Pages

பெண்களும், புகுந்த வீடும்வரலாற்றில கி.மு, கி.பி இருக்கிற மாதிரி உலகத்துல எல்லோருடைய தனிப்பட்ட வாழ்விலும்  தி.மு., தி.பி.ன்னு ரெண்டு வரலாறு இருக்கும். விரும்பியே வலைக்குள் அகப்பட்டாலும், ஆண், பெண் இருபாலருக்குமே தி.பி. வரலாறு பெரும்பாலும் சோகமயமாவே இருக்கும்.  அல்லது சோகமாக இருப்பதாகவே காட்டிக் கொள்வார்கள்.

என்னதான் விளையாட்டா பேசிக்கிட்டாலும், ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்பது வாழ்க்கையையே மாற்றிப் போடத்தான் செய்கிறது. புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய இடம், புதிய வாழ்க்கை முறைகள், புதிய சட்டதிட்டங்கள், ..  எல்லாமே புதிதாக!! வேரோடு பிடுங்கி மண்மாற்றி நடப்பட்ட மரமாக, ஆரம்ப காலங்களில் சிறிதே துவண்டாலும், விரைவில் தன்னைச் சமப்படுத்தி, ஊன்றிய இடத்தில் புதுவேர் பிடித்து, கிளை பரப்பி நிழல் கொடுக்கத் தொடங்கிவிடுகிறாள் பெண்!!

சில குடும்பங்களில் திருமணத்திற்குப் பின் பெண்ணுக்கு சம்பிரதாய வழக்கப்படி வேறு பெயரே சூட்டப்படுகிறது!! பல சமுதாயங்களில், வீட்டில் யாரேனும் இறையடி சேர்ந்துவிட்டால், துக்கம் அனுசரிக்கும்விதமாக ஒரு வருடம்வரை பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை; இதிலும் பெண்ணின் பிறந்த வீட்டில் உள்ளோர் மறைந்திருந்தால் அது அப்பெண்ணின் புகுந்த வீட்டின் பண்டிகைக் கொண்டாட்டங்களைப் பாதிக்காது!! காரணம் அப்பெண் திருமணத்தோடு புகுந்த வீட்டின் அங்கத்தினராகி விடுகிறாள்.

ஒவ்வொரு சமுதாயத்திலும், ஊரிலும் ஒவ்வொரு வகைப் பழக்கங்கள்!!திருமணத்திற்குப் பின் அன்றாட நடைமுறைகளிலும் சரி,  பண்டிகை போன்ற விசேஷ வைபவங்களிலும் சரி, ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் சிற்சில வேறுபாடுகளாவது பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இருக்கும். பெண் அதையும் அணைந்து பெருமையோடே ஏற்றுக்கொள்கிறாள்.

சிலர் உறவுகளுக்குள்ளேயோ அல்லது  ஊருக்குள்ளேயோ திருமணம் செய்துகொள்வார்கள்; இவர்கள் அதிகம் சிரமம் இல்லாமல் சமாளித்துக் கொள்வார்கள். சிலர் ஊர்விட்டு திருமணம் செய்துகொள்வார்கள். சிலர் பிற மாநிலங்களிலும் விரும்பித் திருமணம் செய்துகொள்வார்கள். விருப்பம் நிறைவேறும் மகிழ்ச்சியில்,  கலாச்சார, உணவுப் பழக்க வேறுபாடுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.

நாடுவிட்டு நாடு திருமணம் செய்வோரும் உண்டு; ஆனால் பெரும்பாலும் இந்தியப்பெண்கள் அந்நிய நாட்டவரைத் திருமணம் செய்வது அரிதே.  ஆனால், இந்திய ஆண்கள் அந்நிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வது பரவலாக நடைபெறத்தான் செய்கின்றது. செய்தித்தாட்களில் பெருமையுடன் முதல்பக்கச் செய்தியாகப் படத்துடன் பிரசுரித்திருப்பார்கள், ”வெளிநாட்டுப் பெண் இந்தியக் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டார்” என்று!!

