அபுதாபியில் சில வருடங்களாக நடந்துவரும் World Future Energy Summit (உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு) போன வருஷம் முதன்முறையா போய்ப் பார்த்துட்டு வந்ததிலருந்து, இந்த வருஷம் எப்படா வருதுன்னு வெயிட் பண்ணிகிட்டிருந்தோம்.இந்த வருஷம் ஜனவரியில நடந்துது. மாநாடுன்னவுடனே, நமக்கு வழக்கமா லாரி, மேடை, பிரியாணி, கூட்டம், ப்ளெக்ஸ் போர்டு இதெல்லாம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, இது நிஜமான “அறிவுஜீவிகள்” கலந்துகொள்ளும் மாநாடு + கண்காட்சி + கருத்தரங்கம்.
சுருக்கமா இந்த மாநாடு பத்தி சொல்லணும்னா: குறைந்து வரும் எண்ணெய் வளம், அழிந்து வரும் சுற்றுச் சூழல், பெருகி வரும் உலக வெப்பமயமாதலும், அதன் விளைவுகளையும் முன்னிருத்தி, இவற்றிற்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை அழிக்காமல், வெப்பமயமாதலைத் தடுக்கவும் விழிப்புணர்வை மேம்படுத்தி, நாம் என்னென்ன செய்யலாம் என்பதைக் கலந்துரையாடி, அவற்றிற்கான பொருட்களைச் சந்தைப்படுத்துவதுமே இதன் நோக்கம்.
விரிவான விளக்கத்திற்கு இங்கே போகவும்: WFES 2011 (இது என் போன வருட பதிவுதான், தைரியமாப் படிக்கலாம்)
வழக்கம்போல, கண்காட்சி முழுதும் சோலார் பேனல்கள், காற்றாலைகள், பேட்டரி கார்கள், ஸ்கூட்டர்கள்னு போன வருஷம் பார்த்தவைதான். குறிப்பிடத்தக்க புதிய பொருட்கள் அறிமுகங்கள் எதுவும் இல்லை. ஆனா, பழைய அறிமுகங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
சுருக்கமா இந்த மாநாடு பத்தி சொல்லணும்னா: குறைந்து வரும் எண்ணெய் வளம், அழிந்து வரும் சுற்றுச் சூழல், பெருகி வரும் உலக வெப்பமயமாதலும், அதன் விளைவுகளையும் முன்னிருத்தி, இவற்றிற்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை அழிக்காமல், வெப்பமயமாதலைத் தடுக்கவும் விழிப்புணர்வை மேம்படுத்தி, நாம் என்னென்ன செய்யலாம் என்பதைக் கலந்துரையாடி, அவற்றிற்கான பொருட்களைச் சந்தைப்படுத்துவதுமே இதன் நோக்கம். விரிவான விளக்கத்திற்கு இங்கே போகவும்: WFES 2011 (இது என் போன வருட பதிவுதான், தைரியமாப் படிக்கலாம்)
வழக்கம்போல, கண்காட்சி முழுதும் சோலார் பேனல்கள், காற்றாலைகள், பேட்டரி கார்கள், ஸ்கூட்டர்கள்னு போன வருஷம் பார்த்தவைதான். குறிப்பிடத்தக்க புதிய பொருட்கள் அறிமுகங்கள் எதுவும் இல்லை. ஆனா, பழைய அறிமுகங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
மேலும், இந்த சோலார் பேனல்கள் அதிக சூரிய ஒளியை உறிஞ்சுவதற்காக வேண்டி பேனல்களின் அளவைச் சுருக்கி, பின்னர் இரண்டு, மூன்று பேனல்களை ஒன்றிணைத்து, அதன்மேல் ஒரு கண்ணாடியை (total internal reflection lens) அதன்மீது வைத்திருக்கின்றனர். இதனால், உள்ளே வரும் ஒளி, வெளியே செல்லமுடியாததால், முழுதும் கிரகிக்கப்படும்.
இப்ப சோலார் பேனல்களை எங்கும், எதிலும் வைக்கலாம்கிறதுக்கு உதாரணமா, இந்த மாடல். ஒரு கார் பார்க்கிங் ஷெட் மீது சோலார் பேனல்.
இது எங்க துபாய்ல வரப்போற “சோலார் பார்க்”கின் மாடல்.
இது எங்க ஊர் “கூடங்குளம்” - ஆமாம், வரப்போகும் அணுமின் நிலையத்தின் முன்மாதிரி. என்னது, போராட்டமா, உஷ்!!
இந்த பெரீய்ய தொட்டி பெரிய்ய பெரிய்ய ஹோட்டல்களுக்கானது. மிஞ்சின உணவை இதில போட்டா, அது உரமாகிடுமாம்!! ஜீபூம்பா!
