நாளை தீர்ப்பு வரவிருக்கின்ற வழக்கு குறித்தோ, அதன் விவரங்கள் பற்றியதோ இல்லை எனது இந்தப் பதிவு!!
ஒரு வழக்கின் தீர்ப்புக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பும், எதிர்வினைகளும்? ஒரு வழக்கு நடந்து, அதன் தீர்ப்பு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும். அதை விடுத்து. சாதகமாகத் தீர்ப்பு பெற்றவர்கள்/பெறாதவர்கள் ஏன் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்?
இதுகுறித்துப் பேசும்போது, நிச்சயம் எல்லாருக்கும் தர்மபுரி பஸ் எரிப்புக்குக் காரணமான வழக்கு முடிவும், தினகரன் வழக்கு முடிவும், இன்னும் பல வழக்குகளின் “ட்ராமடிக்” முடிவுகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது!!
இப்போது நடக்கும் பல வழக்குகளின் தீர்ப்புகளும் வியப்பையும், சலிப்பையும்தான் தருகின்றன. கீழ்கோர்ட்டில் ஒருவித தீர்ப்பு வந்தால், அதே வழக்கிற்கு மேல்கோர்ட்டில் வேறுவித தீர்ப்பு வருகிறது. அப்படின்னா என்ன அர்த்தம்? நீதிபதிகளையோ, அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையோ குறை சொல்லவில்லை. ஒரு வழக்கு ஆரம்பிக்கும்போது, சம்பவத்தின் தாக்கத்தில் சாட்சிகள், பிரதிகள், வாதிகள் எல்லாரும் சரியாக வழக்கில் பங்குபெறுவார்கள். அதுவே, வழக்கு இழு, இழுவென்று இழுத்து, வாய்தா மேல் வாய்தா வாங்கி நொண்டியடிக்க ஆரம்பிக்கும்போது வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே ஒரு வெறுப்பு வரும்.
அதுவே, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின், தீர்ப்பில் ஒப்புதல் இல்லாதவர், மேல்முறையீடு செய்து மீண்டும் வழக்கு நடக்கும்போது, சாட்சிகள் வலியவரின் மிரட்டல் காரணமாகவோ, அல்லது பணத்துக்கு மயங்கியோ பல்டி அடிக்க நேரும்போது தீர்ப்புகள் வேறுவிதமாக வரும் வாய்ப்புகள் அதிகம். பல வழக்குகளிலும் அதைக் கண்கூடாகக் கண்டும் இருக்கிறோம்.
சமீபத்தில் நடந்த சில வழக்குகளில் கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள், மேல்கோர்ட்டில் விடுதலை ஆயினர். இதனை அறியும்போது, நம் மனதில் என்ன தோன்றும்? சாட்சிகளை விலைக்கு வாங்கியிருப்பார்களோ என்றுதானே? சென்ற வருடமோ, முன்போ, இதுபோல ஒரு வழக்கில் இவ்வாறு சாட்சி பிறழ்தல்கள் நடந்தபோது, சாட்சிகளுக்கு நீதிபதியால் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்னொன்று, காலம் கடந்து சாட்சியம் சொல்ல வரும் சாட்சிகள் ஞாபகக் குறைபாடு காரணமாகத் தடுமாற, அது “benefit of doubt" என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகப் போய்விடுகிறது.
இதோ, இபோதும் நாளை தீர்ப்பு வழங்கவிருக்கப்படும் வழக்கும் பாருங்களேன், 60 வருடங்களாக நடந்து வருகிறது!! இது ஒரு பொது இடம் குறித்த வழக்கு என்றாலும் ஆதாரங்களைத் திரட்ட 60 வருடங்களா வேண்டும்? (இச்சமயத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா? #டவுட்)
அதேபோல, நீதிமன்ற வழக்கு விசாரணையாக அல்லாமல், அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் முடிவுகள்/ஆலோசனைகளும் செயல்படுத்தப்படாமல் அல்லது படவிடாமல் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம், கிருஷ்ணா கமிஷன்.