பொருளாதார வசதி, குடியுரிமை, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களை முன்னிறுத்திச் செய்யப்படும் இவ்வகைத் திருமணங்களில் பலவும், காரியம் முடிந்தவுடன், சிலசமயம் அதற்குமுன்பேகூடக் கைகழுவி விடப்படுகின்றன. இருதரப்பிலும் உள்ளார்ந்த அன்புடன், பக்குவமடைந்த மனதுடன் செய்யப்படும் திருமணங்களே நீடித்து நிலைத்து நிற்கின்றன!! இப்படிச் சொன்னவுடன் எல்லாருக்குமே நினைவில் வருவது, சோனியா - ராஜீவ் காந்தி ஜோடிதான் இல்லையா?

நான் இங்கு அரசியல் பேசவில்லை; கொள்கைரீதியாக சோனியாவைச் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு பெண் என்ற முறையில் அவரை எனக்குப் பிடிக்கும். அரசியல் பாரம்பரியமிக்க இந்தியக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும், அக்குடும்பத்தின் புகழுக்கும், பெருமைக்கும் இன்றுவரை தன்னால் பங்கம் வராமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதன் மூலம் தன் பிறந்த நாட்டுக்கும், குடும்பத்துக்கும்தான் பெருமைதேடித் தந்திருக்கிறார். இன்னொரு இந்திய மருமகள் இருந்தும், மாமியார்மெச்சும் மருமகளாக இவரே இருந்திருக்கிறார்!!

அரசியல் கூடாது என்று தன் கணவரிடம் உறுதிமொழி வாங்கியிருந்தாலும், அவசியம் வந்தபோது அவரை நாட்டுக்குத் தந்து, அதன்காரணமாக அவரையே இழக்கவும் செய்தார்.  ராஜீவின் மறைவுக்குப்பின் ஒதுங்கி இருந்தாலும், அவசியமேற்பட, தானே நேரடி அரசியலுக்கு வந்து வெற்றி  பெற்றுத் தந்ததினால், பிரதமர் ஆகும் வாய்ப்பு கைமேல் கிடைத்தாலும், பெருந்தன்மையாக மறுத்து, அதைத் தகுதிவாய்ந்த ஒருவரிடம் ஒப்படைத்தது;  எதிர்க்கட்சிகள் பண்பாடு இல்லாமல் அவரைப் பற்றி இழிவாகப் பேசினாலும், பொறுமை காத்து, சொல்லாடாமல், செயலாற்றிப் பதிலளிப்பது;  வட்டம், மாவட்டங்களே தலைகால் புரியாமல் இந்நாட்களில் ஆடும்போது, நூற்றாண்டுகண்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும், அவையடக்கத்தோடே இருப்பது; ஒரே பிடிப்பாக இருக்கும் மகனையும், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதென்று தெரிந்தாலும், தைரியமாகக் களத்தில் இறக்கி விட்டிருப்பது; பண்பான உடைகள் அணிவது; மற்றவர்களின் கைப்பாவையாக இல்லாமல், உறுதியான முடிவுகளைத் தானே எடுப்பது; இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லலாம் பெண்ணாக அவரைக் குறித்த பெருமைகளாக!!

ஒருவரின் கொள்கைகளை எதிர்க்கப் பலவழிகள் இருந்தாலும், சட்டப்படி மட்டுமின்றி உள்ளத்தாலும் இந்தியராகவே மாறிவிட்ட அவரை இன்னமும் “இத்தாலிய மங்கை”, “அண்டோனியோ மைனோ”, ”பின்வாசல் வழி வந்தவர்”, “இத்தாலி மகராணி பெற்ற இளவரசன் (ராகுல்)” என்றெல்லாம் இழிவுபடுத்துவது,  இராமர் இருக்குமிடமே அயோத்தி என்று வாழ்ந்த சீதாப்பிராட்டியாரைப் போற்றும் பி.ஜே.பி. வகையறாக்கள் மட்டுமல்ல, முற்போக்குச் சிந்தனை கொண்டச் சில பெண்களும்தான் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது!!

