Pages

Showing posts with label சுதந்திரப் போராட்டம். Show all posts
Showing posts with label சுதந்திரப் போராட்டம். Show all posts

ஒரு சொல்லப்படாத கதை...







1945-ல், பிரதமர் அட்லீ தலைமையில் புதியதாகப் பதவியேற்றுக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க முன் வந்தது. அதற்கு முன்னர், இந்தியாவில் மத்திய அரசு எப்படி அமைய வேண்டும் என்று தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. சுதந்திர இந்தியாவின் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் வரையறுத்திருந்த திட்டமே காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரால் - பட்டேல் தவிர மற்ற அனைத்துத் தரப்பாலும் - ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்தத் திட்டம், பாதுகாப்பு, வெளியுறவு, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளை மட்டும் மத்திய ஃபெடரல் அரசின்கீழ் கொண்டு வந்து, மாநிலங்களுக்கு அதிக சுயாட்சியைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்திருந்ததுதான் படேலின் எதிர்ப்புக்குக் காரணம். எனினும், தூதுக் குழுவின் முழு ஒப்புதலையும் பெற்று, அத்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசும், முஸ்லிம் லீகும் இணைந்து இடைக்கால அரசும் அமைத்தன. அதிலும், தனக்குப் பிடித்த உள்துறையை படேல் முஸ்லிம் லீகுக்குக் கொடுக்க மறுத்த காரணத்தால், நிதித் துறையைக் கொடுக்க வேண்டி வந்தது. அதன் மூலம், இடைக்கால அரசில் முஸ்லிம் லீகின் கை ஓங்க வழிவகுத்தது. அதனால் ஏற்பட்ட பிரச்னைகளே, அதுவரை ஒண்றிணைந்த இந்தியாவை ஏற்றுக் கொண்டிருந்தவர்களையும் பிரிவினைக்கு ஆதரவாகத் தள்ளியது.

அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வேவலும் சுதந்திர இந்தியா பிளவுபடாத ஒன்றிணைந்த இந்தியாவாகத்தான் இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தினார். அதற்காக சுதந்திரத்தைச் சிறிது காலம் தள்ளிப் போட்டாலும் பரவாயில்லை என்ற கருத்து கொண்டிருந்தார். ஆனால், அட்லீயோ அதை ஏற்கவில்லை. ஆகவே, லார்ட் வேவலை நீக்கிவிட்டு, தனக்குச் சாதகமானவரான லார்ட் மவுண்ட் பேட்டனை வைஸ்ராயாக நியமித்தார்.

இந்தியா வந்த மவுண்ட் பேட்டனின் “இந்தியப் பிரிவினை” கருத்தை முதன்முதலில் உவகையோடு ஏற்றுக் கொண்டது வல்லபாய் பட்டேல். பேச்சுத் திறமை மிக்கவரான மவுண்ட் பேட்டன் அடுத்துச் சந்தித்தது, பிரிவினைக்கு கடும் எதிர்ப்போடு இருந்த ஜவஹர்லால் நேருவை. அவர் மதில் மேல் பூனையாக்கப் படுகிறார். அடுத்து கிருஷ்ண மேனன் போன்றோரைப் பதவி ஆசை காட்டி தம் கருத்துக்கு இசைய வைக்கிறார்.

சக தலைவர்கள் மனம் மாறுவதைக் கண்டு வேதனையடைந்த ஆசாத், காந்தியிடம் இதை முறையிட, அவரோ, “பிரிவினை என்று நடந்தால், அது என் பிணத்தின்மீதுதான் நடக்கும்” என்று உறுதியாக கூற, மிகுந்த நம்பிக்கையோடு செல்கிறார். ஆனால், அடுத்த இரண்டே நாட்களில் மவுண்ட் பேட்டன் மற்றும் பட்டேலைச் சந்தித்த காந்தியின் பேச்சில் தெரியும் மாற்றத்தைக் கண்டு அதிர்ந்து போகிறார். பட்டேலின் கருத்தையே காந்தியும் தனது வாதங்களாக முன்வைப்பதைக் கண்டு நம்பிக்கை இழந்துவிடுகிறார்.

