Pages

துபாய் ரொம்ப சீப்!!

இந்தியா போகும்போது ரொம்பப் பயந்த (எல்லாரும் பயங்காட்டுன) விஷயம் மின்சாரத் தடை. கஷ்டத்தை எதிர்பார்த்தே போனதால், பெருங்கஷ்டமாத் தெரியலை. சமையலறையில் மட்டும் - கரண்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- வியர்க்கத்தான் செய்கிறது. வீட்டில் இன்வர்ட்டர் இல்லை என்பதால் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டோம். ஆனால், அதுவும் கடைசி நாட்களில் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டிவந்ததால் உயிர் ஊசலாடும் நிலைமைக்குப் போய்விட்டது.

only4funny.blogspot.com
இன்வர்ட்டரில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் இறங்கிவிட்டதென்றால், பின்னர் 12 மணிநேரம் தொடர்ச்சியாக சார்ஜ் ஏற்றினால்தான் சரியாக வேலை செய்யுமாம். இருக்கும் கரெண்ட்கட்டில் 12 மணி நேரம் எப்படி சார்ஜ் செய்வது? அந்த கம்பெனிக்காரர்களிடம் சொன்னால், எடுத்துக் கொண்டுபோய் (ஜெனரேட்டர் மூலம்) சார்ஜ் செய்து தருவார்கள்.

மின்சாரப் பற்றாக்குறை ஒருபக்கம் என்றால், சமையல் கேஸ் பற்றாக்குறை இன்னொரு பக்கம். அதற்காக, இண்டக்‌ஷன் அடுப்பு வாங்கிவைத்து, “நேரங்காலம்” பார்த்து, சமைக்கிறார்கள் மக்கள்!!

இந்த வெயில் காலத்திலும் கொசுக்கள் தாராளமாக இருக்கின்றன என்பது ஆச்சர்யம்!!

பாண்டிச்சேரி போயிருந்தேன்.   கரண்ட் கட் இல்லை; வியர்வை இல்லை... ஹூம், கொடுத்துவச்ச மக்கள்ஸ்.


தமிழகத்தில் இன்னும் பல குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. அதனால் போர் தண்ணியையே குடித்து வந்தனர். இம்முறை அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு "RO plant with filter" (உப்புநீரை குடிநீராக்கிச் சுத்திகரிக்கும் மெஷின்) இருக்கிறது. விலையும் 12,000 ரூபாயதான்; பராமரிப்பும் வருடத்திற்கொருமுறை மட்டுமே என்பதால் யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் குறித்துக் கவலைப்படுவதில்லை!!


அதேபோல பாரபட்சமில்லாமல் எல்லா மக்களிடமும் இருக்கும் கண்டிப்பாக இருக்கும் இன்னொரு பொருள் - டார்ச்!! வெளியே செல்லும் எல்லாரும் ஒரு சிறிய பென் டார்ச் கொண்டுசெல்லத் தவறுவதில்லை. ”எவரெடி” காலம் திரும்புகிறது!!

மதுரை திருமலைநாயக்கர் மஹாலில் நடைபெறும் “ஒலி - ஒளி காட்சி” பார்க்கப் போயிருந்தோம். பல வருடங்களாய் மதுரையில் இருக்கும்  நண்பர்களிடம் கேட்டபோது ”பார்த்ததில்லை” என்றார்கள்!! ம்ம்ம்... முற்றத்து மல்லிகைக்கு வாசமில்லை!!
 வெளிநாடுகளில் “ஒலி-ஒளி” காட்சிகளைப் பார்த்தபின், இது ரொம்ப சிம்பிளாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் பார்க்கலாம். காட்சிக்கேற்றபடி நகரும் ஒளி அமைப்புகள் வித்தியாசம். ஒலியோடு, ஒளியாலான உருவ அமைப்புகளும் இருந்திருந்தால் (animation போல) இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

ஒலி-ஒளி காட்சியின்போது பிரகாசிக்கும் மஹால்
திருமலை நாயக்கரின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை “ஒலி”யாக தகுந்த இசையோடு விவரிக்கிறார்கள். நாங்கள் பார்த்தது ஆங்கிலக் காட்சி. அவ்வளவாக இனிமையாயில்லை. தமிழ்க் காட்சி பார்த்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நிறைந்திருந்த பார்வையாளர் அரங்கம், ஆங்கிலத்தில் வர்ணனை ஆரம்பித்ததும் மெல்ல மெல்லக் காலியாகியே விட்டது!!


