Pages

எங்கேயோ கேட்ட குரல்...




“என்னம்மா, நல்லாருக்கியா? பிள்ளைங்க, மாப்பிள்ளை நல்லாருக்காங்களா?”

“நல்லாருக்கோம் வாப்பா. நீங்க எப்...”

“தங்கச்சி நல்லாருக்காளா? போய்ப் பாத்தியா?”

“நல்லாருக்கா. போன வாரம் போனேன் ரஹ்மத்தைப் பாக்க, பிள்ளையும் நல்லாருக்குது. இந்த வாரம் போகமுடியல. ஃபோன்லதான் பேசிகிட்டேன்.”

“அப்படியா, அடிக்கடி பேசிக்கோ. போயும் பாத்துக்கோ. எப்படிச் சமாளிக்கிறாளோன்னு ஒரே கவலையா இருக்கு”

“அதெல்லாம் பழகி வந்துடும். நாங்களும் இங்கதான இருக்கோம். பாத்துக்கிடுவோம். நீங்க கவலைப்படாம இருங்க.”

” சரிம்மா,  ஒழுங்கா சாப்பிடச் சொல்லு. நேரத்துக்குச் சாப்பிட மாட்டா. பிள்ளையையும் பத்திரமா பாத்துக்கச் சொல்லு. அவளே சின்னப் புள்ள. கையில வேற பிள்ள இருக்கு. .”

“என்னத்த சின்ன புள்ளை, இருவத்திரெண்டு வயசாவுது. இந்த வயசுல ஒண்ணொண்ணும் ஊர்ல மூணு, நாலுன்னு கையில பிடிச்சுகிட்டு வீட்டையும் பாத்துகிடுதுக. இதே வயசுல எனக்கும் ரெண்டு பிள்ளை ஆயாச்சு. நீங்கதான் இன்னும் சினனப் புள்ள, சின்னப் புள்ளன்னுகிட்டு இருக்கீங்க.”

 ”நீ மூத்தப் பொண்ணு. சுதாரிப்பா இருந்துக்கிடுவ. அவ கடைக்குட்டி. விளையாட்டுத் தனமாவே இருப்பா, அதான்மா, வேற ஒண்ணுமில்ல.”

”சரி, சரி, அடுத்த மாசம் நீங்களும் உம்மாவும் இங்க துபாய்க்கு வருவீங்கள்ல, அப்பப் பாருங்க.”

“சரிம்மா.  இன்ஷா அல்லாஹ் பாப்போம்”

@@@@@@@@@@@@@@@@@@@@@

“என்னம்மா, நல்லாருக்கியா? பிள்ளைங்க, மாப்பிள்ளை நல்லாருக்காங்களா?”

“ம்.ம். நீங்க, உம்மா, ரஹ்மத், பிள்ளை எல்லாம் நல்லாருக்கீங்களா?”

“ஆமாம்மா நல்லாருக்கோம். பிள்ளையோட இருக்கதனால நேரம் போறதே தெரியல. ரஹமத் என்னமா இளச்சு போயிருக்கா. உம்மா கூட இருக்கதுனால அவளுக்கு கொஞ்சம் ஃபிரீயா இருக்கு.”

“இங்க வந்து 2 வாரமாச்சு. எப்ப எங்க வீட்டில வந்து இருக்கப் போறீங்க? இன்னும் 2 வாரத்தில நீங்க கிளம்பணும்.”

“அதுக்கென்னம்மா இன்னும் ஒரு பத்துநா இங்கன இருந்துட்டு வாறனே. கைப்புள்ளக்காரில்லியா? கூட இருந்தா கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும்”

“இப்படீத்தான் வந்ததுலருந்து சொல்லிகிட்டிருக்கீங்க. என் பிள்ளைங்களும் நன்னா, நன்னி எப்ப நம்ம வீட்டில வந்து இருப்பாங்கன்னு கேட்டுகிட்டே இருக்காங்க.”

“எம்மா, அதான் நீ அடிக்கடி வந்து பாத்துட்டுப் போறியே, நாங்களும் ரெண்டு மூணு தரம் வந்தோம். பிள்ளைங்களை வேணா இங்க கொண்டு விடேன். ஒரு வாரம் இருக்கட்டும் எங்க கூட ரஹமத் வீட்டில”.

 “அதெல்லாம் வேண்டாம். அவங்களுக்கு ஸ்கூல் இருக்கு. எனக்கும் உங்க கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா? நான் என்ன எனக்கு உதவிக்கா கூப்பிடறேன். ”

“இல்லம்மா நீ பெரிய பொண்ணு. சமாளிச்சுகிடுவ. ரஹ்மத் சின்னவ இல்லியா? அதான்..”

“எப்பப் பாத்தாலும் இப்படியே சொல்லுங்க, நீ மூத்தவ, பெரிய பொண்ணு,  பொறுப்பா இருக்கணும்னு. எப்பவும் நாந்தான் அட்ஜஸ்ட் பண்ணனும்.  அப்பவும் அப்படித்தான், இப்பவும் அப்படித்தான்”.

