Pages

சாந்தியும் சமாதானமும்




தலைப்பிலிருந்தே இந்தப் பதிவின் மையக் கருத்து எதுவென்று  புலப்பட்டிருக்கும்: “முகமன் கூறுதல்”!!

”முகமன்” என்பதை, “மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகள்” என்று ‘தமிழ் விக்சனரி’ வரையறுக்கின்றது.  அதாவது அறிமுகமுள்ள அல்லது அறிமுகமற்ற இருவர், (நேரிலோ, எழுத்திலோ) சில காரணகாரியங்களுக்காகச் சந்தித்துக் கொள்ளும்போது, பேச்சைத் துவங்குமுன் சில உபசார வார்த்தைகள் பரிமாறிக் கொள்வர். இதை ஆங்கிலத்தில் ”greetings" என்பார்கள்.

உலக வழக்கில், பொதுவாக இருவர் சந்தித்துக் கொள்ளும்போது ‘குட் மார்னிங்’, ஹாய், ஹல்லோ என்று முகமன்கள் சொல்லிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனிப்பட்ட வழக்கங்கள் இருந்தாலும், ”உலகமயமாக்கப்பட்ட” உலகில் இவையே ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுமுறையாகிப்போனது.  இந்தியாவிலும் - தமிழகம் உட்பட -  எந்த அர்த்தமுமற்ற ‘ஹாய்’, ’ஹல்லோ’ வில் இன்றைய இளையதலைமுறையினர்  இன்பங்காண்கின்றனர் - ‘ஹாய் பட்டி’ (buddy), ’ஹல்லோ ட்யூட்’ என்பதாக.

மீதிப்பேர் (hai - hi - helloவை முகமனாக ஏற்க முடியாதவர்கள் உட்பட)  ‘குட் மார்னிங்’, குட் ஈவினிங்’ போன்றவற்றைப் பிரயோகிக்கின்றனர். ’நல்ல காலை/மாலைப் பொழுது வாய்க்கட்டும்’ என்பது நல்ல வாழ்த்தாக இருப்பினும், இதைப் பயன்படுத்தமுடியா தர்மசங்கடமான அசந்தர்ப்பச் சூழ்நிலைகளும் அமைவதுண்டு.

உலகமுழுதுமுள்ள முஸ்லிம்களின் முகமன் வார்த்தைகள் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதாகும். இதனைத் தமிழாக்கினால், ”உங்கள்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக” என்று பொருள்படும்.  Al+salam+alaikum = the+peace+be upon you என்பதாக வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கலாம். ஆங்கிலத்தில் உள்ள “peace"  என்ற வார்த்தைக்குத் தமிழில் சாந்தி, சமாதானம் என்று இரு பொருள் உள்ளதால், தமிழில் இரண்டையுமே எடுத்துக் கொள்கின்றனர். இரண்டில் எதை விடுவது? இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் மனிதனுக்கு மிகமிக அத்தியாவசியமாயிற்றே!!

ஆமாம், இல்லையென்றால் “எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” பாடல் இன்றும் சூப்பர்ஹிட்டாகுமா? ஏன் பலரின் புலம்பலே “லைஃப்ல நிம்மதியே இல்லைப்பா”; “ஆஃபிஸ்ல ரொம்ப ஸ்ட்ரெஸ், அதான் ரிலாக்ஸ் பண்ணிக்க ஜிம்/பார் போறேன்”; “மைண்ட் ரிலாக்ஸ் பண்ணத்தான் ப்ளாக் பக்கம் வர்றேன்”, “மனக்கவலைகளிலிருந்து விடுபடத்தான் சுற்றுலா போகிறேன்” -  என்றுதானே இருக்கிறது.

”குட் மார்னிங்” அல்லது “குட் ஈவினிங்” சொல்வதால் அவர்களுக்கு நல்ல பொழுது அமைய வாழ்த்துகிறோம். ஆனால், அன்றைய ஒரு பொழுதுக்கான வாழ்த்தாக மட்டும் இல்லாமல், ஒருவருக்கு முழுமையான நிம்மதிக்காக “உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்”  என்று வாழ்த்துவது அதீத அன்புக்கு வழிவகுக்கும்.

