Pages

பர்தாஃபோபியா
ஃபோபியாக்களில் பலவகை உண்டு. ஆனால், உடை வகைகளில் ஃபோபியா தருவதென்பதில் பர்தாவுக்குத்தான் தனிச்சிறப்பு. சேலைஃபோபியா, சுடிதார்ஃபோபியா, ஸ்கர்ட்ஃபோபியா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோமா என்ன? ஆனாலும், நிறைய பேருக்கு இந்த ஃபோபியா இருக்கிறது. இதைப் போக்குவது பற்றிப் பார்ப்போம்.

முன்காலத்தில், எல்லாப் பெண்களுமே சேலை அல்லது தாவணித் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள்.  முஸ்லிம் பெண்கள் கூடுதலாகத் தலையையும் மறைத்துக் கொள்வார்கள், இஸ்லாமிய வழிகாட்டுதல் அவ்வாறு என்பதால். மேலும், அப்போதெல்லாம் பெண்கள் எப்போதாவதுதான் வெளியே வருவதால், இம்முறையே பின்பற்றத் தோதுவாக இருந்தது. ஆனால், நாளாக நாளாகப் பெண்கள் படிப்பதும், பல துறைகளில் கால்வைத்து, வேலைக்குச் செல்வதும் அதிகரித்தது. பல வெளிவேலைகளுக்கும் உறவினர்களைச் சார்ந்திராமல், தாமே செய்துகொள்ளவும் ஆரம்பித்தனர்.

சேலையில் பல அவஸ்தைகள் உண்டு, உடுத்துவது முதல். என்னதான் பார்த்துப் பார்த்து அங்கங்கு பின் குத்தி வைத்தாலும், கவனமாக இருக்க வேண்டும். இருபாலர் படித்த என் கல்லூரியில், சேலை மட்டுமே பெண்களுக்கான கட்டாய  உடையாக இருந்தவரை, மாணவிகளின் வலதுபுறம்தான் மாணவர்களுக்கு இருக்கைகள் என்பது எழுதப்படாதச் சட்டமாக இருந்தது. ( ஒரு திருமணப் புகைப்படக்காரர் கல்யாண வீட்டில் கிடைத்த அனுபவங்களை, திட்டுகளை வைத்து, சேலையின் சிரமங்களைப்  பதிந்திருந்தார். அந்தப் பதிவை இப்போக் காணோம், காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு போல!!)

பிறகு, சுடிதார் சல்வார் அறிமுகமாச்சு. அறிமுகமான வேகத்துல, அது கிட்டத்தட்ட தமிழ்நாட்டு கலாச்சார உடை மாதிரி எல்லாரிடமும் இறுகப் பரவிப்பிடிச்சுடுச்சு. என்ன காரணம்? உடையின் எளிமை மற்றும் சௌகரியம். ஆமாம், சேலையைவிட இது மிகவும் வசதியான உடை!! பிறகு வந்த “நைட்டி”யும் பிரபலமடைவதற்கு அதன் வசதிதானே காரணம்.

அதேபோலத்தான், ‘பர்தா’வும். 90களின் நடுவேதான் இஸ்லாமிய விழிப்புணர்வோடு,  பர்தாவும் தமிழ்நாட்டில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் பெண்களும் பொது இடங்களில் அதிகம் புழங்கத் தொடங்கியிருந்தனர். பணிக்குச் செல்லும் பெண்கள் அன்றாட உடையாக சேலை அணிவது சிரமமானதே என்பது நான் கல்லூரி ஆசிரியையாகப் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம். அப்போது, பர்தா முறையிலான சேலை (முழு நீள ப்ளவுஸ் + ஸ்கார்ஃப்) அணிவேன் அச்சமயத்தில்.

பர்தா என்ற உடை, நைட்டியை ஒத்து இருப்பதுதான் அது பிரபலமானதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.  நைட்டியின் வசதியைத் தரும் அதே சமயம், சுடிதார்/நைட்டியில் குனிந்து நிமிர்வதில் உள்ள சங்கடம் இதில் இல்லை. பொதுவாகவே இப்ப பர்தா உலகமுழுதுமே ரொம்பப் பரவியிருக்கு, பல நாடுகளுக்கே  ”ஃபோபியா” தாக்குமளவுக்கு!!