“சரிம்மா, கோவப்படாத. நாங்க சீக்கிரமே அங்க வர்றோம்”.

ஆதங்கத்துடன் ஃபோனை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது சத்தம் கேட்டது.

டாம், டூம், டிஷும், .... “எப்படிடா நீ எடுப்பே” “ எடுத்தா என்னடா”

“டேய், டேய், நிறுத்துங்கடா. எதுக்குடா சண்டை இப்ப? கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களே”

“ம்மா, என் ஸ்கூல்பேக்கை அவன் ஏன் தொடறான்? அதில என் பாட்ஜ், காசெல்லாம் வச்சிருக்கேன். தொலைஞ்சா அவனா தருவான்?”

“என் ரப்பரைக் காணோம். அதனால உன் ரப்பர் எடுக்க வந்தேன். உன் பேக் என்ன பெரிய இதா? ஒருத்தரும் தொடக்கூடாதா?”

“டேய், அண்ணன்கிட்ட  மரியாதையில்லாம என்ன பேசுற நீ ?  ரப்பர் வேணும்னா கேக்க வேண்டியதுதானே? ஏண்டா, நீதானே பெரியவன், சின்னப் பையனைப் போட்டு இப்படி அடிக்கிற? என்ன வேணும்னு கேட்டுக் கொடுக்க வேண்டியதுதானே?எப்பப் பாத்தாலும் சண்டை போட்டுகிட்டு.. பெரியவன்ற பொறுப்பு கொஞ்சமாவது இருக்கா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணத் தெரியாதா?....” சட்டென்று நிறுத்தினேன். எங்கேயோ கேட்டது போல இருந்தது.

Post Comment

34 comments:

காற்றில் எந்தன் கீதம் said...

அவ்வ்வ்வ் why blood same blood........எனக்கும் இதே கத தான்..........எல்லா பேரன்ட்ஸ் ம் இப்பிடி தானோ ????????

சென்ஷி said...

அட... அசத்தல்!

அண்ணாமலையான் said...

வந்தேன்.. படித்தேன். நன்று....

S.A. நவாஸுதீன் said...

இங்கேயும் நல்லா கேட்டுச்சு. நல்லவேளை நான் எங்க வீட்டில் கடைக்குட்டி.

க‌ரிச‌ல்கார‌ன் said...

எல்லார் வீட்ல‌யும் இப்ப‌டித்தாங்க‌

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல விவரிப்பு..

பசங்களோட பேச்சை அப்படியே எழுதியிருக்கீங்க,,,,

பீர் | Peer said...

முயற்சிக்கு ஓட்டு போட்டாச்சு.

அப்துல்மாலிக் said...

ஆஹா கடைசிலே good ட்விஸ்ட்

இன்னும் குரல் கேட்டுக்கிட்டே இருக்கு மனசுக்குள்ள‌

அ.மு.செய்யது$ said...

ஹா ஹா...

கடைசில செம்ம ட்விஸ்ட்டு...ரசித்து வாசித்தேன்.

உங்களுக்கு உரையாடல் செம்மையா வருது.சிறுகதை எழுதறுதுக்கு வார்ம் அப் முயற்சியா ?? கலக்குறீங்க போங்க..!

ஹூசைன்ஸ் அம்மா !!! வலையில நீங்க தான் இப்ப.

shabi said...

nalla irukku naanum mooththa pillathan

இராகவன் நைஜிரியா said...

எங்கேயோ கேட்ட குரல் அருமை...

வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதைச் சொல்லாம சொல்லியிருக்கீங்க..

அருமை... அருமை... அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க்கை சக்கரம் சுழலுது :)

சந்தனமுல்லை said...

:-))

gulf-tamilan said...

நல்லா இருக்கு !!!

நாஸியா said...

ஆஹா.. நீங்களும் மூத்த மகளா? நானும் தான்.. ஆனா தம்பிதான், தங்கச்சி இல்லை..

☀நான் ஆதவன்☀ said...

:)))

நானெல்லாம் கடைசி :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருந்தது :)

ராமலக்ஷ்மி said...

எல்லாமே எங்கேயோ கேட்ட குரலாகத்தான் இருக்கிறது இப்போ:)!
மிக அருமை ஹுசைனம்மா!

ஸாதிகா said...

100% உண்மை.அது என்னமோ தெரியவில்லை ஹுசைனம்மா..பெற்ற மனதிற்கு கடைக்குட்டியின் மேலேதான் அதீத பாசத்தை ஏற்படுத்தி விடுகின்றான் இறைவன்.

Prathap Kumar S. said...

