![]() |
நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை போட்டி |
![]() |
கேன்ஸர் இலச்சினை |
ஒரு காலத்தில், அவ்வப்போது யாரோ ஒன்றிரண்டு பேருக்கு கேன்ஸர் என்று கேள்விப்பட்டதுபோய், தற்காலத்தில் சாதாரணக் காய்ச்சல் போல பெருகிவிட்டது. மருத்துவ முன்னேற்றங்கள் இதை “உயிர்கொல்லி” நோயாக இல்லாமல் ஆக்கிவிட்டன என்பது மகிழ்ச்சியே. கேன்ஸர் நோய் வருவதற்கான காரணங்கள் என்ன என்று கேட்டால், மருத்துவர்களின் பதில் “இன்னதென்று வரையறுத்துச் சொல்ல முடியாது” என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
ஆனால், மருத்துவம் மற்றும் விஞ்ஞானத்துறைகளின் பல ஆராய்ச்சிகள், பல்வேறு காரணிகளை முன்வைத்து, இவையாகவும் இருக்கலாம் என்று கூறுகின்றன. அக்காரணிகளை அறிவதும், விழிப்புணர்வே!! எங்ஙனமெனில், ஒருவேளை நாம் இந்தக் காரணிகளின் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்க நேர்ந்திருக்குமெனில், முறையானப் பரிசோதனைகளைக் குறித்த காலத்தில் செய்து, நம்மைப் பாதுகாத்து, வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வோம்.
1. வாழ்க்கைத் தரம் (Lifestyle)
நமது உடல்நிலையில் நமது வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிவோம். ஆரோக்கியமாக வாழ்வதும், நோயை அடைவதும் நமது உடலின் பராமரிப்பின் அடிப்படையிலேயே அமையும் என்பது கண்கூடு.
மேற்கண்ட வரிகளை வாசித்தவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது, புகை மற்றும் குடிப்பழக்கம் ஆகியவையே!! ஆம், புற்றுநோயின் முதல் எதிரி அவை. புகை/குடிப்பவர்களுக்கெல்லாருக்கும் புற்று வந்துவிடவில்லையே என்பதே இவர்களின் வாதமாக இருக்கும். ஒரு ஆராய்ச்சியின்படி, நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களில் 85 சதவிகிதத்தினர் புகைப்பழக்கம் உள்ளவர்கள் என்பதுதான் இதற்குரிய பதில். அதுபோல, கேன்ஸர் வந்த 100 பேரில் 4 பேர் மது அருந்துபவர்கள்.
பீர் (Beer) மட்டுமே குடிப்பவர்களுக்கும் இதிலிருந்து விலக்கில்லை. அதில் இருக்கும் நைட்ரோசமைன் எனப்படும் பொருளும் ஒரு கான்ஸர் உண்டாக்கும் பொருளே!!
அடுத்தது, நமது உணவுப்பழக்கங்கள், உடல் பருமன், உடற்பயிற்சி ஆகியவை. இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துகள், அதிகம் சேர்த்துக் கொள்வதோடு, பதனப்படுத்தப்பட்ட அல்லது செயற்கையாகக் கூடுதல் சுவையூட்டப்பட்ட (preservatives and additives) உணவுகளைத் தவிர்க்கவேண்டும். ரெடிமேட் உணவுகள், துரித உணவுகள் (frozen foods, fast food), பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், பானங்கள் போன்றவை இதில் அடங்கும். இவற்றில் கவனம் செலுத்தினாலே உடல் பருமன் கட்டுக்குள் வரும்.
உணவு சமைக்கும்போது, உணவை அதிக வெப்பத்தில் சமைக்கும்போது வெளிப்படும் வேதிப்பொருட்களும் ஆபத்தானவை. எண்ணெயை அதிகம் சூடாக்கிப் பொரிப்பது, அதிக வெப்பத்தில் கிரில்/ பார்பெக்யூ செய்வது போன்றவைவிட, கொதிக்க வைத்து வேக வைப்பதுபோன்ற முறைகளே நல்லவை.
