மீண்டும் அலங்கோலமாய்க் கிடந்தன
பெரிய மாமி வீட்டில்
போன தடவை வந்தபோது
அடுக்கிய சமையலறை அலமாரியும்
அழுந்தித் தேய்த்தப் பாத்திரங்களும்
எனக்கான எல்லைகள் மட்டும் தெளிவாய்...
டிஸ்கி: ஹை.. நானும் எண்டர் தட்டிட்டேனே!! அப்புறம், ஏதோ கவிதப் போட்டி நடக்குதாமே, அதுக்கு இத எப்படி அனுப்புறதுன்னு ... அடிக்காம சொல்லித்தாங்க, ப்ளீஸ்!!
கவிதை எழுதச்சொல்லி ஊக்குவித்த ஷஃபிக்கும், ஏஞ்சலுக்கும் நன்றி!!
கவிதை எழுதச்சொல்லி ஊக்குவித்த ஷஃபிக்கும், ஏஞ்சலுக்கும் நன்றி!!
|
Tweet | |||
30 comments:
நடத்துங்க
ஆகா, இது!! இத இதத்தான் எதிர்பார்த்தேன்.
//SUFFIX Says:
13/12/2009 15:58
ஆகா, இது!! இத இதத்தான் எதிர்பார்த்தேன்.//
அடுத்து, மக்கள் தர்ற கும்மியையும் (உங்களுக்கு) எதிர்பாருங்க!!
//ஆண்டவா.. காப்பாத்து...//
//எனக்கான எல்லைகள் மட்டும் தெளிவாய்...//
தலைப்பும், கவிதை வரிகளும், கலக்கிட்டேல் போங்கோ!! இனி தொடர்ந்து கவிதையிலேயே மூழ்கி, முத்தான வரிகளை எங்களுக்கு தருவீர்கள் என நம்புகிறோம்.
நீங்களே வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஓண்ணும் பிரச்சனையில்லை... ஷபி மற்றும் ஏஞ்சலுக்கு ஆட்டோ அனுப்பபட்டுள்ளது. அவர்கள் ஊரைக்கெடுக்கிறார்கள்.
ஆண்டவா!
//நாஞ்சில் பிரதாப் Says:
13/12/2009 16:10
ஓண்ணும் பிரச்சனையில்லை... ஷபி மற்றும் ஏஞ்சலுக்கு ஆட்டோ அனுப்பபட்டுள்ளது. அவர்கள் ஊரைக்கெடுக்கிறார்கள்//
ஆட்டோ, ஃப்லைட்டில் தானே வரும், முதலில் அபுதாபிக்கு அனுப்பிட்டு வழியில் நம்மளை பிக் அப் பண்ணிக்குங்க, நீங்க நடத்துங்க ஹூசைனம்மா, வெற்றி உங்களுக்கே, தங்க மெடலை தட்டி வருவது தானே உங்கள் குறிக்கோள்?
ஆண்டவா......... காப்பாத்து......... - நானும் சொல்லிக்கிறேன்
ஆகா....
எப்புடிங்க கவிதை எழுதறது...எனக்கு கொஞ்சம் சொல்லி குடுங்க...:)
புரிந்து விட்டது தஙகையின் எல்லைகள்..!கவிதைகளை இன்னும் கொஞ்சம் சீரியஸாக தொடருங்கள்.ரசிக்கத்தயாராகிவிட்டோம்.
முடியல........!!!!
இந்த மாதிரியெல்லாம் கவுஜ எழுதினா வைரஸ் அனுப்பாம வைர நெக்லஸா அனுப்புவாங்க ?!?!?!
but keep it up !!
ஐ....ஹுசசைனம்மா ஆண்டவன கூபுட்ராங்க்லே....
சமையல்ல பிரச்சினயோனு அப்டின்னு நெனைசிட்டே வந்து பாத்த.....
கவிதாயினி ஹுசசைனம்மா........
ஆடி போயிட்டோம்ல...
:-(
அழகா இருக்குங்க...
கவிதை
கவிதை
சீக்கிரம்
போட்டிக்கு
அனுப்புங்க!!!:)))
கவித, கவித, கவித.............. வாழ்த்துக்கள்!
வேணாம் நண்பா
கவிதை போட்டி நடத்துறவங்க பொலட்சி போட்டும் விட்ருங்க...பாவம்...
கவிதாயினிக்கு என் வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு ............
அசத்துங்க ஹுசைனம்மா
கவிதை எப்படி எழுதுவதுன்னு ஒரு பதிவு சீக்கிரம் போடுங்க :)
ஆண்டவா காப்பாத்து...
மீண்டும் அலங்கோலம்னா? முன்னாடியும் அப்படித்தான் இருந்ததா? அடுக்கிய அலமாரி, அழுந்தித் தேய்த்தன்னா என்னா அர்த்தம்? கிளீன் பண்ணனுமா? வேண்டாமா?
