Pages

தீ மனிதர்கள்





தலைப்புக் காரணம்: ”Fire men" ன்னா, தீ மனிதர்கள்தானே?

அமீரகத்தில் ஷார்ஜாவில் கடந்த செவ்வாய்க் கிழமை (11ந் தேதி), 'நேஷனல் பெயிண்ட்ஸ்’ நிறுவனத்தின் 4 கிடங்குகளில் நடந்த தீவிபத்துதான் மெயின் நியூஸ் இப்ப. இந்த வருஷத்தில், இதுவரை ஷார்ஜாவில் மட்டுமே நடந்த 17 தீ விபத்துகளில், இதுதான் அமீரகத்திலேயே பெரிய விபத்து. இரண்டு பேர் படுகாயம் தவிர, வேறு அசம்பாவிதம் இல்லை. அதுக்கடுத்த நாளே, (நேற்று) துபாயில் 5 பெரிய கிடங்குகளில் தீ விபத்தாம்!

இப்பத்தான் வெயில் காலம் ஆரம்பிச்சிருக்கு; உச்சகட்ட வெயில் இங்க ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்லதான் இருக்கும்; ஆனா, அதுக்குள்ள தீ விபத்துகளும் ஆரம்பிச்சுடுச்சு. அதுவும் இந்த மாதிரி வேர்ஹவுஸ்களில்தான் அடிக்கடி தீவிபத்துகள் நடக்குது. மிகக் கண்டிப்பான பாதுகாப்புத் திட்டங்களும், அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத திடீர் செக்கிங்களும், அதிகத் தொகை அபராதங்களும், தண்டனைகளும் இங்க நடைமுறையில் இருந்தாலும், தீ விபத்துகள் ஏன் நிறைய நடக்குதுன்னு ஆச்சர்யமாத்தான் இருக்கு.

அதிகாரிகள் இதுக்குக் காரணமா சொல்றது, மக்கள் சரியானபடி விழிப்புணர்வோட இருக்கிறதில்லை; ரொம்ப அலட்சியமா, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருக்கும் இடங்களில் சிகரெட் பிடிப்பது, பழுதுபட்ட மின்சாதனங்கள் பயன்படுத்துவது போன்றவைதான் முக்கியக் காரணமா இருக்காம். இப்பப் புதுசா இன்னொன்னு சொல்றாங்க; பொருளாதாரப் பின்னடைவு காரணமா, வியாபாரம் மந்தமான நிலையில், விற்காத பொருட்கள் நிறையத் தேங்கி விடுவதால், நஷ்டத்தை ஈடுகட்ட, காப்பீடு பெறுவதற்காக, இம்மாதிரி விபத்துகள் செயற்கையா ஏற்படுத்தப்படுவதாகவும் சந்தேகிக்கிறாங்களாம்!!

www.gulfnews.com

ஏன்னா, அமீரகத்திலேயே பெரிய தொழிற்பேட்டையான ஷார்ஜா தொழிற்பேட்டையில், சென்ற மாதத்தில் மட்டும், இரண்டு நாட்களுக்கொருமுறை ஒரு சிறிய தீவிபத்தாவது நடந்திருக்காம்!! அதனால அந்தக் கோணத்துலயும் இப்ப தீ விபத்துகள்ல விசாரணை மேற்கொள்ளப்படுகிறதாம்!

www.khaleejtimes.com
அருகே பணியாளர் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களின் உடைமைகளுடன் வெளியே.

தீ அணைக்கப்பட்டு விட்டாலும், இடத்தைக் குளிர்விக்கும் நடவடிக்கைகள் ராப்பகலா தீயணைப்பு வீரர்களைக் கொண்டு நடந்துகிட்டிருக்காம். சனிக்கிழமை வரை அந்த இடம் (5 நாட்கள்) அவங்க பொறுப்பிலதான் அந்த இடம் இருக்குமாம். அப்படின்னா, எவ்வளவு பெரிய விபத்தா இருக்கும் பாருங்க!!