சட்டக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்களும், நாட்டின் சட்ட-ஒழுங்கைப் போற்றிப் பராமரிக்க வேண்டிய காவலர்கள்-வக்கீல்கள் மோதல்களும், ஏழை இந்தியனுக்கு, நீதி கிடைக்க இவர்களிடம் வருவதைவிட கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்களிடம் போவதே மேல் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.
ஏற்கனவே, வழக்குகளுக்கு ஏற்படும் செலவுகளும், கால விரையமும் மக்களை நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதைத் தவிர்த்து, கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் போய் (அல்லது போய்த் தொலைகிறது என்று) விட வழிவகுக்கும் நிலையில், நீதித்துறையிலும், காவல்துறையிலும் இன்று நடப்பவை மக்களுக்கு மேலும் நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்புகளைத்தான் உருவாக்குகின்றன.
ஒரு கட்டப்பஞ்சாயத்து தாதா நடத்திய தனியார் நீதிமன்றம் அண்மையில் வெளியே வந்தது. அதிகளவு மக்களும் அதில் பயனாளிகனாக இருந்திருக்கிறார்கள். நீதித்துறை மீதிருக்கும் அவநம்பிக்கையாலேயே மக்களும் இத்தகைய கட்டபஞ்சாயத்து தாதாக்களையும், தனியார் நீதிமன்றங்களையும் நாட வேண்டிய கட்டாயத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படுகிறார்கள்.
தனியார் நீதிமன்றங்கள் பெருகி, அரசின் நீதித்துறையும் “அரசு கேபிள் நிறுவனம்” போலாகிடும்!!
|
Tweet | |||
27 comments:
சரியாய் சொல்லிடீங்க...
//சரியான சீர்திருத்தங்கள் அரசால் சட்ட/நீதித் துறையில் கொண்டுவரப்பட்டு, புனரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற
தனியார் நீதிமன்றங்கள் பெருகி, அரசின் நீதித்துறையும் “அரசு கேபிள் நிறுவனம்” போலாகிடும்!!//
சாட்டையடி சகோதரி ஹுஸைனம்மா, சரியாக எழுதி உள்ளீர்கள். சம்பந்தப்பட்ட துறையினர் இதனை கவனத்தில் கொள்வார்களா?
//ஒரு கட்டப்பஞ்சாயத்து தாதா நடத்திய தனியார் நீதிமன்றம் அண்மையில் வெளியே வந்தது. அதிகளவு மக்களும் அதில் பயனாளிகனாக இருந்திருக்கிறார்கள். நீதித்துறை மீதிருக்கும் அவநம்பிக்கையாலேயே மக்களும் இத்தகைய கட்டபஞ்சாயத்து தாதாக்களையும், தனியார் நீதிமன்றங்களையும் நாட வேண்டிய கட்டாயத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படுகிறார்கள்.//
உண்மையிலேயே அதானுங் நடக்குது. தனியா ஒரு எடம் எடுத்து நீதிமன்றம்னு கூட போர்டு வக்க தேவையில்ல. இவன் வாய்தா அவன் வாய்தான்னு இழுக்கறதுக்கும், வக்கீலுக்கு ஃபீஸ் தர்றதுக்கும் இந்த மாதிரி ரூட்டே போதும்னு யோசிக்க வைக்குது. இதுக்கான சீர்திருத்தம் எல்லாம் கொண்டுவரணும்னா சுயேச்சையா யாராவது அமைச்சர் போஸ்டுக்கு வந்தாதான் உண்டு. ஏன்னா கொள்கை அளவுல மாற்றம் இருந்தாலும் மக்களை கொல்ற கொள்கைல எல்லா பார்ட்டிங்களும் ஒன்னாத்தானே இருக்கு?
