Pages

டிரங்குப் பெட்டி - 29




”அந்தா பாரு.. வெள்ளைக் காக்கா பறக்குது..” என்று சொல்லி சின்ன வயதுப் பசங்கள் ஏமாற்றப்படுவது உண்டு. வளர்ந்த பின், வெள்ளைக் காக்கா என்ற ஒன்றே இல்லை என்று தெரிந்த பின்பு, எப்போ அதை நினைச்சாலும் கொஞ்சம் அவமானமா இருக்கும். சில வாரம் முன்பு வானதியின் வலைப்பூவில், சலவைப் பொடி விளம்பரம் என்று சொல்லி வெள்ளைக் காக்கா படம் பார்த்தபோது காமெடியாக இருந்தது. ஆனா, நெஜம்மாவே வெள்ளைக் காக்கா இருக்குதுன்னு நியூஸ். திருவனந்தபுரத்தில் பிடிச்சு வச்சிருக்காங்களாம்!! அப்போ சின்ன வயசில நாம ஏமாந்துபோகலைன்னு சமாதானப்படுத்திக்கலாம்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கோமா நிலையில் இருப்பவர்களின் நிலையை ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்று சொல்வார்கள். அவர்களுக்கு சிந்தனை இருக்காது என்றே பெரும்பாலும் நம்பப்பட்டு வந்தது. இதை மறுத்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று. வெளியே மைதானத்தில் விளையாட்டுவது போன்ற சில வகை எண்ணங்கள் தோன்றும்போது, மூளையின் ஒருபக்கம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; வீடினுள்ளே நடப்பது போன்ற மற்றொருவிதச் சிந்தனை செய்யும்போது வேறொரு பக்கம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்யும்போது இதை அறிந்துகொள்ளலாம். கோமாவில் இருக்கும் ஒருவரிடம், கேள்விக்குப் பதிலைப் பெற, ஆம் என்றால் முதல் வகை சிந்தனையை ஓடவிடுமாறும், இல்லை என்றால் அடுத்த வகைச் சிந்தனையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டு செய்த சோதனை வெற்றியடைந்தது, நரம்பியல் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

பாகிஸ்தான் எங்கே இருக்கு தெரியுமா? அடிக்க வராதீங்க, “அந்த” பாகிஸ்தானைச் சொல்லலை. நம்ம நாட்டிலேயே ஒரு பாகிஸ்தான் உண்டுங்க!!  பீஹார் மாநிலத்தின், பூர்னியா மாவட்டத்தில் ‘பாகிஸ்தான்’ என்கிற கிராமம் இருக்கிறது. பிரிவினையின்போது, தம் உடைமைகளைத் தங்களிடம் தந்துவிட்டு, அந்த ஊரிலிருந்து (கிழக்கு) பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம் மக்களின் நினைவாக, தம் கிராமத்திற்க்கு அம்மக்கள் அந்தப் பெயரைச் சூட்டினார்களாம்.

இனிமே யாராச்சும் ”ஓடுங்க பாகிஸ்தானுக்கு!!”ன்னு சொல்வீங்க!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

லக்ஷ்மி மிட்டல் - கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள், உலகின் பணக்காரர்களில் ஒருவர், பூர்வீக இந்தியர். ஐரோப்பாவில் பரந்து விரிந்த “இரும்பு” வர்த்தக சாம்ராஜ்யம் உடையதால், “இரும்புக்கை மாயாவி” என்று வர்ணிக்கப்படுபவர். 2006-ல், ஃப்ரான்ஸில் ‘ஆர்ஸெக்லர்” ஆலையை வாங்கினார். பணியாளர்களை நீக்கக்கூடாது என்பது அரசின் முக்கிய நிபந்தனை. ஆனால், நஷ்டத்தையும், கடன்களையும் காரணம் காட்டி, இரண்டு இரும்பு உலைகளை மூடியதோடு, சுமார் 630 பேரின் வேலைக்கும் உலை வைத்தார். பொங்கி எழுத ஃப்ரான்ஸ் நாட்டு தொழிற்துறை அமைச்சர், “வாக்குறுதிகளை மீறுகின்ற மிட்டல் எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. ஆலையை அரசே ஏற்று நடத்தும்” என்று கர்ஜிக்க, அரண்டுபோய் வாலைச்சுருட்டிக் கொண்டுவிட்டது “மிட்டல்” சாம்ராஜ்யம்!! இது ஃப்ரான்ஸ்!!


