Pages

Showing posts with label WFES. Show all posts
Showing posts with label WFES. Show all posts

சக்தி உலகின் மின்னும் நட்சத்திரங்கள்





ந்தத் தொடரின் இரண்டாவது பிவக்குள்ளே போறுக்கு முன்னாடி ஒரு முக்கியான டுட்டு: சூப்பர் ஸ்டார் பெரிசா? பர் ஸ்டார் பெரிசா? ஏன்னா, சிய ஒளி க்ிை “பர் ஸ்டார்”னான் சொல்லிருக்கும்னு நிறையிகக் கண்மிள் நினைக்காம்.  ிகீடு, எிர்பார்த்ன்கள், ஆனா அப்பப்போ காணாமப் போறு - இையெல்லாம் வச்சுப் பாக்கும்பு, சூரிய ஒளியை சூப்பர் ஸ்ார்னு சொன்னு சிானே? “பர் ஸ்டார்” பட்டம் யாருக்குன்னு பிவுலார்ப்போம்.
 
சூரிய மின்சாரத்தை வழக்கமான முறையில் தகடுகள்(பேனல்கள்) வைத்து உற்பத்தி செய்வதில்  பேட்டரி, இன்வர்ட்டர்  தேவைப்படுவது ஒருமுக்கியக் குறைபாடு. மேலும், சூரிய ஒளி தொடர்ச்சியாகக் கிடைப்பதில்லை என்பதும், விலையுயர்ந்த சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் இயற்கைக் கனிமப்பொருளான ”பாலி சிலிக்கான்”  தட்டுப்பாடும் மற்ற காரணங்கள்.  இவற்றைத் தவிர்க்க, மற்றுமொரு வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


டர்பைன் சுத்துது!!
தைத் தெரிந்து கொள்வதற்கு முன், பொதுவாக மின்சாரம் தயாரிக்கப்படுவது எப்படின்னு லைட்டா ஒரு லுக்கு விடுவோம். சிம்பிளா ஒரு வரியிலச் சொல்லணும்னா,  ”டர்பைன்” எனப்படும் காற்றாடி மாதிரியான இயந்திரத்தை வேகமாகச் சுற்றினா மின்சாரம் உற்பத்தியாகும்.  அந்த டர்பைனைச் சுத்த வைக்கிறதுக்குத் தேவையான சக்தி எதிலிருந்து கிடைக்குது என்பதை வைத்துத்தான்  மின் நிலையங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

அணையிலிருந்து வேகமாக விழும் நீரைப் பயன்படுத்தினால், அது நீரேற்று மின் நிலையம் (Hydro electricity); நிலக்கரியை எரித்து, நீரை ஆவியாக்கி, அதைக் கொண்டு சுழல வைத்தால் அனல் மின் நிலையம்.(Thermal power plant). அணை நீர், நிலக்கரி ரெண்டுமே தட்டுப்பாடுள்ளவை. இங்கேதான் சூரிய ஒளி பயன்படுகிறது. 

   
அந்தக் காலத்தில் வாலுப் பசங்க, கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய சக்தியை ஓரிடத்தில் குவித்து,  அந்த வெப்பத்தைக் கொண்டு சிறு காகிதத்தையோ அல்லது எறும்பையோ எரிப்பாங்க பார்த்திருக்கீங்களா? அதே முறையில், நீரை ஆவியாக்கினால்...? அந்த நீராவியால் டர்பைனைச் சுழலவிட்டு மின்சாரம் தயாரித்தால், அதுவும்  “சூரிய ஒளி மின்சாரம்”தான்!! "Concentrated Solar Power" என்று பெயர்.

ந்த CSP முறை, வழக்கமான சோலார் பேனல் முறையை விடவும் எளிதானது மட்டுமல்ல, செலவும் குறைந்தது. இதற்கு விலையுயர்ந்த சோலார் பேனல்கள் தேவையில்லை; ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய சாதாரண கண்ணாடி போதும். இன்வர்ட்டர், பேட்டரிகளும் தேவையில்லை.  சூரிய ஒளி இல்லாத நேரத்திலும், அதனால் பெறப்பட்ட வெப்பத்தைச் சேமித்து வைத்தால், (heat transfer) தொடர் மின்சார உற்பத்தி கிடைக்க வாய்ப்புண்டு. 

CSPயைப் புரிந்துகொள்ள இந்த சுவாரசியமான வீடியோவைப் பாருங்க.

பாலைவனங்கள் நிறைந்த வளைகுடா நாடுகள் இந்த வகை மின்சார உற்பத்திக்கு ஏற்றவை என்பதால், இவற்றின்மீது வணிக நிறுவனங்களுக்கு ஒரு கண்!! பெட்ரோல் காலியானல் என்ன, இருக்கவே இருக்கு சூரியன். :-))

இந்த CSP power plant நம்ம ஊருக்கும் ஏற்றதாகவே தெரிகிறது. கோடை காலங்களில் அணைமட்டம் குறையும்போது, இந்த முறை கைகொடுக்குமே. மேலும், மின்சார உற்பத்தி என்றில்லாது, Heat transfer எங்கெங்கு தேவைப்படுகிறதோ, அங்கேயும் CSP பயன்படுத்தலாம்.

