Pages

ட்ரங்குப் பொட்டி - 12




 


இந்தியாவிலருந்து அமெரிக்கா போற பெருந்தலைகளைக் கூட விடாம (ஜனாதிபதி உள்பட), அமெரிக்க போலீஸ் ஸ்கேன் பண்ணி செக் பண்ணுறாங்க. இங்க லோக்கல்ல உதார் விடுற பெருந்தலைகளும், அங்க கைகட்டி, வாய்பொத்தி ”ரூல்ஸ்படி”  நடந்துக்கிறாங்க. ஆனா,  பக்கத்து நாடு பாகிஸ்தான்லருந்து ராணுவ கான்ஃபெரன்ஸுக்காகப் போன ராணுவ அதிகாரிகளை, இது போல செக்கிங் பண்ணனும்னு காக்க வைக்க, அவங்க “எங்களை யாருன்னு நினைச்ச?”ன்னு சவுண்ட் வுட்டு, வந்த ஃப்ளைட்லயே திரும்பி வந்துட்டாங்க!! அவிங்க ரோஷக்காரங்க!!

)( )()( )()( )()( )()( )(

ஆப்பிரிக்க, கிழக்காசிய மற்றும் இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் மட்டும்தான் ‘கொசு’ என்ற ஜீவி உண்டு. வேற எங்கயும் கிடையாதுன்னு அப்பாவியா நினைச்சுகிட்டிருந்தேன். அதுலயும், ஐரோப்பாவிலெல்லாம் ’கொசுவா - கிலோ எவ்வளவு’ன்னு கேப்பாங்கன்னு நினைச்சேன். இப்ப சமீபத்துல,  ஃப்ரான்ஸ்லயும் ’Riviera’ என்ற இடத்துல ‘சிக்குன்குனியா’ மக்களைத் தாக்கியிருக்காம்!!

)( )()( )()( )()( )()( )(
ஃபிலிப்பைன்ஸின் “Cebu Pacific" என்ற ஏர்லைன்ஸ்ல விமானப் பணிப்பெண்கள் ஃபிளைட்ல நடனம் ஆடிகிட்டே சேவை செய்றாங்களாம்!! அதுவும், டேக்-ஆஃப் முன்னாடி ‘ஆபத்து நேர பாதுகாப்பு முறைகள்’ சொல்வாங்களே அப்ப டான்ஸ் ஆடிகிட்டே சொல்லித் தராங்களாம். சும்மாவே ஒருத்தரும் ஒழுங்கா அதைக் கவனிக்கிறதில்ல, இதுல டான்ஸ் ஆடிகிட்டுன்னா, கேக்கவே வேணாம்!! இது பரீட்சார்த்த முறைதான், இன்னும் முழுசா செயல்படுத்தலன்னு நிறுவனம் அடுத்த நாளே உஷாரா அறிக்கை விட்டுடுச்சு. ஏற்கனவே இவ்விமானங்களில் சின்னச் சின்ன கேம்ஸ்களும், போட்டிகளும் ஏர்ஹோஸ்டஸ்களால் நடத்தப்படுகிறதாம்!!

)( )()( )()( )()( )()( )(

என் மகனின் அத்தை மகள், என்னிடம் ‘உங்கப் பையன் ஸோ க்யூட்’ என்றாள். “கட்டிக்கிறியா?” என்றேன். ”கட்டிக்கிட்டாப் போச்சு” என்று அணைத்தாள் என் சின்னவனை. “அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு!!” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்!! :-((((
 