ஹஹஹ... உங்க பசங்களோட சண்டையை சொன்னது கரெக்டா இருந்துச்சு...நாங்களும் இப்படித்தான் முன்னாடி எப்பவும் ஒரே சண்டை.
பூமி உருண்டைன்னு இப்ப புரிஞசுடுச்சா... :-)

கண்ணா.. said...

அருமையான பதிவு

இதில் என்னை பொறுத்தி பார்க்கிறேன். இப்போது என் அண்ணனின் ஆதங்கம் கொஞ்சம் புரிகிறது.

angel said...

m nan seri mutha pilaigaluku support pandra mathri irukenu ninaichu enga amma kita solalam nu ninaichen kadaisila ipdi panitinga

ஜீவன்பென்னி said...

அப்போ சண்டை போட்டத நினைச்சுப் பார்த்தா இப்போ சிரிப்பா இருக்கு.

பாத்திமா ஜொஹ்ரா said...

சரியான போடு

Rithu`s Dad said...

Very Nicely written!! :)

ஹுஸைனம்மா said...

காற்றில் எந்தன் கீதம்: ஆமாம், நானே அம்மாவானதும் அப்படி ஆகிட்டேனே. நன்றி.

சென்ஷி: அட, ரெண்டு வார்த்தை எழுதிட்டீங்களே!! நன்றி.

அண்ணாமலையார்: நன்றி.

நவாஸ்: ம்.. கொடுத்து வச்சவங்க..

க‌ரிச‌ல்கார‌ன்: ஆமாங்க. நன்றி.

பிரியமுடன்...வசந்த்: நன்றி.

பீர் | Peer: ஓட்டுக்கு பேசுன தொகை அனுப்பியாச்சு!!

அபுஅஃப்ஸர்: நன்றி.

ஹுஸைனம்மா said...

செய்யது, பாராட்டுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி.

ஷபி: சேம் பிளட்?

ராகவன் சார்: ஆமா வேகமாச் சுத்துது.

முத்தக்கா, அதோடு நம்ம தலையும் சுத்துது.

சந்தனமுல்லை, நன்றி.

கல்ஃப் தமிழன், நன்றி.

நாஸியா, ஒரே பொண்ணுன்னா லக்தான்.

ஹுஸைனம்மா said...

நான் ஆதவன்: நீங்க கடைசின்னு நீங்க பண்ற லொள்ளுலயே தெரியுது.

எல் போர்ட்: நன்றி. அப்புறம், நீங்க யாருன்னு தெரிஞ்சுடுச்சே. நம்ம வீரப்பனோட சொந்தக்காரர்தானே!!

ராமலக்ஷ்மி, ஆமாக்கா, எல்லாமே நமக்கு நடந்த மாதிரிதான் இருக்கு.

பிரதாப், உங்களுக்கும் இப்படி சொல்ற காலம் வரும்.

ஸாதிகாக்கா, ஆமாம்க்கா. ஆனாலும் முடிஞ்சவரைக்கும் ரெண்டு பேரையும் ஒரே மாதிரி நடத்த முயற்சிக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

ஃபாத்திமா: நன்றி.

ரித்து அப்பா: நன்றி.

ஏஞ்சல், எக்ஸாம் நடக்குதே, படிக்கிறதெல்லாம் இல்லையா? எல்லார் ப்ளாக்லயும் வர்றீங்க போல.

கண்ணா, நன்றி.

ஜீவன்பென்னி: நன்றி.

அ.மு.செய்யது said...

//எல் போர்ட்: நன்றி. அப்புறம், நீங்க யாருன்னு தெரிஞ்சுடுச்சே. நம்ம வீரப்பனோட சொந்தக்காரர்தானே!!//

எங்க‌ளுக்கும் தெரிஞ்சிருச்சே !!!

Jaleela Kamal said...

நடக்குற நடப்ப அப்படியே படம் புடுச்சிபோட்டீங்க போங்க‌

நீங்களும் மூத்தமகளா... ம்ம் இங்கும் தான்

இதே சண்டை தான் இங்கும் ஓடுது,,, அங்கு பேக், பேட்ஜ், இங்கு ஷார்ப்னர், அப்பளம்.

தங்கைய போய் பார்த்தியா கை கொழந்த ய வைத்து கொண்டு அவள நினச்சாலா ரொம்ப கழ்டமா இருக்கு எப்படி தான் சமாளிக்கிறாளே,

இங்கும் எங்க டாடி ஒரு வாரமா இதே கத தான் பேசும்போதெல்லாம்

சரி சரி என்னால் போக முடியல நீஙக் கவல படாதீங்க நான் போனில் பேசிக்கொள்கிறேன். ரொம்ப நாள் கழித்து தங்கைய நாளைக்கு தான் போய் பார்க்க போறேன்.... வீட்டுக்கு வீடு வாசப்படி....

தாஜ் said...

இதைத்தான் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்றார்களோ

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))

SUFFIX said...

லைவ் டெலிகாஸ்ட் மாதிரி நல்லா இருக்கு ஹூசைனம்மா.