இங்கே அமீரகத்தில் வெளிநாட்டு மக்களை "Expats" என்றும், இந்நாட்டு குடிமக்களை, “Emiratis" என்றும் குறிப்பிடுவதுண்டு. இதில் "Emiratis" என்று சொல்வதைவிட “Locals" என்று சொல்வது எளிமையா இருப்பதால், அப்படியே வழங்கிவரப்படுகின்றது. எந்த நாட்டிலயும் அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு தனி மதிப்பும், மரியாதையும் இருக்கும்தானே? அதுபோல, இங்கே இந்த லோக்கல்ஸுக்கும் உண்டு. (இந்தியாவில அப்படியில்லையேன்னு என்னைக் கேக்கப்படாது!!)
அரசாங்கத்தின் சேவைகள் எல்லாம் அவர்களுக்குக் கிட்டத்தட்ட இலவசமாகவே கிடைக்கும். இலவச வீடு, ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் ஒரு தொகை அலவன்ஸ், இலவச பள்ளி/கல்லூரி படிப்பு, வெளிநாட்டில் படிக்க நிதி, படிச்சு முடிச்சு வந்தா வேலைக்கு உதவி; வேலையில்லையா, அதுக்கும் உதவித் தொகை, திருமணத்திற்கு நிதியுதவி,; ஏன் மின்சார, தண்ணீர் கட்டணம் கூட அவங்களுக்கு ஒரு கட்டணமுறை, மற்ற நாட்டவர்களுக்கு ஒரு முறை; மருத்துவமும் இலவசம்; வெளிநாடு போய் ட்ரீட்மெண்டா, இந்தா அதுக்கும் உதவி; இப்படி பலப் பல சலுகைகள் அவங்களுக்கு உண்டு. அதனாலேயே நமக்கு அவங்களப் பாத்தா பொறாமையா இருக்கும்!!
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்லயும் இந்த மாதிரி குடிமக்களுக்கான சில சலுகைகள் உண்டு; ஆனா, அங்கெல்லாம் வருமான வரி உண்டு; இங்க யாருக்கும் எந்த வரியும் கிடையாது!! எந்த வரிகளும் இல்லாமயே ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு இவ்வளவு சேவை செய்ய முடியுதுன்னா, ஆச்சர்யம் என்ன, அதிர்ச்சியே வரும்!! அதுமட்டுமல்ல, ஒரு வெளிநாட்டவர் இங்கே தொழில் தொடங்கணும்னா, அதுக்கு கண்டிப்பா இந்நாட்டவர் தயவு வேணும் என்ற விதி இருப்பதால், அவர்களுக்கு வெளிநாட்டவர் மத்தியில் இயற்கையாகவே மதிப்பும், மரியாதையும் வந்துவிடுகிறது!!
நகரில் கடைகள், அரசு அலுவலகங்கள், சாலைகள் என்று எல்லா இடங்களிலும் அவர்களுக்கு இயல்பாகவே முன்னுரிமை கிடைக்கிறது. அலுவலகங்களில், ஆசியப் பணியாளர்கள் என்றால் எரிந்து விழும் மேலாளர்கள், பணியாளர் ஒரு லோக்கல் (அமீரகக் குடிமகன்/ள்) என்றால் மிகவும் பவ்யமாக நடந்துகொள்வதைப் பார்க்கலாம்.
அமீரகத்தில் வெளிநாட்டினர் பெருகிவிட்டதால்அவர்கள் மத்தியிலும் வேலையில்லாத் திண்டாட்டம் வந்துவிட்டது!! அதை நிவர்த்தி செய்ய சமீப வருடங்களில், Emiratisation என்ற எல்லா நிலைகளிலும் லோக்கல்களைப் பணியில் அமர்த்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு அலுவலகங்களில் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது; தனியார் நிறுவனங்களையும் அரசு வற்புறுத்தி வருகிறது. இன்றைய அமீரக இளைஞர்களும் அதற்கேற்றவாறு படித்து, திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
இந்த Emiratisation என்ற திட்டத்தின்படி, ஒரு வங்கியில் வெளிநாட்டவர் ஒருவருடன் லோக்கல் ஒருவரைப் பயிற்சி பெற விட்டிருந்தார்கள். அந்த இளைஞர், கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளையாதலால், அவ்வப்போது வேலைக்கு மட்டம் போட்டுக்கொண்டிருந்தார். ஒருமுறை அவ்விளைஞருக்கு அறிவுரை கூறினார், ”ஏம்பா இப்படி அடிக்கடி லீவு போடுற? சீக்கிரம் வேலையப் படிக்கவேண்டாமா” என்று கேட்க, அதற்கு லோக்கல் இளைஞர் சொன்னார், “நான் ஒழுங்கா வந்து சீக்கிரம் வேலையப் படிச்சுகிட்டேன்னா, அப்புறம் உங்க வேலை போயிடும். பரவாயில்லியா?” அவர் ஏன் இனி பேசுகிறார்?
