Pages

சக்தி உலகின் மின்னும் நட்சத்திரங்கள்

ந்தத் தொடரின் இரண்டாவது பிவக்குள்ளே போறுக்கு முன்னாடி ஒரு முக்கியான டுட்டு: சூப்பர் ஸ்டார் பெரிசா? பர் ஸ்டார் பெரிசா? ஏன்னா, சிய ஒளி க்ிை “பர் ஸ்டார்”னான் சொல்லிருக்கும்னு நிறையிகக் கண்மிள் நினைக்காம்.  ிகீடு, எிர்பார்த்ன்கள், ஆனா அப்பப்போ காணாமப் போறு - இையெல்லாம் வச்சுப் பாக்கும்பு, சூரிய ஒளியை சூப்பர் ஸ்ார்னு சொன்னு சிானே? “பர் ஸ்டார்” பட்டம் யாருக்குன்னு பிவுலார்ப்போம்.
 
சூரிய மின்சாரத்தை வழக்கமான முறையில் தகடுகள்(பேனல்கள்) வைத்து உற்பத்தி செய்வதில்  பேட்டரி, இன்வர்ட்டர்  தேவைப்படுவது ஒருமுக்கியக் குறைபாடு. மேலும், சூரிய ஒளி தொடர்ச்சியாகக் கிடைப்பதில்லை என்பதும், விலையுயர்ந்த சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் இயற்கைக் கனிமப்பொருளான ”பாலி சிலிக்கான்”  தட்டுப்பாடும் மற்ற காரணங்கள்.  இவற்றைத் தவிர்க்க, மற்றுமொரு வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


டர்பைன் சுத்துது!!
தைத் தெரிந்து கொள்வதற்கு முன், பொதுவாக மின்சாரம் தயாரிக்கப்படுவது எப்படின்னு லைட்டா ஒரு லுக்கு விடுவோம். சிம்பிளா ஒரு வரியிலச் சொல்லணும்னா,  ”டர்பைன்” எனப்படும் காற்றாடி மாதிரியான இயந்திரத்தை வேகமாகச் சுற்றினா மின்சாரம் உற்பத்தியாகும்.  அந்த டர்பைனைச் சுத்த வைக்கிறதுக்குத் தேவையான சக்தி எதிலிருந்து கிடைக்குது என்பதை வைத்துத்தான்  மின் நிலையங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

அணையிலிருந்து வேகமாக விழும் நீரைப் பயன்படுத்தினால், அது நீரேற்று மின் நிலையம் (Hydro electricity); நிலக்கரியை எரித்து, நீரை ஆவியாக்கி, அதைக் கொண்டு சுழல வைத்தால் அனல் மின் நிலையம்.(Thermal power plant). அணை நீர், நிலக்கரி ரெண்டுமே தட்டுப்பாடுள்ளவை. இங்கேதான் சூரிய ஒளி பயன்படுகிறது. 

   
அந்தக் காலத்தில் வாலுப் பசங்க, கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய சக்தியை ஓரிடத்தில் குவித்து,  அந்த வெப்பத்தைக் கொண்டு சிறு காகிதத்தையோ அல்லது எறும்பையோ எரிப்பாங்க பார்த்திருக்கீங்களா? அதே முறையில், நீரை ஆவியாக்கினால்...? அந்த நீராவியால் டர்பைனைச் சுழலவிட்டு மின்சாரம் தயாரித்தால், அதுவும்  “சூரிய ஒளி மின்சாரம்”தான்!! "Concentrated Solar Power" என்று பெயர்.

ந்த CSP முறை, வழக்கமான சோலார் பேனல் முறையை விடவும் எளிதானது மட்டுமல்ல, செலவும் குறைந்தது. இதற்கு விலையுயர்ந்த சோலார் பேனல்கள் தேவையில்லை; ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய சாதாரண கண்ணாடி போதும். இன்வர்ட்டர், பேட்டரிகளும் தேவையில்லை.  சூரிய ஒளி இல்லாத நேரத்திலும், அதனால் பெறப்பட்ட வெப்பத்தைச் சேமித்து வைத்தால், (heat transfer) தொடர் மின்சார உற்பத்தி கிடைக்க வாய்ப்புண்டு. 

CSPயைப் புரிந்துகொள்ள இந்த சுவாரசியமான வீடியோவைப் பாருங்க.

பாலைவனங்கள் நிறைந்த வளைகுடா நாடுகள் இந்த வகை மின்சார உற்பத்திக்கு ஏற்றவை என்பதால், இவற்றின்மீது வணிக நிறுவனங்களுக்கு ஒரு கண்!! பெட்ரோல் காலியானல் என்ன, இருக்கவே இருக்கு சூரியன். :-))

இந்த CSP power plant நம்ம ஊருக்கும் ஏற்றதாகவே தெரிகிறது. கோடை காலங்களில் அணைமட்டம் குறையும்போது, இந்த முறை கைகொடுக்குமே. மேலும், மின்சார உற்பத்தி என்றில்லாது, Heat transfer எங்கெங்கு தேவைப்படுகிறதோ, அங்கேயும் CSP பயன்படுத்தலாம்.

டுத்ததா, Geothermal power எனப்படும் புவி அனல் சக்தி.  தகிக்கும் குழம்புகள் கொட்டும் எரிமலைகள், கொதிநீர் ஊற்றுகள்  ஆகியவற்றிற்கு  பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் மிக மிக அதிக வெப்பம்தான் காரணம் என்று எல்லாருக்குமே தெரியும்.இந்த அடிப்படைதான் புவி அனல் சக்திக்கும். மின்சாரம் தயாரிக்கத் தேவையான நீராவியை உருவாக்க சூரிய ஒளியைப் பயன்படுத்தியதுபோல, இங்கு புவியின் அனல் சக்தி பயன்படுத்தப்படுகிறது. 

