Pages

டிரங்குப்பெட்டி - 23

நட்சத்திரங்கள் - எல்லாருக்கும் உவப்பான ஒன்று.  விண்வெளியில் எண்ணிக்கையிலடங்கா நட்சத்திரங்கள் உள்ளன.  ஒரு விண்மீன் தோன்றிய இளம்பருவத்தில் protostar என்று பெயர். வளர்ந்து, முழுவீச்சில் ஒளிவீசும் பருவத்தில் “main sequence star" என்றறியப்படும். (நமது சூரியன் இப்போது இப்பருவத்தில்தான் உள்ளது!!) பின்னர் அவற்றிலுள்ள வாயுக்கள் எரிந்துமுடியும்போது ஒளியிழக்கும். அது red giants, white dwarfs, black dwarfs என்று பல கட்டங்களாக நடந்து, முடிவில் வெறும் கரும்புள்ளிகளாக மாறிவிடும்.

நட்சத்திரங்களின் வாழ்வு, தாழ்வில் அவற்றின் நிறை (mass) முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான நிறை உள்ள விண்மீன்கள், பல பில்லியன்கள் அல்லது ட்ரில்லியன் கணக்கான வருடங்கள் வாழ்ந்து ஒளிவீசி, பின்னர் மேலே சொன்ன நிலைகளில் வரிசையாக, மேலும் சில பில்லியன் வருடங்களில் மெதுவாக மரணத்தைத் தழுவவும். அதுவே, மிக அதிக நிறை  கொண்ட நட்சத்திரங்கள் என்றால்,  “main sequence star"  என்ற நிலையை அதிவேக வளர்ச்சியில் அடைந்து, பின் அதைவிட வேகமாக வெடித்து கருந்துளைகளாகிவிடும்.

நட்சத்திரத்திற்கு அதிக நிறை, விரைவில் அழிவு தரும்.  மனிதனுக்கு (தலைக்) கனம்.
                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

மரணம் என்றதும், ‘தி ஹிந்து’வில் படித்த ஒரு டாக்டரின் கட்டுரை  நினைவுக்கு வருகிறது.  பண்டைய காலத்தில், ஒருவர் இறந்துவிட்டார் என்று உறுதிசெய்வதற்கு கிரேக்கர்கள் மூன்று நாட்கள் காத்திருப்பார்களாம்-  பிணத்துடன். ரோமானியர்கள் ஒன்பது நாட்கள். இந்தியாவில், இறந்தவரின் விரலை அறுத்துப் பார்க்கும் பழக்கமும், நெற்றியில் நெய்யை வைத்து, அது உருகுகிறதா என்று பார்க்கும் பழக்கமும் இருந்ததாம். அப்போதைய அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்: ”மனிதனின் திறனாய்வுப் பண்பு, மரணத்தைக் கூட முடிவு செய்யமுடியாதபடிக்கு ஐயப்பாடுடையதாக உள்ளது!!”

இன்றைய காலத்தில் மிகச்சில ஆண்டுகள் இடைவெளியில் “மரணம்” என்பதன் அர்த்தமும் மாறியுள்ளது. முன்பு மரணம் என்பது, “மூச்சு நிற்பதைக்” குறிக்கும். மனிதன் ’இறந்த’ பின்பும் வாழ வைக்கும் வெண்டிலேட்டர்கள் போன்ற கருவிகள் வந்தபின் மரணத்தின் வரையறையும் மாறிவிட்டது. எனினும், நிஜ மரணம் என்பது ஒரு கரு உருக்கொண்ட நாள் முதலேதொடங்கி எல்லா செல்களிலும் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் (continuous ongoing process) ஒரு செயல்பாடாம்.

