Pages

ஜீன்ஸ் (Genes)




இது மருத்துவப் பதிவு என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். 

மூன்று வருடங்களுக்கு முன்:
  
சூப்பர்மார்க்கெட்டில் அந்தச் சிறுவன் அம்மா கூடவே போய்க்கொண்டிருந்தான். நான்கு வயதுக்கேயுரிய துடிப்பும், ஆர்வமும் மேலிட அங்குமிங்கும் போகப் பார்த்தாலும் அம்மா விடவில்லை. கவனமாகக் கையைப் பிடித்து வைத்திருந்தாள். பாத்திரங்கள் பகுதியில் மும்முரமாக ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா. ஹை, இதென்ன, இத்தனை கத்திகள்? பல சைஸ்கள், நிறங்கள், விதங்கள் - கண்கள் மின்னப் பார்த்தான் அவன். நைஸாக அம்மாவின்  கைப்பிடியை உருவி, ஒரு கத்தியை எடுத்துப் பார்த்தான்.

சிறிது நேரம் கழித்து, அம்மா மறுபடி அவன் கையைப் பிடிக்க முயல, அவன் கையைத் தரவில்லை. இரண்டு கையையும் பின்னால் கட்டி வைத்திருந்தான். அம்மா கையை வலிந்திழுக்க, கை வந்தது விரலில் இரத்தப் பிசுபிசுப்புடன்!! பதறிப்போய், “என்னடா செஞ்சே?” என்றதற்கு, “அது.. கத்தி வெட்டுமான்னு வெட்டிப் பாத்தேன்” என்றான் அவன்!!

எட்டு வருடங்களுக்கு முன்:

மாலைநேரம். அம்மா வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருக்க, ஐந்து வயது மகன் வெளியே தெருவில் சைக்கிள் ஓட்டிகொண்டிருந்தான். சிறிது நேரத்தில் உள்ளே வந்தவன், பாத்ரூமுக்குப் போவதும், கிச்சனில் அலமாரியைத் திறப்பதுமாக இருந்தான். “டேய் என்ன தேடுற?” அம்மா கேட்டதற்கு, “ஒண்ணுமில்லைம்மா” என்றான். ஒண்ணுமில்லைன்னாலே விவகாரமாச்சே என்று அம்மா எழுந்து போகிறாள். வழியெங்கும் சொட்டுச்சொட்டாக இரத்தம்!! ”அடேய், என்னத்தடா செஞ்சே?” என்று இரைய, “ஒண்ணுல்லம்மா, ஒரு கண்ணாடித் துண்டு அங்க கிடந்துது; ஷார்ப்பா இருக்கான்னு பாத்தேன்!!!!” 

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்:(அலுத்துக்காதீங்க, இதான் கடைசி!)

வீட்டுப் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு வந்தச் சிறுவன் கண்ணில் அது பட்டது!! அம்மா இளநீர் வெட்டிவிட்டுப் போட்டு வைத்திருந்த அரிவாள்!! நான் வெட்டுறேம்மான்னு எவ்வளவு கெஞ்சியும், ஆறு வயசுக்கே அருவா கேக்குதான்னு தரவேயில்லை அம்மா. சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்று உறுதி செய்துவிட்டு அதைக் கையில் எடுத்தான். 

அங்கே தேங்காய் எடுத்துப்போக வந்த அண்ணன் அவனைப் பார்த்துவிட்டு அலறினான், “ம்மா, இங்க பாரு இவன் கைப்பெருவிரல் அறுந்து தொங்குது!!”.

இப்ப ஈஸியா யூகிச்சிருப்பீங்க (கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்க நான் என்ன கிரைம் ஸ்டோரியா எழுதிருக்கேன்?). மத்தவங்க “அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்துருக்கு”ங்கிற வழக்குச் சொல்லையும், தமிழ் தெரியாத பீட்டர்ஸ் “Like Father, Like Sons"ங்கிற சொலவடயையும் ஞாபகப்படுத்திக்கோங்க!! அரிவாள் வெட்டு அப்பாவோட அருமந்தப் பிள்ளைங்கதான் மத்த ரெண்டுபேரும்!!


Post Comment

39 comments:

Anonymous said...

அதுதான் ஜீன்ஸ்னு தெளிவா போட்டாச்சு. அப்பவே தெரிஞ்சுபோச்சு :)

Prathap Kumar S. said...

ஒரே ரத்தமா இருக்கு..... புரியுது ஆனா புரியல...க்ரைம் பதிவோ???

Prathap Kumar S. said...

உங்க ஊர் திருநெல்வேலியா இருக்கலாம் அதுக்குன்னு
ரத்தம் அருவான்னு பேசி பயமுறுத்த முயற்சிக்காதீங்க...

ஹுஸைனம்மா said...

// நாஞ்சில் பிரதாப் said...

உங்க ஊர் திருநெல்வேலியா இருக்கலாம் அதுக்குன்னு
ரத்தம் அருவான்னு பேசி பயமுறுத்த முயற்சிக்காதீங்க...//

ஹலோ, இதுல வர்ற மூணு பேருமே உங்க நாகர்கோவில்காரங்கதான்!! நான்தான் அப்புராணியா இவங்களுக்கு நடுவில மாட்டிகிட்டிருக்கேன்!!

