முன்பெல்லாம் இம்மாதிரி சமயங்களில் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும். புது ஆட்சியாளர் வந்த பிறகு, அதற்கெல்லாம் தடா. அதிகப்படியா அளிக்கப்பட்டு வந்த நிறைய விடுமுறைகள் இப்ப கேன்ஸலாயிடுச்சு. அரசு அலுவலகங்களின் வேலை நேரமும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. நம்மூர் மாதிரி இங்கயும் அரசு வேலைன்னா தனி மரியாதைதான். இப்ப விடுமுறைகளை, தனியாருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி ஆக்கணும்கிற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!!!!!
இன்னொரு சோக நிகழ்வு, இங்கே அமீரகத்தில ஒரு வீட்டில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்காங்க; அடித்த நிறுவனத்தின் அறிவுரைப்படி, வீட்டினர் இரண்டு, மூன்று நாட்கள் வீட்டில் தங்கக்கூடாதுன்றதால (அந்த அளவுக்கு வீரியம் மிக்கது மருந்து!!) வெளியே போய் தங்கிருக்காங்க. ஆனா, அதுக்கு பக்கத்து ஃப்ளாட்டில் இருந்த குடும்பத்தின் மூன்று 5-மாத குழந்தைகளில் (Triplets) இரண்டு இறந்துவிட்டன!! ஒரு குழந்தை மருத்துவமனையில்!! சுவரின் வழியே மருந்தின் தாக்கம் ஊடுருவியதில, சுவாசக் கோளாறால் இறந்திருக்கின்றன!! கொழு கொழுவென இருக்கும் குழந்தைகளின் அழகிய படங்கள் பார்த்து மனம் ஆறவில்லை!!
இதுபோல் நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு, தொழிலாளர்களின் குடியிருப்புகளில் ஏற்கனவே நடந்திருக்கின்றன; ஆனாலும் அதுகுறித்த விவரம் மருந்து அடித்த நிறுவனத்தினருக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!!!!!
நித்தியரஞ்சி வீடியோக்கள் சன் நியூஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த சமயம், என் வீட்டில் சன் இல்லாததால், கவலையில்லாமல் இருந்தேன். இருந்தாலும், என் வீட்டில் தெரியும் ஏஷியாநெட், கைரளி சேனல்களில் மறுஒளிபரப்பு செய்துவிடக்கூடாதே என்று ஒரு நெருடல்; பிள்ளைகள் சில சமயம் தனியே இருந்து டிவி பார்ப்பதுண்டு. என் கவலைக்கு மருந்தாக, அன்று அடித்த காற்றில் டிஷ் என்னவோ ஆனதில், டிடி தவிர எந்த சேனல்களும் தெரியவில்லை. அதே நிலைமை இன்னும் தொடர்கிறது. எண்பதுகளில் இருப்பது போல ஒரு ஃபீலிங் இருந்தாலும், சில அவசியமான, தரமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. ஹாக்கி உலகக் கோப்பை தொடர் முழுதும் பார்த்தார்கள்.
என்னென்ன சேனல்கள் தெரிகின்றன என் பெரிய மகனிடம் கேட்டதற்குச் சொன்னான்: ”பொதிகை, டிடி மலையாளம், டிடி நேஷனல், டிடி ஸ்போர்ட்ஸ், டிடி ஃபைட்”
“என்னது, ஃபைட் சேனலா, புதுசா இருக்கு? என்ன தெரியுது அதில?”
“பார்லிமெண்ட்ல சண்டை போடுவாங்கள்ல அதை லைவ்வா காட்டுவாங்க, அதான், ”டிடி ராஜ்யசபா” சேனல்!!”
அவ்வ்வ்வ்வ்வ்....
!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!!!!!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் மாதிரி, அல்லது, “ஒரு குடும்பம், ஒரு குழந்தை’ மாதிரி, இப்ப ”ஒரு வீடு, ஒரு பதிவர்” கான்செப்டும் பிரபலமாகிட்டு வருது!! (எங்கேன்னு கேக்கக்கூடாது). எங்க வீட்டு ரங்ஸும் பதிவெழுத வந்தா என்ன ஆகும்? ஏதோ தமிழ் வாசிக்க மட்டும் தெரியும்கிறதால, நான் எழுதுறதை வாசிச்சி, சிரிச்சுட்டும், சில சமயம் விதியை நொந்துகிட்டும் அமைதியாப் போயிடறார். அப்படியே பிளாக் எழுத ஆரம்பிச்சாலும், மலையாளத்துல அல்லது ஆங்கிலத்துலதான் எழுதுவார்ங்கிறதால, தமிழ்நாட்டில என் இமேஜுக்கு எந்தப் பாதிப்பும் வராது!!
