motivart.wordpress.com |
செய்தித்தாள் பக்கங்கள்
சொல்லும் சோகங்கள்
தோழிகளின் அழைப்புகள்
தெரிவிக்கும் தேம்பல்கள்
உறவுகளின் உரையாடல்களில்
உறைக்கும் நிதர்சனங்கள்
நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சு கனக்கும்
சீரான வாழ்வு
சுகமான துணை
அழகான மக்கள்
ஆரோக்கியமாய் நான்
துன்பமில்லா வாழ்வு
தானென்றாலும் மனதின்
ஓரத்தில் ஏனோ
ஒரு கலக்கம்
புலம்பும் எனைப்பார்த்து
புன்னகைக்கிறார் என்னவர்
பிரச்னையில்லா வாழ்வை
புவியனைத்தும் வேண்ட
பிரச்னையே இல்லையென
பிரகலாபிக்கும் பைத்தியமென்றார்!!
பொடிக்கல் தடுக்கினால்
பாதகமில்லை பாறைபோல்
பெருந்துயர் வந்தால்
பொறுப்பேனோ பேதை
சிறிதெனில் சிணுங்கினாலும்
சிரமேற் கொள்வேனென்றேன்
துயரே ஆனாலும் இறைவா
துணை நீ இருந்தால் போதும்
பிரார்த்தனையால் தாங்கிப் பிடிக்க
பெற்றோரும் பெற்ற மக்களும்
உடன்பிறப்புகளும் கொண்டவனும்
உற்றவர்கள் சூழ மற்ற நட்பும்
எனக்காக உனைவேண்ட
எம் வேண்டுதல் ஏற்பாய்
எல்லாம் வல்ல நாயனே
போற்றுகிறேன் உனை!!
|
Tweet | |||
30 comments:
அன்பு ஹுசைனம்மா, கலக்கங்கள் வர நாம் கலங்குவதும் இயற்கைதான். நீங்கள் நன்றாக இருப்பீர்கள். சுற்றமும் ந்ன்றாக இருக்கும்சில நாள் பத்திரிகைகள் படிக்காமல் இருங்கள்.உங்களுக்காக நானும் என் ப்ரார்த்தனையில் உங்களைச் சேர்த்துக் கொள்ளுகிறேன்.
நல்ல கவிதை..நன்றி
Mysterious Island - திரைப்பார்வை
நானும்!!
ஸலாம்
கவலையில் நல்லா புலம்பிருகீங்க .....
வாழ்த்துக்கள் ....
தமிழ்மணம் +1 ...
ஸலாம்
இந்த வார குழந்தை[அப்ரசெண்டி] நட்சத்திரம் ..... தமிழ்மணம்
வாழ்த்த வயதில்லை .... ஆகவே போகிறோம் ..
குறிப்பு :
ம்ம்ம் ... என்னை யாரும் திட்டக் கூடாது ... நான் தெளிவாத் தான் கருத்து சொல்லிருக்கேன் ...
இது முன் எச்சரிக்கை நடவடிக்கை ...
அருமை ஹுஸைனம்மா.
/நட்பும்
எனக்காக உனைவேண்ட/
நிச்சயமா.
துயரே ஆனாலும் இறைவா
துணை நீ இருந்தால் போதும்
வாசிக்கும்போதே நெகிழ்கிறது. மனசொடிந்து போகும்போது இறைவா நீ மட்டும் கைவிட்டு விடாதே என்றுதான் ஏங்கத் தோன்றுகிறது.
நெகிழ்கிறேன்.
அவனிடம் நம்மை ஒப்படைத்து விட்டால் ஏது கவலை? மேலும் பிரச்னை இல்லாத வாழ்க்கை ரொம்ப போரடிக்கும்! :)))
//பெருந்துயர் வந்தால்
பொறுப்பேனோ பேதை//
இல்லை ஹுஸைனம்மா,
நிச்சயமாக எந்த ஓர் ஆத்மாவையும் இறைவன் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை!
இன்பத்திலும் நாம் அவனை நினைக்கும் போது, துன்பத்தில் இறைவன் நம்மோடிருப்பான்!
உங்கள் கவிதை அருமை!
அருமை ஹுஸைனம்மா,.. எல்லாம் கை விட்டுட்டாலும் கை விடாதவன் அவன் மட்டுமே.
kavalai vendaam!
allah pothumaanavan!
மனப்பாரம் குறைந்திருக்கும் எழுத்தில் !
ஆஹா..... நீங்களா இந்தவார ஜொலிப்பு!!!!!!
இனிய வாழ்த்து(க்)கள்.
மற்றவர் துன்பங்களையும் தன்னுடையதாய் எண்ணி மனம் உளையும் உங்களுக்கு எந்தத் துன்பமும் நேராது. என்றும் மன நிம்மதியும் மகிழ்வும் உண்டாகும். கவலை வேண்டாம்.
இந்த வார நட்சத்திரமாய் தமிழ்மண வானில் ஜொலிப்பதற்குப் பாராட்டுகள் ஹூஸைனம்மா.
"கவலைப்பட ஒரு கவலை" இன்று பலரின் நிலை இதுதான்.
துயரே ஆனாலும் இறைவா
துணை நீ இருந்தால் போதும்//
மனம் நெகிழ்த்திய வரிகள்....!