ஏனோ கற்புக்கரசியாகப் பாராட்டப்படும் கண்ணகியின் நினைவு வருகிறது!!

Happy Women's Day!!
Post Comment

56 comments:

நட்புடன் ஜமால் said...

முதலில் வாழ்த்துகள்!

--------------------

[[சோகமாக இருப்பதாகவே காட்டிக் கொள்வார்கள்]]

அதிகம் இதேதான் போல ...

பிறந்த வீடு புகுந்த வீடு - இந்த மேட்டரில் அதிகம் சொல்வதற்கில்லை
நேற்றைய மருமகள்கள் இன்றைய மாமியாராக மாறியும் இந்த நிலைகள் ஏன் மாறவில்லை ...

-----------------

நான் வாழுகின்ற சமயத்தில் வாழ்ந்த பெண்மனிகளில் நான் அதிகம் போற்றுவது அன்னை தெரசாவைத்தான் - சோனியா பற்றிய உங்கள் பார்வையும் நல்லாயிருக்கு.

கண்ணா.. said...

மங்கையர் தினத்திற்கான உங்கள் வித்தியாச பார்வையுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது.


அனைவருக்கும் மங்கையர் தின வாழ்த்துக்கள்

(நீங்க வாழ்த்து சொல்ல ரெண்டு மாசம் கேப் கிடைக்குதுன்னு போட்ட பதிவு வேற ஞாபகத்துக்கு வருது...)

நாஞ்சில் பிரதாப் said...

//Happy Women's Day!! //

அப்பாடா இதைச்சொல்றதுக்குத்தான்... இவ்ளோ லெக்சரா... நானும் ஹுசைனம்மா ஏதோ மகளிர் சங்கம் தலைவியாயீட்டீங்கன்னு நினைச்சேன்.

இதை முதல்லயே சொல்லியிருக்கலாமே.... :))

SUFFIX said...

//பெருந்தன்மையாக மறுத்து, அதைத் தகுதிவாய்ந்த ஒருவரிடம் ஒப்படைத்தது//

இந்தப் பெருந்தன்மையால் அவருடைய புகழ் மேலும் உயர்ந்தது. இது ஒரு படிப்பினையும் கூட!!

நாஸியா said...

சென்னையில மகளிர் தினத்தப்போ நாய்டு ஹால்ல சேல் போடுவாங்க.. நல்ல சுரிதாரெல்லாம் வாங்கிருக்கலாம்.. மிஸ் ஆயிட்டு..

ஹுஸைனம்மா said...

// நாஸியா said...

சென்னையில மகளிர் தினத்தப்போ நாய்டு ஹால்ல சேல் போடுவாங்க.. நல்ல சுரிதாரெல்லாம் வாங்கிருக்கலாம்.. //


நாஸியா???????

SUFFIX said...

அப்போ நாளை ஒரு நாள் மட்டும் மகளிர் தினம், மற்ற 364 நாட்களும் ஆண்கள் தினமா?

புதுகைத் தென்றல் said...

பெண்களும் புகுந்த வீடும்னு நீங்க சொல்லியிருக்கும் கருத்துக்கள் பலதும் உண்மை.

அன்புத்தோழன் said...

வாழ்கை பற்றிய பதிவு போல காட்சியளித்து... அரசியல் பதிவு போல தோற்றமளித்து.... வந்ததென்னவோ வாழ்த்துச்செய்தி.... துன்பத்தில் துவண்டு விடாமல் இருக்க ஆண்களுக்கு இறைவன் கொடுத்த இன்ப வரமான அனைத்து பெண்களுக்கும்.... இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்....

அன்புத்தோழன் said...

//சென்னையில மகளிர் தினத்தப்போ நாய்டு ஹால்ல சேல் போடுவாங்க.. நல்ல சுரிதாரெல்லாம் வாங்கிருக்கலாம்.. மிஸ் ஆயிட்டு//

அடடா!!! இதுக்கு பேரு தான் feelings of india வோ?????

