Pages

Showing posts with label எண்டர் தட்டியது. Show all posts
Showing posts with label எண்டர் தட்டியது. Show all posts

முகவரி






பேப்பர்காரருக்குச் சொல்லியாச்சு
ஃபோனுக்குச் சொல்லியாச்சு
இண்டர்நெட்டுக்கும் சொல்லியாச்சு
ஸ்கூல் பஸ்ஸுக்குச் சொல்லியாச்சு
தண்ணிகேனுக்குக்கூடச் சொல்லியாச்சு

வீட்டுக்கு வந்த உறவுகளுக்கும்
இதுவரை வராத, இனி வரப்போகும்
உறவுகளுக்கும் சொல்லியாச்சு
இனியும் வரும் எண்ணமில்லாத
அன்புள்ளங்களுக்கும் சொல்லியாச்சு

தினந்தினம் தவறாமல் வந்து
என் கையால் உண்டு
என்னோடு கதைபலப் பேசி
களித்துச் சிரித்து மகிழ்ந்த
என் அருமைச் செல்லங்களே

உங்களுக்கு எப்படிச் சொல்லிப்
புரியவைப்பேன்
என் புது வீட்டு முகவரியை..........



Post Comment

உன்னைக் காணாத கண்ணும்





கணப்பொழுதேனும் பிரிய மனமின்றி
கைப்பிடித்தே திரிந்தோம்
காணும்போது சிரித்து
காணாதபொழுதும்
கண்டிருந்த கணங்களை
கவனத்தில் கொண்டு நகைத்து, இனி
காணும்பொழுதில் கதைக்கவேண்டியதை
கருத்துருவாக்கி
கண்டதும் கலகலவென
கரைகடந்த வெள்ளமாய்
கலந்து கதைகள் பேசி
களித்திருந்தோமே
கண்பட்டுவிட்டதோ கண்ணே
காணவே கணமில்லாமல் போனதே
களைப்புறாமல் காத்திருப்போம்
கலங்காதிரு என் செல்ல வலைப்பூவே!!






 .
 .
 .

 .
 .
 .
 .
 .
 .
ஹி..ஹி... பெற்றோர் வருகை, தங்கை பிரசவம், வீடு நிறைய ஆட்கள்... என செம பிஸி!! அதைவிட,  மாமனார்-மாமியார் முன்பு மாப்பிளையை கெத்தோடு “மரியாதையாக”  நடத்தவேண்டிய கட்டாயமிருப்பதால் வீட்டு வேலை அத்தனையும் என் தலையில் என்பதுதான் உண்மையான காரணம். க்க்ர்ர்ர்ர்ர்..... :-)




Post Comment

கவலைப்பட ஒரு கவலை




motivart.wordpress.com


 செய்தித்தாள் பக்கங்கள்
சொல்லும் சோகங்கள்

தோழிகளின் அழைப்புகள்
தெரிவிக்கும் தேம்பல்கள்

உறவுகளின் உரையாடல்களில்
உறைக்கும் நிதர்சனங்கள்

நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சு கனக்கும்

சீரான வாழ்வு
சுகமான துணை

அழகான மக்கள்
ஆரோக்கியமாய் நான்

துன்பமில்லா வாழ்வு
தானென்றாலும் மனதின்

ஓரத்தில் ஏனோ
ஒரு கலக்கம்

புலம்பும் எனைப்பார்த்து
புன்னகைக்கிறார் என்னவர்

பிரச்னையில்லா வாழ்வை
புவியனைத்தும் வேண்ட

பிரச்னையே இல்லையென
பிரகலாபிக்கும் பைத்தியமென்றார்!!

பொடிக்கல் தடுக்கினால்
பாதகமில்லை பாறைபோல்

பெருந்துயர் வந்தால்
பொறுப்பேனோ பேதை

சிறிதெனில் சிணுங்கினாலும்
சிரமேற் கொள்வேனென்றேன்

துயரே ஆனாலும் இறைவா
துணை நீ இருந்தால் போதும்

பிரார்த்தனையால் தாங்கிப் பிடிக்க
பெற்றோரும் பெற்ற மக்களும்

உடன்பிறப்புகளும் கொண்டவனும்
உற்றவர்கள் சூழ மற்ற நட்பும்

எனக்காக உனைவேண்ட
எம் வேண்டுதல் ஏற்பாய்

எல்லாம் வல்ல நாயனே
போற்றுகிறேன் உனை!!



Post Comment

ஆணாதிக்கவாதியா நீ?