இக்காட்சி நடப்பது நாயக்கர் அரண்மனையின் தர்பார் ஹாலில். அருகிலேயே உள்ள அரண்மனையையும் சுற்றிப் பார்க்கலாம். ஆனால், மாலை ஐந்து மணி வரை மட்டுமே அதற்கு அனுமதி. ஒலி-ஒளி காட்சிகள் 7 மணிக்குத் துவங்கும்.
மேலதிகத் தகவலுக்கு: http://www.maduraidirectory.com/palace/sl.php


வழக்கம்போல ”பைக்”குகள் ராஜ்யம்தான் நாட்டில். ஏப்ரல் வெயிலில் நானும் என்னவரோடு பைக்கில் சுற்ற வேண்டியிருந்த போது,   ஒரு கடைக்குப் போயிட்டு வந்து வெயிலில் நிற்கும் பைக்கில் உக்கார முடியல.. சீட் கொதிக்குது.... “ஹெல்மெட் மாதிரி, பைக் சீட்டுக்கும் ஒரு தெர்மோகோல் கவர் செஞ்சு வச்சுக்கணும்” என்று தோன்றியது.  உடல்நலத்தைப் பாதிக்கும் விஷயம் என்பதால் பைக்கிலேயே சுற்றும் மக்கள் யோசிக்கவும்.

என்னவரிடம் இதைச் சொன்னபோது, “இதுக்கே இப்படியா? அபுதாபியின் கோடைக்குமுன் இது ஒன்றுமேயில்லை. எப்படியோ எங்க (ஆண்களின்) கஷ்டம் புரிஞ்சாச் சரி” என்றார். அபுதாபி சம்மரில் காரினுள் இதுபோல அனலாக இருக்கும். ஸ்டீரிங்கைக் கூடத் தொடமுடியாது. ஏஸியை ஆன் செய்தாலும், கார் குளிர வெகுநேரம் எடுக்கும்.

இரு புதிய நாகர்கோவில்/கேரளா ஸ்பெஷல் பழவகைகள் உண்ணக் கிடைத்தன. ஒன்று, அயினிச் சக்கை; மற்றது “ஜம்பக்கா”!! யாரக்கா? ஜம்பக்கா..
மேலே படத்தில் இருப்பது அயினிச் சக்கை. இது பலாப்பழ வகையைச் சேர்ந்தது. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட  ஒரு மினி பழாப்பழம் போலவே, ஆனால் ஆப்பிள் சைஸில் இருக்கும். பலாப்பழத்தின் “மைக்ரோ-மினி” வடிவம் என்றுகூடச் சொல்லலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை.

ஜம்பக்கா(ய்), பார்க்க அழகாய் இருக்கிறது. முழுதாக அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். ஆனால், இனிப்பே இல்லாமல், துவர்ப்பாய் இருக்கும் என்பதால் தொடர்ந்து சாப்பிட ஆசை வராது.  Looks deceive!! :-D

 
ஆங்கிலத்தில் Wax apple என்று பெயர். சில மனிதர்களைப் போல, தோற்றத்தில் ஜம்பமாக இருந்து, உள்ளே சுவையில்லாமல் இருப்பதால்தான் இதுக்கு “ஜம்பக்காய்” என்று பேர் வந்ததோ? 


மகன்களுக்கு வெள்ளியில் மோதிரம் வாங்க நகைக்கடைக்குப் போயிருந்தேன். அங்கேதான் ’பகல்கொள்ளை’  என்றால் என்னவென்று புரிந்தது. 3 கிராம் எடையுள்ள மோதிரத்திற்கு சேதாரம் 2.5 கிராம் எனச் சொன்னார்கள்!!  பேசியதும் கொஞ்சம் (மட்டும்)  குறைத்தார்கள்.

அதே கடையில், ஒரு நடுத்தரக் குடும்பம், நகைச்சீட்டில் சேர்ந்திருந்த பணத்திற்கு நகை வாங்க வந்திருந்தார்கள். நகைச்சீட்டில் உள்ள பணத்திற்கு ஏற்றபடி, ஒரு சிறிய வெள்ளி டம்ளர் தேர்ந்தெடுத்து பில் போடச் சொன்னார்கள். (ரூ. 2000+)  உடன்வந்திருந்த மகளின் கல்யாணத்திற்காயிருக்கும்போல. அந்த மகளோ, “ரெண்டா வாங்கினாத்தான் என்னவாம்?” என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள்!! அதுவல்ல விஷயம்.