இம்மாதிரி தீப்பற்றக்கூடிய பொருட்களில் பற்றிய தீயை அணைப்பதுக்குச் சமமாம், அணைத்தபிறகு அதைக் குளிர்விப்பதும்!! மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் காக்கவும், கிடங்கிலும், அருகாமையிலும் மிஞ்சிய பொருட்களைக் காக்கவும் இது மிகவும் முக்கியம். இதற்கு ஒரு நுரையைப் பயன்படுத்துவார்களாம். (செய்திகளில், விமான விபத்தைத் தவிர்க்க இப்படிச் செய்வதைப் பார்த்திருப்போம்).

அதுபோல, திறந்தவெளி தீ விபத்தைவிட, மூடிய இடங்களின் தீ விபத்துகளில் (closed fire) ரொம்பக் கவனமாகத் தீயணைப்பை மேற்கொள்ள வேண்டுமாம். எரிந்துகொண்டிருக்கும் கிடங்கு கட்டிடத்தின் கதவுச் சாவி கையில் இருந்தாலும், படங்களில் ஹீரோ சர்வசாதாரணமாக வீட்டுக்குள் குதித்துப்  போவது போல் போய்விட முடியாது. தீ ஏற்படக் காரணம், எந்த இடத்தில் அதிக பாதிப்பு,  உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, இன்னும் மற்ற விவரங்கள் தெரியாமல் உள்ளே நுழைந்து விடமுடியாது. அதோடு, எரியும் தீ, ஒரு கட்டத்தில், போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்கும்; ஆனால் முழுதும் அணைந்துவிடாது. ஒருவேளை தீப்பற்றக்கூடிய வாயுக்கள் உருவாகியிருக்கலாம். அச்சமயத்தில் கதவையோ, ஜன்னலையோ திறப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல, பெரும்வெடிப்பை ஏற்படுத்தி, பலத்த உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்த வல்லது. தணலில் ஊதினால் நெருப்பு பற்றிக் கொள்ளுமே, அதுபோல!! இதற்கு backdraft, flashover என்று பெயர்.  ஒரு உதாரண வீடியோ இங்க பாருங்க.

இதைத் தவிர்க்க, இவ்விளைவினால் ஆபத்து ஏற்படாமலும், புகையை வெளியேற்றவும், முதலில் கூரைப் பகுதியிலோ அல்லது அதிக ஆபத்து ஏற்படாதபடி ஒரு இடத்திலோ ஒரு திறப்பு ஏற்படுத்திக் கொள்வார்களாம். சில சமயம் வெப்பத்தைத் தாங்கமுடியாமல், ஜன்னலோ, கதவோ, கூரையோ தானே வெடித்தும் இவ்விளைவுகள் ஏற்படலாம்.

 www.khaleejtimes.com

இப்படிப்பட்ட உயிர்காக்கும் துறையில் வேலை பார்க்கும் தீயணைப்பு வீரர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மருத்துவர்களுக்குச் சமமானவர்கள்.  பல சமயங்களில், பணியில் உயிரிழந்தோரும் உண்டு. தியாக மனப்பான்மையுடன் இத்துறையில் பணியாற்றவும் ஒரு தைரியம் வேண்டும்.

அமீரகத்தைப் பொறுத்தவரை, தீயணைப்புத் துறை, அதிநவீன உபகரணங்களுடன் சிறந்த முறையில் செயலாற்றுகிறது.  சில மாதங்கள் முன் அபுதாபியில் சில குடியிருப்புக் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சில நாடகள் வரை தங்குமிடம்கூட ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள். இங்கிருப்பதனால் ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது என்றாலும், நம் நாடும் இதுபோல எப்போ ஆகும்கிற ஒரு ஏக்கம்தான் வருது! எங்கேயானாலும், வருமுன் காப்போம் என்பதற்கேற்ப நம்மைத் தற்காத்துக் கொள்வதே சாலச் சிறந்தது, இல்லையா!!