டுத்ததா, Geothermal power எனப்படும் புவி அனல் சக்தி.  தகிக்கும் குழம்புகள் கொட்டும் எரிமலைகள், கொதிநீர் ஊற்றுகள்  ஆகியவற்றிற்கு  பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் மிக மிக அதிக வெப்பம்தான் காரணம் என்று எல்லாருக்குமே தெரியும்.



இந்த அடிப்படைதான் புவி அனல் சக்திக்கும். மின்சாரம் தயாரிக்கத் தேவையான நீராவியை உருவாக்க சூரிய ஒளியைப் பயன்படுத்தியதுபோல, இங்கு புவியின் அனல் சக்தி பயன்படுத்தப்படுகிறது. 

இந்த அனல் சக்தி, ஐஸ்லாந்து நாட்டில் அதிகம் காணப்படுகிறது. அதைக் கொண்டு ஐந்து பெரிய புவிஅனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வட துருவத்தில், பனி நிறைந்து காணப்படும் நாடான ஐஸ்லாந்தில் கொதிநீர் ஊற்றுகளும், எரிமலைகளும் அதிகம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கு அடுத்ததாக வருவது, bio-mass எனப்படும் சேகரிக்கப்பட்ட (bio-degradable) மக்கக்கூடிய குப்பையிலிருந்து மின்சாரம், எரிபொருள், உரம் ஆகியவை தயாரிப்பதும் பெரிய அளவிலான தொழிலாக  உலம் முழும் உருவாக்கம் பெற்று வகிறது.
 வீடுகள், உணவகங்களிலிருந்து கிடைக்கும் மக்கக்கூடிய பொருட்களைச் சேகரித்து, அதை  பாக்டீரியாக்களைக் கொண்டு நொதிக்க (fermentation) வைத்து,   எரிபொருளாக இயற்கை எரிவாய் (bio-gas) ாரிக்கப்புகிறு.  ு வாகங்கள் ஓட்டும், மின்சாரம் ாரிக்க, ஆலைகில் எர்பொருளாக என்று பிங்கில் பன்பத்ப்படகிு.  ந்துபோகும் ிடப்பொருள், உாகப் பன்பத்ப்புகிறு.

ன்மூலம் பன்மைகள் உண்டு.  குப்பைகாலிிலத்ில் பட்டு நிறைப்பால் (land filling) வும் பிரச்னைகள் - இடப்பற்றாக்குறை, ாற்றம், ோய்க்கிருமிகள், சுற்றுச்சூழல் கேடோன்றுக்கு முடிவு விறு. மேலும், இன்மூலம் இய்கை உம் கிடைப்பால், ராயன் உரத்ால் ும் ீமைகள் ிர்க்கப்புகின்ற. இயற்கை எரிபொருளானோ-கேஸ் பன்பத்ும்பச்சு வாயுக்கள் வெளிப்புவில்லை என்பால் சுற்றுச்சல் கேடில்லை. எல்லாவற்றையும்ிட, செலு மிகக் குறந்த ிட்டம்.

ு ந் நாட்டில் கிராமங்கில், மிகச்சிறிய அளில் ிற்சில ீடுகில் ன்பத்ப்பும் முறான். ெரியில் செயல்பத்ப்பட்டால், குப்பைகிலிரந்தக்கிடை கிடைக்கும். 

ஆக, குறந்தீட்டில் ூடல் ன்ள் என்கிறையில் போ-கேஸ்ான் சக்ி-உலின் ஒரு நட்சத்ிராக, “பர் ஸ்டார்” பட்டம் பெறத் ியானு.  இப்பைப்பக்கொடர்பந்தச்ச?
 
டுத்த பதிவில் இன்னும் சில சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போம். (கண்டிப்பா அத்தோடு முடிச்சுக்குவேன்னு உறுதிமொழி வழங்குகிறேன் - இன்ஷா அல்லாஹ்)




Post Comment

நானும் கண்காட்சிக்கு போனேன்!




எல்லாரும்  குற்றால சீஸன் மாதிரி வருஷா வருஷம் வரும் புத்தகக் காட்சிக்குப் போய் பதிவு எழுதிகிட்டிருக்கீற சீஸன் இது!! அதெல்லாம் பார்த்து நான் ஏக்கப் பெருமூச்சு விட, எங்கூட்டுக்கார் பர்ஸ் தப்புச்சுன்னு “நிம்மதிப் பெருமூச்சு” விட... பொறுக்குமா நமக்கு!! உடனே “எட்றா வண்டியை”ன்னு  நாங்களும் இங்கே வருஷா வருஷம் வரும் ஒரு “கண்காட்சி”க்குப் போனோம்!! ஆனாலும் வருத்தம் என்னன்னா, இந்தக் கண்காட்சியில நாம எதுவும் வாங்க முடியாது. ரேட் அப்படி.  ஸோ, ஒன்லி “புத்தி கொள்முதல்”!! 


அபுதாபியில் வருடா வருடம் நடந்து வரும்  World Future Energy Summit (உலக எதிர்கால சக்தி உச்சி மாநாடு) - இதனைச் சார்ந்து நடந்து வரும் கண்காட்சிக்குத்தான் சென்றோம். கடந்த ரெண்டு வருஷமா அதைப் பத்திப் பதிவுகள் எழுதி இருக்கிறதால், மீண்டும் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.  ”சர்வதேச புதுப்பிக்கக்கூடிய சக்தி நிறுவனம்” என்ற IRENAவின்  தலைமை அலுவலகம் தற்போது அபுதாபிக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது இந்த வருஷம் கூடுதல் சிறப்பு.  அமீரகத்தின் தொடர்ந்த பசுமைச் சூழல் நடவடிக்கைகளே இதற்கான காரணம் என்றும் சொல்லலாம்.