இந்த அனல் சக்தி, ஐஸ்லாந்து நாட்டில் அதிகம் காணப்படுகிறது. அதைக் கொண்டு ஐந்து பெரிய புவிஅனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வட துருவத்தில், பனி நிறைந்து காணப்படும் நாடான ஐஸ்லாந்தில் கொதிநீர் ஊற்றுகளும், எரிமலைகளும் அதிகம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கு அடுத்ததாக வருவது, bio-mass எனப்படும் சேகரிக்கப்பட்ட (bio-degradable) மக்கக்கூடிய குப்பையிலிருந்து மின்சாரம், எரிபொருள், உரம் ஆகியவை தயாரிப்பதும் பெரிய அளவிலான தொழிலாக  உலம் முழும் உருவாக்கம் பெற்று வகிறது.
 வீடுகள், உணவகங்களிலிருந்து கிடைக்கும் மக்கக்கூடிய பொருட்களைச் சேகரித்து, அதை  பாக்டீரியாக்களைக் கொண்டு நொதிக்க (fermentation) வைத்து,   எரிபொருளாக இயற்கை எரிவாய் (bio-gas) ாரிக்கப்புகிறு.  ு வாகங்கள் ஓட்டும், மின்சாரம் ாரிக்க, ஆலைகில் எர்பொருளாக என்று பிங்கில் பன்பத்ப்படகிு.  ந்துபோகும் ிடப்பொருள், உாகப் பன்பத்ப்புகிறு.

ன்மூலம் பன்மைகள் உண்டு.  குப்பைகாலிிலத்ில் பட்டு நிறைப்பால் (land filling) வும் பிரச்னைகள் - இடப்பற்றாக்குறை, ாற்றம், ோய்க்கிருமிகள், சுற்றுச்சூழல் கேடோன்றுக்கு முடிவு விறு. மேலும், இன்மூலம் இய்கை உம் கிடைப்பால், ராயன் உரத்ால் ும் ீமைகள் ிர்க்கப்புகின்ற. இயற்கை எரிபொருளானோ-கேஸ் பன்பத்ும்பச்சு வாயுக்கள் வெளிப்புவில்லை என்பால் சுற்றுச்சல் கேடில்லை. எல்லாவற்றையும்ிட, செலு மிகக் குறந்த ிட்டம்.

ு ந் நாட்டில் கிராமங்கில், மிகச்சிறிய அளில் ிற்சில ீடுகில் ன்பத்ப்பும் முறான். ெரியில் செயல்பத்ப்பட்டால், குப்பைகிலிரந்தக்கிடை கிடைக்கும். 

ஆக, குறந்தீட்டில் ூடல் ன்ள் என்கிறையில் போ-கேஸ்ான் சக்ி-உலின் ஒரு நட்சத்ிராக, “பர் ஸ்டார்” பட்டம் பெறத் ியானு.  இப்பைப்பக்கொடர்பந்தச்ச?
 
டுத்த பதிவில் இன்னும் சில சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போம். (கண்டிப்பா அத்தோடு முடிச்சுக்குவேன்னு உறுதிமொழி வழங்குகிறேன் - இன்ஷா அல்லாஹ்)
Post Comment

நானும் கண்காட்சிக்கு போனேன்!
எல்லாரும்  குற்றால சீஸன் மாதிரி வருஷா வருஷம் வரும் புத்தகக் காட்சிக்குப் போய் பதிவு எழுதிகிட்டிருக்கீற சீஸன் இது!! அதெல்லாம் பார்த்து நான் ஏக்கப் பெருமூச்சு விட, எங்கூட்டுக்கார் பர்ஸ் தப்புச்சுன்னு “நிம்மதிப் பெருமூச்சு” விட... பொறுக்குமா நமக்கு!! உடனே “எட்றா வண்டியை”ன்னு  நாங்களும் இங்கே வருஷா வருஷம் வரும் ஒரு “கண்காட்சி”க்குப் போனோம்!! ஆனாலும் வருத்தம் என்னன்னா, இந்தக் கண்காட்சியில நாம எதுவும் வாங்க முடியாது. ரேட் அப்படி.  ஸோ, ஒன்லி “புத்தி கொள்முதல்”!! 


அபுதாபியில் வருடா வருடம் நடந்து வரும்  World Future Energy Summit (உலக எதிர்கால சக்தி உச்சி மாநாடு) - இதனைச் சார்ந்து நடந்து வரும் கண்காட்சிக்குத்தான் சென்றோம். கடந்த ரெண்டு வருஷமா அதைப் பத்திப் பதிவுகள் எழுதி இருக்கிறதால், மீண்டும் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.  ”சர்வதேச புதுப்பிக்கக்கூடிய சக்தி நிறுவனம்” என்ற IRENAவின்  தலைமை அலுவலகம் தற்போது அபுதாபிக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது இந்த வருஷம் கூடுதல் சிறப்பு.  அமீரகத்தின் தொடர்ந்த பசுமைச் சூழல் நடவடிக்கைகளே இதற்கான காரணம் என்றும் சொல்லலாம்.

கண்காட்சியில், சூரிய சக்தி, காற்றாலை, எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகிய வழக்கமானவற்றோடு புவி அனல் சக்தி (geo-thermal energy), உயிரி-எரிபொருள் (bio-fuel), நீர் மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு போன்றவை குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன இம்முறை.


அவைகளைக் குறித்துப் பார்ப்பதற்கு முன், இந்த வருஷம் “ஷேக் ஸாயத் எதிர்கால சக்தி பரிசு” யாருக்குக் கிடச்சுதுன்னு பார்க்கலாம். வருடா வருடம், இதற்கான பிரிவுகளை  அதிகப்படுத்திகிட்டே போறாங்க. இந்த வருடம் உயர்நிலைப் பள்ளிகளையும் இந்தப் பரிசுக்கு சேர்த்திருப்பதிலிருந்து, இளைய சமுதாயத்திற்குத்தான் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகம் தேவை என்பதை வலியுறுத்துறாங்க!!