அன்புத்தோழன் said...

//அப்போ நாளை ஒரு நாள் மட்டும் மகளிர் தினம், மற்ற 364 நாட்களும் ஆண்கள் தினமா?//

eppooodiii? ha ha ha ;-)

அக்பர் said...

நல்ல பகிர்வு

மகளிர் தின வாழ்த்துகள்.

அன்புத்தோழன் said...

//வேரோடு பிடுங்கி மண்மாற்றி நடப்பட்ட மரமாக, ஆரம்ப காலங்களில் சிறிதே துவண்டாலும், விரைவில் தன்னைச் சமப்படுத்தி, ஊன்றிய இடத்தில் புதுவேர் பிடித்து, கிளை பரப்பி நிழல் கொடுக்கத் தொடங்கிவிடுகிறாள் பெண்!!//

பெண்மையின் சிறப்பை பளிச்சென சொல்லிய வரிகள் இவை... எப்டிங்க இப்டி... உக்காந்து யோசிப்பீங்களோ...?

ராமலக்ஷ்மி said...

மகளிர்தின வாழ்த்துக்கள்!

அருமையான பதிவு. சோனியா பற்றிய உங்கள் கருத்துகளுடனும் உடன்படுகிறேன்.

அம்பிகா said...

மகளிர் தின வாழ்த்துக்கள் ஹூஸைனம்மா.

நல்ல பகிர்வு.

நீங்கள் கூறிய இதே காரணங்களுக்காக, எனக்கும் சோனியாவை பிடிக்கும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பெண்கள் நாட்டின் கண்கள்; பெண்களை பற்றி அருமையான கட்டுரை, நல்ல அலசல்.

பெண்கள் தின வாழ்த்துகள்.

அமைதிச்சாரல் said...

வித்தியாசமான பார்வையுடன் மகளிர் வாழ்த்து. உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா.

நாஸியா said...

ஃப்ரீயா விடுங்க.. தூக்க கலக்கத்துல டைப் பண்ணிட்டேன்..

புகுந்த வீட்டு மேட்டர்ல எனக்கும் ரொம்ப ஃபீலிங்க்ஸ் இருக்கு.

நான் ரொம்ப ஃபீல் பண்ணினது எப்பன்னா பெருநாள் அன்னைக்கு தான்.. அப்போ அவங்க இங்க எனக்கு விசா ஏற்பாடு செஞ்சிட்டு இருந்தாங்க.. முதல் பெருநாள் மாப்பிள்ளை வீட்டுல தான்னு நான் மட்டும் அங்க தனியா.. ம்மா வாப்பாவோடவும் இல்லாம மாப்பிள்ளையோடவும் இல்லாம‌... சே கொடுமைங்க அது..

ஸாதிகா said...

"பெண்களும்,புகுந்த வீடும்"என்ற தலைப்பில் ஆரம்பித்து கடைசியில் சோனியாவைப்பற்றி அழகாக முடித்து மகளிர்தினத்திற்கு பொருத்தமான இடுகையாக்கிவிட்டீர்கள்."புகுந்தவீடு"அந்த கொடுப்பினை இல்லை :-)

ஜெய்லானி said...

சோனியா பற்றி (அரசியலுக்கு அப்பாற்பட்டு) நீங்க எழுதியது. உண்மையிலேயே மிகவும் அருமை. நான் மட்டும் ராஜாவாக இருந்திருந்தால் பாதி நாட்டை உங்கள் பெயருக்கே எழுதி தந்திருப்பேன். இது வரை நீங்க எழுதிய பதிவிலேயே இது ரியலி சூப்பர்

அமைதிச்சாரல் said...

ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியாவின் பாதிப்பால் நான் எழுதிய கவிதை http://amaithichaaral.blogspot.com/2010/02/blog-post_25.html

தமிழ் பிரியன் said...

