Pages

அம்மா @ சிக்கனம் கஞ்சத்தனம்




 
பள்ளியிறுதி படிக்கும்போதுதான், தமிழ்நாட்டில் சென்னையில் வேரூன்றியிருந்த ‘சுடிதார்’ தின்னவேலியில் கிளைவிட ஆரம்பித்திருந்தது. வீட்டில் அதுபற்றியெல்லாம் வாய் திறக்க முடியாதென்பதால், கல்லூரிக்குப் போனால் எப்படியாவது ”முறைப்படி” அனுமதி வாங்கிவிடலாம் என்ற நினைப்பில்  கல்லூரியில் சேலைதான் உடுத்த வேண்டுமென்ற விதி மண் போட்டது!!

கல்லூரி வாழ்க்கை மிகவும் பிடித்துப் போனதால், சேலை சகஜமாகிவிட்டிருந்தது. முதலாம் காலேஜ் டேயை ஆர்வத்துடன் எதிர்கொள்ள, வகுப்புத் தோழிகள் மறுநாள் (திங்கட்கிழமை) பட்டுச் சேலை கட்டிவர முடிவெடுத்தோம்.

அன்னிக்கு வீட்டுக்கு வர்ற வழியில ஒரு பரவசத்தோடயே யோசிச்சுகிட்டு வந்தேன். எனக்குனு தனியா சேலைகள்லாம் கிடையாது. அம்மாவோட சேலைகளைத்தான் நானும் கட்டிக்குவேன். அம்மா பொன்னுபோல வச்சிருந்த (ஃபாரின்) சேலையெல்லாம் நான் ’பின்’னா குத்தி வம்பாக்கிறேன்னு அம்மாக்கு ஏற்கனவே ரொம்ப கோவம். (சேலை ஒரு லொள்ளு - அங்கங்கே ‘பின்’ குத்தினாத்தான் நிம்மதியா இருக்க முடியும்). தனியா சேலைகள் வாங்கிக் கேட்டும் ரெண்டு பெருநாளைக்கின்னு ரெண்டே ரெண்டுதான் கிடைச்சுது. சாதாரண சேலயக் கட்டும்போதே முணுமுணுத்துகிட்டு இருப்பாங்க, இப்பப் பட்டுச் சேலையைக் கட்டப் போறேன்னு சொன்னா என்னென்ன திட்டு விழுமோன்னு பயமாவும் இருந்துது. திட்டினாலும் கட்டித்தானே ஆகணும், எந்தப் பட்டைக் கட்டலாம்னு சிந்தனை வந்தப்போத்தான் ஒரு விஷயம் உறைச்சுது. பட்டுச் சேலை!! வீட்டில ஒரு பட்டுச் சேலை கூட கிடையாது எனபது அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்தது.

அம்மா, அப்பா டெல்லியிலிருந்து வீட்டைக் காலி செய்து வரும்போது ரயிலில் லக்கேஜில் போட்ட பட்டுச்சேலைகள் இருந்த பெட்டியும், பாத்திரபண்டங்கள் எல்லாமும் திருடு போய்விட்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால்  அதன்பிறகு இந்தப் பதினஞ்சு வருஷமா ஒரு பட்டுப் புடவைக்கூட வாங்கவில்லையா?? அப்படின்னா??!!

இந்தா, பஸ்ல போனா, ஒரு 10 நிமிஷ தூரம்தான் ஆரெம்கேவி. 700-800 ரூபாய்க்கே சாதாரண ஒத்தை வரிச்சரிகை பட்டு கிடைக்கும். ஆனா, அதெல்லாம் நடக்கிற காரியமா? ரெண்டுநாளா லேசா அனத்தியும் ஒண்ணும் நடக்கலை.  கண்ணீரும், இயலாமையுமா முனங்கிக் கொண்டே, பட்டுப்போன்ற ஸாட்டின் சேலையை உடுத்துக் கொண்டு போனேன்.


வாப்பா வெளிநாட்டுல இருக்காங்கன்னாலும்,  வாப்பாவோடது  ’வாழ்ந்துகெட்ட குடும்பம்’ கிறதால, வறுமை அப்ப முழுசா வெளியேறலை. அப்பாவின் வருமானம் மட்டுமே; 10 பேர் கொண்ட பெரிய குடும்பம்; பெரிய அத்தையின் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக தாங்க வேண்டியிருந்தது. இதனால் ஒரு ‘லோயர் மிடில் கிளாஸ்’ என்ற அளவில்தான் இருந்தோம்.