)( )()( )()( )()( )()( )(

 பலவித சர்ச்சைகளுக்கு நடுவே, காமன்வெல்த் விளையாட்டுகள் சிறப்பாகத் தொடங்கியிருக்கின்றன. நம்ம நாட்டுல, ஊடகங்களுக்குச் சீக்கிரமே ஒரு கட்டுப்பாடு கொண்டுவந்தா நல்லது. இவங்களால, உலக நாடுகள் முன், நம்மளே நாமே அவமானப்படுத்திகிட்டோம்!! ஊழல்களை வெளிக்கொணர்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியம் என்றாலும், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளின் முன் தாழ்ந்துகொண்டே போகிறது. காமன்வெல்த் விளையாட்டுகளின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சிகள் ‘கீழே விழுந்தாலும் மண் ஒட்டலை’ என்ற ரேஞ்சுக்கு கொஞ்சம் காப்பாத்தியிருக்கின்றன. நிகழ்ச்சியில், சிறுவர்கள் துணியில் இன்ஸ்டண்டாக மெஹந்தி டிஸைன் வரைவது அற்புதம்!!

)( )()( )()( )()( )()( )(

தலைநகர் டெல்லியில (நிஜக்)குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்!! அரசு அலுவலகங்கள் உள்ளே போக ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளால பொதுமக்கள் மட்டுமில்லாம, அங்கே பணியுரியும் அதிகாரிகளேகூட அங்கு நுழைய ஏகக் கெடுபிடிகள்!! ஆனா, குரங்குகள் சர்வ சுதந்திரமா கட்டிடங்கள் உள்ளே நடமாடுகின்றனவாம். இதில இன்னொரு பீதியக் கிளப்புறாங்க - தீவிரவாதிகள் யாராவது  குரங்கு வயித்துல வெடிகுண்டைக் கட்டி, அதை அலுவலகத்துக்குள்ள நுழைய விட்டு ரிமோட் மூலமா வெடிக்கச் செய்ய வாய்ப்பு இருக்காம்!! ம்ம்.. இதுக்கென்ன colour code குடுப்பாங்களோ..

)( )()( )()( )()( )()( )(

1978ல் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கி,  IVF தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் ராபர்ட் எட்வர்டுக்கு 2010ம் வருடத்தின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. குழந்தையில்லா தம்பதியர்களில் லட்சக்கணக்கினரின் வாழ்வில் இதன்மூலம் மகிழ்ச்சி தந்தவர்; உலகெங்கும் இதுவரை 4 மில்லியன் குழந்தைகள் இந்த IVF மூலம் பிறந்துள்ளன; அப்பேர்பட்டவருக்கு இவ்வளவு தாமதமாகவாகவா நோபல் வழங்குவது என்று மருத்துவத்துறை குரல் எழுப்புகிறது.

அதே சமயம், இவர் மீது ‘கருமுட்டைகளைச் சந்தைப்படுத்தியவர்’, 'மனிதக்கருக்களை விறபனைக்காக ஃபீரீஸரில் நிரப்பிவைக்கும் பொருளாக ஆக்கியவர்’, ‘கணவன் - மனைவியின் அந்நியோன்ய உறவையும், குழந்தைப்பேற்றையும் இருவேறு நிகழ்வுகளாக்கியதன் முக்கிய காரணி’ என்றும் குற்றம் சாட்டப்படுகிறது!!
  
 

Post Comment

38 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா ஹுசைனம்மா ஊடகங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்க்காரங்க மாதிரி குத்தம் குறையே சொல்லிக்கிட்டிருக்காங்க..

அட்டகாசமான துவக்கவிழா.. இதை விட நல்லா இருக்கப்போதாம் நிறைவுவிழா..

kavisiva said...

அமெரிக்காவுக்கு நம்ம ஊரில் இருந்து போன நம்ப சினிமா பிரபலம் ஒருத்தரையும் இப்படி கொடைஞ்சிருக்கானுங்க. நம்மாளுக்கு நாம இங்கிட்டுத்தான் பிரபலம்னு தெரியல. அங்கிட்டு போய் தமிழ்நாடு சீஃப்மினிஸ்டர் ஃப்ரெண்டுன்னு சொல்லி உதார் விட்டிருக்கறார். பிடிச்சு 4மணிநேரம் காய்ச்சிப்புட்டானுங்களாம் :)

kavisiva said...