என்னிடம் சமீபத்தில் ஒருவர், “பிரதீபா பாட்டீல், இந்திரா காந்தியெல்லாம் போட்ட மாதிரி முழுக்கை சட்டை போட்டு, முக்காடு  போட்டுகிட்டாலும் பர்தாதானே. அப்புறம் ஏன் தனியா பர்தா போடணும்?” என்று கேட்டார். உண்மைதான், நானும் அப்படித்தான் சேலையானாலும், சுடிதாரானாலும் முழுக்கை உடையும், ஸ்கார்ஃபும் அணிந்து வந்தேன். ஆனாலும், அவற்றில் இருக்கும் நடைமுறை சிரமங்கள் பல. அவரிடம் சொன்னேன், “அக்கா, பிரதீபா பாட்டீல் அம்மாவுக்கும், இந்திரா காந்திக்கும் சேலைத் தலைப்பைப் பிடிப்பது மட்டும்தான் வேலை. நமக்கோ,  கையில் நாலஞ்சு பையும் பிடிச்சுக்கணும்; அங்கேயிங்க ஓடுற பிள்ளையையும் பாக்கணும்; பேரம் பேசணும்; ஆட்டோவோ, பஸ்ஸோ நிறுத்தி, ஓடி ஏறணும், இறங்கணும். இவ்வளவுத்துக்கும் நடுவுல சேலையைப் பிடிக்கவா, பையைப் பிடிக்கவா, பிள்ளையப் பிடிக்கவா? இதுக்கு பர்தாவே பெஸ்ட்னுதான் நான் மாறி இப்போ அது ஆச்சு பன்னெண்டு வருஷம்” என்று சொன்னேன்.

இஸ்லாம் எந்த இடத்தில் நாம் இன்று ’பர்தா’ என்று சொல்லும், அரேபியப் பெண்கள் அணியும் ‘அபாயா’ போன்ற முழு நீள அங்கி போன்ற
ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஆனால், அங்க அவயங்கள் வெளியே தெரியாமல் முறையான ஆடை அணிய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது. அதனால்தான், உலக முழுதுமுள்ள முஸ்லிம் பெண்கள் அவரவர் வசதிக்கேற்றபடி, விருப்பப்படி முழு உடலையும் மறைக்கும்படி ஆடை அணிந்துகொள்கிறார்கள். அது பர்தா, ஸ்கர்ட்-டாப்ஸ்-ஸ்கார்ஃப், கால்சராய்-சட்டை-ஸ்கார்ஃப், முழுக்கை சுடிதார்-ஸ்கார்ஃப், சேலை-முழுக்கை சட்டை-ஸ்கார்ஃப் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படித்தான் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இதில் உலகெங்கும் பர்தா என்ற அங்கி அதிகமாகப் பரவியிருக்கிறதென்றால், காரணம் சிம்பிள்: It's more comfortable, that's all!!

இல்லை, பர்தா அரபு நாட்டு உடை; தமிழ் கலாச்சாரத்தில் திணிக்கிறார்கள் என்றெல்லாம் (அதுவும், பேண்ட்-ஷர்ட் போட்டவர்கள்) சொல்வதைப் பார்த்தால், சிரிப்புதான் வரும். தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளிகளில், பட்டிதொட்டிகள் இருப்பவை உட்பட அநேகமாக எல்லாவற்றிலும் சீருடையாகப்பட்டிருக்கின்றதே  சுடிதார், அதென்ன சங்ககாலப் பெண்கள் போட்டிருந்த உடையா? ஏன், அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் (இந்திய & மேற்கத்திய) பெண்கள்  உடல் முழுமையாக மறையும்படி அணியும்  பிஸினஸ் சூட் கூட பர்தா வகைதானே!!  எந்த உடையும் நிலைத்திருப்பதற்கு அதன் வசதிதான் காரணம். இந்தப் பதிவில் சொல்லியிருப்பதையும் படித்துப் பாருங்கள்.  இத்தகைய ஆபத்துகள் நிறைந்த உலகில் உடையில் கவனமாக இரு(க்க நினை)ப்பதில் என்ன தவறு?

என் நண்பர் ஒருவர், சில முஸ்லிம் பெற்றோர் பர்தாவைக் கட்டாயப்படுத்துவதாகவும்; பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டியதுதானே  என்றும் கேட்டார். அவரிடம், ‘ப்ளஸ் டூ படிக்கிற உங்க தம்பி கடைத்தெரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தபின், அவனுக்கு உங்கள் வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் சுதந்திரத்தைத் தராமல், ஏன் கண்டித்தீர்கள்?’ என்று கேட்டேன்.