மேலும், மௌலானா ஆசாத் அவர்கள் வகுத்துத் தந்த சுயாட்சி திட்டமும் மவுண்ட் பேட்டன் மற்றும் பட்டேலின் வாதங்கள் காரணமாக, காந்தியால் கைவிடப் படுவதைக் கண்டு மனம் நோகிறார். கடைசி வாய்ப்பாக லார்ட் மவுண்ட் பேட்டனைச் சந்தித்து, பிரிட்டிஷ் தூதுக் குழுவினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாநில சுயாட்சியையாவது குறைந்த பட்சம் ஏற்க வேண்டுகோள் விடுக்கிறார். அட்லீ மற்றும் மந்திரிசபையிடம் அதுகுறித்துப் பேசுவதாக வாக்களிக்கும் மவுண்ட்பேட்டன், தன் வாக்கை நிறைவேற்றவில்லை.

அவரது விருப்பத்திற்கு மாறாக, இந்தியா பிரிக்கப்படுவதோடு, மாநில சுயாட்சியும் வழங்கப்படவில்லை!! கடைசி வரை, ஏன் இந்திய பிரிவினைக்குப் பின்னரும், அதனை எதிர்த்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்!!

மௌலானா அபுல்கலாம் ஆஸாத் குறித்த எனது முந்தைய பதிவில், இடைக்கால அரசின் செயற்பாடுகள், அரசில் முஸ்லிம் லீகின் கை ஓங்க வழிவகுத்தது என்று குறிப்பிட்டிருந்தேன். அதில் ஏற்பட்ட வேறுபாடுகளே இரு தரப்பினரையும் பிரிவினையை நோக்கித் தள்ளியது எனலாம். அது தொடர்பான சம்பவங்கள் சுவாரசியமானதும், படிப்பினைகள் நிறைந்ததும் ஆகும்!!

சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்பாக, இரு கட்சிகளும் கூட்டாக இணைந்து இடைக்கால அரசு அமைத்தன. முஸ்லிம் லீகிற்கு கொடுக்கப்பட வேண்டிய அமைச்சரவை துறைகள் தேர்வில், உள்துறையை பட்டேல் விட்டுத்தர மறுத்தார்.

தொடர்ந்து, நிதித் துறையை ஒதுக்கலாம் என ஆஸாத்தின் எதிப்பையும் மீறி முடிவெடுத்தது காங்கிரஸ். இதற்குச் சொல்லப்பட்ட காரணம், நிதித் துறையை நிர்வகிக்கும் அளவுக்கு திறமைசாலிகள் அவர்களிடம் இல்லாததால், மறுத்து விடுவர் அல்லது ஏற்றுக் கொண்டாலும் சொதப்பி விடுவர் என்று காங்கிரஸார் சிலர் நினைத்தனர்.

ஆனால், நிதித் துறையின் அதிகாரம் மற்ற எல்லாத்
துறைகளினுள்ளும் நீளும் என்பதை அறிந்த லீக் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. மற்ற அமைச்சர்கள் தம் துறையில் என்ன செலவு செய்ய வேண்டுமென்றாலும் - ஒரு பியூனை நியமிக்க வேண்டுமென்றாலும்கூட, நிதித் துறையின் ஒப்புதலைப் பெற்றேயாக வேண்டும்!! குறிப்பாக, இதைச் சற்றும் எதிர்பாராத படேல் மிகவும் நொந்து போனார்.

மேலும், இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில், சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்தியத் தொழிலதிபர்கள் அதிகளவில் வரி ஏய்ப்பு செய்திருந்தனர். அதைக் கண்டறிந்து, வரியைக் கட்டச் செய்வதற்காக நிதி மந்திரி லியாகத் அலிகான் ஒரு கமிஷனை நியமித்தார்.

அடுத்ததாக, அவர் போட்ட பட்ஜெட் திட்டம், பணக்காரர்களை ஏழைகளாகவும், ஏழைகளைப் பணக்காரர்களாகவும் ஆக்கும்படி இருந்தது. இது காங்கிரஸின் கொள்கையை ஒத்திருந்ததால், அதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை - இருவரைத் தவிர!!

ஆம், வரிக்கான கமிஷனையும், பட்ஜெட்டையும் கடுமையாக எதிர்த்த அந்த இருவர் - சர்தார் பட்டேலும், இராஜாஜியும்!! தொழிலதிபர்களில் அதிகமானோர் இந்துக்களாக இருந்ததால், இவற்றை “இந்துக்களுக்கெதிரான நடவடிக்கை” என அவர்கள் இருவரும் எதிர்த்தனர்!!

