”அந்தா பாரு.. வெள்ளைக் காக்கா பறக்குது..” என்று சொல்லி சின்ன வயதுப் பசங்கள் ஏமாற்றப்படுவது உண்டு. வளர்ந்த பின், வெள்ளைக் காக்கா என்ற ஒன்றே இல்லை என்று தெரிந்த பின்பு, எப்போ அதை நினைச்சாலும் கொஞ்சம் அவமானமா இருக்கும். சில வாரம் முன்பு வானதியின் வலைப்பூவில், சலவைப் பொடி விளம்பரம் என்று சொல்லி வெள்ளைக் காக்கா படம் பார்த்தபோது காமெடியாக இருந்தது. ஆனா, நெஜம்மாவே வெள்ளைக் காக்கா இருக்குதுன்னு நியூஸ். திருவனந்தபுரத்தில் பிடிச்சு வச்சிருக்காங்களாம்!! அப்போ சின்ன வயசில நாம ஏமாந்துபோகலைன்னு சமாதானப்படுத்திக்கலாம்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
கோமா நிலையில் இருப்பவர்களின் நிலையை ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்று சொல்வார்கள். அவர்களுக்கு சிந்தனை இருக்காது என்றே பெரும்பாலும் நம்பப்பட்டு வந்தது. இதை மறுத்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று. வெளியே மைதானத்தில் விளையாட்டுவது போன்ற சில வகை எண்ணங்கள் தோன்றும்போது, மூளையின் ஒருபக்கம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; வீடினுள்ளே நடப்பது போன்ற மற்றொருவிதச் சிந்தனை செய்யும்போது வேறொரு பக்கம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்யும்போது இதை அறிந்துகொள்ளலாம். கோமாவில் இருக்கும் ஒருவரிடம், கேள்விக்குப் பதிலைப் பெற, ஆம் என்றால் முதல் வகை சிந்தனையை ஓடவிடுமாறும், இல்லை என்றால் அடுத்த வகைச் சிந்தனையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டு செய்த சோதனை வெற்றியடைந்தது, நரம்பியல் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பாகிஸ்தான் எங்கே இருக்கு தெரியுமா? அடிக்க வராதீங்க, “அந்த” பாகிஸ்தானைச் சொல்லலை. நம்ம நாட்டிலேயே ஒரு பாகிஸ்தான் உண்டுங்க!! பீஹார் மாநிலத்தின், பூர்னியா மாவட்டத்தில் ‘பாகிஸ்தான்’ என்கிற கிராமம் இருக்கிறது. பிரிவினையின்போது, தம் உடைமைகளைத் தங்களிடம் தந்துவிட்டு, அந்த ஊரிலிருந்து (கிழக்கு) பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம் மக்களின் நினைவாக, தம் கிராமத்திற்க்கு அம்மக்கள் அந்தப் பெயரைச் சூட்டினார்களாம்.
இனிமே யாராச்சும் ”ஓடுங்க பாகிஸ்தானுக்கு!!”ன்னு சொல்வீங்க!!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
லக்ஷ்மி மிட்டல் - கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள், உலகின் பணக்காரர்களில் ஒருவர், பூர்வீக இந்தியர். ஐரோப்பாவில் பரந்து விரிந்த “இரும்பு” வர்த்தக சாம்ராஜ்யம் உடையதால், “இரும்புக்கை மாயாவி” என்று வர்ணிக்கப்படுபவர். 2006-ல், ஃப்ரான்ஸில் ‘ஆர்ஸெக்லர்” ஆலையை வாங்கினார். பணியாளர்களை நீக்கக்கூடாது என்பது அரசின் முக்கிய நிபந்தனை. ஆனால், நஷ்டத்தையும், கடன்களையும் காரணம் காட்டி, இரண்டு இரும்பு உலைகளை மூடியதோடு, சுமார் 630 பேரின் வேலைக்கும் உலை வைத்தார். பொங்கி எழுத ஃப்ரான்ஸ் நாட்டு தொழிற்துறை அமைச்சர், “வாக்குறுதிகளை மீறுகின்ற மிட்டல் எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. ஆலையை அரசே ஏற்று நடத்தும்” என்று கர்ஜிக்க, அரண்டுபோய் வாலைச்சுருட்டிக் கொண்டுவிட்டது “மிட்டல்” சாம்ராஜ்யம்!! இது ஃப்ரான்ஸ்!!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
கிங்ஃபிஷர் மல்லையா - இவரத் தெரியாதவங்க உண்டா! இவரின் “யுனைடெட் ப்ரூவரிஸ்” என்கிற மதுபான நிறுவனம் செப்டம்பரோடு முடிகிற காலாண்டில் 47% அதிக லாபம் ஈட்டியிருக்கிறதாம். நம்ம டாஸ்மாக்கும் இவர்களின் முக்கிய கஸ்டமராக்கும். சென்ற மாதம், மல்லையா ஒரு கோயிலுக்கு 3 கிலோ தங்கமும், இன்னொன்றிற்கு தங்கக் கதவும் அளித்தார். இவரின் இன்னொரு நிறுவனமான கிங்ஃபிஷர் விமான நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறதென்று கடந்த ஒன்பது மாதங்களாக பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால், ஒரு பைலட்டின் மனைவி தற்கொலையே செய்துகொண்டார். இது இந்தியா!!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
ஒருவழியாக பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக, ஐ.நா. சபை அங்கீகரித்து விட்டது. பெரியண்ணன்களான வீட்டோ பவர் படைத்த அமெரிக்கா, இஸ்ரேல், கனடா ஆகியவை எதிர்த்தபோதும் தீர்மானம் நிறைவேறி இருப்பதில்தான் ஆச்சரியமே!! எளியோர்கள் சேர்ந்தால் வலியோரையும் வீழ்த்தலாம் என்பதற்கு ஒரு உதாரணம்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் பாமியான் புத்தர் சிலைகளை இடித்தது பெரிய சர்சையானது ஞாபகமிருக்கலாம். காட்டுமிராண்டிகள், நாட்டின் தொன்மையான கலாச்சார அடையாளங்களைச் சிதைக்கிறார்கள் என்று அமெரிக்கா, புத்த நாடான சீனா, மற்றும் ஊடகங்களும் ஓலமிட்டன. அப்போது நிறுத்தப்பட்ட “இடிப்பை” இப்போது மீண்டும் தொடர்ந்திருக்கிறார்கள். தொடர்வது, தாலிபான்கள் அல்ல அமெரிக்காவும், சீனாவும்!! அதிர்ச்சியாயிருக்கா... அமெரிக்காவும் சீனாவும் தாலிபான் கட்சிக்கு மாறிட்டாங்களான்னு குழம்பாதீங்க... அந்தச் சிலைகளின் அடியில் புதைந்து இருக்கும் தாமிர கனிம வளம்தான் அதன் ரகசியம்!! இதற்காக 30 வருட ஒப்பந்தம் சீன கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ம்ம்... மருமவ ஒடைச்சா பொன்குடம்; மாமியா ஒடச்சா மண்குடம்!!

|
|
Tweet | |||