ஒரு பெற்றோராகத் தன் மகன்/ளுக்கு, உணவு, உடை, உறைவிடம், கல்வி அளிப்பது மட்டும் பெற்றோரின் கடமையல்ல;  பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் சொல்லித் தருவதும் கடமையே. வயது வந்த பிறகு மட்டுமல்ல, சிறுவயதிலிருந்தே முறையான ஆடைகள் அணிவதும் அவசியமே என்று இந்நாளைய ஆபத்துகளை அறிந்த நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவர்கள் முழு உடல் மறைக்கும் ஆடையே பாதுகாப்பென்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

சுடிதார், சேலை, ஸ்கர்ட் உட்பட விரும்பும் உடைகளையே பர்தா முறையில் அணியலாம். தவறில்லை. என்றாலும், ’கலர்’களைக் கண்டுகொள்ளாமல், கருப்பு (அங்கி) பர்தாவுக்கு மாறுவதற்குக் கொஞ்சம் உரமான மனது வேண்டும். இதில் இருக்கும் வசதிகளாக நான் கருதுவது,  என் அழகு, அந்தஸ்து, ஆபரணம், ஆடை, அளவுகள் ஆகியவற்றிற்காக நான் மதிக்கப்படாமல், பர்தாவை மீறி வெளியே தெரியும் என் அறிவு, அன்பு, பண்பு, குணம், கல்வி ஆகியவற்றிற்காக மட்டுமே மதிக்கப்படுவேன். அதாவது பள்ளிகளில் சீருடை போல என்று சொல்லலாம். மேலும்,  இயல்பாகவே விலையுயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் மீது ஆர்வமின்மை ஏற்பட வைக்கிறது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, வெளியிடங்களில், நான் என் உடையின்மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லாததால், என் செயல்களின்மீது மட்டுமே கவனம் செலுத்தினால் போது. இதற்காகவே புர்கா போடலாமா என யோசிப்பதாக இங்கே ஒரு பெண் யோசிக்கிறார் பாருங்கள்.

நான் ஏன் முழு ஆடை அணிகிறேன்? ஆரம்பகாலங்களில் அம்மா சொன்னார், இஸ்லாம் சொல்கிறது என்பதே எனக்குத் தெரிந்த காரணம். பின்னாட்களில் செய்தித் தாட்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கண்ட நிதர்சனங்கள் பெண்ணுக்கு முழுஆடைதான் முதல் கவசம் என்பது புரிந்தது. இப்போதும் பலரின் பதிவுகளில் பெண்களைக் குறித்தான எழுத்துக்கள் என் எண்ணங்களுக்கு வலு சேர்க்கவே செய்கின்றன. ”ஆள் பாதி, ஆடை பாதி” என்பதன் உண்மையான அர்த்தம் புரிகிறது.

ஆரம்ப காலங்களில் எல்லாப் பெண்களுமே கண்ணியமான ஆடைதான் உடுத்தியிருந்தார்கள். ஆனால், காலப்போக்கில், அறிவை வெளிப்படுத்துவதாக எண்ணி உடலையும் வெளிக்காட்டும் உடைகள் புழக்கத்தில் வந்துவிட்டன. எவ்வளுக்கெவ்வளவு இறுக்கமாக, இறக்கமாக உடை அணிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சுதந்திரம் அவர்களுக்குக் கிடைப்பதாக இப்பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். எப்படி வந்தது இந்த எண்ணம்?

பர்தாவை எதிர்க்கிறோம், அது சுதந்திரத்தை முடக்குகிறது என்று சொல்லும் இவ்வெதிர்ப்பாளர்கள் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இதைத்தான்.  முழுதும் மூடினால் அடிமை; திறந்துபோட்டால்தான் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தைப் பாகுபாடில்லாமல் இளம்பெண்களின் மனதில் பதிய வைத்ததுதான் இவர்களுக்குக் கிடைத்த, இவர்கள் எதிர்பார்த்த வெற்றி.  இதன் தொடர்ச்சியே போட்டிருந்தாலும் போடாததுபோல உடலின் பெரும்பகுதியை வெளிப்படுத்துவதான இன்றைய மாடர்ன் உடைகள்!!

இவையெல்லாவற்றையும் விட அதிர்ச்சியான விளைவு ஒன்று உண்டு என்று சொன்னால், சின்னச் சிறார்களுக்கும் இதுபோன்ற உடைகள் அணிவிப்பதுதான்!!  இதனால், நம் உடல் தெரிய உடை அணிவது தவறொன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பிஞ்சு மனதில் பதிய வைப்பது மட்டுமல்லாமல், எத்தனை அபாயகரமான விளைவுகளுக்கு அச்சிறுமியை உள்ளாக்கும் சாத்தியங்களைத் உருவாக்குகின்றோம் என்பது பெற்றோர்களுக்குப் புரியாமல் போயிருப்பது - அதுவும்  பல கொடூரங்களைக் கண்டபின்னும் - ஏன்? அவர்களுக்குள்ளும் உடைகுறித்தானத் தவறான புரிதல் பர்தா-எதிர்ப்பாளர்களாலும் ஆழப் பதிய வைக்கப்பட்டிருப்பதுதான்.

