Pages

  XX & XY: யாருக்காக..




அலுவலகம் சென்று வர அன்று முதல் ஏற்பாடு செய்திருந்த புது கார் லிஃப்ட்டில், மாலை,  எனக்குமுன்னே இருந்த பெண் பதட்டமாக ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு பேசியதில், யூகித்தது போலவே, டெலிவரி முடிந்து அலுவலகம் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அந்தப் பெண் எனது ‘பிரசவத்திற்குப் பின் வேலை’ அனுபவத்தைக் கேட்டாள். நான் இரண்டு பிரசவத்தின் போதும் வேலையை ரிஸைன் செய்துவிட்டிருந்ததைச் சொன்னதும்  “யூ ஆர் ஸோ லக்கி” என்றாள்.  குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு ஃபிலிப்பைன்ஸிலிருந்து வந்ததும் ஐரின் சொன்ன அதே வார்த்தைகள்.

எனக்கும் ஷைனி, வாசுகி ஞாபகங்கள் வந்தன.  ஷைனி, ஹார்மோன் பிரச்னைகளால், முதல் குழந்தைக்கு எடுத்ததுபோலவே, ஒரு வருடம் ட்ரீட்மெண்ட் எடுத்தபின் பிறந்த லட்டுபோன்ற பெண்குழந்தையை, பிரசவம் பார்க்க அபுதாபி வந்த அம்மாவோடேயே இந்தியாவுக்கு அனுப்பி விடப்போகிறேன் என்று சொன்னதும், என் கையிலிருந்த குழந்தையைப் பார்க்கப் பரிதாபமாகத் தோன்றியது. இதற்கு வாசுகி எவ்வளவோ பரவாயில்லையோ எனத் தோன்றியது. “வேலை பாத்துகிட்டு ஒரு குழந்தையைப் பாத்துக்கிறதே கஷ்டமாயிருந்ததால ஒண்ணே போதும்னு நினைச்சேன். ஆனா, இப்ப என்னைவிட என் பிள்ளை ரொம்ப வருத்தப்படறா. இனி என்ன செய்ய முடியும்?” - சொன்னது வாசுகி.

பெண்ணீயம், பெண்ணுரிமை, சொந்தக்காலில் நிற்பது என்று நிறையப்  பேசிக்கொண்டிருந்தாலும்,  ’பிரசவத்திற்குப் பின் வேலை’ என்பது ஒரு குழப்பத்தையே எனக்கும் தந்திருந்தது. ஆனாலும், தன்னிச்சையாக, முழுமனதாகத்தான் வேலையை விடுவது என்று முடிவெடுத்தேன். முதல் காரணம் தாய்ப்பால். இரண்டாவது, நிறுவனங்களில் மெட்டர்னிடி லீவு என்பது குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலமாவது இல்லாத பட்சத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்பதாலும்.

குழந்தைகள் வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்குமே பங்குண்டு. ஆனால், குழந்தை பெறும் உடலமைப்பு பெண்ணுக்கு மட்டுமே அமைந்திருப்பதால் (XX & XY  :-))) )  பச்சிளங்குழந்தையைப் பேணுவதில் தாய்க்கே பெரும்பங்கு உண்டு என்பது என் நம்பிக்கை.  தற்காலத்திய வேலைகளின் பளுவால், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று பெரிய பெரிய விஷயங்களெல்லாம் சிறுவயதிலேயே வரும்போது, ஒருவரேனும் ரிலாக்ஸ்டாகக் குழந்தையோடு இருப்பது அவசியம். அது ஏன் தாய் என்று கேட்டால், முதலில் சொன்னதுபோல, தாய்ப்பால். இன்னும் அழுத்திக் கேட்டால், Why XX & XY? Why not only XX or XY? என்பதுதான் என் பதில்க்கேள்வியாக இருக்கும்.

இருவருக்குமே கடமை என்று சொல்லிகொண்டு, இருவருமே ‘கேரியரைக்’  கெடுத்துக் கொள்வதற்குப் பதில், ஒருவரின் கேரியர் கிராஃபிலாவது கீறல்கள் இல்லாமல் இருக்கட்டுமே என்றுதான் நான் நினைப்பேன்.  குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.

பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க   அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.

குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.

எனில், என் உரிமைகளை எப்படி விட்டுக் கொடுப்பது, என் சுயமரியாதை என்னாவது என்றெல்லாம் பெண் கேட்கலாம்; ஆனால், குழந்தையின் உரிமைகளை அதற்குக் கேட்கத் தெரியாதே? மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் உரிமைகள் உண்டு - குழந்தையே ஆனாலும்!! பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டுமே நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது  தவறுதானே? :-))

சில காலத்திற்குப் பிறகு, பெற்றோரின் ஃபிஸிக்கல் அருகாமை அதிகம் தேவைப்படாத பள்ளிப் பருவத்தில், குடும்பச் சூழ்நிலைகள்  - கணவர்/குழந்தைகள் ஒத்துழைப்பு/ஆதரவு, பிள்ளைகளின் மனநிலை, பொறுப்புகள், உடல்நிலை etc. - பொறுத்து மீண்டும் வேலைக்குத் திரும்புவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

இன்னுமொரு விஷயம் அவதானித்தீர்களென்றால், பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே  கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம்.  என்னிடம் இங்கு அபுதாபியில் முன்பு வீட்டு வேலை செய்த பெண்கள் மூவரும், இங்கே கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்புவதை, ஊரில் அவர்களது கணவர்/ (திருமண வயது) மகன்கள்/உடன்பிறப்புகளே அனுபவிக்கின்றனர் - திருநெல்வேலியில் வீட்டுவேலை செய்தவர்கள் சொன்னது  போலவே.

டாஸ்மாக்கில் நிற்பவர்களில் பாதிப்பேர்களின் வீட்டிலாவது தாய்/மனைவி/சகோதரி/மகள் என்று எந்தப் பெண்ணின் சம்பாத்தியமாவது இருக்கும். அந்தச் சம்பாத்தியம் குடும்பத்திற்குச் சோறு போட,  இவன் சம்பளம் டாஸ்மாக்கில் அரசுக்கு வருமானம் தருகிறது!!  வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன்?” என்பதுதானே பதிலாக இருக்கும்? பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது? ஐ.டி. பெண்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாம், இவர்களை மட்டும் ஏன் பரிதாபமாகப் பார்க்கிறோம்?