2. வேதிப்பொருட்கள் (Chemicals):
கெமிக்கல்கள் என்றதும் ஆலைகள் பற்றிப் பேசப் போகிறோம் என்று நினைப்பீர்கள். இல்லை, அன்றாடம் நம் தினப்படி வாழ்வில் நாம் எத்தனையெத்தனை வேதிப்பொருட்களைப் புழங்குகிறோம் என்று அறிந்தால் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள்!! உணவுகளில் பதனப்படுத்தவும், சுவையூட்டவும், நிறம் கூட்டவும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
அழகுசாதனப் பொருட்கள் இன்று பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இன்றியமையாதவை ஆகிவிட்டன. குளியல் சோப்புகள், ஷாம்பூ, டியோடரண்ட், ஷேவின் க்ரீம், லோஷன்கள் ஏன் பற்பசைகள் உட்பட்ட அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில், அவை நீண்ட நாள் கெடாமலிருக்க வேண்டி “பாராபென்” எனப்படும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது நம் உடலில் சேரும்போது, எஸ்ட்ரோஜன் ஹார்மோன் போல செயல்படும். மேக்கப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன கெமிக்கல்கள் இருக்கின்றன என்பதை இங்கு விபரமாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
மார்பகப் புற்று வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட திசுக்களில் பரிசோதனை செய்தபோது, 60 சதவிகிதத்தில் இந்த பாராபென் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!
தலைக்கு அடிக்கும் “டை” க்கும், கேன்ஸருக்கும் தொடர்பு இல்லையென்று அறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்பதால், வழமையாக ‘டை’ அடிப்பவர்கள், இயற்கைப் பொருட்களுக்கு மாறுவது சிறந்தது.
இதுதவிர, ஆஸ்பெஸ்டாஸ் உடல்நலத்திற்குக் கேடானது என்று அறிந்திருக்கிறோம். இதன் துகள்கள் நம் மூச்சுக்குழலுக்குள் நுழைந்தால் நுரையீரல் கேன்ஸர் ஏற்படுத்தலாம். போலவே பெயிண்ட், பூச்சிக்கொல்லி மருந்து, பெட்ரோல் போன்ற வேதிப்பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்பவர்கள் அததற்குரிய பாதுகாப்பு உபகரணங்களையும், நடைமுறைகளையும் தவறாது கடைபிடித்தல் இன்றியமையாதது.
3. நோய்த்தொற்று மற்றும் எதிர்ப்புச் சக்தி குறைபாடு:
வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் சில நோய்த் தொற்றுகள் தொடர்ச்சியாகக் காணப்பட்டால், அவை நாளடைவில் புற்றாக மாற சாத்தியமுள்ளது. உதாரணமாக, HIV வந்தால் கேன்ஸரும் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் ஹெச்.ஐ.வி. என்பதே உடலின் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தை அடியோடு அழிக்கும் நோய். எதிர்ப்புச் சக்தி இல்லா இடம் புற்றுநோய்க்கு ஏற்றதல்லவா?
அதுபோல, HPV - Human papillomaviruses - கருப்பை வாய் புற்றையும்,
Hepatitis B & C - ஈரல் புற்றுநோயையும் கொண்டுவரும் வாய்ப்புகள் உண்டு.