Post Comment

36 comments:

நட்புடன் ஜமால் said...

படங்கள் பீதியை கிளப்புதுங்க

விழிப்புணர்வு நம்மகிட்ட இருக்கனும் - சரியா சொன்னீங்க.

-----------

தலைப்பு - ஹி ஹி ஹி

ரிஷபன் said...

இங்கிருப்பதனால் ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது என்றாலும், நம் நாடும் இதுபோல எப்போ ஆகும்கிற ஒரு ஏக்கம்தான் வருது!
இங்கே ஒரு சமயம் தீயணைப்பு வண்டி வந்து உடனேயே திரும்பிப் போச்சு.. கேட்டா ‘தண்ணி’ ரொப்ப மறந்துட்டாங்களாம்..

Ananya Mahadevan said...

//பொருளாதாரப் பின்னடைவு காரணமா, வியாபாரம் மந்தமான நிலையில், விற்காத பொருட்கள் நிறையத் தேங்கி விடுவதால், நஷ்டத்தை ஈடுகட்ட, காப்பீடு பெறுவதற்காக, இம்மாதிரி விபத்துகள் செயற்கையா ஏற்படுத்தப்படுவதாகவும் சந்தேகிக்கிறார்கலாம்// விசேஷம். அருமையான ரைட்டப்! 2008 மே மாசம் இதே மாதிரி ஒரு விபத்தை மினா வேர்ஹவுஸில் பார்த்தேன். எங்க ஆஃபீஸிலிக்கு அடுத்த தெருவில் தான். ஏராளமான புகை, தீ மனிதர்கள். கார்னிஷ் முழுதும் கருப்பா மேகம் சூழ்ந்துடுச்சுன்னா பாருங்களேன்!அவ்ளோ கருப்பு புகை! இப்போ நினைச்சாலும் பயம்மா இருக்கும்!

அப்துல்மாலிக் said...

//பொருளாதாரப் பின்னடைவு காரணமா, வியாபாரம் மந்தமான நிலையில், விற்காத பொருட்கள் நிறையத் தேங்கி விடுவதால், நஷ்டத்தை ஈடுகட்ட, காப்பீடு பெறுவதற்காக,//

எப்டியெல்லாம் திங்க் பண்றாங்கையா

பாராட்டத்தக்க பதிவு

முகுந்த்; Amma said...

உலகின் அனைத்து மூலையில் இருக்கும் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் ஒரு ராயல் சல்லுட்.

நல்ல பதிவு ஹுஸைனம்மா

Starjan (ஸ்டார்ஜன்) said...

தீவிபத்தை நினைக்கும்போது மனம் ரொம்பவே வருந்துகிறது. நீங்கள் சொன்னமாதிரி இந்தமாதிரி தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக மிக அவசியம். எல்லோரையும் இறைவன் காப்பாற்றுவானாக.ஆமீன்.

அபி அப்பா said...

ஆஹா நான் 2001,2002 ஆகிய வருஷத்திலே நேஷனல் பெயிண்ட்ஸ் பக்கத்திலே கூப்பிடு தூரத்திலே தான் இருந்தேன். ஆஹா பத்திகிச்சா:-(((

சைவகொத்துப்பரோட்டா said...

விரிவான தகவல்கள்!! பகிர்வுக்கு நன்றி.

மின்மினி RS said...

யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லையே.. அல்லாஹ் காப்பாற்றுவானாக. ஆமீன்.

சிநேகிதன் அக்பர் said...

//எங்கேயானாலும், வருமுன் காப்போம் என்பதற்கேற்ப நம்மைத் தற்காத்துக் கொள்வதே சாலச் சிறந்தது, இல்லையா!!//

கண்டிப்பா. அருமையான பகிர்வு.

நாடோடி said...

