Pages

எனக்கும் பிடிச்சிருக்கு...


மகளிர் தினத்தின் தொடர்ச்சியா வெள்ளிநிலா ஷர்ஃபுதீன் “எனக்குப் பிடித்த 10 பெண்கள்”னு தொடர் ஆரம்பிச்சு வச்சார்;  பலரைப் போல நானும், எங்கே,  இந்திரா காந்தி, கிரண் பேடி,  அன்னை தெரசான்னு சொன்ன பேர்களையே திருப்பித் திருப்பிச் சொல்லி போரடிக்கப் போறாங்கன்னு ஒரு நொடி  நினைச்சேன்; (தப்புதான், ஆனாலும், உண்மையச் சொன்னதுக்கு என்னைத் திட்டக்கூடாது!!) இருந்தாலுமொரு நம்பிக்கை இருந்து, இதைச் சவாலாகவே எடுத்துகிட்டு பதிவர்களில் சிலர் (பெண்களாவது) தெரியாதவர்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவாங்கன்னு!! 

அதே மாதிரி, பல பதிவர்கள் நான் அறியாதவர்களையும், அறிந்திருந்தாலும் மறந்தவர்களையும் சொன்னபோது ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைந்தேன். அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்ள எண்ணி, இந்த இடுகையில் எழுதியிருக்கிறேன்.  சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி பெறாமல்தான், இங்கு காப்பி-பேஸ்ட் செய்திருக்கிறேன், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்!!

தொடர் பதிவு தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் நல்ல அறிமுகங்கள் வரும் என எதிர்பார்க்கிறேன்!!


வி சாந்தா: அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர் ஃபர்சன். இவர் 50 வருடமாக கேன்சர் நோயாளிகளுக்காவே தன்னை அர்ப்பணம் செய்தவர் padmashree மற்றும் பலவிருதுகள் பெற்றவர்.

அருணாராய்:  இவர் ஒரு சமூகசேவகி.இந்தியன் அட்மினிஷேசனில் சிவில் சர்வன்டாக பணிபுரிந்தவர். ஏழைகளுக்காக குரல்கொடுத்தவர்.

சி என் ஜானகி : இவர் இருகால்களையும் போலியோவினால் இழந்தும். நீச்சல் துறையில் சாதனைப்படைத்தவர்

பாத்திமா [ரலியல்லாஹ்] : இவர்கள் நபிகள் நாயகத்தின் திருமகளார். ஒருபெண்மணி எப்படி வாழவேண்டும் என்ற பாதையை வழிவகுத்துத்தந்தவர்கள். ... ஒரு நல்லவரை நேரில்பார்த்து அவர்களைபோல் வாழ்வதைபோல். அவர்கள் இப்படி நல்லவர்களாக தூயவர்களாக வாழ்ந்தார்கள் அதுபோல் வாழவேண்டும் என சொல்லக்கேட்டு வாழ்வதிலும் மிக சிறப்பு உள்ளது. இவர்களை மிகவும் பிடிக்கும்..


ராமலட்சுமி: இவர் திருநெல்வேலியின் புகழ்பெற்ற கைராசி மிக்க டாக்டர். நெல்லையில் உள்ள இவரின் மருத்துவமனைக்கு செல்லாத பெண்களே இல்லை எனலாம். மகபேறு, குழந்தையின்மை, பெண்களின் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு இவர் மருத்துவமனைக்கு சென்றால் தீர்வு காணலாம். இப்போது இவரைப் போல இவர் மருமகள் மதுபாலாவும் சிறந்த டாக்டர். இருவரும் நெல்லை பெண்களுக்கு கைராசிமிக்க மருத்துவர்கள்.
 

சுதா நாராயணன்: இவர் இன்போஸிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தியின் மனைவி. அந்த நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர், என இன்று வரை அவர் கணவரால் போற்றப்படும் பெண்மணி.
 

உமா மகேஸ்வரி: இவர் நெல்லையின் முன்னாள் மேயர். நெல்லையில் முதன்முதல் மாநகராட்சி முறை கொண்டு வந்தபோது நெல்லையின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது நிர்வாகத்தில் நெல்லையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டது எனலாம்.

வசந்த குமாரி:  இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் தான் தமிழ்நாட்டு முதல் பெண் பேரூந்து ஓட்டுனர். எல்லோரும் கேலி செய்த நேரத்தில் தன் திறமையைக் கொண்டு முன்னேறிய‌வர்.

மைதிலி கிருஷ்ணன்:  

கானா - இவள் 12 ஆம் நூற்றாண்டில் பெங்காலில் வாழ்ந்த ஒரு கவிஞர், வான சாஸ்திரத்திலும் மேதையாக இருந்த்தாள். இவளது கணவன் கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய வராஹமிஹிரா . கணவனை விட மிக துல்லியமாக வானசாஸ்திரம் கணித்ததனால் நாக்கு துண்டிக்கபட்டவள். நாக்கு துண்டிக்கப்பட்டப்பின்னும் கானா வசன் (கானாவின் வாக்குகள் ) என்ற பெயரில் கவிதைகளும் விழிப்புணர்ச்சி வருத்தும் கருத்துக்களும் எழுதினாள்.  

மிராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி ): ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார். பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார். ஆணாகவே வாழ்ந்தாள். அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம்செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டுபிடித்தார்.. எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார். 

சாவித்திரி பாய்:  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். 1848 ஆம் ஆண்டு பூனாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவினார். 1852ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார். 

பிரேம் மாத்தூர்: இவர் இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டுனர். விமானம் ஓட்டும் பயிற்சி இருந்தும் அவருக்கு எந்த விமான கம்பெனியிலும் வேலை கொடுக்கவில்லை. பெண் ஓட்டுனர் என்றல் எங்கள் விமானத்திற்கு ஆள் வரமாட்டார்கள் என்று கேலி செய்தனர். மனம் சோர்ந்து தொழிலதிபர் ஜி. டி.பிர்லாவின் தனிப்பட்ட விமான ஓட்டுனராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு டெக்கான் ஏர்லைன்ஸ் அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது.  

சந்திரமுகி பாசு : கல்கத்தா பல்கலை கழகத்தில் 1886 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண். இவருடைய இரு தங்கைகள் தான் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் முதன் முதலாக படித்த பெண்கள். எத்தனை முதல்கள் ஒரே குடும்பத்தில்..

ராஜேஸ்வரி சண்முகம்: படிக்கும் காலத்தில் எனக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது. நிகழ்ச்சி தொகுத்து அளிக்கும் இவரின் பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் குரலை கேட்டாலே உற்சாகம் தொற்றி கொள்ளும் அறிவிப்பாளர் .  

Kim clijsters: பொதுவாக, திருமணம் ஆகிவிட்டாலே, விளையாட்டில் இருந்து விலகி கொள்பவர்கள் அதிகம். ஒரு குழந்தைக்கு தாயான போதும் இரண்டாவது முறையாக us open - champion - பட்டம் வென்றவர், டென்னிஸ் வீராங்கனை Kim clijsters.  

சரோஜ் நாராயணசுவாமி: வானொலியில் செய்தி கேட்கும் வழக்கம் உடையவர்கள் கண்டிப்பாக இவரது குரலை கேட்டு இருப்பீர்கள், இந்த வெண்கல குரல் எனக்குப் பிடித்த ஒன்று, குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி


வை.மு. கோதை நாயகி அம்மாள் :  முதல் பெண் எழுத்தாளர் 
கேரம்" இளவழகி:  விளையாட்டு வீராங்கனை
மருத்துவர் ஷாலினி.: உடல் உளவியல் மருத்துவர்
இந்திரா நூயி : 
பெப்சி CEO
சந்தா கோச்சார் :
ICICI வங்கி சேர்மென்
மேதா பட்கர் :-
சமூக சேவகி .
ரப்ரி தேவி :
சிறந்த (!) அரசியல் வாதி


சாந்தா-தனஞ்செயன்:   வி.பி. தனஞ்செயன். சாந்தா தனஞ்செயன். இவர்கள் இருவரும் தம்பதிகள். இருவரும் பாரத நாட்டிய கலைஞர்கள். சர்வதேச புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு கொண்ட சென்னை அடையாறு "கலாச்சேத்ரா" பாரத நாட்டிய பள்ளி இவர்களுடையது. சென்னை வாழ் மக்கள் கலாச்சேத்ராவில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்புவர்.

வாலேண்டினா தெரஸ்கோவா : இரஷ்யாவில் சாதாரனக் குடும்பத்தில் பிறந்து, முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற சாதனையாளர்.பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 1963 ல் ஜீன் 6ஆம் திகதி பறந்தவர்.

டாங்கோ திபு,பச்சோந்திரி பால் :
இவர்கள் இருவரும் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் முதன் முதலில் ஏறியவர்கள். கடும் குளிர்,உறைபனி எதிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்தவர்கள். பச்சோந்திரி பால் ஏறியவர். டாங்கோ கைடுங்க.

டாக்டர் கீதாஹரிப்பிரியா: நிறைய பெண்களின் வயிற்றில் பால் மட்டும் அல்ல, குழந்தைகளையும் வார்த்தவர். சிறந்த கைனக்காலஜிஸ்ட்


சின்னப் பொண்ணு : அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களே காலில் விழுந்து வணங்கிய பெரிய பொண்ணு இவர். ஏட்டறிவு இல்லாவிட்டாலும் விவசாய மக்களுக்கு இவர் ஒரு கலங்கரை விளக்கம்.
 

விஜயா : நாகப்பட்டினம் பள்ளி வேன் விபத்தில் சிறு குழந்தைகளை காப்பாற்ற தன் உயிர் தந்த தியாகி. அர்பணிப்பு என்னும் சொல்லின் அருஞ்சொல்பொருள்.