கண்காட்சியில், சூரிய சக்தி, காற்றாலை, எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகிய வழக்கமானவற்றோடு புவி அனல் சக்தி (geo-thermal energy), உயிரி-எரிபொருள் (bio-fuel), நீர் மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு போன்றவை குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன இம்முறை.


அவைகளைக் குறித்துப் பார்ப்பதற்கு முன், இந்த வருஷம் “ஷேக் ஸாயத் எதிர்கால சக்தி பரிசு” யாருக்குக் கிடச்சுதுன்னு பார்க்கலாம். வருடா வருடம், இதற்கான பிரிவுகளை  அதிகப்படுத்திகிட்டே போறாங்க. இந்த வருடம் உயர்நிலைப் பள்ளிகளையும் இந்தப் பரிசுக்கு சேர்த்திருப்பதிலிருந்து, இளைய சமுதாயத்திற்குத்தான் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகம் தேவை என்பதை வலியுறுத்துறாங்க!!

பிரிவு 1 - பெரிய நிறுவனம் (Large corporation) பிரிவில் பரிசு பெற்றது        Siemens   நிறுவனம்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டுத் திறமைகள் ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மத்திய கிழக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைந்து வளர்ப்பது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை உள்ளிட்ட காரணங்களுக்காக.

பிரிவு 2 -சிறு நிறுவனங்கள் (SME) பிரிவில்   d.light design   என்கிற நிறுவனம்.  மின்சார வசதியற்ற அல்லது குறைவான நாடுகளின் மக்களுக்கு சூரிய ஒளி விளக்குகளை வாங்கக்கூடிய விலையில் வழங்கியமைக்காக.

பிரிவு 3 -அரசு-சாரா லாப நோக்கற்ற நிறுவனம் (NGO) பிரிவில்  CERES   என்கிற அமெரிக்க நிறுவனம்.
 “செரஸ்”, வணிக நிறுவனங்களை சுற்றுச்சூழல் நோக்கிலான பொறுப்புடன் நடந்துகொள்ள வைக்கத் தூண்டியது. வணிக நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பேணுதலை அளவிடுவதற்காக, GRI reporting (Global Reporting Initiative) முறையை அறிமுகம் செய்தது.

பிரிவு 4 -தனிநபர் ஆயுட்கால சாதனை - பேராசிரியர் ஜோஸ் கோல்டம்பெர்க், பிரேசில்.
 இயற்பியலாளர். பிரேசிலில் கல்வி அமைச்சராகவும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பல்வேறு பதவிகளில் பிரேசிலிலும், சர்வதேச அகாடமிகளிலும்  இருந்தவர். அணுவியல், சுற்றுச்சூழல், சக்தி ஆகிய தளங்களில் புத்தகங்கள் பல எழுதியவர்.

பிரிவு 5 -பள்ளிகள்: 
உலக முழுதுமுள்ள பள்ளிகளை, அமெரிக்கப் பகுதி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பள்ளிக்கு அவற்றின் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு பரிசு வழங்கியிருக்கிறார்கள்.  ஒவ்வொரு பள்ளிக்கும் பரிசு ஒரு லட்சம் டாலர்!!

ஆசியப் பகுதியில், அபுதாபியில் உள்ள, பங்களாதேஷ் நாட்டுப் பள்ளிக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. தமது பள்ளியின் “கார்பன் தடத்தைக்” (carbon footing) குறைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டமைக்காக இந்த விருது.

ஆசியப் பிரிவில், இந்தியாவின் கர்நாடகத்தைச் சேர்ந்த “கல்கேரி சங்கீத் வித்யாலயா” என்கிற பள்ளி இறுதிச் சுற்று வரை முன்னேறி வந்தது என்பது ஆச்சரியத் தகவல்!! 


தமிழகத்திலும் இதுபோன்ற பள்ளிகள் உங்களுக்குத் தெரிந்தால் விண்ணப்பிக்கச் சொல்லலாம். பார்க்க:  http://www.zayedfutureenergyprize.com

னி மெயின் மேட்டருக்கு வருவோம். சோலார் பவர்தான் இப்போதைக்கு "renewable energy" ஏரியாவில் “சூப்பர் ஸ்டார்”!! 

ஸோலார் செல்

சோலார் பேனலின், முக்கிய குறைபாடுகளில் ஒன்று, நிறுவுவதற்கு அதிக இடம் (ground space) தேவைப்படுவது.  இதைக் கருத்தில் கொண்டு  அறிமுகப்படுத்தப்பட்டவைதான், மேலே படத்தில் பார்க்கும் வகை சோலார் பேனல். இதில் குமிழ் போலத் தெரிபவை ஒவ்வொன்றும், உள்ளே வரும் ஒளியலைகளை வெளியேற விடாத “total internal reflection lens". ஒவ்வொன்றின் அடியிலும், 1100 மடங்கு வரை வீரியம் கூடிய சிறு சிப் அளவிலான ”சோலார் செல்” ஒன்று உள்ளது!!


