Pages

அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!!

1980 களில், அந்த தெருவிலேயே அடிபம்பு இருக்கும் ஒன்றிரண்டு வீடுகளில்
என் அம்மாவின் வீடும் ஒன்று. குடிநீருக்கு குழாயில் வரும் நீரும், குளிக்க, துணி துவைக்க தெருக்கோடியில் ஓடும் தாமிரபரணியின் கிளை வாய்க்காலும் போதுமானதாக இருந்தது. மேல் தேவைகளுக்கும்,கோடையில் வாய்க்கால் வற்றும்போதும், அம்மா வீட்டில் வளவூட்டில் (முற்றத்தில்) இருக்கும் அடிபம்புதான் அந்த தெருவுக்கே அமுதசுரபி. பகல் நேரங்களில் இடைவிடாமல் கேட்கும் குழாயடிக்கும் சத்தமும், தண்ணீரின் சத்தமும், பெண்களின் பேச்சும், விளக்கு வச்சப்புறம் எதுவும் வெளியே கொண்டுபோகக் கூடாது என்ற (அறியா) நம்பிக்கையால் மாலையில்தான் அமைதியாகும்.

பின்னர் நாங்கள் தனி வீடுக்கு வந்த பிறகும் இது தொடர்ந்தது. காலப்போக்கில் எல்லார் வீட்டிலும் போர்க்குழாய்கள் வந்துவிட, கடந்த சில வருடங்களாக மோட்டார் போட்டால் தண்ணீர் ஏறாது!! தண்ணீர் இல்லாததால், ஏர் லாக் ஆகிவிட, தண்ணீர் ஊற்றிப் பார்த்துச் சரி வரவில்லையென்றால், ப்ளம்பரைக் கூப்பிட்டு... இப்போ எல்லா வீட்டிலும் நடக்கும் சாதாரண நிகழ்வாகிவிட்டது!! வாய்க்கால் என்ன ஆனதென்று கேட்கிறீர்களா? அது எப்பவோ திருநெல்வேலியின் கூவம் ஆகிவிட்டது!!

metroactive.com
நிலத்தடி நீர் வற்றி வரும் நிலையில், அதை வளப்படுத்தும் திட்டங்களைத் தீட்டி,  மேம்படுத்தும் வழிகளையும், மழைநீர் சேகரிப்பையும் அதிகம் ஊக்குவிக்காமல், அரசு தன் பார்வையைத் திருப்பியிருக்கும் இடம் கடல்!! ஆம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்!! சென்னை மீஞ்சூரில் டீ-ஸலைனேஷன் பிளாண்ட் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அடுத்து நெம்மேலியிலும் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் தொடங்கிவிட்டன!!

கடல்நீரை எடுத்து குடிநீராக்குவதில் என்ன பெரிய பாதகங்கள் வந்துவிட முடியும் என்றுதான் தோன்றும்.  உலகமுழுவதும் உள்ள டீ-ஸலைனேஷன் பிளாண்ட்களில் கிட்டத்தட்ட  75% மத்திய கிழக்கு நாடுகளில்தான் உள்ளது. நிலத்தடி நீரோ, மழைநீர் ஆதாரமோ இல்லாத பாலைவனப் பிரதேசங்களான இந்நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் கடலைப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழியாக இருந்தது. அதனால், இவற்றை நிறுவும் செலவு பன்மடங்கு என்றாலும், வளைகுடா நாடுகள் சளைக்காமல் பல ப்ளாண்ட்களை நிறுவின. செலவைக் குறைக்க, கோ-ஜெனரேஷன் எனப்படும், மின் உற்பத்தியும், சுத்திகரிப்பு ஆலையும் ஒன்றாக செயல்படும்படி அமைத்தனர்.


melbourne-water.com
உப்புநீரைக் குடிநீராக்கப் பயன்படுத்தப்படும் காய்ச்சி வடித்தல் முறையும் (Distillation), மீள் சவ்வூடு பரவல் முறையும் (Reverse Osmosis) என்ற இருமுறைகளிலும், கடல்நீரை எடுத்து, தேவைப்படும் வேதிப்பொருட்கள் சேர்த்து, நல்ல நீரைப் பிரித்து, பின் வரும் கழிவு நீரை கடலிலேயே மீண்டும் களையப்படும்.  10 லிட்டர் நீரில், 5லி குடிநீரானால், மீதி 5லி நீரும், 10லிட்டருக்குரிய அடர் உப்புடன் (brine)  இருக்கும்.  இவற்றினால் வரும் பாதகங்களைப் பார்ப்போம்:

1.
ஆலை செயல்பாடு: ஆலை செயல்பட அதிக மின்சாரம் மற்றும் முதலீடு  தேவைப்படும். ஆலை செயல்பாடுகளால் ஏற்படும் வெப்பமூட்டுதலும், வெளியேறும் மாசுபட்ட வாயுக்களும் பசுமையில்ல வாயுக்களைப் பாதிப்பதன்மூலம் சுற்றுச்சூழலைக் கேடாக்கும்.

2. ஆலைக்கு நீரை எடுக்கும் இடம் (Intake): அதிக வேகத்தில் நீர் உறிஞ்சப்படுவதால், கடல்வாழ் உயிரினங்களும் சேர்ந்து வந்து மாட்டிக்கொள்ளும் சாத்தியம்.

3. பயன்படுத்திய நீரை வெளியேற்றும் இடம் (Outlet):  

a. கழிவுநீர் அதிவேகமாகவும், அதிக வெப்பநிலையிலும், அடர்உப்பாகவும், சேர்க்கப்பட்ட வேதிப் பொருட்கள் (anti-scalants, anti-foaming, anti-corrosion agents), க்ளோரின் மற்றும் பல உலோகங்கள் கலந்தும் இருப்பதால், வெளியேற்றப்படும் இடத்திலும், சுற்றிலும் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களையும் அழித்துவிடும்!!

b. அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீரின் உப்பு அடர்த்தியும் அதிகமாக்கப்படுவதால், ஆலை தன் தேவைகளுக்கு மீண்டும் அதே நீரையே உறிஞ்ச நேரிடுவதால் அதிக உற்பத்திச் செலவும்!! 

ஒரு ஆலையிலிருந்து வெளியாகும் ferric sulphate நிறைந்த நீர்
trek-uk.org
யூ.ஏ.இ. யின் கடல்நீரின் இயல்பான உப்பு அடர்த்தி (Salinity) முந்தைய காலங்களில் 30,000ppm ஆக இருந்ததாம்; பத்தாண்டுகளுக்கு முன் 45,000ppm ஆக உயர்ந்தது, இந்த வருடம் 56,000ppm ஆகிவிட்டது!! இதிலிருந்து இதன் அபாயம் அறிந்து கொள்ளலாம். இதன் பாதிப்பா அழிஞ்ச பவளப்பாறைகளை (coral reef) இங்கே இப்போ செயற்கையா வளர வைக்க ஏற்பாடுகள் செய்துகிட்டு இருக்காங்க!!
 
துபாயில் ஏற்பட்ட “ரெட் டைட்”
gulfnews.com

அதுவுமில்லாம, இங்கே திடீர்திடீர்னு கடற்கரைகள்ல “Red Tide Alert"  என்று செய்தி வரும்!! அதாவது இதன் இன்னொரு பாதிப்பாக Red algae என்ற ஒருவகை பாசி கொத்துகொத்தாகக் கடற்கரைகளில் படரும். அவை நம் உடலில் பட்டா பலவித பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமில்லை, கடல்வாழ் செடிகளுக்கும், மீன் வகைகளுக்கும்கூட ஆபத்து விளைவிக்கக்கூடியவை!!

 ஓரளவு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றும் அயல்நாடுகளிலேயே இவ்வளவு பாதிப்புகள் என்றால், தமிழகத்தில்?? மீன் வளம் பாதிப்பதால் மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே காடுகளை அழித்ததன் விளைவாக, ஊருக்குள் யானைகள், புலி, சிறுத்தைகள் வந்து போகின்றன.

இப்படியாக, நமது தேவைகளுக்காக பூமியை, மரம், மிருகங்களை வதைத்துக் கொண்டிருந்த நாம் கடலையும் விட்டு வைக்கவில்லை!! இதெல்லாம் குறைக்க நம்மால் ஆனவற்றை நாம் செய்வது மட்டுமல்லாமல், நம்வீட்டு ஆண்களுக்கும் (ஆமாங்க), குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கணும். பணத்தை எப்படியெல்லாம் பேணுவோமோ, அதேதான் தண்ணீருக்கும்!!