அம்மாவுடையதோ, மிகப் பணக்காரக் குடும்பம் - வீடு நிறைய வேலையாட்கள், இரட்டை மாட்டு வண்டி, ஃபியட் கார், பல ஏக்கரா வயல்கள், தியேட்டர், அரசியல் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா வீடு கல்யாணமாகி வரும்போது இருந்ததுக்கு  இப்ப எவ்வளவோ பரவாயில்லை என்று அம்மா சொல்வதுண்டு.


பத்து வயதிலேயே தன் அம்மாவை இழந்து, உடன்பிறந்த எட்டுப் பேரையும் கவனித்தவர். திருமணத்தால் சித்தியிடமிருந்து சீக்கிரம் தப்பினாலும், கடைசி வரை மாமியார் ஆதரவும் கிட்டாமல் போனது சோகம். அதனாலேயே, எங்கள் நால்வருக்கும் வரன் தேடும்போது,  ஒத்தைப் பிள்ளைக்கு என் பொண்ணுங்களைக் கொடுக்க மாட்டேன்னு ஒத்தக்காலிலே நின்னாங்க. (வாப்பாவும் ஒரே மகன்). ஏன்னா, “இளைய மருமக வந்தாத்தான் மூத்த மருமகளோட அருமை தெரியுமாம்”. கரெக்டா அதுபோலவே செயல்படுத்திட்டாங்க!!

ஒருமுறை தெருவிலுள்ள கழிவுநீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டபோது, நகராட்சிக்குப் பலமுறை ஃபோன் செய்தபின்,  தாமதமாக வந்த ஊழியர், சும்மா இராமல் அம்மாவிடம் “ஏம்மா, (முனிசிபல்) சேர்மன் மக வீடுன்னு ஒரு வார்த்தைச் சொல்லிருந்தா உடனே வந்திருப்போம்ல?” என்று சொல்லி வாங்கிக் கட்டி,  “எம்மா, ஒண்ணுமில்லாதவன்லாம் நான் யார் தெரியுமான்னு மிரட்டுறான். நான் உள்ளதைச் சொன்னதுக்கு இப்படித் திட்டுறியேம்மா?”ன்னு நொந்துகிட்டார்.

பொறந்த வீட்டுல வசதியில கொழிச்சவங்கன்னாலும், இங்க வந்து நிலைமைக்கேற்ற மாதிரி சிக்கனமா நடந்துகிட்டாங்க!! அத வடிகட்டின கஞ்சத்தனம்னுதான் நான் அப்ப (மனசுக்குள்ள) திட்டுவேன்!! அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்னு இப்பத்தான் புரியுது!! :-(  வீட்டு வேலைகளுக்கிடையில நேரம் கண்டுபிடிச்சு, பீடி சுத்தவும், துணி தைக்கறதும் செஞ்சாங்க. வாப்பாவோட விருப்பமின்மையால விட்டுட்டாங்க.

ஒரு பென்சில், ரப்பர் வேணும்னாலும் கெஞ்சிக் கூத்தாடணும். இந்தச் சிக்கனம் (எ) கஞ்சத்தனத்துக்கு நாங்க 6 பேரும் (2 நாத்தனார்கள்+4 மகள்கள்) காரணம்னு நல்லாத் தெரிஞ்சாலும், கோவம் கோவமா வரும். இருக்கட்டும் ஒருநாள் இதுக்கெல்லாம் சேத்து வச்சுக்கிறேன்னு தோணும். நினைச்ச மாதிரியே, இப்ப வச்சிருக்கேன் நிறைய - நன்றிகளை!! அப்போப் படிச்ச பாடங்கள் இப்பக் கைகொடுக்குது!! இந்தச் சிக்கனப் பாடம்தான், என்னை என் கல்யாணச் சேலையைக்கூட திட்டமிட்டதைவிட பாதிவிலையில் எடுக்க வைத்ததுபோல!!

