுவார்ங்கிற தைரியத்துல எதை வேணாலும் உடைக்கலாம். ஆனா, கொடுமை என்னன்னா, எதையும் ரிப்பேராச்சுன்னு தூக்கிப் போட்டுட்டு, புதுசு வாங்க முடியாது!! எங்க வீட்ல கேஸ் ஸ்டவ்லருந்து, வாஷிங் மிஷின் வரைக்கும் முதல்ல வாங்கினதுதான், இன்னும் மாத்தவே இல்லை!!

இந்த ஊர்ல, ரிப்பேர் பார்க்கிற காசில, புதுசாவே அந்தப் பொருளை வாங்கிடலாம். அந்தளவுக்கு விலையும், அலைச்சலும் இருக்கும். அதனால சில பொருட்களைப் பார்த்துப் பார்த்து உபயோகிக்க வேண்டியிருக்கும். அதிலும் என் கை இரும்புக்கை!! இவர் ரிப்பேர் பண்ணுவார்ங்கிறது தெரிஞ்சதும், எனக்கும் ரொம்ப சந்தோஷம். ஜாக்கிரதையா வேலை பார்க்க வேண்டாம் பாருங்க!!

அவ்வளவு ஏன், என் பசங்ககூட, சின்ன வயசுல ஒட்டக்கூட முடியாத பிளாஸ்டிக், மர விளையாட்டுச் சாமான்களையும் உடைச்சுட்டு, “வாப்பா சரி பண்ணிடுவாங்க”ன்னு அவரை ஒரு சூப்பர்மேன் ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு இருந்தாங்க.

அப்போ, ஒரு நாள் இவரோட பாஸின் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவங்க சொன்னாங்க, அவங்க வீட்டுக்காரரும் இதே மாதிரி ரிப்பேர் ஸ்பெஷலிஸ்ட்தானாம். இவங்க அக்கா, தங்கச்சி வீட்டுக்குப் போனா அவர் ரொம்ப நேரம் இருக்க விடமாட்டாராம். உடனே இவங்க,  அங்க ரிப்பேரான பொருள் ஏதாவது இருந்தா எடுத்துக் கொண்டு கொடுத்துடுவாங்களாம். அவர் ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சுட்டா நேரங்காலமே தெரியாதாம். இவங்க ஜாலியா அரட்டை அடிப்பாங்களாம்.

ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே, நமக்குத் தோணாமப் போச்சேன்னு, அடுத்த முறை தங்கை வீடுகளுக்குப் போனா முத கேள்வியே இதான் “ஏதாவது ரிப்பேர் பண்றதுக்கு இருக்கா”ன்னுதான். இப்படியே போய், கடைசியில, “என்ன நீ?  ”கொடே ரிப்பேஏஏஏர்ர்ர்ர்ர்”னு சத்தம் போட்டுட்டு வர்ற குடை ரிப்பேர்காரர் மாதிரி வரும்போதே “ரிப்பேர் பண்ணனுமா”ன்னு கேட்டுகிட்டே வர்ற? நீ வர்றன்னு நான் என்ன புதுசு புதுசா உடைச்சு வைக்க முடியுமா”ன்னு என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க என் தங்கச்சிங்க.


சரின்னு, இப்பல்லாம் கேட்போருக்குத்தான் சேவைன்னு கொள்கையைச் சுருக்கியாச்சு. இப்படியே போய்கிட்டிருக்கும்போது, ஒரு நாலஞ்சு மாசம் முன்னாடி கிச்சன்ல காஸ் சிலிண்டர் மாத்தினோம். அப்புறம் என்னாச்சுன்னா, சிலிண்டர் வால்வைத் திறந்து வைச்சா, காஸ் வாடை வந்தது. மூடிட்டா ஸ்மெல் இருக்காது. இப்படியே இருக்கவும், என்ன செய்யன்னு யோசனையா இருந்தது. எனக்கோ காஸ் சிலிண்டர்னாலே பயம். ஒவ்வொருக்க சிலிண்டர் மாத்தும்போதும், பாம் ஸ்க்வாட் மாதிரி, கிச்சனைவிட்டு எல்லாரையும் வெளியே அனுப்பிட்டு, நான் மட்டும் தனியா நின்னு மாத்துவேன். எதாவதுன்னா என்னோட போகுமேன்னு. அவர்கூட கிண்டல் பண்ணுவார், பயப்படவேண்டிய மனுஷங்களத் தவிர எல்லாத்துக்கும் பயப்படுறன்னு.

நம்ம ஊர்னா, உடனே காஸ் ஏஜென்ஸிக்கு ஃபோன் பண்ணா, பசங்கள அனுப்பி வைப்பாங்க. இங்க அப்படி ஏஜென்ஸி எதுவும் கிடையாது. நம்ம ஊர் குல்ஃபி வண்டி மாதிரி, ஒரு வண்டியில மணியடிச்சுகிட்டே சிலிண்டர்கள் கொண்டு வருவாங்க. நாம கூப்பிட்டு வாங்கிக்கணும். அல்லது பக்கத்துல உள்ள சின்னச் சின்னக் கடைகளிலும் கிடைக்கும். ஆனா, இங்க எல்லாப் பொருட்களும் விலை கொஞ்சம் கூட இருக்கும். நாமதான் சிக்கனச் சிகாமணியாச்சே. எப்பவும் மொத்தமா வாங்கிடுறதனால, வீட்டுக்குக் கீழே இருக்கக் கடையில எதுவும் வாங்கவேண்டி வராது. அதனால அந்தக் கடைக்காரருக்கு என்மேல காண்டு. தப்பித்தவறி அவர்ட்ட காஸ் வாங்க வேண்டி வந்தாலும் ஸ்டாக் இல்லன்னு சொல்லிடுவார்.