அலுவலகத்திற்குப் புதிதாக வரும் சிலர் என்னையும் (என் பர்தா காரணம்) லோக்கல் என்று அவர்களாகவே நினைத்து, அரபியில் பேச ஆரம்பிப்பார்கள். சிலர் சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வார்கள். நான் லோக்கல் இல்லை என்றவுடன், சிலரின் பேச்சில் சிநேகம் அதிகப்படியாகத் தெரியும்; சிலரிடம் உடனே ஒரு அதிகாரம் வந்துவிடும்!!
என் இரண்டாவது பிரசவத்திற்காக நான் அபுதாபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். மூன்றாவது நாள் வலி தாங்கமுடியாமல், எனக்கு சிஸேரியனே செய்துவிடுங்கள் என்று நான் அரற்ற ஆரம்பிக்க, என்னோடு அறையில் இருந்த மிட்-வைஃப், மருத்துவரை அழைத்து வந்தார். வேகமாக வந்த அந்த இந்திய மருத்துவர் (ஷிஃப்ட் மாறியதால், அப்பத்தான் வந்திருக்கிறார்), என்னிடம் ஆங்கிலத்தில் சுகப்பிரசவத்தின் நன்மைகளைக் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். “இன்னும் கொஞ்ச நேரம்தான் வலி இருக்கும்; பொறுத்துக் கொண்டால் உனக்குத்தான் நல்லது. இது சிஸேரியன் என்றால் இனி அடுத்ததும் சிஸேரியன் ஆக வாய்ப்பு இருக்கு...” என்றெல்லாம் பெசிக்கொண்டுவந்தவர், திடீரென்று “ஆர் யூ எ லோக்கல்?” என்றார். “நோ, ஐ’ம் அன் இண்டியன்” என்று சொன்னதுதான் தாமதம், “தென் யூ கேன் வெயிட் ஃபார் ஸம் மோர் டைம்” என்று சொல்லிவிட்டு போயேவிட்டார்!!
அந்த மருத்துவர் சொன்னதற்கு என்ன அர்த்தம்? நான் இந்தியன் என்பதால் வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றா அல்லது இந்தியர்களுக்கு மனவலிமை அதிகம், வலிதாங்குவது எளிது என்றா?
|
Tweet | |||
53 comments:
இந்த அளவுக்கு பாராபட்சம் உண்டா? பாவம்ங்க நீங்க.
ஹை, நான் தான் முதல் கமெண்டா,
அவர் சொன்னதின் அர்த்தம், இந்தியருக்குத்தானே தெரியும் இந்தியர்களின் பொறுமையைப் பற்றி, அதனால தைரியமாக யு கேன் வைட் ஃபார் சம்டைம் சொல்லிட்டாரு போலிருக்கு.
வித்தியாசமான செய்திகள். பிரான்சில் வேலை செய்யும் யாவரும் வரிகட்ட வேண்டும். வரிகட்டும் யாவர்க்கும் அரசஉதவிகள் கிட்டும்.ஆனால் தேர்தலில் வாக்குப் போட குடியுருமை இருக்கவேண்டும்.
//இந்தியாவில அப்படியில்லையேன்னு என்னைக் கேக்கப்படாது!//
இந்தியாவிலேயும் இப்படி உண்டு, ஆனால் இரு நாடுகளுக்கு இடையில் இல்லை, இரு ஊருக்கு இடையில்.என்னை கல்லுரியில் ரேக்கிங் பன்ன முயற்சி பன்னும்போதும் நான் லோக்கல் என்று சொன்னவுடன் விட்டுடாங்க. மச்சான் அவன் லோக்கல்டா பிரச்சனையாயிடும்னு சொன்னவுடன் அங்கிருந்து அப்பீட்டுத்தான்
இப்படியாக நம்மை(இந்தியர்களை) மிகவும் தாழ்வாக அமீரகத்து லோக்கல்கள் நினைப்பதற்கு கா-ரணமே நம்மவர்கள் நடந்து கொள்வது தான் ...