பிறகு 2 அத்தைகளும் கல்யாணமாகிப் போனார்கள். அடுத்து நாங்கள் இரு சகோதரிகள். என் தலைப்பெருநாளில் வீட்டுக்கு வந்த நான் அதிர்ச்சியானேன்!! காரணம் என் அம்மா எடுத்திருந்த பட்டுச்சேலை - புதுப் பெண்ணாகிய எனக்கு என் புகுந்த வீட்டில் எடுத்துக் கொடுத்ததைவிட கிராண்டா இருந்துது!! முதலில் நம்பாமல், அதிர்ச்சியோடு பார்த்த நான், பிறகு காரணம் புரிந்து புன்னகைத்தேன்!!

அப்ப இருந்து இப்பவரை மேடம் அடிச்சு தூள் கிளப்புறாங்க!! லேட்டஸ்டா வைரக்கம்மல் வாங்கப் போறதாச் சொல்லிகிட்டிருந்தாங்க. “உனக்கென்ன? முடியுள்ள மகராசி அள்ளிமுடி”ன்னேன்!!
 
 

Post Comment

48 comments:

நட்புடன் ஜமால் said...

“உனக்கென்ன? முடியுள்ள மகராசி அள்ளிமுடி”ன்னேன்!!]]

ஹா ஹா ஹா

பல் இருக்கவன் பக்கோடோ - இது போலவா !!!

முகுந்த்; Amma said...

அம்மாவுடைய கஞ்சத்தனம் முதல்ல எனக்கும் கடுப்பேத்தும் ஆனா நான் வேலைக்கு போயி சம்பாரிச்சப்புறம் நானும் கஞ்சப்பிசினாரி ஆகிட்டேன்னு அம்மாவே சொல்லுவாங்க.

ஆனா ஒன்னு சிக்கனமா செலவு செய்வது எப்போதும் கைகொடுக்கும்.


நல்ல இடுகை.

அப்புறம் நூறாவது இடுகை போல தெரியுதே, வாழ்த்துக்கள்.

Unknown said...

அந்த காலத்தில ஒரு பென்சில் வாங்குவதற்கு, நிறைய வீட்டு வேலைகளை நாமாக எடுத்துப் போட்டு செய்து, அம்மாகிட்ட மூடைப் பார்த்து சொல்லி வாங்க வேண்டும்.

இப்போது பிள்ளைகள் அந்த மாடல், இந்த கலர் பார்த்து வாங்குங்க. முடியலேன்னா don't worry. I'ii get it locally என்கிறார்கள். ரொம்ப choosy ஆக இருக்கின்றார்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அப்புறமா வாரேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\“உனக்கென்ன? முடியுள்ள மகராசி அள்ளிமுடி”ன்னேன்!!]]//
அதே அதே..:)

எனக்குன்னு சேலை எடுத்து வச்சிட்டும் அவங்க சேலையில் சிலதைத்தான் அம்மா கட்டவிடுவாங்க .. ;)
சிக்கனம் எல்லாம் அவசியம் தான்.. அதனால் நல்ல படி கடமை முடிக்கமுடிந்தது..இப்ப கடமை முடிஞ்சப்பறம் அவங்களும் சிக்கனத்தை விட்டுட்டாங்க ;)

kavisiva said...

பொண்ணுங்க கல்யாணம் ஆகற வரைக்கும் எல்லா அம்மாவும் இப்படித்தான். அதுக்கப்புறம் இவங்க நம்ம அம்மாதானாங்கற அளவுக்கு அடிச்சு தூள் கிளப்புவாங்க :)

Rajakamal said...

நல்ல தகவல் + சுவாரசியமான சொல்லும் விதம் அருமை.

ILA (a) இளா said...

என்னங்க இது புடவை விசயத்துல ஆரம்பிச்சு எங்கேயோ போயிருச்சு :(

மனோ சாமிநாதன் said...

இளம் பிராயத்து நினைவுகள்- அதுவும் அம்மாவின் கண்டிப்பும் அப்பாவின் பிரியமும் என்றுமே மறக்க முடியாதவை! அவற்றை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் ஹுஸைனம்மா!

Thamiz Priyan said...

;-)

சுந்தரா said...

அத்தனை வருஷம் பிரச்சனைகளைச் சுமந்ததுக்கும் அவங்க பொறுமைக்கும், கிடைச்ச பரிசுன்னுதான் நினைக்கணும்...அம்மாக்களே இப்படித்தான் :)

Chitra said...