\\\நாஸியா Says:
07/03/2010 15:39

சென்னையில மகளிர் தினத்தப்போ நாய்டு ஹால்ல சேல் போடுவாங்க.. நல்ல சுரிதாரெல்லாம் வாங்கிருக்கலாம்.. மிஸ் ஆயிட்டு..\\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

சோனியா பற்றிய பார்வை நல்லா இருக்கு... எனக்கும் சோனியாவின் அணுகுமுறை ரொம்ப பிடிக்கும்.

தமிழ் பிரியன் said...

அனைவருக்கும் மங்கையர் தின வாழ்த்துக்கள்

அன்புத்தோழன் said...

//முதல் பெருநாள் மாப்பிள்ளை வீட்டுல தான்னு நான் மட்டும் அங்க தனியா.. ம்மா வாப்பாவோடவும் இல்லாம மாப்பிள்ளையோடவும் இல்லாம‌... சே கொடுமைங்க அது//

chu chu chu.... Ayyo paavam...

Anonymous said...

அரசியல் தவிர்த்தால் சோனியா அருமையான பெண்மணி என்பதில் சந்தேகம் இல்லை.

Adirai Express said...

அருமையான எடுத்துக்காட்டு,மங்கையர் தின வாழ்த்துக்கள்

SanjaiGandhi™ said...

ULAGAM POTRUM UNNATHA THALAIVI ENGAL ANNAI. ARASIALILUM AVAR ROLE MODEL THAN. WE ARE VERY PROUD OF HER LEADERSHIP. THANKS FOR YOUR COMPLEMENT MY DEAR SISTER. WOMEN'S DAY WISHES TO YOU.

எம்.எம்.அப்துல்லா said...

பெண்கள் தின வாழ்த்துகள்.

Jaleela said...

சென்னையில மகளிர் தினத்தப்போ நாய்டு ஹால்ல சேல் போடுவாங்க.. நல்ல சுரிதாரெல்லாம் வாங்கிருக்கலாம்.. மிஸ் ஆயிட்டு..


அட நாஸியாவின் கவலைய பாருங்கள்

Jaleela said...

ரொம்ப நல்ல பகிர்வு ஹுஸைனாம்மா, இந்த இடத்தில் சோனியா காந்தி பற்றி சொல்லியது ரொம்ப பிடிச்சிருந்தது.

பெண்கள் சோகமாக இன்னும் இப்படி தான் இருக்கிறார்கள், பெண்களாய் பிறக்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்கனும் என்பது சிலருக்கு புரியல.

சகிப்பு தன்மை இல்லாமல். வாழ்க்கைய (இன்பம், துன்பம்) ரசித்து வாழ்ந்தால் எல்லாம் இனிமை தான்.


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

Jaleela said...

சகோ.ஜமால்

//இன்றைய மருமகள் நாளைய மாமியார்//

Jaleela said...

அப்போ நாளை ஒரு நாள் மட்டும் மகளிர் தினம், மற்ற 364 நாட்களும் ஆண்கள் தினமா?


இந்த ஷபிக்கு தான் இப்படி எடக்கு மடக்கா கேட்கதோன்றும்.

kggouthaman said...

சிறப்பான பதிவு. உங்க கருத்துகளை அழகிய, எளிய நடையில் பதிந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

நல்ல பதிவு ஹுசைன்னம்மா..

நாஸியாவின் குசும்பு சூப்பர்..

அனைவருக்கும் மங்கையர்
தின வாழ்த்துக்கள்

malar said...

ரொம்ப நல்ல பதிவு...

சோனியா பற்றி எழுதியது மிக நல்ல விசயம்...

புகுந்தவீட்டு மேட்டர் உசாரகவும் இருக்கனும் ....கொஞம் அசந்தால் பைதியம்,கூமுட்ட ...அதிஊசாரக இருந்து கண் கண்டதை பட்டுன் சொன்னால் பொல்லாதவ என்ற பட்டமும் கிடைக்கும்.....

கணவனை பற்றி சொல்லும் போது..

கொண்டவன் துணையிருந்தால் கூறை ஏறி குவலாம் என்றும்...