கல்யாணம் ஆன புதுசுல, அவர் தமிழ்ல எனக்கு எழுதின கடிதங்களைப் பார்த்து, சீத்தலைச் சாத்தனார் மாதிரி, தலையில அடிச்சுகிட்டு, தயவுசெய்து ஆங்கிலத்திலயே எழுதுங்கன்னு நான் ரொம்ப கெஞ்சிக் கேட்டுகிட்டதனால தமிழோடு நானும் பிழைத்துக் கொண்டேன்!!
ஓகே, கமிங் பேக் டு த பாயிண்ட், இப்ப பெரும்பாலான ஆண் பதிவர்கள், தங்ஸ்களைப் பதிவுகளில் வாரி எழுதுவதன்மூலம் தங்கள் ஆற்றாமைகளைத் தீர்த்துக் கொ’ல்’வதற்கு, அவர்களின் தங்ஸ்கள் பிளாக்/இணையம் பக்கம் வரமாட்டார்கள் என்ற தைரியம்தானே முக்கியக் காரணி. அவர்களும் பிளாக் எழுதுவார்களேயானால் இவர்கள் வேறு எங்குதான் போவார்கள் இல்லையா? அதுமட்டுமல்ல, பின்னூட்டம் இடுபவர்களுக்கும் எவ்வளவு சிரமம், இங்கயும் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லணும்; அங்கயும் ஆஹா, ஓஹோன்னு (பொய்) சொல்லணும்!! முன்ன மாதிரி இல்லாம, இப்ப மைனஸ் ஓட்டு போடறது யாருன்னு வேற தெரிஞ்சுடுது!! அப்புறம் மெதுவா, ரங்க்ஸ் அணி, தங்க்ஸ் அணின்னு பல குழுக்கள் உருவாகும். அப்புறம் இவங்க தனித்தனி சங்கம் வச்சு அடிச்சுக்கிறதா, இல்லை ஒரே சங்கத்துக்குள்ளயே குழுக்கள் அமைச்சு அடிச்சுக்கிறதான்னு அடிச்சுக்கணும்... இப்படி எவ்வளவோ சங்கடங்கள்!! அதனால, இப்பவே வீட்டுக்கு ஒரு பதிவர்தான்னு ஒரு சட்டம் கொண்டு வந்தா நல்லாருக்கும்!!
!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!!!!!
நாணயம் படத்தில, பிரசன்னா, லாக்கரைத் திறக்கத் தேவைப்படும் ஒருவரின் கைரேகையை, செல்லோடேப்பில் எடுத்து, கைரேகை மிஷினில் வைத்துத் திறப்பார். இந்த முறை நிஜமாவே ஒர்க் அவுட் ஆகுமான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. நிறைய அலுவலகங்களில “ஃபிங்கர் பிரிண்ட் மிஷின்” பயன்படுத்துறாங்க. அங்கெல்லாம், லீவு லெட்டர் கொடுக்காம லீவு எடுக்கவும் வழக்கமா லேட்டா வர்றவங்களுக்கும் பயன்படலாமே, அதான் கேக்கிறேன். சே.. சே... நானெல்லாம் அப்படியில்லப்பா...
|
Tweet | |||
58 comments:
ஆங் டிரங்குபொட்டிய திறந்தாச்சா.. நல்லநல்ல செய்தியா வருது., பூதத்தை காணோம்.
டிரங்குபொட்டிலே நிறைய இருக்குபோல சுவையான தகவல்கள்.. நல்ல பகிர்வு
//லீவு லெட்டர் கொடுக்காம லீவு எடுக்கவும் வழக்கமா லேட்டா வர்றவங்களுக்கும் பயன்படலாமே, அதான் கேக்கிறேன். சே.. சே... நானெல்லாம் அப்படியில்லப்பா...///
இது நல்ல ஐடியாவா இருக்கே.. பொழைச்சிகலாம்...
விடுமுறை - சோகம்.
பூச்சிமருந்து - வேதனை.
டிடி பைட் - குறும்பு.
வீட்டுக்கு ஒரு பதிவர் - இந்த டீலிங் ரொம்ப பேருக்கு பிடிக்கும்.
பொட்டியை அடிக்கடி திறந்து மூடுங்க.
நான் தான் முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்... அப்படி இருக்கும் பட்சத்தில்...