அடித்தட்டு மக்களிடம் மட்டுமின்றி, நடுத்தரக் குடும்பங்களிலும் இது சர்வசாதாரணமாகவே இருக்கிறது. என்னுடன் முன்பு பணிபுரிந்த சிந்து, காலை ஆறரைக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், மாலை ஏழரைக்குத்தான் திரும்புவாள். கதவைத் திறந்து வீட்டில் நுழையும்போதே இறைந்து கிடக்கும் துணிமணிகளிலிருந்து ஆரம்பிக்கும் வேலை, நடுநிசியாகும் முடிவதற்கு. அவளின் சம்பளம் முழுவதும், ஆன்லைன் ஷேர் டிரேடிங்குக்கும், ஊரில் சொத்துபத்து வாங்குவதற்கும் பயன்படுகிறது. ஆனால், இங்கு ஒரு வேலையாள் வைத்துக் கொள்ள அனுமதியில்லை அவளுக்கு!! ரிஸஷனில் வேலைபோய்விடுமோ என்று எல்லாரும் பயப்பட, தனக்குப் போய்த்தொலையட்டுமே என்று நினைத்தவள் அவள். அப்படியாவது ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்குமே என்று. (ஒரு வாரத்துக்குள் வேறு வேலையில் கணவர் சேர்த்துடுவாராம்!!). இன்னும் நிறைய உதா’ரணங்கள்’ உண்டு!!

அத்தோடு, சமீப காலங்களாக  டீனேஜர்கள்/இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள், குடி போன்ற தவறான பழக்கங்கள், அதிகமான விவாகரத்துகள் ஆகியவற்றிற்கும் பெண்கள் வேலை செய்வதுதான் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இருங்கள் - வேலைக்குப் போகும் பெண்கள் திமிர் பிடித்தவர்கள் என்று கூவும் கூட்டத்தைச் சேர்ந்தவளல்ல நான். வீட்டில் இருவரும் வேலைக்குப் போவதால், இக்காலத்திய, அதிக ப்ரொடக்டிவிட்டியை டிமாண்ட் செய்யும், நீண்ட நேர, ஸ்ட்ரெஸ் மிகுந்த வேலைகள் கேட்கும் பலிகள் இவை எனலாம். இதையெல்லாம் சமாளிக்கக்கூடிய விதத்தில்,  ஒருவரின் வேலை கடினமாக இருந்தால், ஒருவரின் வேலை குடும்பத்துக்கு அதிக நேரம் செலவழிக்கும்படி இருத்தல் அவசியம்.

இவ்வாறு நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் இன்னொரு பாதை: சுய தொழில்! அதான், வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும்!! அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களைப் போலலல்லாது, எல்லா துறையின் நுணுக்கங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பர். மேலும், எந்தவிதமான புற அழுத்தங்களாலும் பாதிப்பில்லாமல் முழுச் சுதந்திரத்தோடு,  தன் வேலையை அர்ப்பணிப்போடும் செய்ய முடிகிற அதே சமயம்,  குடும்பத்தையும் மிஸ் பண்ண மாட்டாங்க.

வேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்..  இல்லை..  காலில்!!
 
  
  
 

Post Comment

70 comments:

Chitra said...

வேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்.. இல்லை.. காலில்!!


......தத்துவத்தில - பின்னி "பெடல்" எடுத்திட்டீங்க!!! சூப்பர்!

சாந்தி மாரியப்பன் said...

//குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்//.

நச்ன்னு சொன்னீங்க ஹுஸைனம்மா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சிலசமயம் விட்டுடலாம்ன்னு நினைச்சாலும், வீட்டுலேயே இருப்பது (அதுவும் இந்த நாட்டில்) மிகச் சிரமமாக இருக்கும் என்று உணர்ந்திருக்கிறேன். வேலைக்குப் போய் வீட்டையும் கவனிப்பதைக் காட்டிலும், இது சிரமம் :)..

ம்ம்.. வேலை என்பது பணம் சம்பாதித்து தருவது என்பதை விட, இத்தனை நாளாய் கல்வியாய்க் கற்றதை உற்ற முறையில் பயன்படுத்தி, மன திருப்தியை வழங்கக் கூடிய ஒன்றாகத் தான் நான் பார்க்கிறேன்.. ஒன்னு ரெண்டு வருஷத்துல நிலைமை எப்பிடியோ.. பார்க்கலாம்..

bandhu said...

இதே சிந்தனைகளுடனேதான் என் மனைவி வேலைக்கு செல்வதை விரும்பவில்லை. எங்கள் தேவைகளை வருமானத்துக்கேற்றது போல் குறைத்துக்கொண்டோம். அதனால் குறை ஒன்றும் இல்லை!
என் நண்பர் குடும்பம் அதிலும் வித்யாசமானது. கணவர் அமெரிக்கர். மனைவி சைனிஸ். திருமணமாகி 23 வருடங்களாகிறது. முதல் குழந்தை பிறந்தவுடன் அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம். யாருக்கு சம்பளம் கம்மியோ அவர்கள் வேலையை விட்டுவிடவேண்டும். முதல் சில வருடங்கள், மனைவி வேலையை விட்டார். பிறகு மனைவிக்கு பெரிய வேலை கிடைத்தவுடன் , 3 வருடங்களுக்கு பிறகு, கணவன் வேலையை விட்டார். கடந்த 12 வருடங்களாக இப்படியே இருந்து வருகிறார்கள்!

Anisha Yunus said...

நல்ல பதிவு ஹுஸைனம்மா,

//கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன்?” என்பதுதானே பதிலாக இருக்கும்? //

எனக்கும் வீட்டில் இருந்து ஜுஜ்ஜூவை பார்த்துக் கொண்டு கூடவே மார்க்க சம்பந்தமாய் எதுவும் படித்துக் கொண்டே நாள் கடத்த வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் பிறந்த வீட்டில் எகானமி மிக மிக டைட்டாக உள்ளாதாலேயே வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியுள்ளது...புலம்பிக் கொண்டே... :(

எல் கே said...

/பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை. //


அருமை ஹுசைனம்மா.. உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்

தாராபுரத்தான் said...

//வேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில்/
நிச்சயமாய்./

எம்.எம்.அப்துல்லா said...