நகைச்சீட்டு சேரும்போது செய்கூலி, சேதாரம் கிடையாது என்று சொன்னார்களாம். இப்போது எவ்வளவு நகை வாங்கினாலும் - தங்கமோ, வெள்ளியோ - எவ்வளவு வாங்கினாலும்,  அதில் 0.850 மில்லிகிராமுக்கு மட்டுமே செய்கூலி கிடையாது; மீதி நகைக்கு செய்கூலி உண்டு என்றார்கள்!!  ஒரு கிராம் கூட இல்லை, வெறும் 0.850 மில்லிகிராம்!! அந்தக் குடும்பத்தலைவர் வெறுத்துப்போய் ஒன்றும் வாங்காமலே கிளம்பிவிட்டார். ஏப்ரல், மே கல்யாண சீஸன் என்பதால், கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருந்தது.

ரயில் - சாலைப் பயணங்கள்...  வழக்கம்போலத்தான். சாலைப் பயணங்கள் தற்போது விரைவாகவும், சுகமாகவும் இருந்தாலும், பயமாக இருக்கிறது. அதற்காக ரயிலில் போனால், சர்வம் அழுக்கு மயம்!!

ஒரு ரயில்பயணத்தில், நடு இரவில்  “குடிமகன்” ஒருவன் செய்த அலம்பலில் பயணிகள் எரிச்சலடைய, டி.டி.ஆர். அவரை அவரது சீட்டுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து,  ”இதுதான் உங்க இடம். இங்கேதான் இருக்கணும். வேற எங்கயும் போகக்கூடாது. சரியா?” என்று மிகப் பவ்யமாகப் பேசினார்!! அரசு ஊழியர், அதுவும் மத்திய அரசு ஊழியர் இவ்வளவு பணிவாகப் பேசியது ஆச்சர்யம்தான். ஆனாலும் ஒரு குடிகாரனிடம்போய் இந்தப் பணிவு தேவையா என்றும் கோபம் வந்தது. ஒருவேளை கோவப்பட்டிருந்தால் அவன் இன்னும் அதிகம் கலாட்டா செய்திருக்கலாம் என்று பொறுமையாப் பேசினாரோ என்னவோ.

அடுத்த ஸ்டேஷனில் வேறொருவர் வந்து அந்த குடிமகனின் சீட்டைத் தன் இடம் என்று சொல்ல, டிடிஆர் செக் செய்து பார்த்தால், குடிமகன் இருப்பது சரியான சீட் எண்தான்; ஆனால் ‘கம்பார்ட்மெண்ட்’ நம்பர்தான் வேறே!!


சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு புத்தகங்கள் பார்த்தேன். நல்லா இருக்கு. Monotone-ஆக இல்லாமல், தியரி, செய்முறை விளக்கம், டிப்ஸ், புதிர் என்று கலர் கலர் கட்டமாக, பார்க்கும்போதே படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது (- பெற்றோர்களுக்கு!!).  ஒரு மாணவியிடம் (உறவினர் மகள் ) கேட்டபோது, வெறுமே மனப்பாடம் செய்ய முடியாது, புரிந்தால்தான் படிக்க முடியும், அதுவும் அறிவியலில், தியரியாக இல்லாமல், ப்ராக்டிக்கலாக தியரியை அப்ளை செய்து தீர்க்கும் முறையில் பாடங்கள் இருக்கின்றன என்று சொன்னாள்.

தமிழ்ப் பாடத்தில், கொடுக்கப்படும் தலைப்புக்குக் கவிதைகூட எழுதணுமாம். ரொம்பக் கடினமா இருக்குன்னு சொன்னாள். ஒரு பதிவரா இருந்துட்டு கவிதை எழுதத் தெரியலைன்னு சொல்றதைக் கேட்டுட்டுச் சும்மா இருக்க முடியுமா? கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”!!