1. சிக்கனமாகச் செலவு செய்தல்;
2. சேமித்து வைத்தல்;
3. வருமானத்துக்குரிய வழிகளைப் பெருக்குதல். (மழைநீர் சேகரிப்பு etc.)

Post Comment

60 comments:

எம்.எம்.அப்துல்லா said...

gr8 போஸ்ட்.

தொடரட்டும் இது போன்ற ஆக்கப்பூர்வமான,ஆழமான கருத்துடைய இடுகைகள்.

கண்ணா.. said...

// கடல்நீரை எடுத்து, தேவைப்படும் வேதிப்பொருட்கள் சேர்த்து, நல்ல நீரைப் பிரித்து, பின் வரும் கழிவு நீரை கடலிலேயே மீண்டும் களையப்படும். 10 லிட்டர் நீரில், 5லி குடிநீரானால், மீதி 5லி நீரும், 10லிட்டருக்குரிய அடர் உப்புடன் (brine) இருக்கும்//

இந்த தகவல் நான் கேள்விபடாதது.

இந்த பதிவிற்காக நிறைய தகவல்கள் தேடியிருக்கீங்கன்னு நினைக்கறேன். ரொம்ப நல்லா வந்திருக்கு

:))

Chitra said...

விளக்கமான பதிவு. சரியா சொல்லி இருக்கீங்க.

இராகவன் நைஜிரியா said...

100% கலப்படமில்லாத உண்மையைச் சொல்லியிருக்கீங்க.

யாருக்கு நாம் இதையெல்லாம் புரிய வைப்பது எனப் புரியவில்லை.

நம் வீட்டில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சரியாக அமல் படுத்தினாலே, பாதி பாதிப்புகள் குறையும்.

தமிழ் பிரியன் said...

நல்ல ஹோம் ஒர்க் கட்டுரை! சம்பிரதாயமாக இல்லாமல் தண்ணீர் வீணாவதை நம்மால் இயன்ற அளவு தடுக்க வேண்டும்... (என் நண்பன்: ”அதுக்காக வாரத்துக்கு ஒருமுறையாவது குளிக்காம இருக்க முடியுமா?”)

கண்மணி/kanmani said...

அருமையான ஆய்வுக் கட்டுரையைப் போன்றதொரு பதிவு.

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு

நட்புடன் ஜமால் said...

நல்லா அலசியிருக்கீங்க, நிறைய தெரிந்து கொண்டேன்.

கடைசி பத்தி நலம்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ச்சின்னப் பையன் said...

good post

thenammailakshmanan said...

நன்றி ஹுசைனம்மா அதான் கடல் தண்ணி இருக்கேனு நினைசுக்கிட்டு இருந்தேன் அதுலயும் இவ்வளவு இருக்கா நல்ல பகிர்வு மற்றும் அறிவுரை

ஜெய்லானி said...

அதெல்லாம் சரிதான் ,பிளாண்ட் நிறுவ சைன் பண்ணினா எவ்வளவு கமிஷன் கிட்டும், இடத்துக்கு சாங்ஷன் பண்ணினா எவ்வளவு லஞ்சம் கிடைக்குமுன்னு இதையும் தெளிவா எழுதியிருந்தா நா அரசியல்ல குதிக்க வசதியா இருக்குமுல்ல!!!!!

ஜெய்லானி said...

தெளிவா அருமையா எழுதிருக்கீங்க :-))

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் ஹூசைனம்மா !! அருமையா சொல்லிருக்கிங்க.பாராட்டுக்கள்!!

அக்பர் said...

நல்ல பகிர்வு.

malar said...

நல்ல பதிவு.

இப்னு ஹம்துன் said...

அர்த்தமுள்ள பதிவு

முகுந்த் அம்மா said...

மத்திய கிழக்கு நாடுகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பத்தியும் அதனால் விளையும் பிரச்சனைகள் பற்றியும் நல்லா சொல்லி இருக்கீங்க. Red Algae பற்றி முதல் முறையா கேள்வி படறேன். ரொம்ப நல்ல பதிவுங்க. பாராட்டுக்கள்.

Anonymous said...

குட் போஸ்ட் ஹுசைனம்மா

வின்சென்ட். said...

உங்கள் உழைப்பு கட்டுரையில் நன்கு தெரிகிறது. கடல்நீரை சுத்திகரிப்பதிலும் மோசமான பின் விளைவுகள் பற்றி எழுதியதற்கு வாழ்த்துக்கள்.Red Algae பற்றி முதல் முறையாக கேள்வி படுகிறேன்.