ஆனா இந்தியாவில் மட்டும் வெளிநாட்டவருக்கு தான் முன்னுரிமை கொடுப்போம் ...
என்னவோ போங்க ...
ஹுசைனம்மா,சந்தடிசாக்கில் நான் அரபிபொம்பளைமாதிரி இருப்பேன் என்று சொலிட்டீங்க ஹி..ஹி..ஹி..
அமீரகத்தைப்பற்றி நிறைய தெரியாத செய்திகள் விளக்கமாக சொல்லி இருக்கீங்க./// இங்க யாருக்கும் எந்த வரியும் கிடையாது!! எந்த வரிகளும் இல்லாமயே ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு இவ்வளவு சேவை செய்ய முடியுதுன்னா, ஆச்சர்யம் என்ன, அதிர்ச்சியே வரும்!///அதான் பெரிய ஆச்சரியம்.எப்படி முடிகிறது?
கடைசி கேள்விக்கு பதில் தெரியல்லைங்க. ஏன்னா நானும் லோக்கல் தாங்க. லோக்கல் ஆளுன்னா பார்க்காமல் விட்ட எதாவது பிரச்சனை வரும், ஆனா இண்டியன்னா வெயிட் பண்ணி எதாவது பிராபளம்ன்னா சமாளிக்கலாம் பாருங்க, அதுதான் டாக்டர் ஈஸியா எடுத்துக்கிட்டார். என்ன பண்ணுவது எல்லா இடத்திலும் மாமியார் உடைச்சா கதைதான். நன்றி.
//“நான் ஒழுங்கா வந்து சீக்கிரம் வேலையப் படிச்சுகிட்டேன்னா, அப்புறம் உங்க வேலை போயிடும். பரவாயில்லியா?” அவர் ஏன் இனி பேசுகிறார்?//
என்னா டெரருப்பா!!! :-)))
இங்குள்ள கம்பெனிகளில் லோக்கல்ஸ் பண்றதுல்லாம் கொஞ்சம் ஓவர்தான். எங்ககம்பெனில ஒரு லோக்கல் பொண்ணு வேலை செய்யுது. மாசத்துக்கு எத்தனை நாள் வேலைக்கு வரும், வந்தா எத்தனை மணி நேரம் வேலைசெய்யும்னு இங்க யாருக்குமே தெரியாது.அவங்க இஷ்டம்தான்.யாரும் கேட்க முடியாது. லக்சஸ்ல வரும் பென்ஸ்ல போகும்...ராஜ மரியாதை... ம்ஹும்....
இப்படி எல்லாம் வேற இருக்கா? கொஞ்சம் கலக்கமா இருக்கே
உங்கள் எழுத்தின் வசிகரம் கூடிகொண்டே போகிறது..
அனுபவங்களை விவரித்த விதம் மற்றும் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் மிகவும் அருமை..
//அந்த மருத்துவர் சொன்னதற்கு என்ன அர்த்தம்? நான் இந்தியன் என்பதால் வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றா அல்லது இந்தியர்களுக்கு மனவலிமை அதிகம், வலிதாங்குவது எளிது என்றா?//
இதற்கு ரெண்டாவதுதான் இருக்கும் என யூகிக்கிறேன்.
நல்ல பதிவு
romba nalla pathivu naanum inka ameerakaththulathan(dubai) velai paakkurean inka ulla nilaimaiya azhakaa veku eLimaiyaa sonna vitham suuperppp
UAE nilavaraththa romba azhakaa theLivaa nakaissuvaiyoda vivaricchathu arumai.
naanum ingkathaan ameerakaththula(dubai) velai paarkkuren enkaL saarbaa neenka itha ezhuthiyathaa ninaissukkuren.
11/03/2010 09:49
UAE nilavaraththa romba azhakaa theLivaa nakaissuvaiyoda vivaricchathu arumai.
naanum ingkathaan ameerakaththula(dubai) velai paarkkuren enkaL saarbaa neenka itha ezhuthiyathaa ninaissukkuren.