// டாஸ்மாக்கில் நிற்பவர்களில் பாதிப்பேர்களின் வீட்டிலாவது தாய்/மனைவி/சகோதரி/மகள் என்று எந்தப் பெண்ணின் சம்பாத்தியமாவது இருக்கும். அந்தச் சம்பாத்தியம் குடும்பத்திற்குச் சோறு போட, இவன் சம்பளம் டாஸ்மாக்கில் அரசுக்கு வருமானம் தருகிறது!! வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன்?” என்பதுதானே பதிலாக இருக்கும்? பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது? ஐ.டி. பெண்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாம், இவர்களை மட்டும் ஏன் பரிதாபமாகப் பார்க்கிறோம்?

//

well said.

Unknown said...

Really very very good article one. Now a days younger genration women forget all those things and fight with their partners. Freedom is very very important. But going to job or earn money by their own is not only give freedom. Mutual understanding with their families only give good life.

சைவகொத்துப்பரோட்டா said...

//குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது.//

அழகாய் சொல்லி உள்ளீர்கள்.

கவிதா | Kavitha said...

ஹே சூப்பர் போஸ்ட்ப்பா :))

//பெண்ணீயம், பெண்ணுரிமை, சொந்தக்காலில் நிற்பது என்று நிறையப் பேசிக்கொண்டிருந்தாலும், ’பிரசவத்திற்குப் பின் வேலை’ என்பது ஒரு குழப்பத்தையே எனக்கும் தந்திருந்தது. ஆனாலும், தன்னிச்சையாக, முழுமனதாகத்தான் வேலையை விடுவது என்று முடிவெடுத்தேன். முதல் காரணம் தாய்ப்பால். இரண்டாவது, நிறுவனங்களில் மெட்டர்னிடி லீவு என்பது குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலமாவது இல்லாத பட்சத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்பதாலும்.

குழந்தைகள் வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்குமே பங்குண்டு. ஆனால், குழந்தை பெறும் உடலமைப்பு பெண்ணுக்கு மட்டுமே அமைந்திருப்பதால் (XX & XY :-))) ) பச்சிளங்குழந்தையைப் பேணுவதில் தாய்க்கே பெரும்பங்கு உண்டு என்பது என் நம்பிக்கை. தற்காலத்திய வேலைகளின் பளுவால், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று பெரிய பெரிய விஷயங்களெல்லாம் சிறுவயதிலேயே வரும்போது, ஒருவரேனும் ரிலாக்ஸ்டாகக் குழந்தையோடு இருப்பது அவசியம். அது ஏன் தாய் என்று கேட்டால், முதலில் சொன்னதுபோல, தாய்ப்பால். இன்னும் அழுத்திக் கேட்டால், Why XX & XY? Why not only XX or XY? என்பதுதான் என் பதில்க்கேள்வியாக இருக்கும்.//

ம்ம்ம் why not ?? :)))))
I second your words !!

கவிதா | Kavitha said...

என்னோட நிறைய பதிவுகளின் சாரத்தை ஒரே பதிவில் கொண்டு வந்துட்டீங்க.. சூப்பர்..!! :)) என்னவோ.. படித்து முடித்த பிறகு ஹூம்ம்னு...ஒரு பெரிய பெருமூச்சி வந்தது.. ஏன்னே தெரியல.. :)

தமிழ் உதயம் said...

தாங்கள் சொன்ன அத்தனையும் ஏற்று கொள்ளக்கூடியவை.

மங்குனி அமைச்சர் said...

அத்தோடு, சமீப காலங்களாக டீனேஜர்கள்/இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள், குடி போன்ற தவறான பழக்கங்கள், அதிகமான விவாகரத்துகள் ஆகியவற்றிற்கும் பெண்கள் வேலை செய்வதுதான் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.////

மிகச்சரியாக சொன்னீர்கள் மேடம்

புதிய மனிதா. said...

அருமை ..

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது தவறுதானே? :-))//

//இன்னும் நிறைய உதா’ரணங்கள்’ உண்டு!!//

எனக்கு பிடித்த வரிகள்

என்னுடன் வேலை செய்யும் சகோதரியும் இதைப் போலவே சொல்கிறார்கள். குழந்தை பிறந்ததும் இந்தியாவில் விட்டு விட்டு துபையில் வேலை செய்து விட்டு, இப்போது குழந்தை 1 வயது நிரம்பியவுடன் மறுபடியும் தாயுடன் இருக்கிறது. ஆனால் என்ன பயன், குழந்தையின் ஆரோக்கியமான வளரும் சூழல் இப்போது இல்லையே, குழந்தையை baby sitting இல் விட்டு விட்டு தினமும் என்னிடம் புலம்புவார், சரியாக கவனிப்பதில்லை, டி.வி. போட்டு விட்டு கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்று. அதுமட்டுமா, வேலை விட்டு போனவுடன், குழந்தையை அழைத்து வருவதில் ஆரம்பித்து சமையல், வீட்டு வேலை என்று எல்லா வேலைகளையும் முடிப்பதற்கே நள்ளிரவாகிறது என்று கூறுகிறார். பணம் சம்பாதிக்கும் கடமை ஆண்களுக்குரியது, குடும்பத்தை நிர்வகிக்கும் கடமை பெண்களுக்குரியது, இது உலக நியதி.

நட்புடன் ஜமால் said...

என்ன சொல்றதுன்னே தெரியலீங்க

நான் அபுதாபியில் இருந்த காலத்திலும் சில பிலிஃபைன் பெண்கள் குழந்தை பெற்றவுடன் பாட்டியிடம் விட்டு விட்டு வேலைக்கு வந்து விடுவார்கள், அந்த சமயங்களில் எனக்கு குழந்தை இல்லை

என்னவோ இப்பவும் பதறித்தான் வருது

நல்ல இடுக்கைங்க

Unknown said...

மிக அருமையான விவாதங்கள், நற்சிந்தனை, நேர்த்தியான முடிவுகள். அருமையான இடுகை ஹூஸைனம்மா. இதுவே உங்கள் பதிவில் மணிமகுடமாய் ஜொலிக்கப் போகும் இடுகை. வாழ்த்துக்கள்..

Unknown said...