இஸ்லாம் “ஸலாம்” என்ற முகமன் கூறுவதை முஸ்லிம்களுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது ஸலாம் என்ற முகமன் கூறுவதும், பசித்தோருக்கு உணவளிப்பதும் ஒரே தரத்தில் வைக்கப்படுமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் மற்றொருவரைக் காணும்போது - அவர் நண்பரானாலும், எதிரியானாலும், வயதில், குணத்தில், செல்வத்தில், பொறுப்பில் தம்மைவிட உயர்ந்தவரானாலும், தாழ்ந்தவரானாலும், அறிந்தவரானாலும், அறியாதவரானாலும் ஸலாம் சொல்லுவது ஒரு முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்.

இதனால் என்ன பலன்(ம்)?  இஸ்லாம் ஸலாம் சொல்லுவதை மட்டுமல்ல, அதற்கு முறையாகப் பதிலளிப்பதையும் முஸ்லிமுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. ஆகையால்,  முன்பே அறிந்தவர்களிடையே ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால், ஸலாம் சொல்லப்படும்போது மனம் சமரசமடையும். சமாதானம் நிலவும் வாய்ப்பு அதிகரிக்கும்.  ஒருவேளை இருவரும் புதியவர்கள் என்றால், ஒரு "ice breaker" ஆக அமையும், நட்பு பெருகும். 

இச்சூழ்நிலைகளில் சாதாரணமாக சொல்வதுபோல,  கருத்துவேறுபாடுடைய ஒருவரிடம் ”குட் மார்னிங்” சொல்லப்பட்டால் அது ஏற்கப்பட்டு பதில் கூறப்படவேண்டும் என்று கட்டாயமுமில்லை. சம்பிரதாயமாகப் பதில் கூறப்பட்டாலும் அதில் பெரியளவில் மனஇறுக்கம் அகல வாய்ப்புமில்லை. பொதுவாகவே உயர்பதவியிலுள்ளவர்களிடமோ, செல்வந்தர்களிடமோ அவரைவிடத் தாழ்ந்த பொறுப்பில்/நிலையில் இருப்பவர்கள் இவ்வாறான முகமன் கூறினால், பெரும்பாலானவர்கள் அதற்கு வெறும் தலையசைப்பையே பதிலாகத் தருவதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இஸ்லாம் நம்மிடம் கூறப்படும் ஸலாமிற்குத் தக்கமுறையில் பதில்கூறவும் உத்தரவிடுகிறது . ஆகையால் ஒரு முஸ்லிம் எத்தரத்தவர் ஆயினும், அவரிடம் ஸலாம் கூறப்பட்டுவிட்டால் பதில்கூறியே ஆகவேண்டும்!!
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்” 4:86, அல் குர் ஆன்.

மேலும் எச்சந்தர்ப்பங்களுக்கும் - மகிழ்ச்சி, துக்கம் என இருவேறுபட்ட நிலைகளுக்கும் பொருத்தமான முகமன் ஸலாம். அதிகப் பூரிப்போடு இருக்கும் நிலையில் உள்ள நிம்மதி இனியும் தொடர வேண்டும்; சஞ்சலமான பொழுதிலும் அதே நிம்மதிதானே வேண்டும்!! எனவே ”அமைதி”யை யாரும் (மனதார) நிராகரிக்கப் போவதில்லை.  வாழ்க்கையின் இலக்கே அமைதியைத் தேடித்தான் எனும்போது, அதற்கான வாழ்த்தை மறுக்கமுடியாது.

இஸ்லாமிய முகமனைச் சிலர் தமிழில் “இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள்மீது நிலவட்டும்” என்று மொழிபயெர்ப்பதுண்டு. இதற்கு இரு காரணங்கள் சொல்லலாம். அதாவது இறைவன் மட்டுமே பூரண நிம்மதி தரக்கூடியவன் என்பது ஒன்று. மற்றொன்று, இறைவனுக்குரிய  திருநாமங்களில் ஒன்று “ஸலாம்” என்பது. அதன் பொருள் - “அமைதி அளிப்பவன்”.  ஆகையால்தான் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது இறைவனை முன்னிலைப்படுத்தியும் மொழிப்பெயர்க்கப்படுகிறது.