இப்படியே இழுபறி நீடித்ததும் இரு தரப்பும் பிரிவினையை ஆதரிக்கும் மனப்பாங்கினை நோக்கித் தள்ளப்பட்டனர்!! ஆசாத் அவர்களோ, கவர்னர் ஜெனரலான வேவலிடம், சுதந்திரம் வழங்குவதைச் சற்றுத் தாமதப்படுத்தினாலும் பரவாயில்லை, பிரிவினை மட்டும் வேண்டாம் என்று வேண்டினார்!!

Rest is history!!

மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய ”இந்திய விடுதலை வெற்றி” நூலில் இருந்து....

Post Comment

சூரிய உதயத்தைக் காணாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்




ந்த ஆசிரியரின் இன்னொரு புத்தகத்தை முன்பு வாசித்தபோது, எடுத்த கையோடு முடித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது. ஆனாலும், இந்தப் புத்தகம் ஒரு  இந்திய  சுதந்திரப் போராட்ட வீரரின் கதை என்பதால், ஒரு பத்து  நிமிஷ time-filling-காக வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்ம்ம்ம்பி எடுத்தேன்... ஆனால்... ஒரு ஆங்கில ஆக்‌ஷன் படம் பார்க்கும் விறுவிறுப்புடன் விழிவிரித்து வாசித்து முடித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது.

கீழே வைத்தது புத்தகத்தை மட்டும்தான். புத்தகம் தந்த பிரமிப்புகளும், நினைவுகளும், உணர்வுகளும் விட்டு விலகவே இல்லை. இதன் தொடர்ச்சியாக இன்னொரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆம்!!

”அகண்ட பாரதமாக” இருந்த இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்களால், கடைசி வரை தன் ஆளுகைக்குக் கொண்டு வரவே முடியாதது, (இன்றைய பாகிஸ்தானின்) வடமேற்கு எல்லை மாகாணமான வஜீரிஸ்தானை!! இந்தத் தோல்வியை அன்றைய இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே ஆட்சியாளர்களால் அவமானத்துடன் ஒப்புக்கொண்டுள்ளனர்!!

ந்த வீர வரலாற்றை விவரிக்கும் புத்தகம்தான், நாவலர் ஏ.எம்.யூஸுஃப் அவர்கள் எழுதிய “இப்பி ஃபக்கீர்”!!  இவர்களின் வீரத்திற்குச் சான்றாக ஒரே ஒரு தகவலைப் பகிர்கிறேன்...  ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்குகளைக் கொள்ளையடித்துச் செல்லும் இவர்கள், “உங்கள் துப்பாக்கிகள் எங்கள் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பயிற்சி அளிக்கத்தான் பிரயோஜனம்” என்று எள்ளலாகச் சொல்லிச் செல்வார்கள்!!  அது உண்மையே என்று அவர்களின் கையில் இருக்கும் அதிநவீன ஆயுதங்கள் சாட்சியளிக்கும். 
தங்களால் கட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை என்று உணர்ந்துமே, வீராப்பிற்காக 18 முறை அப்பிராந்தியத்தினர் மீது தாக்குதல் நடத்தியும், ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. இத்தாக்குதல்களில் ஒன்றை முன்நின்று நடத்தியவர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமர் ஆன “வின்ஸ்டன் சர்ச்சில்” ஆவார்.

கனடா முதல் ஆஸ்திரேலியா வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை பல நாடுகளில் தங்கள் ஆட்சியை நடத்தி, “சூரியன் அஸ்தமிக்காத ஆட்சி” என்று பெருமை பாராட்டிக் கொண்டவர்களால் இந்த மாகாணத்தில் மட்டும், இந்தியாவிற்கு விடுதலையளித்த 1947 வரை சூரியோதயத்தைக் காணவே முடியவில்லை.இதைத் தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தை வாசித்து முடித்ததும், அதே பகுதியைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்  ”கான் அப்துல் கஃபார் கான்” -  அவரது காந்தீயக் கொள்கைகளின் காரணமாக  “எல்லை காந்தி” என்று அழைக்கப்பட்டவர் - இவரின் வரலாற்றை வாசிக்கும் ஆவல் மிகைத்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இரு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன இவரைப் பற்றி. ஒன்று ஆங்கிலப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு - இதன் பதிப்பகம் குறித்த தகவல்கள் இல்லாமையால் கிட்டவில்லை, இன்னொன்று தமிழில் எழுதப்பட்ட சிறு வரலாற்று ஏடு. இப்புத்தகம் கைக்கு வரக் காத்திருக்கிறேன்.