எனக்கு தெரிந்து ஒரு பெண், தன் குழந்தை துபையில் பிறந்தும், உதவிக்கு வந்த தாயிடமே குழந்தை அனுப்பப்பட்டு இந்தியாவில் வளர்ந்தது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை போய் பார்த்தும் வந்தார்கள். இவர்கள் இரண்டு வருடத்துக்குப் பின் குழந்தையையும் அம்மாவையும் துபைக்கு அழைத்து வந்து பழக்கி விட்டு விட்டு போகச் சொன்னபோது, குழந்தை அம்மம்மாவைத்தான் அம்மா என்கிறது. எவ்வளவு சொல்லியும் அம்மா என்று நீண்ட நாட்கள் சொல்லாமலேயே இருந்தது.
பெற்ற தாய் மிகுந்த வருத்தப்பட்டதோடு, தன் போட்டாவைக் காட்டி இதுதான் அம்மா, தான் அம்மம்மா என்று சொல்லாமல் வளர்த்தார் என்று கூறி தன் தாயிடமே நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தார்.

பெற்ற கைக்குழந்தையை விட்டு விட்டு எப்படி ஒரு தாயால் இருக்க முடியும். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என என் தங்ஸ் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும்.

kavisiva said...

நல்ல பதிவு ஹுசைனம்மா! என்ன சொல்வது என்றே தெரியவில்லை இப்படிப் பட்டவர்களை :(

//வேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்.. இல்லை.. காலில்!!//

இன்று ப(சி)லரும் செருப்புக்கேற்ற காலாக மாறத்தானே ஆசைப்படுகிறார்கள் :(

Deepa said...

நல்ல அலசல் ஹுஸைனம்மா.
//குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.
// நிச்சயமாக‌. ஆனால் இதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள்? பணம் சம்பாதிப்பவர் கை ஓங்கி இருப்பது தானே பெரும்பாலும் நிதர்சனம்?

ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும் உதா'ரணங்களில்' அந்தப் பெண்களின் நிலைமை கொடுமையாக இருக்கிறது. :(

அரபுத்தமிழன் said...

//பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.//
//அவளது வருமானம் ஒரு உபரியாகவே கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம். எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.//
உண்மையை உரத்து(அங்கங்கே சிரித்து)ச் சொல்லியிருக்கிறீர்கள்.
இப்பல்லாம் பிளாக் எழுதலாம் போரடிக்காது. ஆப்பிஸர் நீங்களே அடிக்கடி பதிவு போடும்போது அவங்கள்ளாம் எவ்வளவோ எழுதலாம். ஆனா ஒண்ணு,
ஸ்கூல்,மருத்துவனை போன்ற அத்தியாவசியமான இடங்களில் பெண்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டும்.

Rithu`s Dad said...

கலக்குறீங்க ஹுஸைனம்மா!! உங்கள் பதிவுகளனைத்தும் மனதை ஊடுருவி உண்மைகளையும் நிதர்சனங்களையுமே உறைக்கின்றன.. பல சமயங்கள் ஏன் தான் இந்த வலைதளத்தில் எல்லாரும் எழுதுறாங்களோனு (பின்ன எப்பவும் ஒருத்தருத்துகொருத்தர் சண்டை மட்டுமே போட்டுகிட்டிருந்தா.. )வருத்தப்பட்டுட்டே இருப்பேன். உங்க பதிவு படிக்கிறப்போ எல்லாம் அதை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்..

மிக அழகாக எழுதுவதவிட உண்மயானதும் பிராக்டிகலான எழுத்தும் என்றுமே மனதில் இருக்கும் என்பதற்க்கு உங்கள் பதிவுகளே உதாரணம்.. தயவு செய்து இனியும் இதையே செய்யுங்கள்..

ஒலக இலக்கணம்.. இலக்கியம்..தலக்கனம்..னு அதுக்கெல்லாம் நிறையவே ஆட்கள் இருக்கிறார்கள்.. :)

வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது? ஐ.டி. பெண்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாம், இவர்களை மட்டும் ஏன் பரிதாபமாகப் பார்க்கிறோம்?//

ம்..குழப்பம் தான்..

ரொம்ப நிதானமா பல விசயங்களை கையாண்டிருக்க்கீங்க..
நல்லா வந்திருக்கு பதிவு..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப அருமையான கருத்துக்கள் ஹூசைனம்மா. எல்லோரும் சிந்திக்கவேண்டியவை. வாழ்த்துகள். மேலும் தொடருங்கள்.

ஸ்ரீராம். said...

கடின சூழ்நிலைகளை உரத்து சிந்தித்து இருக்கிறீர்கள். அருமை.

கிளியனூர் இஸ்மத் said...

பெண்களுக்குரிய பிரச்சனைகளை ஆண்கள் சொல்வதைவிட பெண்கள் சொல்வதே சிறப்பு...நல்ல அலசல்....

Geetha6 said...

"இருவருமே ‘கேரியரைக்’ கெடுத்துக் கொள்வதற்குப் பதில், ஒருவரின் கேரியர் கிராஃபிலாவது கீறல்கள் இல்லாமல் இருக்கட்டுமே என்றுதான் நான் நினைப்பேன். "

மிகவும் சரியாக சொன்னீர்கள் .
வாழ்த்துகள்!

NADESAN said...

குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது

உண்மை

நல்ல தெளிந்த விளக்கம்

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சரியாக சொன்னீர்கள்

Radhakrishnan said...

கடைசி வரிகளில் எல்லா விசயங்களும் அடங்கும்.

Prathap Kumar S. said...

என்னமோ போங்க இப்பல்லாம் உங்க பதிவு எதுவுமே புரியமாட்டேங்குது....
டிரங்குபொட்டியாவது போட்டு வுடுங்க... அதாச்சும் புரியுதான்னு பார்ப்போம்...:)

Prathap Kumar S. said...

நச்சுன்னு சொன்னீங்க ஹுசைனம்மா, சூப்பரா சொன்னீங்க ஹுசைனம்மா, நல்லா சொன்னீஙக ஹுசைனம்மா, அழகா சொன்னீங்க ஹுசைனம்மா,
அருமையா சொன்னீஙக ஹுசைனம்மா
இப்படி எல்லாரும் சொல்றாங்க அதான் நானும் சொல்லிக்கிறேன்...:)

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப்™ said...
என்னமோ போங்க இப்பல்லாம் உங்க பதிவு எதுவுமே புரியமாட்டேங்குது...//

அப்ப நானும் இலக்கியவாதி ஆகிட்டேனா?? ;-)))))

CS. Mohan Kumar said...