அதுசரி, நீங்க பயப்படாத சிங்கம்னு எங்கியோ சொல்லிக்கிட்டீங்களே??!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை ரொம்ப நல்லாருக்கு..

எல்லாமே நல்லதே நினைப்போம்.

Prathap Kumar S. said...

//அதுசரி, நீங்க பயப்படாத சிங்கம்னு எங்கியோ சொல்லிக்கிட்டீங்களே??!!//

என்னோட கமெண்ட்டை நல்லாப்படிங்க...பயமுறுத்த முயற்சிக்காதீங்கன்னு சொல்லிருக்கேன்...
பயந்துட்டேன்னு சொல்லவேயில்லயே...
எங்கஊரு ஒரு ரத்த பூமின்னு புரிந்துக்கொண்டதுக்கு நன்றி..:)

கண்ணா.. said...

//நாஞ்சில் பிரதாப் said...
உங்க ஊர் திருநெல்வேலியா இருக்கலாம் அதுக்குன்னு
ரத்தம் அருவான்னு பேசி பயமுறுத்த முயற்சிக்காதீங்க...//

யோவ் நாஞ்சிலு....

திருநெல்வேலி காரவுக எல்லாரும் நேக்கா கைல வெட்டாம அருவா புடிப்பமாக்கும்..


3, 8, 35 ன்னு ரிவர்ஸ்லயே போயி நச்சுன்னு சொல்லிட்டீங்க...

நம்ம நாஞ்சிலு கொஞ்சம் டியூப்லைட்டு... லேட்டாத்தான் புரியும். விட்டு தள்ளுங்க

ஷாகுல் said...

ஓரே ரத்த களரியா இருக்கு! நான் வேற சின்ன பையனா பயந்துற போறேன்.:))))

போற போக்குல 35+6 னு மச்சான போட்டு குடுத்துடீங்க. ம்ம்ம் நடக்கட்டும்

ஹுஸைனம்மா said...

/ ஷாகுல் said...
போற போக்குல 35+6 னு மச்சான போட்டு குடுத்துடீங்க. ம்ம்ம் நடக்கட்டும்//

எப்படி ஷாஹுல் இப்படி? யாருமே கவனிக்கல பாருங்க!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

3,8,35 - டெர்ரரான ஜீன்ஸ் போல :)))))))

எப்படித்தான் சமாளிக்கறீங்களோ? ;)

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பு பார்த்ததும் ஓரளவு புரிஞ்சது. மூனாவது படிக்கும் போது முழுசும் புரிஞ்சுது.


//என்னோட கமெண்ட்டை நல்லாப்படிங்க...பயமுறுத்த முயற்சிக்காதீங்கன்னு சொல்லிருக்கேன்...
பயந்துட்டேன்னு சொல்லவேயில்லயே...
எங்கஊரு ஒரு ரத்த பூமின்னு புரிந்துக்கொண்டதுக்கு நன்றி..:)//

ஆமாம்மா இவன் பூமி ரத்தபூமி... இவன் தான் அங்க கைப்புள்ள

☀நான் ஆதவன்☀ said...

ஹாகுல் :))) எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்! ஒரே ரத்தபூமியா இருக்கும் போல இருக்கே..ரத்தபூமிலே நின்னுக்கிட்டு பதிவா!! :-)

நட்புடன் ஜமால் said...

ஹலோ ஹலோ

நாங்கள்ளாம் இப்பதான் வாறோம்

அதுக்குள்ளே யாருமே கண்டுபிடிக்கலையாம் - சரி சரி விடுங்க

-----------------

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்

எல்லாம் ஆயுதங்களும் ”ஆ”டு வெட்ட பயன் படுவது போலவே கண்ணுக்கு படுது

ஜீன்ஸுல அதுவுமாஆ

ஸாதிகா said...

உங்கள் எழுத்து பாணியில் நல்ல விழிப்புணர்வையும் கூறி விட்டீர்கள் ஹுசைனம்மா.(நான் இந்த முறையில் எடுத்துக்கறேன்)

ஷாகுல் said...

//எப்படி ஷாஹுல் இப்படி? //

எல்லாம் ஒரு பொது சேவைதான்

//யாருமே கவனிக்கல பாருங்க!!//

சொல்லியாச்சில இனிமேல் கவனிப்பாங்க

ஷாகுல் said...

//ஹாகுல் :))) எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.//

அதானே.

ரிஷபன் said...

கொன்னுட்டீங்க போங்க..

சாந்தி மாரியப்பன் said...

பாவம் ஹுஸைனம்மா.. :-)))))

சிநேகிதன் அக்பர் said...

பதிவு சூப்பர். ஆனா நம்ம நாஞ்சிலு பயப்படும் மாதிரி எழுதியிருக்க கூடாது பாருங்க புள்ள என்னமா பயப்படுது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹா ஹா.. உங்களுக்கே உரிய நகைச்சுவை லேசா தூவியிருக்கீங்க..