DREAMER said...

உண்மை,
மனிதன் கடலையும் விட்டுவைக்காமல், அதுவும் காலியான பிறகு, நம் கண்களில் வழியும் வரும் கண்ணீரை சுத்தப்படுத்தி குடிநீர் சம்பாதிக்க என்னும் அசுரனாகவும் மாறக்கூடியவன்.

சரியான நேரத்தில், எச்சரிக்கை மணி அடித்துளீர்கள்.

-
DREAMER

SUREஷ் (பழனியிலிருந்து) said...

மிகவும் நல்ல இடுகை..,

ஸாதிகா said...

தெளிவான விவரம்.

கோமதி அரசு said...

கடல் நீரை குடிநீராக்குவதில் உள்ள சாதகம்,பாதகங்களை மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள்.

நிறைய செய்திகளை சேகரித்து வழங்கியதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா,கடல் தண்ணியை அந்த ஊர்கள்ள உபயோகப் படுத்தறாங்கன்னு கேள்விப்பட்டு ரொம்ப அதிசயித்தேன். பிறகுதான் கல்ஃப் நியூஸில் ஒரு தடவை இதைப் பற்றிப் படித்துச் சலனம் வந்தது. இயற்கைக்கு எதிராக நடக்கும் எந்த சிஷயத்துக்கும் பாதிப்பு அதிகமே.
வெகுஅருமையாகப் பதிந்து இருக்கிறீர்கள்.

புதுகைத் தென்றல் said...

சபாஷ் ஹுசைனம்மா,

அருமை.

பாத்திமா ஜொஹ்ரா said...

ஆராய்ச்சிக்கட்டுரை,அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

good post.. ஹுஸைனம்மா..

கேக்கவே பயம்மா இருக்கு..

இயற்கைக்கு எதிராக செய்யற ஒவ்வொரு செயலும் நமக்கு பாதிப்பை உண்டாக்குதுன்னு உணரும்போது நம்ம வசதிக்காக நாம் செய்ததவறுகள் எல்லாம் பூதாகாரமா முன்னாடி வந்து நிக்குது.. பாதி வழி தப்பா வந்துட்டோம் இனியாவது திருந்துங்கய்யான்னா மேலும் மேலும் தவறு செய்துட்டே போறோமொன்னு தோணுது..

நாஸியா said...

super!! :)

ஷாகுல் said...

திலி.டவுன்ல உள்ள எங்க நன்னி வீட்டுக்கு போகும் போது வீட்டுக்குப் பின்னாடி உள்ள வாய்கால்லதான் விளையாடுவோம். சில வருடங்களுக்கு முன் சென்று பார்த்த போது சகிக்கவில்லை. அதையே ஒழுங்கா வச்சிருந்தா தன்னீர் பஞ்சம் வந்துருக்காது.

குற்றாலம் தன்னீர் நிலத்தடி நீர் என்று இருப்பதால் நல்ல வேளை இது வரை எங்கள் ஊரில் தன்னிர் பஞ்சம் வந்ததில்லை.

நல்ல தகவல் கலக்குங்க

ராமலக்ஷ்மி said...

அருமையாய் ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

கண்ணகி said...

அய்யோ பயமாஇருக்கே....

நல்ல கட்டுரை.

ஸ்ரீராம். said...

வரவேற்கத் தக்க உபயோகமான பதிவு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது பற்றிய விபரணச் சித்திரம் பார்த்தேன். ஆனால் உங்கள் பதிவு மிகத் தெளிவு.

ரிஷபன் said...

தெளிவான தேவையான பதிவு

Suresh S R said...

நான் இது பற்றி முன்பே நிறைய கவலை பட்டேன்.
என்னுடைய பயம் உண்மை என்பதை தேவையான புள்ளி விபரங்களுடன் உறுதி படுத்தியுள்ளீர்கள்.

Adirai Express said...

நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்,அருமையான பதிவு

SUFFIX said...

மேலோட்டமாக பார்க்கும்போது இந்த டீசாலினேஷன் டெக்னாலஜி நல்லதாக தெரிகிறது, ஆனால் இவ்ளோ பாதிப்புகள் இருப்பதை இப்போ தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

அன்புத்தோழன் said...