ஒரு தர நானும் கூவிக்கிறேன்...
மீ த ஃபர்ஸ்ட்டோய்...
// இப்ப விடுமுறைகளை, தனியாருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி ஆக்கணும்கிற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.//
மாற்றங்கள் தவிர்க்க இயலாதது என நினைக்கின்றேன்.
// அதுகுறித்த விவரம் மருந்து அடித்த நிறுவனத்தினருக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.//
சரியாக வேலை செய்வது இல்லை என்றுதான் இதற்கு பொருள். யாரோ செத்தா நமக்கென்ன என்று இருக்கும் குணம்.
// “பார்லிமெண்ட்ல சண்டை போடுவாங்கள்ல அதை லைவ்வா காட்டுவாங்க, அதான், ”டிடி ராஜ்யசபா” சேனல்!!” //
பையன் பயங்கர உஷார் பார்ட்டிதான் போலிருக்கு
// இப்பவே வீட்டுக்கு ஒரு பதிவர்தான்னு ஒரு சட்டம் கொண்டு வந்தா நல்லாருக்கும்!!//
இந்த கவலையெல்லாம் ரெகுலரா எழுதுறவங்களுக்குத்தான். ஆடிக்கொன்று அம்மாவாசைக்கு ஒன்று என எழுதும் எனக்கில்லை.
// சே.. சே... நானெல்லாம் அப்படியில்லப்பா.. //
நம்பிட்டேன்..
//முன்பெல்லாம் இம்மாதிரி சமயங்களில் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்//
அதை நினைச்சாலே ஒரே ஏக்கமா இருக்கு. இப்ப நீங்க வேற விசிறி விடுறீங்களே.அரபு நாட்டில் எந்த மன்னரோ , ஷேக்கோ இற்ந்தால் உடனே இங்கே லீவு இப்படி 99 ல 18 நாள் லீவு கிடைச்சுது. ஆனா இப்ப ஜனவரி ஒன்னுக்கே லீவு இல்லை.எல்லாம் காலத்தின் கோலம்.
ம் , பின்னால பஞ்சி வைத்த மெத்தை மாதிரி இருந்தா உடனே ஓகே. மாட்டினா என்னை கை காட்டிடாதீங்க. ( இப்படி ஒசியில வேலை பாத்துட்டு வர சம்பளத்தில அஞ்சி பிரசண்ட் எனக்கு தரனும் குரு தட்சனையா ஓகேயா...)
ட்ரன்க் பெட்டிக்குள்ள
இவ்ளோ மேட்டரா!!!
இரண்டாவது செய்தி ரெம்ப துக்கமானது...
//தடா. அதிகப்படியா அளிக்கப்பட்டு வந்த நிறைய விடுமுறைகள் இப்ப கேன்ஸலாயிடுச்//
வடைபோச்சே.....
லீவு எடுக்கறதுக்கெல்லாம் பிங்கல் பிரிண்ட் மிஷீனை பயன்படுத்தலாமா...? அந்தப்படத்துல வர்றமாமதிரி லம்பா ஏதாச்சும் கிடைக்கும்னா அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்...பிப்டி பிப்டி... டீல் ஓகேவா?? :))
பிங்கர் பிரிண்ட் மெஷினை சிஸ்டத்தோடு கனெக்ட் செய்து வைத்திருப்பார்கள். அந்த சிஸ்டம் ஆப்பரேட்டரிம் நன்கு பழகி அந்த சாப்ட்வேரில் டைமிங் கரெக்ட் செய்யும் பணியைத்தான் இவ்வளவு நாளாக செய்து வருகிறேன்.
அந்த படத்தை பார்த்தும் எனக்கும் இப்பிடில்லாம் டெக்னிக்க்லா யோசிக்க தோணவே இல்லையே....!!!
முயற்சி செய்து பார்க்கிறேன்.. தகவலுக்கு நன்றி..
:-))
டிரங்கு பொட்டியை ஓப்பன் பண்ணி நிறைய நாள் ஆச்சே என்று பார்த்தேன்.யம்மாடி ஹுசைனம்மா//இந்த முறை நிஜமாவே ஒர்க் அவுட் ஆகுமான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. நிறைய அலுவலகங்களில “ஃபிங்கர் பிரிண்ட் மிஷின்” பயன்படுத்துறாங்க//சும்மா இருக்கறவனை சினிமாதான் கெடுக்குதுன்னு பார்த்தால் நீங்கள் வேறு பீதியைக்கிளப்பறீங்களே!//லீவு லெட்டர் கொடுக்காம லீவு எடுக்கவும் வழக்கமா லேட்டா வர்றவங்களுக்கும் பயன்படலாமே, அதான் கேக்கிறேன். சே.. சே... நானெல்லாம் அப்படியில்லப்பா.///எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லே என்று சொல்ல்வது போல இருக்கு.