எனவே தொற்று ஏற்படாதவாறு காத்துக் கொள்ளுதல் வேண்டும்; மீறி வரும் நோய்களுக்குத் தகுந்த சிகிச்சையை அவசியமான கால அளவுக்கு முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. ஹார்மோன்கள்:
இத்தலைப்பைக் கண்டதும் உங்கள் புருவங்கள் வியப்பால் உயர்ந்திருக்கும், இல்லையா? ஆம், நம் உடலின் கிட்டதட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அல்லது தொடர்புடைய ஹார்மோன்களும்கூட புற்று ஏற்படுத்தும் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இயற்கையான ஹார்மோன்களால் என்றுமே பிரச்னையில்லாதபடிக்குத்தான் இருக்கும்படியானதுதான் இறைவன் படைப்பு. அந்த ஹார்மோன் அளவு புறக்காரணிகளால் தூண்டப்படும்போதுதான் பிரச்னை தொடங்கும். அந்தப் புறக்காரணிகள் எவையென கண்டு அவற்றில் கவனம் செலுத்துவோம்:
(அ) உடல் பருமன்: என்னாதுன்னு துள்ளி எழுந்துட்டீங்களா? ஆம், உடல் எடை அதிகமானால், இன்சுலின், எஸ்ட்ரோஜன் போன்ற சில ஹார்மோன் சுரப்புகள் அதிகமாகும் என்பதால், அவை மார்பகம், உணவுக்குழல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் புற்று வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
(ஆ) ஹார்மோன் சிகிச்சை: பெண்களுக்கு மெனோபாஸ் சம்யத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கான சிகிச்சையாக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. மேலும் கருத்தடை மாத்திரைகளும் ஹார்மோனைக் கொண்டவையே. இவைகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்வது மார்பக, கருப்பை, ஓவரி கான்ஸர் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
(இ) வேதிப்பொருட்கள்: அழகுசாதனப் பொருட்கள், அடர்ந்த நிற தலைச்சாயங்கள் (hair dye) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் “பாராபன்” போன்ற வேதிப்பொருள்கள், உணவுகளில் காணப்படும் பூச்சிகொல்லி மருந்துகள், மாசடைந்த சுற்றுச்சூழல் ஆகிவையும் நமது உடலின் ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் உண்டாக்கக்கூடியவை.
5. சுற்றுச்சூழல்:
i. சிகரெட், பீடி, புகையிலை போடும் பழக்கம் இல்லாவிட்டாலும்கூட, சிகரெட்/பீடி பிடிப்பவர்கள் வெளிடும் புகையால் பாதிப்படைவது. (Passive smoking)
ii. அதிகப்படியான சூரிய வெளிச்சம்:
2. வேதிப்பொருட்கள் (Chemicals):
கெமிக்கல்கள் என்றதும் ஆலைகள் பற்றிப் பேசப் போகிறோம் என்று நினைப்பீர்கள். இல்லை, அன்றாடம் நம் தினப்படி வாழ்வில் நாம் எத்தனையெத்தனை வேதிப்பொருட்களைப் புழங்குகிறோம் என்று அறிந்தால் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள்!! உணவுகளில் பதனப்படுத்தவும், சுவையூட்டவும், நிறம் கூட்டவும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
![]() |
thedailygreen.com |
மார்பகப் புற்று வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட திசுக்களில் பரிசோதனை செய்தபோது, 60 சதவிகிதத்தில் இந்த பாராபென் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!
![]() |
ewg.org |
இதுதவிர, ஆஸ்பெஸ்டாஸ் உடல்நலத்திற்குக் கேடானது என்று அறிந்திருக்கிறோம். இதன் துகள்கள் நம் மூச்சுக்குழலுக்குள் நுழைந்தால் நுரையீரல் கேன்ஸர் ஏற்படுத்தலாம். போலவே பெயிண்ட், பூச்சிக்கொல்லி மருந்து, பெட்ரோல் போன்ற வேதிப்பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்பவர்கள் அததற்குரிய பாதுகாப்பு உபகரணங்களையும், நடைமுறைகளையும் தவறாது கடைபிடித்தல் இன்றியமையாதது.
3. நோய்த்தொற்று மற்றும் எதிர்ப்புச் சக்தி குறைபாடு:
வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் சில நோய்த் தொற்றுகள் தொடர்ச்சியாகக் காணப்பட்டால், அவை நாளடைவில் புற்றாக மாற சாத்தியமுள்ளது. உதாரணமாக, HIV வந்தால் கேன்ஸரும் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் ஹெச்.ஐ.வி. என்பதே உடலின் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தை அடியோடு அழிக்கும் நோய். எதிர்ப்புச் சக்தி இல்லா இடம் புற்றுநோய்க்கு ஏற்றதல்லவா?
அதுபோல, HPV - Human papillomaviruses - கருப்பை வாய் புற்றையும்,
Hepatitis B & C - ஈரல் புற்றுநோயையும் கொண்டுவரும் வாய்ப்புகள் உண்டு.