மண்டைல நங்குன்னு ஒரு கொட்டு வெச்சு.... நறுக்குன்னு நாலு கில்லு கில்லி விட்டா மாத்ரி, சுர்ருன்னு பல உண்மைகளை கொண்ட தெளிவான பதிவு.... தெளிஞ்சவங்கல்லாம் நிச்சயம் திருந்துவாங்க..... இது போன்ற தங்களின் நன் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்....

அன்புத்தோழன் said...

//அதேதான் தண்ணீருக்கும்!!

1. சிக்கனமாகச் செலவு செய்தல்;
2. சேமித்து வைத்தல்;
3. வருமானத்துக்குரிய வழிகளைப் பெருக்குதல். (மழைநீர் சேகரிப்பு etc.)//

எத மறந்தாலும் சரி மக்களா இத மட்டும் மறந்துராதீங்க..... நச்சுனு சொல்லி முடிச்சுருகீங்க ஹுஸைனம்மா...... Great....

நாஞ்சில் பிரதாப் said...

அடேங்கப்பா... பின்றீங்க...

Jaleela said...

ஹுஸைனாம்மா சூப்பரான விளக்கம், அருமை அருமை.


அடி பம்பு என்றதும். 1985 யில் தண்ணீர் குடிக்க புழங்க எல்லாமே வெளியில் ரொம்ப தூரம் போய் தண்ணீர் குடத்தில் தூக்கி வரணும், முன்பு குடம் குடமா தூக்கி வந்த ஞாபகங்கள் எல்லாம் வந்து விட்டது, வீட்டில் எல்லாமே பெண்கள், என்ன செய்வது நாங்க தான் போய் எடுத்து வருவோம்.
ஆனால் இப்பஒரு குடம் கூட தூக்க முடியாது போல அபப்டி இருக்கு.

Jaleela said...

//1. சிக்கனமாகச் செலவு செய்தல்;
2. சேமித்து வைத்தல்;
3. வருமானத்துக்குரிய வழிகளைப் பெருக்குதல். (மழைநீர் சேகரிப்பு etc.)//

இந்த மூன்றுமே நல்ல பாயிண்டுகள்

அன்புடன் மலிக்கா said...

நல்ல தகவல் ஹுசைனம்மா தெரியாதவைகள் தெரிந்தும்கொண்டாச்சி

ஹுஸைனம்மா said...

அப்துல்லா - நன்றி உங்கள் ஊக்கத்திற்கு.

கண்ணா - நன்றிங்க. //10 லிட்டர் நீரில், 5லி குடிநீரானால், மீதி 5லி நீரும்// இதுகூட

சில இடங்களில் 10லி நீரிலிருந்து 2லி மட்டுமே குடிநீராக்குகிறார்கள்,

பின்விளைவைக் கருத்தில் கொண்டு.

சித்ரா - நன்றி.

இராகவன் சார்- நன்றி. ஆமாங்க, நம்வீடுதான் ஆரம்ப இடமாக இருக்கவேண்டும்

சீர்திருத்தங்களுக்கு.

தமிழ்ப்பிரியன் - நன்றி. என்னவர் ஒரு கோ-ஜெனெரேஷன் ப்ளாண்டில் சில

வருடங்கள் வேலை பார்த்ததால், ஓரளவு விவரங்கள் தெரியும்.

புள்ளிவிவரங்களுக்கு மட்டும்தான் “ஹோம் வொர்க்”.

அப்றம், உங்களுக்கு நண்பர் நீங்கதானாமே? அப்ப இது நீங்க சொன்னதுதானா?

ஹுஸைனம்மா said...

கண்மணி - நன்றிங்க.

அண்ணாமலை சார் - நன்றி.

ஜமால் - நன்றி ஜமால்.

அருணா டீச்சர் - நன்றி. (இது எனக்கு முதல் பூங்கொத்துன்னு நினைக்கிறேன்,

சந்தோஷம்!!)

ச்சின்னப்பையன் - அட, வாங்க. நன்றி.

தேனக்கா - வேறு வழியில்லன்னா கடல்தண்ணிதான் எடுக்கணும், ஆனா அதையும்

கொஞ்சம் நியாயமா, அங்கத்த ecosystem-ஐ தொந்தரவு பண்ணாதபடி செய்தா

எல்லாருக்கும் நல்லது, இல்லையாக்கா?

