Pages

தோள் கொடுக்கும் தோழன்




என் பெற்றோருக்கு இந்த வருடத்துடன் திருமணமாகி  நாற்பது வருடம் நிறைகிறது. சில தினங்களுக்கு முன் இது ஞாபகம் வந்தபோது, 40 வருடங்கள் என்ற காலக்கணக்கு கொஞ்சம் பிரமிப்பூட்டியது.

அவர்களை அருகிருந்து பார்த்தவள் என்ற வகையில் யோசித்துப் பார்த்தால், எல்லா குடும்பங்களையும் போலவே, கருத்து வேறுபாடே இல்லாதவர்கள் என்று சொல்லமுடியாது. கல்யாணமான ஐந்தாறு வருடங்களிலிருந்து, கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் என் தந்தை வளைகுடா நாடுகளில் வேலை செய்ய, ஊரில் இருந்து குடும்பத்தைக் கவனித்தது என் தாய்.  இருவருக்குமே உரிய பொறுப்புகளை எந்தக் குறைவுமில்லாமல் செம்மையாக நிறைவு செய்தார்கள். எல்லா மக்களும் தத்தம் கூட்டினில் இருக்க,  ரிடையர்மெண்ட் வயதில் இப்போது தனிக்குடித்தனம் இருக்கிறார்கள்.

முப்பது வருடங்கள் கடமைகள் நிமித்தம் பிரிந்திருந்தாலும், அவர்களிடையே உள்ள புரிதல்கள் வியக்க வைக்கும். துல்லியமாக அடுத்தவர் நினைப்பதையே (அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கமுடிவதையே) தன் முடிவாகவும் எடுத்து செயலாற்றியிருகிறார்கள் என்பதையே என் திருமண வாழ்விற்குப் பிறகே புரிந்துகொள்ள முடிந்தது என்னால்!!

சென்ற வருடம், என் கடைசித் தங்கை நிறைமாசமாக இருக்கும்போது, என் வாப்பா பணி நிமித்தம் வேறு ஊரில் இருக்க, பிரசவ சமயத்தில் நிச்சயம் நீங்கள் வந்துவிடவேண்டும் என்று உம்மா சொல்லியிருந்தார். என் தங்கையோ, “உன் வாப்பா, தங்கைகள், தம்பிகள் என்று உன் குடும்பம் முழுவதும் உன் சப்போர்ட்டுக்கு இங்கே இருக்கத்தானே செய்கிறார்கள். அப்புறம் ஏன் வாப்பாவையும் தொந்தரவு பண்ற? யார் வந்தாலும் பிள்ளை பெறப்போவது நாந்தானே?” என்று சொல்ல, அதுக்கு என் அம்மா, “நீதான் பிள்ளை பெறப்போறன்னா, உன் புருஷனை அபுதாபியிலருந்து எதுக்கு வரச்சொன்ன? அதுவும் உன்னைப் பெத்தவ நான் உன் சப்போர்ட்டுக்கு இருக்கும்போதே?” என்று சொன்னாராம்.

உண்மைதானே? மகிழ்வான சமயங்களைவிட அதிகமாக, பிரச்னைகள், உடல்நலக்குறைவுகள் என்று வரும்போது ஒரு பெண் சாய்ந்துகொள்ளத் தேடுவது தன் கணவனின் தோளையே!! கணவனே நட்பாக அமையப் பெற்ற யாருக்கும் இதில் மாற்றுக்கருத்து இருக்காது. அவ்வாறான ஒரு கணவனும் தேடுவது மனைவியின் தோளையே!! இதில் ஒப்புக்கொள்ள தயக்கம் இருக்காது.

இது பெண்ணீயம் (புரியாமல்) பேசுபவர்களுக்கு இகழ்வாகத் தோன்றலாம். உடலால் மட்டுமல்லாமல், உணர்வுகளாலும் தனக்கென்று சொந்தமானவரின் தோளில், அதேபோலவே அவருக்குச் சொந்தமான மனைவி  சாய்வதில், ஆறுதல் தேடுவதில் தவறென்ன? அதுபோல், குழப்பமான சந்தர்ப்பங்களில், முடிவுகளை எடுக்கவும், புரிந்துணர்வுள்ள கணவன் தன் மனைவியை அல்லது மனைவி தன் கணவனை நாடுவார்.  அவருக்கும், தன் குடும்பத்திற்கும் எது நல்லது என்பதைப் பெண்ணின் பெற்றோர்போலவே கணவரும் அறிவாரே!! தன்  குடும்பத்தை  எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதும் பல பெண்கள், இதையும் இழிவாகக் கருதுவதில்லை.

வளைகுடா நாடுகளில் வேலைக்காக வந்து தனியாக இருக்கும் ஆண்களும் தற்காலங்களில் ‘கூழோ, கஞ்சியோ சேர்ந்தே இருப்போம்’ என்று வேலையை விட்டுவிட்டு இந்தியா செல்வதும் துன்பமான தருணங்களில்  துணையின் ஆதரவு வேண்டிதானே!! தமக்கென  ஒருவர் இருக்கிறார் என்பதே மலையளவு துன்பமானாலும் கடந்துவர மனதைரியம் கொடுக்கும்.