சோலார் பவர் என்றால், சோலார் பேனலோடு, பேட்டரி, இன்வர்ட்டர் ஆகியவையும் ஞாபகம் வரும். சூரிய சக்தியைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் வகையில் நல்லது என்றாலும், அதன் பின்விளைவுகளான பேட்டரி & இன்வெர்ட்டர்களை என்னச் செய்வது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அவற்றை முழுமையாக மறுசுழற்சி செய்வதென்பது முடியாதது. அதிலும் ஐந்தாறு வருடங்களுக்கொரு முறை இவற்றை மாற்ற வேண்டும்.  ஆக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மறுபடி கேள்விக்குள்ளாகிறது!!

தனிநபர் உபயோகத்திற்கே, இத்தனைப் பிரச்னைகள் என்றால், பெரிய அளவில் “சோலார் பார்க்”குகள் வைத்து, மின்சாரம் தயாரித்தால்...?? இதற்கு தீர்வு - மாற்று என்ன?

அடுத்த பதிவில்.... !!


Post Comment

எதிர்கால சக்தி





அபுதாபியில்  சில வருடங்களாக நடந்துவரும்  World Future Energy Summit (உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு) போன வருஷம் முதன்முறையா போய்ப் பார்த்துட்டு வந்ததிலருந்து, இந்த வருஷம் எப்படா வருதுன்னு வெயிட் பண்ணிகிட்டிருந்தோம்.இந்த வருஷம் ஜனவரியில நடந்துது. மாநாடுன்னவுடனே, நமக்கு வழக்கமா லாரி, மேடை, பிரியாணி, கூட்டம், ப்ளெக்ஸ் போர்டு இதெல்லாம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, இது நிஜமான “அறிவுஜீவிகள்” கலந்துகொள்ளும் மாநாடு + கண்காட்சி + கருத்தரங்கம்.

 சுருக்கமா இந்த மாநாடு பத்தி சொல்லணும்னா:  குறைந்து வரும் எண்ணெய் வளம், அழிந்து வரும் சுற்றுச் சூழல், பெருகி வரும் உலக வெப்பமயமாதலும், அதன் விளைவுகளையும் முன்னிருத்தி, இவற்றிற்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை அழிக்காமல், வெப்பமயமாதலைத் தடுக்கவும் விழிப்புணர்வை மேம்படுத்தி, நாம் என்னென்ன செய்யலாம் என்பதைக் கலந்துரையாடி, அவற்றிற்கான பொருட்களைச் சந்தைப்படுத்துவதுமே இதன் நோக்கம்

விரிவான விளக்கத்திற்கு இங்கே போகவும்: WFES 2011  (இது என் போன வருட பதிவுதான், தைரியமாப் படிக்கலாம்)

வழக்கம்போல, கண்காட்சி முழுதும் சோலார் பேனல்கள், காற்றாலைகள், பேட்டரி கார்கள், ஸ்கூட்டர்கள்னு போன வருஷம் பார்த்தவைதான். குறிப்பிடத்தக்க புதிய பொருட்கள் அறிமுகங்கள் எதுவும் இல்லை.  ஆனா,  பழைய அறிமுகங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
உதாரணமா, வழக்கமான சோலார் பேனல்கள் ஒரே இடத்துல நிலையா இருக்கும்படி இருக்கும். இப்போ, சுழலும் பேனல்கள் வந்திருக்கு. அதாவது, சூரியன் செல்லும் திசைக்கு இந்தப் பேனல்களும் திரும்பும் - சூரியகாந்தி மாதிரி!! இதனால, உற்பத்தி அதிகமாகும். படத்தில் இருப்பதுபோல ஒரு செட் வச்சா, ஒரு குடும்பத்துக்குப் போதுமான அளவு மின்சாரம் தாராளமாக் கிடைக்குமாம். விலை என்னான்னு கேட்டேன். நேரடியாச் சொல்லாம, மொத்தமா ஒரு குடியிருப்புக்குத் தேவையான அளவுக்காவது வச்சாத்தான் செலவுகள் பலன் தரும்னு சொல்லிட்டார்!! :-( 

மேலும், இந்த சோலார் பேனல்கள் அதிக சூரிய ஒளியை உறிஞ்சுவதற்காக வேண்டி பேனல்களின் அளவைச் சுருக்கி, பின்னர் இரண்டு, மூன்று பேனல்களை ஒன்றிணைத்து, அதன்மேல் ஒரு கண்ணாடியை (total internal reflection lens) அதன்மீது வைத்திருக்கின்றனர். இதனால், உள்ளே வரும் ஒளி, வெளியே செல்லமுடியாததால்,  முழுதும் கிரகிக்கப்படும்.



இப்ப சோலார் பேனல்களை எங்கும், எதிலும் வைக்கலாம்கிறதுக்கு உதாரணமா, இந்த மாடல். ஒரு கார் பார்க்கிங் ஷெட் மீது சோலார் பேனல்.

 



 இது எங்க துபாய்ல வரப்போற “சோலார் பார்க்”கின் மாடல்.









 
இது எங்க ஊர் “கூடங்குளம்” - ஆமாம், வரப்போகும் அணுமின் நிலையத்தின் முன்மாதிரி. என்னது, போராட்டமா, உஷ்!!






இந்த பெரீய்ய தொட்டி பெரிய்ய பெரிய்ய ஹோட்டல்களுக்கானது. மிஞ்சின உணவை இதில போட்டா, அது உரமாகிடுமாம்!! ஜீபூம்பா!