சோக நிகழ்வு மனதை கலங்கடித்து விட்டது.பாவம் அந்த குழந்தைகளின் பெற்றோர்.இறைவன் அவர்களுக்கு பொறுமையைத்தரட்டும்.
நான் டீவி பார்த்தே ரொம்ப நாளாச்சு, நித்தியையும் டீவியில் பார்க்க முடியவில்லை ;(
இரண்டாம் நிகழ்வு; படிக்கும் எனக்கும் மனவருத்தம் தருகிறது.
புது டெம்ளேட் நல்லாயிருக்கே..
ஆ.. அதிர்ச்சி.. இதாரு வந்திருக்கது, நம்ம ஜெய்ஹிந்த்புரம் பீரா? காணவில்லை விளம்பரம் கொடுக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், நல்லவேளை வந்துட்டீங்க, காசு மிச்சப்பட்டுச்சு!!
டீ.வி.ல பாக்கலைன்னா என்ன, சி.டி. கிடைக்குதாமே? அல்லது நக்கீரனுக்கு சந்தா கட்டியும்...
;-)))))
நல்ல பகிர்வு
அந்தப்படத்துல வர்றமாமதிரி லம்பா ஏதாச்சும் கிடைக்கும்னா அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்...பிப்டி பிப்டி... டீல் ஓகேவா?? :))
...... me coming..... deal or no deal?
பூச்சிக்கொல்லி விஷயம் ரொம்ப பயத்த கிளப்புதுங்க.. அந்தளவுக்கா இங்க பூச்சி வருது? நான் இங்க வந்த பிறகு ரெண்டு மூணு வாட்டி வந்தாங்க, நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.. ஆனா பக்கத்து வீடுங்கள்ல அடிக்கிறதே என்னால தாங்க முடியாது...
அல்லாஹ் தான் காப்பத்தனும்
பூச்சி மருந்து விசயம் :-((
பூச்சி மருந்தை அளவுக்கு அதிகமாக கலந்திருப்பார்கள். அதற்க்கு அந்த PEST CONTROL நிறுவனமே பொறுப்பு.
என்ன சொல்லி என்ன அந்த குழந்தைங்க வரவா போது.
மலையாளத்துல அல்லது ஆங்கிலத்துலதான் எழுதுவார்ங்கிறதால, தமிழ்நாட்டில என் இமேஜுக்கு எந்தப் பாதிப்பும் வராது!!//
அப்பதிவுகளை மொழிபெயர்ப்பு செய்து மீள்பதிவிடுவோம் என தெரிவித்துக் கொள்கிறோம். :))))))))
//அவர்களின் தங்ஸ்கள் பிளாக்/இணையம் பக்கம் வரமாட்டார்கள் என்ற தைரியம்தானே முக்கியக் காரணி//
yaar sonnathu en pathivuku first comment en veetu thangs than. ana commentla varathu , directa solliduva.
வீட்டுக்கு ஒரு பதிவர் - இந்த கான்செப்ட் என்னமோ தங்கமணிகள் தங்கள் எழுத்துகளை ரங்க்ஸ் படிக்க கூடாதுன்னு சொல்றமாதிரி தெரியுதே.
அப்பாடா டிரெங்கு பெட்டி ஓப்பன் ஆகி விட்டது,
நாஸியா துபாயில் தான் அந்த அளவிற்கு பூச்சி அதிகம்.
குழந்தைகள் வைத்து கொண்டு பூச்சி மருந்து அடிக்கக்கூடாது.
இப்ப உள்ள பிள்ளைகள் எல்லாம் ரொம்ப ஸ்மார்ட்.
<<<
இப்ப விடுமுறைகளை, தனியாருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி ஆக்கணும்கிற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
>>>
சான்சே இல்லை... இன்னுமா இந்த உலகம் இப்படிலாம் நம்புது???
<<<
ஆனா, அதுக்கு பக்கத்து ஃப்ளாட்டில் இருந்த குடும்பத்தின் மூன்று 5-மாத குழந்தைகளில் (Triplets) இரண்டு இறந்துவிட்டன!! ஒரு குழந்தை மருத்துவமனையில்!! சுவரின் வழியே மருந்தின் தாக்கம் ஊடுருவியதில, சுவாசக் கோளாறால் இறந்திருக்கின்றன!! கொழு கொழுவென இருக்கும் குழந்தைகளின் அழகிய படங்கள் பார்த்து மனம் ஆறவில்லை!!