இப்ப காஸ் லீக்காகுதே, என்னச் செய்யன்னு ஒரே ரோசனை. ரங்ஸ்ட்ட சொல்லப் பயம். ஏன்னா, உடனே அவர் வீராவேசமா மெக்கானிக்கல் மூளையோட ரிப்பேர் பார்க்கறேன்னு வந்திடுவார். காஸ் விஷயத்துல விளையாடக்கூடாதே, அதனால சொல்லலை. அன்னிக்கு ஆஃபிஸ் வந்தப்பிறகு, ஃபயர் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணேன். என்னன்னாங்க; நான் இந்தந்த மாதிரி காஸ்  லீக்காகுது ன்னு சொன்னேன். என் மொபைல் நம்பரை வாங்கிட்டு, கூப்பிடறோம்னாங்க. வச்சவுடனே அங்கிருந்து ஃபோன் வந்துது. ஒரு அரபி ஆஃபிஸர்தான் பேசினார்.

இந்தி தெரியும்னதும், இந்தியிலேயே பேசினார். பின்னாடி பயங்கரமாக ஃபயர் இஞ்சினின் சைரன் சத்தம்!! சிலர் தடதடவென்று நடக்கும் சத்தம் வேறு! என்ன பிரச்னை, வீட்ல யாரும் இருக்காங்களான்னெல்லாம் கேட்டுட்டு, வீடு எங்கன்னு கேட்டார்.  நான் அட்ரஸ் சொல்லச் சொல்ல, அதை அங்க யார்ட்டயோ திருப்பிச் சொன்னார். அப்புறம்,  “ஓ.கே. நாங்க இப்ப உங்க வீட்டுக்குப் போயி  கதவை உடைச்சுட்டு உள்ளப் போப்போறோம்”ன்னாரே பாக்கலாம்!! அவ்வ்வ்வ்வ்வ்!!. அச்சச்சோ, உடைக்காதீங்கன்னு அலறி,  மறுபடியும் அவர்கிட்ட ,  சிலிண்டரைத் திறந்தா மட்டும்தான் பிரச்னைனு விளக்கினதும், அவர் யார்கிட்டயோ “போகவேண்டாம்”னு அரபில சொன்னார். ஹப்பாடா!!

பூட்டின வீட்டுக்குள்ள காஸ் லீக்னு புரிஞ்சுகிட்டாராம் அவர்!! அப்புறம் என்கிட்ட “உன் ஹிந்தி அவ்வளவு தெளிவால்ல”ன்னு சொல்லிட்டு (மனசுக்குள்ள என்னல்லாம் திட்டுனாரோ??), கடையில ஒரு வாஷர் கிடைக்கும்; அதை வாங்கி மாட்டினாப் போதும்னு சொல்லித் தந்தார். டெல்லியில எல்.கே.ஜி. யிலயும், திருநெல்வேலில தூர்தர்ஷன் பாத்தும், அபுதாபில டாக்ஸி டிரைவர்களிடம் மல்லுக்கட்டியும் படிச்ச ஹிந்தியைச் சரியில்லன்னு சொல்லிட்டாரேன்னு ரொம்ப வருத்ததோட, ரங்ஸ்கிட்ட ஃபோன் பண்ணி இப்படிச் சொனாங்கன்னு சொல்ல, அவரும் அவர்பங்குக்குத் திட்டினார் - என் ஹிந்தியை இல்ல, கதவ உடைக்கிற வரைக்கும் வந்ததை!! “ஆல் மை டைம்”னு கேட்டுகிட்டேன், என்ன செய்ய!!

(தகவல்: யூ.ஏ.இ. அவசர போலீஸ் நம்பர் 999. ஆனா, சிலர் இந்த எண்  தெரியாமலோ, அல்லது பதட்டத்திலோ அறியாமல், தங்களின் சொந்த நாட்டுல உள்ள அவசர போலீஸின் எண்ணை டயல் செய்தால் கூட, அது 999க்குப் போகிற மாதிரி அமைச்சிருக்காங்க இங்க.இது எல்லா அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா தவிர எந்தெந்த நாட்டு எண்களுக்குப் பொருந்தும்கிற விவரம் தெரியலை!! முயற்சி செய்து, வீட்டுக்குப் போலீஸ் வந்துதுன்னா, நான் பொறுப்பில்ல!! )

Post Comment

68 comments:

எல் கே said...

பாவம். செலவு பண்ண வேண்டாம்னு எவ்ளோ உதவிய சரி பண்ணி தரார்.நல்லதுக்கு காலம் இல்லை
//கடையில ஒரு வாஷர் கிடைக்கும்; அதை வாங்கி மாட்டினாப் போதும்னு சொல்லித் தந்தார். //

அவ்ளோதான

SUFFIX said...

//எங்க வீட்ல கேஸ் ஸ்டவ்லருந்து, வாஷிங் மிஷின் வரைக்கும் முதல்ல வாங்கினதுதான், இன்னும் மாத்தவே இல்லை!!//

இப்ப அப்ளிகேஷன் போட்டாச்சுல, ரங்க்ஸுக்கு எட்டிடும்:)

நாடோடி said...

ஒரு சின்ன‌ கேஸ் லீக்குக்கு இவ்வ‌ள‌வு அக்க‌போரா?... இதை நீங்க‌ சிலிண்ட‌ர் வாங்குப‌வ‌ரிட‌ம் சொன்னால் உட‌னே அந்த‌ வாஷ‌ர் கொடுப்பார்க‌ள்... ஒவ்வொரு வாட்டியும் சிலிண்ட‌ர் மாற்றும் போது அந்த‌ வாஷ‌ரை மாற்றுவ‌து ந‌ல்ல‌து..... நாங்க‌ளும் மெக்கானிக்க‌ல் இந்ஞி நீர் தான்..

SUFFIX said...

//ரிப்பேர் பார்க்கிற காசில, புதுசாவே அந்தப் பொருளை வாங்கிடலாம்//

அந்த கொடுமைய ஏன் கேட்குறீங்க, இரண்டு வருஷம் முன்னாடி சேம்சுங் வாஷிங் மெஷின் 750 ரியாலுக்கு வாங்கினோம், இப்போ மாத்தலாம்னு போய் கேட்டா 50 ரியாலுக்கு கேட்கிறானுங்க!!