வழக்கமான, “Vending machines"ல, காசு போட்டா தண்ணி பாட்டில் வரும். இதுல காலி பாட்டிலைப் போட்டா, காசு(க்கான கூப்பன்) வரும்!! பிளாஸ்டிக் மறுசுழட்சியை ஊக்கப்படுத்த வரப்போவுது எங்கூர்ல!!
| பெரியவன் உள்ளே, சின்னவன் வெளியே |
இது Shell நிறுவனம் வச்சிருந்த ரேஸிங் கார் (மாதிரி). ஆனா, இதுல என்ன விசேஷம்னா, வழக்கமான ரேஸிங் கார்ல வேகமாப் போய் முதலிடத்துக்கு வந்தாப் பரிசு கிடைக்கும். ஆனா, இதில் "Fuel-intelligent" ஆகப் போகணும். அதாவது, மெதுவாகவும் போகக்கூடாது, வேகமாகவும் போகக்கூடாது. அதே சமயம், எரிபொருளும் வீணாகக்கூடாது. (அவ்வ்வ்வ்...)
என் பெரியவன் ஓட்டி, முதல் பரிசு வாங்கினான். வெளியே முன்பக்கம் வைத்திருக்கும் டிவி திரையில் கார் போகும் சாலை, வேகம், எரிபொருள் செலவு விவரங்கள் தெரியும். (அதாவது வீடியோ கேம் மாதிரி) கண்காட்சியில் அந்த வண்டிய ஓட்டுவனங்கள்லயே அவன்தான் ரொம்ப "Fuel-intelligent"- ஆம்.
இந்த மாநாட்டில், உலகம் முழுவதும், எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்வளம் பேணுதல் இந்த மாதிரி காரணங்களுக்கானக் கண்டுபிடிப்பு மற்றும் பங்களித்தலுக்காக சிறப்புப் பரிசு "Sheik Zayed Energy Prize" என்று வழங்கப்பட்டது. (பரிசுத் தொகை $500,000-ங்கோவ்!!)
இந்தப் பரிசின் “வாழ்நாள் சாதனையாளர்” பிரிவில் வெற்றி பெற்றவர் இயற்பியலாளரான, டாக்டர். அஷோக் கேட்கில் என்பவர். இவர் பிறந்தது இந்தியாவில், வசிப்பது அமெரிக்காவில். இவரது “தர்ஃபூர் ஸ்டவ்” என்கிற கண்டுபிடிப்புக்குத்தான் இந்தப் பரிசு.

![]() |
| சாதாரண ”மூணு கல்” அடுப்பும், “தர்ஃபூர்” அடுப்பும் |

பின்தங்கிய பல நாடுகளில் இன்றும் சமையல் என்பது விறகு அடுப்புகளில்தான். அதற்கான விறகைச் சேகரிக்கக் காட்டிற்குச் செல்லும் பெண்கள் பல்வேறு ஆபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது; மேலும் அதிலேயே நேரமும் அதிகம் செலவாகிறது. ஆப்பிரிக்க நாடான தென் சூடானில், தர்ஃபூர் நகரில் இதுபோல அவதிப்படும் பெண்களுக்கு உதவத் தயாரிக்கப்பட்ட அடுப்புதான் “தர்ஃபூர் ஸ்டவ்”. இதன் விசேஷ வடிவமைப்பால், 55% குறைந்த எரிபொருளே தேவைப்படுகிறது என்பதால் அங்கே பெண்களுக்கு கொஞ்சம் விடிவுகாலம்!! மரங்களையும் காப்பாற்ற முடிகிறது.
இந்தப் பரிசின் இன்னொரு பிரிவான, லாபநோக்கில்லாத சிறுதொழில் பிரிவில், ”Carbon Disclosure Project” என்கிற இங்கிலாந்து நிறுவனம் வென்றுள்ளது. இவர்கள் மற்ற நிறுவனங்கள்/ ஆலைகளின் கார்பன் வெளியீட்டையும் (carbon emissions), தண்ணீர் பயனீட்டையும் கணக்கிடவும், அவற்றை முறைப்படுத்திக் குறைக்கவும் ஆலோசனை வழங்கி உதவுகிறார்கள். இவ்வாறு சுற்றுச் சூழலுக்கு உதவுவதால் இந்தப் பரிசு பெறுகிறார்கள்.இந்தக் கண்காட்சியில, "How energy industry works"னு ஒரு புக் கிடைச்சுது. ஒவ்வொரு விதமான எரிசக்தி, மின்சக்தி கிடைக்கப் பெறும் முறைகளும் பற்றி விளக்கமாக் கொடுத்திருக்கு. வாசிக்கவும் ஈஸியா இருக்கிறதனால், மீ த வாசிச்சிங். அதைபத்தி இன்னொரு பதிவுல. (இன்ஷா அல்லாஹ். ஆனா உடனே &ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்) நானும் இதுவரை புத்தக விமர்சனம் எதுவும் எழுதுனதில்லை. இதை வச்சுப் போட்டுத் தாக்கிற வேண்டியதுதான்!!
நீர்க் கோலங்கள்:
தண்ணியாலேயே படங்காட்டுறாங்க. பாத்து எஞ்சாய்!!
மேலேயிருந்து விழுற தண்ணி கீழே ஒரு சொட்டுகூட வெளியே விழாத மாதிரியான அமைப்புதான் என்னைக் கவர்ந்தது. (ஹி.. ஹி..)
தொடர்புடைய பதிவுகள்:
|
|
Tweet | |||