>>>
படித்ததில் மிகவும் வருத்தமான செய்தி இதுதான்.. படித்தவுடன் மனது கலங்கி விட்டது :( சே... ஏன் ஆண்டவா ஏன்???
ஆவ்வ்வ், உங்க ஊர்லயும் லீவு விடறது குறஞ்சு போச்சா.
டிரங்கு பெட்டி - சுவராஸ்யம்...
//அதான், ”டிடி ராஜ்யசபா” சேனல்!!”//
உங்க வீட்டுக்கு பழையாத்து தண்ணி சப்ளையா? :-))
டிரங்குப்பெட்டிக்குள்ளே இவ்வளவு தகவலா?
//தனியாருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி ஆக்கணும்கிற கோரிக்கை வலுவடைந்து வருகிறது//
இல்லியா பின்னே அவனுங்க மட்டும் தூங்கனுமாம் நாங்களெல்லாம் வேலைக்குப்போகனுமாம்
//தரமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. ஹாக்கி உலகக் கோப்பை தொடர் முழுதும் பார்த்தார்கள்//
செட் மேக்ஸ் வரலே இல்லே சோறுதண்ணீயே தேவயில்லை
//“பார்லிமெண்ட்ல சண்டை போடுவாங்கள்ல அதை லைவ்வா காட்டுவாங்க, அதான், ”டிடி ராஜ்யசபா” சேனல்!!”//
முடியல....
குழந்தைகளின் மரணம் கொடுமை. போதுமான எச்சரிக்கை இல்லை போலும்.
எல்லா விஷயங்களும் சுவாரஸ்யமாக இருந்தன.
டிரங்க் பெட்டி சரியான கனம்.
டிடி.பைட். :-))
பூச்சிமருந்து நிகழ்வு பரிதாபம்.
//இப்ப விடுமுறைகளை, தனியாருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி ஆக்கணும்கிற கோரிக்கை வலுவடைந்து வருகிறது//
ஆஹா... சூப்பர் தான்... நாங்க அங்க இருந்தப்ப ரெண்டு நாள் சேந்தாப்பல லீவுன்னாலே தீவாளி தான். இந்த கோரிக்கை நிறைவேறினால் சொல்லுங்க, திரும்பவும் அங்கேயே வந்துடறோம் (இந்த பனி காட்டுல இருந்தும் விடுதலை விடுதலை விடுதலை)
//கொழு கொழுவென இருக்கும் குழந்தைகளின் அழகிய படங்கள் பார்த்து மனம் ஆறவில்லை!!//
ஐயோ கேக்கவே கஷ்டமா இருக்கு
//“பார்லிமெண்ட்ல சண்டை போடுவாங்கள்ல அதை லைவ்வா காட்டுவாங்க, அதான், ”டிடி ராஜ்யசபா” சேனல்!!”//
ஆஹா... பையன் ரெம்ப வெவரமாத்தான் இருக்கான். எதிர்கால இந்தியா வாழ்க
//அதனால, இப்பவே வீட்டுக்கு ஒரு பதிவர்தான்னு ஒரு சட்டம் கொண்டு வந்தா நல்லாருக்கும்!!//
நானும் வழிமொழிகிறேன் (ரங்கமணி எனக்கு எதிர் பதிவு போட்டா அம்பேல்)
// சே.. சே... நானெல்லாம் அப்படியில்லப்பா... //
நம்பிட்டோம்... நம்பிட்டோம். ஆனா ஒரு விசயம், இந்த சினிமா தான் நெறைய திருடங்களுக்கு God Father ஆ இருக்கு
அப்படி என்ன கொடுமையான பூச்சி அங்க இருக்குது?? ஐயோ பாவம்.
//. இந்த முறை நிஜமாவே ஒர்க் அவுட் ஆகுமான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. நிறைய அலுவலகங்களில “ஃபிங்கர் பிரிண்ட் மிஷின்” பயன்படுத்துறாங்க. //
ஆமா.. எனக்கும் சொல்லுங்க :-)
//ஷேக் அஹமத், மொராக்கோ நாட்டில் கிளைடர் விமான விபத்தில் மரணித்து விட்டார்//
யாருக்கு தெரியும்.... உள்நாட்டு வெளிநாட்டு சதியா கூட இருக்கலாம்... பைலட்டு உயிரோட தப்பிச்சுட்டாராம்..... எனகென்னவோ ஒரு வேலை அப்டி இருந்துருக்குமோ, ஒரு வேலை இப்புடி இருந்துருக்குமோ தோணுது.... எப்புடி இருந்தா என்ன போன உசுரு போனது தான்.... நம்ம மக்கள் வாழ்வாதரத்துக்கு பாதிப்பு வராம இருந்தா சரி தான்...