பிரிவு 1 - பெரிய நிறுவனம் (Large corporation) பிரிவில் பரிசு பெற்றது        Siemens   நிறுவனம்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டுத் திறமைகள் ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மத்திய கிழக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைந்து வளர்ப்பது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை உள்ளிட்ட காரணங்களுக்காக.

பிரிவு 2 -சிறு நிறுவனங்கள் (SME) பிரிவில்   d.light design   என்கிற நிறுவனம்.  மின்சார வசதியற்ற அல்லது குறைவான நாடுகளின் மக்களுக்கு சூரிய ஒளி விளக்குகளை வாங்கக்கூடிய விலையில் வழங்கியமைக்காக.

பிரிவு 3 -அரசு-சாரா லாப நோக்கற்ற நிறுவனம் (NGO) பிரிவில்  CERES   என்கிற அமெரிக்க நிறுவனம்.
 “செரஸ்”, வணிக நிறுவனங்களை சுற்றுச்சூழல் நோக்கிலான பொறுப்புடன் நடந்துகொள்ள வைக்கத் தூண்டியது. வணிக நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பேணுதலை அளவிடுவதற்காக, GRI reporting (Global Reporting Initiative) முறையை அறிமுகம் செய்தது.

பிரிவு 4 -தனிநபர் ஆயுட்கால சாதனை - பேராசிரியர் ஜோஸ் கோல்டம்பெர்க், பிரேசில்.
 இயற்பியலாளர். பிரேசிலில் கல்வி அமைச்சராகவும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பல்வேறு பதவிகளில் பிரேசிலிலும், சர்வதேச அகாடமிகளிலும்  இருந்தவர். அணுவியல், சுற்றுச்சூழல், சக்தி ஆகிய தளங்களில் புத்தகங்கள் பல எழுதியவர்.

பிரிவு 5 -பள்ளிகள்: 
உலக முழுதுமுள்ள பள்ளிகளை, அமெரிக்கப் பகுதி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பள்ளிக்கு அவற்றின் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு பரிசு வழங்கியிருக்கிறார்கள்.  ஒவ்வொரு பள்ளிக்கும் பரிசு ஒரு லட்சம் டாலர்!!

ஆசியப் பகுதியில், அபுதாபியில் உள்ள, பங்களாதேஷ் நாட்டுப் பள்ளிக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. தமது பள்ளியின் “கார்பன் தடத்தைக்” (carbon footing) குறைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டமைக்காக இந்த விருது.

ஆசியப் பிரிவில், இந்தியாவின் கர்நாடகத்தைச் சேர்ந்த “கல்கேரி சங்கீத் வித்யாலயா” என்கிற பள்ளி இறுதிச் சுற்று வரை முன்னேறி வந்தது என்பது ஆச்சரியத் தகவல்!! 


தமிழகத்திலும் இதுபோன்ற பள்ளிகள் உங்களுக்குத் தெரிந்தால் விண்ணப்பிக்கச் சொல்லலாம். பார்க்க:  http://www.zayedfutureenergyprize.com

னி மெயின் மேட்டருக்கு வருவோம். சோலார் பவர்தான் இப்போதைக்கு "renewable energy" ஏரியாவில் “சூப்பர் ஸ்டார்”!! 

ஸோலார் செல்

சோலார் பேனலின், முக்கிய குறைபாடுகளில் ஒன்று, நிறுவுவதற்கு அதிக இடம் (ground space) தேவைப்படுவது.  இதைக் கருத்தில் கொண்டு  அறிமுகப்படுத்தப்பட்டவைதான், மேலே படத்தில் பார்க்கும் வகை சோலார் பேனல். இதில் குமிழ் போலத் தெரிபவை ஒவ்வொன்றும், உள்ளே வரும் ஒளியலைகளை வெளியேற விடாத “total internal reflection lens". ஒவ்வொன்றின் அடியிலும், 1100 மடங்கு வரை வீரியம் கூடிய சிறு சிப் அளவிலான ”சோலார் செல்” ஒன்று உள்ளது!!


சோலார் பவர் என்றால், சோலார் பேனலோடு, பேட்டரி, இன்வர்ட்டர் ஆகியவையும் ஞாபகம் வரும். சூரிய சக்தியைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் வகையில் நல்லது என்றாலும், அதன் பின்விளைவுகளான பேட்டரி & இன்வெர்ட்டர்களை என்னச் செய்வது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அவற்றை முழுமையாக மறுசுழற்சி செய்வதென்பது முடியாதது. அதிலும் ஐந்தாறு வருடங்களுக்கொரு முறை இவற்றை மாற்ற வேண்டும்.  ஆக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மறுபடி கேள்விக்குள்ளாகிறது!!

தனிநபர் உபயோகத்திற்கே, இத்தனைப் பிரச்னைகள் என்றால், பெரிய அளவில் “சோலார் பார்க்”குகள் வைத்து, மின்சாரம் தயாரித்தால்...?? இதற்கு தீர்வு - மாற்று என்ன?

அடுத்த பதிவில்.... !!


Post Comment

நெட்டிஸன்களுக்காக
வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ”இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி” என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டி சென்ற வருடம் ஜூலை  மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில் எனது கட்டுரை, சிறப்புப் பரிசுக்கானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  சென்னை ஐக்கியா (AIKYA) தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு வையவன் அவர்கள் ரூ.450 மதிப்புள்ள “நர்மதாவின் தமிழ் அகராதி” பரிசாக வழங்கினார். வல்லமைக்கும், ஐக்கியாவுக்கும் எனது நன்றிகள்.