இன்று, குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவை தவறில்லை என்ற அபிப்ராயம் மீடியாக்களாலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதுபோல, மீடியாவினால் பெண்கள் "commoditise" ஆக்கப்பட்டிருப்பதும், உடையைக் குறைப்பது தவறில்லை என்ற எண்ணம் சமூகத்தின்மீது திணிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம். இதைமீறி முழு உடை அணிபவர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்ததுதான் பர்தா-எதிர்ப்பாளர்களால் வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஆனால் முழுமையான கண்ணியமான உடை என்றுமே அறிவிற்கும், திறமைக்கும் தடையாகாது, மாறாக கவனத்தைச் சிதறாமல் ஒருமுகப்படுத்தி மேன்மேலும் முன்னேறவே உதவும் என்பது சாதித்தவர்களுக்குத் தெரியும்.


பர்தா அல்லது முழு ஆடையை எதிர்ப்பதைவிட, பல பெண்கள்மீது உடலைக் காட்டிப் பிழைக்கும் நிலை ”திணிக்கப்படுவதை” முதலில் எதிர்த்து, தடுப்பதே கட்டாய அவசியம். அவர்கள்தான் மிகமிகப் பாவப்பட்டவர்கள், பரிதாபத்திற்குரியவர்கள்.

பெண்ணுக்கு மட்டும்தான் முறையான ஆடை அவசியமா, ஆண்களுக்கில்லையா என்றால், எப்படி இல்லாமல் இருக்கும்? ஆண்களுக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு உண்டு. இதோ அதுகுறித்த வழிகாட்டுதல்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தரையில் கிடக்கும் அவரது கீழாடையைக் கணுக்கால்களின் பாதியளவுக்கு உயர்த்திக் கட்டச் சொன்னதாகச் சொல்வதாக ஸஹீஹ் முஸ்லிம் 4238 கூறுகிறது. அதாவது இந்த ஹதீத் சொல்வது ஆண்களுக்கும் முழு ஆடை அவசியம் என்றே.

ஆண்கள் ஆடைக்குறைப்பில் வியாபார உலகம் ஆர்வம் காட்டாததாலேயே  இது மிகவும் வலியுறுத்தப்படவில்லையோ என்னவோ.

பொது இடங்களில் ஆண்களுக்கும் உடையில் கட்டுப்பாடு வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படவேண்டியதே. எனவேதான் என் மகன்களுக்கும் கையில்லா சட்டைகளோ, அரை/முக்கால்/காலேஅரைக்கால் கால்சட்டைகளோ அணிவிப்பதில்லை. ஏன் என் கணவர், தந்தை, கஸின்ஸ் உட்பட என் குடும்பத்து ஆண்கள் யாரும் இவ்வாறு அணிவதில்லை.  பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும் என்று விரும்பும் எந்தச் சமூகத்து ஆணும் இதே போல அரைகுறை ஆடை அணிவதில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். (& vice-versa)

நான் கல்லூரியில் வேலை பார்க்கும்போது, என் சக ஆசிரியை கேட்டார், “உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.

Post Comment

98 comments:

abdul said...

neenga romba usharrrrr

மதுரை சரவணன் said...

//என் நண்பர் ஒருவர், சில முஸ்லிம் பெற்றோர் பர்தாவைக் கட்டாயப்படுத்துவதாகவும்; பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டியதுதானே என்றும் கேட்டார். அவரிடம், ‘ப்ளஸ் டூ படிக்கிற உங்க தம்பி கடைத்தெரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தபின், அவனுக்கு உங்கள் வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் சுதந்திரத்தைத் தராமல், ஏன் கண்டித்தீர்கள்?’ என்று கேட்டேன்.//

arumai... vaalththukkal

மதுரை சரவணன் said...

//என் நண்பர் ஒருவர், சில முஸ்லிம் பெற்றோர் பர்தாவைக் கட்டாயப்படுத்துவதாகவும்; பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டியதுதானே என்றும் கேட்டார். அவரிடம், ‘ப்ளஸ் டூ படிக்கிற உங்க தம்பி கடைத்தெரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தபின், அவனுக்கு உங்கள் வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் சுதந்திரத்தைத் தராமல், ஏன் கண்டித்தீர்கள்?’ என்று கேட்டேன்.//

arumai... vaalththukkal

மதுரை சரவணன் said...

//என் நண்பர் ஒருவர், சில முஸ்லிம் பெற்றோர் பர்தாவைக் கட்டாயப்படுத்துவதாகவும்; பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டியதுதானே என்றும் கேட்டார். அவரிடம், ‘ப்ளஸ் டூ படிக்கிற உங்க தம்பி கடைத்தெரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தபின், அவனுக்கு உங்கள் வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் சுதந்திரத்தைத் தராமல், ஏன் கண்டித்தீர்கள்?’ என்று கேட்டேன்.//

arumai... vaalththukkal

Seeni said...

