போன வருடம் ஜூலையில் நானும், பிள்ளைகளும் பாண்டிச்சேரியில் வேலை நிமித்தம் தங்கியிருந்த என் வாப்பாவோடு ஒரு நாலு நாள் தங்கிவிட்டு, பின் திருநெல்வேலி போவதாக ப்ளான். ப்ளான் படி பாண்டிச்சேரி போன உடனே பெரியவனுக்கு வயிறு வலியும் ஆரம்பிச்சிட்டுது. நானும் பயணக் களைப்பு அல்லது வாயுவாக இருக்கும் என்று ஓமம், மிளகு என்று கைமருந்து கொடுத்தேன். குறையவில்லை. அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்.
ஸ்கேன் செய்ததில் குடல்வால் நீக்க அறுவைசிகிச்சைதான் செய்யணும் என்று தெரிந்தது. எனக்கோ பதற்றம்; என்னவரோ அபுதாபியில். என் அம்மாவும் தங்கையின் பிரசவத்துக்காக ஊர் சென்றிருந்தார். துறுதுறுவென்று நிற்கும் சின்னவன் வேறு. வாப்பாவுக்கும், அலுவலக நண்பர்களை மட்டுமே தெரியும். சின்னவனைக் கவனிக்க யாரும் இல்லாததால், பாண்டிச்சேரியில் செய்யாமல் திருச்சியில் செய்யலாம் என்று நினைத்தேன். அங்கிருந்து காரில் மூன்று மணிநேரம்தான்; மச்சினர் குடும்பம் அங்கு இருப்பதால் சின்னவனையும் பார்த்துக் கொள்வார்கள். எனக்கும் தைரியமாக இருக்கும்; இருந்தாலும் டாக்டரிடம் கேட்டுக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். தலைமை மருத்துவர் மாலை ஆறு மணிக்கு வந்தார். அவரும் அறுவை சிகிச்சையை உறுதிபடுத்திக் கொண்டு மறுநாள் காலை எட்டு மணிபோல செய்யலாம் என்றார்.
நான் அவருக்கு என் நிலைமையை விளக்கமாகத் தெரியப்படுத்தி, திருச்சிக்குப் பயணம் செய்யலாமா என்று கேட்டதுதான் தாமதம், பயங்கரக் கோபம் வந்துவிட்டது அவருக்கு. “கொண்டு போங்க; ஆனா வழியிலயே வெடிச்சிரும். அப்புறம் என்ன வேணா நடக்கும். பரவாயில்லையா?” என்றாரே பார்க்கலாம். நான் அப்படியே விதிர்விதிர்த்து விட்டேன். பிள்ளையைப் பார்த்துப் பேசுகிற பேச்சா அது? அதுவும் ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர்!! நானோ இன்னும் பொறுமையாகப் பேசினேன். அவரோ சாபம் கொடுப்பதுபோல இப்படி ஆகிவிடும் அப்படி ஆகிவிடும் என்றே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சில் நோயாளியைக் குறித்த அக்கறை தெரியவில்லை. மருத்துவமனையை விட்டு நாங்கள் போவதைத் தடுக்கும் எண்ணம் மட்டுமே தெரிந்தது. எமர்ஜென்ஸியாக உடனடியாகச் செய்ய வேண்டியிருந்தாலும் அவர் கையால் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். அவரிடம் டிஸ்சார்ஜ் செய்ய வலியுறுத்தினேன்.
டிஸ்சார்ஜ் செய்வதற்காக அவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் தமிழில், அவர் பேசியதைவிடக் கொடூரமாக எழுதியிருந்தார்கள் (அந்தக் கையெழுத்து அதைவிடக் கொடுமை!!). அதில் எழுதியிருந்த வாசகங்களை இப்போ நினைத்தாலும் நடுங்குகிறது!! அதில் கையெழுத்திடச் சொன்னார்கள். என்னால் முடியாதென்று சொல்லி சண்டைக்குப் போனேன். ஆனால் என் வாப்பா, இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும்; தாமதப்படுத்துவது நல்லதல்ல என்று எடுத்துச் சொல்லி தானே கையெழுத்திட்டார்கள். பின் அங்கிருந்து காரில் திருச்சி வந்து உடனே அங்கு ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். இங்கும் மருத்துவர் காலை பத்து மணிக்கு செய்யலாம் என்று சொன்னார்.
பாண்டிச்சேரியில் அந்த மருத்துவமனையில் நான் செய்யக்கூடாது என்று முடிவுசெய்ததின் காரணம், இவ்வாறு நோயாளியையும் முன்வைத்துக் கொண்டே ஈவிரக்கம் இல்லாமல் பேசுபவரிடம் நான் எப்படி மனநிம்மதியுடன் என் மகனை ஒப்படைக்க முடியும்? சிகிச்சைக்குமுன்பே இப்படிப் பேசுபவர், நாளைபின்னே ஏதாவது பிரச்னை என்றால் எப்படி விளக்கம் தருவார்? மருத்துவர் என்றால் அவரின் பரிமாற்றங்கள் நமக்கு மனநிம்மதியைத் தரவேண்டாமா? அதனால் பாண்டியிலேயே வேறு மருத்துவமனையில் செய்யலாம் என்று நினைத்தேன். பின்னர் திருச்சி மருத்துவரிடமும், திருநெல்வேலியில் ஒரு டாக்டர் நண்பருடனும் கலந்தாலோசித்து, திருச்சி செல்லலாம் என்று முடிவு செய்தோம். மேலும் இங்கும் அவர் மறுநாள் காலை எட்டு மணிக்குத்தானே செய்வதாகச் சொன்னார். மகனும் சம்மதித்திருந்தான். மேலும் திருச்சி - புதுவை சாலையும் புதிதாகப் போட்டது; நன்றாக இருக்கும். கரடு முரடான பயணமில்லை.