இப்பி ஃபக்கீரின் வரலாறு ஏன் கஃபார் கானை நினைவுபடுத்தியது எனக்கு? காரணம், நோக்கம் ஒன்று என்றாலும், இருவேறு பாதைகளில் பயணித்த இருவரின் இரு வேறு குணங்கள்!!  இப்பி ஃபக்கீர் என்றழைக்கப்பட்ட குலாம் மிர்ஸா கான்,  வீரதீரச் செயல்களால் கவர்கிறார் என்றால், எல்லை காந்தி அஹிம்சையில் மிகுந்தவர். இந்தியாவைப் பிரிக்கவே கூடாது என்று தீவிரமாக  எதிர்த்தவர். தங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் அலல்து தனிநாடாகவேனும் அறிவிக்க வேண்டுமெனக் கோரியவர்; பிரிக்கப்பட்ட பாகிஸ்தானின் தலைமையை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்;  அதன் காரணமாக சிறையில் 12 ஆண்டுகளுக்கு மேல் அடைக்கப்பட்டவர்.

இப்பி ஃபக்கிர், முதலில் ஜின்னாவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டாலும், பின்னர் அதுவும் பிரிட்டிஷின் பிரதிபலிப்பாய் இருந்ததால், எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினர் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்றாலும் ஒன்றாக இணைந்து போராடியது போல தகவல்கள் கிடைக்கவில்லை. இருவரும் சந்திருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை. 

வையெல்லாம் வலையில் வாசித்து அறிந்தவையே. பள்ளியில் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இருவரைப் பற்றியுமே படித்ததில்லை!!  என் தலைமுறையாவது பரவாயில்லை....  ஆனால், இனிவரும் தலைமுறையோ பாவம்...  மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்களையெல்லாம் வீரர்கள் என்று படிக்க வேண்டிய   பரிதாபம்!!


For Further reading:

https://www.facebook.com/JanPalwasha/posts/197213384034930:0
http://www.khyber.org/publications/021-025/faqiripi.shtml
http://pakteahouse.net/2016/01/26/bacha-khan-faqir-of-ipi-and-the-afghanistan-angle/


 reg. Ghaffar Khan:
https://www.youtube.com/watch?v=mcY1QHlRHlo
http://www.thefrontiergandhi.com/excerpts.html
The Frontier Gandhi: Badshah Khan, A Torch for Peace
https://www.youtube.com/watch?v=0fSnlTFsPf8
 

Post Comment

இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்






1857 - சிப்பாய்க் கலக வருடம். பரபரப்பான போர்க்களத்தில், போர் உடை தரித்து, தன் நாட்டு போர் வீரர்களுக்குத் தலைமையேற்று, கையில் வாளுடன் குதிரை மீதமர்ந்து தீரத்துடன் போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனியின் படையினர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தாள் அப்பெண்.  நீங்கள் நினைப்பது போல, ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய் அல்ல அப்பெண்.

ரந்து விரிந்த முகலாய அரசுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டி ஆட்சி நடத்தி வந்த சிற்றரசுகள் இந்தியாவில் ஏராளம் உண்டு. இம்மாதிரியான சிற்றரசுகளை, முகலாய அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றுத் தருகிறோம் என்று நயவஞ்சகம் பேசி,  தம் பக்கம் இணைத்துக் கொண்டது கிழக்கிந்திய கம்பெனி அரசு. இணைந்த பின்னர் அவர்கள் விதித்த கெடுபிடிகளைக் கண்டு, தாம் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து நொந்து போயிருந்தன அச்சிற்றரசுகள். விலகி வரமுடியாதபடிக்கு பிரிட்டிஷாரிடமிருந்து நவீன ஆயுதங்கள் வாங்கிய வகையில் கடன்சுமை அந்த அரசுகளின்மீது ஏற்றப்பட்டிருந்தது.உலக வங்கிடெக்னிக் அப்போதே ஆரம்பித்துவிட்டது!! கடனைத் திருப்பிக் கட்டமுடியாத சிற்றரசுகளை அதன் மன்னர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைத்துக் கொண்டார்கள்.