அமீரகத்தின் எண்ணெய் வளத்தால் வருமான வரியின்றி எண்ணெய் பணத்தின் மூலமாகவே அனைத்தும் இலவசமாக வழங்க அவர்களால் முடிகின்றது. இந்த சலுகைகளுக்குப் பின் ஒரு அரசியலும் உண்டு. இதில் திருப்தி அடையும் மக்கள் மன்னருக்கு எதிராக எதுவும் யோசிக்கும் மனநிலைக்கு வரமாட்டாங்களே :)
\\ஆனா இந்தியாவில் மட்டும் வெளிநாட்டவருக்கு தான் முன்னுரிமை கொடுப்போம் ...\\
ஹும்ம்ம்..
நல்ல பகிர்வு.
\\உங்கள் எழுத்தின் வசிகரம் கூடிகொண்டே போகிறது..\\
:-))
முத்தாய்ப்பாகக் கேட்டிருக்கும் மூணு கேள்விகளுக்கும் பதிலை யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
பதிவு அருமை ஹுசைனம்மா!
சித்ரா - வாங்க. இங்கயும் பாரபட்சம் காட்டுவது இந்தியர் உட்பட்ட பிறநாட்டினர்தானே? இருந்தாலும் இங்குள்ள பாதுகாப்பு உட்பட சில வசதிகள் காரணமே எல்லாரும் இங்கிருக்க விரும்புவது.
அதிரை எக்ஸ். - ஆமா, இந்தியர்களின் பொறுமைக்குத்தான் அளவே கிடையாதே!! எத்தனைக் கொடுமையான விஷயங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கிறோமோ(றேனே)!!
இந்தியாவில் ஊருக்கு ஊர் மட்டுமா, ஊருக்குள்ளயே க்ரூப் க்ரூப்பா அடிச்சுக்குவாங்க!!
யோகன் பாரிஸ் - வாங்க. ஆமா, வரிகள் தேவைப்படாத அளவுக்கு எண்ணெய் வருமானம் இருக்கிறது. இங்கயும் இப்ப “சேம்பர் ஆஃப் காமர்ஸ்” வரை வெளிநாட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்றளவு விதிகளைத் தளர்த்தியிருக்கிறார்கள்.
ஜமால் -ஆமாங்க, நம்மைத் தாழ்த்துவது நம்மில் சிலரின் நடவடிக்கைகள்தான்.
ஸாதிகா - ஹி.. ஹி.. நான் அவ்ளோ கலரெல்லாம் இல்லை; இருந்தாலும் சிலருக்கு ஒரு சந்தேகம் வரும்!
அக்கா, இங்க எண்ணெய் வருமானம் அதிகம்; அதவச்சே அவங்க குடிமக்களை வசதியா வச்சுக்க முடியுது.
பித்தன் வாக்கு - ஒருவிதத்துல நீங்க சொல்றதும் உண்மைதான். நன்றி வருகைக்கு.
அமைதிச் சாரல் - இதெல்லாம் டெரரே இல்லங்கிற அளவுக்கும் வேற விஷயங்கள் இருக்கு. ;-) ஆனா, அதே அளவுக்கு நல்லவங்களும் உண்டு.
நேத்துகூட என் ஹஸ்சின் ஆஃபிஸில் வேலைசெய்யும் டீ பாயின் மொபைல் திருடுபோய்விட்டதால், ஒரு லோக்கல் உடனே அவருக்கு மொபைல்+சிம் வாங்கிக் கொடுத்தாராம்!!
பிரதாப் - அவங்க பண்றது ஓவரா? ஏன் அப்படி கஷ்டப்பட்டு அவங்கள வேலைக்கு வச்சிருக்கீங்க, அனுப்பிறதுதானே? உங்க கம்பெனி அப்படி அமைதியா இருக்கதுலயும் விஷயம் இருக்கு!!
நாஸியா - பயப்படவெல்லாம் ஒண்ணுமில்ல; எல்லா சமூகத்துலயும் எல்லா வகை ஆட்களும் உண்டு.
கண்ணா - ரொம்ப புகழ்றீங்க!! இருந்தாலும் நன்றி. மகிழ்ச்சி.
பஹுருத்தீன் - வாங்க; நன்றி; ஆமா, இங்க இருக்க எல்லாருக்குமே இதுப்போல அனுபவங்கள் உண்டு.
அப்துல்லா - நீங்கதான் எப்பவும் க.க.க.போ!! :-) நம்மூரில இலவசத்துக்குப் பின்னாலயும் இதே அரசியல்தானே!!
அம்பிகா - வாங்க, பாராட்டுக்கு நன்றிங்க.