வழக்கமான, “Vending machines"ல, காசு போட்டா தண்ணி பாட்டில் வரும். இதுல காலி பாட்டிலைப் போட்டா, காசு(க்கான கூப்பன்) வரும்!! பிளாஸ்டிக் மறுசுழட்சியை ஊக்கப்படுத்த வரப்போவுது எங்கூர்ல!!










பெரியவன் உள்ளே, சின்னவன் வெளியே
இது Shell நிறுவனம் வச்சிருந்த ரேஸிங் கார் (மாதிரி). ஆனா, இதுல என்ன விசேஷம்னா, வழக்கமான ரேஸிங் கார்ல வேகமாப் போய் முதலிடத்துக்கு வந்தாப் பரிசு கிடைக்கும். ஆனா, இதில் "Fuel-intelligent" ஆகப் போகணும். அதாவது, மெதுவாகவும் போகக்கூடாது, வேகமாகவும் போகக்கூடாது. அதே சமயம், எரிபொருளும் வீணாகக்கூடாது. (அவ்வ்வ்வ்...)

என் பெரியவன் ஓட்டி, முதல் பரிசு வாங்கினான். வெளியே முன்பக்கம் வைத்திருக்கும் டிவி திரையில் கார் போகும் சாலை, வேகம், எரிபொருள் செலவு விவரங்கள் தெரியும். (அதாவது வீடியோ கேம் மாதிரி) கண்காட்சியில் அந்த வண்டிய ஓட்டுவனங்கள்லயே அவன்தான் ரொம்ப "Fuel-intelligent"- ஆம்.

ந்த மாநாட்டில், உலகம் முழுவதும், எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்வளம் பேணுதல் இந்த மாதிரி காரணங்களுக்கானக் கண்டுபிடிப்பு மற்றும் பங்களித்தலுக்காக சிறப்புப் பரிசு "Sheik Zayed Energy Prize" என்று வழங்கப்பட்டது. (பரிசுத் தொகை $500,000-ங்கோவ்!!)

இந்தப் பரிசின் “வாழ்நாள் சாதனையாளர்” பிரிவில் வெற்றி பெற்றவர் இயற்பியலாளரான, டாக்டர். அஷோக் கேட்கில் என்பவர். இவர் பிறந்தது இந்தியாவில், வசிப்பது அமெரிக்காவில். இவரது “தர்ஃபூர் ஸ்டவ்” என்கிற கண்டுபிடிப்புக்குத்தான் இந்தப் பரிசு.

சாதாரண ”மூணு கல்” அடுப்பும், “தர்ஃபூர்” அடுப்பும்
பின்தங்கிய பல நாடுகளில் இன்றும் சமையல் என்பது விறகு அடுப்புகளில்தான். அதற்கான விறகைச் சேகரிக்கக் காட்டிற்குச் செல்லும் பெண்கள் பல்வேறு ஆபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது; மேலும் அதிலேயே நேரமும் அதிகம் செலவாகிறது. ஆப்பிரிக்க நாடான தென் சூடானில், தர்ஃபூர் நகரில் இதுபோல அவதிப்படும் பெண்களுக்கு உதவத் தயாரிக்கப்பட்ட அடுப்புதான் “தர்ஃபூர் ஸ்டவ்”. இதன் விசேஷ வடிவமைப்பால், 55% குறைந்த எரிபொருளே தேவைப்படுகிறது என்பதால் அங்கே பெண்களுக்கு கொஞ்சம் விடிவுகாலம்!! மரங்களையும் காப்பாற்ற முடிகிறது.

இந்தப் பரிசின் இன்னொரு பிரிவான, லாபநோக்கில்லாத சிறுதொழில் பிரிவில், ”Carbon Disclosure Project” என்கிற இங்கிலாந்து நிறுவனம் வென்றுள்ளது. இவர்கள் மற்ற நிறுவனங்கள்/ ஆலைகளின் கார்பன் வெளியீட்டையும் (carbon emissions), தண்ணீர் பயனீட்டையும் கணக்கிடவும், அவற்றை முறைப்படுத்திக் குறைக்கவும் ஆலோசனை வழங்கி உதவுகிறார்கள்.  இவ்வாறு சுற்றுச் சூழலுக்கு உதவுவதால் இந்தப் பரிசு பெறுகிறார்கள்.

இந்தக் கண்காட்சியில, "How energy  industry works"னு ஒரு புக் கிடைச்சுது. ஒவ்வொரு விதமான எரிசக்தி, மின்சக்தி கிடைக்கப் பெறும் முறைகளும் பற்றி விளக்கமாக் கொடுத்திருக்கு. வாசிக்கவும் ஈஸியா இருக்கிறதனால், மீ த வாசிச்சிங். அதைபத்தி இன்னொரு பதிவுல. (இன்ஷா அல்லாஹ். ஆனா உடனே &ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்) நானும் இதுவரை புத்தக விமர்சனம் எதுவும் எழுதுனதில்லை. இதை வச்சுப் போட்டுத் தாக்கிற வேண்டியதுதான்!!

நீர்க் கோலங்கள்:


தண்ணியாலேயே படங்காட்டுறாங்க. பாத்து எஞ்சாய்!!
மேலேயிருந்து விழுற தண்ணி கீழே ஒரு சொட்டுகூட வெளியே விழாத மாதிரியான அமைப்புதான் என்னைக் கவர்ந்தது. (ஹி.. ஹி..)