பூங்குழலி:   .. "பொன்னியின் செல்வன்"ங்கிற அந்த புக்குல வர்ற பூங்குழலிங்கிற கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போனது. ...
ஆச்சி மனோரமா:  சிறுவயதில் எனது பள்ளிவிடுமுறையில் நான் பார்த்த 'பாட்டி சொல்லை தட்டாதே' படத்தில்தான் முதன்முதலில் நான் இவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். இந்த படத்திற்கு பிறகு நான் இவரை என் சொந்த பாட்டியாகவே கருத ஆரம்பித்தேன். எல்லா சிறுவர்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதன்பிறகு பெரும்பாலான முன்னனி நடிகர்கள் இருக்கும் படங்களிலும், டிவியில் பார்க்கும் பழைய கருப்பு வெள்ளை படங்களிலும் இவர்களது நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்கள் என்னை பெரிதும் ஈர்த்தன. 'சகல கலா வல்லி' என்று நடிகர் திலகத்தால் இவர் அழைக்கப்பட்டது மிகவும் பொருந்தும்.

குந்தவை நாச்சியார்:  மீண்டும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரமா என்று நினைக்க வேண்டாம். இவர்கள் கற்பனைப்பாத்திரமல்ல, உண்மையில் வாழ்ந்தவர்... இவரது Management Skillsஐப் பற்றி பலபேர் வியந்திருக்கிறார்கள். இவர் தனது வாழ்நாளில் Intellectual Womenஆக வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இன்றும் இவரது நினைவாக இவரது பெயரில் ஒரு மகளிர் கல்லூரி தஞ்சையில் இருக்கிறது. அந்தளவிற்கு மரியாதை செலுத்தபட்டவர். ராஜராஜ சோழனின் வரலாற்று வெற்றிக்குப் பின்னால் இவரது பெரும்பங்கு உண்டு.


செல்லம்மா பாரதி : பாரதி ஒரு ஆச்சர்யம் என்றால்.. அவர் துணைவி இன்னொரு ஆச்சர்யம்! இரண்டு எக்ஸ்ட்ரீம் !


பிபிசி தமிழோசை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் ஆனந்தி:  அவர் எல்லோருக்குமே அக்கா தான். பிறந்தது யாழ்ப்பாணத்தில். பிறகு 90களில் வானொலி அறிவிப்பாளராக... பிபிசியில். அவரது குரல், ஈழத்தமிழர்களின் சோகத்தை சொல்லும் போது, கண்கள் பணிக்காமல் இருக்காது. குரலில் தெரியும் நேசம், நம்மை வேறு யாரோவாக நினைக்க வைக்காது. நம் உறவாகவே நினைக்க வைக்கும். அவர் குரலை கேட்கவே பிபிசி கேட்பேன். அழகிய தமிழ் உச்சரிப்பு. என்ன காரணமோ தெரியவில்லை, அவர் பணியிலிருந்து விலகிய பிறகு, நான் பிபிசி தமிழோசை கேட்பதையே நிறுத்தி விட்டேன்.
 

தடகள வீராங்கனை சாந்தி: அனேகம் பேர் மறந்திருக்கக்கூடும். பாலினச்சர்ச்சை காரணமாக பதக்கத்தை இழந்த பெண். அவருக்கு ஆதரவாக, எதிர்ப்பாக என்று சரிபாதியாக ஆதரவு, எதிர்ப்பு குரல்கள். பாதியிலேயே முடிந்தது... ஒரு நீண்ட ஓட்டம். தன் தாய்க்கு துணையாக கிராமத்தில் வாழ்ந்த அவர், கடைசியில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்.

ஜிக்கி: எனக்கு பிடித்த பாடகிகளில் ஜிக்கியும் ஒருவர். பாடகர் A.M.ராஜாவை மணந்து கொண்டப்பிறகு பாடுவது தடைப்பட்டு போனது அல்லது தடை செய்யப்பட்டது. A.M.ராஜாவின் மறைவிற்கு பின் மீண்டும் பாட வந்து, சில அற்புதமான பாடல்களை, இளையராஜாவில் இசையில் பாடினார். இப்போது நம்மிடையே அவர் இல்லை.

அனுராதாரமணன்:
படிக்க துவங்கிய காலத்தில், நான் தேடி தேடி வாங்கி படித்தது இவரது நாவல்களை. பிறகு ஜெயகாந்தனையும், பாலகுமாரனையும் வாசிக்க துவங்கிய பிறகு, இவர் நாவல்களை மறந்தாலும், இவரது வாழ்க்கை குறிப்புகளை ஒரு போதும் மறக்க முடியவில்லை. தன்னம்பிக்கைக்கு மிக சிறந்த உதாரணம். இவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். எம்மாதிரியான நரக வேதனையை எல்லாம் தாண்டி வந்துள்ளார் என்பதற்காக. இவர் மூலம் சொல்லப்பட்ட தகவல் தான். இவரது கணவர், பல பெண்களுடன் தொடர்பு கொண்டவர். ஒரு முறை அவர் மூலம், இவருக்கு சில வியாதி ஒட்டிக் கொள்ள், இவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, இவரை அங்குள்ள எல்லோருமே தவறாக,  தப்பான பெண்ணாக பார்த்தார்களாம்.
 