உங்க பையன் உங்களை மாதிரி இல்லை. அவங்க அப்பாவை மாதிரி ரொம்ப புத்திசாலி :)

இப்போ காமன்வெல்த் கேம்சில் புது சர்ச்சை. ஸ்டேடியத்தில் பார்வையாளர்களே இல்லையாம். சார்லசின் மனைவி டயானான்னு நிருபர் கூட்டத்தில் கல்மாடி சொன்னாராம். இன்னும் என்னவெல்லாம் கேலிகூத்தாக்கப் போறானுங்களோ :(

kavisiva said...

//அதே சமயம், இவர் மீது ‘கருமுட்டைகளைச் சந்தைப்படுத்தியவர்’, 'மனிதக்கருக்களை விறபனைக்காக ஃபீரீஸரில் நிரப்பிவைக்கும் பொருளாக ஆக்கியவர்’, ‘கணவன் - மனைவியின் அந்நியோன்ய உறவையும், குழந்தைப்பேற்றையும் இருவேறு நிகழ்வுகளாக்கியதன் முக்கிய காரணி’ என்றும் குற்றம் சாட்டப்படுகிறது!!//

இப்படி சொல்றவனுக்கு டெஸ்ட் ட்யூப் முறையில்தான் குழந்தை கிடைக்கும்ங்கற நிலை வருதுன்னு வச்சுக்கோங்க அடுத்த நாள் நம்மூர் அரசியல்வாதி மாதிரி அந்தர்பல்டி அடிச்சுடுவானுங்க. எல்லாம் நம்மூர் மனித உரிமைன்னு பேசர ஆட்கள் மாதிரிதான் :)

kavisiva said...

இந்தவாட்டி ட்ரெங்கு பொட்டி சூப்பர் :)

Chitra said...

கனமான செய்திகளுடன் நல்ல ட்ரங்கு பெட்டி!

Vidhya Chandrasekaran said...

சில செய்திகள் தெரிந்தவைதான் என்றாலும் மிக அழகாக பகிர்ந்திருக்கீங்க.

ஸாதிகா said...

//
என் மகனின் அத்தை மகள், என்னிடம் ‘உங்கப் பையன் ஸோ க்யூட்’ என்றாள். “கட்டிக்கிறியா?” என்றேன். ”கட்டிக்கிட்டாப் போச்சு” என்று அணைத்தாள் என் சின்னவனை. “அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு!!” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்!! :-((((
// இப்பவே பையனுக்கு பொண்ணு பார்க்கும் படலம் ஆரம்பிச்சாச்சா?

Prathap Kumar S. said...

//உங்க பையன் உங்களை மாதிரி இல்லை. அவங்க அப்பாவை மாதிரி ரொம்ப புத்திசாலி //

இதைத்தாங்க நானும் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கேன்...:))

Prathap Kumar S. said...

//இவ்விமானங்களில் சின்னச் சின்ன கேம்ஸ்களும், போட்டிகளும் ஏர்ஹோஸ்டஸ்களால் நடத்தப்படுகிறதாம்!! //

என்ட்றா பசுபதி...போட்றா டிக்கெட்டை பிலிப்பைன்சுக்கு....

ம்கும்....இந்தியன் ஏர்லைன்ஸ் எப்ப திருந்தபோதோ....:))

தமிழ் உதயம் said...

சமீபத்துல, ஃப்ரான்ஸ்லயும் ’Riviera’ என்ற இடத்துல ‘சிக்குன்குனியா’ மக்களைத் தாக்கியிருக்காம்!!//

சந்தோஷப்படுறதா...
வருத்தப்படுறதா..

Menaga Sathia said...

டிரங்கு பெட்டியை திறந்து ரொமப் நாளாச்சு,அழகா சொல்லிருக்கிங்க....

Muniappan Pakkangal said...

