Pages

இரண்டுமே மகன்களாக இருப்பதன் நன்மையும், தீமையும்




சின்னவனுக்கும், பெரியவனுக்கும் நேற்று மாலை சண்டை வழக்கம்போல!! பஞ்சாயத்து வைத்ததில் சின்னவன் அடித்ததாகப் பெரியவன் சொன்னான். ஏண்டா என்றதற்கு பெரியவன் அவனை “இடியட், ஸ்டுப்பிட், குரங்கு” என்று திட்டியதாகச் சின்னவன் சொன்னான். நான் சின்னவனை உற்றுப் பார்த்தேன்; என் பார்வையின் அர்த்தம் புரிந்து அவன் தலைகுனிந்து சிரித்தான். என்னடா சிரிச்சானான்னு யோசிக்காதீங்க. கொஞ்சம் முன்னாடிதான் என்கிட்ட வகுப்பில நடந்த கதையைச் சொன்னான். அவன் கிளாஸ்மேட் நசீமா அவனிடம் “Look up, Look down, Look left, Look right; Then scratch your head “ ன்னு சொன்னாளாம். இவன் செய்தவுடன் இவனை “ Hey, you are a monkey“ ன்னு சொல்லி சிரிச்சாளாம். அவனும் கூட சேந்து சிரிச்சுட்டு வந்திருக்கான். நான் கேட்டேன், “ஏம்லே, உன் ஃபிரண்ட் சொன்னா சிரிக்கிற; அண்ணன் சொன்னாஅடிக்கிற?”ன்னு கேட்டேன். அவன் அண்ணனுக்கு அதுதான் ரொம்ப கோவம். “ஒரு பொண்ணு குரங்குன்னு சொன்னா கேட்டுட்டு இளிச்சுட்டு வந்திருக்கான். இங்க நான் சொன்னவுடனே கோவம் வருது”ன்னு புலம்பிட்டு இருந்தான். சரி விடுடா, அவன் அப்பாவை மாதிரின்னு சமாதானம் பண்ணேன். வேற என்ன செய்ய?

**********************

நேற்று இரவு அலாரம் வைக்க மொபைலைத் தேடினால் எப்பவும் வைக்கும் இடத்தில் காணோம்!! நான் வைத்திருப்பதோ ஒரு டப்பா மொபைல் (என் பசங்க அப்படித்தான் சொல்வாங்க). அதிக விலை கொடுத்து வாங்கினால், அதைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டுமே; அதோடு பசங்ககிட்ட இருந்து காப்பாத்த‌ணுமே? பசங்களும் எப்பப் பாத்தாலும் மொபைலே கதின்னு இருக்காங்க.

வீட்டுக்கு யாராவது வந்தாலும் கூட அவங்க கார் மற்றும் மொபைல் பற்றிய விபரம் கேட்டுவிட்டுத்தான் அவர்களைப் பற்றி விசாரிக்கிறார்கள். அபுதாபியில் ப‌ல வருடங்கள் இருந்துவிட்டு தோஹா சென்ற ஒரு குடும்பம் வீட்டுக்கு வருவதாக இருந்தது. பிள்ளைகளிடம் சொன்னபோது சின்னவன் கேட்டான், "நிஸ்ஸான் பாத்ஃபைண்டர் வச்சிருந்தாங்களே அந்த மாமாவா?". மனிதர்களை அவர்களிடம் உள்ள கார்களையும், மொபைல்களையும் கொண்டு அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் பிள்ளைகள். ஆண் பிள்ளைகளின் இயல்பாகிவிட்டது இது. பெரிய ஆண்களைப் போலவே, நண்பர்களைச் சந்தித்தாலும் இவை குறித்தே பேச்சு இருக்கிறது.

நான் சிம்பிளான மொபைல் வாங்கியதன் முக்கிய காரணம் பசங்க எப்பவும் மொபைலை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பதால்தான். பெரியவன் என் மொபைலைத் திரும்பியிம் பார்ப்பதில்லை; சின்னவன், அப்பாவின் மொபைல் கிடைக்காத சமயங்களில் என் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான். கேம்ஸ், கேமரா கிடையாது என்பதால் ப்ரொஃபைல் மாற்றுவது, ரிங் டோன் மாற்றுவது, கண்ட நேரங்களில் அலாரம் வைப்பது, அதுவும் போலீஸ் சைரன் சவுண்டில் வைப்பது!!, ஃபோன்புக்கில் பெயர் மாற்றுவது என்று அக்கிரமங்கள் செய்வான். அதனால் அவன் கைக்கு எட்டாதபடிதான் வைத்திருப்பேன். ஆனாலும் எப்படியாவது கையில் கிடைத்துவிடும். ஒருமுறை ஆஃபிஸில் அடுத்த டேபிளில் பணிபுரிபவரின் மொபைல் ரொம்ப நேரம் அடித்துக் கொண்டிருந்தது. எரிச்சலுடன் அவரிடம் அந்த மொபைலை எடுத்துத்தான் பேசுங்களேன் என்றேன். அவர் அமைதியாக “அடிப்பது உங்கள் மொபைல்” என்றார். பயபுள்ள ரிங்டோன் மாத்தியிருக்கான்!!

இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாமென்று வைப்ரேஷனில் போட்டு வைப்பேன். என்ன செஞ்சானோ, இப்ப வைப்ரேஷன் வேலை செய்வதில்லை.

இப்ப என் கதைக்கு வருகிறேன். இவன் செய்யும் அலம்பல்களால் பலமுறை பட்டுவிட்டதால், இப்ப என்ன செஞ்சானோ என்ற கோபத்தில் ஹாலில் வந்து கத்தினேன் “எவண்டா என் மொபைலை எடுத்தது” என்று. ரெண்டு பேரும் பயமே இல்லாமல் வாயை மூடிக்கொண்டு சிரித்தார்கள். சிரிக்கும் தோரணையைப் பார்த்ததும் எனக்குப் பயம் வந்துவிட்டது. ஆஹா, மறுபடியுமா என்று நினைத்துக் கொண்டே ஏண்டா சிரிக்கிறீங்கன்னு கேட்டேன். பெரியவன் சொன்னான், “வாப்பாதான் ஃபோன் பேசணுன்னு உம்மொபைலை எடுத்தாங்க. அதுக்காக ஏம்மா வாப்பாவ இப்படி மரியாதையில்லாம அவன் இவன்னு சொல்ற?” நான் என்ன செய்யன்னு தெரியாம நாக்கைக் கடிச்சுட்டே அவரைப் பாத்தேன்; அவர் என்னடான்னா, எவ்வளவோ கேட்டுட்டோம்; இதையும் கேட்டுக்க மாட்டோமா அப்படிங்கற மாதிரி பேப்பர் படிச்சுட்டு உக்காந்திருந்தார். அப்படியே நைசா நழுவிட்டேன்.

ஒருவேளை இரண்டும் பையனா இல்லாம, ஒண்ணாவது பொண்ணா இருந்திருந்தா நான் “எவண்டா எடுத்தது”ன்னு கேக்காம, “யார் எடுத்தது”ன்னு கேட்டிருப்பேன் இல்லையா? ரெண்டுமே பையனா இருக்கறதுனாலத்தானே இப்படி கேக்கும்படி ஆயிருச்சு, இது தீமைதானே (அவருக்கு) ?

ஆனா ரெண்டுமே பையனா இருக்கறதுனாலத்தானே அந்த சாக்குலயாவது இப்படியெல்லாம் சொல்லிக்க முடியுது, அதனால இது நன்மையும்தானே (எனக்கு)?

Post Comment

17 comments:

பீர் | Peer said...

//“எவண்டா எடுத்தது”ன்னு கேக்காம, “யார் எடுத்தது”ன்னு கேட்டிருப்பேன் //

எனக்கு ஒரே ஒரு பையன்..(இப்பவரை) மீ த எஸ்கேப்பு..

(பசங்க பேரோட எழுதுங்க, வாசிக்க இன்னும் யதார்த்தமாயிருக்கும்)

SUFFIX said...

எங்க வீட்டுல முதல் ரெண்டுக்கும் (பையன்/பொண்ணு) அடுத்த ரெண்டுக்கும் (பையன்/பொண்ணு) தனித்தனியா ஃபைட்டு நடக்கும்!! இந்த நடுவர் பணி ரொம்ப கஷ்டமுங்க.

SUFFIX said...

//மனிதர்களை அவர்களிடம் உள்ள கார்களையும், மொபைல்களையும் கொண்டு அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் பிள்ளைகள்//

புதிய தலைமுறை, பிரமிக்க வைக்கிறது ஹூசைனம்மா, நம்மிடமிருந்தே கற்று நமக்கே சொல்லித்தருகிறார்கள் இந்தக்கால குழந்தைகள்!!

Jaleela Kamal said...

ஹா ஹா மேலே உள்ள கதை எல்லார் வீட்டிலும் நடப்பது தான்.

தீமை போட்டு அப்ப இப்படியாவது அவரை திட்டினோமேன்னு உங்களுக்கு ஒரு சந்தோஷம் இல்லையா ம்ம்ம்ம்

SUFFIX said...