திருமதி மேனகாகாந்தி: சாமானியனின் மருமகளாக இருந்தால் என்ன... பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளாக இருந்தால் என்ன. மருமகளுக்கு கொடுமை நேருவது, நேருவது தான். கைக் குழந்தையுடன் வெளியேற்ற பட்ட, இந்திராவின் மருமகள், ஒவ்வொரு அடியையும் எதிர்நிச்சல் போட்டு வெற்றி பெற்றிருக்கிறார். சோனியா ராகுலை உருவாக்கியது வெற்றியல்ல. மேனகா வருணை உருவாக்கியது தான் சாதனை. நாடு முழுவதும் இன்று விலங்குகள் மீதான கொடுமைகளை, கட்டுப்படுத்தி அதற்கென அமைப்பை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை மேனகா காந்தியை சாரும்.
 

கஸ்தூரிபாய் காந்தி: பிரபலமானவர்களின் மனைவியாக இருப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளன. அதுவும் மகாத்மாவின் மனைவியாக இருப்பதில்... விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தியாகங்களை
செய்து கொண்டே இருக்க வேண்டும். தனக்கென வாழ முடியாத நிர்ப்பந்தம். மகாத்மாவின் வாழ்வை விட, கஸ்தூரிபாய் அவர்களின் வாழ்வே நிறைய கற்று கொடுத்துள்ளது.
 

தில்லையாடி வள்ளியம்மை: நாம் பள்ளிப்பாடத்தில் சிறு வயதில் படித்த சுதந்திர போராட்டக்காரர். அதுவும் அந்நிய மண்ணில்... தென்னாப்பிரிக்கவில். மகாத்மா காந்தி அவர்களாலேயே வியந்து போற்றப்பட்ட சுதந்திர போராட்ட வீரர். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தான், அவர்களை ஒரு கணம் நினைத்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
 

ரோஸா பார்க்ஸ்:  உண்மையைச் சொல்லப்போனால் முதற்தீக்குச்சியை உரசியவர் இவர்தான்… அந்த தீ இன்றளவும் நமைத்துப் போகாததுதான் இவரின் வெற்றி… தான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையை  விட்டுத்தர மறுத்த இவரின் செயலும், இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கும் கருப்பின மக்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆரம்பமாக இருந்தது...

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்:  சின்ன வயசில படிச்சேன்… ‘கைவிளக்கேந்திய காரிகை’ அப்படின்னு சொல்லி எங்க தமிழ் வாத்தியாரம்மா பிளேடு போட்டுகிட்டே ஆரம்பிச்சாங்க… ஆனா அவங்க முடிக்கும்போது பிரம்மிப்பா இருந்துச்சு.. இப்படியும் ஒருத்தங்க இருந்தாங்களான்னு… செவிலியர்களின் சேவைக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாதுன்றது ரொம்ப உண்மை... உலகம் முழுவதும் இவரது பிறந்த நாள்தான் செவிலியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

அனிதா ராபர்ட்ஸ்:   புரோட்டின் உட்கவருதல் மற்றும் டி-ஜி-எஃப் பீட்டா- கண்டுபிடிப்பிற்கு காரணமான உயிரியலாளர். கேன்சர் பாதிப்பை குறைப்பதற்கும், காயங்கள் மற்றும் எலும்பு முறிவிலிருந்து மீண்டு வருவதற்கும் பயன்படும் அருமருந்தைக் கண்டுபிடித்தவர். இன்று கோடிக்கணக்கான உயிர்கள் விரைவாக காப்பாற்றப்பட காரணமான ஒருவர்…

ஐரம் ஷர்மிளா:   இவரைப்பற்றி கேள்விப்பட்ட பின் மனஉறுதிக்கு யாரை குறிப்பிடுவது என்று தெரியவில்லை… மணிப்பூரின் இரும்புப்பெண்மணி… AFSPA சட்டத்தை வடகிழக்கு பிராந்தியங்களிலிருந்து நீக்க வேண்டி போராடிவருகிறார். அவர் விரைவில் வெற்றி பெற வேண்டும்…

Virginia Woolf:  கடந்த நூற்றாண்டின் சிறந்த பெண்ணிய கட்டுரைகளை எழுதியவர்… (A Room of One’s Own மற்றும் Three Guineas). இறுதியில் ஓல்ஸ் நதிக்கரையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்… போர் பற்றிய இவரது எழுத்து இன்னும் செவியில் சுற்றிக்கொண்டிருக்கிறது…

சங்கமித்ரா:  புத்த மத பிக்குனியா வாழ்ந்த சாம்ராட் அசோகருடைய மகள்… இவங்கள ஏன் பிடிச்சிருக்குன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியல… ஆனா ஏதோவொன்னு இவங்ககிட்ட இருந்திருக்கு….