சரி, இதைத் தமிழிலேயே சொல்லலாமே என்று தோன்றும். தமிழில் சொன்னால் தமிழர்களுக்கு மட்டுமே புரியும்.   உலக இஸ்லாமியர் அனைவராலும் அறியப்பட்ட மொழியில் சொல்வதால் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”  என்பதை மெய்ப்பிக்க முடிகிறது.  "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு“ என்று சொல்வதில் உள்ள இனிமை “எழுத்துக்களுக்கெல்லாம் அ என்ற எழுத்து முதன்மையானதைப் போல உலகத்தின் முதன்மையானவன் இறைவனே” என்று சொல்வதில் முழுமையாக இருக்காதுதானே. எனினும் முஸ்லிமல்லாத தமிழர்களிடம் சொல்லப்படும்போது அவ்வாறே தமிழிலேயேச் சொல்லப்படுகிறது.

இந்த முகமன், இஸ்லாமியர்களிடையே மட்டுமல்ல,  மாற்று மதத்தவர்களிடமும் சொல்ல வேண்டும் என்பது ”உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவது மிகச் சிறந்த நல்லறமாகும்'” என்கிற நபிமொழியிலிருந்து புலப்படும். எனினும், முஸ்லிமல்லாதவர்களிடம் ஸலாம் சொல்லப்பட்டால், அவர்கள்மீது இஸ்லாமைத் திணிப்பதாகச் சிலர் தவறாகக் கருதிவிடுவதால், பொதுவாக முஸ்லிம்கள் இதைத் தவிர்க்கிறார்கள்.

லகம் முழுதும் பல்வேறுவித முகமன்கள் புழங்கிவந்த போதிலும், இதேபோன்ற முகமன் - “சாந்தியும், சமாதானமும் நிலவட்டும்” என்ற முகமன் - முஸ்லிமல்லாத ஒருசில நாட்டு மக்களிடமும் புழக்கத்தில் உண்டு என்பது ஆச்சர்யமான விஷயம்.
கிறிஸ்தவத்தைப் பெரும்பான்மை மதமாகக் கொண்ட மால்டா என்கிற நாட்டிலும், மக்கள் சந்தித்துக்கொள்ளும்போது ”Sliem għalikom” என்று அவர்கள் மொழியில் அமைதி நிலவட்டும் என்பதாக வாழ்த்துவார்கள்.

ஒரு குறிப்பிட்ட இனத்து யூதர்களிடையேயும் இந்த “அமைதி” வாழ்த்து உண்டு.  ”Sholom aleikhem” என்று சொல்லப்பட்டால், "Aleikhem shalom" என்று பதிலளிக்க வேண்டும்.

அவ்வளவு ஏன், நமக்கு வெகு அருகில் உள்ள இலங்கையில், பெரியவர்கள் பண்டிகை போன்ற முக்கிய தினங்களில் “சாந்தியும், சமாதானமும், சுபீட்சமும் நிலவட்டும்” என்றுதான் வாழ்த்து தெரிவிப்பார்கள்.

இந்தியாவிலேயே சில இந்து சாதுக்கள், “ஓம் ஷாந்தி” என்று ‘அமைதி’யைத்தான் அருளாசியாக வழங்குவார்கள்.

இதிலிருந்து முற்கால மனிதர்களிடம் அமைதிக்கான முகமனே புழங்கி வந்திருக்க வேண்டும்; நாகரீகம் வளர வளரத்தான் மற்ற முகமன் முறைகள் மக்களிடையே ஊடுருவியிருக்கலாம் என்று புலப்படுகிறது. இதையே இந்த நபிமொழியும் நிரூபிக்கின்றது.

அல்லாஹ் முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களைக் களி மண்ணிலிருந்து படைத்தான்.... பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம்  கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான்....  (நூல்: புகாரி 6227, 3326)

ஆத்திகமோ, நாத்திகமோ, இந்துவோ, இஸ்லாமியனோ, இந்நாடோ, எந்நாடோ எல்லாரும் மனதார விரும்புவது நிம்மதியான வாழ்வே.  பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் அமைதிகிட்ட மனதார முகமன் கூறுவோம். நிம்மதிக்கான வழிகளையே கடைபிடிப்போம் - நம்மளவிலாவது.

Post Comment

23 comments:

தமிழ் மீரான் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். விளக்கமான பகிர்வுக்கு நன்றி!

ஸ்ரீராம். said...

நான் என் முஸ்லிம் நண்பர்களைச் சந்திக்கும்போது "ஸலாம் அலைக்கும் ......." என்று சொல்வேன். அவர்கள் பதிலுக்கு "அலைக்கும் சலாம் சார்" என்பார்கள். ஸலாம் அலைக்குமா, அஸ் ஸலாமு அலைக்குமா? எப்படிச் சொல்ல வேண்டும்? இந்த வார்த்தைக்கான அர்த்தம் இன்று தெரிந்து கொண்டேன்.