//பக்கத்து ஃப்ளாட்டில் இருந்த குடும்பத்தின் மூன்று 5-மாத குழந்தைகளில் (Triplets) இரண்டு இறந்துவிட்டன!///
:-((((
//பார்லிமெண்ட்ல சண்டை போடுவாங்கள்ல அதை லைவ்வா காட்டுவாங்க, அதான், ”டிடி ராஜ்யசபா” சேனல்!!”//
உங்க பையன் உங்கள மாதுரின்னு நினைச்சேன் ஹுஸைனம்மா... ஆனா இப்புடி வெவரமா பேசுறத பாத்தா அவங்கப்பா மாதுரி போல.... ஹி ஹி.... :-))
//இப்பவே வீட்டுக்கு ஒரு பதிவர்தான்னு ஒரு சட்டம் கொண்டு வந்தா நல்லாருக்கும்//
அம்புட்டு பயமா உங்களுக்கு..... ஹ ஹ.... :-)
/////////அபுதாபி அதிபர் ஷேக் கலீஃபாவின் இளைய சகோதரர் ஷேக் அஹமத், மொராக்கோ நாட்டில் கிளைடர் விமான விபத்தில் மரணித்து விட்டார். புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுமாம். ////////
அப்படி எதுவுமே இல்லையே .
முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுமாம். நான் சொன்னது இதை .
டிரங்குப் பொட்டி கலக்கல்தான் . தொடர்ந்து எழுதுங்கள் .
நிண்ட நாட்களுக்கு பின் இங்கு வந்தா சூப்பரா ஒரு ட்ரெங்க் பெட்டி திறந்திருக்கு. குட் + சோகம் பாவம் குழந்தையை இழந்த பெற்றோர்களுக்கு என்ன மன வேதனை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
டிரங்குப் பெட்டி திறந்து ரொம்ப நாள் கழிச்சு வந்து பார்க்கும்படி ஆயிடுச்சி, வீட்டுக்கொரு பதிவர் - இது ஒரு நல்ல பரிந்துரைன்னு நினைக்கிறேன்.
ஆகா திறந்தாச்சா டிரங்குபெட்டிய.
தகவல்களை அள்ளிக்கொட்டிடிச்சி சூப்பர்.
லீவா அதெல்லாம் இனி கேக்கப்புடாது ஓகே..
அச்சோ பாத்து ஹூசைனம்மா.
சண்டை சேனல் வீட்டுக்குள்ளேயும் திரும்பிப்பார்த்துடப் போகுது.
பூச்சிக் கொல்லி மருந்தால் சிறிசுகள் மரணித்த செய்தி மனதை உலுக்குகிறது.
தகவல்கள் அனைத்தும் சுவையானவை.
உங்களுக்கு விருது கொடுத்து
உள்ளேன், பெற்று கொள்ளவும்.
நன்றி.
ட்ரங்க் பெட்டி, கலவையான செய்திகளுடன், நன்றாக இருக்கிறது.. இரண்டாவது செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது!!
ஒரு வழியாக தொல்லைக்காட்சியிலிருந்து விடுதலையா!! :))
டிரங்குப் பொட்டி முன்னே விட வைட் கம்மியா இருக்கேன்னு திறந்து பார்த்தால் தான் தெரியுது கொஞ்சமா இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்குதேன்னு.
மின்மினி - வாங்க; முதல் வருகைக்கு நன்றி.
ஸ்டார்ஜன் - நன்றிங்க.
துபாய் ராஜா - துபாய்க்கு ராஜா மதிரி இருக்கு பேரப் பாத்தா; லீவு பத்தி எதாவது செய்யமுடியுமான்னு கேக்கலாம்னு பாத்தா, இது சீட்டுக்கட்டு ராஜா போலத்தான் பேர்!! வருகைக்கு நன்றி.
ராகவன் சார் - வாங்க சார். மாற்றங்கள் எதிர்பார்த்த அளவு இல்லேன்னாலும், ஓரளவுக்காவது இருக்கும்னு நம்பறோம். அப்புறம், உங்க வீட்டில, உங்க பதிவுகளைவிட, உங்க பின்னூட்டங்களைத் தொடர்ந்து கண்காணிக்கச் சொல்லணும் சார்.