த்தரப் பிரதேசத்தில் லக்னோவின் அருகில் இருந்தஔத்என்ற குறுநில அரசு, ”வஜீர் அலி ஷாஎன்ற குறுநில மன்னரால் ஆண்டுவரப்பட்டது.  ஆங்கில அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து,  பட்ட கடனைத் திருப்பிக் கட்ட முடியாததால், 1856-ல் கிழக்கிந்திய கம்பெனியின் நெருக்குதலைத் தாங்கமுடியாமல் அரசர் நாட்டை விட்டு வெளியேறினார்.
  
அரசர் வஜீர் அலி ஷாவின் மனைவிகளுள் ஒருவர்இஃப்திகருன் னிஸாஎன்ற இளம்பெண். வெளியேறத் துணிந்த கணவரை, கோழைபோல நாட்டைவிட்டுச் செல்வதை விட, வீரமாகப் போரிட்டு போர்க்களத்தில் மடிவதே மேல் என்று இவர் தடுத்துப் பார்த்தார். ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அந்த பெண்ணுக்கிருந்த வீரதீரம், அரச குடும்பத்தில் பிறந்து போர்ப்பயிற்சிகள் பல பெற்று வளர்ந்த அரச குலத்தைச் சேர்ந்த அந்த ஆணிடம் இல்லை!!

அரசவையைச் சேர்ந்தவர்கள், அரச பொறுப்பை ஏற்று, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட தமது மகன்களில் ஒருவருக்குப் பட்டம் சூட்டுமாறு அரண்மனையின் அனைத்து பட்டத்து அரசிகளிடமும் வேண்டுகோள் விடுக்க, அவர்களோ ஆங்கிலேயருக்கு அஞ்சி மறுத்தார்கள். இஃப்திகருன் னிஸாஒருவரே தைரியமாக முன்வந்தார்!!

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பொறுப்பு தற்போது, பேகம் ஹஸ்ரத் மஹல் என்று பட்டம் சூட்டப்பெற்றஇஃப்திகருன் னிஸாவசம் வந்தது. இவர்  பிர்கிஸ் கத்ர்என்ற தனது 12 வயது மகனுக்கு ஔத் நாட்டு அரசனாகப் பட்டம் சூட்டினார். மகன் அறியாச் சிறுவன் என்பதால், மன்னரின் பிரதிநிதியாக (regent)  நாட்டை அவரே ஆட்சி செய்தார். அதே சமயம், கிழக்கிந்திய கம்பெனி ஔத்-தை பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க சர் ஜேம்ஸ் ஔட்ராம் என்ற ஜெனரலை நியமித்தது. 

சர் ஔட்ராம், ஔத்-ன் படைகளை கிழக்கிந்திய படைகளோடு இணைத்து மற்ற சிற்றரசுகளை எதிர்த்துப் போரிட அனுப்பினால், ஔத் அரசுக்கு தன்னாட்சி அளிப்பதாக ஆசை காட்டினார். பேகம் ஹஸ்ரத் மஹல் அதற்குப் பணிய மறுத்துவிட்டார். தன் சக நாட்டினரைக் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இப்படிப் பலவிதங்களில் ஆசைகாட்டிப் பார்த்தும், மிரட்டிப் பார்த்தும் , ஔட்ராம் மற்றும் அவருக்குப் பின் அப்பணிக்கு நியமிக்கப்பட்ட ஜாக்ஸன் மற்றும் அதன்பின் வந்த சர் ஹென்றி லாரன்ஸ் ஆகியோரால், பேகம் ஹஸ்ரத் மஹலின் தீவிர எதிர்ப்பு காரணமாக, இணைப்புப் பணியை நிறைவேற்ற முடியவில்லை.

கிடைத்த இடைவெளியில், பேகம் ஹஸ்ரத் மஹல், கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவிடம் தன் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, தன் மகனை ஔத்-ன் அதிகாரபூர்வ ஆட்சியாளராக அறிவிக்கச் செய்தார். தன் ஆட்சியில் இருந்த ஊழல் அதிகாரிகளைக் களையெடுத்தார். தன் படைகளைப் பலப்படுத்தினார். ‘ராஜா ஜெய் லால் சிங்என்பவரை படைத்தளபதி ஆக்கினார்.

