Pages

அதிசயப் பிறவி
இந்த வாரம், செய்திகளில் அதிகம் காணப்படாத, ஆனால் நெகிழவைக்கும் ஒரு சம்பவம் குறித்துப் படித்தேன். சிட்னியின் டராங்கா மிருகக்காட்சிச் சாலையில் (Taronga Zoo)  நடந்த ஒரு யானையின் பிரசவம் குறித்த செய்திதான் அது. இதிலென்ன அதிசயம் இருக்கு, யானைக் குட்டி பிறப்பதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்கத் தோன்றும். முழுவதும் படித்துவிட்டுக் கேளுங்கள் கேள்வியை.

தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட ”பார்ன் டிப்” என்ற யானைக்கு, 22 மாத கர்ப்பகாலத்திற்குப்பின், பிப்ரவரி 28ந் தேதி பிரசவ வலி தொடங்கியது.  சாதாரணமாக யானைகளுக்குச் சில மணிநேரங்களில் பிரசவம் ஆகிவிடும். ஆனால் இந்த யானைக்கு, சில நாட்கள் ஆகியும் பிரசவமாகவில்லை என்றதும்,  சிறந்த கால்நடை மருத்துவர்களை அழைத்துப் பரிசோதித்ததில், வயிற்றினுள் குட்டி தலைகீழ் நிலையில் இருப்பதால் பிரசவம் சிக்கலாகும் என்றும், தாய்-சேய் ஒருவரோ, இருவரோ உயிரிழக்க நேரிடும் என்றும் தெரிய வந்தது. மேலும் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துபார்த்ததில், குட்டி உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாததால்,  குட்டி இறந்துவிட்டது என்றே முடிவு செய்தனர்.


சிஸேரியன் செய்யவேண்டியதுதானே தோணுது இல்லியா? யானைகளுக்கு சிஸேரியன் செய்றதெல்லாம் ரொம்ப ரொம்ப சிக்கலான விஷயமாம். அதனால செய்ய மாட்டாங்களாம்; எவ்வளவு கஷ்டம்னாலும் தானாத்தான் பிறக்கணுமாம். ஆனா,  இப்ப குட்டி இறந்து போனதுனால, குட்டியின் முயற்சி இருக்காது; அந்த யானை தானாதான் பெற்றெடுக்கணுமாம்.  அதுக்கு இன்னும்  ஒரு வருடம் வரை ஆகலாமாம். ஆமா, அதுவரை, இறந்த குட்டியை அந்த யானை வயிற்றிலேயேதான் சுமந்துகிட்டு இருக்கணும்!!

இதனாலே, இந்த விஷயம் எல்லாருக்கும் சோகத்தைத் தந்தது. மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் பலரும் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வந்த நிலையில், தாய் யானை விநோதமாக நடந்துகொண்டதை, மிருகக்காட்சிச் சாலையினர் கண்டனர். அதாவது, சில முறை, உருளவும், பிரளவும் செய்தது. சில முறை அந்த யானை தன் தலையில் நிற்க முயற்சித்தது. தன் வயிற்றில் தலைகீழாக இருக்கும் குட்டியை கவிழ்த்து, நேராக்க முயற்சிப்பது போல அதன் செய்கைகள் இருந்ததாகப் பின்னர் குறிப்பிட்டனர்.


இப்படியாக, மார்ச் 8ந் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்ட குட்டி, 10ந் தேதி பிறந்தது. இறந்து பிறந்த குட்டியைப் பரிதாபமாக எல்லாரும் பார்த்திருக்க, மெல்ல அசைந்து, தலையைத் தூக்கிப் பார்த்தது அந்தக் குட்டி!! ஆமாம்,  அந்தக் குட்டி இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறது!! எப்படி இந்த அதிசயம் நடந்தது? வயிற்றினுள் இருந்தபோது,  குட்டி கோமா நிலைக்குச் சென்றிருக்கக்கூடும், அதனால்தான் இதயத் துடிப்பு முதல் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் மருத்துவர்கள் சொல்லுகின்றனர்.