பரிசுக்கானக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்த திரு. மணி மு. மணிவண்ணன் அவர்கள், சிமண்டெக் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் முதுநிலை நெறியாளர். எனது கட்டுரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
ஹுசைனம்மாவின் கட்டுரையும் வருணனின் கட்டுரைக்கு ஏறத்தாழ இணையாக அமைந்திருக்கிறது.  ஆனால், வருணன் அளவுக்கு அவரது கட்டுரையில் முழுமையான தகவல்கள் இல்லை.  இருப்பினும், இணையத்தில் பாதுகாப்பாக இயங்கத் தேவையான செயலிகளை வாங்க வேண்டியதன் அவசியத்தை அவர் மிகவும் பொறுப்புடன் விளக்கியுள்ளார். எனவே வருணனின் கட்டுரையைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கிறேன்.  ஹுசைனம்மாவின் கட்டுரையை சிறப்புப் பரிசுக்குப் பரிந்துரைக்கிறேன்.
 முதற்பரிசு வென்ற திரு. வருணனின் கட்டுரையும் நாம் அவசியம் வாசித்தறிய வேண்டிய ஒன்று என்பதால் பரிந்துரைக்கிறேன். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னுரை:
இணையம் என்றால் என்ன என்று அறிமுகம் தேவையில்லாத அளவுக்கு, இன்று இண்டர்நெட் எங்கும் பரவியுள்ளது. இணையத் தொடர்பு இல்லா வீடும் இல்லை; அலுவலகங்களும் இல்லை. ஏன்,  கிராமங்களில் மாடுகள் வைத்து பால் விற்கும் படிப்பறியாப் பெண்கள்கூட, தங்கள் வியாபாரத்திற்காக இணையத்தைப் பயன்படுத்துமளவு இணையத்தின் பயன்பாடுகள் எண்ணற்றவை.

தமிழகத்தின் சென்ற ஆட்சிகளில், இலவசமாக செருப்புகள் தந்தார்கள்; சைக்கிள்கள் தந்தார்கள்; டிவிக்கள் தந்தார்கள்.  ஆனால், இன்றைய தமிழக அரசு, ”விலையில்லா” மடிக்கணினியை வழங்கிவருவது ஏன்? இன்டர்நெட்டின் பயன்களை அறிந்தமையால்தானே, அதை முறையாகப் பயன்படுத்த லேப்-டாப் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று கொடுக்கிறார்கள்!!

சரியான முறையில் பயன்பாடு:
எந்தப் பொருளும் நம்மிடம் இருப்பது மட்டுமே நமக்கு பலன் அளிப்பதாக ஆகிவிடாது. அதைச் சிறப்பான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே, நாம் பலன்பெற முடியும்.  உதாரணமாக, நம்மிடம் ஒரு கேமரா செல்ஃபோன் இருக்கிறதென்றால், அதைக் கொண்டு தொலைபேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல், அலாரம் வைத்தல் மட்டுமல்லாது, அதைப்  புகைப்படக் கருவியாகவும் பயன்படுத்தினால்தான் அதன் பயன் முழுமையடையும்.

இது மனித உறவுகளுக்கும் உரித்தாகும். உதாரணமாக, ஒரு மேலாளர் தன்கீழ் வேலைபார்ப்பவர்களின் திறமைகளைப் புரிந்து, அதற்கேற்ற வேலைகளைக் கொடுத்துவந்தால்தான் முழுப்பயன்.

இந்தியாவில் இணையம் வெகுஜனப் புழக்கத்திற்கு வந்து, பத்து வருடங்களுக்கு மேலாகியும், முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இன்னும் பலரும் அறியாமல் இருப்பதே இன்று பலரும் இணையத்தால் ஏமாந்தோம் என்று குற்றம்சாட்டக் காரணம்.  இன்றைய காலத்தில் இணையம் என்பது தவிர்க்கவே முடியாததாகிவிட்டபடியால்,  அதன் பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்வதும் அவசியம். அறிவோம் வாருங்கள்.

பாதுகாப்பு:
எப்பொழுதுமே புதிய விஷயங்கள் அறிந்துகொள்ளும்போது, அதன் பயன்களோடு, இலவசமாக இணைந்து வரும் ஆபத்துகளையும், அவற்றை எதிர்கொண்டு தடுக்கும் வழிகளையும் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இணையத்திலும் பயன்களும் ஏராளம்; உடன்வரும் தாக்குதல்களும் தாராளம். எனினும், இதில் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இணையம் ஒரு திறந்தவெளிபோல என்பதால், சட்டவிரோத ஊடுறுவல்கள் (hacking) நடப்பது எளிது.  அதாவது, நாம் ஒரு மூடிய வீட்டினுள் இருப்பதைவிட, திறந்தவெளியில் நடந்து செல்லும்போது சமூக விரோதிகளால் ஆபத்து நேரும் வாய்ப்புகள் அதிகம் அல்லவா? அதுபோலத்தான், இணையமும்.

அவ்வாறாக திறந்த வெளியில் செல்ல வேண்டிவரும்போது, நாம் நம் பாதுகாப்பிற்காக சில ஏற்பாடுகளை – நகைகள் அணிவதைத் தவிர்ப்பது, அதிகப் பணம் எடுத்துச் செல்லாமலிருப்பது போல- செய்துகொள்வோம்தானே? அதுபோலவே, இரகசியத் தகவல்களை – இணையத் தள கடவுச்சொற்கள் (பாஸ்வேர்டுகள்), வங்கி விபரங்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை -   மின்னஞ்சல்களின் மூலம் பகிர்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இணையம் என்பது கோடிக்கணக்கான கணினிகளின் தொகுப்பு என்பதால், ஒரு கணினி பாதிக்கப்பட்டால், அப்பாதிப்பு மற்ற கணினிகளையும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம். எப்படி நாம் மற்றவர்களின் ஜலதோஷம், காய்ச்சல் நம்மைத் தொற்றிக் கொள்ளக் கூடாது என்று தடுப்பூசிகள், மருந்துகள் எடுத்துக் கொள்வோமோ அதுபோல கணினிகளுக்கும் ‘தடுப்பு மருந்துகள்’ வேண்டும்.