நல்ல பதிவு மேடம்; பெண்கள் வேலைக்கு போவதால் அதிக சுமை அவர்களுக்கு தான். என்னை பொறுத்த வரை அவர்கள் ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் வேலை செய்ய கூடிய மாதிரி வேலை கிடைத்தால் படித்த படிப்பும் உபோயோகப்படும்; குடும்பமும் affect ஆகாது. ஆனால் நீங்கள் சொன்ன படி இது அவரவர் சூழல் சார்ந்த விஷயம்

அன்புடன் மலிக்கா said...

/பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை./

இதுபோன்று நிறைய நல்ல விசயங்கள் சொல்லியிருக்கீங்கள் ஹுஸைனம்மா.

நல்லத்தொரு விளக்கவுரை..

வல்லிசிம்ஹன் said...

உலகத்தில் 50% பெண்கள் கட்டாயத்தின் காரண்மாகத்தான் வேலைக்குப் போகிறார்கள். அதுவும் ஏழ்மைக் கோடுக்குக் கீழ் இருக்கும் பெண்ணின் சம்பளம் கந்து வட்டிக்கும் கணவனின் குடிக்கும் போகிறது. பாவப்பட்ட ஜன்மங்களுக்கு என்று விடுதலையோ. A very good post Hussainamma. Congrats.

ஜெயந்தி said...

நீங்கள் சொல்லியிருக்கும் நிறைய விசயங்கள் உண்மைதான்.

வேலையை விடுவது என்பது கொஞ்சம் பேருக்கு சரிப்படும். பொறுப்பான பதவிகளில் உள்ள பெண்களுக்கு? ஐஏஎஸ், ஐபிஎஸ், மகப்பேறு மருத்துவர் போன்ற முக்கிய பதவிகளில் இருக்கும் பெண்கள் வேலையை ரிசைன் பண்ணுவது சரிப்படுமான்னு தெரியல. பெனாசிர் புட்டோ அவர்கள் எல்லாம் குழந்தை பிறந்த நேரத்தில்தான் முழு மூச்சாக அரசியலில் ஈடுபட்டிருந்தார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு அவங்க கம்பெனியில் மூன்று மாதம் பிரசவகால விடுப்பும் தந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொல்லியிருந்தார்கள். இதுபோன்ற வசதிகள் பெண்களுக்குச் செய்து கொடுத்தால் பெண்களின் அறிவும் முழுதாக சமுதாயத்திற்கு பயன்படும்தானே?

//வேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்.. இல்லை.. காலில்!!//
நறுக்குனு சொல்லியிருக்கீங்க.

முகுந்த்; Amma said...

ஹுஸைனம்மா, நல்ல இடுகை.

என்னுடைய அனுபவம் இது. நானும் முகுந்த் பிறந்தவுடன் வேலையை விட்டு விட்டேன். காரணம் எனக்கு மட்டர்னிட்டி லீவு வெறும் ஆறு வாரம் தான்.

குழந்தைக்காக வேலை விட்டு வீட்டில் இருப்பது , குழந்தையை நன்கு வளர்க்க உதவும் தான். ஆனாலும் உங்களின் career கேள்விக்குறியாகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனாலும் நான் இருக்கும் research இல் நான் விட்ட ஒரு வருட ப்ரெக், என்னை career இல் இருந்து ஒதுக்கி வைத்து விட்டது என்றே சொல்லாம். அதனை தவிர உங்களின் financial independence ம் அடி பட்டு போய் விடும்.

இவை எல்லாம் என்னுடைய அனுபவம் மட்டுமே.

ஸாதிகா said...

அருமையான அலசல் ஹுசைனம்மா.//குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.

பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை. // மிக அருமையாக சொல்லி இருக்கீங்க.பிடியுங்கள் பூங்கொத்தை.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான அழுத்தமான அலசல் ஹுஸைனம்மா.

கோமதி அரசு said...

//பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டும் நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது தவறுதானே?//

அருமை ஹீஸைனம்மா.

ரொம்ப அருமையாக உள்ளது பதிவு.

pudugaithendral said...

சான்சே இல்ல ஹுசைனம்மா,

அழகா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க. இதை ஏதாவது பத்திரிகைக்கும் அனுப்பிவைங்க. பலருக்கு கண் திறக்கும்

ஹுஸைனம்மா said...

சித்ரா - வாங்க. தத்துவமா? அப்ப நம்பர் போட்டுக்கிறேன்: தத்துவம்# 12897 ;-)))

அமைதிச்சாரல் - வாங்க. நன்றி.

எல் போர்ட் - வாங்க. எப்பவுமே ’மாத்தி யோசி’தான் நீங்க!! என் பதிவோட சாராம்சமே ‘க.மு, க.பி’ மாதிரி, பி.மு, பி.பி தான்!! (பிள்ளைகளுக்கு முன்/பின்!!) :-)) அதனால, நீங்க இப்ப கண்டினியூ!!

நீங்க சொன்னமாதிரி வேலை நமக்கு ஆறுதலா இருக்கக்கூடியதுதான். ஆனா, அதுவே பிரச்னைகளை உண்டாக்கக்கூடிய காலம் வந்தால்?

ஹுஸைனம்மா said...

பந்து - வாங்க. உங்க நண்பரின் ஐடியாவும் நல்லதே. அந்த மாதிரி சில குடும்பங்களைப் பத்தி விகடனில் படித்தேன். புரிந்துணர்வு உள்ளவர்கள் என்றால் எதுவும் சாத்தியமே!! நன்றி.

அன்னு - வாங்க. பர்வால்லையே, நீங்களும் வீட்டிலிருந்தே வேலை பாக்குறீங்களா? சந்தோஷம். சமீபமா, நிறைய பேர்கிட்ட இதைக் கேள்விப்படுறேன். நானும் யோசிக்கணும். நன்றி.

எல்.கே. - வாங்க, நன்றி.

ஹுஸைனம்மா said...

தாராபுரத்தான் சார் - வாங்க, நன்றி சார்.

அப்துல்லா - நன்றி. ரொம்பப் பிஸி போல!! :-))

ஷ்யாம் - வேலைபார்க்கலைன்னா நம்மள மதிக்க மாட்டாங்களோங்கிற பயம்கூட காரணமா இருக்கலாம் இன்றைய இளம்பெண்கள் வேலையை பிரதானமா நினைப்பது. ஒரு மெச்சூரிட்டி வந்தவுடன், எதுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு தெரிஞ்சுடும். நன்றிங்க.

சைவக்கொத்ஸ் - வாங்க. நன்றி.

ஹுஸைனம்மா said...