taronga.org.au

தாய் யானைக்குப் பிரசவ வலி தொடங்கி ஒன்பது நாட்களுக்குப் பின்னர் உயிருடன்  பிறந்த குட்டி அதிசயப் பிறவியாகவேப் பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு Mr. Shuffles என்று செல்லமாகப் பெயரிட்டு அழைக்கின்றனர். புதுப் பேர் வைக்கிறதுக்கு ஒரு போட்டியும் அறிவிச்சிருக்காங்க!!  சில நாட்கள் கோமாவுல இருந்ததால, பாதிப்பு எதுவும் இருக்கான்னு பார்க்கிறதுக்காகத் தீவிரமா கண்காணிக்கிறாங்க மிஸ்டர். ஷஃபிள்ஸை!! ஆனாலும், தானே நடக்கவும், பால் குடிக்கவும், ஓடியாடவும் ஆரம்பிச்சுட்டதால அப்படி எதுவும் இருக்காதுன்னே தோணுது. அப்படியே இருக்கட்டும்.

இப்ப என்ன சொல்றீங்க?

Post Comment

39 comments:

Mrs.Menagasathia said...

நெகிழவைத்த பதிவு!! அந்த யானையின் பிரசவ வலையை நினைத்து கண்கலங்கி விட்டது.பகிர்வுக்கு நன்றி ஹூசைனம்மா!!

கண்ணா.. said...

//தாய் யானை விநோதமாக நடந்துகொண்டதை, மிருகக்காட்சிச் சாலையினர் கண்டனர். அதாவது, சில முறை, உருளவும், பிரளவும் செய்தது. சில முறை அந்த யானை தன் தலையில் நிற்க முயற்சித்தது. தன் வயிற்றில் தலைகீழாக இருக்கும் குட்டியை கவிழ்த்து, நேராக்க முயற்சிப்பது போல அதன் செய்கைகள் இருந்ததாகப் பின்னர் குறிப்பிட்டனர்//

குழந்தையை காக்க தாயின் போராட்டமாத்தான் எனக்கு தெரியுது..

நெகிழ வச்ச பதிவு

அருமையான பகிர்வு..

தமிழ் பிரியன் said...

நினைக்கும் போதே பிரமிப்பா இருக்கு.. இறைவன் உள்ளுணர்வில் இந்த அறிவைக் கொடுத்து இருக்கின்றான்.

Jaleela said...

அந்த யானைய பார்த்தா எனக்கு அழுகாச்சியா வருது

Chitra said...

பகிர்வுக்கு நன்றி. யானை குட்டிக்கு ஒன்றும் ஆகாது என்று நம்புவோம். நல்லா எழுதி இருக்கீங்க.

SUFFIX said...

//அதுக்கு இன்னும் ஒரு வருடம் வரை ஆகலாமாம்.//

இதைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது

//மார்ச் 8ந் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்ட குட்டி, 10ந் தேதி பிறந்தது//

வருடங்கள் சில நாட்களாக குறைஞ்சிடுச்சு, மனதிற்கு ஒரு ரிலீஃப்.

ராமலக்ஷ்மி said...

என்ன ஆச்சோ எனப் பதைபதைப்பாக வாசித்து வருகையில் வயிற்றில் பால் வார்த்தமாதிரி இருந்தது அது கண்விழித்த அதிசயம். பகிர்ந்த விதம் அருமை.

//அப்படி எதுவும் இருக்காதுன்னே தோணுது. அப்படியே இருக்கட்டும்.

இப்ப என்ன சொல்றீங்க?//

அதையேதான் நானும் சொல்லுகிறேன்:)!

தமிழ் குடும்பம் said...

நல்ல பதிவு
தமிழ்குடும்பம்.காம்

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு!

பிரார்த்தனைகளோடு ...

கோமதி அரசு said...

அதிசயப் பிறவியின் பிறப்பு விபரம் தந்ததற்கு நன்றி.