Allaaku akbar!
sakothari !
nalla ezhthukkal ithai aan ezhuthi
irunthaal aanaathikkam ena -
parappi. viduvaarkal!
neengal(penn) ezhuthiyathaal-
innum sirappu!
nalla karuthukkal!

ஜெய்லானி said...

//இவையெல்லாவற்றையும் விட அதிர்ச்சியான விளைவு ஒன்று உண்டு என்று சொன்னால், சின்னச் சிறார்களுக்கும் இதுபோன்ற உடைகள் அணிவிப்பதுதான்!! இதனால், நம் உடல் தெரிய உடை அணிவது தவறொன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பிஞ்சு மனதில் பதிய வைப்பது மட்டுமல்லாமல், எத்தனை அபாயகரமான விளைவுகளுக்கு அச்சிறுமியை உள்ளாக்கும் சாத்தியங்களைத் உருவாக்குகின்றோம் என்பது பெற்றோர்களுக்குப் புரியாமல் போயிருப்பது - அதுவும் பல கொடூரங்களைக் கண்டபின்னும் - ஏன்? அவர்களுக்குள்ளும் உடைகுறித்தானத் தவறான புரிதல் பர்தா-எதிர்ப்பாளர்களாலும் ஆழப் பதிய வைக்கப்பட்டிருப்பதுதான்.//

இந்த ஊரில நான் இதுப்போல பல பார்த்து நொந்துப்போயிருக்கேன். இரெண்டு வயது பெண்குழந்தைக்கு ஒரு வயது சின்ன டிரஸை போட்டு இருப்பதை பற்றி கேட்டேன் .

எடக்கு முடக்கான பதில் வந்தது. நாளைய தலைமுறை இபப்டித்தான் இருக்கப்போகுதோ.. :-(

http://www.youtube.com/watch?v=uyorIK1NF_s&feature=related

ஆமினா said...

//என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”//

அருமை அருமை

இந்த ஒரு வார்த்தையிலேயே புர்காவின் மகத்துவம் அடங்கிவிட்டது

zalha said...

//பர்தா அல்லது முழு ஆடையை எதிர்ப்பதைவிட, பல பெண்கள்மீது உடலைக் காட்டிப் பிழைக்கும் நிலை ”திணிக்கப்படுவதை” முதலில் எதிர்த்து, தடுப்பதே கட்டாய அவசியம். அவர்கள்தான் மிகமிகப் பாவப்பட்டவர்கள், பரிதாபத்திற்குரியவர்கள்//புரிந்து பெண்ணுரிமை பேசுவோருக்கு ஹைலைட்டு...
அப்புறம் last sentence...repeat 10 times please!!!

அம்பலத்தார் said...

நல்ல விடயத்தை பதிவிட்டிருக்கிறிர்கள். கவர்ச்சியான தோற்றமும் கவர்ச்சியான உடைகளும்தான் பெண்களிற்கு அழகு என ஆண்களும் வியாபார நிறுவனங்களும் சேர்ந்து உண்டாக்கிய மாயைதான் இது.

sultangulam@blogspot.com said...

எத்தனை முறை தெளிவு படச் சொன்னாலும் பலருக்கு புரிவதே இல்லை.
//என் அழகு, அந்தஸ்து, ஆபரணம், ஆடை, அளவுகள் ஆகியவற்றிற்காக நான் மதிக்கப்படாமல்,.... என் அறிவு, அன்பு, பண்பு, குணம், கல்வி ஆகியவற்றிற்காக மட்டுமே மதிக்கப்படுவேன்//
பர்தா முன்னேற்றுத்துக்கு தடையானதல்ல என்பதை ஒரு பெண்ணே எழுதும்போது அதன் தாக்கம் இன்னும் அதிகமாகிறது.

suvanappiriyan said...

சலாம் சகோ

//நான் கல்லூரியில் வேலை பார்க்கும்போது, என் சக ஆசிரியை கேட்டார், “உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.//

அருமையான வரிகள். பதிவும் மிக அருமை!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.ஹுசைனம்மா,
மிக நுணுக்கமாக பல விஷயங்களை பெண்கள் கோணத்தில் இருந்து அருமையாக ஆய்ந்து எழுதி உள்ளீர்கள். மாஷாஅல்லாஹ். பதிவு முழுக்கவே... ஒவ்வொரு வரியும் 'பர்தாஃபோபியா'காரர்களை தலையில் 'நங்கு'... 'நங்கு'... என்று கொட்டிக்கொண்டே செல்கின்றது. குட்டக்குட்டக்குனிந்து... கடைசி வரியில் அவர்களின் தலையில் பெரிய கேரட்டே முளைத்து விட்டது..! (நன்றி Tom & Jerry கார்ட்டூன் கற்பனை)

PUTHIYATHENRAL said...

நல்ல பதிவு... நன்றி.. வருகை தாருங்கள் உங்களை அன்போடு அழைக்கிறது www.sinthikkavum.net

சிராஜ் said...