தொடர்புடைய பதிவுகள்:

Post Comment

காய்கறித் தொழிற்சாலை!!





சென்ற பதிவின் தொடர்ச்சி....
  
1. நம்ம ஊர் சாமியார்கள் காத்துலருந்து விபூதி வரவழைக்கிறதைப் பாத்திருப்பீங்க. இந்த மெஷின், காத்திலருந்து தண்ணீர் வரவழைக்கும்!!
ஆமா, வெறும் காத்து மட்டும் இருந்தாப் போதும், தண்ணி செஞ்சிடலாம்!!

ecoblue.com


 
இந்த மெஷின், காற்றை உறிஞ்சி, அதிலிருக்கும் ஈரப்பதத்தைத் தண்ணீராக மாற்றிக் கொடுக்கும்!! ஒரு நாளில் 30லி கொடுக்கும். காற்றில் 30% ஈரப்பதம் இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே கண்டிஷன். (இல்லைன்னாலும் பரவால்லை, அதுக்குத் தனியா "Humidifier"னு ஒரு மெஷின் ஆல்ரெடி மார்க்கெட்டுல இருக்குது!!) விலை 1300$ லருந்து ஆரம்பிக்குது. இந்தத் தண்ணீர், குழாய்த் தண்ணீர் போல கெமிக்கல்கள், கிருமிகள் இல்லாமல், மிக சுத்தமானது என்பதுதான் இதன் ஸ்பெஷல்!!

2. எலெக்ட்ரிக் கார்கள்:



hybridcars.com


 முழுக்க முழுக்க சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளால் ஓடும் கார். (இந்தியாவிலும் முன்பே இது அறிமுகப்படுத்தப்பட்டது; நடிகர் பார்த்திபன் வீட்டில்கூட ஒருமுறை எரிந்துபோனதே?) தற்போது நன்கு தொழில்நுட்ப ரீதியாகவும், பாதுகாப்பிலும் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. விலை, பெட்ரோல் கார்களை விட மிக அதிகம் என்பதால் இன்னும் பிரபலமாகவில்லை. ரெகுலர் பராமரிப்பு தேவையில்லை, மிகக் குறைந்த கார்பன் எமிஷன் போன்ற அனுகூலங்கள் இருந்தாலும், அதிக விலையின் பயனை நீண்டநாள் பயன்பாட்டுக்குப் பின்தான் (ஸோலார் பேனல் போல) பெற முடியும் என்பதால் மிகுந்த தயக்கம் உள்ளது மக்களிடையே. 

பிரபல கார் கம்பெனிகளான டொயொட்டா ‘பிரியஸ்’ என்ற பெட்ரோல், மின்சாரம் இரண்டும் பயன்படுத்தப்படுகிற ஹைப்ரிட் காரையும், நிஸ்ஸான் “லீஃப்” என்ற EV (Electric vehicle)யையும் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. மற்ற பிரபல கம்பெனிகளும் விரைவில் செய்யவுள்ளன.

3. காய்கறித் தொழிற்சாலை!!



ஆமாங்க, காய்கறியை இந்த மெஷினை வைத்து உருவாக்கிக் கொள்ளலாம். இதற்காக, நோய் நீக்கப்பட்டு,  சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட விதைகளை (ஆனால் geneticaly modified இல்லையாம்), இதனுள் வைத்தால் 30 முதல் 45 நாட்களில் காய்கறிகள் ரெடி!! குழாய்கள் மூலம் தண்ணீர், தேவையான சத்துக்களும், எல்.இ.டி. லைட்டுகள் மூலம் வெளிச்சமும், கட்டுப்படுத்தப்பட்ட ஈரப்பதமும் கொடுக்கப்பட காய்கறிகள் விளைகின்றன. கிட்டத்தட்ட Green House முறைதான் என்றாலும், முழுக்க மூடியே இருப்பதால், காற்றினாலும், பூச்சி, கிருமிகளாலும் பரவும் நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான காய்கறிகள் ரெடி!! இன்னொரு விஷயம், எல்லா காய்கறிகளையும், எல்லா பருவங்களிலும் விளைவிக்கவும் முடியும். மேலும் கிச்சனில் கண்ணெதிரே காய்கறி விளையும்!!

4. பாசி டூ பெட்ரோல்:

பாசி அதான் Algae - தண்ணீரில் பாசி பிடிக்குமே, அந்தப் பாசியிலருந்து எரிபொருள் எடுக்கலாமாம்!! பயோ-ஃப்யூயல் எனப்படும் உயிரி-எரிபொருட்கள் இதுவரை கரும்பு, சோளம் போன்ற உணவுப் பொருட்களிலிருந்துதான் தயாரிக்கப் படுகிறது. அதைத் தவிர்த்து, பாசியிலிருந்து எடுத்தால் உணவுப்பொருளை வீணாக்க வேண்டாமே. மேலும், முன்பு சொன்ன CCS - Carbon capture-லும் பாசி பயன்படுகீறதாம்.

எந்த வகைப் பாசிகள் எதெதற்கு உகந்தவை என்று ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இன்னொரு தகவல், பிரேஸிலில்,1977லிலிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டதன் விளைவாக,  பெட்ரோலை விட எத்தனால் என்ற பயொ-ஃப்யூயல் சீப்பாகக் கிடைக்கிறதாம். இது குறித்த ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகித்த ஒரு பேராசிரியர்தான் அங்கே பின்னாளில் அறிவியல்-தொழில்நுட்பத் துறை அமைச்சராக வெகுகாலம் பதவி வகித்தாராம். ஹூம்...