  பள்ளிகள் கட்டணம் இன்னும் பயமுறுத்துவதாகத்தான் இருக்கின்றன. இங்கிருக்கும் ஒரு நண்பர், தம் மூன்று பிள்ளைகளையும் இந்தியாவில் பள்ளியில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தவர், எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மூன்று பேருக்கும் பள்ளி கட்டணம், பேருந்து கட்டணம், வீட்டுச் செலவுகள் எல்லாமே அமீரகம் போலத்தான் இருக்கின்றது. மேலும் டொனேஷனாகப் பெருந்தொகை வேறு கொடுக்க வேண்டும். எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, பள்ளிப் படிப்பு இங்கு முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்கு இந்தியா போவதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டார்.

துபாய்த் தோழியின் தம்பி, சென்னைவாசி. துபாய்க்குச் சுற்றுலா வந்திருந்தவன், “அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே!!” என்று சொன்னானாம்.  ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!!

Post Comment

40 comments:

சாந்தி மாரியப்பன் said...

அயினிச்சக்கையும், சாம்பக்காயையும் கொண்டாந்ததுக்கு தாங்கீஸ்.. அயினிச்சக்கைக் கொட்டைகளை வறுத்துத் திங்கலாம்.. தெரியுமோ?... சாம்பக்காய் இங்கேயும் நல்ல பச்சைக்கலர்ல கிடைக்குது. கண்டா விடறதில்லை நான்
:-))

குடிமகனிடம் ஆப்பீசர் நடந்துக்கிட்டது அந்தச் சூழ்நிலையில் சரிதான்னுதான் எனக்கும் தோணுது. தன்னிலையில் இல்லாதவன் கிட்ட சண்டை போட்டு என்ன ஆகப்போவுது?

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ஹை குட்டி பலாபழமா? நாவூறுது...

அக்கறைக்கு இக்கறை பச்சை..

Seeni said...

nalla anupavangal!

oorukku ponathu pol-
ninaippu!

கீதமஞ்சரி said...

ஊருக்குப் போன அனுபவத்தை அழகா சொல்லியிருக்கீங்க.மக்கள் இந்தக் கோடையிலும் மின்வெட்டை சமாளிக்கிறதுதான் பெரிய சாதனை. நினைச்சுப் பார்த்தாலே ரொம்ப பாவமா இருக்கு.

ஜம்பக்காய் காரணம் நீங்க சொல்றது சரின்னுதான் தோணுது.

Roomil said...

அதேன்னேங்க "ஜம்பக்கா"
இது இதே பெயரில் எங்க ஊரிலும் கிடைக்கும் இது கோடைகாலத்து தாகசாந்தி
இன்னுமொன்று கோடைகாலத்தில் கிடைகும் கொடியில் காய்க்கும் ஐஸ் க்ரீம் என்று சொல்லலாம் அவ்வளவு சுவை பழத்துக்கு சீனி சேர்த்தால் கரைந்து விடும் அந்த சுவையான பழத்தை எங்க ஊரில் வெள்ளரி என்று சொல்வார்கள்
சுவாரஸ்யமான பதிவுக்கு நன்றி
அன்புடன் ரூமில்

துளசி கோபால் said...

நல்ல அனுபவம் ! ரசித்தேன். தேன்.....

எனக்கும் இந்தியாவில் ஹொட்டேல் சார்ஜ் தவிர மற்றது (சில) சீப்பாத்தான் இருக்கு:-))))

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல தொகுப்பு.

திருமலை நாயக்கர் மஹால் சின்ன வயதில் சென்றுள்ளேன் என்றாலும் மீண்டும் செல்லும் திட்டம் உள்ளது. தந்திருக்கும் சுட்டி, தகவல்கள் உபயோகப்படும்.

ஜம்பக்காயின் பெயர் காரணம் சூப்பர்:)!

ADHI VENKAT said...

இந்த மின்வெட்டு பிரச்சனை தில்லியிலேயே உள்ளதால் ஊருக்கு போனாலும் பெரிதாக தெரியாது என்று நினைக்கிறேன்.

திருமலை நாயக்கர் மஹாலுக்கு அடுத்த முறை செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..

இந்த ஜம்பக்கா நான் சிறு வயதில் சாபிட்டிருக்கிறேன். அவ்வளவு ஒன்றும் நன்றாக இருக்காது.

ரயில் பயணம் எப்பவுமே அழுக்கு பயணம் தான்....:(

ஸாதிகா said...