ராமல்க்ஷ்மி அக்கா - வாங்க; நன்றி கருத்துக்கு!
//(இந்தியாவில அப்படியில்லையேன்னு என்னைக் கேக்கப்படாது!!) //
இதுல கேக்குறதுக்கு என்ன இருக்கு. அது தானே உண்மை.
//திடீரென்று “ஆர் யூ எ லோக்கல்?” என்றார். “நோ, ஐ’ம் அன் இண்டியன்” என்று சொன்னதுதான் தாமதம், “தென் யூ கேன் வெயிட் ஃபார் ஸம் மோர் டைம்” என்று சொல்லிவிட்டு போயேவிட்டார்!!//
இந்த விசயத்துக்குதான் முந்தின பில்ட் அப்புகளா. கலக்கல் போங்க.
ஆனா அவர் நல்லதுக்குத்தான் சொல்லியிருப்பார்.
இங்கு சவுதியிலும் இதே நிலமைதான்.
கொஞ்சம் வித்தியாசம் இங்கயும் இருக்கறது தான்.. ஆனா நீங்க சொல்றது ரொம்ப அதிகமா இருக்குது.. :((
இதையும் சேர்த்திக்கோங்க.. தகவலுக்கு நன்றி.. இப்படியுங்கூட இருக்கும்ன்னு இப்பத்தான் தெரிஞ்சிகிட்டேன்..
நல்ல கட்டுரை
கடைசி வரிகள்... சிரிப்பதா வருத்தப்படுவா என்றே தெரியவில்லை
ஹுஸைனாம்மா லோகல்ஸ்( கொஞ்சம் ஹச் புச்சுன்னா உடனே இரண்டு நாள் லீவு தான் எங்க ஹஸ் சொல்வார்
piraku vareen
எந்த பிஸினெஸ் என்றாலும் லோக்கல் தயவு வேண்டும் அதுக்கூட ஒரு காரணமா இருக்கலாம்
என் கூட வேலைசெய்யும் மற்ற கல்ஃப் நாட்டை சார்ந்தவங்கக்கூட தாங்களை லோக்கல் என்று கூறி சில/பல காரியங்களை சாதிச்சிக்கிறாங்க
நம் நாட்டுலேயும் இருக்கும் அது ஏரியாவைப்பொருத்து, இதுலே நாட்டை சேர்க்க முடியாது
நல்ல பதிவு ஹுஸைனாம்மா
அரபிப் பொம்பளைங்க கண்ணை மட்டுமே பார்த்து நானே மயங்கி இருக்கேனே ஹுசைனம்மா ..
சுகப் பிரசுபம் நல்லதுதானே ..
எனக்கு ரெண்டும் சிசேரியன்
நீங்க சொல்வது சரிதான். ஆனால், அய்ரோப்பாவை சேர்ந்த நிறுவனத்தில் நாம் வேலை செய்யும் போது, நாம் எந்த நாட்டில் இருந்தாலும், நம்மை லோக்கல் என்றுதான் சொல்லுகின்றனர்.
இந்தியர்கள் எதை வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் தாங்குவங்கனு அர்த்தமா?
//எந்த வரிகளும் இல்லாமயே ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு இவ்வளவு சேவை செய்ய முடியுதுன்னா, ஆச்சர்யம் என்ன, அதிர்ச்சியே வரும்!///
எண்ணை தானே காரணம்.. !!!
//அந்த மருத்துவர் சொன்னதற்கு என்ன அர்த்தம்? நான் இந்தியன் என்பதால் வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றா அல்லது இந்தியர்களுக்கு மனவலிமை அதிகம், வலிதாங்குவது எளிது என்றா?//
இது இரண்டுமல்லாமல் வேறொன்றும் உண்டே.. நாம எல்லாம் அதட்டி சொன்னாதானே கேட்குறோம்.. அன்பா எல்லாம் பக்குவமா எடுத்து சொன்ன கேட்போமா என்ன???
நல்ல சூப்பரா போட்டு இருக்கீங்க, லோக்கல்ஸ் வேலை பார்க்கும் நேரம் கம்மி ஆனால் சம்பளம் அதிகம்.
அவர்கள் வேலை பார்க்கும் நேரத்தைவிட போனில் அடிக்கும் அரட்டை தான் அதிகம்..