5. வெறுங்கால் கல்லூரி - Barefoot College

சில சமூக சேவை அமைப்புகள் இணைந்து, உலகம் முழுவதிலும் இவ்வகைக் கல்லூரிகளை நிறுவி வருகின்றன. இந்தியாவிலும் உள்ள இக்கல்லூரியில் பட்டப் படிப்புகள் இல்லை, ஆனால் வாழ்வியல் படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஏழைகளுக்காக, ஏழைகளால் என்ற குறிக்கோள் கொண்ட இதில், படிப்பறிவில்லாத யாரும் இணைந்து, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் அடிப்படை அறிவு பெற்றுக் கொள்ளலாம். இங்கு வேலை செய்பவர்களும் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணமாக மின்சார வசதியில்லாத ஒரு கிராமத்தில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஸோலார் செல்களைப் பற்றிப் பயிற்சியளித்து, பின் அவர்களைக் கொண்டே அக்கிராமத்திற்கு சோலார் எனர்ஜி மூலம் விளக்கேற்றுகின்றனர். இவர்கள் உருவாக்கிய சூரிய சக்தியால் இயங்கும் மணிக்கு 600லி குடிநீர் தரும் ஒரு RO plant-ம், இரண்டு Micro-hydel power plants-ம் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

மேலும் அடிப்படைத் தேவைகளான குடிநீர், வீடு, உடல்நலம், வேலை, கல்வி போன்றவைகளை இயற்கை முறைகளைக் கொண்டு குறைந்த செலவில் நிறைவேற்றிக் கொள்ளப் பயிற்சியளிக்கின்றனர். 38 வருடங்களுக்குமுன் ராஜஸ்தானில் தொடங்கப் பட்ட இந்தக் கல்லூரி, இந்தியாவில் 14 மாநிலங்களில் பரவியுள்ளது.

6. மிதக்கும் வீடு:

அமெரிக்காவில் அடிக்கடி சூறாவளித் தாக்குதல் ஏற்படக்கூடிய நியூ ஆர்லியன்ஸில் மாகாணத்தில் மிதக்கும் வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர் "Make it Right foundation" என்ற அமைப்பினர். காத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற வீடுகள் கட்டித் தரும் முயற்சியில் உள்ளனர். முழுக்க சூரிய ஒளி பயன்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பும் உண்டு.

7. தொங்கும் தோட்டம்!!

BEFORE
AFTER


இதுதான் என்னை ரொம்பக் கவர்ந்த பிராஜக்ட். முழுக்க முழுக்க ஒரு பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு, அவர்கள் பள்ளியினால் செயல்படுத்தப்பட்டது என்பது கூடுதல் ஸ்பெஷல். அமீரகத்தில் அல்-அய்னில் உள்ள “லீவா இண்டர்நேஷனல்” என்ற பள்ளியின் மாணவர்கள், தம் பள்ளியின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக பள்ளி முழுக்கச் சுற்றுச் சுவரில் தோட்டம் அமைத்துள்ளனர். அத்தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்ச பள்ளியின் கிச்சனில் இருந்து வரும் கழிவுநீரைச் சேகரித்து, சுத்திகரித்து, குழாய்கள் மூலம் செடிகளுக்குத் தருகின்றனர். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு, ஸோலார் எனர்ஜியைப் பயன்படுத்துகின்றனர். வெளிப்புற விளக்குகளுக்கான மின்சாரமும் இதிலேயே கிடைக்கிறதாம். பயன்படுத்தத் தொடங்கிய ஆறே மாதத்தில், 20% மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளதாம்.

சுவற்றில் பிளாஸ்டிக் ரேக்குகள் அடித்து, அதில் துணிப்பைகளில் மணல் நிரப்பி, செடிகள் வைத்துள்ளனர். குறைந்த பராமரிப்பு தேவைப்படுபடியான, அதிகம் பூச்சி புழுக்களை ஈர்க்காதவையாகவும், மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தாதவண்ணம் இருக்கவேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட சில அலங்காரச் செடிகளை மட்டுமே  தேர்ந்துத்துள்ளனர். சொட்டுநீர்ப் பாசனமுறையில் நீரூட்டப்படுகிறது.

முடிவுரை:

கொஞ்ச நாள்ல உலகத்துல பெட்ரோல், தண்ணீர், உணவு எல்லாம் காலியாகிடும், அது இருக்காது, இது இருக்காதுன்னெல்லாம் பயமுறுத்துறாங்க.  ஆனா, மனித இனம் இதுபோன்ற பல சவால்களை எதிர்கொண்டுதானே இத்தனைக் காலம் வாழ்ந்துள்ளது? அதுபோல இப்பவும், மாற்றாக பலவற்றையும் கண்டுபிடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. “மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்”னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க? ஆனா அதுக்காக நாம நம்ம பொறுப்புகளையும் மறந்துடக் கூடாதுதான்!!

  

Post Comment

கண்காட்சி, இல்லயில்ல பொருட்காட்சி, நோ நோ, எக்ஸிபிஷன்!!