Trunku pogttikkulla ivalavu seithiaa.Nice post Hussainamma especially checking in America,mosquiites & Kattikka.

Muniappan Pakkangal said...

Trunku pogttikkulla ivalavu seithiaa.Nice post Hussainamma especially checking in America,mosquiites & Kattikka.

நானானி said...

The contents of the 'trunk potti' is suuper.
naanaani

Unknown said...

சர்வ சுதந்திரமா கட்டிடங்கள் உள்ளே நடமாடுகின்றனவாம். இதில இன்னொரு பீதியக் கிளப்புறாங்க - தீவிரவாதிகள் யாராவது குரங்கு வயித்துல வெடிகுண்டைக் கட்டி, அதை அலுவலகத்துக்குள்ள நுழைய விட்டு ரிமோட் மூலமா வெடிக்கச் செய்ய வாய்ப்பு இருக்காம்!!//

பதிவு நல்லா இருக்கு..

எல் கே said...

@ஹுசைனம்மா

அந்த முதல் தகவல், பாகிஸ்தான் அதிகரிகள் சோதனை செய்யப் பட்டு பின்பு விசாரணை என்றப பெயரில் அலைகழிக்கப்பட்டனர் . அதனால் அவர்கள் திரும்பி விட்டனர்

சைவகொத்துப்பரோட்டா said...

இந்தவாட்டி பெட்டிக்குள்ள நிறய சரக்கு!

கோமதி அரசு said...

ட்ரங்குப் பெட்டியிலிருந்து வந்த செய்திள் எல்லாமே அற்புதம்.

நன்றி ஹீஸைனம்மா.

☀நான் ஆதவன்☀ said...

பையன் :)))))) க்யூட் தான்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

"கொசு" கடந்த பதிவையும் இந்த பதிவையும் பார்க்கும் போது கொசு உங்களை வெகுவாக பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். நல்ல செய்தி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

//உங்க பையன் உங்களை மாதிரி இல்லை. அவங்க அப்பாவை மாதிரி ரொம்ப புத்திசாலி // அப்பிடியா?

நானும் ரெவ்டி, நானும் பஞ்சாயத்து தலவருன்னு துண்டை போட்டிக்கிட்டு ப்ஞ்சாயத்து பண்ணிக்கிட்டிருந்தவுங்க எல்லாம் தறியல் ஆகும் ஒறே இடம் அமெரிக்கா? ஆளானப்பட்ட அப்துக் கலாம மும்பையிலேயே வச்சு செக் பண்ணிப்பிட்டுன்னாங்க படுபாவி பசங்க. சினிமா நடிகர், அரசியல்வாதிலா எம்மாத்திரம்.

மிக நல்ல உபயோகமான செய்திகள் உள்ள பெட்டி. நன்றி சகோதரி

நாடோடி said...

எல்லா விச‌ய‌மும் க‌ல‌ந்துக‌ட்டி அடிச்சிருக்கீங்க‌.. :)

மங்குனி அமைச்சர் said...

இது போல செக்கிங் பண்ணனும்னு காக்க வைக்க, அவங்க “எங்களை யாருன்னு நினைச்ச?”ன்னு சவுண்ட் வுட்டு/////

நாயி சண்டையின் பொது அதோட வீட்டு பக்கத்தில் இருந்தால் திருப்பி குலைக்கும் , வீட்டை விட்டு தூரமா இருந்தா வாலை சுருட்டிகிட்டு ஓடிவிடும் (மேலே உள்ள செய்திக்கும் இதற்க்கு எந்த சம்பந்தமும் இல்லை ,- இப்படிக்கு நிர்வாகம் )

//ஃபிலிப்பைன்ஸின் “Cebu Pacific" என்ற ஏர்லைன்ஸ்ல விமானப் பணிப்பெண்கள் ஃபிளைட்ல நடனம் ஆடிகிட்டே சேவை செய்றாங்களாம்!! ///

எச்சூச்மே மேடம் இந்த பைலட்ஸ் எல்லாத்தையும் ஆடிக்கிட்டே ஒட்டி டிரை பன்னச்சொல்லுங்களேன்

//“அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு!!” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்!! :-((((////

எங்கள மாதிரி யூத்தெல்லாம் அப்படித்தான் மேடம் ,நீங்க பொறாமை படாதிங்க

ஸ்ரீராம். said...