தலை காது மறைத்து உளர்
கையும் கண்ணும் மட்டும் தெரிய சிலர்
கால் முழுதும் மறைக்காதவர் இலர்
கைவிரல்கூட மறைத்துப் பலர்
என்ன இது புதுமை
இனம் மொழி நாடு மதபேதமில்லை

குளிர்காற்றே நீ செய்வதென்ன
அனைவருக்கும் கட்டாய பர்தா
அணிவித்தாய்
ஆணாதிக்கவாதியோ நீ

குளிர்காலமெனும் கயவனிடமிருந்து
காத்து மீட்டெடுக்கக்
கடமைப்பட்டக் காலைக்
கதிரவா எங்கே நீ போனாய்?

தமிழ்மண ஓட்டுகள் குத்திப்
பிரபல பிராப்ளமாக ஆக்கி
சூடான இடுகையுஞ் சமைத்து
மகுடமும் சூட்டி
பின்னூட்டங்கள் அள்ளித் தந்து
ஹிட்ஸைக் கொட்டிக் கொடுத்து
அலெக்ஸா ரேங்கும் தருகிறோம்
பொதியப்பட்டிருக்கும் அப்பாவிகள்
எங்களை மீட்க ஓடோடிவா!!

டிஸ்கி:

ஸ்வெட்டர் போட்டு, குல்லாய் போட்டு, அதற்குமேலே கம்பளி போர்த்தி, கையுறையும் போட்டு, ரூம் ஹீட்டரும் போட்ட பின்னும் குறையாத நடுக்கத்துடன் “உக்காந்து யோசிச்சது”!! அப்படியொரு குளிர் இங்கே!!


இன்னும் சிரிக்கணும்னா, முன்னொரு காலத்தில எழுதப்பட்ட இன்னொரு பதிவையும் பாருங்க.


Post Comment

ஸ்கைப் அம்மா






www.ithacalibrary.com

ஸ்கைப்பில் வந்தாள் அம்மா
ஸ்கைப்பினால் நன்மை பல
தினமும் அம்மாவைப்
பார்க்கலாம் பேசலாம்
சமையல் குறிப்பு
வீட்டு மருத்துவம்
கூடவே அன்பும்
இன்ஸ்டண்ட்டாய்க் கிடைக்கும்

எழுதப் படிக்கவும் அறியா
அம்மா இப்போ
கணினி ஆன்செய்து
ஸ்கைப்பில் தானே
லாகின் ஆகுமளவு
மேதை!!

பாட்டியைப் பார்த்து
பேத்தி ஓடிவந்தாள்
அரிசி காய்கறிகள்
சூப்பர்மார்க்கெட்டில்
விளைகிறது
பால் கொடுப்பது
பாக்கெட் ஃபாக்டரி
போலவே
தாத்தா பாட்டி
வசிப்பிடம்
கணினி நாட்டில்
ஸ்கைப் ஊரில்

சேமநலம் விசாரித்து
இன்றைய சமையல் கேட்டு
கூடுதல் டிப்ஸ் சொல்லி
உற்றார்கள் நலசேதி
கல்யாணம் விவாகரத்து விவரம்கூறி
பின் அம்மா கேட்டாள்

உன் ஓர்ப்படியா அப்பா
கீழே விழுந்து இப்போ
எல்லாம் படுக்கையிலயாமே
வயசுபோன காலத்துல
அவ அம்மாதான்
பாத்துக்கறாளாம்
ஒத்தாசைக்கு
ஒருத்தரும் இல்லையே

அங்க இருக்க
உன் ஓர்ப்படியாகிட்ட
ஒரு எட்டு வந்துபாத்துட்டுப்
போகச் சொல்லக்கூடாதா


பரீட்சைநேரம்
பள்ளிக்கூடம் போறப் பசங்களை
லீவும்போடச் சொல்ல முடியாது
விட்டுட்டும் வர முடியாது
வீட்டுக்காரரும் டூர் போவார்
அதான் வரமுடியல
நாளை எனக்கும் தேவைப்படுமோவென
காரணங்களைச் சேர்த்து
எங்கோபார்த்து நான் சொல்ல

நினைத்ததுபோல அம்மா
அதைச் சொல்லியேவிட்டாள்
என்னவோ போ
இப்படியெல்லாம் கிடையில
கிடக்காம கைகால் நல்லாருக்கும்போதே
நான் போய்ச் சேந்துடணும்
என்றவளை நிமிர்ந்துப் பார்க்கத்
தெம்பில்லாமல்
இந்தா உன் பேத்திகிட்ட பேசு
அவசரமாய் நகர்ந்தேன்