யாரையோ போட்டுத் தாக்கியிருக்கா மாதிரி இருக்கே? :))))))

ஜெய்லானி said...

ரெண்டு தலைமுறை சரி.மூன்றாவது இது போல வராம பாக்கனும் அதான் முக்கியம்.( கவலை பட வேண்டிய விஷயம் ).

Thenammai Lakshmanan said...

ஒரே ரத்தம் படிஞ்ச ஜீன்ஸா இருக்கும் போல இருக்கே ஹுசைனம்மா

Abu Khadijah said...

ரெத்தம் கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் நீங்க கத்தி அருவாள்னு என்னை பயமுறுத்திருக்கக் கூடாது.

//ஹுஸைனம்மா said...

/ ஷாகுல் said...
போற போக்குல 35+6 னு மச்சான போட்டு குடுத்துடீங்க. ம்ம்ம் நடக்கட்டும்//

எப்படி ஷாஹுல் இப்படி? யாருமே கவனிக்கல பாருங்க!!//

யார் சொன்னது கவனிக்கலேன்னு? அமைதியா இருந்துட்டோம் ஆமா!.

அம்பிகா said...

\\அமிர்தவர்ஷினி அம்மா said...
3,8,35 - டெர்ரரான ஜீன்ஸ் போல :)))))))

எப்படித்தான் சமாளிக்கறீங்களோ? ;)\\

:-))

ஸ்ரீராம். said...

அன்று சிந்திய ரத்தம்...
ரத்தம் துடிக்கும் நினைவுகள்...
ரத்த பாசம்...

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

genes பத்தி எங்க biology மிஸ் கூட இவ்வளவு தெளிவா சொன்னதில்ல !!!

enrenrum16 said...

இந்த பதிவைப் படித்த பிறகு உங்களை அப்புராணியா நினைக்க முடியலை...சொர்ணாக்காவாதான் நினைக்க முடியுது... பின்ன உங்களைச் சுற்றி அரிவாள்,கத்தி கபடாவோட மூணு பேர் இருக்காங்களே...உங்ககிட்ட பேர் சொல்லாம பழகுறதுதான் நல்லது.

SUFFIX said...

//நான் என்ன கிரைம் ஸ்டோரியா எழுதிருக்கேன்//

நீங்க கேட்டு தான் நாங்க சொல்லணுமா...?

//சொலவடயையும் ஞாபகப்படுத்திக்கோங்க//

சொல் ‘வதை’ ஞாபகப்படுத்திக்கிறோமுங்க.

Jaleela Kamal said...

//உங்க ஊர் திருநெல்வேலியா இருக்கலாம் அதுக்குன்னு
ரத்தம் அருவான்னு பேசி பயமுறுத்த முயற்சிக்காதீங்க//


ஹுசைனாம்மா ஜீன்ஸ் நல்ல பதிவு , ஆஹா இந்த ஜீன்ஸ பார்த்து நாஞ்சிலாரே பயந்துட்டாரே....

Jaleela Kamal said...

//genes பத்தி எங்க biology மிஸ் கூட இவ்வளவு தெளிவா சொன்னதில்ல //

அப்ப போனி பேஸுக்கு ஹுஸனாம்மா சொன்னது நல்ல தெளிவா புரிந்துவிட்டது

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

//அப்ப போனி பேஸுக்கு ஹுஸனாம்மா சொன்னது நல்ல தெளிவா புரிந்துவிட்டது//ஹி ஹி ஹி

அன்புடன் மலிக்கா said...

மூனுபேருக்கும் நடுவில் ஹுசைன்னம்மா பாவம்மா?

அச்சச்சொ இதகேட்க ஆளேயில்லையா
பாவம் எங்க அண்ணாதயும் பிள்ளைகளுமுன்னு கொஞ்சம் எடுத்துச்சொல்லுங்கப்பா..


வந்து பாருங்க இத
http://fmalikka.blogspot.com/2010/03/blog-post.html

அண்ணாமலையான் said...

செமத்தியா இருக்கு

pudugaithendral said...

அதுதான் ஜீன்ஸ்னு தெளிவா போட்டாச்சு. அப்பவே தெரிஞ்சுபோச்சு //
யெஸ்ஸு

athira said...

இதென்ன இது இப்படியெல்லாமா ரெஸ்ரிங் நடக்குது. இதுக்குத்தான் இங்கே சொல்கிறார்கள் “எதுக்கும் தடை போடவேண்டாம்” என...... அடக்கி வைத்தால்தான் ஆசை அதிகமாகுமாம்.

ஹுஸைனம்மா said...

அதிரா, அதுக்காக கத்தியைக் கையில கொடுத்து விளையாடச் சொல்வாங்களா, நல்ல கதையா இருக்கே!!

rafi said...

என்ன கொடுமை ஹுசைனம்மா இது. முடியல.

ஹுஸைனம்மா said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். (இவ்வளவு சீக்கிரமாவான்னு கண்ணு வச்சிடாதீங்க ப்ளீஸ்).