Pages

டிரங்குப் பொட்டி







தினமும் இல்லையென்றாலும் அவ்வப்போதாவது பதிவுகள் எழுதணும்னு நினைப்பேன். மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது அதை எழுதலாம், இதை எழுதலாம்னு நினச்சு வச்சுட்டு அப்புறமா நேரம் கிடைக்கும்போது கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்தா, எல்லாம் மறந்து, அப்ப‌டியே மைண்ட் ப்ளாங்க் ஆயிடுது. காலேஜ் படிக்கும்போது பரிட்சை ஹால்ல இப்படித்தான் ஆகும்!

சரி, அப்படியே மத்த பதிவர்கள் பக்கமெல்லாம் போயிட்டு வருவோம்னு ஒரு ரவுண்ட் அடிச்சா,(இது ”அந்த” ரவுண்ட் இல்லீங்கோ!!), மத்தவங்க எழுதியிருக்கதெல்லாம் பாத்தப்புறமும் நீயெல்லாம் கண்டிப்பா எழுதித்தான் ஆவணுமான்னு மனசாட்சி ஒரு கேள்வி கேட்கும்!! அதோட பதிவு போடாம போயிடுவேன். இப்படியே எத்தனை நாள் எழுதாம இருக்கிறதுன்னு யோசிச்சு, சரி, அதெல்லாம் வாசிக்கறவங்க கவலை, அவங்க தலையெழுத்து அப்படின்னா நாம என்ன பண்ண முடியும்னு அடிக்கடி எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன்!!


****************


எங்க ஆஃபிஸ் வேற இடத்துக்கு மாறப் போறோம்.  துபாய் தலைமை இடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம்தான். அபுதாபியில் இரண்டரை வருடங்கள் முன் கிளை ஆரம்பித்தார்கள். இந்த வருட ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 35 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா, இப்ப நாலே நாலுபேர் மட்டும் இருக்கிறோம். இப்ப இருக்கும் 6 தளங்கள் கொண்ட வில்லா (தனி வீடு) விலிருந்து மாறி, “Office space“க்கு மாறப் போவதால், இரண்டு பேரை  துபாய் ஆஃபிஸிற்கு போகச் சொல்லிவிட்டார்கள். நானும் இன்னொருவரும் மட்டும் இங்கு இருப்போம். “Office space“ என்பது ரெடிமேட் ஆஃபீஸ் போல!! ஒரு தளம் அல்லது ஒரு கட்டிடம் முழுவதும் ஒரு நிறுவனம் எடுத்து, அதில் ஃபோன், இண்டர்நெட், ரிஸப்ஷன், பிரிண்டர், ஸ்கேன்னர், ஸெராக்ஸ் மிஷினகள், டேபிள், சேர், ஏன் காஃபி, டீ போட ஆஃபிஸ்பாய் வரை எல்லா வசதிகளும் செய்து தந்துவிடுவார்கள். நாம் நமது கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான் பாக்கி!! சதுர அடி கணக்கில் வாடகை!! (அதுவே கொள்ளை விலையா இருக்கு!!)

துபாய் ஆஃபிஸ் போகச் சொன்ன ரெண்டு பேருக்கும் ரொம்ப வருத்தம். ஏன்னா துபாயிலும் வேலை இல்லை!! அங்கே இவங்க போஸ்ட்ல ஏற்கனவே ரெண்டு பேர் இருக்காங்க. இவங்கள சும்மா அங்க போய் இருக்கச் சொல்லியிருக்காங்க. எப்ப ஓலை வரும்னு தெரியாது. இங்க எங்க நிலைமையும் அப்படித்தான்.  இப்ப ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு ப்ராஜக்ட் மட்டும் நடந்துகிட்டு இருக்குது. அதுவும் டிசம்பர்ல ஹேண்ட் ஓவர். அதுக்கப்புறம் நானும் “புத்தம்புது ஓலை வரும்; இந்த பூவுக்கொரு சேதி வரும்”னு பாடிகிட்டு இருக்க வேண்டியதுதான்!! பாப்போம்!!