மனைவியை சொல்லும் போது இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா செறக்கிவன் ஒழுங்கா செறைப்பான் என்று சொல்லுவாங்க ....


’’’’’நான் வாழுகின்ற சமயத்தில் வாழ்ந்த பெண்மனிகளில் நான் அதிகம் போற்றுவது அன்னை தெரசாவைத்தான் - ’’’’

அவங்க கன்னியாக வாழ்ந்தார்கள் ...அன்னையுடன் யாரையும் ஒப்பிட முடியாது...

ஆண்களில் தற்போது அபுல் கலாமை சொல்லலாம்...

malar said...

’’’சென்னையில மகளிர் தினத்தப்போ நாய்டு ஹால்ல சேல் போடுவாங்க.. நல்ல சுரிதாரெல்லாம் வாங்கிருக்கலாம்.. //

எவ்வளவு வருத்தமான மேட்டர் செ....

தெரியாம போச்சே...

சுந்தரா said...

//
வேரோடு பிடுங்கி மண்மாற்றி நடப்பட்ட மரமாக, ஆரம்ப காலங்களில் சிறிதே துவண்டாலும், விரைவில் தன்னைச் சமப்படுத்தி, ஊன்றிய இடத்தில் புதுவேர் பிடித்து, கிளை பரப்பி நிழல் கொடுக்கத் தொடங்கிவிடுகிறாள் பெண்!! //

அருமையான விளக்கம் ஹுசைனம்மா.

உங்க பாணியில் அழகா கருத்துக்களைச் சொல்லியிருக்கீங்க. இந்த விஷயத்தில் எனக்கும் சோனியாவைப் பிடிக்கும்.

நாஸியாப் பொண்ணுதான் பாவம்...இங்க வந்து மாட்டிக்கிடுச்சு :)

மாதேவி said...

நல்ல பதிவு.அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

குட் பிளாக் ஆக தேர்ந்தெடுக்கப்பதற்கு வாழ்த்துக்கள!

Chitra said...

நல்ல பதிவு. மகளிர் தின வாழ்த்துக்கள்.
குட் ப்லாக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்!

athira said...

திருமதி ஹூசைன்... உங்கள் பதிவிலிருந்து அதிக விஷயங்கள் தெரிந்துகொண்டேன்...

ஆண், பெண் இருபாலருக்குமே தி.பி. வரலாறு பெரும்பாலும் சோகமயமாவே இருக்கும். அல்லது சோகமாக இருப்பதாகவே காட்டிக் கொள்வார்கள்./// இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னைப்பொறுத்து முக்கால்வாசிப்பேரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்... திருமணத்துக்கும் பின்னரும்...

அப்பாடா இதைச்சொல்றதுக்குத்தான்... இவ்ளோ லெக்சரா... நானும் ஹுசைனம்மா ஏதோ மகளிர் சங்கம் தலைவியாயீட்டீங்கன்னு நினைச்சேன்//// என்னால் சிரிப்பதை நிறுத்தவே முடியவில்லை... மீ எஸ்ஸ்ஸ்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வாழ்த்துக்கள்.. குட் ப்ளாக்.. அப்படிப் போடுங்க..

நீங்க நல்ல பெண்களைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க :) ஆமாம்.. அப்படியே சரிதான்.. :)

அதே மாதிரி சோனியாவ நீங்க சொன்ன பார்வையில இருந்து பிடிச்சிருக்கு.. நானும் யோசிச்சிருக்கேன்..

thenammailakshmanan said...

எனக்கும் சோனியா மிகப் பிடித்தவர் ஹுசைனம்மா மிக அருமையான பகிர்வு பெண்கள் தின வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

விகடன் குட் ப்ளாக்கில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

Adirai Express said...

வாழ்த்துக்கள், எந்த இனையத்திள் உங்கள் பதிவை பற்றி வந்திருக்கிறதென்று சொல்லவில்ல்யே?

ஹுஸைனம்மா said...