சுந்தரா said...

//இங்க அப்படி ஏஜென்ஸி எதுவும் கிடையாது. நம்ம ஊர் குல்ஃபி வண்டி மாதிரி, ஒரு வண்டியில மணியடிச்சுகிட்டே சிலிண்டர்கள் கொண்டு வருவாங்க. நாம கூப்பிட்டு வாங்கிக்கணும். அல்லது பக்கத்துல உள்ள சின்னச் சின்னக் கடைகளிலும் கிடைக்கும்.//

அபுதாபியில இப்படியா???
இங்க துபாய்லயும் கேஸ் ஏஜன்ஸிக்காரங்களே வந்து மாட்டிட்டு, பிரச்சனைன்னா வந்து சரிபண்ணிட்டும் போவாங்க.

எங்கவீட்டு மெக்கானிக்கல் இஞ்சிநீர் அப்படியே ஆப்போசிட் போங்க :)

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல கிளப்பி இருக்கீங்க பீதியை :))
எச்சரிக்கை உணர்வுக்கு பாராட்டுக்கள்.

Chitra said...

“ஆல் மை டைம்”னு கேட்டுகிட்டேன், என்ன செய்ய!!


.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... உங்கள் மொக்கை டைம், இஞ்சி நீர் தயவால நல்லா இருக்குதுங்க. சூப்பர்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல வேளை கதவை உடைக்காம போனாங்களே... எப்பாடி எவ்வளோ சாமர்த்தியம்; நம்பவேமுடியல.. ஹிந்தி தெரியலைன்னா கவலையே வேண்டாம்.., ஏன்னா எனக்கும் ஹிந்தி தெரியாதே.. ஹிஹிஹி

settaikkaran said...

இஞ்சிநீரா இருக்கக் கொடுத்து வச்சிருக்கணும் போலிருக்கு! :-)

//அடுத்தப் பதிவு உருப்படியா எழுதணும்னு நினைச்சு, ஆரம்பிச்சா, என்ன எழுதன்னே தெரியலை;//

ஆனா, இந்தப் பதிவைப் படிச்சு எனக்கு அடுத்த பதிவுக்கு ஐடியா வந்திருச்சே! ஹையா!

இராகவன் நைஜிரியா said...

// அடுத்தப் பதிவு உருப்படியா எழுதணும்னு நினைச்சு, //

உருப்படியா... ஏன் இந்த வில்லங்கம்.

// ஸோ, பேக் டு மொக்கை!! //

இது நல்லபிளாக்கருக்கு அடையாளம்.

இராகவன் நைஜிரியா said...

// மொக்கைன்னா ரங்ஸைக் கலாய்க்கிறதுதான்னு சொல்லித்தான் தெரியணுமா? //

அது தெரிஞ்சதுதானே.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///SUFFIX said...

//ரிப்பேர் பார்க்கிற காசில, புதுசாவே அந்தப் பொருளை வாங்கிடலாம்//

அந்த கொடுமைய ஏன் கேட்குறீங்க, இரண்டு வருஷம் முன்னாடி சேம்சுங் வாஷிங் மெஷின் 750 ரியாலுக்கு வாங்கினோம், இப்போ மாத்தலாம்னு போய் கேட்டா 50 ரியாலுக்கு கேட்கிறானுங்க!!///

எவ்வளோ மதிப்பு பாத்தீங்களா...

இராகவன் நைஜிரியா said...

// என் ரங்ஸ் ஒரு மெக்கானிக்கல் இஞ்சிநீர் //

உங்ககிட்ட மாட்டிகிட்ட பின்னாடி சுக்கு நீர் ஆகிட்டதா கேள்விப்பட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// இன்னும் சொல்லப் போனா, அவர் சரி பண்ணிடுவார்ங்கிற தைரியத்துல எதை வேணாலும் உடைக்கலாம். //

அது சரி... இந்த நம்பிக்கையில அவர் மண்டைய உடைக்காம விட்டீங்களே.

இராகவன் நைஜிரியா said...

// எங்க வீட்ல கேஸ் ஸ்டவ்லருந்து, வாஷிங் மிஷின் வரைக்கும் முதல்ல வாங்கினதுதான், இன்னும் மாத்தவே இல்லை!! //

ஓவ்வொரு ரூபாய் சேமிப்பும், சம்பாதிப்பதற்கு சமம்.

நாஸியா said...

அட எங்க மாப்பு கூட மெக்கானிக்கல் இஞ்சி தான்!! தம்பியும் கூட!! ;) ஆனா இந்த மெக் பசங்க பண்ற அலும்புக்கு அளவே இருக்காது.. ராயல் மெக்'குன்னு ஒரு கூட்டமாத்தான் திரியுறாங்க..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா சொன்னிங்க ஹுஸைனம்மா. இந்த mechanical engineer க தொல்ல பேரும் தொல்ல (சொந்த அனுபவம் தான் நம்ம வீட்டுலயும் இதே கதை தான்). ரிப்பேர் பண்றதோட நிறுத்திட்டா பரவா இல்ல. இவங்க என்னமோ அப்துல்கலாம் பரம்பரை மாதிரியும் நமக்கு ஒண்ணுமே தெரியாதுங்கரா மாதிரியும் அப்ப அப்ப ஒரு லுக் வேற விடுவாங்க. நேரம் தான்

Thamiz Priyan said...

எங்க வீட்லயும் கொஞ்ச நாளா கேஸ் வாசனை வருது... போலீஸ்க்க்கு போன் பண்ணிடலாம் போல இருக்கே?... ;-)

Ananya Mahadevan said...

