இதுவும் கவிதையோன்னு பயந்துடாதீங்க. தலைப்பு மட்டுமே அப்பப்போ கவிதைத்தனமா இருக்கும்னு நாஞ்சொல்லாமலே உங்களுக்குத் தெரியும்கிறதாலத்தான் தைரியமா உள்ளே வந்திருக்கீங்க. இது ஒரு ”டெக்னிக்கல் வரலாற்றுப் பதிவு”ன்னு சொல்லலாம். அடடா... ஓடக்கூடாது. வரலாறு முக்கியம் தோழர்களே!!
ஆரம்பகாலங்களில் - கி.பி. 300-400க்கு இடைப்பட்ட காலங்களில், கண்ணின் பார்வை என்பது, கண்ணிலிருந்து வெளிவரும் ஒளி பொருட்களின்மீது பட்டு பிரதிபலித்து, மீண்டும் கண்ணினுள் நுழைவதாலேயே என்றே டாலமி (Ptolemy), யூக்ளிட் (Euclid) போன்ற அறிஞர்களின் புரிதல் இருந்தது. பின்வந்த அரிஸ்டாட்டில், கேலென் (Galen) போன்றவர்கள் நாம் பார்க்கும் பொருளிலிருந்து நம் கண்ணிற்குள் ஏதோ ஒரு ஏதோ ஒரு ”இயற்பொருள்” (physical form) நுழைவதாலேயே பார்க்க முடிகிறது என்று கூறினர். எனினும் இதை ஒரு ஊகமாகவே அல்லாது, அந்த இயற்பொருள் என்னவென்று அவர்கள் தகுந்த ஆய்வுகளின் மூலம் விளக்கவில்லை.
அதன்பிறகு இதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. காரணம் 5ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டுவரையான காலம், ஐரோப்பாவின் “இருண்ட காலம்” என்று அழைக்கப்படுமளவுக்கு அங்கு குறிப்பிடத்தகுந்த அறிஞர்கள் யாரும் இல்லை. பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடுவது மாதிரி, இது உலகம் முழுமைக்குமான இருண்ட காலம்போல வரலாற்றில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், அந்த காலகட்டங்களில்தான் பெர்ஷியா, எகிப்து, இந்தியா உள்ளிட்ட ஆப்பிரிக்க-ஆசியப் பகுதிகளில் அறிஞர்கள் பலர் தோன்றினர்.
அவர்களில் ஒருவர்தாம், கி.பி. 965-ல் ஈராக்கின் பஸ்ரா நகரில் பிறந்த ”அல்ஹஸன் இப்ன் அல்-ஹைதம்” என்பவர். ”இப்ன் அல்-ஹைதம்” என்று அரேபிய வரலாற்றில் அழைக்கப்பட்ட இவர், ஐரோப்பாவில் அல்ஹாஸன் (Alhazen) என்று அறியப்பட்டார். ஒளியியல், இயற்பியல், கணிதம், வானவியல், தத்துவம், விஞ்ஞான முறைகள் என்று பல்துறைநிபுணராக (Polymath) ஆக விளங்கினார். எல்லாத் துறைகளுக்கும் சேர்த்து இவர் எழுதிய புத்தகங்களும், ஆய்வுக்கட்டுரைகளும் 200க்கும் மேலே!!
இவர், அறிஞர்கள் டாலமி மற்றும் யூக்ளிட் ஆகியோரின் “பார்வை”க்கான விளக்கத்தை மறுத்தார். நாம் பார்க்கும்போது, கண்ணிலிருந்து ஒளி தோன்றி பொருட்களின்மீது விழுவதாலேயே பார்க்க முடிகிறது என்பது உண்மையானால், பிரகாசமான அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசுவது ஏன்? மேலும், விண்ணில் இருக்கும் சில நட்சத்திரங்களைக்கூட வெறும் கண்ணால் - அதுவும் கண்ணைத் திறந்த உடனே - பார்க்க முடிவதெப்படி என்றும் கேள்விகள் எழுப்பி, அது தவறென்று உணர்த்தினார். மேலும், ஒளிக்கற்றைகள் பொருட்களின்மீது விழுந்து, பின் நம் கண்களுக்குள் நுழைவதாலேயே “பார்வை” நடக்கிறது என்றும் நிரூபித்தார். லென்ஸ்கள், கண்ணாடிகள் உதவிகொண்டு ஒளிக்கற்றைகள் எப்போதும் நேர்க்கோட்டிலேயே பயணிக்கின்றன என்றும் நிரூபித்தார்.