ச்சமயம், 1857-ல் சிப்பாய்க் கலகம் தொடங்கியது.  படை வீரர்கள் வாயில் வைத்து கடித்து பயன்படுத்த வேண்டிய துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றிகளின் கொழுப்பைத் தடவி வைத்தது இதன் முக்கியக் காரணமாக இருந்தது. டெல்லியில் தொடங்கிய பொறி, நாடெங்கும் பற்றிக் கொண்டது. போராட்டத்திலிருந்து உயிர்தப்பி, ஆங்கிலேய அதிகாரிகள் அங்கங்கு பதுங்கி இருந்தனர். லக்னோவில், 37-ஏக்கர் பரப்பில் ரெஸிடென்ஸிஎன்ற பிரிட்டிஷ் தூதரகம் ஒன்று இருந்தது. அதனுள் சுமார் 600 ஆங்கிலேயர்கள் அபயம் பெற்று இருந்தனர்.
 
பேகம் ஹஸ்ரத் மஹல், துணிச்சலாக, ”ரெஸிடென்ஸிதூதரகம் மீது தாக்குதல் நடத்தினார். ஜூலை 1857 முதல் செப்டம்பர் வரை 90 நாட்கள் தூதரகத்தின் மீதான முற்றுகை தொடர்ந்தது.  பல முக்கிய ஆங்கிலேயர்களின் உயிரைப் பறித்த இந்த முற்றுகை ஆங்கிலேயர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாய்ப் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆங்கிலேயே அரசு ஒரு தனி படை அனுப்பி அந்த 90-நாட்கள் முற்றுகையை முறியடித்து, பேகம் ஹஸ்ரத் மஹலின் படையினரை லக்னோவைவிட்டு வெளியெற்றியது. ஒரு பெண் தலைமையிலான ஒரு சிற்றரசு, தனியே  நீண்ட நாட்கள் ஆங்கிலேயரை முற்றுகையிட்டது ஒரு பெரும் சாதனை ஆகும்.

ல வழிகளில் முயன்றும், இணைப்புக்கு வழிகிட்டாததால், மார்ச் 1858-ல் கிழக்கிந்திய கம்பெனி  படைகள், பேகம் ஹஸ்ரத் மஹலின் அரண்மனையைத் தாக்க பெரும்படை ஒன்றை அனுப்பியது. அப்போரில்,  9000 வீரர்களுக்குத் தலைமையேற்று தானே களத்திலிறங்கிப் போரிட்டார் பேகம் ஹஸ்ரத் மஹல். அந்தக் காட்சிதான் நாம் இக்கட்டுரையின் ஆரம்ப வரிகளில் கண்டது. “முஸாபக் யுத்தம்என்றழைக்கப்பட்ட இந்தப் போரில், அவருடைய படைவீரர்கள் சுமார் 5000 பேர் துரோகம் செய்துவிட்டனர். எனினும் கலங்காமல் நெஞ்சுரத்தோடு போரிட்ட அவர்,  தோல்வியடைந்த போதும் சரணடைய மறுத்தார்.

சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து  இந்திய நாடு,  ராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. அதையொட்டி விக்டோரியா மகாராணி, நவம்பர் 1858-ல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, எதிர்-பிரகடனம் (Counter- Proclamation)ஒன்றை பேகம் ஹஸ்ரத் மகல் வெளியிட்டார்.  மகாராணியாரின் பிரகடனத்தையே எதிர்க்கத் துணித்த அவரின் இத்தைரியம் கண்டு பிரிட்டிஷாரே வியந்தனர்.  அந்தப் பிரகடனம் விளக்கமாக இந்த வலைப்பக்கத்தில் இருக்கிறது: http://oudh.tripod.com/bhm/bhmproc.htm. அதன் சாராம்சத்தைக் கண்டால் அவரது அறிவுக் கூர்மையும் தீரமும் விளங்கும்.