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கிங்ஃபிஷர் மல்லையா - இவரத் தெரியாதவங்க உண்டா! இவரின்  “யுனைடெட் ப்ரூவரிஸ்” என்கிற மதுபான நிறுவனம் செப்டம்பரோடு முடிகிற காலாண்டில் 47% அதிக லாபம் ஈட்டியிருக்கிறதாம். நம்ம டாஸ்மாக்கும் இவர்களின் முக்கிய கஸ்டமராக்கும்.  சென்ற மாதம், மல்லையா ஒரு கோயிலுக்கு 3 கிலோ தங்கமும், இன்னொன்றிற்கு தங்கக் கதவும் அளித்தார். இவரின் இன்னொரு நிறுவனமான கிங்ஃபிஷர் விமான நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறதென்று கடந்த ஒன்பது மாதங்களாக பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால், ஒரு பைலட்டின் மனைவி தற்கொலையே செய்துகொண்டார். இது இந்தியா!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

 ஒருவழியாக பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக, ஐ.நா. சபை அங்கீகரித்து விட்டது.   பெரியண்ணன்களான வீட்டோ பவர் படைத்த அமெரிக்கா, இஸ்ரேல், கனடா ஆகியவை எதிர்த்தபோதும் தீர்மானம் நிறைவேறி இருப்பதில்தான் ஆச்சரியமே!! எளியோர்கள் சேர்ந்தால் வலியோரையும் வீழ்த்தலாம் என்பதற்கு ஒரு உதாரணம்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

 ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் பாமியான் புத்தர் சிலைகளை இடித்தது பெரிய சர்சையானது ஞாபகமிருக்கலாம். காட்டுமிராண்டிகள், நாட்டின் தொன்மையான கலாச்சார அடையாளங்களைச் சிதைக்கிறார்கள் என்று அமெரிக்கா, புத்த நாடான சீனா, மற்றும் ஊடகங்களும் ஓலமிட்டன. அப்போது நிறுத்தப்பட்ட “இடிப்பை” இப்போது மீண்டும் தொடர்ந்திருக்கிறார்கள். தொடர்வது, தாலிபான்கள் அல்ல அமெரிக்காவும், சீனாவும்!! அதிர்ச்சியாயிருக்கா...  அமெரிக்காவும் சீனாவும் தாலிபான் கட்சிக்கு மாறிட்டாங்களான்னு குழம்பாதீங்க... அந்தச் சிலைகளின் அடியில் புதைந்து இருக்கும் தாமிர கனிம வளம்தான் அதன் ரகசியம்!! இதற்காக 30 வருட ஒப்பந்தம் சீன கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ம்ம்... மருமவ ஒடைச்சா பொன்குடம்; மாமியா ஒடச்சா மண்குடம்!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

21 comments:

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் டிரங்குப்பெட்டி..

பீஹார் பாகிஸ்தானுக்கு ட்ரையின் போகுதா செக் செய்யணும்.

அமெரிக்கா ஏதோ சுதந்திர போராட்டாத்துக்கு போராடுற மாதிரியே ஓவரா எல்லா இடத்திலும் மூக்கை நுழைப்பதை எப்ப நிறுத்த போகுதோ தெரியலை.

சமீரா said...

டிரங்குப்பெட்டில உலகத்தையே வச்சிருக்கீங்க!!!

pudugaithendral said...

பாகிஸ்தான் நம்ம இந்தியாவுலேயே இருக்கா வெரி குடு. பாகிஸ்தான்லயும் ஹைதராபாத் இருக்கு. :)

மல்லையாவோட ரோதனை தாங்கவே முடியலை. எண்டிடீவி குட்டைம்ஸும் அவங்களுதுதான். விமானநிறுவனத்தின் கடனை அடைப்பது அவருக்கு தூசு இல்லை. ஆனா எல்லாம் ஐடி செய்யற ஆட்டம். நஷ்டம் காட்டணும்னே ஒரு ஏர்லைன்ஸ் அதுவும்அவரட்து மகன் சித்தார்த்துக்கு பிறந்தநாள் பரிசாம்!!

ஸ்ரீராம். said...


வெள்ளைக் காக்கா.... காக்காவைப் பிடிச்சு வெள்ளாவியில் வெளுத்து சர்ஃப் போட்டிருப்பாங்களோ...!

இந்தியா, ஃபிரான்ஸ் வித்தியாசம் கொடுமை!

டிரங்குப் பெட்டி வழக்கம் போலவே சுவாரஸ்யத் தகவல்களை ஆதாரங்களுடன் கொடுக்கிறது.

Vijiskitchencreations said...

Supero super news Thanks for super trunk petti. Romba arumaya ezuthidinga.

Menaga Sathia said...

எல்லாத் தகவல்களையும் கொண்ட டிரங்குப்பெட்டி சூப்பர்ர்!!

ஹுஸைனம்மா said...

அமுதா - அதே, அமெரிக்கா மூக்கை நுழைச்சாலே அங்கே ஏதோ விஷயம் இருக்குன்னுதான் அர்த்தம். இல்லைன்னா, அம்புட்டு சண்டை நடக்கும்போது, இலங்கையிலயும், சிரியாவுலயும் ஏன் வரலை?

சமீரா - வாங்க. நன்றி.