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி - நன்றி. தமிழக அரசு, மக்களுக்கு தடையில்லாமல் தண்ணீர்

தரணும்கிற உண்மையான நோக்கத்தோட இந்தத் திட்டத்தைச் செய்றாங்க; ஆனா,

அதுல கடலின் சூழல் பாதிக்கப்படாதவாறு விதிமுறைகளைக் கடுமையாகப்

பின்பற்றினால் கடல்வாழ் உயிரினங்கள் பெருகும். நமக்கும் நன்மை.

அதுக்குத்தான் சொன்னது.

மேனகா - நன்றி.

அக்பர் - நன்றி.

மலர் - நன்றிங்க.

இப்னு ஹம்துன் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

முகுந்த் அம்மா - வாங்க. நன்றி. வளைகுடா நாடுகளுக்கு வேறு வழியில்லை; கடல்

நீரை எடுத்தால்தான் பெருகும் மக்கள்தொகைக்கு நீரைத் தடையில்லாமல்

தரமுடியும். ஆனால், இதிலிருந்து பாடம் படித்துக் கொள்வது நமக்கு (இந்தியா)

நல்லது.

சின்ன அம்மிணி - நன்றிங்க.

வின்செண்ட் - நன்றி, உங்களால்தான் இதுகுறித்து எழுத வாய்ப்பு கிடைத்தது.

ட்ரீமர் - நன்றிங்க. கடல் காலியாகாது; ஆனா அதையும் அசுத்தப்படுத்தி

விடக்கூடாது. அமெரிக்கக் கடற்படையின் விமான ஓடுதள வசதி கொண்ட

கப்பல்களில் இம்மாதிரி ஒருதனி ஆலையே உண்டாம்; அதுவும், அணுசக்தி

உலையால் இயக்கப்படுவது!! சொகுசுக்கப்பல்களிலும் இது உண்டு.

சுரேஷ் (பழனி) - வாங்க டாக்டர்; நன்றி.

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

கோமதியக்கா - நன்றி அக்கா. ஆமா, சாதகங்களும் உண்டு; பாதகங்களைத்

தவிர்த்தால் நமக்கு நல்ல திட்டம்தான்.

வல்லியம்மா - நன்றிங்க. இந்த நாடுகளுக்கு இதுதான் வழி; ஆனால் சில

விதிமுறைகள் சரியா கடைபிடிக்க வேண்டும்; இங்கயும் இப்பச் சுற்றுச்சூழல்

இயக்கங்கள் கடுமையா கண்காணிக்கிறாங்க; அதனால் இதெல்லாம் தெரியுது.

புதுகைத் தென்றல் - வாங்க; ரொம்ப நன்றி சபாஷுக்கு.

ஃபாத்திமா - நன்றி.

முத்தக்கா - நன்றி அக்கா; ரொம்பச் சரியாச் சொல்லிருக்கீங்க அக்கா. ஆமா,

இனியாவ்து திருந்தினா நல்லது.

நாஸியா - நன்றி. (அப்றம், தெளிவாகிட்டீங்களா? ;-)) )

ஹுஸைனம்மா said...

ஷாகுல் - ஆமா, அந்த வாய்க்காலெல்லாம் சரியா பராமரிக்கப் பட்டிருந்தாலே பாதி

கஷ்டம் தீந்திருக்கும்.

ராமலக்‌ஷ்மி அக்கா - நன்றி அக்கா.

கண்ணகி - நன்றி, பயப்படாதீங்க. காவிரிக்கரையில இருந்துகிட்டு பயப்படலாமா?

ஸ்ரீராம் - நன்றிங்க.

யோகன் - பாரிஸ் - நன்றி; விவரணச் சித்திரத்தின் யூ-ட்யூப் இணைய முகவரி

இருந்தால் தாருங்கள்.

ரிஷபன் - நன்றிங்க.

சுரேஷ் எஸ்.ஆர். - நன்றிங்க.

அதிரை எக்ஸ். - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஷஃபி - நானும் இது ரொம்ப நல்லமுறை என்றுதான் நினைத்திருந்தேன்.

முறையான விதிகளுடன் செயல்பட்டால் நல்லமுறைதான்.

அன்புத்தோழன் - நன்றிங்க. (எப்படியோ, உங்க தலையில நாலுகொட்டு நங்குன்னு

வக்க முடிஞ்சுதே, அதுவே போதும்).