Post Comment

வாழ்த்தலாம் வாருங்கள்




பற்றுடன்
சுதந்திர தின வாழ்த்துக்கள்

வாசத்துடன்
ரம்ஜான் வாழ்த்துக்கள்

பாசத்துடன்
தீபாவளி வாழ்த்துக்கள்

உடன்வந்த
பக்ரீத் வாழ்த்துக்கள்

இடைவெளிவிட்டு
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

கூடவே
புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழரல்லோ,
பொங்கல் வாழ்த்துக்கள்

கையோடு
குடியரசுதின வாழ்த்துக்கள்

கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கலாம்னா
அதுக்குள்ள வந்திடுச்சு

காதலர் தினம்
வாருங்கள் வாழ்த்துவோம்

குட் ஃப்ரைடேக்கும், மே டேக்கும்
இன்னும் ரெண்டு மாசமிருக்கு நல்லவேளை.


Post Comment

காதலில் விழுந்தேன்







நானும் காதலில் விழுந்தேனோ
தகவல் அனுப்பிவிட்டு
பதிலுக்காக
நகம் கடித்துக் காத்திருக்கிறேன்
குறுஞ்செய்திகள் கண்டு 
எனக்குள் நகைக்கிறேன்
கூட்டத்தில் இருந்தாலும்
தனியே இருக்கிறேன்

அவர் சொன்னதை நினைத்து
எழுதியதை யோசித்து
வரும் புன்னகை மறைக்கிறேன்
இப்படி எழுதியிருக்கலாமோ
அப்படிச் சொல்லியிருக்கலாமோ
குழம்புகின்றேன்

கவிதை கிலோவென்ன விலைகேட்ட
நானும் கவிதை வடிக்கின்றேன்
சந்திக்கலாமா எனக் கேட்டதும்
பரவசப்படுகிறேன்
நாளை எண்ணி எண்ணியிருந்து
சந்திப்பில் பேச முடியாமல்
தவிக்கிறேன்

நான் ஏன் இப்படி?
எப்போது மாறினேன்?
நினைத்துப் பார்த்தேன்
பிளாக் எழுத ஆரம்பித்ததிலிருந்துதான்!!




Post Comment

கல் வைத்த அட்டிகை







கல் வைத்த அட்டிகை
கல்யாணத்தில் போட ஆசை
கல்லுக்கும் தங்கத்தின் விலையாமே
கணக்குப்போட்ட தந்தையின்
கவலையான முகத்தைக் கண்டு
கைவிட்டாள் ஆசையை
கன்னியவள்


கண்ணே பொன்னே மணியே
கொஞ்சி என்ன வேண்டும் கேளெனக்
கேட்டவனிடம் சொன்னாள்
கல்லென்ன வைரமே வாங்கலாமெனக்
கண்ணானவன் சொல்ல கண்மயங்கினாள்
கடைக்குப்போய் விசாரித்த
கொண்டவனின் மெலிதான தயக்கம்
கண்டு சினந்து ஆசையைக்
கலைத்தாள் மீண்டும்

காலங்கள் கழிய
கையிருப்பாய் சுயசேமிப்பு இருக்க
கனவு மீண்டும் தலையெடுக்க
கண்கவர் கல்நகை பார்த்தெடுத்து
கல்லாவுக்கு வந்து காசுகொடுக்கையில்
கைவிடப்பட்டோருக்கு உதவுங்கள்
கருணைப் பெட்டி கண்டு
கைகழுவினாள் ஆசையை
காலத்திற்கும்!!



Flash picture: http://www.beitalkhair.com/

Post Comment

ஆண்டவா.. காப்பாத்து....








Picture: blogs.trb.com



மீண்டும் அலங்கோலமாய்க் கிடந்தன
பெரிய மாமி வீட்டில்
போன தடவை வந்தபோது
அடுக்கிய சமையலறை அலமாரியும்
அழுந்தித் தேய்த்தப் பாத்திரங்களும்
எனக்கான எல்லைகள் மட்டும் தெளிவாய்...
 



டிஸ்கி: ஹை.. நானும் எண்டர் தட்டிட்டேனே!! அப்புறம், ஏதோ கவிதப் போட்டி நடக்குதாமே, அதுக்கு இத எப்படி அனுப்புறதுன்னு ... அடிக்காம சொல்லித்தாங்க, ப்ளீஸ்!!


கவிதை எழுதச்சொல்லி ஊக்குவித்த ஷஃபிக்கும், ஏஞ்சலுக்கும்  நன்றி!!







Post Comment