யாஸ்மின் அஹமத்:  இவரது உணர்வப்பூர்வமான, கவிதை ததும்பும் விளம்பரப்படங்கள் நிச்சயம் நம் மனதை பாதிக்கும்… துளியும் விரசமில்லாமல் சில விநாடிகளில் ஒரு குறும்படத்தையே காட்டிவிடும் வல்லமை இவரிடம் இருந்தது… இவரும் ஒரு வலைப்பதிவர்தான். ஆனால் இப்போது இவர் இல்லை… இணையத்தில் இவரது வலைப்பூ மட்டும் மெளனமாக உலவிக்கொண்டிருக்கிறது…

நாய்க்குட்டி மனசு:

பெனசிர் புட்டோ: ஒரு முஸ்லிம் பெண் எந்த துறையிலும் உயர்ந்தவராக வருவது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும் . அதிலும் அரசியல் என்றால் கேட்கவேவேண்டாம். இரு முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனசிர் புட்டோ . பல முறை சாவின் பிடியில் இருந்து தப்பித்தவர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமாதானத் தூதை தொடங்கி வைத்தவர். முக்காடிட்ட முகமானாலும் முன் இருப்பவரை மலர வைக்கும் பெனசிர் புட்டோ ரொம்ப பிடிக்கும் .
 
எழுத்தாளர் சிவசங்கரி: எங்கள் கல்லூரி நாட்களில் சிவசங்கரி யும், இந்துமதியும் இன்றைய விஜயும், அஜித்தும் போல. அவர்களை கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து ஒரு பட்டிமன்றமே நடக்கும். சிவசங்கரி கண் தானம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்து நிறைய பேர் கண் தானம் பண்ணி இருக்கிறார்கள். அவர் எழுதிய "அவன்" கதை பலரைப் பாதித்தது. எழுத்துத் துறையில் எனக்கு மிகவும் பிடித்தவர் சிவசங்கரி.

எங்கள் பிளாக்:

திருமதி விசாகா ஹரி:
  திறமையாக, எளிமையாக, இனிமையாக, புதுமையாக கதா காலட்சேபம் செய்யும் கிருஷ்ண ப்ரேமியின் மருமகள் திருமதி விசாகா ஹரி.

சுஜாதா:  ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்றும் ரங்க ராஜன் என்றும் அறியப் பட்டவருக்குத் தன் பெயரைத் தந்து மங்காப் புகழைத் தந்த அவர் மனைவி சுஜாதா.

உஷா உதூப்: ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து மேற்கத்திய இசையில் கலக்கிய (லதா மங்கேஷ்கர் பாராட்ட வரும் போது கண் கலங்கி, கை கூப்பி, தமிழில், "ஐயோ...என்ன பண்றது..." என்று மேடையில் உணர்ச்சி வசப்பட்ட ) உஷா உதூப்

தமிழா. தமிழா.. 

ராதிகா:  1978ல் கிழக்கே போகும் ரயிலில்..அறிமுகமானவர்..தமிழ் கூட அப்போது சரியாக பேசத் தெரியாது.ஆனால்..தன்னை இன்று பிரமாதமாக வளர்த்துக் கொண்டுவிட்டார்..தவிர்த்து ராடன் மீடியா என்ற நிறுவனத்தை திறம்பட நடத்தி வருபவர்.

தாமரை:  'பார்த்த முதல் நாளாய்' பாடல் முணுமுணுக்காத ரசிகனே இல்லை எனலாம்.அதற்கு சொந்தக்காரர்.விண்ணைத்தாண்டி வருவாயா..என்பதற்கான சவாலாய் இருந்தவர்.ஈழப்பிரச்னையின் போது இவரின் வீராவேசமான பேச்சு..என்னை இவரை இந்த லிஸ்டில் சேர்த்து விட்டது.

திருமதி ஒய்.ஜி.பி.:  ராஜம்மா,ராஷ்மி,ராஜலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுபவர்.கல்வித்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.உலகில் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் படிப்பிற்கான முன்னோடி.இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

Post Comment

57 comments:

நட்புடன் ஜமால் said...

தொகுப்புகளில் தொகுப்பா ...

இராகவன் நைஜிரியா said...

தொகுப்பு அழகு...

ஹுஸைனம்மா said...

ஆமாம் ஜமால், நிறையப் புதியவர்களை அறிந்துகொண்டேன்; என்னைப் போன்றவர்களுக்கும் தெரியட்டுமே என்றுதான் இந்தத் தொகுப்பு!!

நன்றி!!

ஸ்ரீராம். said...

நன்றி...நன்றி....

ஹுஸைனம்மா said...

வாங்க ராகவன் சார், நன்றி!!

(எப்பவும் உங்க பேரை நைஜீரியா சார்ன்னுதான் எழுத வருது எனக்கு, அப்புறம்தான் திருத்துகிறேன், ஏன் அப்படி?)

;-))

ஹுஸைனம்மா said...