மறுநாள் காலை மயக்கமருந்து கொடுப்பவர் (அனஸ்தீஸிஸ்ட்) டிராஃபிக் ஜாமில் (!!!) மாட்டிக்கொண்டு லேட்டாக வந்ததில், 12.30க்கு சிகிச்சை தொடங்கியது. டாக்டரிடம் ஏற்கனவே விபரங்கள் கேட்டிருந்தேன். அப்பெண்டிக்ஸ் பகுதியில் இன்ஃபெக்ஷன் அளவைப் பொறுத்து, அரைமணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் சிகிச்சை முடிந்துவிடும் என்று சொல்லியிருந்தார். லேப்ரோஸ்கோபி முறை என்பதால் நேரமும் அதிகமாகாது என்பதோடு, அடுத்த நாளே வீட்டுக்கும் சென்று விடலாம் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் மூன்றரை மணிநேரம் ஆகும் என்று நினைக்கவில்லை.
அந்த மூன்றரை மணிநேரமும் என் வாழ்நாளில் மிகக் கொடிய நேரம்!! ஆபரேஷன் முடிய ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் தவித்த தவிப்பு!! இப்படி ஆகியிருக்குமோ, அப்படி ஆகியிருக்குமோ, இந்த மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் வேற சின்னப் பையனா இருந்தாரே, கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம பத்து மணி ஆபரேஷனுக்கு பன்னென்டரைக்கு வந்தாரே, அவர் ஏதாவது தப்பு பண்ணிருப்பாரோன்னு கற்பனை செய்து... அழுது,.. ரூமில போய் உக்காந்து அழவும் முடியாது, அங்க வாப்பா இருக்காங்க. நான் அழறதைப் பாத்தா அவங்களும் பதறி அழ ஆரம்பிச்சுடுவாங்க. மச்சானும், அழாதே, அழாதேன்னு சொல்லி அலுத்துப் போயிட்டார்.
நேரம் போகப் போக, அனஸ்தீஷியா கொடுப்பதில் தவறு நேர்ந்ததால் பாதிக்கப்பட்ட நடிகை விஜி, விளையாட்டு வீரர் சந்திரசேகர், இன்னும் பல சம்பவங்கள் திடீர் திடீரென்று நினைவுக்கு வந்ததில் ரொம்பவே பயந்துவிட்டேன்.
செவிலியர்கள் மட்டுமல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள் வரை எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி, செருப்பை மட்டும் கழட்டிவிட்டு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போக, வர இருக்கிறார்கள். அவ்வாறு வெளியே வந்த ஒரு நர்ஸ், இன்னொரு நர்ஸிடம் சொன்னது இது: “கேமரா பிடிக்க ஆள் வேணுமாம்; அதான் மேடத்தைப் போய் கூப்பிடப்போறேன்”!! ஆத்தீ, என்னது கேமரா பிடிக்க ஆளா? என்னதான் நடக்குது இங்க? அவரே சொன்னார், டாக்டரால் கேமராவையும், சிகிச்சையையும் ஒருசேர கையாள முடியவில்லையாம். அதனால், ஒரு கை எக்ஸ்ட்ரா தேவைப்படுதாம். இப்ப இப்படிச் சொல்லிட்டேன், அங்க நான் நடுங்கின நடுக்கம் இருக்கே!! அப்புறம் டாக்டரம்மா (டாக்டரின் மனைவி, குழந்தைப் பேறு மருத்துவர்) வந்தார்.
பிறகு சிகிச்சை முடிந்து, மகனும் இறையருளால் நல்லபடியாக வந்தான். டாக்டரும் வாலை வெட்டமுடியாத காரணத்தை விளக்கினார். ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது.
ஒருவிதத்தில் பாண்டியில் சிகிச்சை செய்யாமல் இங்கு வந்தது நல்லதாகவே பட்டது. அங்கே செய்திருந்தாலும், இதே பிரச்னை வந்திருக்கும். எனக்கும் அந்த டாக்டர்தான், கோபத்தில் வேண்டுமென்றே அப்படிச் செய்துவிட்டாரோ என்று தோன்றியிருக்கும். மருத்துவர்களுக்கென்று ethics உண்டு, அப்படிச் செய்ய மாட்டார்கள்தான். ஆனாலும், சிஸேரியன் என்றால், வேண்டுமென்றே செய்தார்களோ என்று தோன்றுமில்லையா, அது போலத்தான். அதுவுமில்லாமல் ஒரு வாரம், சின்னவனை வைத்துக் கொண்டு அந்த ஊரில் என்னால் தனியே இருந்திருக்கவும் முடியாது. நல்லவேளை நான் திருச்சி வந்தேன்!! இம்மாதிரி சமயங்களில்தான் உறவினர்களின் அவசியமும், அருமையும் அதிகம் புரிந்து, உறவு மென்மேலும் வலுப்பட உதவுகிறது.
மேலும், திருச்சி மருத்துவரிடமும், சிலவற்றைக் குறித்த என் அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, பொறுமையாகத் தன் தரப்பை விளக்கிச் சரிப்படுத்த ஆவன செய்தார்.
நேற்றுகூட பேப்பரில் படித்தேன், "Placebo" எனப்படும் மருந்துகளின் மாற்று, ஒருவரை மனரீதியாக நம்பிக்கையை பலப்படுத்தி குணப்படுத்த உதவுகிறதாம். என்னதான் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், நோயாளிக்கு நம்பிக்கை வருமளவில் தன்மையாக பழகவில்லையென்றால், என்ன பயன்? மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.

|
|
Tweet | |||