/* என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன் */

நிதர்சனமான உண்மை சகோ ஹுசைனம்மா. அற்ப்புதமான பதிவு.

சிலர் குடும்பத்துடன் வருவார்கள். பெண்களின் உடை ரொம்ப ஆபாசமாக இருக்கும். அவர்கள் வீட்டு ஆண்களும் அவர்களுடனே வருவார்கள், ஒரு பெண் ஆபாசமாக உடை அணிகையில் ஆணின் மனநிலை எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும், தெரிந்தும் எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது எப்போதுமே மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கும்.

VANJOOR said...

பத்திரமாயிருக்கிறேன்...
எனக்குள் - நான்
மிக மிகப்பத்திரமாய்....!!!

எச்சில் இலைமீதான
இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை

அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!
டீக்கடை தாண்டி
நடந்து போகையில்...
எல்லோர் கவனமும் பறித்து
என்னைப்பற்றியே
விமர்சித்துத் தொலைத்து
வங்களால் நிரம்பிவழிய...
வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!

என்னைப்
பின்தொடர்ந்து வா...
விசிலடி..!!!!
கேலிசெய்....!!!
என யாரையும்...
என் உடைகளால்
சீண்டிவிடுவதில்லை நான்...!!!

வகுப்பறைகளிலும்...
பாடப்புத்தகம் மீதான
அடுத்தவர் கண்களை
ஒருபோதும்
கிழித்துப்போடுவதில்லை-நான்!!!

விழிகளால் ஊரே ரசித்து...
கழித்துப்போட்ட
எச்சில் பண்டமாய்
எப்போதும் இருந்ததில்லை - நான்!!!

அல்லாஹ்வின் கட்டளைகளில்;
கணவனின் கண்களில்;
நான் மிகப்பெரும்
அழகியாய்
உயர்ந்து நிற்கிறேன்...!!!

அறியாமையினால்;
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிறார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!!

பாவம் அவர்கள்....;
.......................
அநாவசிய பார்வைகளை....
அந்நியரின் விமர்சனங்களை ....
அனாச்சாரங்களை ....
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்....
ஹிஜாப்
என்பதை அறியாமல்....!!!!

நன்றி : றஹீமா பைஷால்
========================

புர்க்கா..

குறைந்துவிட்ட ஆடையால்
கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு;
மறைக்க வேண்டியவையை
மறந்துவிட்டப் பரிதாபம்!

அரைகுறை ஆடையில்
எல்லாமே விலகும்;
முன்னேறிவிட்டோமென்று
முரசுக் கொட்டும் உலகம்!

போர்த்திக்கொண்டுப் போகும் எம்
சகோதரியைக் கண்டு
பொறுக்கவில்லையோ
பொறுக்கி உனக்கு!

ஒழுங்கான ஆடையில்
உலா வரும் ஒரே சமுதாயம்;
படையுடன் வந்து தடைப்போட்டாலும்
நடைப்போடமாட்டோம் வீதியிலே;
மரணம் வந்தாலும்
மானம் காப்போம் தரணியிலே!

வரமாட்டோம் ஒருநாளும்
அரைகுறைக்கு – காலமெல்லாம்
கட்டுப்படுவோம் இறைமறைக்கு!!

-யாசர் அரஃபாத்

Butter_cutter said...

“உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.
வாவ் அருமை பதில்

VANJOOR said...

சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?

சொடுக்கி 1.>>> இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் <<< படிககவும்

சொடுக்கி 2. >>> ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா <<<< படிககவும்


சொடுக்கி 3. >>> இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்? <<< படிககவும்


சொடுக்கி 4. >>> பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா? <<< படிககவும்


சொடுக்கி 5.>>> முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா? <<< படிககவும்


சொடுக்கி 6. >>>
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
<<< படிககவும்

சொடுக்கி 7.>>> போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு சிந்தி . எது பெண்ணுரிமை? படிககவும்
.

VANJOOR said...

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம் PART 1.

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

இஸ்லாமிய வழக்கில் அது “ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

“ஹிஜாப்’ (பர்தா, புர்கா, துப்பட்டி) முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

“ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!” என்று முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் கூறுகின்றனர்.

எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் அந்தப் போலித்தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

“ஹிஜாப்” என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இதுபற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம்

ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். அனால் சமத்துவம் பேசும் இவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான்.

இதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை எதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.

தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை எதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான்.

எல்லா நேரங்களிலும் அவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் அந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் அவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட அந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது.

என் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே அதை அனுமதிக்க மாட்டார்கள்.

“ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்” என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று?

பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று?