நன்றி ஸ்ரீராம் சார்.

kggouthaman said...

எங்கள் பிளாக் - சார்பில், எங்கள் நன்றி ஹுஸைனம்மா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நிறைய !!!!!!!


தொகுத்தளித்தமைக்கு நன்றிங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு பிடித்தவர்கள், உங்களுக்கும் பிடித்தவர்களே என்று அறிந்து கொண்டேன், மிக்க மகிழ்ச்சி.

கண்ணா.. said...

அட.....அசத்திட்டீங்க.....

நம்ம நாஞ்சிலு பெண் சாதனையாளர்கள் நிறைய பேரு இல்லன்னு சொன்னதுக்கு நீங்க இவ்ளோ பேரை தொகுத்திருக்கீங்க...


அருமாயா இருக்கு..:))

கண்ணா.. said...

தமிழிஷ் வோட் பட்டன் காணோம் ??!!!!!!...........

எம்.எம்.அப்துல்லா said...

இந்த ஐடியாகூட நல்லாத்தான்கீது :)

"உழவன்" "Uzhavan" said...

crtl C.. ctrl V ஆக இருந்தாலும், மிக நல்ல தொகுப்பு :-)

ஷாகுல் said...

super!

☀நான் ஆதவன்☀ said...

ஒரே கல்லுல்ல ரெண்டு மாங்காய்! :))

ஸாதிகா said...

அட வித்தியாசமா இருக்கே!

அமைதிச்சாரல் said...

அருமையான தொகுப்பு ஹுஸைனம்மா.

ரிஷபன் said...

ஹை! வித்தியாசமா இருக்கே.. கீப் இட் அப்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி...

அபுஅஃப்ஸர் said...

ஒவ்வொரு வலைத்தளமா செல்வதர்குபதில் இந்த ஒரு பதிவுக்கு வந்தாலே எல்லா பெண்களைப்பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம்போல‌

ம்ம் நடக்கட்டும்

thenammailakshmanan said...

Good Collection and Effort Husainamma...Arumai .. vaazththukkaL..!!!

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

THANKS LOT!! :)

அன்புத்தோழன் said...

அட ஹுஸைனம்மா டிவி சேனல் போல மறு ஒலிபரப்பா....??

எனக்கு பிடித்த பத்துனு இவ்வளவு பேரு எழுதிருக்காங்கன்னு உங்க பதிவ பாத்தப்பறம் தான் தெரிஞ்சுகிட்டேன்.... நெறைய புது முகங்களை எனக்கு அறிமுகம் செய்து வெச்சதுக்கு ரொம்ப நன்றி.... புது புது விஷயங்களும் தெரிய வாய்பாக அமைதந்து உங்களின் இந்த பதிவு.... கலக்றீங்க போங்க....

Chitra said...

கலக்கல். ஒவ்வொரு பதிவையும் ரசித்து படித்ததற்கான ஆதாரம் தரும் பதிவு.

தமிழ் உதயம் said...

ஹுஸைனம்மா said...

உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என்னுடைய இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!நன்றி ஹுஸைனம்மா.
மிகப்பெரிய உதவி இது. என் வலைப்பூவை இன்னும் பலர் அறியச் செய்தமைக்கு மீண்டுமொரு முறை நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் உங்க தொகுப்பு பிடிச்சிருக்கு ஹுசைனம்மா.. ;)

அக்பர்ன்னு ஒரு பதிவர்.. நாம் தினம் சந்திக்கும் சாதரணப் பெண்கள் பலரை தொகுத்திருந்தார் பார்த்தீங்களா ?

நாஞ்சில் பிரதாப் said...

இதுதான் ஈ அடிச்சான் காப்பி போலருக்கு... இன்னுமா பள்ளிக்கூட ஞாபகத்துல இருக்கீங்க-??? :)

நீங்க காப்பிஅடிப்பீங்கன்னுதான் நான் யார் பேரையும் எழுதல... :)

நாய்க்குட்டி மனசு said...

நன்றி ஹுசைன்னம்மா , தங்கள் முதல் வருகைக்கு,
உங்கள் தொகுப்பின் மூலம் நானும் நிறைய புது முகங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நல்ல முயற்சி

மைதிலி கிருஷ்ணன் said...

உங்களுடைய வாசகர் வட்டத்திற்கு என்னையும் ஒரு பதிப்பாளராக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஹுஸைனம்மா.

மைதிலி கிருஷ்ணன் said...

தொகுத்து வழங்கி இருப்பது அருமை.

ஜெய்லானி said...

பரவாயில்லையே ,எல்லா இடத்திலேயும் சுட்டு, ஒரு பிரியானியே செஞ்ஜிட்டீங்களே. சூப்பரோ......சூப்பர்.. (ஸ்கூல் பரிச்சையில எப்படி!!!---சும்மா தமாசு) வாழ்த்துக்கள்........

malar said...

நல்ல தொகுப்பு...