கடந்த வாரம் இங்கே அபுதாபியில் "World Future Energy Summit" நடந்தது. (முழிபெயர்ப்பு: உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு??) ரங்க்ஸ் ஆப்பீஸிலிருந்து போய்ட்டு கொண்டுவந்திருந்த brochures பாத்துட்டு, எனக்கும், பெரியவனுக்கும் ஆர்வம் தொத்திகிடுச்சு. போய்ப் பார்த்துட்டு வந்ததும், நாலு வருஷமா இது இங்கே  நடக்குதுன்னாலும், ரொம்ப டெக்னிக்கலா இருக்குமோன்னு நினைச்சு, கண்டுக்காம விட்டுட்டோமேன்னு தோணுச்சு.

நாம பதிவருல்ல, என்ன பாத்தோம்னு எழுதிடணும்ல. நாளைக்கு வரலாறுல நம்ம பேர் வரவேண்டாமா?

இதை மாநாடுன்னு சொன்னாலும், இது சம்பந்தமா நடக்குற கண்காட்சிதான் ரொம்ப விசேஷம். குறைந்து வரும் எண்ணெய் வளம், அழிந்து வரும் சுற்றுச் சூழல், பெருகி வரும் உலக வெப்பமயமாதலும், அதன் விளைவுகளையும் முன்னிருத்தி, இவற்றிற்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை அழிக்காமல், வெப்பமயமாதலைத் தடுக்கவும் விழிப்புணர்வை மேம்படுத்தி, நாம் என்னென்ன செய்யலாம் என்பதைக் கலந்துரையாடி, , அவற்றிற்கான பொருட்களைச் சந்தைப்படுத்துவதுமே இதன் நோக்கம்.

http://algarvedir.com
 நிலத்தடி நீர் போல, எண்ணெய் வளமும் குறைந்து கொண்டே வருவதாலும், பெட்ரோல் போன்ற எரிபொருட்களால் வெளிப்படும் நச்சுப் புகைகளால் சுற்றுச்சூழல் மாசைத் தடுக்கவும் வேறு எரிபொருட்கள் கண்டுபிடித்து, பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளோம். அந்த இன்னொரு எரிபொருளும் பெட்ரோல் போல அல்லாமல், Renewable energy-ஆக, அதாவது, தீர்ந்துபோகாமல், மீண்டும் மீண்டும் புதுப்பிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்; அதேசமயம், சுற்றுச் சூழல் மாசையும், உலக வெப்பமயமாதலைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும்.

http://johnsoncontrols.com
அந்த வகையில் சூரிய ஒளி, காற்று, மின்சாரம், உயிரி-எரிபொருள் (bio-fuel) ஆகியவை மாற்றாகக் கண்டறியப் பட்டுள்ளது மட்டுமல்ல, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அவற்றைப் பெருமளவில் பயன்படுத்தவும் ஆரம்பித்துவ்ட்டன. ஸோலார் பேனல்கள், காற்றாலை, கழிவுகளிலிருந்து மின்சாரம், கரும்பு, சோளம் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் பயோ-ஃப்யூயல் போன்றவை இன்னும் பரவலாகாததற்குக் காரணம், அவற்றின் விலை மற்றும் efficiency rate. ஆனால், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் அரசே இதற்கு பெருமளவில் மானியம் மற்றும் வரிவிலக்கு போன்ற சலுகைகளித்து ஊக்குவித்ததாலும் அங்கே இவை இன்றியமையாதவையாகிவிட்டன. உதாரணமாக, ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் 40% மின்சாரம் இவற்றிலிருந்தே பெறப்படுகிறது. மேலும், மொத்த வாகனங்களில் 10% மின்சார சக்தியினால் (Electric cars) ஓடுகின்றன.

உலக Carbon footprint-ல் அமீரகத்தின் பங்கு அதிகமென்பதால், அமீரகமும் இவ்வுண்மைகளை உணர்ந்து, இங்கே அபரிமிதமாகக் கிட்டும் சூரிய ஒளியின் மீது தற்போது தீவிர கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. மேலும், அமீரகத்தின் முதல் முயற்சியாக, அபுதாபியில் முற்றிலும் இயற்கை எரிபொருள் மற்றும் குறைந்த கார்பன் வெளியீடு என்ற அடிப்படையில் “மஸ்தார்” என்ற சிறு நகரத்தையே உருவாக்கி வருகிறது.

இந்தக் கண்காட்சியில் நான் அறிந்துகொண்ட புது விஷயம் "Carbon capture and storage" - CCS என்ற இதன் அடிப்படை என்னவென்றால், தொழிற்சாலைகள், எண்ணெய்க் கிணறுகள், வாகனப் புகை போன்றவற்றிலிருந்து வெளிப்படும் நச்சான கார்பனை பிரித்தெடுத்து, சேமித்து, அதை வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்துவது. புதிய விஷயம், இன்னும் வாசிக்க வேண்டும் இது குறித்து.

இந்தக் கண்காட்சியில், 80% ஸோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகள் மட்டுமே இருந்தாலும், கண்ட சில புதிய ஐடியாக்கள் புதுமையாகவும், ஆச்சர்யமாகவும், கவரக் கூடியதாக இருந்தது. ஓரளவு Feasible கூட!! ஒண்ணொண்ணா பாப்போம் - அடுத்த பதிவுல!!
  
 

Post Comment