எனவே தொற்று ஏற்படாதவாறு காத்துக் கொள்ளுதல் வேண்டும்; மீறி வரும் நோய்களுக்குத் தகுந்த சிகிச்சையை அவசியமான கால அளவுக்கு முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. ஹார்மோன்கள்:
இத்தலைப்பைக் கண்டதும் உங்கள் புருவங்கள் வியப்பால் உயர்ந்திருக்கும், இல்லையா? ஆம், நம் உடலின் கிட்டதட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அல்லது தொடர்புடைய ஹார்மோன்களும்கூட புற்று ஏற்படுத்தும் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இயற்கையான ஹார்மோன்களால் என்றுமே பிரச்னையில்லாதபடிக்குத்தான் இருக்கும்படியானதுதான் இறைவன் படைப்பு. அந்த ஹார்மோன் அளவு புறக்காரணிகளால் தூண்டப்படும்போதுதான் பிரச்னை தொடங்கும். அந்தப் புறக்காரணிகள் எவையென கண்டு அவற்றில் கவனம் செலுத்துவோம்:
(அ) உடல் பருமன்: என்னாதுன்னு துள்ளி எழுந்துட்டீங்களா? ஆம், உடல் எடை அதிகமானால், இன்சுலின், எஸ்ட்ரோஜன் போன்ற சில ஹார்மோன் சுரப்புகள் அதிகமாகும் என்பதால், அவை மார்பகம், உணவுக்குழல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் புற்று வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
(ஆ) ஹார்மோன் சிகிச்சை: பெண்களுக்கு மெனோபாஸ் சம்யத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கான சிகிச்சையாக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. மேலும் கருத்தடை மாத்திரைகளும் ஹார்மோனைக் கொண்டவையே. இவைகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்வது மார்பக, கருப்பை, ஓவரி கான்ஸர் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
(இ) வேதிப்பொருட்கள்: அழகுசாதனப் பொருட்கள், அடர்ந்த நிற தலைச்சாயங்கள் (hair dye) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் “பாராபன்” போன்ற வேதிப்பொருள்கள், உணவுகளில் காணப்படும் பூச்சிகொல்லி மருந்துகள், மாசடைந்த சுற்றுச்சூழல் ஆகிவையும் நமது உடலின் ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் உண்டாக்கக்கூடியவை.
5. சுற்றுச்சூழல்:
i. சிகரெட், பீடி, புகையிலை போடும் பழக்கம் இல்லாவிட்டாலும்கூட, சிகரெட்/பீடி பிடிப்பவர்கள் வெளிடும் புகையால் பாதிப்படைவது. (Passive smoking)
ii. அதிகப்படியான சூரிய வெளிச்சம்:
சூரிய ஒளிதான் நமக்கு விட்டமின்-டி தருகிறது. ஆனால், அதில்தான் புற ஊதாக் கதிர்களும் வெளிப்படுகின்றன. எனவே குறிப்பிட்ட அளவு வரைதான் சூரிய ஒளி நல்லது. அதற்குமேல், சருமம் பாதிக்கப்பட்டு தோல் கேன்ஸர்கூட ஏற்படலாம். ஆகவே நேரடி சூரிய ஒளி மற்றும் மண், பனி, நீர் ஆகியவற்றால் பிரதிபலிக்கப்படும் சூரியஒளியைத் தவிர்க்க, உடல் முழுவதையும் மறைக்குமாறு உடை அணிவதே சிறந்தது. சன் க்ரீம்களால், உடைக்கு நிகரான முழுமையான பயன் இராது.
iii. கதிர்வீச்சு:
கதிர்வீச்சு என்றால் அணுஉலைகள், அணுகுண்டுகளின் கதிர்வீச்சுதான் நினைவுக்கு வரும். ஆனால், இன்னும் எத்தனையோ வகைகளில் கதிர்வீச்சை நாம் தினம்தினம் எதிர்கொள்ளத்தான் செய்கிறோம்.
## இயற்கையாகவே சில இடங்களில் கதிர்வீச்சுத் தன்மையுடைய ரேடான் போன்ற வாயுக்கள், கனிமங்கள் நிறைந்திருக்கும். இவற்றால் கதிர்வீச்சுக்கு ஆளாக நேரலாம். மேலும், சுரங்கம் போன்ற இடங்களில் பணிபுரிவோருக்கு இதுபோன்ற இயற்கைவளங்களினால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சு பாதிப்பு வர வாய்ப்பு அதிகம்.