மேல்முறையிடங்கறதெல்லாம் ஒரு கண்துடைப்புத்தான் கட்டப்பஞ்சாயத்துக்கு உள்ள சக்தி உயர், உச்சநீதிமன்றத்துககு கிடையாது. ஒரு பத்து நீதிபதிகளின் வீட்டில் வருவான வரி சோதனைநடத்தில் ஆறு,ஏழு பேராவது சிக்குவார்கள். சாட்சியும், பிரதிகளும் சந்தையில் கூவி கூவி விற்கிறார்கள்...ஒட்டடை அடைந்த உருப்படாத அரசியலமைப்பு சட்டத்தை வைத்து உருப்படாமல் இருக்கும் ஒரு நாடு இந்தியா...
வீட்டுல உங்களை வக்கீலாக சொல்றது நியாயம்ங்க..
பாய்ண்ட் பை பாய்ண்ட்டா வைக்கிறீங்க..
ஆதங்கம் புரியுது ஹூசைனம்மா.. போபால் வழக்கே இப்போத் தான் என்னவோ ஏதோன்னு இருக்கு.. ஒவ்வொரு வழக்கையும் இழுத்து இழுத்து.. ஹூம்..
சொல்றதில தப்பு இல்ல !
//ஒரு கட்டப்பஞ்சாயத்து தாதா நடத்திய தனியார் நீதிமன்றம் அண்மையில் வெளியே வந்தது. அதிகளவு மக்களும் அதில் பயனாளிகனாக இருந்திருக்கிறார்கள்//
இதென்ன புதுக்கதை ஆவ்வ்வ் இது பத்தி நியூஸ் லிங் ப்ளீஸ்...!
அதானே, ஒரு தீர்ப்புக்கு ஏன் இத்தனை அமளி.
நியாயமான ஆதங்கம்.நல்ல இடுகை.
ஆளுக்கொரு நீதி.
வசதி வாய்ப்புக்கேற்ற நீதி.
வேறென்ன இருக்கு சொல்ல.
நல்ல இடுக்கைங்க ...
[[ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா? #டவுட்)]]
சரியா கேட்டீங்க ... :(
You r right hussainamma.What a lay man tells abt judgement in a subordinate court & a higher court-Ellam ore padiputhaan,appuram yen vithiyaasam ?you know most of the human right organisations are formed to run Kattapanchaayathu.In most of the police stations they do the same kattapanchaayathu.Nice post Hussainamma.
அரசாங்கம் முன்னெச்ச்ரிக்கை என்ற பேரில் நடத்தும் அடாவடித்தான் பெரிய கலவரம் என்ரு நான் நினைக்கிறேன். நல்லதே நடக்கும், இந்த அமைதி எப்பவும் நிலவ பிரார்த்திப்போம்
நல்ல பதிவு.
//தனியார் நீதிமன்றங்கள் பெருகி, அரசின் நீதித்துறையும் “அரசு கேபிள் நிறுவனம்” போலாகிடும்!!///
நீங்கள் காமெடியாக சொன்னாலும் இப்போதைய நிலைமை அப்படிதான் இருக்கிறது.. :)
அட போங்க ஹுசைனம்மா! நம்ப நாட்டுல சட்டத்துறை சீர்திருத்தம் அவ்வளவு சீக்கிரத்தில் வரும்னு சொல்றீங்க :(. எந்த துறையிலும் சீர்திருத்தம் வரப்போறதில்லை வந்தாலும் அதிலும் ஆயிரம் ஓட்டைகள் இருக்கும். எங்க இருந்து சீர்திருத்ததை ஆரம்பிக்கறதுன்னே தெரியாம இடியாப்ப சிக்கலாவுல்ல இருக்கு நிலைமை.
விடுங்க இல்லேன்னா நான் பாட்டுக்கு புலம்பிக்கிட்டே இருப்பேன் :(
வழக்கில் வாதியும் இருக்கமாட்டான், பிரதிவாதியும் இருக்க மாட்டான்; வழக்கு மட்டும் இருக்கும். அதே தான் நடக்கிறது. நல்ல பதிவு ஹூஸைனம்மா.
புதிய மனிதா - வாங்க, நன்றி.