கடமுடா கடமுடா.. (ஒண்ணுமில்லங்க கொளப்பத்துல பாத்திரத்தை உருட்டிக்கிட்டிருக்கேன்.)
நடத்துங்க நடத்துங்க நாங்க எல்லாம் இருக்கும் போது என்ன பயம் ....கவிதை மலையா கொட்டுங்க வாழ்த்துகள் :-)
/கமெண்ட் வழியா வைரஸும் அனுப்பித் தர்றாங்களாம்/....ஓஓ இப்படி எல்லாம் கூட நடக்குதா??!!!!
ஆண்டவா - கவிதைய இவங்ககிட்ட இருந்து காப்பாத்திடு! இவங்களை நாங்க பாத்துக்கறோம்.
இம்புட்டு நாள் சைலண்ட் ரீடரா அமைதியா வந்துட்டு போயிட்டிருந்தேன் - இப்புடி வேண்ட வச்சுட்டீங்க்ளே!
கவிதைய படிச்சுட்டு நொந்து போயி இருந்த நான், இப்பொ உங்களுக்கு வந்த கமெண்ட்ஸ் படிச்சு சிரிச்சிட்டு இருக்கேன் :)
அதுசரி, அடையாளம் தெரியுதா ஆள் ஆருன்னு :)
//எல் போர்ட் Says:
அதுசரி, அடையாளம் தெரியுதா ஆள் ஆருன்னு :)//
ஏன் தெரியாம, அதான் உங்க ப்ரொஃபைல்ல உங்க படம் தெளிவா போட்டிருக்கீங்களே, அதனால நல்லாவே தெரியுது!!
எப்படியோ உங்களையும் (கமெண்ட்) எழுத வச்சிட்டன்ல, அதுவே என் கவிதையின் வெற்றிதானே!!
கரிசல்காரன், நன்றி.
ஷஃபி, தொடர்ந்து பாராட்டி, ஊக்கு"வித்து" வரும் உங்களுக்கு என் நன்றி.
அண்ணாமலை, வெற்றிபெற வாழ்த்தியதற்கு நன்றி.
நாஞ்சில் பிரதாப், //அவர்கள் ஊரைக்கெடுக்கிறார்கள்// நாம என்ன செய்யறோமாம்?
அப்துல்லா, நீங்களுமா?
நவாஸ், யூ டூ?
கிருத்திகா, 2,3 வார்த்தைக்கு ஒரு முறை எண்டர் தட்டினா கவிதயாம்.
ஸாதிகாக்கா, நிஜமாவே புரியுதா?
செய்யது, //but keep it up !! !!/ எதை?
லெமூரியன், பட்டம் தந்ததற்கு நன்றி.
பிரியமுடன்...வசந்த், //அழகா இருக்குங்க...// எது, படமா, பாட்டா?
gulf-tamilan , அனுப்பச் சொல்றீங்க, ஆனா எப்படி அனுப்புறதுன்னு யாருமே சொல்ல மாட்டேன்கிறாங்களே??
சித்ரா, நன்றி.
கமலேஷ், அப்படிங்கிறீங்க, சரி, விட்ருவோம்.
புதுகைத் தென்றல், நன்றி.
காற்றில் எந்தன் கீதம், நன்றி. நீங்க சுதர்ஷினியா?
சின்ன அம்மிணி, 2,3 வார்த்தைக்கு ஒரு முறை எண்டர் தட்டினா கவிதயாம்.
பீர், அவ்வளவு சீக்கிரம் உங்களையெல்லாம் விடறதா இல்லை.
ஹர்ஷினி அம்மா, ஆதரவுக்கு மிகுந்த நன்றி. உங்களை மாதிரி ரசிகர்கள் இருக்கும்வரை, கவிதை எழுதுவதை நிறுத்தப்போவதில்லை.
//ஆதிமூலகிருஷ்ணன் Says:
மீண்டும் அலங்கோலம்னா? முன்னாடியும் அப்படித்தான் இருந்ததா? அடுக்கிய அலமாரி, அழுந்தித் தேய்த்தன்னா என்னா அர்த்தம்? கிளீன் பண்ணனுமா? வேண்டாமா?
கடமுடா கடமுடா.. (ஒண்ணுமில்லங்க கொளப்பத்துல பாத்திரத்தை உருட்டிக்கிட்டிருக்கேன்.)//
உங்களுக்கே புரியாதபடி கவிதையை எழுதிட்டதனால, இடது நவீனத்துவவாதிகளின் சங்கத்தில என்னையும் மெம்பரா சேத்துக்கச் சொல்லி ரெகமண்ட் பண்ணுங்க.
அசத்துங்க ஹுசைனம்மா
nala irukunga kandipa prize kidaikum ana konjam modify psnunga ungaluku prize nichayam
neenga intha link ku poi anupunga
http://www.tamil.blogkut.com/uraiyaadal.php
ok all the best and advances congratulations
Post a Comment