கவிதா - அட, நம்ம அணில்குட்டி!! வாங்க, வாங்க. உங்க கருத்துகளும் என் கருத்துகளோட ஒத்துப் போகுதுங்கிறதுல சந்தோஷம். பெருமூச்சு - நிம்மதிப் பெருமூச்சா இருக்கும்!! :-))

தமிழ் உதயம் - நன்றிங்க.

மங்குனி - நன்றி. ஆனா, நான் சொன்ன மாதிரி, அவங்களோட மன அழுத்தத்தைக் குறைக்க அறியாமல்தான் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

புதிய மனிதா - வாங்க, நன்றி.

ஹுஸைனம்மா said...

அபு நிஹான் - நன்றிங்க. ஒருசிலர் சில கட்டாயங்களால் அவ்வாறு குழந்தையைப் பிரிய நேரிடுகிறது. அப்படிக் கட்டாயங்கள் இல்லாதவர்கள் தவிர்ப்பது நல்லது.

ஜமால் - வாங்க, நன்றி. ஆமா, ஃபிலிப்பைன்ஸிலும் பெண்கள் வீட்டு வருமானத்தில் பங்கு பெற்றே ஆகவேண்டும் என்று அப்பெண்கள் சிலர் சொன்னார்கள். மேலும், இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, அங்கே பெண்களிடம்தான் ஆண்களும் சம்பளத்தைத் தர வேண்டுமாம்!! எனும்போது, ஏன் ஒருசில மாதங்கள்கூட வேலைபார்க்காமல் இருக்க முடியவில்லை என்பதற்குப் பதிலில்லை.

ஹுஸைனம்மா said...

சுல்தான் பாய் - வாங்க, நன்றி, நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது, பிரபல (பட்டிமன்றப்) பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் சொன்னது நினைவுக்கு வருகிறது: அவரது குழந்தை முதன்முதல் “அம்மா” என்று பேசியபோது, அலுவலகத்திலிருந்த அவருக்குத் தொலைபேசியில் சொன்னார்களாம். குழந்தை பேசியதற்கு மகிழ்ந்தாலும், பெற்ற தன்னை அம்மா என்று சொல்லாமல், யாரையோ அம்மா என்று சொல்கிறதே என்று வருந்தினாராம்.

அதுபோல, வெளிநாட்டில் தனியே வேலை பார்க்கும் சில ஆண்கள், ஊருக்குச் செல்லும்போது, குழந்தைக்குத் தான்தான் அப்பா என்பது தெரியவில்லை என்று வருத்தப்படுவார்கள். சிலர் அம்மாவிடம் கோவமும் படுவார்கள், ஏன் சொல்லி வைக்கவில்லையென்று!!

முடியுமெனில் பிரிவைத் தவிர்ப்பதே நல்லது.

ஹுஸைனம்மா said...

கவிசிவா - வாங்க. ஆமாங்க, தவிர்க்கக்கூடியதா இருந்தாலும் சிலர் பிடிவாதமா வேலைக்குப் போயே ஆகணும்னு போகும்போது, வருத்தம்தான். எப்பவுமே இழப்பைப் பின்னால்தானே புரிந்துகொள்வோம்?

தீபா - வாங்க. ஆமா, பணம் சம்பாதிப்பவர்தான் வலியவர் என்று தவறாக நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு, பெண்ணும் சம்பாதித்து, செலவைப் பகிர்ந்து கொண்டால், அவரது(ஆண்) பொருளாதாராம் இன்னும் பலப்படுமே? ஆக, பெண் தான் பலமடைவதாக நினைத்துக் கொண்டு, மறைமுகமாக ஆணுக்குத்தான் உதவி செய்யும் நிலைமையாகிறது என்பது என் கருத்து.

அரபுத்தமிழன் - //ஆப்பிஸர் நீங்களே அடிக்கடி பதிவு போடும்போது// அவ்வ்வ்.. போன பதிவுக்கும் இதுக்கும் எவ்வளவு இடைவெளின்னு பாருங்க.. போன பதிவுக்குப் பதில்கூட இன்னும் எழுதலை..
வீட்டிலிருந்தா பிளாக் நிறைய எழுதமுடியும்னு யாரு சொன்னா? அப்ப நீங்கள்லாம் வீட்டுக்குப் போய்த்தான் எழுதுறீங்களா? கொஞ்ச நாள் முன்னாடி ஆஃபீஸ்ல எல்லாரும் பாக்கிறபடி கண்ணியை வச்சுட்டாங்கன்னு அழுதது யாரு? :-))))

ஸ்கூல், ஹாஸ்பிட்டல், எங்கேயானாலும், ‘தனக்குப் போய்த்தான் தானமும் தர்மமும்’ என்பது என் பாலிஸி!!

ஹுஸைனம்மா said...

ரீத்து அப்பா - பாராட்டுக்கு நன்றி. நானும் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்பதால்தான் பிராக்டிகலாக எழுத முடிகிறது. மீண்டும் நன்றி.

முத்துலட்சுமிக்கா - வாங்க. நன்றிக்கா. (ஃபோட்டோவுல பார்த்தா, சின்னப் பொண்ணு மாதிரி இருக்கீங்க, அக்காவை வாபஸ் வாங்கலாம்போல! ;-)) )

ஸ்டார்ஜன் - வாங்க. நன்றி.

ஸ்ரீராம் சார் - வாங்க, நன்றி.

ஹுஸைனம்மா said...

இஸ்மத் பாய் - ஆமாம், பெண்களின் பார்வையில்தான் உண்மை தெரியும்!! :-))

கீதா - வாங்க, நன்றி. (உங்களோட பதிவுகள் சில மட்டும் சரியா பார்க்கமுடியலையே? ஏன்?)

நடேசன் - வாங்க, நன்றி.

வெறும்பய - வாங்க, நன்றி.

ஹுஸைனம்மா said...

ராதாகிருஷ்ணன் சார்- ஆமாங்க, அவங்கவங்கதான் முடிவு பண்ணனும். நன்றி சார்.

பிரதாப் - என்னை இலக்கியவாதியாக அடையாளம் காட்டியதற்கு நன்றி.

மோகன்குமார் - நன்றி. /பெண்கள் வேலைக்கு போவதால் அதிக சுமை அவர்களுக்கு தான். // ஆமா, அதையேதான் நானும் சொல்கிறேன். வீட்டிலிருந்து செய்யும் வேலைகள் இப்ப நிறைய இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். நன்றி.

ஹுஸைனம்மா said...