அதுபோலவே, இங்கே குடும்ப சகிதமாக இருப்பவர்களும் குழந்தைகள் பத்தாம் வகுப்பு வரும்போது, தரமான கல்வி வேண்டி மனைவி, குழந்தைகளை மட்டும் ஊருக்கு அனுப்பிவைத்து வந்தனர்; ஆனால்,  தற்போது பெரும்பாலும் பிள்ளைகளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு பெற்றோர் இங்கு சேர்ந்தே இருக்கின்றனர் இங்கு. இதற்குக் காரணம், இந்தச் சமயத்தில் தம்பதிகளிடையே ஒரு நட்பு ரீதியான நெருக்கம் வந்திருக்கும். அதை இழக்க மனமின்றி, நட்பைப் பிரிய மனமின்றியே இவ்வாறு முடிவெடுக்க நேர்கிறது. என் மகன் விஷயத்தில் நானும் இப்போதே குழம்ப ஆரம்பித்துவிட்டேன், அவரைப் பிரிந்து எப்படிச் செல்வது என்று!!

படிக்கும் காலத்தில், என் தந்தை ஊருக்கு வந்தால், வீடு உறவினர்கள், நண்பர்கள் வருகையால் திருமண வீடு போல களை கட்டி பரபரப்பாக இருக்கும். அதனால், அவ்வாறு வரும் சமயம் எனக்குப் பரீட்சைகள் ஏதுமிருந்தால், ”வாப்பா அடுத்த மாசம் ஊருக்கு வரக்கூடாதா?” என்று நினைத்து அதை என் உம்மாவிடமும் அலுத்துச் சொன்னதுண்டு, அவர்களின் உணர்வுகளை அறியாமல். அவர்களுக்குத் தனிமை கிட்டாததை நினைத்துப் பார்க்காமல், சுயநலமாக இருந்ததை இப்போ நினைத்துப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.  அப்போவெல்லாம் இப்படி மெல்லிய உணர்வுகளையும் விவரிக்கும் கதைகளோ, புத்தகங்களோ (கிடைப்பது) இல்லையே?

இப்போது கிடைத்திருக்கும் தனிக்குடித்தன வாய்ப்பு அவர்களுக்கு இனிக்கவில்லை; பேரக்குழந்தைகளோடு கொஞ்சிக் கழிக்க வேண்டிய பொழுதாக அமைய வேண்டியது, தனிமையோடு போராடிக் கழிக்க வேண்டியுள்ளதென வருந்துகின்றனர். இப்பொழுதும் சுயநலத்தோடு, என் குடும்ப வாழ்வைப் பெரிதாக எண்ணி நான் இங்கே!! ஒரு வகையான கையாலாகாத்தனமான வெறுமை சூழ்கிறது இதை நினைத்தால். எனினும், அவர்கள் இளவயதில் பிரிந்திருந்ததலின் சங்கடங்களை அனுபவித்ததால்,  என்னையும் புரிந்துகொள்வார்கள் என்ற சமாதானத்தை எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

அப்புறம், இந்த வருடத் திருமண நாளை எப்படிக் கொண்டாடினாங்களாம்னு கேக்குறீங்களா? மருத்துவமனையில் ‘எக்ஸிக்யூட்டிவ் ஹெல்த் செக்-அப்’ செஞ்சு!! அதுவும் அவசியம்தானே, என்னச் சொல்றீங்க?

Post Comment

65 comments:

Unknown said...

காலம் மெல்ல காடுகளை தனித்தனி மரங்களாக மாற்றுகிறது ..

கண்ணா.. said...

நானும் என் அப்பா-அம்மாவின் 60ம் கல்யாணத்தை சிறப்பாக முடித்து இன்று காலைதான் ஊரிலிருந்து திரும்பினேன்.

ஆமாம். நீங்கள் சொல்வது உண்மைதான். இப்போதுதான் அவர்கள் உறவின் பல விஷயங்கள் புரிய முடிகிறது.

நம்மால் அவர்களை போல இருக்க முடியுமா என யோசிக்க ஆரம்பித்தால் ஆச்சர்யம்தான் விஞ்சுகிறது.

நல்ல இடுகை

:)

கண்ணா.. said...

சொல்ல மறந்து விட்டேன். உங்கள் பெற்றோருக்கு என்னுடைய திருமண நாள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்

CS. Mohan Kumar said...

அருமையான பதிவு. உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் + வணக்கங்கள்

Menaga Sathia said...

நல்ல பதிவு!! பெற்றோருக்கு திருமண வாழ்த்துக்கள்....

எல் கே said...

//இது பெண்ணீயம் (புரியாமல்) பேசுபவர்களுக்கு இகழ்வாகத் தோன்றலாம். உடலால் மட்டுமல்லாமல், உணர்வுகளாலும் தனக்கென்று சொந்தமானவரின் தோளில், அதேபோலவே அவருக்குச் சொந்தமான மனைவி சாய்வதில், ஆறுதல் தேடுவதில் தவறென்ன? அதுபோல், குழப்பமான சந்தர்ப்பங்களில், முடிவுகளை எடுக்கவும், புரிந்துணர்வுள்ள கணவன் தன் மனைவியை அல்லது மனைவி தன் கணவனை நாடுவார். அவருக்கும், தன் குடும்பத்திற்கும் எது நல்லது என்பதைப் பெண்ணின் பெற்றோர்போலவே கணவரும் அறிவாரே!! தன் குடும்பத்தை எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதும் பல பெண்கள், இதையும் இழிவாகக் கருதுவதில்லை.//


வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்

எல் கே said...