அபுநிஹான் - வாங்க. எங்க, யாரு காதுல வாங்கப்போறாங்க? எதோ நாம புலம்பி ஆத்திக்கவேண்டியதான் மனசை!
அன்னு - சுயேச்சையா அமைச்சரானாலும், அவங்களும் ‘குட்டையில் விழுந்த மட்டை’ ஆகிடுறாங்களே! இதுக்கு ஒரே வழி, நான் அமைச்சராகுறதுதான்போல!!
முத்துலட்சுமிக்கா - ஹி..ஹி.. நன்றிக்கா.. எல்லாம் ஒரு ஆத்தாமைதாங்க்கா..
எல் போர்ட் - ஆமா, இப்படி எத்தனை வழக்கு ‘காலத்தை வென்ற படைப்புகளா’ சுத்திகிட்டிருக்கோ?
வசந்த் - போன பதிவுலயே ஊருலகத்துல வழக்கமாகிப்போன ஒரு விஷயத்தை, ‘இப்படும் நடக்குதா’ன்னு கேட்டீங்க. இப்பவும் பரபரப்பா இருந்த ஒரு சம்பவத்தை, ‘எப்ப நடந்துது’ன்னு கேக்குறீங்களே? இப்படி உலகந்தெரியாத பிள்ளையா இருக்கீங்களே!! அவ்வ்வ்.. இதுக்கு லிங்க் வேணும்னா நான் ஒரு வருஷம் மின்னேயுள்ள பழைய நியூஸ்பேப்பரையெல்லாம் தூசிதட்டணுமே!!
சைவக்கொத்ஸ் - ஆமா, என்னா அலப்பற!!
ஸாதிகாக்கா - நன்றிக்கா.
தமிழ் உதயம் - ம்ம்.. வசதிபோல நீதி..
ஜமால் - டவுட்ட கிளியர் பண்ணத்தான் ஆருமில்லே!!
முனியப்பன் சார் - ஆமாங்க, சில “மனித உரிமை” கழகங்களும் கட்டப்பஞ்சாயத்துக்குன்னே ஆரம்பிச்சுடுறாங்க... வருத்தம்தான்!!
மாலிக் - அரசாங்கமும் தன் கடமையச் செய்யணுமில்லியா? இதையாவது செய்யட்டும்.
அமைதி அப்பா - நன்றி!!
நாடோடி - வாங்க. ஆமாங்க, அரசு கேபிள் நிறுவனம் மாதிரி, இதுவும் காமெடி ஆகிடக்கூடாதே!!
கவிசிவா - வாங்க. நானும் இங்க புலம்பித்தான் இருக்கேன்!!
அம்பிகா - ஆமா, அம்பிகா. வழக்கு மட்டும் சாகாவரம் பெற்று இருக்கும்!!
சட்டமா? இந்தியாவிலா? அப்படின்னா என்ன? எங்கே விற்கிறது? ப்ளிஸ் எனக்கு கொஞ்சம் விளக்குங்கப்பா? ஒருவரை ஒருத்தர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்வது வீட்டிற்கும் மதத்திற்கும் நாட்டிற்கும் நல்லது என்பது என் கருத்து. வாழ்க அன்புடன்
ஆதங்கம் புரியுது. சரியா சொல்லி இருக்கீங்க.
ஹூசைனம்மா! தீர்ப்பு வந்தாச்சு.. நேத்து வரைக்கும் தலைப்பு சரி. ஆனால் இன்னிக்கு தலைப்பில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக். மாத்திக்குங்க.. திருந்தாத தீர்ப்புகள் என்று..
அவர்கள் உண்மைகள் - வாங்க; கொஞ்சம் கஷ்டம்னாலும், தேடினா கிடைச்சுடும் “சட்டம்”. சிரமம் பாக்காம தேடுங்க ப்ளீஸ்!! :-)))
ஜிஜி - வாங்க, நன்றி.
நிஜாம் - ஆமா, மிஸ்டேதான். நன்றி!!
Post a Comment