என்னவோ தெரியல..... வாசித்து முடிக்கும் போது கண்களில் நீர் - ஆனந்த கண்ணீர் என்று நினைக்கிறேன்.... இந்த பதிவு - ரொம்ப பிடிச்சு இருக்குதுங்க....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அதுதான் அம்மா!
(தலைப்பு 'அம்மா' என்பதே போதும்;
பொருத்தம்)

Prathap Kumar S. said...

சுவராஸ்யம்...

//முடியுள்ள மகராசி அள்ளிமுடி”ன்னேன்!!//

hahaha...இப்படி ஒரு பஞ்ச் டயலாக்கை நானும் இப்பத்தான் கேள்விப்படறேன்...:)

ஸாதிகா said...

அடடா..சுவாரஸ்யமான கொசுவத்தியை சுற்றி மனசை டச் பண்ணிட்டீங்க அம்மணி.

Mohamed G said...

Ninaivugal marappathillai.nalla pakirvu. vaalzhthukkal.

Menaga Sathia said...

கவிசிவா சொன்னதையே வழிமொழிகிறேன்..இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு..100வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!

kadaroli said...

unka panakkara ammava yen onnum illatha unka vaappaku kalyanam panni kuduthanga??? any reason for this???

தமிழ் உதயம் said...

மலரும் நினைவுகள், நிறைய விஷயங்களை பகிர்ந்தபடி நிறைவாய்.

pudugaithendral said...

நான் என் அம்மம்மாகிட்ட கத்துகிட்ட பாடம் இது. அருமை ஹுசைனம்மா

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

என் அம்மாவிடம் கற்றுக் கொண்ட பாடம் எப்படி சிக்கன்மாக குடும்பம் நடத்துவது என்று, அதனாலேயே என் அம்மாவை சிறந்த பொருளாதார நிபுனர் என்று சொல்வேன். அதயே நா என் நண்பர்களுக்கும் எடுத்து சொல்வேன். நல்ல பதிவு ஹுஸைனம்மா, நன்றி

Thenammai Lakshmanan said...

அருமயான அம்மா.. அருமையான புள்ள..

என்னோட பதிவை பாருங்க..

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புகளை இன்றோ நாளையோ அனுப்புங்க..

சாந்தி மாரியப்பன் said...

சுவாரஸ்யம்தான் :-))

ஹுஸைனம்மா said...

காதர்பாய் (உங்க பேர் இதில்லன்னு தெரியுது, இருந்தாலும் பரவால்ல)

ஏன்னா, பொண்ணு காலத்துக்கும் நல்லாருக்கணும்னு நினைக்கிற தகப்பன், மாப்பிள்ளையோட வசதியவிட, குணம், குடும்பம், படிப்பு, வேலை எல்லாத்தையும்தான் பாப்பாங்க. அதனாலத்தான், ஓகே!!

அன்புடன் மலிக்கா said...

அன்று அம்மாவின் சிக்கனம்
அதுதானே இன்று நமக்கு பாடம்.
அவர்களின் செயல்களுக்குள்
நிச்சயம் அர்த்தமிருக்கும்
அதை உணரும் தருணம்
நமக்கும் பொருப்பு வந்திருக்கும்.

நல்ல பதிவு ஹுஸைனம்மா

அன்புடன் மலிக்கா said...

100வது இடுகைக்கு வாழ்த்துக்கள்
100வது இடுகைக்கு வாழ்த்துக்கள்
100வது இடுகைக்கு வாழ்த்துக்கள்
100வது இடுகைக்கு வாழ்த்துக்கள்..

குட்டிப்பையா|Kutipaiya said...

அம்மாக்கள் எல்லாருமே இப்படித்தான் போல!!

அருமையான பகிர்வு!

எம் அப்துல் காதர் said...

ஹுசைனம்மா நீங்க சொன்ன சில விஷயங்கள் (பீடி சுற்றுதல் தவிர்த்து) எங்க குடும்பத்தில் யாரோ ஒருவர் சொல்வது போலவே பட்டது!! நினைவுகளை மறக்காமல் பகிர்ந்தமைக்கும், நூறாவது பதிவுக்கும் வாழ்த்துகள்.அருமை!!
:-))

எம் அப்துல் காதர் said...