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - “அந்தப்” பாகீஸ்தான்ல ஹைதராபாத்தும் உண்டு, பஞ்சாப்பும் உண்டு!!

மல்லையாவின் தில்லுமுல்லுகளை அடக்க முடியலை பாருங்க நம்ம அரசால! ஒரு நிறுவனத்தில் வர்ற அபரிமித லாபத்தை வச்சு விமான நிறுவன பணியாளர்களின் சம்பளத்தையாவது கொடுத்திருக்கலாம்!!

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - நன்றி!!

மேனகா - நன்றிப்பா.

விஜி - நன்றிப்பா.

suvanappiriyan said...

நம்ம நாட்டிலயும் ஒரு பாகிஸ்தான் இருப்பது புதிய செய்தி.

நிலாமகள் said...

முந்தைய டிரங்குப பெட்டிகளை திறக்க கிளம்பிட்டேன்.

ஒவ்வொரு விவரத்திலேயும் மேல்விவரத்துக்கொரு திறப்பு வைச்சது பாராட்டத் தக்கதே.

RAMA RAVI (RAMVI) said...

டிரங்கு பெட்டி மூலமாக உலக செய்திகள் அனைத்தும் தெரிந்து கொள்ள முடிந்தது.நம்ம ஊரிலும் பாகிஸ்தான் என்பது எனக்கு புதுத் தகவல்.

// மருமவ ஒடைச்சா பொன்குடம்; மாமியா ஒடச்சா மண்குடம்!!//

ஹா..ஹா..

மொத்தத்தில் டிரங்கு பெட்டி சுவாரசியம்.

பூந்தளிர் said...

ட்ரங்கு பெட்டி நிறைய சுவாரசியமான தகவல்கள் என் பக்கமும் வாங்கம்மா.

வல்லிசிம்ஹன் said...

ரொம்பநாளச்சு,ட்ரங்குப் பெட்டியைப் பார்த்து:)பாகிஸ்தனுக்குப் போன்னு சொன்னப் போயிட்டாப் போகுது. எல்லா ஊரும் ஒண்ணுதன் இப்ப. ஒரே லட்சணம்.
பெரிய யானைக்கெல்லாம் அடிசறுக்குது போல இருக்கு. மிட்டல்,மால்யாவைச் சொல்கிறேன்.ஃப்ரான்ஸுக்கு இருக்கிற ரோஷம் நம்ம ஊருக்கு எப்ப வருமோ.:(

ஸாதிகா said...

இது இந்தியா!!
// மிசச்சரியாக சொன்னிங்க ஹுசைனம்மா.டிரங்கு பொட்டியில் அமர்களமாக லின்குகள் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

Prathap Kumar S. said...

அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஸ்பெயின், சீனா... ம்ம்ம் நமக்கு ஊருல வண்ணாரப்பேட்டைதானே...:))

ADHI VENKAT said...

பீகார் பாகிஸ்தான் பற்றி இதுவரை அறியாத தகவல்கள்...

வெள்ளை காக்கா விஷயம் சூப்பர்!

மொத்தத்தில் டிரங்குப் பெட்டி சுவாரசியத்தை அள்ளித் தருகிறது.

கோமதி அரசு said...

டிரங்குப்பெடி செய்திகள் எல்லாம் புது செய்திகள்.

ம்ம்... மருமவ ஒடைச்சா பொன்குடம்; மாமியா ஒடச்சா மண்குடம்!!//

அருமை.

சாந்தி மாரியப்பன் said...

என்னாயிது டிரங்குப்பெட்டி ரொம்பக் கனமா இருக்கேன்னு பார்த்தேன். உலகத்தையே அதுல அடக்கி வெச்சிருக்கீங்களே :-))

enrenrum16 said...

//அமெரிக்கா, இஸ்ரேல், கனடா ஆகியவை எதிர்த்தபோதும் தீர்மானம் நிறைவேறி இருப்பதில்தான் ஆச்சரியமே!// எனக்கும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது....

இந்தியாவில் பாகிஸ்தான் இருப்பது தெரியும்.... அதுக்குப் பின்னால் இப்படியொரு கதையா... அப்படியே பஞ்சாபுக்கு என்ன கதைன்னு சொன்னா இன்னும் நல்லாருக்கும் :)

கோமா ஒண்ணுதான் கை வைக்காத ஏரியாவா இருந்துச்சு..... பயபுள்ளைக அதிலயும் சாதிக்கும் காலம் பக்கத்தில் வந்துடுச்சு போலயே :) !!

தங்கக்கதவாஆஆ..இவங்கள்ளாம் தங்கக்கோயிலே கொடுத்தாலும் ஆச்சரியமும் இல்ல....கேக்க ஆளுமில்ல...:(

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உலகச் செய்திச் சுருக்கங்களை சுவையாகத் தருவது ட்ரங்குப் பெட்டி!