//“அடிப்பது உங்கள் மொபைல்” என்றார். பயபுள்ள ரிங்டோன் மாத்தியிருக்கான்!!//

ஹா..ஹா!!

ஹுஸைனம்மா said...

//பீர் | Peer said...

எனக்கு ஒரே ஒரு பையன்..(இப்பவரை) மீ த எஸ்கேப்பு..

(பசங்க பேரோட எழுதுங்க, வாசிக்க இன்னும் யதார்த்தமாயிருக்கும்)//

வாங்க பீர். ஒரே பையன் இருந்தாலும் எஸ்கேப்பெல்லாம் இல்லை. இப்ப கன்ஃபர்மா "டேய்"ன்னா நீங்கதான்!!

பசங்க பேர் எழுதினா பெரியவன் யார், சின்னவன் யார் என்ற குழப்பம் இருக்குமேன்னுதான் எழுதலை. (இன்னும் சில நண்பர்கள் பேசும்போது குழப்புவார்கள்). இனி எழுதுறேன்.

ஹுஸைனம்மா said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

எங்க வீட்டுல முதல் ரெண்டுக்கும் (பையன்/பொண்ணு) அடுத்த ரெண்டுக்கும் (பையன்/பொண்ணு) தனித்தனியா ஃபைட்டு நடக்கும்!! இந்த நடுவர் பணி ரொம்ப கஷ்டமுங்க.//

வாங்க ஷஃபி. அப்ப ஒரே சமயத்துல ரெண்டு மேட்ச்சுக்கு ரெஃப்ரீயா இருப்பீங்களா? கண்டிப்ப உங்களுக்கு அவார்ட் கொடுக்கணும்!!

//புதிய தலைமுறை, பிரமிக்க வைக்கிறது //

ஆமாம், சில சம‌யம் நான் சொன்னது எனக்கே பௌன்ஸ் ஆகி வரும்!!

ஹுஸைனம்மா said...

//Jaleela said...

ஹா ஹா மேலே உள்ள கதை எல்லார் வீட்டிலும் நடப்பது தான்.
//

ஜலீலாக்கா,

நம் ரெண்டு பேரும் கதையும் ஒரே மாதிரிதான்னு சொல்லுங்க!!

அன்புடன் மலிக்கா said...

ஹ ஹ ஹ , இதெல்லாம் குடும்பத்தில சாதாரனமப்பா ரொம்ப சகஜமப்பா

பீர் | Peer said...

//இப்ப கன்ஃபர்மா "டேய்"ன்னா நீங்கதான்!!//

ஆஹா.. இதுக்காகவே ரீகன்ஸிடர் பண்ணணும் போலேயே..

ஸாதிகா said...

பிளாக் தொடங்கியதற்கு முதலில் என் வாழ்த்துக்களைப்பெற்றுக்கொள்ளுங்கள் ஹுசைனம்மா.இரண்டு மகன்களாக இருப்பதம் நன்மையும்,தீமையும் என்ற உங்கள் பதிவு, காட்சிகளை அப்படியே யதார்த்தமாக கண் முன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள்.எழுத்து திறமைக்கு சபாஷ்.தொடருங்கள்

Yousufa said...

ஸாதிகா அக்கா,

உங்களைத் திடீர்னு இங்கே பாத்ததிலே ஆச்சர்யமான சந்தோஷம்!! நன்றி அக்கா. ஆமாம், நானும் இப்ப ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன். உங்க ப்ளாக்கையும் இப்பதான் பாத்தேன். மகிழ்ச்சி!!

Yousufa said...

மலிக்கா,

ஆமாம், ரெண்டு பிள்ளைங்க இருக்க வீட்டில எல்லாம் நடக்கறதுதான். வருகைக்கு நன்றி!!

நாஸியா said...

இப்பத்தான் இத படிக்கிறேன்! சூப்பர்!! கலக்குறிங்க! :)

ஹுஸைனம்மா said...

நாஸியா,
நன்றி!!

cheena (சீனா) said...

ஆகா ஆகா எதையும் நன்மையாஅக் எடுத்துக்கரதுல நீங்க கெட்டிக்காரிதான் - அவரு பாவம் தேமேன்னு பேப்பர் படிச்சிட்டிருக்கார் - அவரப் போயி .....

நல்வாழ்த்துகள் ஹூஸைனம்மா

Anisha Yunus said...

அண்ணன் உண்மைலயே பேப்பர் படிச்சிட்டிருந்தாரா இல்ல, எங்கயாவது ஏதாவ்து பேசப்போயி இன்னும் சேர்த்து விழுந்துடுமோன்னு கவனிக்காத மாதிரி இருந்துட்டாரா தெரியலையே? ஹி ஹி :)