உங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் (போனவாரம்தான??)

சாந்தி மாரியப்பன் said...

உங்க அப்பா,அம்மாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை என் சார்பாக தெரிவியுங்கள்.அப்புறம் அந்த ஹெல்த் செக் அப் செஞ்சுக்கிட வயசாறவரை காத்திருக்க அவசியம் இல்லை. முப்பதஞ்சு வயசில் இருந்தே வருஷாவருசம் செஞ்சுக்க ஆரம்பிக்கிறது நல்லது.

pudugaithendral said...

அழகா சொல்லியிருக்கீங்க ஹுசைனம்மா,

எனக்கு சாய்ந்துகொள்ளும் தோள் கண்டிப்பா அயித்தான் தான். அவங்க ஊருல இருக்காங்கன்னாலே தெம்பா இருக்கும். எங்க அப்பாவும் டூருக்கு போகும் வேலைதான் அம்மா,அப்பாவின் தனிமை பத்தி ரொம்பவே யோசித்து அவர்களுக்காக வரண்டாவில் தனியாக படுக்க ஆரம்பித்தேன். அடுத்த நாள் அம்மா என்னைக் கட்டிக்கொண்டது இப்போது ஞாபகம் இருக்கிறது.

வயதானால் அவர்களுக்குத் தனிமை இருக்கக்கூடாது என்பதல்ல. எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவு. நீங்கள் சொல்வது போல் எங்க அப்பா அம்மாவும் இப்போ தனிக்குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்காங்க. தம்பி சிங்கையில், நான் ஹைதையில். பாவமா இருக்கு.

தினமும் போன் போட்டு விசாரிப்பேன். இந்த மாதம் என் பெற்றோரின் திருமணநாள். 38 வருடங்கள் முடியப்போகிறது.

தராசு said...

உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

இன்னா, ஹுஸைனம்மா, ஒரே ஃபீலிங்க்ஸ் பதிவா போட்டுட்டீங்க.

ஆனா, தாம்பத்தியத்தை விளக்க வார்த்தைகள் இல்லை. அதுவும் முதிர்வயதில்.

அப்துல்மாலிக் said...

நானும் இதை உணர்ந்தேன், என் வாப்பா மக்காவில் இறந்தவுடன் உம்மாவை தனியே ஊருக்கு அழைத்துவந்ததும். அரசாங்க ஊழியர் ஆதலால் ஒரு நாள் (வேலைநிமித்தம் நீங்களாக) பிரிந்தது இல்லை. எவ்வளவுதான் நாம் கவனித்துக்கொண்டாலும் வாப்பாவின் கவனிப்பு போல் இல்லைஎன்பதை அறியமுடிகிறது. நெஞ்சு கணக்கிறது. பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ என் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. அழகாய் சொன்னீர்கள். ஆமோதிக்கிறேன் அப்படியே. உங்கள் பெற்றோருக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

கோமதி அரசு said...

தோள் கொடுக்கும் தோழன் எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!

நெகிழ்ந்து போனேன்.

முதுமையில் தனிக் குடித்தனம் இனிப்பதில்லை.உண்மை,உண்மை.

உங்கள் பெற்றோருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காலம் புரிந்து கொள்வதை தருகிறது.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

நல்ல பதிவு! நன்றி ஹூசைனம்மா!

Vidhya Chandrasekaran said...

வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்:)

ரிஷபன் said...

உங்கள் முழு பதிவையும் முழு மனதாக ஏற்கிறேன்.. நாம் பல விஷயங்களில் குழப்பமாகி எதையோ யாரையோ பின்பற்ற முனைந்து எதை இழந்து நிற்கிறோம் என்று கூடப் புரியாமல் இருக்கிறோம்.. நல்ல பதிவு..

ஜெய்லானி said...

ஒவ்வொரு வரியும் உண்மைதான் மாற்றுக்கருத்து இல்லை...
உணர்வுபூர்வமாக எழுதி இருக்கீங்க..
அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்..

Jaleela Kamal said...

எல்லாம் நிஜம் ஹுஸைனாம்மா? இத் படிக்கும் போது எங்க உம்மா வாப்பா ஞாபகம் வந்து வருது, முன்பு ஒன்றாக இருந்து கொமர்களை கரை சேர்க்க பல வருடம் பிரிந்து இருந்து. இப்ப தான் ஒன்றாக இருக்கிறார்கள்,

யார் இருந்தாலும் தோள் கொடுக்கும் தோழன் கணவ்ன் இருந்தால் யானை பலம்./

உங்கள் பெற்றொர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகக்ள்.

// அபு அப்ஸர் எழுதியது படித்து மனவருத்தமாக இருக்கு//

சிநேகிதன் அக்பர் said...

