எவ்வளவு நாள் பதிவர் லெவல்லயே இருக்கிறது? அடுத்த கட்டத்துக்கு, அதான் ”பத்திரிகையாளரா” ஆவோணுமில்லா? அதான் என்னோட சில பதிவுகளுக்கே நான் “ஃபாலோ-அப்”பெல்லாம் எழுதி ஒரு டிரையல் எடுக்கலாம்னு... நீங்க டரியல் ஆவாதீங்க..
அதுக்கு மின்னாடி, ஒரு கேள்வி: மார்ச் 22 - இந்த நாளுக்கு என்ன சிறப்புன்னு நெனவிருக்கா? பதிவர் - பதிவுலகத்துக்கும் இதுக்கு ரொம்பவே சம்பந்தமிருக்கு. விடை கடைசியில பாப்போம்!! (இதுவும் பத்திரிகை, பி.ப. ட்ரெண்ட்தானே?)
1. சுரங்கமே வீடாக:
சிலி நாட்டில், சுரங்கத்தில் சிக்கிவிட்ட 33 சுரங்கப் பணியாளர்களைப் பற்றி எழுதியிருந்தேன் இந்தப் பதிவில். நேற்று இரவில் அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள்!! மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு!! எல்லோரின் கூட்டுப் பிரார்த்தனையும், உழைப்பும்தான் அவர்களை, எதிர்பார்த்த டிசம்பர் மாதத்தை விட இரண்டு மாதங்கள் முன்பே வெளியே கொண்டுவந்திருக்கிறது.
சிலியின் ஜனாதிபதி நேரில் வந்து, ஒவ்வொருவரையும் வரவேற்றிருக்கிறார். 33 பேரில் ஒருவரான பொலிவியா நாட்டவரை வரவேற்க பொலிவியாவின் ஜனாதிபதியும் பிரத்யேக வருகை தந்திருந்தார்.
சாமான்யர்களான முப்பத்து மூவருக்கும் தற்போது திடீரென கிடைத்திருக்கும் “நட்சத்திர அந்தஸ்தை” அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களின் அடுத்த சவால். அவர்களை மேலே ஏந்திவந்த கூண்டின் பெயர் “ஃபீனிக்ஸ்”!!!
அவர்கள் சுரங்கத்தில் அடைபட்டிருந்த காலத்தில், அவர்களுக்குத் தேவையான மற்றும் அவர்களால் கேட்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் மேலெயிருந்து அனுப்பித் தந்த மீட்புக் குழுவினர் இரண்டு பொருட்களை மட்டும் அனுப்ப மறுத்து விட்டனர்!! அவை என்ன தெரியுமா? வீடியோ கேம்ஸும், ஐ-பாட்/எம்.பி.3 பிளேயரும்!! ஆமாம்., அவற்றைப் பயன்படுத்துவோர் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவர்; எதிர்பாராத ஆபத்து நேர்ந்தாலோ, எச்சரிக்கைகளையோ அவர்கள் கவனிக்காது விட வாய்ப்பிருக்கும் என்பதால் அவற்றைத் தரவில்லையாம்!!
2. திருத்தாத தீர்ப்புகள்:
இந்தப் பதிவில் பிறழ்சாட்சிகள் பற்றியும் எழுதியிருந்தேன். அமீரகத்தில், கள்ளச்சாராயத்(!!) தகராறு ஒன்றில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக, 17 இந்தியர்கள் மரணதண்டனை பெற்றிருந்தனர். இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, பலரும் இந்திய அரசாங்கம் இவ்வழக்கில் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த வழக்கின் அப்பீலில், முக்கிய சாட்சியானவர், ‘நினைவில்லை’, ’தெளிவாகப் பார்க்கவில்லை’, ‘சம்பவம் நடந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது’ என்றெல்லாம் சொல்லிவிட்டதால், தீர்ப்பு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சீக்கியர்கள்!!
3. டிரங்குப் பொட்டி -10:
இதில், குப்பைத் தொட்டிக் குழந்தைகள் குறித்து எழுதியிருந்தேன். இப்ப நாகரீக வளர்ச்சிக்கேற்ப, ஃப்ளைட் பாத்ரூம்ல குழந்தையைப் போட்டுட்டுப் போறாங்க!! (பள்ளிக்கூட பாத்ரூம்லாம் நம்ம இந்தியாவில!!) பஹ்ரைன்லருந்து ஃபிலிப்பைன்ஸ் போன ஃப்ளைட்ல, பாத்ரூம்ல குப்பைத் தொட்டில டிஷ்யூ பேப்பர்களால் சுற்றப்பட்டு, ஒரு பிறந்த குழந்தை கிடந்திருக்கிறது!! அப்புறம் விசாரிச்சு, அம்மாவைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திட்டாங்க.
எனக்கு என்ன ஆச்சர்யம்ன்னா, பிரசவம்கிறது பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறப்புன்னும் சொல்றோம். ஆனா, இப்படி சத்தமில்லாம பாத்ரூம்ல பிள்ளையப் பெத்துட்டு, ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான்!! நம்ம ஊர்ல, பிரசவம்னாலே, உன்னைக் கூப்பிடு, என்னைக் கூப்பிடு, மருந்து ரெடிபண்ணி, நேர்ச்சையெல்லாம் நேந்துகிட்டு, பரபரப்பா... ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள்!! இவங்கள மாதிரி எல்லாருக்கும் ஈஸியா இருந்துட்டா....
4. அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!
இந்தப் பதிவு, ’உலக தண்ணீர் தினத்தை’ ஒட்டி எழுதப்பட்ட பதிவு!! இப்ப ஞாபகம் வந்துருச்சா? மார்ச் 22!! பதிவுலகில் அநேகமா எல்லாப் பதிவர்களும் வரிஞ்சுகட்டிகிட்டு, தண்ணீர் சேமிப்பை, சிக்கனத்தை வலியுறுத்தி தொடர்பதிவுகள் எழுதினோம். ஒருநாள் விழாவா கொண்டாடிட்டு மறந்துபோகாம, அதன் தொடர்ச்சியா, தண்ணீர் சிக்கனத்திற்காக என்ன செய்கிறோம்னு யோசிக்க ஒரு நினைவூட்டல் என் தரப்பிலிருந்து. நான், என் வீட்டில் கிச்சன் சிங்கில் வரும் தண்ணீர் அளவைக் குறைத்து வைத்திருக்கிறேன்.
எச்சரிக்கை: இதேபோல, இனி பதிவில் “ஃபாலோ-அப்” எழுதுபவர்கள், எனக்குரிய ராயல்டியை தவறாமல் தந்துவிடவேண்டும்!!
|
Tweet | |||
38 comments:
சுரங்க தொழிலாளர்கள் மீட்பு செய்தியை படிச்சவுடன் உங்க பதிவுதான் ஞாபகம் வந்துச்சு.மீட்பு செய்தியையும்(மட்டும்) பதிவா போடுவீங்கன்னு நினைச்சேன்...ஆனா அதுக்கு பின்னாடி
இவ்ளோ ஃபாலோ அப்ஸ் வரும்னு நினைக்கவே இல்லை.....முடில....:)
//ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான்!!//அதானே!
டிரங்கு பொட்டியை ரொம்ப சின்னதா,கஞ்சத்தனமா இந்த வாட்டி திறந்திட்டீங்களே ஹுசைனம்மா.
அட!! இப்படிகூட ஒரு பதிவு போடலாமோ!! நல்லா இருக்கு.
அம்மாடியோ எவ்வளவு செய்திகள்.இங்கே அதை u-tube லும் பார்த்துக் கொண்டு ...!! சூப்பர் ஹுசைனம்மா!!
டிரங்கு பெட்டி அருமை..
//ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான்!!//
நல்ல கேள்வி. நானும் இப்படி நினைப்பதுண்டு.
சூப்பர் :)
//சுரங்க தொழிலாளர்கள் மீட்பு செய்தியை படிச்சவுடன் உங்க பதிவுதான் ஞாபகம் வந்துச்சு.//
எனக்கும் உங்க நினைப்பு தான் வந்தது சகோதரி. நேற்று சன் டி.வியில் இதன் விபரத்தை சொல்லும்போது கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன். ஆனால் இப்போது உங்கள் மூலம் விபரங்கள் அறிந்து கொண்டேன்.
பத்திரிக்கையாளர் ஆகனும்னு ஒரு முடிவோட இருக்கீங்க போல இருக்கு. வாழ்த்துக்கள்.
//ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள்!! இவங்கள மாதிரி எல்லாருக்கும் ஈஸியா இருந்துட்டா....//
இது ஒரு நல்ல கேள்வி?????????
தண்ணீர் சிக்கனம், அருமையான் யோசனை, நீங்கள் சொல்வது போல் செய்தால்தண்ணீர் உபயோகம் குறையும்.
நல்ல பதிவு. நன்றி சகோதரி
பதிவுகள் நல்லா இருக்குங்க
சைவகொத்துப்பரோட்டா said...
அட!! இப்படிகூட ஒரு பதிவு போடலாமோ!! நல்லா இருக்கு.////
எல்லாருக்கும் ஒரு ஐடியா கொடுத்துட்டிங்க.
நமக்கு நாமே திட்டமா
-------------
மேட்டரே இல்லைன்னு எம்பூட்டு அழகா சொல்றீங்க - இந்த சூசகம் நமக்கு தெரியலையே :P
அவ்வ்வ்.. ஜமால்.. என்னதிது.. இப்படியா வெளிப்படையாச் சொல்றது?
மேட்டர்லாம் இருக்குது.. இதுவும் ஒரு வகை..
அதென்ன ஃபாலோ அப், புரியலயே
இது மீள்ஸ் பதிவைக் குறிக்குமோ.
//அரபுத்தமிழன் said...
அதென்ன ஃபாலோ அப், புரியலயே
இது மீள்ஸ் பதிவைக் குறிக்குமோ.//
புதுப்பதிவர் போல!! அதான் மீள்பதிவுக்கும், ஃபாலோ-அப்புக்கும் வித்தியாசம் தெரியல!! நீங்க பத்திரிகையெல்லாம் படிக்கிறதில்லையா?
:-))))
இந்த ஐடியாவும் நல்லா இருக்கே! கலக்கல்!
நல்லா இருக்கு
பெத்த கொழந்தைய எப்படித்தான் வீசியெறிய மனசு வருதுன்னு தெரியல. என்னாலயெல்லாம் அதை யோசிக்கவே முடியல.
ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல ;-)))
//எச்சரிக்கை: இதேபோல, இனி பதிவில் “ஃபாலோ-அப்” எழுதுபவர்கள், எனக்குரிய ராயல்டியை தவறாமல் தந்துவிடவேண்டும்!!//
address please.....ராயல்டி தர தான்....
(இது ஒரு வியாதியாட்டம் பரவிச்சு.....)
சும்மா அட்ரஸ் சொல்லுங்க...
இரண்டு நாளாய் ‘சுரங்கத்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்பு’ என்பதைப் படித்ததும் உங்கள் நினைவுதான் வந்தது ஹுஸைனம்மா!
ஹுஸைனம்மா...எங்கேயோ போயிட்டீங்க...ஃபாலோ-அப் - நல்ல ஐடியா... அருமையான தகவல்கள்... //மேட்டர்லாம் இருக்குது.. இதுவும் ஒரு வகை..// சரி..சரி..
நல்ல பழக்கம் ஹூசைனம்மா.. தொடருங்க..
//என் வீட்டில் கிச்சன் சிங்கில் வரும் தண்ணீர் அளவைக் குறைத்து வைத்திருக்கிறேன்.//
ஏன் பக்கத்து வீட்டு சிங்க்ல கழுவ ஆரம்பிச்சுட்டீங்களா? :))
//அவர்களை மேலே ஏந்திவந்த கூண்டின் பெயர் “ஃபீனிக்ஸ்”!!!//
பொருத்தமான பேரு தான்..
\\நாஞ்சில் பிரதாப் said...
சுரங்க தொழிலாளர்கள் மீட்பு செய்தியை படிச்சவுடன் உங்க பதிவுதான் ஞாபகம் வந்துச்சு.மீட்பு செய்தியையும்(மட்டும்) பதிவா போடுவீங்கன்னு நினைச்சேன்...ஆனா அதுக்கு பின்னாடி
இவ்ளோ ஃபாலோ அப்ஸ் வரும்னு நினைக்கவே இல்லை.:)//
அதே அதே:)
அட இது கூட நால்லாயிருக்கே ..
ஜமால், அமைதிச்சாரல், பின்னூட்டங்களுக்கு கன்னாபின்னா ரிப்பீட்டூ
நல்ல தொகுப்புகள்...
ஃபாலோ அப்ப்ப்ப்ப்ப்பாபாபா!!!!!
நாங்கெல்லாம் ஃபாலோ டவுன் தான் எழுதுவோம், ஆக உங்களுக்கு ராய்ல்டி கிடையாது ஹுஸைனம்மா!!!
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.
அப்புறம் அந்த சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு, சூப்பர் போங்க. அதப்பத்தி விதவிதமா செய்திகள் வந்துகிட்டிருக்கு, விரைவில் பதிவிடுகிறேன்.
எப்படியோ ஒரு டிரங்குப் பெட்டியோட பதிவு தேத்திர்றீங்க...:))
நடத்துங்க...நடத்துங்க...ஆனால் சிலி நாட்டு விவகாரமே எனக்கு உங்க வலை மூலமாதான் தெரியும். இப்ப மீட்டிட்டாங்கன்னு தெரிஞ்சப்புறம் உங்க வலைலதான் அப்டேட் எதிர்பார்த்தேன்...:)
இது கூட நல்லா இருக்குங்க..
அந்த சுரங்க தொழிலாளர் மீட்பு பற்றி செய்தி வந்ததும் உங்கள் பதிவு தான் ஞாபகம் வந்தது..
வீடியோ கேம்ஸும், ஐ-பாட்/எம்.பி.3 பிளேயரும் தரப்படவில்லை என்பது புதிய தகவல்.. நன்றிகள்.
ராயல்டி கொடுக்கக் கட்டுபடியாகாது. எழுதுவதையே நிறுத்தலாம் எனத் தோன்றுகிறது.ஹா ஹா
உங்கள் புதுமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
//Labels: குழந்தை, சட்டம், சமூகம், சிலி, சுரங்க விபத்து, தண்ணீர் தினம், தீர்ப்பு //
இதுல எதுக்கு கமெண்ட் போடறதுன்னே தெரியல ..!! எல்லாமே நல்ல கேள்விகள் தான் :-))
The news abt chile miners is nice.I was shocked to see the topic on the baby discarded in Flifht Bathroom.Water conservation a nice environmental concern.
//ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான்!!//
நினைச்சாலே பகீருங்குது.
எல்லா பதிவுகளும் அருமை.
எல்லோரும் ஃபாலோ பண்ண நல்ல ஒரு ஃபாலோ அப் கொடுத்திட்டீங்க.
ராயல்டியால் நிரம்பி வழியப் போகுது உங்க ட்ரங்பொட்டி!!!!
வருகை புரிந்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!!
சிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு சம்பவம் என்றவுடன் பலரும் என் நினைவு வந்ததாகக் குறிப்பிட்டிருப்பது கண்டு நெகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி!!
ஆரம்பம்தொட்டே, இந்தச் சம்பவம் எனக்கு ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் விபத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அதில் நடந்ததுபோல இதில் நடந்துவிடக்கூடாதே என்ற பதற்றமும் இதை நான் பதிவாக எழுதக் காரணம்.
இந்த மீட்பு சம்பவம் நடந்த அதே நேரத்தில், சுரங்க விபத்துகளுக்குப் பேர்போன சீனாவில், ஒரு சுரங்க விபத்தில் 20 மரணம், மேலும் 17 பேர் காணவில்லை என்ற செய்தியும் வந்துகொண்டிருப்பது வருத்தம் தருகிறது. அவர்களையும் இறைவன் காக்கவேண்டும்.
மீண்டும் நன்றிகள்!
சுரங்கத் தொழிலாளர்கள் விடுதலை கொடுத்த ஆனந்தம் உங்கள் பதிவும் கொடுக்கிறது. ட்ரன்க் பெட்டி நல்ல செய்திகளையே கொடுக்கிறது.வாழ்த்துகள்மா.
ஆஹா... எங்கயோ போயிட்டீங்க எழுத்தாளர் மேடம்... (இப்பவே சொல்லிடுவோம்... ஹி ஹி)
நல்ல பத்திரிக்கையாளரே......வாழ்த்துக்கள்....
Post a Comment