கொடரிப்பேஏஏஏஏர்ர்ர்ர்... சூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்... போங்க.
ரொம்ப ரசிச்சேன். நம்மூட்டுலேயும் ஒரு காண்டிடேட் இருக்கார். ரிப்பேர் சிகாமணி. ஷார்ஜாவில இருக்கும் கோபால் அண்ணா, ஃபேன் மிக்ஸி ஃப்ரிட்ஜ்,டீ.வீ, கார், டைப்ரைட்டர்,சைக்கிள்,ஸ்கூட்டி இப்படி சகலத்தையும் ரிப்பேர் செய்வதில் கில்லாடி. இது மட்டுமில்லாம ப்ளம்பிங் வேலையும் தெரிஞ்சு வெச்சுண்டு இருக்கார்.
ஒரு வாஷருக்கு நீங்க பண்ணின ரகளை கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் உங்க முன் ஜாக்கிரதை முத்தன்னாத்தனத்தை நான் மனதார மெச்சுகிறேன். வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

நீங்க ரொம்ப நல்லவங்கன்னு அடிக்கடி இடுக்கை போட்டு நிறுப்பிக்கிறீங்க

(சிங்கையிலும் 999 தான்)

அதே போல் ரங்க்ஸுக்கு எதுனா அவசர நம்பர் இருக்கா :)

நட்புடன் ஜமால் said...

அதுக்காக இஞ்சி நீர்ன்னு சொன்னிய பாருங்க அதுக்கே அவர் உங்களுக்கு - சரி மிச்சத அவரே ஃபில் பன்னிப்பார் :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரொம்ப பரபரப்பாகப் படிச்சேன்ங்க.
இறுதியில இப்படி பு(கே)ஸ்ஸ்ஸ்ஸுனு
முடிச்சிட்டீங்களே!

malar said...

இந்த காஸ் பிரச்சனை எங்க வீட்டிலும் இருந்தது...
துபாயில் ஊரில் உள்ள மாதிரி ரெகுலேடர் .ஒரு மட்டுக்கு சமாளித்தேன்.இதை விளக்க ஒரு பதிவே போடலாம்..நம்ம ஆளு EEE.

Madumitha said...

அப்பாடா.. எங்க வீட்ல இந்தப்
ப்ரச்னையில்லெ. எனக்கு இதெல்லாம்
வராது.

ஜெய்லானி said...

எல்லா சிலிண்டரிலும் வாஷர் இருக்குமே. அது போடாட்டி என்னா டைட் பண்ணினாலும் லீக்கேஜ் வரதை தடுக்க முடியாது .

சிரிக்க நிறைய விஷயம் இருக்கு.ஆனா பயப்பட ஒரே விஷயம் நீங்க இரும்பு கை!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

ஹுஸைனம்மா, வீட்டுக் கதவை உடைக்க இருந்தீங்களே.
பாவம்பா. அப்பாவியா இருக்கீங்க.
ரங்ஸ் விஷயத்தில நாம கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும். அவ்வப்போ நாம் ப்ரொடெக்ஷன் மோட்ல இருக்க வேண்டிவருது.
காஸ் விஷயத்தில நீங்க எடுத்த நடவடிக்கை சரியே.
எனக்குத் தெரிந்த ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினேயர் இருக்காரு. அவங்க பொண்டாட்டி, நம்ம வீட்டுக்கு வரும் முன்னாலியே தொலைபேசில சொல்லிடுவாங்க. தயவுசெய்து
கணினி சம்பந்தமா ஏதாவது கேட்ராதீங்க.
கணினி பக்கம் உட்கார்ந்தார்னா அப்புறம் வீட்டுக்கே வர மாட்டார். '' என்று:)

Annaraj Ponpandi said...

ரொம்ப‌ நல்ல ப‌திவு மேட‌ம்
அப்பாவி த‌ங்க‌ம‌ணி ப‌தில் என்னை ரொம்ப‌ யோசிக்க‌ வ‌ச்சிடுச்சி

ஸாதிகா said...

ஹுசைனம்மா எங்கள் வீட்டிலும் ரிப்பேரான வஸ்துக்கள் எக்கசக்கம் இருக்கு. கார்கோவில் போட்டுவிடவா?

☀நான் ஆதவன்☀ said...

:)))))))

காஸ் சிலிண்டர் மொத்தமா ஃப்ளாட்டுக்கு கீழ வைக்கலயா?

இனிமே என் ரூம்ல எது ரிப்பேர்னாலும் பதிவர் சந்திப்பு சார்ஜால ஏற்பாடு பண்ணிட்டு அபுதாபிக்கு போன் போட்டிற வேண்டியது தான் :)

சாந்தி மாரியப்பன் said...

இஞ்சி நீர்.. ஹா..ஹா.. ரொம்ப நாளாச்சுப்பா இந்த வார்த்தைய கேட்டு. நாகர்கோவில் பக்கம் யாராவது, நான் இஞ்சினியராக்கும்ன்னு பெருமையடிச்சுக்கிட்டா,.. ஆமா!! பெரிய இஞ்சி நீர்.., சுக்குநீர்ன்னு சொல்லி காத்தை புடுங்கிவுட்டுடுவாங்க :-)))))

அப்பாவியின் கருத்தேதான் எனக்கும். என்ன செஞ்சாலும், புத்திசாலின்னு ஒத்துக்கவே மாட்டேங்கறதுதான் ரங்க்ஸ்களின் குணமாயிருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

Anonymous said...

உங்க பதிவெல்லாம் ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டேன். ரொம்ப அழகா எழுதுறீங்க ஹூஸைன்ம்மா. எப்டி இருக்கீங்க.? அது எப்டி எல்லா தங்க்ஸ்சும் ரங்கஸ்சை இப்டி படுத்ரேள். பாவம் ரங்கஸ் எல்லாம். அவங்கள சப்போட் பண்ணி நான் எழுதறேன். =))

Anonymous said...