// “உனக்கென்ன? முடியுள்ள மகராசி அள்ளிமுடி”ன்னேன்"//

இங்க இத 'தங்ஸ்' பார்த்துட்டு, சிக்கு விழாம இருந்தா ஈஸின்னு சொல்லிகிட்டே போராக!! க்கி..க்கி..

enrenrum16 said...

நிஜமாவே ரொம்ப நல்ல அம்மாங்க...தாயில்லாம வளர்ந்தாலும் நல்லாவே வளர்ந்துருக்காங்க...ஆனாலும் எப்பவும் அம்மாவை வாருகிற மாதிரி பேசியே புகழ்ந்துடறீங்க...(வஞ்சப்புகழ்ச்சி அணி ரொம்ப புடிக்குமோ?)...

இன்னொண்ணும் உங்க பதிவிலிருந்து புரியுது...சின்ன வயதில் சிக்கனத்தோடு வளர்க்கப்பட்டாலும் இப்ப ஒத்த ராணியா ராஜாங்கம் பண்றீங்கள்ல ;)...

நல்ல ரசிக்கத்தக்க இருந்தது பதிவு....

கோமதி அரசு said...

ஹீஸைனம்மா, அருமையான பதிவு.

அம்மாவின் செயல் கஞ்சத்தனம் அல்ல சிக்கனம் என்பதை உணர்ந்து கொள்ள அவர்கள் அம்மா ஆகும் போது தான் தெரியும்.

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மின்மினி RS said...

அருமையான பகிர்வு.. ஹூசைனம்மா அக்கா.. கலக்கிட்டீங்க.. அப்புறம் பட்டுச்சேலை கிடைத்ததா.. காலேஜ் பங்சனுக்கு..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அப்ப இருந்து இப்பவரை மேடம் அடிச்சு தூள் கிளப்புறாங்க!! லேட்டஸ்டா வைரக்கம்மல் வாங்கப் போறதாச் சொல்லிகிட்டிருந்தாங்க. “உனக்கென்ன? முடியுள்ள மகராசி அள்ளிமுடி”ன்னேன்!!//

:))

நல்ல இடுகை ஹூசைனம்மா..

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு. என் அம்மாவும் இதே போல் தான் இருந்தாங்க இருந்ததினால் தான் நாங்க இன்று நல்லா இருக்கோம்.

தராசு said...

நாஸ்டால்ஜியா-----

சுவராஸ்யம்.

ஸ்ரீராம். said...

சில வரிகளில் ஒரு சுவாரஸ்ய வாழ்க்கை அனுபவம்..

Anisha Yunus said...

//முதலில் நம்பாமல், அதிர்ச்சியோடு பார்த்த நான், பிறகு காரணம் புரிந்து புன்னகைத்தேன்!!//

ஆமா அதென்ன ரகசியம்னு சொல்லவே இல்ல? நல்ல பதிவு....ஊர் ஞாபகம் வந்துடுச்சா? :)

PUTHIYATHENRAL said...

உங்களுடைய பதிவுகள் ரொம்பவும் நல்லா இருக்கு. என் பெயர் அபூசுமையா நான் அமெரிக்காவில் இருக்கிறேன். உங்கள் எழுத்து பணி தொடர என் வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள் கருத்து சொல்லுங்கள். உங்கள் கருத்து வரவேற்கபடுகிறது.

ஹுஸைனம்மா said...

ஜமால் - வாங்க, அதேதான்..

முகுந்த் அம்மா - நன்றி, கண்டுபிடிச்சுட்டீங்களா! ஆமா, நானும் இப்ப என் புள்ளைங்கட்ட ‘கஞ்சப் பிசினாறி’ன்னு பட்டம் வாங்கியாச்சு.

சுல்தான் பாய் - வாங்க. ஆமாங்க, இப்பல்லாம் பசங்க எப்படிலாம் வெரைட்டி வெரைட்டியா கேட்குறாங்க.. ஆனாலும், நான் கொஞ்சமா கண்ட்ரோல்ல வச்சுருக்கேன் (டிரை பண்றேன்).

ஸ்டார்ஜன் - ஏங்க? வாசல் வரை வந்துட்டு அப்படியே போயிட்டீங்க?

ஹுஸைனம்மா said...

முத்துலெட்சுமிக்கா - ஆமாக்கா, இப்ப அவங்க ‘ஃப்ரீபேர்ட்’!!