இந்தைய அனுபவங்கள் கலக்கல்.

சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே!!”// உண்மைதான் ஹுசைனம்மா.

துபை வந்திருந்த பொழுது முதன் முதலில் தொலைபேசிய தளிகா முதலில் சொன்ன வார்த்தை”அக்கா துபை ரொம்ப சீப்.எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளுங்க “என்று.

திருமணத்திற்கு நகைகள் வாங்குவதற்காகவே துபை வரும் ஆட்களும் உண்டு.

Avargal Unmaigal said...

//“அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே!!” என்று சொன்னானாம்.//

கடந்த வருடம் துபாய் வந்த போது நான் அறிந்து கொண்டது துபாயை விட அமெரிக்காவில் எல்லாம் சீப்பாக உள்ளது.

வெங்கட் நாகராஜ் said...

நிறைய விஷயங்களைச் சொல்லிச் சென்ற பகிர்வு.

எத்தனை எத்தனை அனுபவங்கள்...

நகைக் கடை, விலைவாசி போன்ற நிறைய விஷயங்கள் பயமுறுத்துகின்றன.

ஸ்ரீராம். said...

இன்வெர்டர் வாடகை என்ன விலை என்று சொல்லவில்லையே...!

கேஸ் பிரச்னை இன்னமும் தீராத தலைவலிப் பிரச்னை.

R O ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கெல்லாம் போட்டுக் கொடுக்க ஆள் வந்து விட்டது..!

பல வருடங்களுக்கு முன்னால் திருமலை நாயக்கர் மஹால் ஒளி ஒலிக் காட்சி பார்த்தது... அது கூட வந்திருந்த உறவினர்களை அழைத்துப் போகும் சாக்கில்தான்!

குடிமகனை விடுங்கள் சரியான கம்பார்ட்மெண்டில் அவர் உட்காரவில்லை என்பது டி டி ஆருக்கே தெரியாமல் போனது ஆச்சர்யம்தான்!

கோமதி அரசு said...

ஒலி-ஒளி காட்சியின்போது பிரகாசிக்கும் மஹால் படம் அருமை.

ஜம்பக்கா பச்சை கலரில் கோவையில் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.

மின் வெட்டு,குடிநீர், சமச்சீர்க்கல்வி, கல்வி கட்டணம், நகை கடை, ரயில் பயணம், என்று உங்கள் அலசல் நன்றாக இருக்கிறது.

தமிழ் நாட்டு அனுபவங்கள் நல்ல பகிர்வு.

அமர பாரதி said...

ஜம்பக்காக் - பெயரை இப்போதுதான் புதிதாக கேள்விப் படுகிறேன். எங்கள் தோட்டத்தில் இருக்கிறது. ஏகப் பட்டது காய்க்கும். அதை வாட்டர் ஆப்பிள் என்று சொல்லுவார்கள், வேக்ஸ் ஆப்பிள் இல்லையென்று நினைக்கிறேன்.

அமர பாரதி said...

ஜம்பக்காக் - பெயரை இப்போதுதான் புதிதாக கேள்விப் படுகிறேன். எங்கள் தோட்டத்தில் இருக்கிறது. ஏகப் பட்டது காய்க்கும். அதை வாட்டர் ஆப்பிள் என்று சொல்லுவார்கள், வேக்ஸ் ஆப்பிள் இல்லையென்று நினைக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

Ye! True, here cheap,

also people get more money easily than here :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜம்பக்காய் சூப்பர் கருத்து..:)
வெயில் மழை எதைப்பற்றி புலம்பினாலும்.. இந்த கமெண்ட் வந்துடும் ஹுசைனம்மா.. எங்க கஷ்டம் புரிஞ்சாச்சரி ந்னு..:)

கவிதைப்பட்டறை :)))
உங்கள் சேவை நாட்டுக்குத்தேவை..

Riyas said...

இந்தியாவுடன் ஒப்பிடும் போது மட்டுமல்ல அபுதாபியுடன் ஒப்பிடும் போது துபாய் சீப்தான்.. இங்கே ரூம் வாடகை என்ற பெயரில் பகல் கொள்ளை..