//இந்த மெக் பசங்க பண்ற அலும்புக்கு அளவே இருக்காது.. ராயல் மெக்'குன்னு ஒரு கூட்டமாத்தான் திரியுறாங்க..//
ஏனுங்க எங்கள பாத்து இப்டி புகையுறீங்க. எங்க அருமை இன்னும் உங்களுக்கு தெரியல. எங்க வீட்ல எல்லாமே ஆப்பசிட். நான் தான் எல்லாத்தையும் பண்ணனும். பசங்க வேஸ்ட்டுங்க. நாம இல்லன்னா, உலகமே இயங்காதே. ஓக்கே ஓக்கே இது கொஞ்சம் ஓவர் தான். அதுவும் இன்னும் பி.எஞ் முடிக்காத ராயல் மெக் நான். ஹி ஹி.

//ரிப்பேர் பண்றதோட நிறுத்திட்டா பரவா இல்ல. இவங்க என்னமோ அப்துல்கலாம் பரம்பரை மாதிரியும் நமக்கு ஒண்ணுமே தெரியாதுங்கரா மாதிரியும் அப்ப அப்ப ஒரு லுக் வேற விடுவாங்க. //
ரிப்பேர் பண்ணி கொடுக்கிறோமில்ல? அப்புறம் என்ன? =))

//ஒரு வாஷருக்கு நீங்க பண்ணின ரகளை கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் உங்க முன் ஜாக்கிரதை முத்தன்னாத்தனத்தை நான் மனதார மெச்சுகிறேன்.//
ரிப்பீட்டு

கோமதி அரசு said...

எனக்கும் ஒரு முறை வாசர் பிரச்சனை வந்தது.இப்போது எல்லாம் வாசர் செக் செய்யாமல் வாங்குவது இல்லை.

நீங்கள் எழுதியது
மொக்கை பதிவு இல்லை ஹீஸைனம்மா, அவசியமான பதிவு.

நீங்கள் இரும்புகை மாயாவதியா!

மெக்கானிக்கல் இஞ்சிநீருக்கு நல்ல வேலைதான்.

தராசு said...

//ரங்ஸ்கிட்ட ஃபோன் பண்ணி இப்படிச் சொனாங்கன்னு சொல்ல, அவரும் அவர்பங்குக்குத் திட்டினார் - என் ஹிந்தியை இல்ல, கதவ உடைக்கிற வரைக்கும் வந்ததை!! “ஆல் மை டைம்”னு கேட்டுகிட்டேன், என்ன செய்ய!!//

ஹைய்யா, கேக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஹுஸைனப்பா, அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க, லூசுல விடாதீங்க. என்ன உதவின்னாலும் நாங்க இருக்கோம் தல.

அன்புடன் மலிக்கா said...

ஆகா அங்கேயுமா
இதேதான் இங்கேயும்.

ஆனாலும் நாமா விடுவோமாஆஆஆஆஆஆ..

mush said...

Shaakiramma, என்னொட வீட்டுல Kettle-ல automatic switch-ல ப்ரொப்லெம். இந்த வாரம் எங்க மூத்த வாப்பாவ, எங்க வாப்பாவின் அண்ணாதைய, அதான் உங்க ரங்க்ஸ அனுப்ப முடியுமா???

எம்.எம்.அப்துல்லா said...

உங்களுக்கு வாசர் பிரச்சனை. எனக்கு வாசகர் பிரச்சனை.இப்பல்லாம் நம்ப பிளாக் பக்கம் வர்ற கூட்டம் ரொம்பக் குறைஞ்சிடுச்சு.இதுக்கு எங்க கம்ப்ளைண்ட் பண்ணனும்?!?!!

:)

Rithu`s Dad said...

ஹுஸைனம்மா தங்ஸ் எல்லாம் அடிக்கடி பயங்கரமா நீங்க கலாய்க்றீங்க.. சரி பரவல்லன்னு பார்த்தா.. இப்போ மெக்கானிக்கல் இஞ்சிநீர் னு வேறயா!! பார்த்து அப்புறம் நாங்க - மெக்கானிக்கல் இஞ்சிநீர்ஸ் - எல்லாம் உங்க தங்க்ஸ்க்கு சப்போர்ட் பன்ன வேண்டியிருக்கும்.. 500 கிமி பக்கத்தில தான் இருக்கீங்க.. பார்த்துக்கோங்க.. எதாவது உதவின்ன நாங்க இவ்ளோ நாளு உங்க எழுத்த படிச்சு இருந்த “விசுவாசம்” எல்லாம் விட்டு உங்க தங்க்ஸ் பக்கம் சாஞ்சிடுவோம்..

சரி ஒரு வரி சொன்னா தான் என்ன ? எங்க வீட்டு காரர் ரிப்பேர் பன்றதுல வல்லவர்னு... கொஞ்சம் பெரிய மனசு பன்னுங்க.. :)

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா said...
... நம்ப பிளாக் பக்கம் வர்ற கூட்டம் ரொம்பக் குறைஞ்சிடுச்சு.இதுக்கு எங்க கம்ப்ளைண்ட் பண்ணனும்?!?!!//

இதுக்கு நாங்கதான் உங்ககிட்ட கம்ப்ளயிண்ட் பண்ணனும். எழுதாமலே கூட்டம் வரணுன்னா எப்படி?

ஹுஸைனம்மா said...

// mush said...

Shaakiramma, என்னொட வீட்டுல Kettle-ல automatic switch-ல ப்ரொப்லெம். இந்த வாரம் எங்க மூத்த வாப்பாவ, எங்க வாப்பாவின் அண்ணாதைய, அதான் உங்க ரங்க்ஸ அனுப்ப முடியுமா???//

இதுவரை செஞ்சதுக்கான பில்லைச் சீக்கிரம் செட்டில் பண்ணுங்க; அப்புறம் அனுப்பறேன்!!

Unknown said...

அப்துல்லா அண்ணே! அடிக்கடி எழுதுனாத்தானே.
வாசிக்க நாங்க ரெடி ; வருஷிக்க நீங்க ரெடியா ?

உசைனம்மா நல்லாத்தான் எழுதுறீக.
கேஸ் கதை குஷ்பு கேஸ் மாதிரி புஸ்....... :)

ஷாகுல் said...