                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
 

தமிழகத்திற்குக் கூவம் மாதிரி, வடக்கே அரசியல்வாதிகளுக்கு கங்கை!! “கூவத்தை அழகுபடுத்துவோம்” போல “கங்கையைச் சுத்தப்படுத்துவோம்”னு தேர்தலுக்கு தேர்தல் அறிக்கைகள் அங்கே ஜகஜம். கடேசில ஒரு வழியா இதுக்குன்னு 2009-ல் ஒரு ஆணைக்குழு (NGRBA) தொடங்கிட்டாங்க. அப்புறம் என்னாச்சுன்னு ஆர்வமாக்(!!) கேப்பீங்க. என்ன ஆகும்? வழக்கம்போலத்தான். மொத்தத் திட்டத்தொகையான 1.556 பில்லியன் டாலரில், 2011-ல் உலக வங்கியிலருந்து 1 பில்லியன் டாலர் கடன் வாங்கி, அதுல 6000 கோடி ரூபாயும் செலவழிச்சாச்சு. ஆனா,  செலவழிச்சு என்ன செஞ்சாய்ங்கன்னுதான் தெரீலை. ஏன்னா, கங்கையின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது.

இந்த ஆணைக்குழுவின் செயல்பாடுகளைக் கண்டித்து, முன்னாள் ஐஐடி பேராசிரியராகவும், மத்திய சுற்றுச்சூழல் சீர்கேடுக் கட்டுப்பாட்டு கழகத்திலும் (CPCB)முக்கிய பொறுப்பிலுமிருந்த, 80-வயதாகும் சாது ஒருவர் ஜனவரி 15 முதல் மார்ச் 23-வரை உண்ணாவிரதமிருந்தார்.  பிறகு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின்பேரில் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்காகவே 35-வயது சுவாமி நிகமானந்தா என்பவர் 115 நாட்கள் உண்ணாவிரதமிருந்தே இறந்துபோனார். அச்சமயம் (ஜூன் 2011)  நடந்த பாபா ராம்தேவின் உண்ணாவிரத அலம்பலில் இச்செய்தி வெளியே வரவேயில்லை!!

                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

நம்ம தமிழ் சினிமாக்களின் லாஜிக்குகளில் ஒன்று, நல்லா இருக்கிற ஹீரோவுக்கு தற்செயலாக விபத்தில் தலையில் அடிபட்டதும் எல்லாம் மறந்துபோகும். அப்புறம் கிளைமேக்ஸில, வில்லன் ஹீரோவின் தலையில் அடிச்சதும் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடும்.

நிஜமாவே கிட்டத்தட்ட அதேசாயலில் ஒரு சம்பவம் நடந்திருக்கு. அமெரிக்காவில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தில், திருடர்கள் ஒருவரை பலமாகத் தலையில் தாக்கினர். 41 வயதான அவருக்கு, அதற்குப் பின சரளமாகக் கணக்குப் பாடம் வருகிறதாம். Mathematical formulas-களில் புகுந்து விளையாடுகிறாராம்.  அவரது மூளையில் அடிபட்ட இடங்கள் செயலிழந்துபோனதால், அதைச் சமப்படுத்த வழக்கமாக மூளையின் யாரும் பயன்படுத்தாத இடங்களைத் தானே தூண்டிவிட்டுள்ளதால் இது சாத்தியப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.  உதாரணமாக, கண் தெரியாதவர்களுக்கு, அதைச் சமப்படுத்த மற்ற புலன்கள் கூடுதல் தெளிவாக இருப்பதைப் போல.
ஆமா, இதனாலத்தான் ஏதாவது புரியலன்னா, ”சுவத்துலத்தான் முட்டிக்கணும்”னு சொல்வாங்களோ??!!

                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

நடுத்தர வயதைத் தாண்டிய சிலரிடம் வயசைக் கேட்டீங்கன்னா, ”உடம்புக்குத்தான் வயசாச்சு; மனசு இன்னும் இளமையாத்தான் இருக்கு” என்பார்கள். அப்படின்னா உண்மையிலேயே மனசுக்கு வயசாகாதா? ஒரு விஷயத்தை/செயலை/பிரச்னையை, ஒருவர் 18 வயதில் பார்த்த பார்வைக்கும், 40-வயதில் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது? வயதாகும்போது, உடல் தளர்ந்து போகிறது; ஆனால், மனம் “முதிர்ச்சி” அல்லவா அடைகிறது? இளைய பருவத்தில் இல்லாத நிதானமும், விவேகமும் வயதாக ஆகத்தானே வருகிறது. அப்புறம் என்ன ”as young as 18” என்று வெற்றுப்பெருமை என்றுதான் தோன்றுகிறது.