முழு அளவுக்கு இல்லையானாலும் ஒரளவுக்கு அவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு யாருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

continued.....

VANJOOR said...

PART 2.

பெண்களுக்கு பாதுகாப்பு

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர்.

திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.

பெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. அதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும்.

இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.

இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும்.

ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும்.

அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம்.

தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர்.

கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர்.

“இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்” என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர்.
காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

CONTINUED.....

VANJOOR said...

PART 3

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம்.

இது எதை உணர்த்துகிறது?

பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள்.

அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?


பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத்தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான்.

அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் அந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே.

பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான்.
இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள்.

எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும்.

முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும்.

இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டவேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.

அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை.

அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.CONTINUED .....

VANJOOR said...

part 4

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர்.

ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை.

முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது.

அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள்.

குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம்.

முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.


SOURCE: http://islamicdress.blogspot.com/ வலைத்தளத்திலிருந்து

VANJOOR said...

புர்கா போட்டுண்டா என்ன
Posted by Vidhoosh on Friday, November 6, 2009

புடவை கட்டி டூ வீலர் ஓட்டும் போது இடது பக்கம் புடவைத் தலைப்பு விலகி விடும் பயத்திலும், கிளவ்சோ இல்லை, காட்டன் முழுக்கைச் சட்டை ஒன்றையும் மேலே அணிந்து கொள்ளவும் வேண்டி இருக்கிறது.

சிக்னல் போன்ற இடங்களில் கால் கீழே ஊன்றினால் புடவை மேலே ஏறிக்கொண்டு சில நேரம் ஆடு சதைப் பகுதிகள் வரை தூக்கிக் கொண்டு விடுவதால், எல்லோர் பார்வையையும் தவிர்க்கவென ஒரு டைட்ஸ் ஒன்றையும் அணிந்து கொண்டால்தான், என்னால் மாற்று சிந்தனைகளோ பயமோ இன்றி அலுவலகத்துக்கு புடவை அணித்து, இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடிகிறது.

அட தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டுமே என்றளவுக்கு இன்னும் துணியவில்லையோ என்னவோ போடா மாதவா.....

இங்கே சிக்னலில் எப்போது இவள் புடவை விலகும் - கணுக்கால் தெரியும், நாம் பார்க்கலாம் என்று மற்ற வாகன ஓட்டிகள் காத்திருக்கிறார்கள் என்றோ, கழுகுக் கண்கள் என்றோ, ஆணாதிக்கம் என்றெல்லாமோ, ச்சே இந்த உலகமே மோசம் என்றோ நான் கூற வரவில்லை.

என் சொந்த விருப்பு வெறுப்பின் பேரில், இதெல்லாம் நான் செய்கிறேன். அதே போல இந்த மாதிரி சுற்றுச்சூழலிலிருந்து தம்மை பாதுக்காக்க யாரோ ஒருவர் ஏற்படுத்திய சில பழக்கங்களை, காலப்போக்கில் ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதியானது போலாகியதோ என்னவோ?

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் எழுதியிருப்பதையும் பாருங்களேன்.

இதை படிச்சதும் தோன்றியதை சொல்லலாமே என்ற உணர்வுதான். சரியோ தவறோ? என் தினசரி டூ வீலர் ஆடை ஆயத்தம் செய்வதற்கு பதிலாக நானும் ஒரு புர்கா வாங்கி போட்டுண்டா என்ன?

SOURCE:புர்கா போட்டுண்டா என்ன
Posted by Vidhoosh on Friday, November 6, 2009

Jaleela Kamal said...

வாவ் சூப்பர் பதிவு ஹுஸைனாம்மா

நானும் முன்பு ஃபுல் சுடிதார் , ஸ்கார்ஃப்

பிறகு பர்தா ரொம்ப கம்ஃபர்டபுளா இருப்பதால் இப்ப பர்தா தான்..

பிந்தாஸா நடக்கலாம். ரோட்ல நடந்த ஹா ஹா நான் தா ராணி

Jaleela Kamal said...

இது ல முக்கியமா ஜெயலலிதா அம்மா போட்டவ விட்டுட்டீங்களே
அவங்க தானே சூபப்ர் பர்தா போட்டு இருக்காங்க

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அழகான அருமையான பதிவு.

//“உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.//

ரசித்த வரிகள்.

Unknown said...

ஸலாம்


நல்ல பதிவு .....

Unknown said...

..

suvanappiriyan said...

சலாம் சகோதரி!

//நான் கல்லூரியில் வேலை பார்க்கும்போது, என் சக ஆசிரியை கேட்டார், “உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.//

அருமையான ஆக்கம். பதிவின் அனைத்து கருத்துகளோடும் ஒததுப் போகிறேன். சிறந்த பதிவை தந்தமைக்கு நன்றி!