*************


கோவாவுல நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம், முன்பு மஹாராஷ்டிராவில் மலேகான் குண்டுவெடிப்பு நடத்திய பெண் சாமியாரின் அதே அமைப்புதானாம்.  குறித்த நேரத்துக்கு முன்பே வெடித்ததில் இந்த முறையும் ப்ளான் ஃபெயிலியர்!! இந்த ”இந்து” தீவிரவாதிகளுக்கு அனுபவம் குறைவு என்பதாலா இல்லை சாமர்த்தியம் போதாதா?! (இந்த அல் காயிதா, தாலிபான்கிட்ட டிரெய்னிங் கேட்டுப் பாக்கலாமே??) பத்திரிக்கைகள வழக்கம்போல இதைக் கண்டுகொள்ளவில்லை,  அதற்கு இது ஒன்றும்  “இஸ்லாமிய” தீவிரவாதிகள் செய்தது இல்லையே??


***********************


காலை நேரம் 6.30 மணிக்கு சின்னவனைப் பள்ளிக்குத் தயார் செய்யும் நேரம் மெகா டிவியில் அமுதகானம் என்ற பெயரில் பழைய தமிழ் பாடல்கள் ஒளிபரப்பப்படும். அந்நேரத்து டென்ஷனை மட்டுப்படுத்த நல்ல வழி.  என்ன ஒரு கஷ்டம், சின்னவனுக்குப் பிடிக்கிற மாதிரி பாட்டாக இருக்கணும். பாட்டைக் குறித்து  மகன் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதும் ஒரு சவால்தான். ஒரு நாள்  “பாலூட்டி வளர்த்த கிளி”  பாட்டில்  “சட்டமும் நான் உரைத்தேன்; தைரியம் நான் கொடுத்தேன்; பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்லப் பாக்குதடி” என்ற வரிகளில் “சட்டம்” என்பதன் அர்த்தம் கேட்டான். ஒருமாதிரி விளக்கினேன். “சரி, அதுக்கு ஏன் பட்டம் (Kite) வாங்கிட்டு வந்தாங்களாம்??”

இப்பவெல்லாம் பாடல்களின் மெயின் ஆக்டரைவிட, உடன் இருக்கும் துணை நடிகர்களின் நடிப்புதான் அதிகம் கவருகிறது. இந்தப் பாட்டில் சிவாஜியின் மனைவியாக வருபவர் (பண்டரிபாய்??) விதவிதமாக அழுவதையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னே என்னங்க, 5 நிமிஷமா, ஒரு வார்த்தைகூடப் பேசாம, அழ மட்டுமே செய்யணும்னா எவ்வளவு கஷ்டம்??


**********************


பெரிய மகன் பெயர் அகீல் ஹுஸைன் (Aqeel). அதனால்தான், நான் “ஹுஸைனம்மா” என்பது தெரியும். சின்னவன் பெயர் முஹம்மது ஆகிப் (Aaqib). அவங்க அப்பாவும்  ஹுஸைன்தான். இப்பவெல்லாம் நான் ஹுசைனம்மா என்ற பெயரில் பிளாக் எழுதுவதையும், மெயில் செக் பண்ணுவதையும் பார்த்துவிட்டு “ஏன் நீ முஹம்மதம்மான்னு பேர் வச்சுக்காம, ஹுஸைனம்மான்னு வச்சுருக்க”ன்னு  கேட்டுகிட்டேயிருக்கான். என்னத்த சொல்ல? அதுக்குத்தான் அவனுக்கும் ஹுஸைன் வர்ற மாதிரி பேர் வைக்கலாம்னு அப்பவே சொன்னேன். .  “நீ அகீல் ஹுஸைனைத் திட்டுற மாதிரி ஜாடையா என்னைத் திட்டுறது போதும்.  இனியும் என்னால பொறுக்க முடியாது”ன்னு பழி வாங்கும்விதமா என் பெயரில் வரும் ”முஹம்மது”வைச் சேர்த்துட்டார். 

“உன் பேரும் என் பேரும் ஒண்ணுதான்; அதனால உன் அம்மாதான் நான்னு எல்லாருக்கும் தெரியும். அதனால ”முஹம்மதம்மா”ன்னு வைக்கல”ன்னு சொல்லி சமாளிச்சுருக்கேன் இப்போதைக்கு!!