//இலவச வீடு, ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் ஒரு தொகை அலவன்ஸ், இலவச பள்ளி/கல்லூரி படிப்பு, வெளிநாட்டில் படிக்க நிதி, படிச்சு முடிச்சு வந்தா வேலைக்கு உதவி; வேலையில்லையா, அதுக்கும் உதவித் தொகை, திருமணத்திற்கு நிதியுதவி,; ஏன் மின்சார, தண்ணீர் கட்டணம் கூட அவங்களுக்கு ஒரு கட்டணமுறை, மற்ற நாட்டவர்களுக்கு ஒரு முறை; மருத்துவமும் இலவசம்; வெளிநாடு போய் ட்ரீட்மெண்டா, இந்தா அதுக்கும் உதவி; இப்படி பலப் பல சலுகைகள் அவங்களுக்கு உண்டு//
//எந்த வரிகளும் இல்லாமயே ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு இவ்வளவு சேவை செய்ய முடியுதுன்னா, ஆச்சர்யம் என்ன, அதிர்ச்சியே வரும்!! ///
நான் கருதும் சில விஷயங்கள் உங்களின் இந்த கேள்விக்கான விடையாக இருக்க கூடும், அடுத்தடுத்து பின்னூட்டத்தில்....
இவ்வளவு சலுகைகளை அள்ளி கொடுக்க இவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது.... ஏன் நம்மால் முடியவில்லை....காரணங்களுள் சில
1. ஆட்சி முறை
2. மக்கள் தொகை
3. இயற்கை வளம்
4. மக்களின் வழக்கை முறை
5. நாட்டின் உற்பத்தி மொத்த திறன்
இன்னும் பல....
1 பில்லியனை தாண்டியும் தொடர்ந்து சளைக்காது பெரு(க்)கி கொண்டிருக்கும் நம்முடைய நாட்டின் மக்கள் தொகைக்கு இவ்வளவு இலவச திட்டங்களை செயல் படுத்துவதற்கு நம்மிடம் உள்ள இயற்கையை வளங்களை மொத்தமாக சொரண்டினாலும் சாத்தியப்படாது.... அதுமட்டுமல்லாது ஏதேனும் ஒரு நல்ல திட்டத்தை செயல் படுத்த ஒரு நாட்டின் எந்த பகுதியிலும் முடிவெடுக்கும் தனி அதிகாரம் படைத்த மன்னராட்சியுடன்... எதற்கெடுத்தாலும் கொடி பிடிக்கும் கோடிக்கணக்கான கட்சிகளை கொண்ட நம் ஆட்சி முறையும் ஒரு காரணாம்.... எவனுமே உழைக்காவிட்டாலும் சோறு போடும் இயற்கை அவர்களுக்குண்டு, ஏறு பூட்டி உழுதால் மட்டுமே சோறு போடும் வானம் பார்த்த ஏராளமான பூமியே நம்மிடம்.... முக்கால் வாசி பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு அது, நம் நாட்டின் வளங்களையே அதிகம் நம்பி இருக்கும் நமக்கு இப்படி இலவசங்களை வாரி வழங்கிவிட்டால் உழைக்கும் வர்க்கம் சோம்பேறிகள் ஆக்கப்பட்டு... சீனர்களுடன் போட்டியில் களத்தில் உள்ள நாம் சிரமம் இன்றி வரும் அரசாங்க சலுகைகளுக்கு அடிமையாகி உழைப்பை மறக்க நேரிடும்.... உற்பத்தி அடியுடன் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு.... இதுபோன்ற ஏராளமான காரணங்களால் நீங்கள் சொன்ன இம்மக்களின் இலவச திட்டங்கள் நமக்கு சாதியமற்றதுனு நான் நினைக்கிறேன்.....
//எந்த வரிகளும் இல்லாமயே ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு இவ்வளவு சேவை செய்ய முடியுதுன்னா, ஆச்சர்யம் என்ன, அதிர்ச்சியே வரும்!! //
கண்டிப்பாக அதிர்ச்சியும்,ஆச்சரியமும் இல்லை..... அவர்களை போன்ற மக்கள் தொகையும், இயற்கை வளமும், ஆட்சி முறையும் கொண்டிருந்தால்..... எதுவும் சாத்தியமே.....
சவுதியில் இந்தியருக்கு உள்ள மரியாதையை விட எமிரேட்டில் எவ்வளவே தேவலை.
நல்ல பதிவு ஹுஸைனாம்மா!!!!
for your question, i think the third one suits well. we must be proud of our mental strength. hayna Husainamma?