கைனி இருவரை குறிப்பிட்டு இருந்தேங்க .ஒன்று நெல்லை மற்றொன்று இடம் குறிப்பிடவில்லை....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://sinekithan.blogspot.com/2010/03/10-1.html இது தான் சொல்லவந்தேன்னு நினைக்கிறேன்.

நானானி said...

நல்ல கூட்டாஞ்சோறு...ஹுசைனம்மா!!

DREAMER said...

நன்றி ஹுசைன்னம்மா,
தகவல் பகிர்வுக்குதானே இதற்கு எதுக்கு காப்பிரைட்ஸ் எல்லாம் கேட்டுக்கிட்டு...
எனக்கு பிடித்ததை உங்கள் நட்பு வட்டத்துடன் பகிர்ந்து கொண்டதில் உண்மையில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.... மற்றவர்களின் விருப்பங்களையும் அறிந்துக்கொள்ள உங்களின் இந்த தொகுப்பு ஏதுவாய் இருக்கிறது.

-
DREAMER

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இதுவும் நல்லா இருக்குங்க..:)

இமா said...

'எனக்கும் பிடிச்சிருக்கு' உங்க இடுகை. ;)

அக்பர் said...

உங்கள் தொகுப்பு அருமை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான தொகுப்பு ஹூசைனம்மா.

நீங்கள் குறிப்பிட்ட எல்லா பெண்மணிகளும் சமுதாயத்தில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.

நன்றி ஹூசைனம்மா, என் பதிவையும் இணைத்துக்கொண்டதுக்கு...

Anonymous said...

நல்ல தொகுப்பு ஹுசைனம்மா. பாராட்டுக்கள்

பித்தனின் வாக்கு said...

நல்ல பொருத்தமான இடுகைகளை எடுத்துப் போட்டு, அரிய இடுகையாக மாற்றிவிட்டீர்கள். மிக நல்ல பதிவு. இதில் உங்களின் உழைப்பும் தெரிகின்றது. ஜென்ரல் நாலோஜ்க்கு இந்த பதிவைப் பயன்படுத்தலாம். என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா,
அருமையான தொகுப்பு. நிதானமாகக் கோர்த்த மணமிகு மாலை. வெகு அழகு.
வாசமிகும் மலர்ச்சோலையிலே நுழைந்த உணர்வு உங்கள் பதிவு. எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு.

அன்புடன் மலிக்கா said...

ஹுசைன்னைமா சூப்பர். தொகுப்புக்கே தொகுப்பு கலக்குங்க..

ராமலக்ஷ்மி said...

அழகாய் இப்படி நீங்கள் தொகுத்து வழங்கியிருப்பது எல்லோரையும் போலவே “எனக்கும் பிடிச்சிருக்கு...”!

நன்று, நன்றி ஹுஸைனம்மா!

Adirai Express said...

அட நான் தான் ரொம்ப லேட்டோ, எல்லா பிளாக்கையும் ஒரு அலசு அலசிட்டிங்க போலிருக்கு,

உங்க பிளாக் மூலமா எல்லோரையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

athira said...

ஆ... அப்பாடா... திருமதி ஹூசைன் ஒரு பெரிய கிளாசில.. சில்லென ஃப்பிறெஸ் யூஸ் தாங்கோ பிளீஸ்.. படித்துக் களைத்துப்போனேன்.

“எனக்கும் பிடித்தவர்களை” எங்கெல்லாம் தேடிப்பிடித்தீங்கள்... very nice post...

Jaleela said...

எல்லா தொகுப்புகளும் அருமை

அமைதிச்சாரல் said...

ஹுஸைனம்மா, அடுத்த ஆட்டம் ரெடியாயிடுச்சு. வாங்க.

http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_17.html

ஹுஸைனம்மா said...

கௌதமன் சார் - வாங்க; நன்றி.

அமித்தம்மா - நன்றிங்க. எல்லாம் உங்கள மாதிரி பிஸி

ஆளுங்களுக்காத்தான்!! :-)

சைவக்கொத்ஸ் - நன்றிங்க.

கண்ணா - வாங்க. நாஞ்சில் எழுதுன பதிவுதான் இத எழுத

தூண்டுகோலா இருந்துது!! நன்றி.

அப்துல்லா - நன்றி.

உழவன் - நன்றிங்க.

ஷாகுல் - நன்றி.

ஹுஸைனம்மா said...

ஆதவன் - ஹி.. ஹி.. யாராவது தொடரக் கூப்பிடறதுக்கு முன்னாடி, நாமே எழுதி எஸ்ஸாகிடலாம்னுதான்!! (பாம்பின் கால்...)

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

ரிஷபன் - வாங்க; நன்றி.

டி.வி.ஆர். சார் - நன்றி.

அபுஅஃப்ஸர் - ஆமாங்க, எல்லாரும் எல்லாப் பதிவுகளையும் தெரிஞ்சுருக்க மாட்டாங்கள்ல, அதான் இப்படி.

தேனக்கா - நன்றிக்கா.

ஷர்ஃபுதீன் - வாங்க; நன்றி.

ஹுஸைனம்மா said...

அன்புத்தோழன் - மறு ஒளிபரப்பும் சிலருக்குப் பயன்படுமே,அதான்!!

சித்ரா - ஓ, இப்படியும் ஒரு செய்தி இருக்கோ இதில, எல்லாப் பதிவுகளும் படிக்கிறேன்னு!! நன்றி. (வேலை வெட்டி இல்லாதவன்னும் தெரிஞ்சுடுமே!! ;-) )

தமிழ் உதயம் - நன்றி!!

முத்தக்கா - நன்றி. ஆமாம், நான் அக்பர் ப்ளாக்கையும் படிப்பதுண்டு. அதில அவர் எழுதியிருந்தது ரசித்தேன். ஆனா, இதில் சாதனையாளர்களின் பெயர்களை மட்டுமே தொகுத்ததால் அவற்றை சேர்க்கவில்லை; ஜலீலாக்கா, பிரதாப் இன்னும் சிலரும் அதே போல் எழுதியிருந்தார்கள்.

பிரதாப் - இப்படியெல்லாம் எஸ்கேப் ஆகமுடியாது!! நீங்க எழுதின பதிவுக்கான எதிர்பதிவுன்னுகூட இதை எடுத்துக்கலாம். ஏன்னா, பெண் சாதனையாளர்கள் அதிகம் இல்லன்னு உங்கள மாதிரி சிலர் நினைச்சுகிட்டிருக்காங்க, அவங்களும் தெரிஞ்சுக்கணுன்னுதான் இந்தப் பதிவு!!

நாய்க்குட்டி மனசு - நன்றிங்க. தொடர்ந்து வாங்க.

ஹுஸைனம்மா said...

மைதிலி - எனக்கு முன்னாடி சித்ரா & விகடன் மூலம் அறிமுகமாகிட்டீங்களே!!

ஜெய்லானி - ஸ்கூல்ல காப்பி அடிக்க என்ன, குடிக்கக் கூடத் தெரியாத அப்பாவி நானு!!

மலர் - எங்க குறீப்பிட்டிருந்தீங்க பெண் மருத்துவர்கள் பற்றி? நான் பாக்கலியே?

நானானி - நன்றிங்க.

ட்ரீமர் - நன்றிங்க; தொடர்ந்து வாங்க.

ஷங்கர் - நன்றி.

இமா - நன்றி.

ஹுஸைனம்மா said...

அக்பர் - நன்றி.

ஸ்டார்ஜன் - நன்றி.

சின்ன அம்மிணி - நன்றி.

சுதாகர் - நன்றி.

வல்லியம்மா - நன்றி. உங்க அழகான வர்ணனைக்கு ரொம்ப நன்றி.

மலிக்கா - என்ன செய்ய, நமக்கு இதுதான் தெரிஞ்சது!!

ராமலக்‌ஷ்மி - நன்றிக்கா.

அதிரை எக்ஸ் - நன்றி.

அதிரா - நன்றி பாராட்டுக்கு. இன்னும் இந்த ஜூஸ் குடிக்கிற பழக்கம் போகலையா உங்களுக்கு? :-)

ஜலீலாக்கா - நன்றிக்கா.

அமைதிச்சாரல் - அழைப்புக்கு நன்றி. எழுதிட்டேன்!!

R.Gopi said...

பூக்களால் தொடுத்த மாலையை போல், இந்த தொகுப்பும் நல்ல கலக்கலாமவும், வாசனையாகவும் உள்ளது...

வாழ்த்துக்கள் ஹூஸைனம்மா...

ஹுஸைனம்மா said...

நன்றி ஆர்.கோபி!! தொடர்ந்து வாங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

அழகான பதிவு அருமையான தொகுப்பு. எனக்கு சிஸ்டர் சுபலக்ஷ்மியும் பிடிக்கும்,சிறுவயதிலேயே விதவையாகி விதவை பெண்களின் கல்விக்காக பாடுபட்டவர். அதே மாதிரி முதல் பெண் டாக்டரான.
முத்துலக்ஷ்மி ரெட்டியும் தேவதாசிகலின் அவல வாழ்க்கையை மேன்மைபடுத்தியவர்

ஹுஸைனம்மா said...

வாங்க தி.ரா.ச. சார்;
டாக்டர். முத்துலட்சுமி எல்லாருக்கும் நல்லாத் தெரியும்; பெண் சாதனையாளர்கள்னாலே அவங்கதான் முதல்ல ஞாபகத்துக்கு வருவாங்க.

நான் இதில அதிகம் தெரிந்திராத/ மறந்துவிட்ட பெண்களின் பெயர்களைத்தான் தொகுத்துள்ளேன் என்பதால் அவர்களை இணைக்கவில்லை.

சிஸ்டர் சுபலக்ஷ்மி என்பது யாரென்று தெரிந்திருக்கவில்லை, எனவே புது அறிமுகத்துக்கு நன்றி.

நன்றி ஐயா.