*************

அந்தப் பெயர்க்காரணம் இருக்கட்டும், யாராவது இந்தப் பதிவுக்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சீங்களா? அதாங்க, எல்லாரும் கதம்பம், மிக்ஸ் மசாலா, ஜிகர்தண்டா, ரெயின்போ அப்படின்னெல்லாம் பேர் வைக்கிறாங்களே, அதே மாதிரி நாமளும் வித்தியாசமா பேர் வைப்போம்னு மூளையக் குடைஞ்சதில கண்டுபிடிச்சதுதான் இந்த “டிரங்குப் பொட்டி” !! நாம சின்னப் புள்ளைங்களா இருந்தப்போ (இப்பவும் யூத்துதான்!!)  எல்லார் வீட்டிலயும் ஒரு டிரங்குப் பொட்டி கண்டிப்பா இருந்திருக்கும். அதுல அப்பாவோட கணக்குப் பொஸ்தகம், அம்மாவோட சிறுவாடு காசு, நம்மளோட விலைமதிப்பில்லாத “சாவி கொடுத்தா கொட்டடிக்கிற குரங்கு பொம்மை”, கொய்த் தஸ்பீஹ் (குவைத், அரபு நாடுகள்ல எங்கே போனாலும், அது எங்க ஊர்ல குவைத்தான்!!) இப்படிப் பலதும் கிடக்கும். அதேதான் இது!!



Post Comment

15 comments:

பீர் | Peer said...

அசத்துறீங்க... ஹூசைனம்மா. வார்த்தைகள் சர சரன்னு ஓடுது..

அகீல்,ஆகிப் சகோதரர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்க...

தீவிரவாதம் பற்றிய எனது பதிவை நேரமிருந்தால் வாசிக்கவும்.

இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்

Yousufa said...

வாங்க‌ பீர். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்களின் அந்த பதிவு நான் ஏற்கனவே வாசித்ததுதான். உண்மைத் தமிழனுக்கு உண்மையை உரைத்தீர்களே, அதிலிருந்துதான் உங்கள் வலைப்பூ அறிமுகமானது எனக்கு.

நாஸியா said...

\\கோவாவுல நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம், முன்பு மஹாராஷ்டிராவில் மலேகான் குண்டுவெடிப்பு நடத்திய பெண் சாமியாரின் அதே அமைப்புதானாம். குறித்த நேரத்துக்கு முன்பே வெடித்ததில் இந்த முறையும் ப்ளான் ஃபெயிலியர்!! இந்த ”இந்து” தீவிரவாதிகளுக்கு அனுபவம் குறைவு என்பதாலா இல்லை சாமர்த்தியம் போதாதா?! (இந்த அல் காயிதா, தாலிபான்கிட்ட டிரெய்னிங் கேட்டுப் பாக்கலாமே??) பத்திரிக்கைகள வழக்கம்போல இதைக் கண்டுகொள்ளவில்லை, அதற்கு இது ஒன்றும் “இஸ்லாமிய” தீவிரவாதிகள் செய்தது இல்லையே??\\

நெத்தியடி.. :)

கலக்குறிங்க.. ரொம்ப நல்ல இருக்கு ட்ரங்கு பெட்டி

நாஸியா said...

நீங்க வொர்க் பண்றிங்களா? உங்க கிட்ட work life balance பத்தி கேக்கணும்...

Yousufa said...

நாஸியா,

பாராட்டுக்கு நன்றி!!

"work life balance" பத்தி என்கிட்ட கேக்கணுமா??!! வாங்க பேசலாம். (பெரிய ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை, வீட்டுக்காரரையும், பிள்ளைங்களையும் நல்லா வேலை வாங்கத் தெரிஞ்சுருக்கணும் அவ்வளவுதான்!! என் கணவர் எனக்கு வைத்திருக்கும் பெயர் "சூப்பர்வைசர்")

நாஸியா said...

ஐ! சூபெர்வைசர் வேலை சூப்பர் ஐடியா! இன்ஷா அல்லாஹ் உங்க டிப்ஸ் எல்லாம் அப்பப்ப சொல்லுங்க! உபயோகமா இருக்கும்

அன்புடன் மலிக்கா said...