//நோ, ஐ’ம் அன் இண்டியன்” என்று சொன்னதுதான் தாமதம், “தென் யூ கேன் வெயிட் ஃபார் ஸம் மோர் டைம்” என்று சொல்லிவிட்டு போயேவிட்டார்!!//
ஹுஸைனம்மா.... டாக்டர்ஸ் association leader கிட்ட எதுவும் சண்ட கிண்ட போட்டீங்களா என்ன.... :-)) ஹா ஹா... உங்களுக்கு மட்டும் இப்டி பண்றானுங்க எல்லா டாக்டரும்......
உங்க மகனுக்கு ஆபரேஷன் அப்போ ஒரு லூசு டாக்டர் இது மாத்ரி தான் ஏடாகூடமா பேசி கடுப்பேத்தினாருல .... என்னவோ.... கொஞ்சம் உஷாரா இருங்க நெக்ஸ்ட் டைம்.... ;-)டேக் கேர்...
நான் இந்தியன் என்பதால் வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றா அல்லது இந்தியர்களுக்கு மனவலிமை அதிகம், வலிதாங்குவது எளிது என்றா?
எனக்கென்னவோ அவர் மனவலிமை பற்றிதான் சொல்லியிருப்பார் என்று..
சித்ரா சொல்வது போல் இந்த் அளவுக்கு பாராபட்சம் உண்டா, உண்மையிலேயே பாவங்க நிங்க.
இங்கு கூட கலர் பார்ப்பாங்க.
ஹுஸைனம்மா டைம் கிடைக்கும் போது இங்கும் வாங்க. வந்து உங்க கருத்தையும் சொல்லுங்க.
“ஆர் யூ எ லோக்கல்?” என்றார். “நோ, ஐ’ம் அன் இண்டியன்” என்று சொன்னதுதான் தாமதம், “தென் யூ கேன் வெயிட் ஃபார் ஸம் மோர் டைம்”
என்ன கொடுமைங்க இது. UAE ல இது போல partiality இருக்குன்னு என் நாத்தனார் சொல்லி கேட்டு இருக்கேன், ஆனா இவ்வளவு மோசமா இருக்கும்னு நான் நினைச்சு பார்க்கல :((
பல புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி
பதிவும் லோக்கல்தனமாக இல்லை.. சொன்ன விதம் அருமை
//
நான் இந்தியன் என்பதால் வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றா அல்லது இந்தியர்களுக்கு மனவலிமை அதிகம், வலிதாங்குவது எளிது என்றா?//
:-))
ஓ இவ்வளவு விசயம் நடக்குதா..
இந்தியால இருந்தா லோக்கலா இருக்கமேன்னு இருக்கு..அங்க போனா லோக்கலா இல்லையேன்னு இருக்குமா.. :)
இலவசம் பத்தி நீங்களும் அப்துல்லாவும் சொல்றதும் ரொம்ப சரிதான்.. செய்தாலும் பயம்மா இருக்கு ..இது எதுக்காக வாயை அடைக்கவான்னு
நான் லோக்கல் இல்லை... நன்றாக இருக்கு...
//“ஆர் யூ எ லோக்கல்?” என்றார். “நோ, ஐ’ம் அன் இண்டியன்” என்று சொன்னதுதான் தாமதம், “தென் யூ கேன் வெயிட் ஃபார் ஸம் மோர் டைம்” என்று சொல்லிவிட்டு போயேவிட்டார்!!/// எப்பவும் தப்பாகவே நினைக்கிறீங்களே... உங்களில் உள்ள அக்கறையில்தான் அப்படிச் சொல்லியிருப்பார்... இதுக்கும் திட்டுறீங்க...., இந்தியாவில தொட்டதுக்கெல்லாம் பணத்துக்காக சீஸர் செய்றாங்கப்பா என அதுக்கும் திட்டீங்க..... சே..சே... என்னப்பா இது.....:).
அக்பர் - வாங்க; ம், சவூதியிலயும் இங்கபோலத்தான்னு கேள்விப்பட்டிருக்கேன்.
எல் போர்ட் - சில இடங்களில் மட்டும் கொஞ்சம் அதிகம்தான்; ஆனா அதையும் தாண்டி நிறைய வசதிகளும், பாதுகாப்பும் உண்டு.
ஆதவன் - வாங்க; அழுதுகொண்டே சிரிக்கவேண்டியதுதான்!!