இவரது பரிசோதனைகளின் முக்கியமான மைல்கல் “கேமரா அப்ஸ்க்யூரா” (Camera Obscura) என்ற “ஊசித்துளை கேமரா” முறையாகும். ஒரு இருட்டு அறையின் சுவற்றில் இட்ட சிறு ஊசித்துளைவழி ஊடுறுவும் புறவெளிச்சம், வெளியே உள்ள காட்சியைத் தெளிவாகக் காட்டும் (ஆனால், தலைகீழாக) என்பதைச் செயல்படுத்திக் காண்பித்தார். இதுவே பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கேமராவின் செயல்முறைக்கும், பெயருக்கும் அடிப்படையாகும்!! அல்-ஹைத்தம் அரபியில் இருட்டு அறையை “பைத் அல்முத்திம்” என்கிறார். அதாவது, லத்தீன் மொழியில் “கேமரா அப்ஸ்க்யூரா”; ஆங்கிலத்தில் “dark chamber"!! இதுபோதுமே கேமராவின் ஆரம்பம் எங்கென்று தெரிந்துகொள்வதற்கு!!
http://www.youtube.com/watch?v=a5icY1dMin4
இவர், அறிஞர்கள் டாலமி மற்றும் யூக்ளிட் ஆகியோரின் “பார்வை”க்கான விளக்கத்தை மறுத்தார். நாம் பார்க்கும்போது, கண்ணிலிருந்து ஒளி தோன்றி பொருட்களின்மீது விழுவதாலேயே பார்க்க முடிகிறது என்பது உண்மையானால், பிரகாசமான அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசுவது ஏன்? மேலும், விண்ணில் இருக்கும் சில நட்சத்திரங்களைக்கூட வெறும் கண்ணால் - அதுவும் கண்ணைத் திறந்த உடனே - பார்க்க முடிவதெப்படி என்றும் கேள்விகள் எழுப்பி, அது தவறென்று உணர்த்தினார். மேலும், ஒளிக்கற்றைகள் பொருட்களின்மீது விழுந்து, பின் நம் கண்களுக்குள் நுழைவதாலேயே “பார்வை” நடக்கிறது என்றும் நிரூபித்தார். லென்ஸ்கள், கண்ணாடிகள் உதவிகொண்டு ஒளிக்கற்றைகள் எப்போதும் நேர்க்கோட்டிலேயே பயணிக்கின்றன என்றும் நிரூபித்தார்.

இவரது பரிசோதனைகளின் முக்கியமான மைல்கல் “கேமரா அப்ஸ்க்யூரா” (Camera Obscura) என்ற “ஊசித்துளை கேமரா” முறையாகும். ஒரு இருட்டு அறையின் சுவற்றில் இட்ட சிறு ஊசித்துளைவழி ஊடுறுவும் புறவெளிச்சம், வெளியே உள்ள காட்சியைத் தெளிவாகக் காட்டும் (ஆனால், தலைகீழாக) என்பதைச் செயல்படுத்திக் காண்பித்தார். இதுவே பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கேமராவின் செயல்முறைக்கும், பெயருக்கும் அடிப்படையாகும்!! அல்-ஹைத்தம் அரபியில் இருட்டு அறையை “பைத் அல்முத்திம்” என்கிறார். அதாவது, லத்தீன் மொழியில் “கேமரா அப்ஸ்க்யூரா”; ஆங்கிலத்தில் “dark chamber"!! இதுபோதுமே கேமராவின் ஆரம்பம் எங்கென்று தெரிந்துகொள்வதற்கு!!
http://www.youtube.com/watch?v=a5icY1dMin4

இன்னும் ஒளியியலில் எண்ணற்ற கோட்பாடுகள், பரிசோதனைகள், கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். அவற்றையெல்லாம் “Book of Optics" (Kitâb al-Manâzir) என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளாக எழுதி வைத்துள்ளார். இப்புத்தகம் லத்தீன் மொழியில் 12-ம் நூற்றாண்டில் மொழிபயர்க்கப்பட்டது.
இந்நூல், பின்னாளைய அறிஞர்களான ராபர்ட் க்ரோஸெடெஸ்ட், ரோஜர் பேகான், ஜான் பெக்ஹாம், விடேலோ, வில்லியம் ஆஃப் ஓக்ஹம், லியனார்டோ டாவின்ஸி, ஜோஹன்னெஸ் கெப்ளர், கலிலியோ, நியூட்டன் உள்ளிட்டவர்களின் ஆய்வுகளுக்கு உதவியுள்ளது. அதோடல்லாமல், மூக்குக் கண்ணாடி, கேமரா, டெலஸ்கோப், மைக்ரோஸ்கோப், கண் அறுவை சிகிச்சை, ரோபாட்டுகளின் “பார்வை” ஆகியவை உள்ளிட்ட பார்வை மற்றும் ஒளி சார்ந்த முக்கிய கண்டுபிடிப்புகளுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் துணையாயிருந்தது.
இக்காரணங்களாலேயே அல்-ஹைத்தம் ”ஒளியியலின் தந்தை” (Father of Modern Optics) என்று அழைக்கப்படுகிறார்.
இவர் சார்ந்த துறைக்கு மட்டுமல்லாமல், பொதுவாகவே ஆராய்ச்சித் துறைக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கிறார். இவர் காலத்திற்கு முன்பு வரை, அறிவியல் தத்துவார்த்த ரீதியாகவே அணுகப்பட்டது. ஒரு புதிய கோட்பாடு உருவாகும் சமயத்து, அது தர்க்க ரீதியாக, யூகமாகத்தான் சொல்லப்பட்டது. அல்லாமல், இன்றுள்ளது போல அது தகுந்த ஆராய்ச்சிகள், பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படும் வழக்கம் இல்லை. அல்-ஹைத்தம்தான் இதிலும் முன்னோடியாக இருக்கிறார். ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கும்போதோ அல்லது முந்தையவர்களின் கோட்பாட்டை மறுக்கும்போதோ, முதலில் அதைச் சரியாகக் கூர்ந்து கவனித்து, விவர அறிக்கை எழுதி, ஒரு உத்தேசக் கோட்பாடு வகுத்து, அதை ஆராய்ந்து பரிசோதித்து, பரிசோதனையின் முடிவுகளை ஆய்ந்து, தரவுகளின் விளக்கமளித்து, அதனடிப்படையில் ஒரு முடிவை எத்தியபின், இவ்விபரங்களோடு தன் கண்டுபிடிப்புகளைப் பகிர்தல் என்ற வரிசைக்கிரமப்படி உலகில் முதன்முதல் செயலாற்றியவர் இவரே. பரிசோதனை- ”experiment" என்கிற வார்த்தைக்கான அடித்தளமே அவரது ஒளியியல் குறித்த நூலில்தான் இடப்பட்டது என்றால் மிகையில்லை.
ஒரு விஞ்ஞானி எனப்படுபவர் எவ்வாறு பணியாற்றவேண்டும் என்பதற்குரிய வரைமுறைகளை வகுத்துத் தந்தவராகையால், இவர் “உலகின் முதல் விஞ்ஞானி” (World's first scientist) என்றும் அழைக்கப்படுகிறார்.
“இறையியல்” (Theology) துறையையும் விட்டுவைக்காத அல்-ஹைத்தம் சொல்கிறார்:
"உண்மை, அதன்பொருட்டே தேடப்படுகிறது. உண்மையைக் கண்டறிவது கடினமானது. அதை நோக்கிய பாதை கரடுமுரடானது.. ஏனெனில் உண்மை தெளிவற்ற இருட்சியில் மூழ்கியுள்ளது... அறிவியலாளர்கள் பிழைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்; அறிவியலும் குற்றங்குறைகள் உடையதே......
அறிவையும், உண்மையையும் நான் தொடர்ந்து தேடிவருகிறேன். ஏனெனில் இறைவனின் ஒளிர்வை அணுகவும், அவனோடு நெருக்கத்தை அடைவதற்கும் இதைவிடச் சிறந்த வழியில்லை என்பது என் நம்பிக்கை!!"
Ref:
http://en.wikipedia.org/wiki/Alhazen
http://en.wikipedia.org/wiki/Book_of_Optics
http://www.1001inventions.com/ibnalhaytham
http://harvardmagazine.com/2003/09/ibn-al-haytham-html
http://ezinearticles.com/?Who-Was-the-First-Scientist?&id=637076
http://news.bbc.co.uk/2/hi/7810846.stm
http://www.firstscientist.net/
http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Al-Haytham.html
Book: 1001 inventions: Muslim heritage in our world
Published by: Foundation for Science Technology and Civilisation
|
Tweet | |||
44 comments:
அக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
அசத்தலான பதிவு. உலகின் உதல் விஞ்ஞானி குறித்து ஆழமாக விளக்கியதற்கு ஜசாக்கல்லாஹ். நானும் இவர் குறித்து வேறொரு கோணத்தில் அணுகி பதிவிட்டிருக்கின்றேன்.
பார்க்க http://www.ethirkkural.com/2010/03/ii.html
வஸ்ஸலாம்..
ஸலாம்
கேமெரா கண்கள் - ஒரு வரலாற்று பின்னணி
தமிழ்மணம் +1
குறிப்பு : நான் ஒட்டு போற்றுகேன் .. ஆகவே எனக்கு கருத்துரிமை இருக்கு
அப்படியே உங்க ப்ளாக் ல ஒரு ROUNDS வந்தேன் ... அப்பத்தான் புரிந்தது ..
இப்படி ஒரு பதிவ எழுத உங்களால் கூட எழுத முடியும் என்று ...
நட்சத்திரம் ஆனதும் தினம் ஒரு பதிவா தெரியுது ....!!!
//“இறையியல்” (Theology) துறையையும் விட்டுவைக்காத அல்-ஹைத்தம் சொல்கிறார்:
"உண்மை, அதன்பொருட்டே தேடப்படுகிறது. உண்மையைக் கண்டறிவது கடினமானது. அதை நோக்கிய பாதை கரடுமுரடானது.. ஏனெனில் உண்மை தெளிவற்ற இருட்சியில் மூழ்கியுள்ளது... அறிவியலாளர்கள் பிழைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்; அறிவியலும் குற்றங்குறைகள் உடையதே......
அறிவையும், உண்மையையும் நான் தொடர்ந்து தேடிவருகிறேன். ஏனெனில் இறைவனின் ஒளிர்வை அணுகவும், அவனோடு நெருக்கத்தை அடைவதற்கும் இதைவிடச் சிறந்த வழியில்லை என்பது என் நம்பிக்கை!!"//
இவரு கருத்தை வழிமொழிகிறேன் ...
அறிவியல் உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானியின் வரலாறை ஓரளவு அறியத் தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
மாஷா அல்லாஹ் நல்ல தகவல்.
Nice Sharing Hussainama :)
Niraya padikireenga pola good ...
அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான பதிவு சகோ. முன்பு ஓற்றுமை இதழில் முஸ்லிம்கள் இந்த உலகத்திற்கு பங்காற்றியவைகள் பற்றி எழுதினார்கள். அதே போல் இனையத்தில் படிப்பது இன்னும் சுவராசியம். தொடருங்கள் தொடர்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான பதிவு சகோ. முன்பு ஓற்றுமை இதழில் முஸ்லிம்கள் இந்த உலகத்திற்கு பங்காற்றியவைகள் பற்றி எழுதினார்கள். அதே போல் இனையத்தில் படிப்பது இன்னும் சுவராசியம். தொடருங்கள் தொடர்கிறோம்.
அருமையான பதிவு தக்க ஆதாரங்களுடன் வாழ்த்துக்கள்
நல்ல தகவல்...உலகின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான மற்றும் விஞ்ஞானிகளின் முன்னோடியான இந்த மாமனிதனை பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
இது போன்ற நபர்களை பற்றிய விவரங்கள் அதிகம் அறியப்படாமல் இருப்பதன் காரணம் என்ன??(!!)
wow...lots of info. Should read it once more to grasp it all I guess. Thank you
புத்தகம் தயாராகுது போல?
நன்று.
(அவர் இறந்தவிதம் பற்றிய வதந்திகளையும் சேர்த்திருக்கலாமே? துப்பறியும் கதையின் சுவாரசியம்)
நல்ல தகவல்கள்.... குறிப்பாக தத்துவங்கள் அடிப்படையில் இல்லாமல் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் ஆராய்ச்சி என்பதற்கு இவர்தான் முன்மாதிரி என்ற தகவல். ஆமாம் இதில் ஏன் ஒரு மைனஸ் வோட்?
விரிவான உழைப்பு தெரிகிறது ஹுசைனம்மா. ஒளிகட்டியவருக்கு
வணக்கங்கள்.
அருமையானதொரு கட்டுரை ஹுஸைனம்மா..
நன்றி
இந்த தகவல்களை புதிதாய் படிப்பவர்களுக்கு ஆச்சரியமாயும் நம்பமுடியததுமாய் இருக்கலாம் இக்கலபகுதிதான் கிழக்குலகம் அறிவியலில் கோலோச்சியகாலம் பண்பாடுகளையும் கலைகளையும் அறிவியலையும் மேற்குலகம் பின்னாட்களில் கிளைதேசங்களில் சூறையாடி அறிவு போக்கிசங்களின் உரிமையாளர்களாக மாறினார்கள்
இந்த காலப்பகுதியில்தான் ரோம அரசர்கள் கைஎழுதிட்டு பழகும்பொழுது குர்துபாவில் சிறார்கள் புத்தகங்களில் பாடம் படித்தனர்
இந்தியாவின் ஆண்மீகத்துதனான உடட்பயிட்சி கலைகளும் இன்னும் பல அரிய மருத்துவ முறைமைகளும் கொள்ளை இடப்பட்டன
இந்தபதிவுக்கு எனது வாக்கும் உண்டு
அறிந்திராத வரலாறு.பகிர்வுக்கு நன்றி!
.
.
CLICK >>>>
தமிழ்மணம், பதிவர்கள், வாசகர்கள் கவனத்திற்கு <<<<< TO READ.
.
.
“உலகின் முதல் விஞ்ஞானி” ”ஒளியியலின் தந்தை”
என்றெல்லாம் போற்றப்படும் அல்-ஹைத்தம் பற்றிய அருமையான பதிவு.
இதுவரை நான் அறிந்திராத பல புதிய வரலாற்று, அறிவியல் தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி பகிர்வுக்கு.
வித்தியாசமான பதிவு! தெரிந்திராத தகவல்கள் பற்றிய பதிவு தந்ததற்கு இனிய நன்றி ஹுஸைனம்மா!
Very nice article, Thanks
உங்கள் உழைப்பு இதன் பின்னணியில் தெரிகிறது!
நட்சத்திர பதிவரா நீங்க கொடுக்கும்பதிவுகள் 7 ஸ்டார் மாதிரி செம கிளாஸ்.
புது தகவல்கள் தெரிந்துகொண்டேன். (இன்னொரு தபா பொறுமையா படிச்சாத்தான் மைண்ட்ல வெச்சுக்க முடியும்)
அருமையான பதிவு நட்சத்திர நல் வாழ்த்துக்கள்
அருமையான தகவல்கள். மிக்க நன்றி ஹூஸைனம்மா.
ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கும்போதோ அல்லது முந்தையவர்களின் கோட்பாட்டை மறுக்கும்போதோ, முதலில் அதைச் சரியாகக் கூர்ந்து கவனித்து, விவர அறிக்கை எழுதி, ஒரு உத்தேசக் கோட்பாடு வகுத்து, அதை ஆராய்ந்து பரிசோதித்து, பரிசோதனையின் முடிவுகளை ஆய்ந்து, தரவுகளின் விளக்கமளித்து, அதனடிப்படையில் ஒரு முடிவை எத்தியபின், இவ்விபரங்களோடு தன் கண்டுபிடிப்புகளைப் பகிர்தல் என்ற வரிசைக்கிரமப்படி உலகில் முதன்முதல் செயலாற்றியவர் இவரே.
அருமையான பதிவு
அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோஸ்,
சகோ. ஹுசைனம்மா நீங்க இப்படியும் எழுதுவீங்களா ..!!!
உங்க எழுத்தில் நக்கல், நையாண்டி, துள்ளல் etc ...ஆகியவைகளை எதிர்பார்க்கும் உங்கள் விசிறி (!!??)
அறிந்திராத வரலாறு,நல்ல தகவல்கள்..பகிர்ந்தமைக்கு நன்றி
எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
OH! Tamilmanam Star-ah, ippa thaan kavinichen
Vaazhtugal Husainamma :)
மன்னிக்க. வீட்டில் இப்பதிவு சரியா தெரியுது
இந்த வாரம் முழுக்க அசத்துறீங்க. தமிழ் மணம் வாரா வாரம் டாப் பதிவர்கள் லிஸ்ட் வெளி இடுவதை அறிவீர்கள் அல்லவா? இந்த வாரம் முதல் பத்துக்குள் நிச்சயம் வருவீர்கள். தொடர்ந்து எழுதினால் இது உங்கள் இடம் என அறிய ஒரு வாய்ப்பு என நினைக்கிறேன்
ஆஷிக் அஹமது - வ அலைக்கும் ஸலாம்.
உங்கள் பதிவை இப்போதுதான் நிதானமாக வாசித்துப் பார்த்தேன். தெளிவாக, விளக்கமாக எழுதிருக்கீங்க.
சிந்தனை -ஸலாம்.
//இப்படி ஒரு பதிவ எழுத உங்களால் கூட எழுத முடியும் என்று //
ஏன், நம்பமுடியலையா? :-)))))
நன்றிங்க, விரிவான கருத்துக்கு.
சுவனப்பிரியன் - நன்றிங்க.
ஷஃபி - வ அலைக்கும் ஸலாம். நன்றிங்க.
ஜமால் - நன்றிங்க.
ஃபெரோஸ் - வ அலைக்கும் ஸலாம். நன்றிங்க.
ரிப்னாஸ் - நன்றிங்க.
விஜயன் - //இது போன்ற நபர்களை பற்றிய விவரங்கள் அதிகம் அறியப்படாமல் இருப்பதன் காரணம் என்ன??//
வேறென்ன, வரலாறுகள் எப்பவுமே முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. மேலும், நம்முடைய மேற்கத்திய மோகம்னு சொல்லலாம்.
அப்பாவி தங்க்ஸ் - ஆமாங்க, தொழில்நுட்ப விவரங்களை முதல் முறை படிக்கும்போது முழுசும் புரியமாட்டேங்குது. அதுவும், தமிழில் - ரொம்பவே கஷ்டமாத்தான் இருக்கு.