ஜெய்லானி -ஆமாங்க, அப்போ 1999-ல மொராக்கோ, சவூதி, குவைத்தோ, கத்தாரோ நாடுகளின் மன்னர்கள் இறந்தப்போ 18 நாள் லீவு கிடைச்சது; பயங்கர போரடிச்சுருச்சு.
//பின்னால பஞ்சி வைத்த மெத்தை மாதிரி இருந்தா உடனே ஓகே. // - என்னங்க இது, புரியலை?
சைவக்கொத்ஸ் - வாங்க; நன்றி.
நாடோடி - ஆமாங்க, ரொம்ப வருத்தமான செய்தி.
பிரதாப் - வாங்க; //அந்தப்படத்துல வர்றமாமதிரி லம்பா ஏதாச்சும் கிடைக்கும்னா// - நீங்க வேற, நேரத்துக்கு சம்பளம் வர்றதே பெரிசு; இதில லம்பா என்னத்த...
கண்ணா - வாங்க; ஐடி பையன்கிட்டதான் அப்பப்ப சொல்லி அட்ஜஸ்ட் பண்ணுவோம்; ஆனாலும் இது சரிவரும்னா யாருகிட்டயும் கேக்கவேணாமே!!
/எனக்கும் இப்பிடில்லாம் டெக்னிக்க்லா யோசிக்க தோணவே இல்லையே/ - அது நீங்க இன்னும் தின்னவேலிதானே! நான் பாதி நாகர்கோவில் ஆகிட்டேன்ல, அதான் கிரிமினல் மைண்ட்!!
தமிழ்ப்பிரியன் - உங்க பிஸி ஷெட்யூலின் இடையில் வந்து இஸ்மைலி போட்டதற்கு நன்றி!! (டென்ஷனாகக்கூடாது!!)
ஸாதிகாக்கா - வாங்க; கத்தார் எப்படிருக்கு? சீக்கிரமே பயணக்கட்டுரை எதிர்பார்க்கிறோம்.
பீர் - வாங்க.
சித்ரா - வாங்க; ஐடியா கொடுங்க முதல்ல; அப்புறம் டீல் போடுவோம்.
நாஸியா - சில கட்டிடங்களில் சுத்தமின்மையால் அதிகளவு சிறிய பூச்சிகள் நடமாடும். அதற்கும், மூட்டைப்பூச்சிக்கும் இப்படி மருந்து அடிப்பார்கள். இதைவிட இன்னும் இலகுவான ஜெல் டைப் மருந்து ஆபத்தில்லாதது.
சென்ஷி - வாங்க, ரொம்ப நாளைக்கப்புறம்.
ஷாகுல் - வாங்க; ஆமா, அதானே, குழந்தைங்க பாக்க என்னா அழகு தெரியுமா? ஆறலை.
எப்படி, மொழிபெயர்ப்பு செஞ்சு பதிவிடுவீங்களா? என்னா பாசம் தம்பிக்கு!!
எல்.கே. - வாங்க, முதல் வருகை!! நன்றி. அவங்க வாசிப்பாங்கங்கிறதனாலேயே கவனமா எழுதணுமே நீங்க!!
தராசு - வாங்க; எங்க ரங்க்ஸ், எங்க நான் ஏதாவது எழுதிடுவேனோங்கிற பயத்துலயே இப்ப நல்ல பிள்ளையாகிட்டு வர்றார் தெரியுமா??
ஜலீலாக்கா - வாங்கக்கா. ஆமாக்கா, குழந்தைகளை வச்சுகிட்டு செய்யக்கூடாது; பெரியவங்களும் கவனமா இருக்கணும்.
மஸ்தான் - வாங்க; /சான்சே இல்லை... // இருக்கு, ஏன்னா, இந்நாட்டுக் குடிமகனகளைத் தனியாரில் வேலைசெய்ய ஊக்குவிக்க இந்த மாதிரி சலுகைகள் தருவது அவசியமாகுது.
சின்னம்மிணிக்கா - வாங்கக்கா; அங்கயுமா?
மேனகா - வாங்க. நன்றி.
அமைதிச்சாரல் - வாங்க; /உங்க வீட்டுக்கு பழையாத்து தண்ணி சப்ளை// புரியலையே?