மலிக்கா - வாங்கப்பா, நன்றி.

வல்லிம்மா - ஆமா, சூழ்நிலைதான் பலருக்கும் காரணம். சொன்னதுபோல, அடித்தட்டு மக்கள்தான் படுகிறார்கள்.

ஜெயந்திக்கா - பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு சற்று சுதந்திரம் இருக்கும் அக்கா. நீண்ட விடுமுறை எடுப்பது, வேலை நேரம் போன்றவற்றில். அத்தோடு அவர்களுக்கு உறவினர்கள், வேலையாட்கள் என்று சப்போர்ட் சாதாரணமானவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதை வைத்துச் சமாளித்துக் கொள்வார்கள்.

அரசியல்வாதி வேலை என்பதும் ஓரளவு ஒரு ஃபிரீலான்ஸ் வேலை போலத்தானே?

நான் எதையும் பொதுப்படுத்தி விடவில்லை; சமூகத்தில் நடுத்தர, கீழ்த்தட்டு பெண்ளுக்குத்தான் இதனால் பாதிப்பு அதிகம் என்று சொல்ல வருகிறேன். நானும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் ஒரு ஆண்டாவது விடுப்பு தர முன் வரவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அல்லது இதுபோல வேறு ஆப்ஷன்கள் கொடுக்க வேண்டும். செய்தால், நானும் மகிழ்வேன்.

ஹுஸைனம்மா said...

முகுந்த் அம்மா - வாங்கப்பா. ஆமா, பிரேக்குக்கப்புறம் மீண்டு(ம்) தொடங்குவது சற்றே சவாலான விஷயம்தான். ஆனா, அதை முன்னிறுத்தி கொஞ்சம் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. (நான் எனது துறையை மாற்றிக் கொண்டேன்) ஐரோப்பிய நாடுகளிலும் மெட்டர்னிடி லீவு குறைவு என்பது புது தகவல். ஆறு மாதம் என்று எங்கோ படித்த ஞாபகம்.

ஸாதிகாக்கா - வாங்க. வெறும் பூங்கொத்தைத் தந்து ஏமாத்திட்டீங்களே? ;-))

ஹுஸைனம்மா said...

ராமலக்‌ஷ்மி அக்கா - வாங்க, நன்றி.

கோமதிக்கா - நன்றி அக்கா

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - வாங்க. ரொம்ப நன்றிப்பா பாராட்டுக்கு.

Avargal Unmaigal said...

குடும்பத்தில் கணவர் மனைவியிடத்தில் புரிந்துணர்வு இருப்பது மிகவும் அவசியம். எனது மனைவி என்னைவிட அதிகம் சம்பாதிப்பதால் அவள் வேலைய தொடர்ந்தால் அந்த நேரத்தில் நான் குழந்தையை நன் கு கவனித்து கொண்டேன். முதல் வருடம் முழு நேரம் குழந்தையயும் என் மனைவியயும் எந்த வித குறையும் இல்லாம்ல் கவனித்து கொண்டேன். என்னை சில பேர் கேளி செய்த்துண்டு அவ்ரகள் குடும்பம்தான் இப்போது மற்றவரிகளீன் கேளிக்கைக்கு உரியதாக உள்ள்து. எனது கேரியரில் எனக்கு வழுக்கல்தான் . அதற்காக நான் வருத்த படுவதில்லை. என் குழந்தையும் மனைவியும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதுவே எனக்கு மன திருப்தியாக் உள்ளது. நான் இபோது மிகப் பெரிய வேலையில் இல்லையென்றாலும் ஒர் நல்ல வேலையில்தான் உள்ளேன். எனக்கு கிடைத்த பட்டம். ம்MR.MOM அதை நான் சந்தோஷமாக ஏற்று கொள்கிறேன். நிறைய இங்கே எழுதலாம் ஆனால் நேரம் இல்லையாதலால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.மீண்டும் வ்ருகிறேன். உங்களூக்கு எனது வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசியாக வந்த பின்னூட்டம் போல இங்கு ஒரு நண்பரும் இப்படி மனைவியின் நல்ல வேலை காரணமாக.. ஒவ்வொரு மூன்று வருடமும் அவர் செல்லும் ஊருக்கு செல்ல வேலைகளை விட்டு விட்டு புதிய வேலைகளை எடுத்துக்கொண்டார். அத்தனையும் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே. தற்போது ,குழந்தை பெரியவர்கள் ஆகிவிட்டார்கள் இருவரும் வேறு வேறு ஊரில் இருந்தாலும் ப்ரச்சனை இல்லை. ஆனால் அதற்கு இருவருக்குமான புரிதல் மற்றும் குடும்பத்தினரின் அனுசரிப்பும் அவசியம். அவர்களின் பக்கபலன் இருந்தா மிஸ்டர் மாம் எல்லாம் பெரிய விசய்மே இல்லை கேட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசியாக வந்த பின்னூட்டம் போல இங்கு ஒரு நண்பரும் இப்படி மனைவியின் நல்ல வேலை காரணமாக.. ஒவ்வொரு மூன்று வருடமும் அவர் செல்லும் ஊருக்கு செல்ல வேலைகளை விட்டு விட்டு புதிய வேலைகளை எடுத்துக்கொண்டார். அத்தனையும் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே. தற்போது ,குழந்தை பெரியவர்கள் ஆகிவிட்டார்கள் இருவரும் வேறு வேறு ஊரில் இருந்தாலும் ப்ரச்சனை இல்லை. ஆனால் அதற்கு இருவருக்குமான புரிதல் மற்றும் குடும்பத்தினரின் அனுசரிப்பும் அவசியம். அவர்களின் பக்கபலன் இருந்தா மிஸ்டர் மாம் எல்லாம் பெரிய விசய்மே இல்லை கேட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

Riyas said...

உங்க பதிவப்பற்றி என் தளத்தில் எழுதியிருக்கே கொஞ்சம் வந்து பார்த்துட்டு போரது..

http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html.

மனோ சாமிநாதன் said...

“பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.

குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.”

மிக அருமையான வரிகள் ஹுஸைனம்மா! ஸாதிகாவுடன் சேர்ந்து நானும் ஒரு அழகிய பூங்கொத்தை அளிக்கிறேன்!! Hats off to you!!