//இந்த வெயில் காலத்திலும் கொசுக்கள் தாராளமாக இருக்கின்றன என்பது ஆச்சர்யம்!!//

ஏன் கொசுவுக்கு வெயில் ஒத்துக்காதா:))

/ஜம்பக்காய்/ இதை எங்க ஊரில் ஜம்புக்காய் அல்லது ஜம்பு என்போம்.. நீங்கள் சொல்வது போல் இல்லை கொஞ்சம் இனிக்கவும் செய்யும்.. உங்க ஊரு ஜம்பக்காய் வேறு இனம் போல..

வல்லிசிம்ஹன் said...

அட இவ்வளவு விஷயங்களா.
ஜம்பக்காய்! கேள்விப்பட்டதே இல்லை:)
உண்மையிலியே துபாய் சீப்தான். நான் மிளகு,ஜீரகம் எல்லாம் லுலு சூப்பர் மார்க்கெட்ல வாங்கி வந்துவிடுவேன். சுத்தமாகவும் இருக்கு இல்லையா.
என்ன எக்ஸ்ட்ரா ஆயிடுமோன்னு பயம் வந்திடும்.
குடிமகன் டிடிஆர் ரிபோர்ட் சூப்பர்.

துளசி கோபால் said...

இதை (ச்)சாம்பக்காய்ன்னு கேரளாவில் சொல்வாங்க. பன்னீர்ப்பழம் என்றும் பெயர் இருக்கு. பெண்களூரிலும் கிடைக்குதேப்பா!!!!

மலேசியாவில் ஏராளம். நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளில் இதைத் துண்டம் போட்டு கொஞ்சமா மிளகாய்த்தூள் உப்பு கலந்த பொடி தூவி ஒரு டூத் பிக் குச்சியுடன் கிடைக்கும். ஒரு ரிங்கெட்தான்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”!!//
ரொம்பத்தான் கிண்டலு.

தக்குடு said...

ஒன்னு விடாம ஞாபகம் வச்சு போஸ்ட் தேத்தின உங்களோட கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்குது! ரசித்தேன் மேடம் :)

Vijayan Durai said...

துபாய் போய்டீங்களா அக்கா?,இங்கேயே இருக்கும் மக்களின் நிலையை உணர்ந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,நகர்புறங்களில் கூட மின்வெட்டு பராவாயில்லை கிராமபுறங்களில் மின்வெட்டு 10 மணி நேரத்திற்கும் அதிகம்.

"ஜம்பக்காய்" பெயர்காரணம் அருமை.

அன்புடன் மலிக்கா said...

என்ன வந்துவிட்டு போயாச்சா போட்ட மெயிலுக்கு ஒரு பதிலையும்காணோம்.. சரி சரி மின்சாரவெட்டில் அதுவும் வெட்டியிருக்கும்போல.

சொல்வது சரிதான் துபை சீப்தான். இருந்தாலும்.. ”என்ன இருந்தாலும்”
சரி சரி துபை சீப்தான்..

Bala said...

// கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”!!//

:)

pudugaithendral said...

ஊர் திரும்பியாச்சா.... வெரிகுட்.

ஹைதையில் வெயில் 41 டிகிரி. ரோட்டில் போனால் அனல் காத்து. அம்ருதா அடிக்கடி சொல்லும் டயலாக். இதுக்கே நமக்கு இப்படி இருக்கேம்மா.... துபாயில் 51 டிகிரி போகுமாமே!!! எப்படிம்மா பாவம்ல....

எப்பவுமே இக்கறைக்கு அக்கறைப்பச்சைதான்.

அப்புறம் உங்க கடைசி பாரா நாங்க பலமுறை சொல்லி இப்ப இந்தியா வந்து நொந்து நூடில்ஸாகி வெந்து வெர்மிசல்லியாகிட்டோம். :((

CS. Mohan Kumar said...

//ஹுஸைனம்மா
கானமயிலாட கண்ட வான்கோழியாய் வலைப்பூ எழுத வந்து, இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும், இன்னும் “அப்ரசெண்டி”யாகத்தான் இருக்கிறேன்!! எனக்குப் பிடித்தவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், விரும்பும் மாற்றங்கள் குறித்தும் எழுதுகிறேன். எண்ணிக்கைகளின் நிறைக்காக எழுதாமல், நிறைவு தரும் எண்ணங்களுக்காக எழுதுகிறேன். வலைப்பூவில் எழுத்துநடை படித்துகொண்டே, யூத்ஃபுல் விகடன், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சமரசம் என்று பயின்ற நடையை சிறிய அளவில் பழகத் தொடங்கியிருக்கிறேன். படைத்தவனுக்கு நன்றி. //

இந்த வரிகள் தமிழ் மணத்தில் மட்டுமில்லாம உங்கள் ப்ளாகிலும் வரணும்னு பதிகிறேன்

வாழ்த்துகள் ஹுஸைனம்மா. அசத்துங்க ஒரு வாரம் !