அபுஅஃப்ஸர் - ஆமாங்க, நான் ஆஃபிஸ் வரும்போது, எங்க ரங்ஸும், பிள்ளைங்களும் தூங்குவாங்க பாருங்க, அப்ப வரும் ஒரு கொலைவெறி!!
இர்ஷாத் - வாங்க; நன்றி. இதுக்கே முடிய்லன்னா, என் நிலைமையை யோசிச்சீங்களா?
ஸ்ரீராம் - வாங்க; ஆமாம், இதுபோல பூச்சிமருந்துகளினால் மரணங்கள் இரண்டுமுறை ஏற்கன்வே நிகழ்ந்த போதும், விழிப்புணர்வு இல்லை என்பது வருத்தம் தருகிறது.
அம்பிகா - வாங்க; நன்றி.
அப்பாவி தங்ஸ் - வாங்க, வாங்க. ஹை, இங்க இருந்தீங்களா நீங்க? இப்ப எங்க இருக்காப்ல? அதானே, வீட்டுல எதிர்ப்பாட்டு பாடறது போதாதுன்னு, இங்கயும் எதிர்ப்பதிவு போட ஆரம்பிச்சா என்னாகிறது?
உழவன் - வாங்க. இங்க இருக்கதெல்லாம் சின்னசின்ன பூச்சிகள்தான்; ஆனா பயங்கர தொல்லை வந்துட்டா. ஆக, ஃபிங்கர் பிரிண்ட் மெஷின் டெக்னிக் தெரிஞ்சா எல்லாருக்கும் நன்மைதான் போல்!!
அன்புத்தோழன் - வாங்க; என் பசங்க ரெண்டு பேரும் அப்படியே அச்சு அசல் வாப்பாவைத்தான் கொண்டிருக்காங்க குணத்தில (நக்கலில்)!!
பனித்துளி சங்கர் - வாங்க; துக்கம் அனுசரிக்கப்படும்னா என்ன, சில நிகழ்ச்சிகளைக் கேன்ஸல் செய்வாங்க, அவ்வளவுதான். நன்றிங்க.
விஜி - வாங்க; உங்க பிளாக்கை என் ரீடரில் சேர்த்திருந்தது, எப்படியோ விட்டுப்போய்விட்டது; இனி தொடர்ந்து வருவேன் உங்க வீட்டிற்கும். நன்றி. குழந்தைகளின் பெற்றோர் அந்த வீட்டையே காலி செய்துவிட்டு இப்ப அபுதாபியில் உறவினர் வீட்டில் இருக்காங்களாம்.
ஷஃபிக்ஸ் - வாங்க; லாங் லீவு போல? எல்லா வேலையும் நலமே நடந்ததா?
மலிக்கா - வாங்க; ஆமாங்க, லீவு தரமாட்டேன்கிறாங்க.
டாக்டர் முருகானந்தன் - வாங்க சார். எலி மருந்து அடிச்சாங்களாம். அங்க. இரு வீட்டுக்கும் கிச்சன் வெண்டிலேட்டர் பொதுவாக இருந்ததால் எல்லாருக்கும் சுவாசப் பாதிப்பு ஏற்பட்டாலும், இரு குழந்தைகள் மட்டும் இறந்துவிட்டனர்.
சைவக்கொத்ஸ் - நன்றிங்க விருதுக்கு; என் வீட்டுச் சுவரில் மாட்டிட்டேன்!!
எல் போர்ட் - எங்க போனீங்க ரொம்ப நாளா? பரிட்டையா? மற்ற பதிவுகளில் உங்க பின்னூகளுக்கும் இங்கயே நன்றி சொல்லிக்கிறேன். ஆமா, தொல்லைக்காட்சியிலிருந்து விடுதலைதான்!! மகன்கள் டிடியின் சேவைக்கு டியூன் செய்யச்சொல்லிகிட்டிருக்காங்க; அதில் கலைஞர் டிவியும் வருமாம். அதனால் கூடாதுன்னு சொல்லிட்டேன்!! எங்க ரங்ஸ் ‘மானாட மயிலாட’வின் தீவிர ரசிகர்!! ;-(
அதிரை எக்ஸ். - வாங்க; நன்றி.
25 வருசமா எங்க வீட்ல டிடி மட்டும்தான்.
அடுத்து பூச்சி மருந்து நேத்துதான் எங்க அறையில் அடித்தோம். மூச்சு திணறிப்போச்சு. பெரியவர்களாலே தாங்கமுடியாத போது ஒன்றுமறியா பிஞ்சுகள்... வருத்தமாகயிருக்கின்றது.
டிரங்குப் பெட்டி சூப்பர்.
Post a Comment