சூப்பர்வைசரம்மா, சூப்பர்தான் போங்க, இன்னும் அசத்துங்க.

எசப்பாட்டுபாட எங்கப்பக்கமும் வாங்க

Yousufa said...

நாஸியா,

டிப்ஸ் என்ன, டிரெய்னிங்கே வேணும்னாலும் தர்றேன், ஃபீஸ் தருவீங்கன்னா!!

மலிக்கா,

நன்றி வருகைக்கு!! எனக்குத் தெரிஞ்ச பாட்டு பாடினாத்தானே எசப்பாட்டு பாடமுடியும். அப்புறம் நான் பாடுறது எதிர்ப்பாட்டு ஆகிடுமே!!

அதாவது, எனக்கு சமையல், கைவேலைப்பாடு இதெல்லாம் ரொம்ப தூரம்!! எனக்கே வெறும் வாய்ப்பந்தல்லதான் காலம் ஓடுது. ரெஃபரன்ஸுக்காக உங்களப் போல ஜாம்பவான்கள் பக்கம் அடிக்கடி வர்றதுண்டு.

பீர் | Peer said...

//வீட்டுக்காரரையும், பிள்ளைங்களையும் நல்லா வேலை வாங்கத் தெரிஞ்சுருக்கணும்//

என் மனைவி வேலைக்கு செல்வதில்லை, பதிவுகள் படிப்பதில்லை என்றாலும், என் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

(ஒரு வேளை இந்த பதிவை என் மனைவி பார்த்துட்டா.. அவ்வ்வ்)

SUFFIX said...

டிரங்குப் பெட்டி, சொன்னவுடன் தான் எனக்கு ஞாபகம் வருது, கலர் கலரா பெயின்ட் அடிச்சு இருக்கும், நான் சின்னவனா இருந்தப்போ அது மேல ஏறி குதிச்சு அதை ஒரு வழியா நசுக்கி வாங்கியும் கட்டியாச்சு. டிரங்குப் பெட்டி தொடருட்டும்!!

riyas said...

ஹோய் என்னபாபண்ணுறீங்க? நான் ரியாஸ். என் ஊரு கீழக்கரை. நம்பலன்ன இங்கவந்து பாருங்க www.riyaskon.co.cc

ஹுஸைனம்மா said...

//பீர் | Peer Says:
22/10/09 19:43

//வீட்டுக்காரரையும், பிள்ளைங்களையும் நல்லா வேலை வாங்கத் தெரிஞ்சுருக்கணும்//

என் மனைவி வேலைக்கு செல்வதில்லை, பதிவுகள் படிப்பதில்லை என்றாலும், என் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். //

கண்டனங்கள் நோட் செய்து கொள்ளப்பட்டன!!

ஹுஸைனம்மா said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix Says:
24/10/09 11:36

டிரங்குப் பெட்டி தொடருட்டும்!!//

நன்றி ஷஃபிக்ஸ்!!

ஹுஸைனம்மா said...

//riyas Says:
24/10/09 12:26

ஹோய் என்னபாபண்ணுறீங்க? நான் ரியாஸ். என் ஊரு கீழக்கரை. நம்பலன்ன இங்கவந்து பாருங்க www.riyaskon.co.cc//

நிச்சயம் வர்றேன்!! நன்றி!

cheena (சீனா) said...

ஹா ஹா ஹா ஹா மொத மொத நான் இங்க வந்தப்ப ( இன்னிக்குத்தான் ) உங்க பேரப் பாத்துட்டூ அதென்ன ஹூஸைனம்மா ன்னு யோசிச்சேன் - அப்புறம் ஒரு இடுகலே உங்அக் மூத்த பய பேருன்னு சொன்னீங்களா - சரின்னு இருந்துட்டேன்= இப்பத் தெளிவாப் ப்ரிஞ்சுது - ஊட்டுக்காரர ரெண்டு பயலுகளுக்கும் தன் பேரய வச்சிட்டாருக்கும்

ஓலை வராது - கவலை வேண்டாம் - எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக்கொள்வான் .

திரு ஹூஸைன் முகமது - திருமது ஹூஸைமுகமது - ஹூஸைன் - முகம்மது அனைவருக்கும் நல்வாழ்த்துகள்