//காலம் மெல்ல காடுகளை தனித்தனி மரங்களாக மாற்றுகிறது ..//

ஒரு வரியில் ஆயிரம் அர்த்தங்கள். நன்றி கே. ஆர். பி.

பெற்றோர்க்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஹுஸைனம்மா.

நீங்கள் எழுதிய அனைத்தும் உண்மை. அருகிலிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் துணை, துணைதான்.

kavisiva said...

சத்தியமான வார்த்தைகள் ஹுசைனம்மா! பணம் சம்பாதிக்கிறோம் என்று பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். பெற்றோருக்கு தேவையானதை மனமிருந்தும் கொடுக்க முடியாமலிருக்கிறோம்.

Madumitha said...

உங்கள் பெற்றோருக்கு திருமண நாள்
வாழ்த்துக்கள்.
ஆம்.
சாய்ந்து கொள்ள ஒரு தோள்
இருப்பதாலேயே நாம் பல
கஷ்டங்களைத் தாண்டி வருகிறோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதிவு ஹூசைனம்மா., சிந்திக்கவேண்டிய விசயம். துணையோட அருமை பிரிவில்தான் தெரியும். நல்ல கருத்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நல்ல பதிவு! ஒவ்வொரு வரியிலும் அனுபவம் வைரமாக மின்னுகிறது!

அன்புடன் மலிக்கா said...

வளைகுடா நாடுகளில் வேலைக்காக வந்து தனியாக இருக்கும் ஆண்களும் தற்காலங்களில் ‘கூழோ, கஞ்சியோ சேர்ந்தே இருப்போம்’ என்று வேலையை விட்டுவிட்டு இந்தியா செல்வதும் துன்பமான தருணங்களில் துணையின் ஆதரவு வேண்டிதானே!! தமக்கென ஒருவர் இருக்கிறார் என்பதே மலையளவு துன்பமானாலும் கடந்துவர மனதைரியம் கொடுக்கும்.//

நிஜமான உண்மை ஹுசைன்னமா.
சேர்ந்திருக்கும் பாக்கியத்தை இறைவன் எந்நாளும் தந்திடவேண்டும்.

இறப்பைதவிர மற்ற தருணங்களில் பிரிவுவென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்னைப்பொருத்தமட்டில்.அதுவும் இறைவன் நாடியபடிதானே நடக்கும்..

எந்தனைகாலம் வாழ்கிறோம் வாழ இருக்கிறோம் என்பதைவிட எந்நாளும் இணைந்தே இருக்கவேண்டும் என்பதே என் ஆவல்.....

உங்கள் பெற்றோருக்கு என்னுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். அப்படியே எங்களுக்காவும் துஆ செய்யச்சொல்லுங்கள்.

செந்தமிழ் செல்வி said...

ஹுசைனம்மா,
அப்பா அம்மாவுக்கு எனது திருமணநாள் வாழ்த்துக்கள்! இந்த மாதம் 50- வது திரும்ணநாளைக் கொண்டாடப் போகும் என் பொற்றோரைப் பற்றி எழுத வேண்டும் என இன்று முழுவது யோசித்துக் கொண்டே இருந்தேன். இங்கே நீங்கள்....

தமிழ் உதயம் said...

வாழ்க்கை தந்து பாடத்தை அழகாக பகிர்ந்து கொண்டீர்கள்.

திருமணநாள் வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

எங்களது துவாக்களும்!

ஏனோ வேறு ஒன்றையும் இங்கு சொல்ல தோனலை
( தோன்றுவதையும் கூட )

Mahi said...

உணர்வுகளை அழகா எழுத்தில் வெளிப்படுத்திருக்கீங்க ஹூசைனம்மா! உங்க அப்பா அம்மாவிற்கு என் வாழ்த்துக்கள்.

/தனிமையோடு போராடிக் கழிக்க வேண்டியுள்ளதென வருந்துகின்றனர். இப்பொழுதும் சுயநலத்தோடு, என் குடும்ப வாழ்வைப் பெரிதாக எண்ணி நான் இங்கே!! ஒரு வகையான கையாலாகாத்தனமான வெறுமை சூழ்கிறது இதை நினைத்தால்./ நிஜம்!நானும் இப்படியே தான் நினைக்கிறேன்..நினைத்த நேரம் ஊருக்குப் போக முடியாமல், விசா,கணவரின் ஆபீஸ்னு ஆயிரத்தெட்டு பிக்கல் பிடுங்கல்..என்னமோ போங்க! என்னையும் புரிந்துகொள்வார்கள் என்ற சமாதானத்தையே நானும் சொல்லிக்கொள்கிறேன்! :)

beer mohamed said...

விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ
http://athiradenews.blogspot.com/

Prathap Kumar S. said...

உங்க பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்...

ஹேமா said...

பெற்றோரிடம் அன்பைச் சொல்லி ஆசீர்வாதம் கேட்டபடி !
பதிவாய் நிலைக்கவேண்டிய
பதிவு தோழி.

Anonymous said...

மறுபடியும் எனக்கு பிடிச்சமாதிரி ஒரு பதிவு ஹுசைனம்மா.