அதைத் தொடர்ந்து, நாய்க்கு எலும்புத் துண்டுகள் வீசுவதைப் போல, மானியங்கள் அளிப்போம் என்று ஆசை காட்டியோ அல்லது மிரட்டியோ அனைத்து சிற்றரசுகளும் வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைக்கப்பட்டன.  பிரிட்டிஷாரின் பல வாக்குறுதிகளுக்கும் மானியங்களுக்கும் மசியாமல், அவற்றின் பின்னிருந்த நயவஞ்சகத்தைக் கண்டுணர்ந்து, தாய்நாட்டுக்குச் சுதந்திரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட பேகம், அவற்றை ஏற்க மறுத்தார்.

1859-ம் வருட இறுதி வரை அவர் ஔத்-ன் ராணியாகவே இருந்தார். அதன் பின் ஆங்கிலேயரின் எதிர்ப்புகள் கடுமையானதால், காடுகளில் மறைந்து தாக்குதல்கள் மேற்கொண்டார். மானியங்கள் பெற்று இராஜ அந்தஸ்தோடு அரண்மனையில் சேவகர்களோடு வசதியாக  வாழ வாய்ப்புகள் இருந்த போதும், அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு கம்பீரமாக அடங்க மறுத்த சுதந்திரப் பறவையாகவே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அண்டை நாடான நேபாளுக்குச் சென்று 20 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தன்னோடு கொண்டு சென்ற செல்வங்களை, தன்னுடன் அகதிகளாக நாடு விட்டு வந்தோருக்காகவே செலவழித்தார். வறுமையில் உழன்ற அச்சமயத்திலும், பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், பேகம் திரும்பி வந்தால் பதினைந்து இலட்ச ரூபாய் ஒவ்வொரு மாதமும் மானியமாகத் தருவதாக ஆசைகாட்டியும் மறுத்து விட்டார். கடும் ஏழ்மை வாட்டிய போதும், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், மன்னிப்புக் கடிதங்கள் எழுதாமல், சுயமரியாதையோடு கடைசிவரை ஆங்கிலேயேரை எதிர்த்தவராகவே நாட்டுப் பற்றோடு வாழ்ந்து 1879-ல் மறைந்தார்.
  
க்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில், 1962-ஆம் ஆண்டு இவ்வீரப்பெண்மணியின் பெயரில்ஹஸ்ரத் பேகம் மஹல்என்ற பூங்கா அன்றைய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டுள்ளது1992-ல் உத்ர்பிரேசத்ின் பாஜ.. ஆட்சியில் இப்பூங்காவின் பெயர்ஊர்மிளா பூங்காஎன்று மாற்றப்பட்டதாகவும், அதைக் கண்டித்து போராட்டங்களும்,  பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பும் எழுப்பப்பட்டது என்றாலும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பே பின்னர் பெயர் மாற்றம் நீக்கப்பட்டதாகவும் செய்திகள் உண்டு.



இவரது நினைவாக 1984-ம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. இவ்வம்சத்தைச் சேர்ந்த இளவரச் அஞ்சும் குதர் என்பவர், “தம் அரச வம்சத்தின் முகங்களில் வழிந்த கோழைத்தனத்தைத் துடைத்து எறிந்தவர்” என்று பேகத்தைப் புகழ்கிறார்.

கௌகப் கத்ர் என்ற வரலாற்றாசிரியர், “ஃப்ரான்ஸின் ஜோன் ஆஃப் ஆர்க்கைப் போல பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்தை எதிர்த்து நின்றார். அதன்மூலம் அவநம்பிக்கையில் முழுகிப் போயிருந்த உள்ளங்களில் நம்பிக்கை ஜோதியை ஏற்றினார்; எங்கிருந்தோ திடீரென்று வரும் விண்கல்லைப் போல வந்து ஔத் நாட்டின் ஒவ்வொரு அடியிலும் சுதந்திர வேள்வியை மூட்டினார்” என்று புகழ்கிறார்.

கார்ல் மார்க்ஸ், ரஸ்ஸல் உள்ளிட்ட இன்னும் பல வரலாற்றாசிரியர்களும் பேகம் ஹஸ்ரத் மஹலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இவரது தீரத்திற்கு எடுத்துக்காட்டு. 

(”டீக்கடை”  முகநூல் குழுமத்தில் நடத்தப்பட்ட “சுதந்திரப் போரில் முஸ்லிம்கள்” என்ற போட்டீக்காக எழுதியது)

Post Comment