                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
தத்துவம்:


என்னதான் பெரீய்ய படிப்பெல்லாம் படிச்சாலும், ஆப்பீஸ்ல கைநாட்டுதான் வைக்கோணும் - finger-print attendance machine #காலச்சக்கரம் சுழல்கிறது!!

Post Comment

21 comments:

ஸ்ரீராம். said...

உபயோகமான தகவல்களைத் தருகிறது டிரங்குப் பெட்டி மரணம் பற்றிய தகவலும் தலையில் அடிபட்டபின்நிகழ்வுத் தகவலும் சிந்திக்க வைக்கின்றன..

ராமலக்ஷ்மி said...

டிரங்குப் பெட்டி - 23_யைத் திறந்ததும் நட்சத்திரங்களாகக் கொட்டின. வியப்புடன் அள்ளியபடியே தமிழ்மண வானைப் பார்ந்தால் பேரொளி நட்சத்திரமாக நீங்கள்! அசத்துங்கள்! வாழ்த்துகள் ஹுஸைனம்மா:)!

சுவனப்பிரியன் said...

டிரங்குப் பெட்டி பல உபயோகமான தகவல்களைத் தந்தது.

Seeni said...

pirayosanamaana thakavalkal!

ஸாதிகா said...

இந்த முறை டிரங்கு பெட்டியில் வெயிட் அதிகம்.

அமைதிச்சாரல் said...

பல சுவாரஸ்யமான தகவல்கள் ட்ரங்குப்பொட்டியில்..

நம்மூர்லேல்லாம் யாராச்சும் தலையில் கொட்டினாக்கூட மூளை கலங்கிரும் கொட்டாதேன்னு சொல்லுவோம்,.. இங்கே தலையில் அடிபட்டதால் கணக்குல பிச்சு உதறுராரு.. வித்தியாசமா இருக்காரேப்பா..

கங்கை நதிப்பிரச்சினையை பார்க்கும்போது நாமளும் அப்படித்தான் முட்டிக்கணும் போலிருக்கு,..

Avargal Unmaigal said...

///40-வயதில் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது? வயதாகும்போது, உடல் தளர்ந்து போகிறது; ஆனால், மனம் “முதிர்ச்சி” அல்லவா அடைகிறது? இளைய பருவத்தில் இல்லாத நிதானமும், விவேகமும் வயதாக ஆகத்தானே வருகிறது.///

உங்கள் எழுத்துக்களை பதிவின் மூலம் படிக்கும் போது அதில் நன்கு முதிர்ச்சி தெருகிறது. அப்ப உங்க வயசு 40 க்கும் மேலே இருக்குமோ???ஹீ ஹீ...

வல்லிசிம்ஹன் said...

மண்டையில் அடிபடுவது எங்கவீட்ல ஜோக். பசங்க ஒருத்தரை ஒருத்தரைக் கலாய்க்க உபயோகப் படுத்துவாங்க.
அம்மா உன்னை தலைக்கிழாப் போட்டுட்டாங்க அதனால்தான் இப்படிப் பேசறேன்னு:)
நீங்க சொன்ன செய்தி அதிசயமா இருக்கு ஹுசைனம்மா.
மரணம் பற்றின செய்திகூடத்தான்.
சூப்பர் ட்ரங்குப் பெட்டி மா.

அமுதா கிருஷ்ணா said...

இந்துக்கள் பிள்ளையாரை கும்பிடும் போது நெற்றியின் இரண்டு புறமும் குட்டி கொள்வது மூளையின் திறனை கூட்டி கொள்வதற்கு தான். கடவுள் பெயரை சொன்னால் செய்வோம் என்று தான் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

வாழ்த்துக்கள்....

புதுகைத் தென்றல் said...

ஒவ்வொரு வாட்டி ட்ரங்கு பொட்டி திறக்கப்படும் போது புதுசா எதாவது தெரிஞ்சிக்கறேன். நன்றி ஹுசைனம்மா.