என் நெருங்கிய உறவினர் மகள் ஒரு முறை சொன்னதுதான் நினைவில் எழுகிறது. நல்ல படிப்பும் அதன்பின் நல்ல வேலையுமாக இருந்தவர், குழந்தையின் காரணமாக வேலைக்குப்போவதில்லை.
‘ என் குழந்தை முதன் முதலாக நடக்கும்போது நான் தான் பார்க்கணும். அது முதன் முதலாக பேசும்போது அதை நான்தான் கேட்கணும். அதை யாரோ ஆயா வந்து சொல்லக்கூடாது. இந்த சந்தோஷத்தை நான் தான் முதலில் என் கணவருடன் பகிர்ந்து கொள்ல வேண்டும்.’
என்று கூறியபோது நான் சந்தோஷ அதிர்ச்சியில் நின்றேன். அமெரிக்காவில் வளரும் அவரின் ஐந்து வயதுக் குழந்தை தற்போது அதன் அப்பாவிடம் ‘ அம்மா எவ்வளவு வேலைகள் வீட்டில் செய்கிறார்கள்! நீங்கள் ஆபீஸுக்கு மட்டும்தான் போகிறீர்கள். அம்மா வேலைகளையும் ஷேர் பண்ணுங்கள்” என்கிறதாம்!!

ஹுஸைனம்மா said...

அவர்கள் உண்மைகள் - மற்றவர்களின் கேலி,கிண்டல்களுக்கு அஞ்சாமல் நீங்கள் பொறுப்பெடுத்துகொண்டது மகிழ்வைத் தருகீறது. நிச்சயம் நீங்கள் ஒருசிலரையாவது யோசிக்க வைத்திருப்பீர்கள். நன்றி.

முத்து அக்கா - ஆமாக்கா, நிச்சயமா ஒரு நல்ல ஒத்துணர்வு கணவன் -மனைவிக்கிடையில் இருத்தல் வேண்டும். அப்போதான், சும்மா சுகத்திற்காகச் சொறிந்து விடுபவர்களை அலட்சியம் செய்ய முடியும். எங்கள் ஊரில், மனைவி பீடி சுற்றி சம்பாதிக்க, கணவன் வீட்டு வேலை செய்வது ஒன்றிரண்டு வீடுகளில் வழமையாக இருந்தது. யாரும் கிண்டல் செய்ததில்லை. நன்றிக்கா.

ரியாஸ் - நன்றி ரியாஸ்.

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா - நன்றிக்கா பூங்கொத்துக்கு. அந்தக் குழந்தை எவ்ளோ நல்லா கவனிச்சிருக்கு பாருங்க, ஆச்சர்யமாருக்கு!!

சமாளிக்கக் கூடிய வசதியும் வாய்ப்பும் இருக்கும்போது, குழந்தைகளைச் சில காலமாவது பிரியாமல் இருத்தல் நலம்தான் அக்கா.

மீண்டும் நன்றி அக்கா.

பானு said...

ரொம்ப இடைவெளிக்கப்புறம் பதிவு போட்டாலும் போட்டீங்க...அதிரடியா போட்டு கலக்கிட்டீங்க..

பெற்ற குழந்தையை வேலைக்காரியிடம் ஒப்படைத்து விட்டு வேறு யாருக்காகவோ இவர்கள் ஏன் உழைக்க வேண்டும் என்று பல தாய்மார்களை பார்த்து நினைத்திருக்கிறேன். எத்தனையோ பேர் குழந்தை இல்லாமல் வருந்தும்போது நமக்கு கிடைத்த விலையில்லாத செல்வத்தை விட்டுட்டு போயும் போயும் பொருட்செல்வத்தைத் தேடி ஓடத்தான் வேண்டுமா?

//பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது//

ரொம்ப கரக்ட் ஹுஸைனம்மா.

//வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும்!! //

டிட்டோ ஹுஸைனம்மா...

/கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்பதாலும்./ இந்த ஒற்றை காரணத்துக்காவே நானும் வேலையை விட்டேன். குழந்தைக்காக வேலையை விட்டேன் என்பதை விட என்னுடைய இந்த சுயநலத்திற்காகவே ராஜினாமா செய்தேன் என்றுதான் என்னிடம் கேட்பவர்களிடம் சொல்கிறேன்.

என்ன சொல்றது போங்க..எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுட்டீங்க... நானும் ப்ளாக் ஆரம்பிக்கலாமுன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு...இந்த பதிவை படிச்சதுக்கப்புறம் அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைச்சுட வேண்டியதுதான்னு தோணுது.

அவர்கள் ஊமைகள்--இப்டிலாம் நம்ம ஊர்ல நடக்குதா?

மனோ அக்கா- அந்த பெண் சொன்ன அதே வார்த்தைகளுக்காத்தான் பல பெண்கள் வேலையை விடுறாங்க (ஹுஸைனம்மா உள்பட).

ஹுஸைனம்மா said...

தாஹிரா - வாங்கம்மா.

நீ பிளாக் ஆரம்பிக்கிறதுக்கும் நான் எழுதுனதுக்கும் என்ன சம்பந்தம்? நீ ஆரம்பிச்சு நடத்து உன் ராஜ்ஜியத்தை!! :-))))

பானு said...

உங்க அளவுக்கு தெளிவான பல வலைப்பூக்களைப் பார்க்கும்போது நானும் எழுதத்தான் வேணுமான்னு தோணுச்சு...அதத்தான் சொல்ல வந்தேன். மத்தபடி, நான் எழுதியே ஆகணும்னு இந்த வலையுலகுக்கு விதியிருந்தால் அதை என்னால் மாத்த முடியாது.;)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஒவ்வொரு வரியும் நச். சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாய் அழுத்தந்திருத்தமாய் பதித்திருக்கிறீர்கள். எனது எண்ணங்களும் அஃதே. ஆனால், இதையெல்லாம் ஆண் பதிவர்கள் எழுதினால் 'பெண்ணடிமைத்தனம்' என்றும் 'ஆணாதிக்கம்' என்றும் சொல்வர். நீங்கள் எழுதியதால் உண்மை யதார்த்தம் உலகிற்கு புரிகிறது. குடும்பத்தில் பெண்கள் ஆண்களுக்கு சரிக்கு சரி நிகரானவர்கள்.

Muniappan Pakkangal said...

Nice post Hussaiamma.It is a great thing to bring up children.One should sacrifice for it.I've seen house husbands also who bring up children & also doing house works including cooking & washing clothes.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அருமையான பதிவு...சிலருக்கு பல புரிந்திருக்கும்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