ஜலீலாக்கா - ம்ம், ஆமாக்கா. ஆனா, இப்ப நிறைய மாறிட்டாங்க.
அபுஅஃப்ஸர் - ஆமா, ஜி.ஸி.ஸி.நாடுகளைச் சேந்தவங்க அவங்களுக்கு அடுத்த லெவல்!!
தேனம்மையக்கா - ஆமாக்கா, ரொம்ப அழகுதான் அவங்க. சுகப் பிரசவம் வேண்டும் என்றுதான் வலி தொடங்கி மூணு நாளாகியும் காத்துக்கிட்டிருந்தேன். அப்படியும் சிஸேரியந்தான் ஆச்சு!!
இராகவன் சார் - நன்றி. ஆமாமா, அந்தந்த நாட்டுக்காரங்கதான் ராஜா அவங்க ஊர்ல.
ஸ்ரீராம் - வாங்க; ம், இந்தியர்களுக்கு மனவலிமை ஜாஸ்திதான், இல்லியா?
ரீத்து அப்பா - வாங்க; எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம்? //அதட்டிச் சொன்னாத்தான் கேட்கிறோம்//.. ஹி..ஹி.. கரெக்ட்தான், இந்தியாவில ஒரு க்யூவில நிக்கவே நமக்கு இன்னும் தெரியாது!!
அன்புத்தோழன் - வாங்க; கருத்துக்கள்ல விளாசியிருக்கீங்க!! எவ்வளவு வரிகள் கொடுக்கிறோம் தெரியுமா அரசுக்கு? நிச்சயமா, முறையான நிர்வாகம் இருந்தால் இந்தியாவிலும் இப்படி நடைமுறைத்தப்பட முடியும். ஆனா, அதுக்கு ஒரு ராணுவ ஆட்சி வந்தாத்தான் முடியும். ஜனநாயக முறை (கட்சிகள்) இருக்க வரை அது நடக்காது!!
(அப்புறம், மக்கள்தொகை பத்தி சத்தம் போட்டுச் சொல்லாதீங்க!! ஏன்னா, முஸ்லிம்ஸ்தான் அதுக்கு(ம்) காரணமாம்.)
அன்புத்தோழன், என்ன செய்ய, சில சம்யம் அப்படி ஆனாலும், நல்ல நல்ல டாக்டர்ஸும் பாத்திருக்கேன்!!
ஜெய்லானி - ஆமா, திறமை காரணமா இந்தியர்களுக்கு மதிப்புண்டுதான்.
நானானி - வாங்க, வாங்க. நிச்சயமா இந்தியர்களுக்கு மன உறுதி மிக மிக அதிகம். அதில் மாற்றுக்கருத்தே கிடையாது எனக்கு.
ரிஷபன் - வாங்க; ஆமாம், மனவலிமை குறித்துத்தான் சொல்லியிருப்பார். ஆனாலும், அதை நான் இந்தியன் என்று சொன்னதும் கண்டுக்காமல் போனதுதான் கஷ்டமாருந்துச்சி.
விஜி - வாங்க; வாங்க; நிச்சயம், உங்க வீட்டுக்கும் அப்பப்ப வந்துபோயிட்டுத்தான் இருக்கேன்!!
முகுந்த அம்மா - வாங்க; ஆனா, இப்படி பாரபட்சம் பாக்கிறதும் நம்மவங்கதான்!!
டாக்டர் சார் - வாங்க. கருத்துக்கு நன்றி.
முத்து அக்கா - வாங்க; ஆமாக்கா, இந்தியாவில, சென்னையில வெளியூர்க்காரவுங்கன்னா மேலயும் கீழயும் பாப்பாங்களே, அது மாதிரிதான்!!
அதிரா - வாங்க; இந்த நாடுகள்ல பாரபட்சம் காட்டுறதே ஆசியக் கண்டத்தைச் சேந்தவங்கதான்!! நானும் இரண்டாவதாவது சுகப்பிரசவம் ஆகணும்னு 6வது மாசத்துலருந்து மாடிப்படி ஏறியிறங்கியும், நடைப்பயிற்சியும் செஞ்சுட்டு, மூணு நாள் வலிதாங்கி இருந்தேன் அதிரா. இங்க எனக்கு வருத்தமே, அந்த மருத்துவர், நான் இந்தியர்னு சொன்னதும், தன் அறிவுரையை அப்படியே நிறுத்திவிட்டுப் போனதுதான்!!
Post a Comment