சுவத்துல முட்டிக்கற அந்தப்படம் சூப்பர்.

RAMVI said...

டிரங்குப்பெட்டியில் சுவாரசியமான தகவல்கள்.

//நட்சத்திரத்திற்கு அதிக நிறை, விரைவில் அழிவு தரும். மனிதனுக்கு (தலைக்) கனம்.//

மிகச் சிறப்பாக சொல்லியிருக்கீங்க..

கங்கையை பற்றிய தகவலில், கங்கையின் படத்தைப்பார்த்ததும் வருத்தமாகிவிட்டது. இப்படி கூட நதிநீர்களை வீணாக்குவார்களா என்று?

அம்பிகா said...

\\ராமலக்ஷ்மி said...
டிரங்குப் பெட்டி - 23_யைத் திறந்ததும் நட்சத்திரங்களாகக் கொட்டின. வியப்புடன் அள்ளியபடியே தமிழ்மண வானைப் பார்ந்தால் பேரொளி நட்சத்திரமாக நீங்கள்! அசத்துங்கள்! வாழ்த்துகள் ஹுஸைனம்மா:)!\\
))))))
நட்சத்திர வாழ்த்துக்கள் ஹூஸைனம்மா!

Jaleela Kamal said...

ரொம்ப நாள் கழித்து டிரங்கு பெட்டி திறந்து இருக்கு.

அனைத்து விபரஙக்ளும் அருமை
சில புது தகவல்கள்

தமிழ்மன நட்சரத்திரம் ஹுஸைனாம்மாவுக்கு ஜே ஜெ ஜேஎ

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - நன்றி.

ராமலக்ஷ்மிக்கா - நன்றிக்கா.

சுவனப்பிரியன் - நன்றி.

சீனி -நன்றிங்க.

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - தலையில் அடிபடும்போது பொதுவா விபரீத விளைவுகள்தான் இருக்கும். இப்படியான விளைவுகள் அபூர்வம். அதனால்தான் தலையில் அடிக்ககூடாதுன்னு சொல்றது.

கங்கை நதியைச் சுத்தப்படுத்தினா, அடுத்து இணைப்பு வேலைகளும் ஆரம்பிச்சுடலாமேன்னு ஒரு ஆதங்கம். அதான் பகிர்ந்தேன்.

அவர்கள் உண்மைகள் - புத்திசாலிங்க நீங்க!!

ஹுஸைனம்மா said...

வல்லிமா - ஆமா, எதாவது எடக்குமடக்காப் பேசினா, தலையில் அடிபட்டுதான்னு கிண்டல்ஸ் பண்றதுண்டு. நன்றிமா.

அமுதா - ஓ, அப்படியா? புதுத் தகவல். எங்க ஊர்ப்பக்கம் முன்னாடி, வாசப்படில உக்காந்தா தாய்மாமனுக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. வர்ற போறவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே. ஆனா அப்படிச் சொன்னா கேக்க மாட்டாங்க, அதுக்காக இப்படி மாமன் தலையை உருட்டுறது!! நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ராம்விக்கா - நன்றிங்க. கங்கையில் மக்கள் புழக்கம் அதிகம் என்பதால் அதிக குப்பைகள் சேருகிறதாயிருக்கும். மேலும் வழக்கமான, கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள் கலத்தல்னு எல்லா நதிகளுக்குமே உள்ள பிரச்னைகள். தீர்வுதான் இல்லை.

அம்பிகாக்கா - நலமா? ஆளையேக் காணோமே? இன்னும் சென்னை வாசம்தானா? வாழ்த்துக்கு நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

தென்றல் - நன்றிப்பா.

ஜலீலாக்கா - நன்றிக்கா.

அப்பாதுரை - நன்றிங்க.

மாதேவி said...

"டிரங்குப்பெட்டி" பலதகவல்களுடன் நிறைந்து நிற்கின்றது.

ஹுஸைனம்மா said...

மாதேவி - ரொம்ப நன்றிங்க