Jaleela Kamal said...

ஸாலாத்துக்கு மிக அருமையான விளக்க உரை,நீங்க எழுதிய பதிவிலேயே சூப்பரான பதிவு.
மிக மிக அருமையான பதிவு.
உங்கள் பதிவு மூலம் பலருக்கு இதில் தெளிவு பெறும்,

ஏக வல்ல இறைவன் நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதனமும் அளிப்பானாக.

ராமலக்ஷ்மி said...

/ எல்லாரும் மனதார விரும்புவது நிம்மதியான வாழ்வே. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் அமைதிகிட்ட மனதார முகமன் கூறுவோம். நிம்மதிக்கான வழிகளையே கடைபிடிப்போம்/

அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நல்ல பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அடுத்தமுறை உங்களுடன் பேசும்போதுஅஸ்ஸலாமு அலைக்கும் சொல்கிறேன்.
எப்பொழுதும் எந்த மொழியிலும் சாந்தியும் சந்தோஷமும் சமாதானமும்
நிலைக்கட்டும். நல்ல அருமையான பகிர்வு ஹுசைனம்மா.

suvanappiriyan said...

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

ஸாதிகா said...

அருமையான அழகான பகிர்வு.என்னவொரு அழகானதொரு விளக்கம்...!!!!!!!அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் தருவானாக!

mask said...

சாந்தியும், சமாதானமும், சுபீட்சமும் நிலவட்டும்..

ஹுஸைனம்மா said...

தமிழ்மீரான் - வ அலைக்கும் ஸலாம். நன்றி.

ஸ்ரீராம் சார் - இரண்டுமே சரியானதே. “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வது ரொம்பச் சரியான முறை என்று சொல்லலாம். நன்றி சார்.

ஜலீலாக்கா - நன்றிக்கா.

ராமலக்ஷ்மிக்கா - மிகவும் நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

வல்லிமா - இன்ஷா அல்லாஹ், அடுத்த முறை பேசும்போது சொல்லிக்குவோம். இங்கயும் நிறைய பேர், மதபேதமில்லாம ஸலாம் சொல்வதுண்டு. அர்த்தம் என்ன என்றுகேட்டுக் கொண்டு தயக்கமில்லாமல் பயன்படுத்துகிறார்கள்.

//எப்பொழுதும் எந்த மொழியிலும் சாந்தியும் சந்தோஷமும் சமாதானமும் நிலைக்கட்டும்//
நம் பிரார்த்தனை பலிக்கட்டும்.

மிகவும் நன்றி வல்லிமா.

ஹுஸைனம்மா said...

சுவனப்பிரியன் - நன்றிங்க.

ஸாதிகாக்கா - நன்றி.

மாஸ்க் - நிச்சயமாக!! நன்றி.

சிராஜ் said...

சலாம் ஹுசைனம்மா,

தலைப்பே ஆயிரம் கதைகள் சொல்லுதே???? அவ்வ்வ்வவ்வ்வ்....

ரொம்ப அழகான பதிவு சகோ...எழுத்து நடை ரொம்ப லாவகமா வருது உங்களுக்கு....
சாந்தியும் சமாதானாம் என்னும் முகமன் எந்த சூழ்நிலைக்கும் பொருந்தும் எதார்த்தமான ஒன்னு என்பதை அழகாக நிறுவி உள்ளீர்கள்...

நட்புடன் ஜமால் said...

Assalamu Alaikkum :)

Anonymous said...

அமைதியும் இணக்கமும் என்று அன்னைத் தமிழ் இருக்க அயல் மொழி(சமற்கிருதம்) சாந்தியும் சமாதானமும் எதற்கு???

Seeni said...

asslamu alaikkum!

துளசி கோபால் said...

குட் டே!

இங்கே இப்படித்தான்.

கீதமஞ்சரி said...

எந்த மொழியாய் இருந்தால் என்ன? எந்த மதமாய் இருந்தால் என்ன? ஒரவருக்கொருவர் மன சமாதானத்துக்கும் மகிழ்ச்சிக்கும் வாழ்த்திக்கொள்ளுதல் நமக்குள்ளிருக்கும் அன்பைப் பெருக்கும்தானே? மிகவும் நல்ல பதிவு ஹூஸைனம்மா. சலாம் அலைக்கும் என்ற முகமன் வாசகத்தின் முழுப்பொருள் விளங்கிக்கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

sultangulam@blogspot.com said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்

அஸ்மா said...