தெரியாத‌ த‌க‌வ‌ல்க‌ள்... ப‌கிர்வுக்கு ந‌ன்றி..

கோமதி அரசு said...

தீயைப் பற்றி,தீ மனிதர்கள்ப் பற்றி,
தீயை வேண்டுமென்றே பற்ற வைத்து நஷ்டத்தை ஈடுகட்ட நினைக்கும் மனிதர்கள் என எவ்வளவு செய்திகள்!

பகிர்வுக்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு ஹுசைனம்மா.

பல விசயங்களை விரிவாக விவரித்துள்ளீர்கள்.

Jaleela Kamal said...

ரொம்ப மனவருத்தம்.இங்கு ஏற்கனவே அனல் ஆரம்பித்து விட்டது.
இப்படி வேறு எங்கு பார்த்தாலும் தீ விபத்து இப்ப இங்கு நடக்கிறது/

Thamiz Priyan said...

நேஷனல் பெயிண்ட் பக்கத்துல தான் எங்க கேம்ப் இருந்தது.. விபத்தின் படங்களைப் பார்த்த போது அதன் தீவிரம் தெரிந்தது.. அதிகப்படியான விபத்துக்களுக்கு மின்கசிவே காரணமாக அமைகின்றன.. :(

மனிதன் இதில் கூட தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டான் போல..:( எங்கள் ஊர் பஞ்சு மில்களில் இது போல் தான் கழிவுப் பஞ்சை போட்டு தீப்பிடித்தது போல் காட்டி இன்சூரன்ஸ் வாங்குவார்கள்.

Madumitha said...

unsung heroes பற்றி
எழுதியிருக்கிறிர்கள்
பாராட்டுக்கள்.

malar said...

நல்ல பதிவு .....

ஜெய்லானி said...

தீ ஆரம்பிச்ச உடனே பக்கத்தில இருந்த எல்லோரையும் வெளியேத்தியதும் இல்லாமல். ரோடையும் பிளாக் பண்ணிட்டாங்க. கெமிக்கல் புகை உடலுக்கு கேடுன்னு. அது வரையில் அவங்களை பாராட்டியே ஆகனும்.

அதே நாளில் வேறு இரண்டு இடத்திலும் தீ விபத்து. மின்சார ஓவர்லோட் பிரச்சனை

ஒரு பதிவாவே போட்டுட்டீங்க. :-)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கேக்கவே கஷ்டமா இருக்கு... என்னோட தோழி ஒருத்தங்க வீட்டுக்கு அந்த குடி இருப்புக்கு நான் போய் இருக்கேன். ரெம்ப ஜன சந்தடி உள்ள இடம்

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பதிவுங்க.

நேஷனல் பெயிண்டுக்கு பக்கத்துல தான் நான் இருக்கேன். :)

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு ஹுஸைனம்மா.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

மனோ சாமிநாதன் said...

நல்ல விளக்கமான பதிவு.
இந்த ஒன்று மட்டும் என்றில்லை, நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும்போதும் அனுபவிக்கும்போதும் நம்ம இந்தியாவில் எப்போது இத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்ற ஏக்கம் எத்தனையோ வருடங்களாய் இருந்து கொண்டேதான் இருக்கிறது!

Anonymous said...

உங்களுக்குத்தெரியுமா,
நீங்க யாரை ஆபத்துல நம்புவீங்கன்னு ஒரு சர்வே எடுத்ததில் அப்பா, அம்மா, டாக்டர், கணவன் மனைவியை விட தீயணைப்பு வீரர்களைத்தான் எல்லாரும் நம்பறதா சொல்லியிருக்காங்க

இப்னு அப்துல் ரஜாக் said...

பாராட்டத்தக்க பதிவு

SUFFIX said...