கொசு விஷயத்தைப் படிக்கும்போது 'யாம் பெற்ற இன்பம் பெறுக..' என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன..!!

அமுதா கிருஷ்ணா said...

பையன் உஷார் பார்ட்டிதான்..

நட்புடன் ஜமால் said...

உங்க மகனாச்சே :P

MANO நாஞ்சில் மனோ said...

//அவங்க ரோஷக்காரங்க//

ஆனா நம்ம ஆளுங்க எப்பூடி அவமானப் பட்டாலும் நாங்க ரொம்ப நல்லவய்ங்கன்னு கேவலப் பட்டு திரும்பினாலும் நாணமில்லை.....வேற எண்ணத்தை சொல்ல...!!!

ஜெயந்தி said...

டிரங்க் பெட்டி நெறைஞ்சு இருக்கு. உங்க பையன் பேச்சுதான் ஹை லைட்.

ஹுஸைனம்மா said...

முத்துலெட்சுமியக்கா - ஆமா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தோத்தாங்க போங்க இவங்ககிட்ட!! நிறைவு விழாவும் அருமையா அமைஞ்சு இன்னும் நல்ல பேர் வாங்கித் தரணும்!

கவிசிவா - வாங்க. நன்றிப்பா. //டெஸ்ட் ட்யூப் முறையில்தான் குழந்தை கிடைக்கும்ங்கற நிலை வருதுன்னு//

ஒரு நல்ல நோக்கத்துக்காக அவர் உழைத்துக் கண்டுபிடித்ததை, பின் வந்த மருத்துவ வியாபாரிகள் டிமாண்டான சந்தையாக்க, கெட்ட பேர் அவருக்கு!!

சித்ரா - வாங்க, ரொம்ப பிஸி போல இப்ப!

ஹுஸைனம்மா said...

வித்யா - வாங்க, நன்றி!!

ஸாதிகாக்கா - அய்யோ, இப்பவேவா? தாங்காது!! இது சும்மா விளையாட்டுக்கு!! அவன் அத்தை பொண்ணு காலேஜ் படிக்கிறா!!

பிரதாப் - அந்த ஏர்லைன்ஸ் விஷயம் உங்களுக்காகத்தான் எழுதினேன்!! அபுறம், என் பிள்ளைங்க அப்பாவைப் போலத்தான் என்பதினால்தான் நானும் இதெல்லாம் எழுதுறேன். நான் ரொம்ப அமைதியான பொண்ணூ!!

ஹுஸைனம்மா said...

தமிழ் உதயம் - ஆமாம், வருத்தமா, சந்தோஷமான்னு குழப்பம்தான்.

மேனகா - வாங்க, நன்றி.

டாக்டர் சார் - நன்றி சார்.

நானானி மேடம் - நன்றி.

ஜிஜி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

எல்.கே. - ஆமா, சோதனைகளின் தொடர்ச்சியா நடத்தவிருந்த விசாரணைக்காக நீண்ட நேரம் காக்க வைத்தது கடுப்பைக் கூட்டியிருக்கிறது. அதனால் திரும்பிவிட்டனர். நன்றி.

சைவக்கொத்ஸ் - நன்றி.

கோமதிக்கா - நன்றிக்கா.

ஆதவன் - பையன் க்யூட் யூத்னு சொல்லலாமா!!

ஹுஸைனம்மா said...