//உடல்நலக்குறைவுகள் என்று வரும்போது ஒரு பெண் சாய்ந்துகொள்ளத் தேடுவது தன் கணவனின் தோளையே!! கணவனே நட்பாக அமையப் பெற்ற யாருக்கும் இதில் மாற்றுக்கருத்து இருக்காது. அவ்வாறான ஒரு கணவனும் தேடுவது மனைவியின் தோளையே!! இதில் ஒப்புக்கொள்ள தயக்கம் இருக்காது. //

நிச்சயம். அதுவும் குடும்பத்தினரை விட்டு வெளிநாட்டில் இருக்கும்போது இன்னும் இது அதிகம்.

GEETHA ACHAL said...

உண்மையான வரிகள்...நானும் உங்கள் நிலைமை தான் போல...என்னுடைய தந்தையும் சவுதியில் தான் 20 வருடங்கள் இருந்தார்...இப்பொழுது இந்தியாவில் இருக்கின்றார்...நான் இங்கு இருக்கின்றேன்...தங்கை MD படிப்பிற்காக வேறு இடத்தில் இருக்கின்றாள்...தம்பி வேளையாக இருக்கின்றான்...இப்படி ஒவ்வொருவரும்...ஒரு நேரம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் நடக்க தான் வருடங்கள் ஆகின்றது...

GEETHA ACHAL said...

ஆஹா...சொல்லவந்ததை சொல்லாமல்...உங்களுடைய பெற்றோருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்...எங்களுடைய பெற்றோரும் போன வாரம் தான் தங்களுடைய 30வது திருமண நாளினை கொண்டாடினாங்க...நன்றி...

நிஜாம் கான் said...

நன்றாக உணர்த்தியிருக்கிறீர்கள் ஹூசைனம்மா! கூட்டுக்குடும்பம் தான் கடைசி வரை சிறந்தது என்பதை அனைவரும் நன்கு உணரட்டும். அதுவும் உங்களைப் போல அயல் நாடுகளில் இருப்பவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும்...,

அ.முத்து பிரகாஷ் said...

ஏதேனும் சொல்ல நினைக்கிறேன் ... முடியவில்லை ... வருகிறேன் ஹுசைன் அம்மா !

நாடோடி said...

உங்க‌ள் பெற்றோரை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை வ‌ண‌ங்குகிறேன்... வெளி நாட்டு வாழ்க்கை சொல்வ‌து ந‌ல்லா இருக்கு அனுப‌விக்கிற‌வ‌னுக்கு தான் தெரியும் எத்த‌னை கொடுமை என்று..

Chitra said...

இப்போது கிடைத்திருக்கும் தனிக்குடித்தன வாய்ப்பு அவர்களுக்கு இனிக்கவில்லை; பேரக்குழந்தைகளோடு கொஞ்சிக் கழிக்க வேண்டிய பொழுதாக அமைய வேண்டியது, தனிமையோடு போராடிக் கழிக்க வேண்டியுள்ளதென வருந்துகின்றனர். இப்பொழுதும் சுயநலத்தோடு, என் குடும்ப வாழ்வைப் பெரிதாக எண்ணி நான் இங்கே!! ஒரு வகையான கையாலாகாத்தனமான வெறுமை சூழ்கிறது இதை நினைத்தால். எனினும், அவர்கள் இளவயதில் பிரிந்திருந்ததலின் சங்கடங்களை அனுபவித்ததால், என்னையும் புரிந்துகொள்வார்கள் என்ற சமாதானத்தை எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.


........ உங்கள் ஆதங்கத்தொனி, இந்த வரிகளில் தெரியாமல் இல்லை.
........ Convey our anniversary wishes to your parents. :-)

Riyas said...

என்ன சொல்வதென்று புரியவில்லை.

நீங்கள் சொன்ன ஒவ்வொரு விடயங்களும் யதார்த்த வாழ்வின் உண்மைகள்.

உங்கள் பெற்றோர் நலமாக வாழ இறைவன் துனை புரியட்டும்.

Riyas said...

எனது தந்தையும் 10 வருடங்கள் சவூதியில் வேலை பார்த்தவர்.எங்களுக்காகவேண்டியே கஷ்டப்பட்ட அவர் நான் அபுதாபி வந்து 15 நாட்களுக்குள் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்... கடைசி தருணத்தில் அவரின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை. உங்களின் இந்த பதிவை பார்க்கும் போது அவரின் ஞாபகங்களினால் கண்கள் கொஞ்சம் நனையவே செய்தது.. நான் பிளாக் எழுத ஆரம்பித்து முதலாவதாக எழுதியது அவரின் நினைவுகளைத்தான் "சமர்ப்பணம்" என்ற இடுகையில் நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள். riyasdreams.blogspot.com

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரி ஹுசைனம்மா,
மனதின் உணர்வுகளை மிக அழகாக எழுத்தில் கொண்டு வந்திருக்கின்றீர்கள். உங்களின் இந்த பதிவை பெண்ணியம் பேசுகின்றவர்கள் கண்டிப்பாய் படிக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கான படிப்பினைகள் இந்த பதிவு முழுவதும் நிரம்பி இருக்கின்றன.
/* இது பெண்ணீயம் (புரியாமல்) பேசுபவர்களுக்கு இகழ்வாகத் தோன்றலாம். */
ஒற்றை வரிகளில் இன்றைய பெண்ணியம் யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது என்பதை மிக அழகாக விளக்கி விட்டீர்கள்.