பிரதாப் - நன்றி பிரதாப். நீங்களே பாராட்டுறீங்கன்னா, ரொம்ப சந்தோஷம்.

ஜலீலாக்கா - ஆமாக்கா, அந்தக் கால்ங்களில சிலபல குடங்கள் தண்ணீரில் பெரிய

கூட்டுக் குடும்பமே வழ்ந்தது. இப்ப ஒரு பெரிய டாங்கே தந்தாலும் காணாது.

ஏன்னா, பைப்பை வீணாத் திறந்துவிட்டுட்டே இருக்கதுதான். நன்றிக்கா.

மலிக்கா - வாங்க புதுப்பொண்ணு; ரொம்ப நன்றி.

enrum said...

ஹுசைனம்மா....நல்ல பதிவுக்கு மெனக்கெட்டு தகவல் திரட்டினதுக்கு முதல்ல நன்றி. ப்ளாக்கின் ஜொலிப்பு கூடிக்கிட்டேயிருக்கு.

byw, இத்தனை பக்க விளைவுகளை எதிர்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்காங்களா?

தனி மனிதர்களாகிய நாம் தண்ணீரை எவ்வளவுதான் சேமித்தாலும் பெரிய நிறுவனங்களும் பணத்தில் திளைப்பவர்களும் நமது பங்கையும் சேர்த்து சீரழித்து விடுகிறார்களே:-(. இந்த டிஸலைனேஷன் மூலாமாவது நமக்கு ஏதாவது கிடைத்தால் நல்லதுதான்.

Vijis Kitchen said...

நல்ல பாயிண்டை அழகாக சொல்லிட்டிங்க. பின்னிட்டிங்க.நல்ல பதிவு.

ஹுஸைனம்மா said...

என்றும்: வாங்க. நன்றி. பக்க விளைவுகளைத் தடுக்க தமிழகத்திலும் ப்ளாண்ட் நிறுவும்போதே திட்டமிட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

விஜி - வாங்கப்பா; நன்றி பாராட்டுக்கு.

Mano Saminathan said...

அன்புள்ள ஹுசைனம்மா!

ரொம்பவும் அழகான தெளிவான விளக்கமாக இருக்கிறது. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!
எங்கள் ஊரான ஷார்ஜாவைப்பற்றிகூட மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்! அதற்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு!!

"உழவன்" "Uzhavan" said...

//இப்ப என்ன சொல்றீங்க//
 
அதிசயப் பிறவிதான். என்ன சந்தேகம் :-)
 
*
எவ்வளவு தகவல்கள்.. விரிவான அழகிய விழிப்புணர்வுப் பதிவு. வாழ்த்துகள்!

வடுவூர் குமார் said...

அருமையான பதிவு.எவ்வளவோ எழுதிய பிறகு ஹேங் ஆனதால் எல்லாம் போச்சு.

ஹுஸைனம்மா said...

மனோக்கா - நன்றி அக்கா பாராட்டுக்கு; ப்ரொஃபைலில் பேரனா, அழகு!!

உழவன் - நன்றிங்க, அடுத்த பதிவுக்கும் சேர்த்து இங்கயே பாராட்டிட்டீங்க போல.

வடுவூர் குமார் சார் - நன்றி சார். நிறைய டைப் பண்ணி போயிடுச்சா ஹேங் ஆனதில? சில சமயம் அப்படித்தான் ஆகி எரிச்சல் வரும். இருந்தாலும் நீங்க மீண்டும் எழுதினீங்க பாருங்க நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மிகவும் அருமை!! நிறைய தகவல்களை சேகரிச்சு எழுதியிருக்கீங்க! ம்ம்.. மழை நீர் சேகரிப்புத் தொட்டி இப்ப எந்த நிலைமையில இருக்குன்னு தெரியல! இடையில சில வருஷங்கள் கடுமையாக கஷ்டப்பட்டதால, வேற யாராவது தண்ணீர்க் குழாயை சரியாக மூடா விட்டாலும், நான் போய் மூடிடுவேன்.. இன்னமுமே :))

krishna said...

Oh! Ippadi oru aabathum ullatho??? Nilathadi neerai uyarthuvathai thavira veru vazhiyillai. malai neer saemippum, kalivu neerai muraiyaaga othukkuvathumthaan naam ippothu seiyavaendiyathu......
Vaazhthukkal...