//கொடே ரிப்பேஏஏஏர்ர்ர்ர்ர்”//

டோட்டல் டேமேஜ்

ங்களுக்காது ஹிந்தி சரி இல்லனு தான் சொன்னாங்க என்கிட்ட ஒருத்தன் தெலுங்காடானு கேட்டுட்டான். அவ்வ்வ்வ்

சிநேகிதன் அக்பர் said...

ஒரு வாசரை வச்சே வாசகரை பிடிக்க முடியும்னு நிறுபிச்சிட்டீங்க.

கலக்கலா இருக்கு ஹுஸைனம்மா.

அன்பரசு said...

நல்லா எழுதறீங்க.... படிப்பவர்களை வசீகரிக்கிறது உங்கள் எழுத்து நடை.

பெரும்பாலான பெண்கள் சமையல் குறிப்புகள் அழகுக் குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கையில், நீங்கள் அன்றாட நிகழ்வுகளையே வெகு சுவராசியமாக எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெறும் பதிவுகளாக எழுதிக் கொண்டிராமல் அடுத்த தளத்திற்குச் செல்லுங்கள்! வாழ்த்துகள்!

INDIA 2121 said...

nalla pathivu
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN

அப்துல்மாலிக் said...

//சிலிண்டர் வால்வைத் திறந்து வைச்சா, காஸ் வாடை வந்தது. மூடிட்டா ஸ்மெல் இருக்காது. இப்படியே இருக்கவும்,//

ஷார்ஜாவுலே அந்த வேளையே இல்லே, இங்கே கிச்சனுக்கே கேஸ் கனெக்ஷன் வந்துடுது...

//பயப்படவேண்டிய மனுஷங்களத் தவிர எல்லாத்துக்கும் பயப்படுறன்னு. //

பாவம்....

Anonymous said...

பரவாயில்லையே. வீட்ல இப்படி ஒரு ஆள் இருந்தா நல்லதுதான். :)

ராமலக்ஷ்மி said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ரசிச்சுப் படிச்சேன்.

‘இஞ்சிநீர்’ மொத தடவையா கேட்கிறேன். சூப்பர்:)))))))!

செ.சரவணக்குமார் said...

//அவர் சரி பண்ணிடுவார்ங்கிற தைரியத்துல எதை வேணாலும் உடைக்கலாம். //

சார் உங்க பதிவுகளையெல்லாம் படிக்கிறாங்களா?

ஸ்ரீராம். said...

ஆல் மை டைம்.... சிரிப்பு வந்தது. கடைசித் தகவல் ஆச்சர்யப் பட வைத்தது.

ஹரீகா said...

**//ஹைய்யா, கேக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஹுஸைனப்பா, அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க, லூசுல விடாதீங்க. என்ன உதவின்னாலும் நாங்க இருக்கோம் தல.//**

--ஐயோ ஐயோ ஒன்னு கூடிட்டாங்கம்மா ஒன்னு கூடிட்டாங்க!! நம்மட அமைதி படை எல்லாத்துக்கும் கூக்குரலிட்டு தெரியபடுதிடுங்கம்மா.. இம்மீடியட்டா... சொல்லிட்டேன் சொல்லிட்டேன்!!!

இமா க்றிஸ் said...

நான் ஏதோ ஹுசேன் ginger beer குறிப்பு சொல்றாங்களோ என்று வந்தால்... ம்.. ;))

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,

ஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .

வெற்றி வேல் , வீர வேல்
................................................
..............................................\

இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)

மேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹா ஹா.. நல்லா எழுதியிருக்கீங்க ஹூசைனம்மா.. பாவம் உங்க வீட்டு இஞ்சி நீர் :)

GEETHA ACHAL said...

மிகவும் பொறுப்பு மிக்க கணவர்...வாழ்த்துகள்....

கஸ் லீக் விசயத்தில் கவனம் அதிகம் தேவை...நல்ல பதிவு....

Vijiskitchencreations said...

நல்ல பதிவு ஹூஸைனம்மா. ஆமாம் அமைதிசாரல் சொல்வது போல் எங்க ஊர் பக்கமும் இதே போல் தான் சொல்வாங்க. பெரிய இஞ்ஞி நீர், சுக்கு நீர் என்று. ம்..
கைவசம் ஒரு தொழில் இருக்குன்னு சொல்லுங்க. நல்ல கணவர். நல்லாவே காசை சேமிக்கலாம். ( லேபர் சார்ஜ் குடுக்காம ஒரு நல்ல அன்பான வார்த்தை+சிர்ப்பு மட்டும் நிங்க குடுத்தாலே வேலை முடிஞ்சிடும்.) நிங்க நிறய்யவே சேமிப்பு இருக்கும். ஜஸ்ட் ஜோக் ஒ.கே.பார்க்கலாம்.

முகுந்த்; Amma said...

எல்லாத்தையும் சரி பண்ணுவாங்களா, எங்க வூட்டுல அப்படியே ஆப்போசிட்.

இங்க நடந்த ஒரு கதை இது.

அமெரிக்கா வில எமெர்ஜென்சி னா அது 911 இந்தியா கோடும் 91 ல ஆரம்பிக்குதா, ஒரு நாள் எங்க நண்பர் ஓட அம்மா, இந்தியாவில டெல்லிக்கு போன் பண்ண நினச்சுட்டு 91 -1 அடிச்சுட்டாங்க அடுத்த நம்பர் அடிகிரதுகுள்ள யாரோ கூப்பிட போயிட்டாங்க, அடுத்த அஞ்சு நிமிசத்தில போலீஸ் வந்து வீட்டு முன்னாடி நிக்க, ஒரே டமாஸ் ஆகிடுச்சு.

Jaleela Kamal said...