நம் கணினிகளில் கண்டிப்பாக ’ஆண்டி-வைரஸ்’ எனப்படும் தடுப்பு மருந்தை, களை அகற்றும் நிரல்களை நிறுவிக்கொள்ள வேண்டும். அவை நம் கணினியைப் புறத்தாக்குதலிலிருந்து பாதுகாக்கும்.

சரி, நாம் வெளியில் செல்லாவிட்டாலும், நம் வீட்டிற்கு வருபவருக்குத் தொற்று நோய் ஏதேனும் இருந்தால், அவரிடமிருந்து நமக்குத் தொற்றுவதை தவிர்க்க, நாம் ‘மாஸ்க்’ அணிவது, கைகளில் ‘ஆண்டி-செப்டிக்’ லோஷன் போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அதுபோல, நம் கணினி சரியாக இருந்தாலும், நமக்கு வரும் மின்னஞ்சல்களில்  ‘வைரஸ்’ இருந்தால், அதனிடமிருந்து பாதுகாப்புப் பெறவும் இந்த ‘ஆண்டி-வைரஸ்’ நிரல்கள் மிகமிக அவசியம். உலகில் புதுப்புது நோய்க்கிருமிகள் தோன்றுவதைப் போல, இணைய உலகிலும் புதுப்புது வைரஸ்கள் தோன்றிவருகின்றன. அவற்றிலிருந்தும் நம் கணினியைப் பாதுகாக்க, நம் ‘ஆண்டி-வைரஸ்’ ப்ரோக்ராம்களை புதுப்பித்துக் (அப்-டேட்) கொள்ளவேண்டும்.

இந்த ஆண்டி-வைரஸ் ப்ரோக்ராம்களை வாங்கவும், அவ்வப்போது அப்-டேட் செய்யவும் கட்டணம் வசூலிக்கப்படும்.சிலர், இந்தக் கட்டணத்திற்குப் பயந்து இவற்றைத் தவிர்ப்பார்கள். இன்ஷூரன்ஸ் வாங்கக் கஞ்சத்தனம் செய்தால், பாதிப்பு வரும்போது பெரும் நஷ்டமாகும். அதுபோல, ஆண்டி-வைரஸ் ப்ரோக்ராம்கள் வாங்கவில்லையெனில், வைரஸ் தாக்குதலின்களின்போது கணினியில் நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள், எழுத்துகள் அத்தனையும் பறிபோகும் ஆபத்து இருக்கிறது. தகவல்கள் மட்டுமல்ல, அதன்மூலம் நம் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடர்கள் அறிந்து, மோசம் செய்யவும் வாய்ப்புண்டு என்பதை மறக்கக் கூடாது.

தகவல் பரிமாற்றம்:
இணையம் என்றதுமே மின்னஞ்சல்தான் முதலில் ஞாபகம் வரும்.  அதிவேக செய்திப் பரிமாற்றத்திற்காகத்தான் இணையம் உருவாக்கப்பட்டது என்பதால், தொடக்கத்தில் மின்னஞ்சல்தான் அதன் முக்கியப் பயன்பாடாக இருந்தது. ஏன், இன்றும் செய்திப் பரிமாற்றம்தான் அதன் பயன்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

உறவுகளுக்கிடையே, அலுவலர்களுக்கிடையே, நட்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு, கடிதப் போக்குவரத்தே இன்று அரிதாகிவிட்டது என்னுமளவுக்கு,  மின்னஞ்சல்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது!! கையால் எழுதப்படும் கடித்ததின் உணர்ச்சி வெளிப்பாடுகள் இதில் இல்லை என்று சொல்லப்பட்டாலும், செய்தி சென்றடையும் வேகத்திற்காகவே மின்னஞ்சல் முன்னிலை வகிக்கிறது. இன்னொரு பயனாக காகிதப்பயன்பாட்டைக் குறைக்கிறது என்பதற்காகவும் மின்னஞ்சல் ஊக்கப்படுத்தப்படுகிறது.

இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தகவல் பரிமாற்ற தளங்கள் நிறைய, பயன்பாட்டில் உள்ளன. இவற்றினால் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன. சமீபத்தில் நடந்த துனிசியா, எகிப்து புரட்சிகளில், அன்னா ஹஸாரே லஞ்ச ஒழிப்பு போராட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரின் பங்கு மிகப்பெரிது. போலவே பல விழிப்புணர்வு செய்திகளைப் பகிரவும் மிகவும் உதவுகின்றன.  மருத்துவம், கல்விக்கு உதவி கேட்டு வரும் தகவல் பரிமாற்றங்களால் எத்தனையோ பேருக்கு நல்லது நடந்திருக்கிறது.

சிலரிடம் நாம் நேரில் பேசத் தயங்கும் விஷயங்களை மனம்விட்டுப் பேச இணையம் கைகொடுக்கும். விரிவாகப் பேசலாம். இணையவழி பரிமாற்றங்களில் நேரில் காணாவிட்டாலும், நேரில் பேசுவதைவிட அதிகம் தாக்கம் ஏற்படுத்தும். அதேசமயம், எழுத்து என்பது உணர்ச்சிகளற்றது. எழுதுபவர் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியில் எழுதியிருந்தாலும், அதை வாசிப்பவர் எந்த மாதிரியான உணர்ச்சியில் எடுத்துக் கொள்வார் என்பது புரியாது.  உதாரணமாக, “உடம்பு எப்படியிருக்கு?” என்று நீங்கள் அன்பாக நலம் விசாரிக்கும் தொனியில் எழுதியிருக்கலாம். வாசிப்பவர், அதை மிரட்டல் தொனியில் எழுதியிருப்பதாக நினைத்து வாசிக்கலாம். ஆகவே, வார்த்தைப் பிரயோகங்களில் மிகுந்த கவனம் தேவை.