கவிசிவா - எனக்கும் ‘நம்ம அம்மாதானா’ன்னு தான் தோணும். நான் அப்பப்ப சொல்லியும் காட்டுவேன். :-))

ராஜாகமால் - வாங்க, நன்றிங்க.

இளா - வாங்க. எங்க சுத்தினாலும், மறுபடி புடவையிலேயே வந்து முடிச்சுட்டோம்ல!!

ஹுஸைனம்மா said...

மனோக்கா - ஆமாக்க, அந்தப் பாடங்கள், அனுபவங்கள் ரொம்பவே பயனுள்ளதாருக்குக்கா இப்ப. சிலசமயம் எங்கம்மாக்கே நான் சிக்கனம் சொல்லித் தாரேன்!! நன்றிக்கா.

தமிழ்ப்பிரியன் -எப்பவும் ஸ்மைலிதானா? அவ்ளோ பிஸி!!

சுந்தரா - வாங்க. ஆமா, பிற்காலத்துலதான் அவங்க செயல்களுக்குப் பலன் கிடைக்க ஆரம்பிக்குது.

சித்ரா - ரொம்ப நன்றி சித்ரா.

நிஜாம் பாய் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

பிரதாப் - நன்றி. உங்களுக்கே புதுசா இந்த டயலாக்!!

ஸாதிகாக்கா - அதான், பெண்களைப் பத்தி நீங்க ரொம்பப் ‘பெருமையாப்’ போட்டு, எதிர்வினை புரிஞ்சுட்டீங்களோ? ;-))

முஹம்மது ஜி- நன்றிங்க.

மேனகா - நன்றிப்பா.

காதர் - நன்றி.

தமிழ் உதயம் - நன்றி.

ஹுஸைனம்மா said...

தென்றல் - வாங்கப்பா. நன்றி.

அபுநிஹான் - ஆமாங்க. அம்மாதான் சிறந்த பொருளாதார நிபுணர். நன்றி.

தேனம்மைக்கா - நன்றிக்கா.

அமைதிச்சாரல் - நன்றி.

மலிக்கா - கவிஞரம்மா, கவிதையாவே பதில் சொல்லிட்டீங்க. வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

குட்டிப்பையா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அப்துல்காதர் - எல்லா அம்மாவும் இப்படித்தான் போல (அந்தக் காலத்துல)!! தங்ஸ் கமெண்ட் சூப்பர்! (உங்க நிலைமை புரியுது! பாவம்!)

என்றும் - நன்றிங்க. யாரு நானா ஒத்தை ராணியா ராஜாங்கம் பண்றேன்? நீங்க வேற... அந்தக் கதைய ஏன் கேக்குறீங்க.. என்ன வாங்கிக் கேட்டாலும், உனக்கென்ன பொண்குழந்தையா இருக்குது? இதெல்லாம் எதுக்குன்னு கேக்குறாங்க.. அவ்வ்வ்..

கோமதிக்கா - ஆமாக்க, இப்பத்தான் அவங்க அருமை தெரியுது. நன்றிக்கா.

மின்மினி - வாங்க. பட்டு எங்க கிடைச்சுது? ’பட்டுப்போல’ ஒரு சேலை கிடைச்சுது!!

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - வாங்கப்பா; நன்றி.

தராசு - வாங்க, சவுக்கியமா?

ஸ்ரீராம் - வாங்க. நன்றி.

அன்னு - புரியலையா? நீங்க வீட்டுக்கு ஒரே பொண்ணோ? :-)))

புதிய தென்றல் - வாங்க அபூசுமையா. கருத்துக்கு நன்றி.

Jaleela Kamal said...

இத படிச்சதும் எனக்கும் எல்லா ஞாபகங்களும் அசை போடுது
எங்க உம்மா பீடி சுற்றுதல் பதிலாக,ஹோம் மேட் பாஸ்தா தயாரித்து விற்றது.. சும்மாவா 5 கொமருகளை கரை சேர்க்கனுமே.

Jaleela Kamal said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அப்படியே எங்க அம்மாவ பத்தி சொன்ன மாதிரி இருந்தது... இப்பவும் அப்படி தான் அம்மா... நாங்க எடுத்து குடுத்தாலும் "எனகெதுக்கு"னு டயலாக் வேற... ஹா ஹா

Congrats on 100th post...