//பொருளாதாரப் பின்னடைவு காரணமா, வியாபாரம் மந்தமான நிலையில், விற்காத பொருட்கள் நிறையத் தேங்கி விடுவதால், நஷ்டத்தை ஈடுகட்ட, காப்பீடு பெறுவதற்காக,//

இப்படிப்பட்ட கால கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எல்லாம் வியாபார நோக்கு என்றாகி விட்டது, பரிதாபப்படுவதா, வியப்படைவதா, ஒன்றும் புரியவில்லை!!

நாஸியா said...

pona maasam kooda andha pakkam ippadi nadandhadhu.. too bad

ஷர்புதீன் said...

உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

சுந்தரா said...

நல்ல பதிவு ஹுசைனம்மா.
அங்கே கிளம்பிய கரும்புகை இங்கே துபாயிலிருந்துகூடத் தெரிஞ்சது.

நிஜமாகவே பாராட்டப்படவேண்டியவர்கள்தான் இங்குள்ள தீயணைப்புப்படையினர்.

நம்ம ஊர்ல வண்டிவந்து சேர்றதுக்குள்ள, எரிய ஆரம்பிச்சதெல்லாம் சாம்பலாகிப்போயிடும்.

ராமலக்ஷ்மி said...

ரொம்ப நல்ல பதிவு ஹுசைனம்மா. சமீபத்தில் பெங்களூர் கார்ல்டன் டவரில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அந்த கட்டிட உரிமையாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யாது விட்டதே [அனுமதி தந்த அரசு:( ?] காரணமெனத் தெரிய வந்தது. இப்போது அரசு பெங்களூர் எங்கும் சோதனை செய்யவும் சட்டங்களை கடுமையாக்கவும் செய்துள்ளதெனினும் பலியான 9 உயிர்களுக்கு என்ன பதில்? அவரது குடும்பங்களுக்கு எது தரும் ஆறுதல்:(?

எம் அப்துல் காதர் said...

அருமையான பதிவு ஹுசைனம்மா.

அன்புத்தோழன் said...

You deserved to be highly appreciated for writing such as this... These unsung heroes are certainly the real heroes forever... But still our fire service depts has to be well equipped with modern equipments to ease fire fighter's job...

Video demo excellent...

In the end very useful post....

Overall 4/5 husainamma...

ஸாதிகா said...

நல்ல பதிவு,விழிப்புணர்வும் கூட .பாராட்டுக்கள் ஹுசைனம்மா.

ஹுஸைனம்மா said...

”தேவதை”யின் நவநீதன் சார்,

உங்கள் இ-மெயில் ஐடியை என் மெயிலுக்கு அனுப்ப முடியுமா? (hussainamma@gmail.com)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சகோதரி ஹூஸைனம்மா, அருமையான பதிவு.

closed fire, backdraft, flashove போன்ற தொழில்நுட்ப வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.

//இப்பப் புதுசா இன்னொன்னு சொல்றாங்க; பொருளாதாரப் பின்னடைவு காரணமா, வியாபாரம் மந்தமான நிலையில், விற்காத பொருட்கள் நிறையத் தேங்கி விடுவதால், நஷ்டத்தை ஈடுகட்ட, காப்பீடு பெறுவதற்காக, இம்மாதிரி விபத்துகள் செயற்கையா ஏற்படுத்தப்படுவதாகவும் சந்தேகிக்கிறாங்களாம்!! //

நானும் இந்த விஷயத்தை கேட்டு ஆச்சர்யப்பட்டேன். வருத்தத்தோடு வந்து என் அறை நண்பரிடம் தீ பிடித்த விஷயத்தை சொன்ன போது, ஆமாம் இன்ஷூரன்ஸில் கிளைம் செய்வதற்காக அவர்களே பற்ற வைத்திருப்பார்கள் என்று சொன்னார். இறைவன் எல்லாம் அறிந்தவன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறது.

ஹுஸைனம்மா said...

வருகை புரிந்து, கருத்து தெரிவித்து, பாராட்டுகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி!!

(Better late than never என்ற அடிப்படையில் தாமதமான பதிலை ஏற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்!!)