இங்கு துபாயில் ஒரு போன் செய்தால் போதும் உடனே வந்துடுவாங்க்

நானும் கேஸ் சிலிண்டரோடு மல்லு கட்டுவதுண்டு

நானும் சாமான்களை பத்திராமாக, வந்த புதிதில் வாங்கிய பிரிட்ஜ் தான் இன்னும்.,

கூட இருப்பவங்க இது வரை முன்று மாற்றியாச்சு,
எல்லாமே பொக்கிஷம் போல் பாதுகாப்பேன்.

ஆஹா குல்பி வண்டி என்று சொல்லி குல்பி ஐஸஞாகபகப்படுத்திட்டீஙக்ளே./

ஹுஸைனம்மா said...

எல்.கே. - வாங்க; நன்றி. நல்லதுதான் பண்றாருன்னாலும், புது மாடல்ல எதுவும் வாங்க முடியலை பாருங்க, அதான் வருத்தம்!!

ஷஃபி - வாங்க; எல்லாத்தையும் வாசிச்சும், கண்டுக்காத மாதிரிதான் இருக்கார்.

நாடோடி - வாங்க; என்ன, சின்ன கேஸ் லீக்குன்னு சொல்லீட்டீங்க? சரியா கவனிக்கலன்னா, பெரிய அபாயம் தெரியுமா? :-))

சுந்தரா- வாங்க; அப்படியா, அங்க ஏஜென்ஸி உண்டா? இங்க கிடையாது. நேரடி சப்ளைதான்.

சைவக்கொத்ஸ் - வாங்க; நன்றி பாராட்டுக்கு!

ஹுஸைனம்மா said...

சித்ரா - ஆமாங்க, சில சமயம் (மட்டும்) அப்படித்தான் வாயமூடிக்க வேண்டியிருக்கு!! :-)))

சேட்டை - வாங்க; என்னப் பதிவுக்கான ஐடியா கிடைச்சுது?

ராகவன் சார் - வாங்க; நல்ல பிளாக்கராவே இருக்கறதா முடிவு பண்ணிட்டேன், உங்க அட்வைஸைக் கேட்டு!! நன்றி பல கமெண்ட்களுக்கு!!

//உங்ககிட்ட மாட்டிகிட்ட பின்னாடி சுக்கு நீர் ஆகிட்டதா//
ஆமா, இல்லன்னா கல்யாணமாகியும் திருந்தல, அப்ப பொண்டாட்டி சரியில்லன்னு சொல்லிடுவாங்களே!!

/இந்த நம்பிக்கையில அவர் மண்டைய உடைக்காம விட்டீங்களே//
ஹி.. ஹி.. அந்த நம்பிக்கையில என் மண்டையத்தான் ஒருக்கா உடைச்சுகிட்டேன்!! ;-))

ஸ்டார்ஜன் - ஆமாங்க, கதவ உடைச்சிருந்தா, அதச் சரி பண்றதுக்குள்ளே ஒரு பாட்டுப் புத்தகமே போட வேண்டிவந்துருக்கும், அவர் பாடுனத வச்சு!! நான் ஹிந்தி நல்லாப் பேசுவேங்க!!

நாஸியா - கரெக்டாச் சஒன்னீங்க, இந்த ராயல் மெக்குங்கன்னு காலேஜ் ஃபங்ஷன்ல இஅவ்ங்க விடுற அலும்பு இருக்கே...!!

ஹுஸைனம்மா said...

அப்பாவி தங்ஸ் - வாங்கப்பா. அதேதான்ப்பா, நம்மள கிண்டல் பண்ணாம இருக்க முடியாது இவங்களால!!

தமிழ்ப்பிரியன் - அட, ரெண்ண்ண்டு லைன் கமெண்ட் போட்டுருக்கீங்க!! பரவாலியே!!

அநன்யா - வாங்க; ஹி.. ஹி.. அந்த “கொடே ரிப்பேஏஏர்’ - நீங்க மட்டுந்தான் ரசிச்சுருக்கீஙக், சேம் பிளட்!!

ஜமால் - வாங்க; மெட்ராஸ்ல இருந்துகிட்டு, சிங்கை நம்பர் கொடுக்குறீங்க பாருங்க.. :-)) ரங்க்ஸுக்கு அவசர நம்பர் நாந்தான்!!

நிஸாம் அண்ணே - எப்பவுமே பரபரப்பா இருந்தா நல்லதில்லியே; அதான் அப்பப்ப மூச்சு விட்டுக்கிறது!! :-))

மலரக்கா - வாங்க; நீங்களே சமாளிச்சுகிட்டீங்களா, பரவால்லியே!!

ஹுஸைனம்மா said...

மதுமிதா - வாங்க; ஏன் உங்களுக்கு வராதுன்னு சொல்றீங்க, சமைக்கிறதே இல்லியா? ;-))

ஜெய்லானி - வாங்க; ‘கரெக்டா நோட் பண்ணிருக்கீங்க “இரும்புக்கை”!! ;-))

வல்லிம்மா - வாங்க; நான் அவ்வளவு அப்பாவிலாம் இல்லை!! கரெக்டாச் சொன்னீங்க, “Protection mode"ல இருக்கணும்கிறது சரியானது!!

ஸாதிகா அக்கா - அதெல்லாம் சென்னையில உங்க வீட்டுக்கு வருவேன்லியா, அப்ப சொல்லுங்க. டைம் போறதே தெரியாது!!

அன்னாராஜ் - வாங்க; நன்றி.

ஆதவன் - பில்டிங் கீழேயே வைப்பாங்களா, அப்படியா, தெரியலையே? அதுக்கென்ன, உடனே ஷார்ஜால பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்ங்க (என்ன, நீங்களும், நானும் மட்டுந்தான் சந்திச்சுக்கணும்!!). ரங்ஸின் சர்வீஸ் சார்ஜ் பாத்து போட்டுக்கலாம். :-))

ஹுஸைனம்மா said...