சலாம் ஹுஸைனம்மா!

//உயர்பதவியிலுள்ளவர்களிடமோ, செல்வந்தர்களிடமோ அவரைவிடத் தாழ்ந்த பொறுப்பில்/நிலையில் இருப்பவர்கள் இவ்வாறான முகமன் கூறினால், பெரும்பாலானவர்கள் அதற்கு வெறும் தலையசைப்பையே பதிலாகத் தருவதைப் பார்த்திருக்கிறோம்.//

சரியாக சொன்னீங்க ஹுஸைனம்மா! ”குட் மார்னிங்” எனச் சொன்னால் அதனால் தன் மரியாதை கூடிவிட்டதாகவும், சொல்பவர்களை தன்னைவிட மதிப்புக் குறைவானவர்களாகவும் பார்க்கும் தன்மையை நானும் கண்டிருக்கிறேன். அதனால்தான் தலையை மட்டும் ஆட்டுவது அல்லது ஒரு கையை மட்டும் காட்டி சைகை செய்துவிட்டு போவதெல்லாம்! ஆனால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதற்கு ஈடான எந்த முகமனும் இவ்வுலகில் கிடையவே கிடையாது!!

//முஸ்லிமல்லாதவர்களிடம் ஸலாம் சொல்லப்பட்டால், அவர்கள்மீது இஸ்லாமைத் திணிப்பதாகச் சிலர் தவறாகக் கருதிவிடுவதால், பொதுவாக முஸ்லிம்கள் இதைத் தவிர்க்கிறார்கள்.//

அதுபோன்ற காரணத்தால் நாமே தவிர்ப்பது ஒருபுறம். நம்மை தவிர்க்கச் சொல்வது இன்னொரு புறம்! (உ-ம்) நாம் முதலில் அறிமுகமாகிக் கொண்ட‌ பிரபலமான ஒரு தளத்தில் :) (பழகிய சகாக்களே) நாம் சலாம் சொன்னதை பெரிய பிரச்சனையாக்கினார்கள், நினைவிருக்கா? :-)

Roomil said...

அவ்வளவு ஏன், நமக்கு வெகு அருகில் உள்ள இலங்கையில், பெரியவர்கள் பண்டிகை போன்ற முக்கிய தினங்களில் “சாந்தியும், சமாதானமும், சுபீட்சமும் நிலவட்டும்” என்றுதான் வாழ்த்து தெரிவிப்பார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வ வ)
எங்கள் நாட்டில் முப்பது வருடங்களுக்கு மேலாக அதர்க்காத்தானே மக்கள் ஏங்கினார்கள் எனவே அதுவே வாழ்த்தாகவும். இல்லாததைத்தானே இறைஞ்ச வேண்டும். உள்ளதை சொல்லும் நல்ல பதிவு நன்றி
ரூமில்

ஹுஸைனம்மா said...

சிராஜ் - நன்றிங்க.

ஜமால் - வ அலைக்கும் ஸலாம்.

எழில் - ‘அமைதியும், இணக்கமும்’ - ம், இதுவும் அழகா இருக்கு. நன்றி.

சீனி - வ அலைக்கும் ஸலாம்.

ஹுஸைனம்மா said...

துளசி டீச்சர் - ஓ, பொழுதுக்குப் பதிலா, நாள்முழுமைக்காகவுமா? நல்லது.

கீத மஞ்சரி - மிகவும் நன்றிப்பா.

சுல்தான் பாய் - வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்.

ஹுஸைனம்மா said...

அஸ்மா - ஸலாம். ஆமாக்கா, அலுவலகம் போன்ற இடங்களில், சில உயர்ந்தோர், தமக்கு மற்றவர்களால் முகமன் சொல்லப்படுவதைக் கௌரவமாக நினைக்கிறார்கள்!!

’அந்த’த் தளத்தில், இரு முஸ்லிம் பெண்கள் தமக்கிடையில் பேசிக்கொண்டதையே சர்ச்சையாக்கினார்கள்!! மிகவும் வருத்தமானது.

ரூமில் பாய் - நீங்கள் இலங்கை நாட்டவரா? மகிழ்ச்சி. மிகவும் நன்றி.