## எக்ஸ்-ரே போன்ற மருத்துவப் பரிசோதனைகள். பொதுவாக மருத்துவப் பரிசோதனைகளுக்காக எடுக்கப்படும் எக்ஸ்-ரேக்களில் மிக மிகக் குறைந்த அளவே கதிர்கள் செலுத்தப்படும். அதனால் கேன்ஸர் விளைவது அரிதே.
## கதிர்வீச்சு சிகிச்சை: கேன்ஸருக்குக் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையும் இந்தப் பிரிவில் வரும். இது விஷத்தை விஷத்தால் முறிப்பதுபோலத்தான். இங்கு வந்திருக்கும் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்பதே முதல் நோக்கம். அதனால், இச்சிகிச்சை தவிர்க்க முடியாததே. எனினும், இந்த ரேடியஷன் சிகிச்சை, கேன்ஸர் கட்டிகளை மட்டுமே குறிவைத்துச் செய்யப்படுவதால், அதிகப் பாதிப்பு இராது.
## செல்ஃபோன் மற்றும் செல்ஃபோன் டவர்கள் - இவையும் ஆபத்து இருக்கா இல்லியா ரேஞ்சுக்கு பயமுறுத்துபவையே. அளவாகப் பயன்படுத்துவது, உடல்நலம், மனநலம், பணநலம் தரும்.
iv. மாசடைந்த சுற்றுச் சூழல்:
* வாகனங்களால் வெளியிடப்படும் புகைகள்
* ஆலைகளிலிருந்து வெளிப்படும் புகைமண்டலம்
* சுத்திகரிக்கப்படாத ஆலைக்கழிவுகள்
* தரம் பிரிக்காமல் குப்பைக் கிடங்குகளில் இடப்படும் பிளாஸ்டிக், மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்துள்ள குப்பைகள்
இவையும், இவை போன்ற பலவும் நாளடைவில் காற்று, குடிநீர், மண் என எல்லாவற்றிலும் கலந்து உண்டாக்கும் கடுமையான பாதிப்புகளில் கேன்ஸரும் ஒன்று என்பது வேதனையான உண்மை.
6. பரம்பரை காரணங்கள்:
குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு இருந்தால், மற்றவர்களுக்கும் வரும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைந்த அளவே. அதுவும் ஒருசில வகை கேன்ஸர்கள்தான் பரம்பரையாக வரும் வாய்ப்புண்டு. அப்படியே, குடும்பத்தில் யாருக்கேனும் ஏற்கனவே வந்திருந்தால், நமது வாழ்க்கை முறையை (lifestyle) அதற்கேற்றவாறு மருத்துவர் அறிவுரையோடு மாற்றிக் கொண்டால் வரும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.
en.wikibooks.org |
ஆனால், பரம்பரை காரணங்கள் இல்லாதவர்கள், ‘நமக்குத்தான் வர வாய்ப்பில்லையே’ என்று அலட்சியமாக இருந்துவிட நேருகிறது. மேலும், பலர் தம் வாழ்க்கை முறையால் (சிகரெட், குடி, தவறான உணவுப்பழக்கங்கள்) தனக்கு கேன்ஸர் வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், தம் பரம்பரைக்கும் அதன் ஆபத்தைத் தந்துவிடும் காரணியாக அமைந்து விடுகின்றனர்!!

நல்ல சுற்றுச்சூழல், மாசுபடாத காற்று, விஷமாகாத குடிநீர் முதலியனவற்றைப் போல, நமது தலைமுறைக்கு நல்ல உடல்நிலையைத் தந்து செல்வதும் நம் கடமைதானே!!
Ref:
1. http://cancerhelp.cancerresearchuk.org/
2. http://www.cancer.gov/
3. http://www.cancer.org/
4. http://www.medicalnewstoday.com/
5. http://quitsmoking.about.com/
6. http://www.reloveplanet.com/
7. http://medicmagic.net/
8. http://www.webmd.com/
9. http://urbanlegends.about.com
|
Tweet | |||