அமைதிச்சாரல் - வாங்கப்பா; ஆமா, அதேதான். என் கல்யாணத்துக்கு முன்னாடி என் ஃப்ரெண்டுகிட்ட உட்-பி இஞ்சினியர்னு சொன்னதுக்கு, அவ இப்படித்தான் “என்னத்த இஞ்சிநீர், சுக்குநீர்”னு காத்தப் புடிங்கிவிட்டுட்டா!! :-(

என் ரங்ஸ், எதையாவது சரி பண்ணிட்டு, பெருமையாப் பாக்கும்போது, “ஆமா, இதெல்லாம் செஞ்சு என்னத்துக்கு? ஒரு வெண்டக்கா ஒழுங்காப் பாத்துவாங்கத் தெரியுதா”ன்னு காத்தப் புடிங்கிடுவேனே!! ;-)))

அனாமிகா - வாங்க; நீங்களும் ராயல் மெக்-ஆ? அவ்வ்வ்வ்.. உங்க ஹஸ்சும் மெக்கா இருந்தார்னா தெரியும் சேதி!!

//ரிப்பேர் பண்ணி கொடுக்கிறோமில்ல? அப்புறம் என்ன?//
மேலே உள்ள (வெண்டக்கா) பதிலைப் பாருங்க!! ;-))

கோமதியக்கா - வாங்க; மாயாவதி அளவுக்கெல்லாம் இல்லக்கா!! எதோ, சின்ன லெவல்ல இருக்கேன்!! ;-))

தராசு - வாங்க; இத உங்ககிட்டருந்து எதிர்பார்த்தேன். ஆனாலும், நான் வாங்கிறதுக்கு பலமடங்கு திருப்பிக் கொடுத்துடுவோம்ல!! (மேல வெண்டக்கா பதிலையும் பாருங்க) :-))

ஹுஸைனம்மா said...

மலிக்கா - அங்கயுமா!! நல்லதுதான்!!

mush - என்னா அமௌண்ட் ரெடியா?

அப்துல்லா - எழுதவே மாட்டேன்னு அடம்புடிக்கிறீங்க பாருங்க, எல்.கே.ஜி ஸ்டூடண்ட் மாதிரி!! :-))

ரீத்து அப்பா - வாங்க; நீங்க எத்தன பேர் ரங்ஸ் பக்கம் போனாலும், அவர் என் பக்கம்தான்!! (இருந்தாகணும், வேற வழி??) :-)) அதெல்லாம் நேரடியாப் பாராட்ட முடியுமா, இப்படித்தான் வஞ்சப்புகழ்ச்சியா...


மான்க்ஸ் - (என்ன பேருங்க இது?) புஸ் ஆனாலும், கதை சொல்லும் நீதி புரிஞ்சுதா இல்லையா? :-))

ஷாஹுல் - நீங்க எப்பவும் என்னை டேமேஜ் ஆக்கீற்திலயே குறியா இருங்க!! தெலுங்குன்னௌ நினச்சாங்களா, நான் பரவால்லைப்பா!!

அக்பர் - வாங்க; நன்றி.

ஹுஸைனம்மா said...

பனங்காட்டான் - வாங்க, நன்றி பாராட்டுக்கு. எனக்கு எது வருதோ அதத்தான் எழுதுறேன்!! ச்மையலும் நானும் பரம எதிரிகள், அப்புறம் எங்க அத எழுதுறது!! :-))

அடுத்த தளம் போறது எப்படின்னு, கொஞ்சம் ஆலோசனை தந்தா நல்லது. (அதுக்காக, லிஃப்டையும், மாடிப்படியையும் காட்டப்படாது!!) :-))

அபுஅஃப்ஸர்- வாங்க; இங்கயும் செண்ட்ரல் கேஸ் டேங்க் உண்டு, ஆனா, பெரிய, புதிய கட்டிடங்களில் மட்டும்தான்!! அப்றம், யாரைப் பாவம்கிறீங்க, என்னையா, அவரையா?

சின்ன அம்மிணிக்கா - ஆமாக்கா, ரிப்பேர் செலவு குறையுமே!!

ராமலக்‌ஷ்மி அக்கா - வாங்க; நன்றிக்கா.

சரவணக்குமார் - வாங்க; ஆமா, படிச்சுடுவார் (கொஞ்சம் லேட்டா). அதுக்காகத்தானே எழுதித் தீத்துக்கிறதே!! ;-))

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - வாங்க; கரெக்டா “தகவல்’ மட்டும் பிடிக்கிறீங்க பாருங்க; எனக்கும் ஆச்சர்யம்தான். யோசிச்சு செஞ்சிருக்காங்க பாருங்களேன்!!

ஷர்ஃபுதீன் - வாங்க; ஸ்மைலி மட்டும்தானா, கருத்து இல்லியா?

ஹரீகா - வாங்க; அதெல்லாம் கண்டுக்காதீங்க. நன்றி.

இமா - உங்களை மாதிரி குறிப்பெல்லாம் கொடுக்க முடியுமா? அதென்னா ஜிஞ்சர் பீர் - எனக்கு இஞ்சி டீதான் தெரியும்!! ;-)

மங்குனி - வாங்க. நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - வாங்க; இதுக்கே பாவம்னா எப்படி?

கீதா - வாங்கப்பா; நன்றி.

விஜி - வாங்க; அன்பா சிரிப்புகூடத் தேவையில்ல, புதுசு வாங்கினா இன்ன விலைன்னு சொன்னாப் போதும், கடகடன்னு வேலை நடக்கும்!! :-))

முகுந்த் அம்மா - வாங்கப்பா; ஆமாப்பா, இங்க மொபைல் கீ-பேட் லாக்ல இருந்தாலும், எமெர்ஜென்ஸி நம்பர்ஸ் டயல் ஆகும்; பயமா இருக்கும், தெரியாம ஆகிடுமோன்னு!!

ஜலீலாக்கா - வாங்க; நன்றிக்கா.

அன்பரசு said...

//ஹுஸைனம்மா said...ச்மையலும் நானும் பரம எதிரிகள், //

பாவம்பா உங்க ரங்ஸ்!!!