யானைக் குட்டிக்கு வாழ்த்துக்கள்.
நல்லபடியாக ஆரோக்கியத்துடன்
இருக்க வாழ்த்துக்கள்!

நாஞ்சில் பிரதாப் said...

பிரசவ வேதனை என்பது மனிதர்கள் விலங்குகள் எல்லாருக்கும் பொதுவானது என்பது புரிகிறது.

மருத்துவரே இல்லாமல் எப்படி தனக்குத்தானே பிரச்சனையை சரிசெய்திருக்கிறது அந்தயானை. இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று. இவ்ளோ அறிவு தைரியம் ஆறறிவு படைத்தை நம்மில் பல பேருக்கு இல்லை.

ஜெய்லானி said...

இவ்வுலகில் இறைவன் பல அதிசயங்களை காட்டுகின்றான். அதிலிருந்து நாம் என்ன படிப்பினை பெறுகிறோம் என்பதில் இருக்கிறது. வேடிக்கையா? வினோதமா? ஆச்சிரியமா ?

அல்ஹம்துலில்லாஹ்.

☀நான் ஆதவன்☀ said...

//ஓடியாடவும் ஆரம்பிச்சுட்டதால அப்படி எதுவும் இருக்காதுன்னே தோணுது. அப்படியே இருக்கட்டும்.
//

அப்படியே இருக்கட்டும். அழகா இருக்காரு குட்டி பையன் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜெய்லானி said...
இவ்வுலகில் இறைவன் பல அதிசயங்களை காட்டுகின்றான். அதிலிருந்து நாம் என்ன படிப்பினை பெறுகிறோம் என்பதில் இருக்கிறது. //

ஆமாங்க.. அந்த யானைக்கு எப்படி தன் குழந்தை தலைகீழா இருப்பது தெரிந்தது அது முயன்றது. ஆச்சரியமான செயல் தான். நன்றிங்க இதை அறியப்படுத்தியதுக்கு.

ஜீவன்பென்னி said...

karuvaachi kaaviyathula karuvaachikku kulanthai pirakkinra athyayam enakku ninaivukku varugindradu.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நெகிழ வைக்கும் நிகழ்வு! அப்பப்ப இப்படி அதிசயம் நடக்கத்தான் செய்யுது!

இமா said...

padichchu mudinchathum 'appaadi!' enru oru nimmathip perumoochchu vanthuthu. ;)

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_5598.html

thodar pathivuku vaanga

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆச்சர்யமான ஆனால் அறியப்படாத செய்தி.

பகிர்வுக்கு நன்றி ஹுசைனம்மா.

அக்பர் said...

நல்ல பகிர்வு.

என்னுடைய பிரார்த்தனைகளும்.

அன்புத்தோழன் said...

நேத்தே இத படிச்சேன், ரீடரில் படிச்சதால பின்னூட்டம் போட முடில.... இத படிச்சிட்டு போயி வீட்டுல இத பத்தி தான் சாப்பிடும் போது டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்.... பகிர்வுக்கு நன்றி....

இதே போல சமீபத்துல என் சொந்தத்தில் ஒருவருக்கு நேர்ந்த வேதனையான சம்பவம் தான் எனக்குள் ஓடி கொண்டிருந்தது... ஆசை ஆசையாய் பெற்றெடுப்போம் என எண்ணி இருந்தகுழந்தை வயிற்றுக்குள்லையே இறந்துவிட்டதாகவும், அதுவாக வெளியில் வரும் வரை காத்திருக்க வேண்டும் எனவும், அதற்கு சில நாட்கள் கூட ஆகலாம் எனவும் மருத்துவர்கள் சொன்னதாக கேட்ட எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது...