 சிலர் தம் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் அன்றாட செயல்பாடுகளைத் தயக்கமின்றி இதுபோன்ற வலைத்தளங்களில் பொதுவில் பகிர்கின்றனர்.  இது, கடைத்தெருவில், ஒரு தட்டியில் எழுதிவைப்பதற்குச் சமமானது.  நம் வீட்டு வாசலில்கூட  நம்மைப்பற்றிய இந்த விபரங்களை எழுதிவைக்கமாட்டோம்; ஆனால் தயக்கமின்றி யார் வருவார், யார் போவார் என்று அறியாத இணையத்தில் பகிரத் துணிகின்றனர்!! சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் தான் தனியாகத் தன் வீட்டில் இருப்பதை ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் படித்த ஒரு சமூக விரோதியால் அவர் அன்று பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுவிட்டார். பரிதாபம்!!

சிலர், நாங்கள் எங்கள் நண்பர்களிடம் மட்டும்தான் பகிர்கிறோம் என்று சொல்வார்கள். நேரில் பழகும் நபர்களே நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் உலகமிது. இணையத்தில் புதிதாகக் கிடைக்கும் அன்பர்கள் எத்தனை உண்மையாக இருப்பார்கள் என்று நாம் கணிக்க முடியுமா? அதற்காக யாரோடும் பழகவே கூடாது என்றில்லை. ஒரு லக்ஷ்மண்ரேகா- எல்லைக்கோடு வேண்டும் எதிலும்.

அறிவுப் பகிர்வு:
இணையத்தின் இன்னொரு மிக மிக முக்கியப் பயன்பாடு – அறிவுப் பகிர்வு. அதாவது நாம் அறியாத விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வது.

1. நோய்வாய்ப்படும் சமயம், நமக்கு வரும் உபாதைகளை வைத்து, அது எந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதை யூகிக்க இணையத்தில் இருக்கும் பல்வேறு மருத்துவ தளங்கள் உதவும். மேலும், இன்று மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தியலாளர்கள் என்று எல்லாருமே நம்பகத்தன்மையை இழந்துவரும் காலச்சூழலில், நமக்குப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் சரிபார்க்கவும் இவ்வலைத்தளங்கள் உதவும்.

ஆனால், ஒருபோதும் இவ்வலைத்தளங்களைக் கொண்டு சுயமருத்துவ முயற்சியில் இறங்கக் கூடாது. மேலும், மருத்துவர்களுக்கு ஒருபோதும் இத்தளங்கள் மாற்றாக முடியாது. இவ்விரண்டும் மறக்கவே கூடாத விதிகள்!!

2. விடுமுறைப் பயணங்கள் செல்வதற்கு உரிய விவரங்களைச் சேகரிக்க எண்ணற்ற வலைத்தளங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்து, செல்லுமிடத்தில் காணத் தவறவிடக்கூடாத இடங்கள், தங்குவதற்கு வசதியான இடம், சென்றுவரும் பயணத்திற்கான முன்பதிவுகள், செல்லத் தகுந்த காலநிலை ஆகியவற்றிற்கு வலைத்தளங்களின் உதவி இன்றியமையாதவை. எனினும், ஏமாற்றங்களைத் தவிர்க்க, அரசு சார் சுற்றுலா மையங்களையோ, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களையோ மட்டும் சார்ந்திருப்பது நல்லது. எதிலுமே முன்பணம் செலுத்துவதில் கவனம் தேவை.

மேலும் முன்பே சொன்னபடி, நம் பயணத்திட்டங்களைப் பொதுவில் பகிர்வது திருடர்களுக்குத் தோதாக அமையும். திருடர்கள் என்றால், லுங்கி கட்டி, கழுத்தில் கத்தி வைத்திருப்பதெல்லாம் அந்தக் காலம். திருடர்களும் நவீனமயமாகி விட்டனர்!!

3. வீட்டில் சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகளுக்கு, ப்ளம்பர், பெயிண்டர், கார்பெண்டர்களையெல்லாம் தேடிக்கொண்டிருந்தால் காரியம் ஆவதில்லை. இன்று பெரிய பெரிய ஆபிசர்களிடம்கூட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிடலாம், ஆனால் இதுபோன்ற தொழிலாளர்கள் கிடைப்பதுதான் அரிதாகிவிட்டது. எனவே, நாமே சிறுசிறு வேலைகளைச் செய்துகொள்வது உடலுக்கும் நல்லது, பர்ஸுக்கும் நல்லது. ‘எனக்குச் செய்யத் தெரியாதே’ என்கிறீர்களா? அதற்குத்தான் இன்று எத்தனையோ “Do it Yourself” (DIY) தளங்கள் உள்ளனவே. அதைப் பார்த்துச் செய்தால், நாமும் வல்லுநர்களாகிவிடலாம்!!

4. இன்று மத்திய/மாநில அரசுகள் தம் எல்லா சேவைகளையும் கணினிமயமாக்கி வருகிறது. அதில், நிலங்கள், கட்டிடங்களின் தகவல்களும்கூட இணையத்தில் கிடைக்கின்றன. ஆகையால், ஒரு சொத்து வாங்குவதாக இருந்தால், அதன் வில்லங்கம், அரசாங்க சந்தை மதிப்பு போன்ற விபரங்களைத் தெரிந்துகொண்டால் ஏமாறாமல் தப்பிக்கலாம்.
மேலும், புதிய வரிவிதிப்புகள், அதன் விதிமுறைகள், கணக்கிடப்படும் மூறைகள் என்று எல்லாவற்றிற்குமே இணையத்தில் விவரங்கள் காணக்கிடைக்கின்றன. ஆடிட்டர் சொல்வதைச் சரிபார்த்து, அவருக்கே ஆலோசனைகள் சொல்லலாம் நாம்!!

இப்போதெல்லாம், காவல் துறையில் புகார் செய்ய வேண்டுமென்றால்கூட இணையம் வழி செய்திடலாம். நேரில் காவல்நிலையம் செல்லத் தயங்கி, பலரும் பல அநீதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இணையம் எனும்போது, தயக்கம் நீங்கும். தைரியம் பெருகும்.