அபுநிஹான் - ஆமாங்க, கொசுக்கடி கனவில் மிரட்டுது!! ஆமா, என் பிள்ளைங்க ரெண்டு பேர்ருமே அப்பா குணம்தான் - முக்கியமா லொள்ளுல!! நன்றி.

நாடோடி - நன்றி.

மங்குனி மினிஸ்டர் - வாங்க. நாய் சைன்ஸ் எனக்குத் தெரியல. அனுபவசாலி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்! அப்புறம், ஃப்ளைட்டுகளே டர்புலன்ஸ்ல டான்ஸ் ஆடித்தான் போகுது! இதுல தனித்தனியா வேற ஆடணுமா என்ன?

என் பையன் ஃப்யூச்சர் யூத்! உங்களவிட அட்வான்ஸாக்கும்!! நன்றி!!

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - ஒருவகையில அப்படியும்னாலும், வருத்தம்தான். எனக்கு அங்கயும் கொசு இருக்கிறது ஆச்சர்யம்தான் தருது!!

அமுதா கிருஷ்ணா - ஆமா, ரொம்ப உஷார்!!

ஜமால் - இல்லை, அப்பா பையன்!! :-))

நாஞ்சில் மனோ - வாங்க. ம்.. என்னத்தச் சொல்ல!!

ஜெயந்திக்கா - நன்றி!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல கலெக்ஷன் ஹூசைனம்மா.. ரசிச்சேன்..

அதென்னமோ எங்கள மாதிரி அடிப்பொடிங்கள எல்லாம் சாதாரணமா உள்ள விட்டுடறாங்க.. பெரிய மனுஷங்கள மட்டும் பிடிச்சு வச்சுக்கறாங்க சோதன போட!

கடைசி செய்திக்கு ஒரு ஓ!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அவிங்க ரோஷக்காரங்க!!//
ஹும்... வேற என்ன சொல்ல?

கரெக்ட் அக்கா, நானும் இந்த ஊருக்கு வந்தப்ப //கொசுத்தொல்லை இனிமேல் இல்லை// நெனச்சுட்டு தான் வந்தேன்... இங்கயும் சும்மர்ல பார்க் பக்கம் போனா கொசு உண்டு... நம்ம ஊரு கொசுவ விட இது ரெம்ப டேஞ்சரஸ் வேற... Rashes போல வந்துடும்... சிக்குன்குனியா இன்னும் வர்ல... பயமாத்தான் இருக்கு

//டான்ஸ் ஆடிகிட்டே சொல்லித் தராங்களாம்//'
கிழிஞ்சது கிருஷ்ணகிரி...ஹா ஹா ஹா

//சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்!! :-((((//
அம்மாடியோ... நானில்ல...ஹா ஹா ஹா... பிற்காலத்துல நல்ல பஞ்ச் டயலாக் specialist ஆ வருவார்னு தோணுது... ஹா ஹா ஹா

//குற்றம் சாட்டப்படுகிறது!! //
மகாத்மா காந்தியவே கொன்ன உலகம் தானே அக்கா...யார வேணும்னாலும் குறை சொல்லுவாங்க... should just ignore it...he is doing a great service to mankind apart from criticisms...

Nice post...super

ஜெய்லானி said...

டிரங்குப்பெட்டி ஒவ்வொன்னும் சூப்பர்..!! பிலிபைனி மேட்டர்தான் பயமா இருக்கு படிக்கும் போதே..!!

ப்ரியமுடன் வசந்த் said...

// வந்த ஃப்ளைட்லயே திரும்பி வந்துட்டாங்க!! அவிங்க ரோஷக்காரங்க!!//

சே சே ரோசமாவது கீசமாவது வேசமா இருக்கும், குற்றமுள்ள நெஞ்சுங்க எதுனாலும் வெடிகுண்டு எடுத்துட்டு போய்ருப்பானுங்க பர்தேசிங்க அதான் மாட்டிகிடுவோம்ன்ற பயத்துல திரும்பியிருப்பானுங்க!