எனக்கே இப்படி என்றால் குழந்தையை பற்றி எவ்வளவு கனவுகளுடன் காத்திருந்த தாயின் உள்ளம் இறந்த தன் பிள்ளையின் சடலத்தை தன் வயிற்றுக்குள் சுமந்து கொண்டிருக்க என்ன பாடு பட்டிருக்க வேண்டும்... ஒரு வார காலம் இறந்த குழந்தையின் பூவுடலை தனக்குள் சுமந்து கொண்டு என்ன வேதனை பட்டிருப்பார்கள்... இறைவா இப்படி ஒரு வேதனை யாருக்கும் கொடுக்காதே என்று என்னையும் மறந்து எனது உதடுகள் முணுமுணுத்தன... கண்கள் கலங்கின... ஒரு வாரம் கழித்து இறந்த குழந்தை வெளியில் வந்ததாகவும், அன்று பூத்த மலர் போல் அழகாக இருந்ததாகவும் உறவுகள் சொல்ல கேட்டேன்.... இறைவனின் அற்புதம் உணர்ந்தேன்... இறந்து வார காலம் ஆன பிஞ்சு உடல் புதுமலர் போல பாதுகாப்பாக வைக்க பட்டிருந்திருக்கிறது.... தாயின் கருவறையில்....

Anonymous said...

இதப்பத்தி பதிவு போடணும்னு நினைச்சேன். நேரமின்மை. நல்லா எழுதியிருக்கீங்க

ஷாகுல் said...

யானை குட்டி நல்லா இருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

கண்டிப்பாக இவர் அதிசய பிறவிதான், செய்தியை கொடுத்தமைக்கு நன்றி.

Adirai Express said...

இப்பவும் நான் லேட் அட்டெண்டன்ஸு தானா?
நெகிழ வச்சுடுச்சுங்க, ஒரு தாயின் போரட்டத்தை கண் முன் நிறுத்தியது போன்று இருந்தது இந்த பதிவு

ஹுஸைனம்மா said...

நன்றி மேனகா.

கண்ணா - நன்றி;

தமிழ்ப்பிரியன் - நன்றி.

ஜலீலா - நன்றி.

சித்ரா - நன்றி.

ஷஃபிக்ஸ் - நன்றி.

ஹுஸைனம்மா said...

மா, ராமலக்‌ஷ்மி அக்கா. ரொம்ப வருத்தமா இருந்துது. ஆனா நல்லபடியா

பிறந்ததுல நிம்மதி. நன்றி அக்கா.

தமிழ்க்குடும்பம் - வாங்க; இது என் பதிவுல உங்க முதல் கருத்து இல்லியா?

நன்றி.

ஜமால் - நன்றி.

கோமதி அக்கா - நன்றி.

பிரதாப் - வாங்க; நன்றி. ஆமா, சில விஷயங்களில் நாம் தைரியமிழந்து

போகிறோம்.

ஜெய்லானி - ஆமாங்க, ஒவ்வொரு விஷயத்திலும் நாம் அறியாதவற்றை

கண்டுகொள்ளலாம். இறைவன் கொடை இதுவும்.

ஹுஸைனம்மா said...

ஆதவன் - வாங்க. எத்தனையோ மெடிக்கல் மிராக்கிள்ஸ் நடக்குது உலகத்துல; இதுவும் ஒண்ணு அதுல.

முத்தக்கா - வாங்க அக்கா. ஆமாக்கா, எத்தனையோ பெரிய பெரிய டாக்டர்ஸ் கைவிட்ட நோயாளிகள் கூட இறையருளால் நலமே இருக்காங்க இப்ப. இது ஒரு தைரியம் தரும் பாடம்.

ஜீவன்பென்னி - வாங்க. அப்படியா? எனக்கு மறந்துடுச்சு அது.

எல் போர்ட் - வாங்க. ஆமாப்பா, கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ப்திவுல (யாரோடதுன்னு தெரியல) ஒருத்தரோட 18/20 வயது சகோதரர், ரத்தப் புற்று வந்து, இதோ இன்னும் சில நிமிஷங்களில் இறந்துவிடுவார் என்று சொல்லப்பட்டவர், இப்போ இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா நல்லாருக்காராம்.