5. வேலை – பொழுதுபோக்கு – வருவாயுடன்:
அலுவலகம் சென்று வேலை செய்வதற்கு எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பு அமைவதில்லை. அத்தகையவர்களுக்கு இணைய வழி வேலைவாய்ப்பு ஒரு வரம். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளிலிருந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து, வீட்டிலிருந்தே மனதுக்குப் பிடித்த வேலைகள் செய்யலாம்.  ஆரம்பத்தில் வெளியே சென்று வேலை பார்ப்பதை விட, வருமானம் குறைவாக இருந்தாலும்,  அனுபவம் அதிகமாகி, வாய்ப்புகள் பெருகும்போது, வருமானமும் பெருகும். குடும்பப் பொறுப்புகளையும் தவறவிடத் தேவையில்லை.

இன்னும் பலருக்குத் தம் திறமைகளை வெளிக்கொணரும் தளமாக, இணையம் உதவுகிறது. எழுத்தார்வம் உள்ளவர்கள், கவி படைப்பவர்கள், அருமையான கைவேலைப்பாடு செய்பவர்கள், சமையல் அரசிகள் என்று பலருக்கும் தம் திறமைகளை வலைப்பூக்கள், இணையப் பத்திரிகைகள் மூலம் மற்றவர்கள் பார்வைக்குப் படைத்து, பாராட்டுகளும், மேலும் மெருகேற்ற ஆலோசனைகளும் பெற இணையமே உதவுகிறது.

வலைப்பூவை ஆரம்பப் புள்ளியாகக் கொண்ட எத்தனையோ பேர், பத்திரிக்கைகளில் எழுதும் வாய்ப்புகள் அமைந்து, பிரபலமாகிவிட்டனர்.
எனினும், இணையத்தில் வலைப்பூக்கள் ஆரம்பித்து எழுதும்போது கிடைக்கும், தணிக்கையற்ற அதிகச் சுதந்திரம், ஆரம்பத்தில் இனித்தாலும், பின்விளைவுகள் தரக்கூடியது என்பதைப் புரிந்து, நடந்துகொள்ள வேண்டும்.

முடிவுரை:
இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள, மேலே சொல்லியுள்ள உதாரணங்கள், வழிமுறைகள் மிகச்சிலதான். சிற்பி கருங்கல்லைச் செதுக்கி அழகுச்சிலையாக்குவதுபோல, ஒவ்வொருவர் தம் கற்பனை, திறமைகளைப் பொறுத்து, இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் அதன் தீமைகளை வடிகட்டி,  நன்மைகளை மட்டும் வருவித்துக் கொள்வதென்பதும்கூட பயன்படுத்துவோர் கையில் மட்டுமே உள்ளது.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கத்தி, மின்சாரம், செல்ஃபோன் போல கவனமாகப் பயன்படுத்த வேண்டியவற்றின் வரிசையில் இணையமும் இணைந்துவிட்டது.  எல்லாவற்றிற்கும் பொருந்தும்  கீழ்க்கண்ட சில பழமொழிகள், பெரியோர் வாக்குகள் இணையத்திற்கும் பொருந்தும்:

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” - இணையத்தில் செலவழிக்கும் நம் நேரத்திற்கும் இது பொருந்தும். அங்கே கொட்டிக் கிடக்கும் அபரிமிதமான தகவல்களுக்கும் பொருந்தும்!!

“பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே” – நேரில் இருவர் பேசிக்கொள்வதற்கே இப்படியொரு அறிவுரை என்றால், இணையம் போன்ற பொதுத்தளங்களில், நம் தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதற்கு என்ன சொல்வது?

“இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து” – இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள், செய்திகள் ஏராளம், ஏராளம். அனைத்தையும் நாம் பயன்படுத்த நினைத்தால், குழப்பமே மிஞ்சும். ஆகவே, தகுதியான, நம்பகத்தன்மை மிகுந்த தளங்களையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். அதற்குக் கட்டணங்கள் கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி!!

“ஆனை வாங்கினவன் அங்குசம் வாங்க மாட்டானாம்”  – நிஜ வாழ்வில் நமக்கு பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, கணினிக்கும் தகுந்த ஆண்டி-வைரஸ் ப்ரோக்ராம்களின் பாதுகாப்புச் சுவர் முக்கியம்.

மேற்கூறியவைகளை இணையப் பயன்பாட்டிற்கான “தங்க விதிகளாக” மதித்துச் செயல்பட்டோமானால், சிறந்த பலன்களைப் பெற முடியும்!!


Post Comment

டிரங்குப் பெட்டி - 29
”அந்தா பாரு.. வெள்ளைக் காக்கா பறக்குது..” என்று சொல்லி சின்ன வயதுப் பசங்கள் ஏமாற்றப்படுவது உண்டு. வளர்ந்த பின், வெள்ளைக் காக்கா என்ற ஒன்றே இல்லை என்று தெரிந்த பின்பு, எப்போ அதை நினைச்சாலும் கொஞ்சம் அவமானமா இருக்கும். சில வாரம் முன்பு வானதியின் வலைப்பூவில், சலவைப் பொடி விளம்பரம் என்று சொல்லி வெள்ளைக் காக்கா படம் பார்த்தபோது காமெடியாக இருந்தது. ஆனா, நெஜம்மாவே வெள்ளைக் காக்கா இருக்குதுன்னு நியூஸ். திருவனந்தபுரத்தில் பிடிச்சு வச்சிருக்காங்களாம்!! அப்போ சின்ன வயசில நாம ஏமாந்துபோகலைன்னு சமாதானப்படுத்திக்கலாம்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கோமா நிலையில் இருப்பவர்களின் நிலையை ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்று சொல்வார்கள். அவர்களுக்கு சிந்தனை இருக்காது என்றே பெரும்பாலும் நம்பப்பட்டு வந்தது. இதை மறுத்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று. வெளியே மைதானத்தில் விளையாட்டுவது போன்ற சில வகை எண்ணங்கள் தோன்றும்போது, மூளையின் ஒருபக்கம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; வீடினுள்ளே நடப்பது போன்ற மற்றொருவிதச் சிந்தனை செய்யும்போது வேறொரு பக்கம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்யும்போது இதை அறிந்துகொள்ளலாம். கோமாவில் இருக்கும் ஒருவரிடம், கேள்விக்குப் பதிலைப் பெற, ஆம் என்றால் முதல் வகை சிந்தனையை ஓடவிடுமாறும், இல்லை என்றால் அடுத்த வகைச் சிந்தனையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டு செய்த சோதனை வெற்றியடைந்தது, நரம்பியல் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