M. Azard (ADrockz) said...

//உண்மைதானே? மகிழ்வான சமயங்களைவிட அதிகமாக, பிரச்னைகள், உடல்நலக்குறைவுகள் என்று வரும்போது ஒரு பெண் சாய்ந்துகொள்ளத் தேடுவது தன் கணவனின் தோளையே!! கணவனே நட்பாக அமையப் பெற்ற யாருக்கும் இதில் மாற்றுக்கருத்து இருக்காது. அவ்வாறான ஒரு கணவனும் தேடுவது மனைவியின் தோளையே!! இதில் ஒப்புக்கொள்ள தயக்கம் இருக்காது.//
யதார்த்தமாக எழுதி இருக்கீங்க, வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

ஆதங்கத்தை அழகாய் வடித்திருக்கின்றீர்கள்.பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

முதுமையில்தான் அதிக நேசமும் புரிதலும் இன்னும்கூடி இருக்கும். இளமையில் கடைமைகள் பொருட்டு அவர்கள் பிரிந்திருக்க நேரிட்டாலும் இப்போது அவர்கள் சேர்ந்திருக்கவும் மகிழ்ந்திருக்கவும் உங்களாலான உதவிகளைச் செய்தாலே அவர்கள் இதயம் மெளனமாய் உங்களை ஆசீர்வதிக்கும்!

உங்கள் பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள்!!

Abu Khadijah said...

உங்கள் பெற்றோர் எல்லா நலமும் பெற்றிட இறைவனிடம் பிராத்திக்கிறேன்

உங்களுடைய கட்டுரைக்கு, சகோதரர் ஜமால் சொன்ன கருத்தைத்தான் நானும் சொல்ல வந்தேன்.

அருமையான பகிர்வு

SUFFIX said...

//நானும் இப்போதே குழம்ப ஆரம்பித்துவிட்டேன்//

நாங்களும் +1ற்கு மகனை ஊரில் சேர்த்து விடலாமா எனக் குழம்பி, வேண்டாம் கல்லூரியில் சேர்க்க அனுப்பினால் போதுமென முடிவெடுத்திருக்கிறோம், சுய நலம் போல் தோன்றினாலும், இதுவே சரியெனப் படுகிறது.

சுந்தரா said...

உணர்வுபூர்வமான பதிவு ஹுசைனம்மா.

உங்கள் பெற்றோருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

goma said...

அருமையான உங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முப்பது வருஷம்??? ரொம்பவே அதிகம் ஹூசைனம்மா.. தியாகிகள் தான் அவங்க..

//இது பெண்ணீயம் (புரியாமல்) பேசுபவர்களுக்கு இகழ்வாகத் தோன்றலாம். உடலால் மட்டுமல்லாமல், உணர்வுகளாலும் தனக்கென்று சொந்தமானவரின் தோளில், அதேபோலவே அவருக்குச் சொந்தமான மனைவி சாய்வதில், ஆறுதல் தேடுவதில் தவறென்ன? அதுபோல், குழப்பமான சந்தர்ப்பங்களில், முடிவுகளை எடுக்கவும், புரிந்துணர்வுள்ள கணவன் தன் மனைவியை அல்லது மனைவி தன் கணவனை நாடுவார். அவருக்கும், தன் குடும்பத்திற்கும் எது நல்லது என்பதைப் பெண்ணின் பெற்றோர்போலவே கணவரும் அறிவாரே!! தன் குடும்பத்தை எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதும் பல பெண்கள், இதையும் இழிவாகக் கருதுவதில்லை//

என்னை பொருத்தவரைக்கும், உங்க கருத்த ஒத்துக்கறேன்..
ஆனா.. எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்ல.. சிலருக்கு இயல்பாவே தைரியமும் சுய சார்புத்தன்மையும் அதிகமா இருக்கும்.. ஆணுடைய துணை இல்லாமலே வாழ முடியும்.. அதனால அவங்க அப்படி இருக்கறாங்க/பேசறாங்க.. இந்த மாதிரி ஒருத்தரப் பத்தி எழுதலாம்ன்னு இருக்கறேன்.. பார்க்கலாம்..

//ஒரு வகையான கையாலாகாத்தனமான வெறுமை சூழ்கிறது//

எனக்கும் அப்பப்ப அந்த வெறுமை சூழ்கிறது.. :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்..

நல்லா எழுதி இருக்கீங்க.. எல்லார் நிலையும் இப்ப அப்படித்தான் சமாதானம் செய்துகொண்டு ஓடுது..

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

இன்னாம்மா ஹுஸைனம்மா? ஒறே ஃபீலிங்க்ஸ் ஆப் ப்ளாக்கா மாத்திட்டிங்க. எதார்த்தமான வார்த்தைகளை கொண்டு குடும்ப வாழ்க்கையை அழகாக எடுத்திரைத்து இருக்கிறீர்கள்.

நன்றி உங்களை பெற்ற பெற்றோர்களுக்கு. நல்ல பதிவு சகோதரி. வளைகுடா நாடுகளில் வாழும் பலரும் இதைப்பற்றி யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

நாம் குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு, சகோதர சகோதரிகளுக்கு, உற்றார் உறவினர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போவது வெளிநாட்டு வாழ்க்கையின் உச்சகட்ட தோல்வி. நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அதை நாம் உற்ரில் அனுபவிக்கும் போது, நமக்கு சொல்ல முடியாத பல நோய்கள் வந்து நம்மை வாழ விடாமல் செய்து விடும்.

சகோ அபு நிஹான்

அன்புத்தோழன் said...

ம்மா, வாப்பாக்கு என் உள்ளம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்... திருமண உறவின் ஆழமான வெளிப்பாடே உங்கள் பதிவுனு நினைக்கிறேன்... என் போன்ற திருமண பந்தத்திற்குள் நுழைய காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இது அவசியமான பதிவு... உங்கள் சங்கடங்கள், உணர்வுகள் ஓரளவு புரிந்தாலும்... புரிதல் பற்றி மேலும் புரியும் நாள் வெகு நாள் இல்லை...

Ahamed irshad said...

//கல்யாணமான ஐந்தாறு வருடங்களிலிருந்து, கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் என் தந்தை வளைகுடா நாடுகளில் வேலை செய்ய,//

எல்லா தந்தையும் அப்பிடித்தான்.. நல்ல பதிவு..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்ங்க... அழகா பதிவு பண்ணி இருக்கீங்க பல உணர்வுகளை... super...

ஹுஸைனம்மா said...

செந்தில் - ஆமாங்க, அந்தக் காலத்துல ஊருக்குள்ளயே வேலை கிடைக்க வாய்ப்பிருந்துது; இப்ப உருவாக்க ஆரம்பிக்கீறாங்க.

கண்ணா - உங்க பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணமா? வாழ்த்துகள்!! பெரியவங்களைப் பாத்துப் படிச்சிக்க நிறைய இருக்கு. வாழ்த்துகளுக்கு நன்றி!!

மோகன்குமார் - நன்றி.

மேனகா - நன்றி.

எல்.கே. - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அமைதிச்சாரல் -நன்றிப்பா. அப்பா உடல்நல விஷ்யத்துல கவனமா இருப்பாங்க; அம்மாவை செக்கப்புக்கு அழைச்சுபோக முடிஞ்சதுதான் விசேஷமே!!

தென்றல் - உங்க பெற்றோருக்கும் இந்த மாசம்தான் திருமண நாளா? வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.

நீங்க சொல்றது உண்மைதான். வயதானவர்களுக்கும் அளவான தனிமை அவசியமே!

தராசு - நன்றி.

அபு அஃப்ஸர் - அந்தச் சூழ்நிலை எவ்வளவு கஷ்டமா இருந்துருக்கும்னு கணிக்க முடியுது. ரொம்பவே வருத்தம்தான்!! நன்றி வாழ்த்துகளுக்கு.

ஹுஸைனம்மா said...

ராமலக்‌ஷ்மி அக்கா - நன்றிக்கா.

கோமதி அக்கா - //நெகிழ்ந்து போனேன்// நன்றி அக்கா. உண்மையில் நானும் அவர்களின் இந்த கட்டத்திற்கு வர சற்று தூரத்தில்தான் இருக்கிறேன். மிக நன்றி.

தமிழ்ப்பிரியன் - நன்றிங்க!

வித்யா - நன்றிப்பா.

ரிஷபன் சார் - மிக உண்மை சார். எதைப் பின்பற்றுவது, எதைத் தவிர்ப்பது என்று குழப்பத்தில் எதையோ செய்கிறோம். நன்றி சார்.

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி - நன்றிங்க.

ஜலீலாக்கா - நம்ம ஊர்ல இந்த மாதிரி கதைகள் நிறைய உண்டு அக்கா. நம்ம நிலைமை எவ்வளவோ பரவாயில்லைதான்னு சொல்லணும், இல்லியாக்கா? நன்றி அக்கா.

அக்பர் - நன்றிங்க.

கவிசிவா - நன்றிப்பா. என்ன சொல்லன்னு தெரியல!

மதுமிதா - நன்றிங்க. ஆதரவு கிடைத்தால் எதையும் தாங்கிக்கொள்ளலாந்தாங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - நன்றிங்க.

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார் - நன்றிங்க பாராட்டுக்கு!

மலிக்கா - ஆமாம்ப்பா, எந்நாளும் சேர்ந்திருக்கும் பாக்கியத்தை இறைவன் தந்திடவேண்டும். நன்றி வாழ்த்துகளுக்கு.

செல்வியக்கா - ஹை, செல்வியக்கா!! வாங்க, வாங்க! ஐமபது வருஷமா, மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!! அவசியம் பதிவு எழுதுங்கக்கா அதுபத்தி. நன்றி அக்கா வாழ்த்துகளுக்கு!

தமிழ் உதயம் - நன்றிங்க.

ஜமால் - நன்றி!

ஹுஸைனம்மா said...

மஹி - நன்றிப்பா. ஆமாப்பா, நம்ம அம்மாப்பாதானே ஒண்ணும் நினைக்கமாட்டாங்கன்னு ஒரு சமாதானம் சொல்லிக்கவேண்டியது!!

பீர் - நன்றி.

பிரதாப் - நன்றி.

ஹேமா - நன்றி ஹேமா.

சின்ன அம்மிணிக்கா - ரொம்ப நன்றி அக்கா.

கீதா ஆச்சல் - 20 வருஷமா? நீண்ட காலம்தான். ஆமாம்ப்பா, வீட்டில் விசேஷம் வந்தால்தான் எல்லாரும் ஒன்றுகூட முடிகிறது. நன்றி.

ஹுஸைனம்மா said...

நிஜாம் - வாங்க; நிச்சயமா கூட்டுக்குடும்ப வாழ்வும் சிறப்புதான், சரியாக அரவணைப்பவர் வழிநடத்தினால்! நன்றி.

நியோ - நினைச்சதை இங்கயே சொல்லிடுங்க நண்பரே, தனிப்பதிவெல்லாம் வேண்டாம்!! :-))) நன்றி!

நாடோடி - நன்றிங்க. இப்ப வெளிநாட்டு வாழ்வு குறித்து ஒரு விழிப்புணர்வு வந்திருக்குது!!

சித்ரா - நன்றி சித்ரா வாழ்த்துகளுக்கும், வருகைக்கும்!

ரியாஸ் - உங்க தந்தையைப் பார்க்கமுடியாத அந்த நிலையை நினைச்சுப் பார்க்கவே நடுங்குது. அல்லாஹ் காக்கட்டும் இந்நிலை வராதபடி!! நன்றி.

ஹுஸைனம்மா said...

ஷேக் தாவூது - வ அலைக்கும் ஸலாம்! மிக நன்றி பாராட்டுகளுக்கு.

அஸார்ட் - வாங்க; நன்றிங்க!

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

மனோ அக்கா - வாங்கக்கா. முதுமையில்தான் அன்பு அதிகரிக்கும்; ஆமாம்க்கா! முடிந்த அளவு முயற்சிகள் செய்துவருகிறோம், அவர்களின் மனம் கோணாதவாறு நடக்க; இறைவன் இனியும் இதே மனநிலையைத் தொடர அருள்புரியவேண்டும். நன்றி அக்கா.

அதிரை எக்ஸ் - வாங்க; நன்றி!

ஷஃபிக்ஸ் - நிச்சயமா, கல்லூரிக்கு அனுப்பினால் போதும்தான். அதன்பிறகும் வேலை, திருமணம் என்று பிரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். இப்பவே ஏன்? அதனால் இது சரியே! நன்றி.

ஹுஸைனம்மா said...

சுந்தரா - வாங்க; நன்றி!!

கோமாக்கா - மிக நன்றிக்கா!!

எல் போர்ட் - வாங்க!! எப்பவுமே எசப்பாட்டு படிக்கிறது அநேகமா நீங்கதான்!! அதுவும் கேட்க அழகா!! ;-)))

சுயசார்புத்தன்மை வேணும்தான்! ஆனா, அதுவும் அளவோடு இருத்தல் நலம், இரு தரப்பிலும்! ஆணின் துணை தேவையில்லையென ஒதுக்கி தனியே இருப்பவருக்கு இது சரிவரும். ஆனால், துணையோடு இருப்பவர் அதிகமான ஒட்டுதல் இல்லாமல் இருந்தால், தன்னை அலட்சியம் செய்கிறாரோ என்றும் தோன்றலாம் இல்லையா?

கண்டிப்பா அவங்களைப் பத்தி எழுதுங்க; தெரிஞ்சுக்க ஆர்வமாயிருக்கு.

ஹுஸைனம்மா said...

முத்துலெட்சுமி அக்கா - வாங்கக்கா; ஆமாம்க்கா, சமாதானம்தான்!! நன்றிக்கா.

அபுநிஹான் - வாங்க! நன்றிங்க விரிவான கருத்துக்கு.

அன்புத்தோழன் - வாங்க; இப்பல்லாம் கல்யாண வாழ்வு பத்தி படிச்சுக்க உங்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதுனால, எச்சரிக்கையா இருந்துக்கலாம் பாருங்க! :-)))

இர்ஷாத் - உங்க வாப்பாவுமா!! ம்ம்... நன்றிங்க!

அப்பாவி தங்ஸ் - நன்றிப்பா!!

அபி அப்பா said...

ஆகா ஹுசைன் அம்மா!லேட்டஸ்ட் பதிவிலே 'அந்த தோழன் இல்லை"ன்னு சொன்னதை வச்சு தான் முந்தைய பதிவை தேடினேன். இது கிடைத்தது.
நியாயமா பார்த்தா இந்த பதிவுக்கு நான் தான் முதல்ல வந்து நிறைய கருத்து சொல்லியிருக்கனும்.

நிறைய சொல்ல தோணுது. ஆனா வார்த்தை தான் கோர்வையா வரலை. அதனால இது ஒரு நல்ல பதிவுன்னு முடிச்சுக்கறேன்!!