இமா - (கொஞ்சம்) பக்கத்துலதானே இருக்கீங்க, போய்ப் பாத்துட்டு வாங்க.

தென்றல் - அவ்வ்வ்வ், தொடரா, அதுவும் பொண்ணு பாக்க வந்தது பத்தியா? இப்ப போர்மேகம் சூழ்ந்திருக்கதுனால், வானம் தெளிவடையும் வரை வெயிட் பண்ணுங்க!! ;-))

அமித்தம்மா - வாங்க; நன்றி.

ஹுஸைனம்மா said...

அக்பர் - வாங்க; நன்றி.

அன்புத்தோழன் - நீங்க சொல்றதும் வருத்தமான நிகழ்வு. ஆனா, சுகப்பிரசவம் செய்துவாங்களே இந்த மாதிரி நேரத்துல? ஏன் செய்யல? ஏதாவது காரணம் இருக்கணும் இல்லியா?

அம்மிணிக்கா - வாங்கக்கா. நீங்க, நியூஸியா, ஆஸியா? ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வந்துடுங்க.

ஷாஹுல் - வாங்க.

சைவகொத்ஸ் - (இந்தப் பேரு இன்னும் நல்லாருக்கே?) வாங்க. நன்றி.

அதிரை எக்ஸ். - இந்த மூறை கொஞ்சம் சீக்கிரந்தான் வந்துருக்கீங்க. :-) நன்றி.

அபுஅஃப்ஸர் said...

அரிய தகவல் ஹுஸைனாம்மா

அதற்குரிய பக்குவத்தை இறைவன் கொடுத்திருக்கிறான் என்பதை கண்டு வியப்பை ஏற்படுத்துது

பகிர்வுக்கு நன்றி

thenammailakshmanan said...

ஜமால் சொன்னபடி நல்ல பகிர்வுதான் பிரார்த்தனைகளோடு..

malar said...

நல்ல பதிவு ....

விலங்குகளில் யானை ஒரு அதிசயம்...

இவ்வளவு பெரிய உடம்புக்கும் அதன் உணவு இலை தழைகளே...

சுத்த சைவம்....

அப்பாவி தங்கமணி said...

miracle miracle னு சொல்லி கேட்டுருக்கேன்...அது உண்மை தான் போல ... உங்க எழுத்து நடை அழகா இருக்குங்க

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஹுஸைனம்மா!

ரொம்பவும் வித்தியாசமான அருமையான பதிவு. இதை அனைவரிடமும் பகிர்ந்ததற்கு என் அன்பு நன்றி!!

தி. ரா. ச.(T.R.C.) said...

இப்ப என்ன சொல்றீங்க?
சொல்லரத்துக்கு என்ன இருக்கு. நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா. கண்ணதாசந்தான் சொல்லிட்டாரே

ஸ்ரீராம். said...

ஆச்சர்யம்....அதுக்குல்லாம் அஞ்சறிவுன்னு நாம சொல்றோம்..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//தாய் யானை விநோதமாக நடந்துகொண்டதை, மிருகக்காட்சிச் சாலையினர் கண்டனர். அதாவது, சில முறை, உருளவும், பிரளவும் செய்தது. சில முறை அந்த யானை தன் தலையில் நிற்க முயற்சித்தது. தன் வயிற்றில் தலைகீழாக இருக்கும் குட்டியை கவிழ்த்து, நேராக்க முயற்சிப்பது போல அதன் செய்கைகள் இருந்ததாகப் பின்னர் குறிப்பிட்டனர்//


நெகிழவைத்த பதிவு!!

பகிர்வுக்கு நன்றி!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எத்தனை நாளானாலும் தன் குட்டியைக் காப்பாற்ற அது செய்த முயற்சி.. அந்தத் தாயின் பாசம் நெகிழ வைக்கிறது

செந்தமிழ் செல்வி said...

உயிரோட்டமான பதிவு!
ப்ளாக் பக்கம் வந்து அவார்டை எடுத்துக்கறது:-)