Pages

Showing posts with label இங்கு அரசியல் பேசக்கூடாது. Show all posts
Showing posts with label இங்கு அரசியல் பேசக்கூடாது. Show all posts

நானும் இங்கதான் இருக்கேன், இருக்கேன்...






முதல்ல 2ஜி, அப்புறம் தேர்தல், கணிப்புகள்னு பிஸியா இருந்த பதிவுலகம் இப்போ ரொம்ப டல்லா இருக்க மாதிரி இல்ல? கோடை விடுமுறை வேற, அதான் பதிவர்கள் எல்லாம் ரெஸ்ட் எடுக்கப் போயிட்டாங்க போல!! “தலைவி எவ்வழி, குடிமக்கள் அவ்வழி” போல!! சரி, நானும் அப்படியே போயிட்டேன்னு நீங்க நினைச்சிடக்கூடாது பாருங்க, அதான் வந்துட்டேன். நோ, நோ, பேச்சு பேச்சா இருக்கணும். கல்லெல்லாம் எடுக்கப்படாது.

இப்படியெல்லாம் நமக்கு பேச்சு சொல்லிக் கொடுத்த தலைவர் வடிவேலு, இப்ப, தானே தன் பேச்சுக்கு உதாரணமா  ஒளிஞ்சு விளையாடிகிட்டு இருக்கார். விவேக் மார்க்கெட் போனது பத்திரிகையாலன்னா, இவருக்கு அரசியலால. ரெண்டுமே டேஞ்சரஸ் ஏரியாக்கள்!!

பக்கத்து நாடான கேரளாவிலும் நம்ம தமிழ்நாட்டைப் போல சுழற்சி முறையில முதல்வர்களை மாற்றிகிட்டே இருக்காங்க. ஆனா, யார் வந்தாலும் எளிமையாத்தான் இருக்காங்க. இப்ப முதல்வரா இருக்கும் உம்மன் சாண்டியைப் பற்றி அவரின் போன ஆட்சிக் காலத்துல, தொலைக்காட்சியில் பார்த்த செய்தி: அவரின் வீட்டு முன் கிடக்கும் அவரின் செருப்பைக் காட்டினார்கள்; அதில் சில தையல்கள்!! அதாவது, கிழிந்த செருப்பைத் தைத்து, போட்டுக் கொண்டிருக்கிறார்!! உங்களுக்கு என்ன ஞாபகம் வருது? சே, சே, எனக்கு ஃபிலிப்பைன்ஸின் திருமதி. இமெல்டா மார்க்கோஸின் செருப்பு அலமாரிதான் ஞாபகம் வருது. வேற எதுவுமே இல்லை, இல்லை, இல்லை!!

அப்படியே, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியையும் நினைத்துப் பார்க்கிறேன். பருத்திச் சேலையும், ரப்பர் செருப்பும்தானாமே, இப்பவும், எப்பவும்? தற்போதைய சட்டமன்றக் கட்டிடமான “ரைட்டர்ஸ் பில்டிங்” மிகவும் அழுக்காக, அடிப்படைக் கட்டமைப்புகள் பாழ்பட்டு இருப்பதாகவும், அதை முதலில் சீர்படுத்தப் போவதாகவும் சொல்லியிருக்கார்.  ஆனா, அவருக்கும் சென்னைக் காத்து அடிச்சுடுச்சு போலன்னு சந்தேகப்பட்டுடாதீங்க. ஜெயிச்ச அன்னிக்கு, பேட்டியாளர், "இந்த வெற்றியை எப்படிக் கொண்டாடப்போறீங்க?”னு கேட்டதுக்கு, “கொண்டாட்டமா? என்ன கொண்டாட்டம்? எதுக்கு?”னு படபடன்னு கேட்ட அழகைப் பாத்தா, அப்படியே தமிழ்நாட்டுக்குக் கடத்திட்டு வந்திடலாம் போல இருந்துது!! ஹூம்!!

சென்னையில, 1000 கோடி செலவில்  புது சட்டமன்றக் கட்டிடம் கட்டப்பட்டதில் ஊழல் இருக்குனு சிலர் சொல்றாங்க. கோவமா வருது. ஒரு பெரியவரை அவமானப்படுத்துறதுக்கு அளவு வேணாமா? அவருக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்குல்ல? 1,76,000,00,00,000 எங்கே,  1000,00,00,000 எங்கே? (சைபர் கரெக்டா?)

ஊழல், ஊழல்னு நம்ம அரசியலைப் பிடிச்ச கரையானைப் பத்தியே பேசிக்கிட்டுருக்கோமே, நிஜமாவே காசைக் கரையான் அரிச்சுதாம் தெரியுமா? அதுவும், நோட்டு அச்சடிக்கிற நாசிக்லயே!! ஆனாலும், ஆறுதல்பட்டுக்கோங்க, அரிச்ச தொகை ஆஃப்டர் ஆல், ஒரே ஒரு கோடிதானாம்!!  ஒருவேளை நீதிமன்றம் தலையிட்டு, காசைக் கரையான் அரித்து அழிப்பதைவிட, தேவைப்படும் மக்களுக்குக் கொடுக்கலாமேன்னு சொன்னா எப்படியிருக்கும், இல்ல?

ஐரோப்பாவில ஒரு நாட்டோட பாராளுமன்றம் முன்னாடி மூணு சிலைகள் இருக்காம். மூணும், தலைவலி, வயிற்றுவலி, கைவலியைக் குறிப்பதாம். அதாவது, அரசியலுக்கு வந்தா, இதெல்லாம் வரும்னு சிம்பாலிக்காச் சொல்றாங்களாமாம்!! நம்மூருக்குன்னா, ஒரேயொரு சிலை போதும்ல?



Post Comment