ஜமால் - வாங்க; அன்னை தெரசாவும், சோனியாவும் வேறவேற துறையைச் சேந்தவங்க. ஒப்பிடமுடியாதுன்னு நினைக்கீறேன். இருவரும் இந்தியா வந்ததிற்கான காரணமும் வேறு வேறு, இல்லையா?

கண்ணா - நன்றி; அந்த கேப்ல இது விட்டுப் போச்சு!!

பிரதாப் - நன்றி; இவ்ளோ பெரிசா தமிழ்ல எழுதுனது புரியல, ஒரு வரி இங்லீஷ் மட்டும் புரிஞ்சுடுச்சுன்னு விளக்கமா சொல்லிட்டீங்க!! வீட்டம்மா வந்தப்பறம் எல்லாம் “தானே” புரியும்!!

ஷஃபி - வாங்க; ஆமாம், கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் தன் பண்பை நிரூபித்துக் கொள்கிறார்.

நாஸியா - மகளிர் தினம் வியாபாரிகளால் சந்தப்படுத்தப்பட்டதைச் சொல்றீங்களா? உண்மைதான்!!

ஹுஸைனம்மா said...

ஷஃபி - ஆமா, ஒரு தினம் மட்டுமே பெண்களுக்குன்னாலும், பெண் இல்லாமல் மற்ற 364 நாட்களும் உங்களால் “ஆண்கள் தின”ங்களைக் கழிக்க முடியாது!!

புதுகைத் தென்றல் - வாங்க; நன்றி.

அன்புத்தோழன் - பெண்களும் பல அவதாரங்கள் எடுப்பவர்கள்தானே நித்தம்; அதனால்தான் பதிவும் அப்படி பல வடிவாகக் காட்சியளிக்கிறது!! வரிகளை உக்காந்து யோசிக்கற்தெல்லாம் இல்லை; அது தானா வருது!!

அக்பர் - நன்றி.

அம்பிகா - வாங்க; நன்றி.

ராமலஷ்மிக்கா - வாஙக; பார்த்தவரையில் பெண்கள் அனைவருக்குமே சோனியா மீது மதிப்பிருக்கத்தான் செய்கிறது!!

ஸ்டார்ஜன் - நன்றி!

அமைதிச் சாரல் - வாங்க; நன்றி!!

ஹுஸைனம்மா said...

நாஸியா - தூங்கி முழிச்சிட்டீங்களா? ஆமா, தலைப் பெருநாள்ல கணவர்கூட இல்லன்னா வருத்தமாத்தான் இருக்கும்.

ஸாதிகாக்கா - ஆமா, உங்களுக்கு “புகுந்த வீடு” பாக்கியம் கிடையாதே!! இருந்தாலும், கணவர் விருப்பு, வெறுப்புக்கேற்ப கொஞ்சமாவது மாறுவது இருக்கத்தான் செய்யும் இல்லியா?

ஜெய்லானி - நல்லவேளை நீங்க ராஜாவா இல்லை; இல்லன்னா பாதி நாட்டை வச்சுகிட்டு, அரசியலும் பண்ணனுமே, அந்தக் கஷ்டமெல்லாம் வேண்டாம்ப்பா!! ரொம்ப நன்றி பாராட்டுக்கு!!

தமிழ்ப்பிரியன் - நன்றி; சோனியா தனிப்பட்ட முறையில் எல்லாரையும் கவர்ந்திருக்கிறார் இல்லையா?

சின்னம்மிணிக்கா - அதான் சோனியாவின் விசேஷமே, அரசியல் ரீதியா இல்லாட்டாலும், அவங்களை எல்லாருக்கும் பிடிக்கும்!!

ஹுஸைனம்மா said...

அதிரை எக்ஸ்பிரஸ் - நன்றி; என் இந்தப் பதிவு, யூத் விகடனின் “குட் பிளாக்ஸ்” என்ற பகுதியில் வந்திருக்கிறது.

சஞ்சய் - வாங்க; பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

அப்துல்லா - நன்றி; அரசியல்வாதி, அரசியல் பேசாமப் போயிட்டீங்க?

ஜலீலாக்கா - வாங்க; அறிவுரைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.

கௌதமன் (எங்கள் பிளாக்) - நன்றி, வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும்.

மலிக்கா - வாங்க, வாங்க. நன்றி!! நாஸியா, சின்னப் பொண்ணு, அதான் இன்னும் குறும்பு போகல!!

மலர் - நன்றிங்க; ஆமாம், புகுந்த வீட்டுல நாம எல்லாரையும் புரிஞ்சுக்கிற வரை, அல்லது, எல்லாரும் நம்மை புரிஞ்சுக்கிற வரை, கவனமாத்தான் இருக்கணும்.

ஹுஸைனம்மா said...

சுந்தரா - வாங்க; ரொம்ப நாளாக் கானோமே? நன்றிங்க பாராட்டுக்கு; உங்களுக்கும் சோனியா பிடிக்குமா?

மாதேவி - வாங்க; நன்றிங்க.

ஸாதிகாக்கா - ஆமாக்கா, முதல்முறையா குட் பிளாக்ஸ்ல தேர்வாயிருக்கேன், சந்தோஷமாருக்கு!! நன்றிக்கா.

சித்ரா - வாழ்த்துக்கு நன்றி.

அதிரா - வாங்க;
/இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னைப்பொறுத்து முக்கால்வாசிப்பேரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்...//

நானும் விளையாட்டாத்தான் சொல்லிருக்கேன்; சும்மாவே சிரிக்கப் பிடிக்கும் (சந்தோஷமா இருக்க) உங்களுக்கு, என்னை யாராவது வாருவதைக் கண்டா விடுவீங்களோ??

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - நன்றி வாழ்த்துக்கு; //நல்ல பெண்களைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க// அப்படின்னா? திருமணத்துக்குப்பின் மாறாத்வங்களும் இருக்காங்கங்கிறீங்களா?

தேனம்மையக்கா - நன்றி அக்கா; உங்களுக்கும் சோனியாதான் பிடிக்குமா? என் கருத்தோடு நிறைய பேர் ஒத்துப் போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அக்கா.

கண்ணா - நன்றி பாராட்டுக்கு.

சோனியா காந்தி குறித்து சற்று தயக்கத்தோடுதான் எழுதினேன்; ஆனால், கடசி, கொள்கைக்கு அப்பாற்பட்டு தனது பண்பினாலும், குணத்தினாலும், தன்னடக்கத்தாலும் எல்லாரையும் கவர்ந்திருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயமே!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அப்பா அம்மா இல்லாத பையனாப் பாருங்கன்னு சில பொண்ணுங்க கண்டிஷன் போடுறதக் கேட்டிருக்கேன்.. அதான்..

இமா said...

//ஆண், பெண் இருபாலருக்குமே தி.பி. வரலாறு பெரும்பாலும் சோகமயமாவே இருக்கும்.//
பார்த்துட்டு சொல்லாமப் போக முடியல ஹுசேன். 'பெரும்பாலும்' என்று சொன்னா ஏதோ 50 % க்கு மேல மாதிரி இருக்கு. ஆமோதிக்க முடியல.
என்னைக் கேட்டா.. 'பெரும்பாலானோர்' சந்தோஷமாவே இருக்கிறாங்க, என்பேன்.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ஹீஸைனம்மா.

இந்த பதிவு ‘குட் பிளாக்ஸ்’ பகுதியில் விகடனில் வந்தமைக்கு.

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - ஆமா, கண்டிஷன்ஸ்!! எனக்கெல்லாம் அப்ப கண்டிஷன்ஸ் போடத் தெரியற அளவுக்கு விவரம் பத்தல!! ;-))

இமா - வாங்க.
//பார்த்துட்டு சொல்லாமப் போக முடியல // எப்படியோ ஏதாவது சொல்லிட்டீங்களே, அதுவே போதும்!!

கோமதிக்கா - நன்றி அக்கா, வருகைக்கும், பாராட்டுக்கும்!!