//அழகான மக்கள்
ஆரோக்கியமாய் நான்
துன்பமில்லா வாழ்வு
தானென்றாலும் மனதின்//
எந்த கலக்கமும் வேண்டாம் இறைவனின் அருளால் நன்றாக இருப்பீங்க..
கவி வழியாக கடவுளிடம் கவலை கேட்கிறீரோ??...
யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கிறான் அக்கா..,எனக்கு தங்களின் வரிகளை படிக்கும் போது ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது.மகாபாரத கதையில் குந்திதேவி கடவுளிடம் "கடவுளே எனக்கு துன்பங்களை கொடு,அப்போது தான் நான் உன்னை மட்டும் நினைத்திருக்க முடியும்,எனக்கு துன்பத்தினை கொடு".என்று வேண்டுவது போல ஒரு காட்சி உண்டு தங்கள் கவி என்னை அதை நினைவு கொள்ள செய்கிறது..
யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கிறான் அக்கா.
இந்த வார நட்சத்திரமாய் தமிழ்மண வானில் ஜொலிப்பதற்குப் பாராட்டுகள் .
நல்ல கவிதை..நன்றி
Congrats hussainamma for the Tamil Manam star status. Nice poem
வலைஞன் - நன்றிங்க.
வல்லிமா - வாழ்த்துகளுக்கு நன்றி வல்லிமா. உலகத்தில் நடப்பவற்றைப் பார்க்கும்போது கலக்கத்தான் செய்கிறது.
குமரன் - நன்றிஙக்.
அருணா - வாங்கப்பா. நலமா? நன்றி பிரார்த்தனையில் இணைந்துகொண்டதற்கு.
சிந்தனை - ஸலாம். நல்லா “சிந்திச்சு” வாழ்த்திருக்கீங்க. நன்றிங்க.
ராமல்க்ஷ்மிக்கா - ரொம்ப நன்றிக்கா.
ரிஷபன் சார் - மிகவும் நன்றி சார். அவனன்றி வேறு யார் நமக்கு?
ஸ்ரீராம் சார் - //பிரச்னை இல்லாத வாழ்க்கை ரொம்ப போரடிக்கும்!// என் அப்பா அடிக்கடி சொல்வதும் இதுதான்.
தமிழ்மீரான் - //நிச்சயமாக எந்த ஓர் ஆத்மாவையும் இறைவன் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை//
இறைவன் தந்திருக்கும் வாக்குறுதி இது. இருந்தாலும் அதையும் குறைவாகத் தருவதற்கு வேண்டுகோள் வைக்கலாமே என்றுதான். :-))))
//இன்பத்திலும் நாம் அவனை நினைக்கும் போது, துன்பத்தில் இறைவன் நம்மோடிருப்பான்//
நிச்சயமாய்!! இதைத்தான் செய்ய மறந்துவிடுகிறோம்.
அமைதிக்கா - நன்றிக்கா.
சீனி - நிச்சயமாய்!!
ஹேமா - நலமா? ஆமாம், எழுதிப் பகிர்வதே பாரங்கள் குறைக்கத்தானே!!
துளசி டீச்சர் - நன்றி டீச்சர்!!
கீதமஞ்சரி - ஆறுதலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி கீதா.
அமைதி அப்பா - //இன்று பலரின் நிலை இதுதான்// நல்ல நிலையில் இருக்கும்போதும் அவனை நினைத்துக் கொள்வோமே என்றுதான்... நன்றிங்க!
ஸாதிகாக்கா - நன்றிக்கா.
ராம்விக்கா - வாழ்த்துக்கு நன்றிக்கா.
விஜயன் - //கவி வழியாக கடவுளிடம் கவலை கேட்கிறீரோ??...// ஹா.. ஹா..
//யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கிறான்//
உண்மைதான் தம்பி. ஆனாலும், முன்கூட்டியே கொஞ்சம் சொல்லி வைக்கலாமேன்னுதான்... டீச்சரின் நன்மதிப்பைப் பெறமுயலும் மாணவியைப் போல!! :-)))))))
சசிகலா - நன்றிங்க.
முகுந்த் அம்மா - நன்றிங்க.
இனிய வாழ்த்துகள்.
இறைவன் துணை இருந்தால் போதும்.
நல்ல கருத்து ! அப்பாடி நம்மள மாதிரியே இன்னோத்தரும் இருக்கிறார் என்று நினைக்கும் பொது மன நிம்மதி ஏற்படுகிறது.
மாதேவி - நன்றி. ஆம், அவனே துணை.
தானைத் தலைவி - ஆமாப்பா, சுத்தி நடக்கிறதப் பார்த்து கலங்கும்போது, நாமதான் தேவையில்லாமப் பயப்படுறோமோன்னு தோணும். எனக்கும் உங்களைப் பாத்து ஒரு ஆறுதல். :-)))))) நன்றி.
பிரார்த்தனையால் தாங்கிப் பிடிக்க
பெற்றோரும் பெற்ற மக்களும்
உடன்பிறப்புகளும் கொண்டவனும்
உற்றவர்கள் சூழ மற்ற நட்பும்
எனக்காக உனைவேண்ட
எம் வேண்டுதல் ஏற்பாய்
எல்லாம் வல்ல நாயனே
போற்றுகிறேன் உனை!!//
இறைவன் அருள் இருந்தால் கவலையை போக்கும் மன துணிவு வந்து விடும். நீங்கள் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் அருமை.
கவலைக்கு கவலை கொடுங்கள்.
Post a Comment