சிராஜ் said...

/* துபாய்த் தோழியின் தம்பி, சென்னைவாசி. துபாய்க்குச் சுற்றுலா வந்திருந்தவன், “அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே!!” என்று சொன்னானாம். ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!! */

துபாய் வராமலேயே எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது ஹுசைனம்மா.... சென்னை மேல் தட்டு வர்கத்துக்கான நகரமாய் மாறி ரொம்ப நாள் ஆச்சு...
30 ,000 கம்மி குடும்பம் நடத்த முடியாது.... ஸ்கூல் பீஸ் லாம் தனி....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாழ்த்துகள் ஹுசைனம்மா..:)

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - ஆமாக்கா, அயினிச் சக்கை விதைகளை வறுத்துத் தின்னலாம். பலாக்கொட்டைகளைப் போலவே.

அது “சாம்பக்காய்”-ஆ? “ஜம்பக்காய்” இல்லியா?

ஜலீலாக்கா - ஆமாக்கா, அக்கரைக்கு இக்கரை பச்சை.

சீனி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

கீத மஞ்சரி - //ஜம்பக்காய் காரணம்//- அது நான் சும்மா வெளாட்டாச் சொன்னதுங்க. அமைதிக்கா அடிக்க வரப்போறாஙக்!! :-))))

ரூமில் - அடடே, வெள்ளரிக்காய்க்கு என்னா ஒரு பில்டப்!! :-)))

துளசி டீச்சர் - ஆமா டீச்சர். ஒருகாலத்தில வெளிநாட்டு திர்ஹத்தை இந்திய ரூபாய்க்கு கன்வர்ட் பண்ணி “இவ்ளோ விலயா?”ன்னு அதிர்ச்சியடைவோம். இப்ப அப்படியே ரிவர்ஸில நடக்குது!!

ஹுஸைனம்மா said...

ராமல்க்ஷ்மிக்கா - //ஜம்பக்காயின் பெயர் காரணம்// - சும்மா கற்பனையாத்தான் சொன்னேன். ஊர்க்காரவுங்க அடிக்க வரப்போறாங்க!!

கோவ2தில்லி - ஆமா, பேருதான் பெத்த பேரு தலைநகர்னு. அங்கயும் கரண்ட் கட்!! என்ன சொல்ல!!

ரயில் பயணம் - அரைநாளுக்கே அருவருப்போடே போவேன். நீங்கலாம் எப்பிடித்தான் 2 நாள் போறீங்களோப்பா!!

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //திருமணத்திற்கு நகைகள் வாங்குவதற்காகவே துபை வரும் ஆட்களும் உண்டு.//
கிலோ கணக்கில வாங்குவாங்களோ? :-))))

அவர்கள் உண்மைகள் - //துபாயை விட அமெரிக்காவில் எல்லாம் சீப்பாக உள்ளது.//
அமெரிக்கா நிலைமை இப்பிடியாகி விட்டதே!! :-))))

வெங்கட் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //இன்வெர்டர் வாடகை// - பயமா இருக்கு சொல்ல. பத்து நாளைக்கு ஆயிரம் மட்டுமே!! :-(((

பச்சை கலர் ஜம்பக்காவும் நிறைய பேர் சொல்கிறார்கள்.

அமரபாரதி - தோட்டம்னா, வீட்டுத் தோட்டமா, அல்லது தோப்பா? கொடுத்து வைத்தவர்!! இணையத்தில் வேக்ஸ் ஆப்பிள் என்றுதான் இருந்தது. வாட்டர் ஆப்பிள் என்றுதேடினால், இதன் படம் மட்டுமல்லாமல், வேறு பழங்களின் படங்களும் வருகின்றனவே?

ஹுஸைனம்மா said...

நட்புடன் ஜமால் - //also people get more money easily than here// உண்மை!! :-(((

முத்தக்கா - வாங்கக்கா. ஆஹா, கவிதைப் பட்டறையா??!! எக்கோவ், போட்டுத் தாக்கிறப் போறாங்க என்னை!! :-)))))

ரியாஸ் - துபாய் சீப்தான், ஆனால் அபுதாபியில்தான் neatness, strictness எல்லாம் அதிகம்.

சில ஜம்பக்காய் இனிக்குமாம், ஆனாலும் அப்படியொன்றும் ருசியாத் தெரியவில்லை எனக்கு.

ஹுஸைனம்மா said...

வல்லிமா - நிஜம்தான். நானும் இங்கிருந்துதான் ஏலம் போன்ற பொருட்களும் வாங்கிப் போவேன். சீப் மட்டுமல்ல, தரமும்கூட!!

துளசி டீச்சர்- ஹை, ரெண்டாவது கமெண்டா!! சாம்பக்காய்தானா? நாரோயில்லதான் “ஜ”ம்பக்காய்போல!! (அந்த ஊர்மக்களைப் போலவேன்னு சொல்ல ஆசை, ஆனா பயம்!!) :-)))))

அதன் டேஸ்டுக்கு, மிளகு/மிளகாய் தூவி சாப்பிட்டால் நல்லாய்த்தான் இருந்திருக்கும். அடுத்தமூறை ட்ரை பண்றேன், இன்ஷா அல்லாஹ்.

முரளிதரன் - கிண்டலெல்லாம் இல்லீங்க. எனக்குத் தெரிஞ்ச வழி “எண்டர்”தான்!! :-)))

ஹுஸைனம்மா said...

தக்குடு - //ஒன்னு விடாம ஞாபகம் வச்சு போஸ்ட் தேத்தின // பின்னே? பதிவருக்குன்னு சில கடமைகள் இருக்குல்ல? அதான் எதெது பதிவெழுத தேறும்னு அங்க வச்சே ”பதிவர் கண்ணாடி” போட்டு ஆராஞ்சு, நோட்ஸ் எழுதிக் கொண்டுவந்தேனாக்கும்!! :-)))))

க்ர்ர்ர்ர்!! அடுத்த மூறை நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்கோ. போனதரம் கல்யாண பிஸியில எதுவும் கண்ணில பட்டுருக்காது. இனி ஊருக்குப் போனா, கல்யாணம் பண்ணிகிட்டவளைத் தவிர, எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும்!! :-))))

விஜயன் - நன்றி.

ஹுஸைனம்மா said...

மலிக்கா - இந்த மயிலின் மெயிலை மிஸ் பண்ணிட்டேனோ!! ஸாரிக்கா!! :-)))))

முகில் - நன்றி!!

புதுகைத் தென்றல் - இப்ப மே மாசம்தான். இப்பவே இங்க கொளுத்துது. இனி போகப் போக எப்படியோ!! ஆண்டவந்தான் காப்பாத்தணும்.

//கடைசி பாரா// - ஆமாப்பா, வெளிநாடு போய் வந்தவங்களுக்குத்தான் ரொம்ப வயித்தெரிச்சலா இருக்கும்.

ஹுஸைனம்மா said...

மோகன் - ரொம்ப நன்றி!! என் விளக்கத்தை என் ப்ளாக்கிலும் பதிந்து வைக்க நீங்க நினைத்தது உண்மையிலேயே நெகிழ வைக்குது. மீண்டும் நன்றி.

சிராஜ் - //30 ,000 கம்மி குடும்பம் நடத்த முடியாது//
பரவால்லயே, நீங்க சிக்கனக்காரர்தான் போல!! இன்னும் சிலரிடம் பேசியதில் 70,000 வேண்டும் என்றார்கள் - ஸ்கூல் ஃபீஸ் சேர்த்து, ஆனால் வாடகை தவிர்த்து.

காமெடி என்னன்னா, ஒருத்தர் 80,000 சம்பளம் பத்தல. துபாய்ல வேலை தேடிக் கொடுங்கன்னார்!!

முத்தக்கா - ரொம்ப நன்றிக்கா.

mohamedali jinnah said...

Please visit
கவரும் துபாய்-Catching Dubai.
http://seasonsalivideo.blogspot.in/2013/02/catching-dubai.html