பாகிஸ்தான் எங்கே இருக்கு தெரியுமா? அடிக்க வராதீங்க, “அந்த” பாகிஸ்தானைச் சொல்லலை. நம்ம நாட்டிலேயே ஒரு பாகிஸ்தான் உண்டுங்க!!  பீஹார் மாநிலத்தின், பூர்னியா மாவட்டத்தில் ‘பாகிஸ்தான்’ என்கிற கிராமம் இருக்கிறது. பிரிவினையின்போது, தம் உடைமைகளைத் தங்களிடம் தந்துவிட்டு, அந்த ஊரிலிருந்து (கிழக்கு) பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம் மக்களின் நினைவாக, தம் கிராமத்திற்க்கு அம்மக்கள் அந்தப் பெயரைச் சூட்டினார்களாம்.

இனிமே யாராச்சும் ”ஓடுங்க பாகிஸ்தானுக்கு!!”ன்னு சொல்வீங்க!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

லக்ஷ்மி மிட்டல் - கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள், உலகின் பணக்காரர்களில் ஒருவர், பூர்வீக இந்தியர். ஐரோப்பாவில் பரந்து விரிந்த “இரும்பு” வர்த்தக சாம்ராஜ்யம் உடையதால், “இரும்புக்கை மாயாவி” என்று வர்ணிக்கப்படுபவர். 2006-ல், ஃப்ரான்ஸில் ‘ஆர்ஸெக்லர்” ஆலையை வாங்கினார். பணியாளர்களை நீக்கக்கூடாது என்பது அரசின் முக்கிய நிபந்தனை. ஆனால், நஷ்டத்தையும், கடன்களையும் காரணம் காட்டி, இரண்டு இரும்பு உலைகளை மூடியதோடு, சுமார் 630 பேரின் வேலைக்கும் உலை வைத்தார். பொங்கி எழுத ஃப்ரான்ஸ் நாட்டு தொழிற்துறை அமைச்சர், “வாக்குறுதிகளை மீறுகின்ற மிட்டல் எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. ஆலையை அரசே ஏற்று நடத்தும்” என்று கர்ஜிக்க, அரண்டுபோய் வாலைச்சுருட்டிக் கொண்டுவிட்டது “மிட்டல்” சாம்ராஜ்யம்!! இது ஃப்ரான்ஸ்!!


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கிங்ஃபிஷர் மல்லையா - இவரத் தெரியாதவங்க உண்டா! இவரின்  “யுனைடெட் ப்ரூவரிஸ்” என்கிற மதுபான நிறுவனம் செப்டம்பரோடு முடிகிற காலாண்டில் 47% அதிக லாபம் ஈட்டியிருக்கிறதாம். நம்ம டாஸ்மாக்கும் இவர்களின் முக்கிய கஸ்டமராக்கும்.  சென்ற மாதம், மல்லையா ஒரு கோயிலுக்கு 3 கிலோ தங்கமும், இன்னொன்றிற்கு தங்கக் கதவும் அளித்தார். இவரின் இன்னொரு நிறுவனமான கிங்ஃபிஷர் விமான நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறதென்று கடந்த ஒன்பது மாதங்களாக பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால், ஒரு பைலட்டின் மனைவி தற்கொலையே செய்துகொண்டார். இது இந்தியா!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

 ஒருவழியாக பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக, ஐ.நா. சபை அங்கீகரித்து விட்டது.   பெரியண்ணன்களான வீட்டோ பவர் படைத்த அமெரிக்கா, இஸ்ரேல், கனடா ஆகியவை எதிர்த்தபோதும் தீர்மானம் நிறைவேறி இருப்பதில்தான் ஆச்சரியமே!! எளியோர்கள் சேர்ந்தால் வலியோரையும் வீழ்த்தலாம் என்பதற்கு ஒரு உதாரணம்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

 ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் பாமியான் புத்தர் சிலைகளை இடித்தது பெரிய சர்சையானது ஞாபகமிருக்கலாம். காட்டுமிராண்டிகள், நாட்டின் தொன்மையான கலாச்சார அடையாளங்களைச் சிதைக்கிறார்கள் என்று அமெரிக்கா, புத்த நாடான சீனா, மற்றும் ஊடகங்களும் ஓலமிட்டன. அப்போது நிறுத்தப்பட்ட “இடிப்பை” இப்போது மீண்டும் தொடர்ந்திருக்கிறார்கள். தொடர்வது, தாலிபான்கள் அல்ல அமெரிக்காவும், சீனாவும்!! அதிர்ச்சியாயிருக்கா...  அமெரிக்காவும் சீனாவும் தாலிபான் கட்சிக்கு மாறிட்டாங்களான்னு குழம்பாதீங்க... அந்தச் சிலைகளின் அடியில் புதைந்து இருக்கும் தாமிர கனிம வளம்தான் அதன் ரகசியம்!! இதற்காக 30 வருட ஒப்பந்தம் சீன கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ம்ம்... மருமவ ஒடைச்சா பொன்குடம்; மாமியா ஒடச்சா மண்குடம்!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment