விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்: ரெண்டு நாள் முன்னாடி ஷார்ஜாவிலருந்து லக்னோ போன ஏர் இந்தியா விமானத்தின் பைலட்கள் ரெண்டு பேரும் காக்பிட்டை விட்டு வெளியே வந்து சண்டை போட்டு காயம்படுமளவு கைகலப்பு ஆகியிருக்கு!!
இப்படியும் நடக்குமா என்று ஆச்சர்யமாயிருக்கு!! அதைவிட அதிர்ச்சி அதிகமாயிருக்கு!! என்ன சண்டை, எதனால சண்டை எதுவும் தெரியல. மலையாள நியூஸ் சேனல்கள் இதை எப்படி ஆராயாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. கேரளா சம்பந்தப்பட்டது இல்லை என்பதால் இருக்கும்.
என்னதான் ஆட்டோ பைலட் சிஸ்டம் இருக்கிறது என்றாலும், இப்படி இருவரும் ஒரே நேரத்தில் காக்பிட்டை விட்டு வெளியே வரலாமா? வந்த நேரத்தில எதாவது டர்புலன்ஸ் வரக்கூடிய மேகங்கள் அல்லது வேற பிரச்னைகள் வந்திருந்தா? அதெல்லாம் விடுங்க. ஒரு உயர்பதவியில இருக்க ரெண்டு பேர் அடிச்சுக்கறது எவ்வளவு ஒரு கேவலமான விஷயம்? அரசியல்வியாதிகளோ, அரசு அதிகாரிகளோ அடிச்சுகிட்டா அது நியூஸே இல்ல. ஆனா பயணிகள் விமானத்தின் பைலட்கள், அதுவும் விமானம் அந்தரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, பயணிகள் முன்னாடி?? வெறும் கருத்து வேறுபாடு, வாய்ச்சண்டை என்றால் கூட சரி, கொஞ்ச நேரத்தில சமாதானமாகிடுவாங்கன்னு இருக்கலாம். கைகலப்பு அளவுக்குப் போயிருக்கிறது!!
என் முந்தைய அலுவலகத்தில் ஒரு இளைஞன் என்னோடு வேலை பார்த்தான். உண்மையில் அவனுக்கு அந்த வேலையில் கிஞ்சிற்றும் விருப்பமில்லை. அவனுக்கு பைலட் ஆவதில்தான் விருப்பம். ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே, அதற்காக இந்த வேலையில் இருந்தான். இருந்தான் என்பதுதான் சரி!! நான், அவன், இன்னொரு பெண் மூவருக்கும் ஒரு அறை. ஒரு பதினைந்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல் அவன் இருக்கையில் இருக்க மாட்டான். எங்காவது சுற்றிக் கொண்டேயிருப்பான். இருக்கையில் இருக்கும் நேரமும் யூ ட்யூபில் ஹாஸ்யப் படங்களைப் போட்டுப் பார்த்து ஹோ ஹோவெனச் சிரித்துக் கொண்டிருப்பான். அவனிடம் ஒரு நாள் சொன்னேன், "நீ பைலட்டாக வேலைக்குச் சேரும்பொழுது நிச்சயம் என்னிடம் தெரிவிக்க வேண்டும்". மகிழ்ச்சியுடன் "நிச்சயம் சொல்கிறேன். ஏன் கேட்கிறாய்?" என்றவனிடம் சொன்னேன், "நீ இங்கே போரடிக்கிறது என்று அடிக்கடி எழுந்து வெளியே போய்விடுகிறாய், பரவாயில்லை. அதுபோல ப்ளேன் ஓட்டிக்கொண்டிருக்கும்போதும் அப்படி போய்விட்டால்? அதனால்தான், நீ எங்கே வேலை செய்கிறாய் என்று தெரிந்தால் அந்த ஏர்லைன்ஸில் போக மாட்டேன், அதற்குத்தான்."
அவன் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவன். அதனால் அந்த வாய்ப்பு வராது என்று நம்புகிறேன்.
இப்பத்திய ஏர் இந்தியா கேஸுல, சண்டை வரும்போது ப்ளேன் பாகிஸ்தான் மேல பறந்துகிட்டிருந்துதாம், அதனாலயா இருக்குமோ?
|
Tweet | |||
12 comments:
ரொம்ப கொடுமைங்க
வருகைக்கு நன்றி பேனாமுனை!!
//ரொம்ப கொடுமைங்க//
எது, நான் எழுதியிருக்கும் விஷயமா, விதமா?
நான் இதுவரை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செஞ்சது இல்லைங்க. நீங்க ஃப்ரியா டிக்கட் தந்தாலும் சரி, போகமாட்டேனே!!
//இப்பத்திய ஏர் இந்தியா கேஸுல, சண்டை வரும்போது ப்ளேன் பாகிஸ்தான் மேல பறந்துகிட்டிருந்துதாம், அதனாலயா இருக்குமோ? //
அப்போ அண்டைய நாட்டு சதி இருக்குன்னு சொல்லுங்க.
//நீ எங்கே வேலை செய்கிறாய் என்று தெரிந்தால் அந்த ஏர்லைன்ஸில் போக மாட்டேன், அதற்குத்தான்."//
அவரு காக்பிட்டிலிருந்து வெளியில் வந்தால், விமானத்திலிருந்து வெளியே போய்டுவேன்னு சொல்லாம இருந்திங்களே.
"நீ இங்கே போரடிக்கிறது என்று அடிக்கடி எழுந்து வெளியே போய்விடுகிறாய், பரவாயில்லை. அதுபோல ப்ளேன் ஓட்டிக்கொண்டிருக்கும்போதும் அப்படி போய்விட்டால்?
ஹா ஹா நல்ல கேட்டீங்க லேஒரு கேள்வி,,
நலமா மிஸஸ் ஹுசைன்
வாங்க ஷஃபி.
//அண்டைய நாட்டு சதி//
ஆமாம், பின்னே, இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பாகிஸ்தானின் சதி இருக்கத்தான் செய்கிறது இல்லையா? ;-D
ஜல் ஜல் ஜலீலாக்கா, நலமா? நம்ம பிளாக் பக்கம் நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்!!
super!!
ஹலோ சுவை,
நன்றி!
இந்திய விமான நிறுவனத்தில் மட்டுமே நடக்கிறவிசயம் இது. எதிலும்..எங்கும் ஒழுங்கீனம், அசால்ட்னஸ்( இதுக்கு தமிழ்ல வார்த்தை தெரியலங்க மன்னிக்கவும்).
நாஞ்சில் பிரதாப் Says:
இந்திய விமான நிறுவனத்தில் மட்டுமே நடக்கிறவிசயம் இது. //
இப்ப அயல்நாட்டு விமானிகளும் நம்மள மிஞ்சப் போறாங்க போல. வர்ற செய்திகளைப் பாத்தா அப்படித்தான் இருக்கு.
அன்பின் ஹூஸைனம்மா
பரவா இல்லியே
செய்திகளை வச்சி இடுகை தயாராயிடுதே
நல்வாழ்த்துகள்
Post a Comment