Anyway, grasp பண்னமுடியலன்னு நீங்க சொல்றதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்கு. நான் எனக்குத்தான் வயசாகிவிட்டதால் புரியலையோன்னு நினைச்சேன்... :-)))))
பீர் - நக்கல்ஸ்.. ம்ம்!! இந்த ஒரு பதிவை எழுதுறதுக்குள்ளயே... இருந்தாலும், இன்ஷா அல்லாஹ்.. என்றாவது ஒரு நாள்...
அப்பாத்துரை - அவர் சிறைப்பட்டது, மனநோயாளியா நடிச்சது இதெல்லாம்தான் படிச்சேன். ஆனா, அவரின் மறைவு பற்றி எங்கேயும் காணோம். வலைத்தள முகவரி (இருந்தால்) கொடுங்களேன். நன்றிஙக்.
ஸ்ரீராம் சார் - எனக்கும் அவருடைய மற்ற ஆராய்ச்சிகளைவிட “ப்ரிசோதனை முறை”க்கு முன்னோடி என்பதுதான் ஆச்சர்யத் தகவலாயிருந்துது!!
ஒரு உதாரணம் சொல்லணும்னா, கலிலியோவின் “பல்வேறு எடை கொண்ட பொருட்களைக் கீழே போட்டால், கனமானவைதான் மேலிருந்து கீழே முதலில் சென்றடையும்” என்கிற கோட்பாட்டை முதலில் அரிஸ்டாட்டில்தான் சொன்னார். ஆனால், அவர் பரிசோதனைகளால் நிரூபிக்கவில்லை. கலிலியோ நிரூபித்தார். அதனால், கலிலியோ கண்டுபிடித்ததாக ஆனது!!
வல்லிமா - நன்றிமா.
அமைதிக்கா - நன்றிக்கா.
ரூமில் - //கிழக்குலகம் அறிவியலில் கோலோச்சியகாலம் அது. பண்பாடுகளையும் கலைகளையும் அறிவியலையும் மேற்குலகம் பின்னாட்களில் கிளைதேசங்களில் சூறையாடி அறிவு பொக்கிஷங்களின் உரிமையாளர்களாக மாறினார்கள் //
ஆமாம். இன்று மேற்குலகம் சொந்தம் கொண்டாடும் பல கண்டுபிடிப்புகளுக்கு ஆசிய-ஆப்பிரிக்க அறிஞர்களின் உழைப்புதான் ஆதாரம் என்பதையே மறைத்துவிட்டார்கள்.
ஸாதிகாக்கா - நன்றிக்கா.
உண்மைகள் - நன்றிங்க.
ராம்விக்கா - நன்றிக்கா.
மனோக்கா - நன்றிக்கா.
நிஜாம் - நன்றிங்க.
துளசி டீச்சர் - பதிவுக்காக உழைப்பதில் உங்களை மாதிரி ஆட்கள்தான் உதாரணம் எங்களுக்கு. நன்றி டீச்சர்.
புதுகைத் தென்றல் - ஆமாங்க, இன்னொருக்கா வாசிச்சாத்தான் சில டெக்னிக்கல் மேட்டர்கள் மனசுல பதியுது. பொறுமையா படிங்க.
இஸ்மத் பாய் - நன்றிங்க.
சுல்தான் பாய் - நன்றிங்க.
ரிஷபன் - ஆமாங்க, ஒரு முறையான செயல்முறையை இவர்தான் கொண்டுவந்தார்.
நாஸர் - //நீங்க இப்படியும் எழுதுவீங்களா ..!!!//
அவ்வ்வ்வ்வ்.... என்னதிது, வடிவேலு ஆக்ஷன் ஹீரோ ரோல்ல நடிச்ச மாதிரி கேக்குறீங்க!! :-)))))
திருவாளப்புதூர் முஸ்லிம் - நன்றிங்க.
மோகன்குமார் - டாப் 10 லிஸ்டில் வர வாழ்த்தியதற்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
.
.
CLICK >>>>
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!
.
.
.
.
CLICK >>>>>
காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.
தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு? காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்... <<<<<<< TO READ
.
.
Post a Comment