ஜாஹிர் ஹுஸைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹுசைனம்மா
//“அக்கா, பிரதீபா பாட்டீல் அம்மாவுக்கும், இந்திரா காந்திக்கும் சேலைத் தலைப்பைப் பிடிப்பது மட்டும்தான் வேலை. நமக்கோ, கையில் நாலஞ்சு பையும் பிடிச்சுக்கணும்; அங்கேயிங்க ஓடுற பிள்ளையையும் பாக்கணும்; பேரம் பேசணும்; ஆட்டோவோ, பஸ்ஸோ நிறுத்தி, ஓடி ஏறணும், இறங்கணும். இவ்வளவுத்துக்கும் நடுவுல சேலையைப் பிடிக்கவா, பையைப் பிடிக்கவா, பிள்ளையப் பிடிக்கவா? இதுக்கு பர்தாவே பெஸ்ட்னுதான் நான் மாறி இப்போ அது ஆச்சு பன்னெண்டு வருஷம்//


//என் நண்பர் ஒருவர், சில முஸ்லிம் பெற்றோர் பர்தாவைக் கட்டாயப்படுத்துவதாகவும்; பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டியதுதானே என்றும் கேட்டார். அவரிடம், ‘ப்ளஸ் டூ படிக்கிற உங்க தம்பி கடைத்தெரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தபின், அவனுக்கு உங்கள் வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் சுதந்திரத்தைத் தராமல், ஏன் கண்டித்தீர்கள்?’ என்று கேட்டேன்.//


இதில் இருக்கும் வசதிகளாக நான் கருதுவது, என் அழகு, அந்தஸ்து, ஆபரணம், ஆடை, அளவுகள் ஆகியவற்றிற்காக நான் மதிக்கப்படாமல், பர்தாவை மீறி வெளியே தெரியும் என் அறிவு, அன்பு, பண்பு, குணம், கல்வி ஆகியவற்றிற்காக மட்டுமே மதிக்கப்படுவேன். அதாவது பள்ளிகளில் சீருடை போல என்று சொல்லலாம். மேலும், இயல்பாகவே விலையுயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் மீது ஆர்வமின்மை ஏற்பட வைக்கிறது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, வெளியிடங்களில், நான் என் உடையின்மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லாததால், என் செயல்களின்மீது மட்டுமே கவனம் செலுத்தினால் போதும்//
அருமை அருமை அருமை
முழு பதிவையும் copy paste பண்ணி பாராட்டும் வரிகள்.

ஸ்ரீராம். said...

உடலை மூடும் ஆடை அணிவது பிற்போக்குத் தனம் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆண்கள் உடைகளைப் பற்றியும் சொன்னீர்கள். பொது இடங்களில் இங்கு பல ஆண்கள் முக்கால், அரை, தற்சமயம் இறுக்கமான சிறிய டிராயர் கூடப் போட்டு வருவது நாகரீகமாகி வருகிறது.

தலைப்பைப் பார்த்ததும் கணவர் மேல் அலர்ஜி என்று ஏதோ சப்ஜெக்ட் என்று முதலில் நினைக்கத் தோன்றியது. கணவரை பர்த்தா என்றும் சொல்வார்களே...!

பாச மலர் / Paasa Malar said...

இங்கே சவூதியில் பர்தா அணிவது கட்டாயம்; கடைக்கு அவசரமாக வெளியில் செல்லும்போது உடைமாற்றச் சோம்பேறித்தனம் ஏற்படும்போது பர்தா அணிவது மிகவும் வசதியாக இருக்கிறது...

RAMA RAVI (RAMVI) said...

//ஒரு பெற்றோராகத் தன் மகன்/ளுக்கு, உணவு, உடை, உறைவிடம், கல்வி அளிப்பது மட்டும் பெற்றோரின் கடமையல்ல; பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் சொல்லித் தருவதும் கடமையே. அந்த வகையில் அவர்கள் முழு உடல் மறைக்கும் ஆடையே பாதுகாப்பென்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.//

மிகவும் அருமையான கருத்தை அழகாக சொல்லியிருக்கீங்க.

சிறப்பான பதிவு.

Sabitha said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

மாஷா அல்லாஹ் நீங்க சொல்றது சரிதான். பர்தா தான் எங்கும் ,எப்போதும் ,எவ்விடமும், பாதுகாப்பு +சுதந்திரமா நம்மல உணர வைக்குது.
நல்ல பதிவுக்கு நன்றி சகோ

கீதமஞ்சரி said...

உடை விஷயத்தில் ஆண்கள் என்ன? பெண்கள் என்ன? எல்லோருமே கண்ணியமாக உடை அணியவேண்டும்.

அவரவர் கலாச்சாரத்துக்கேற்றபடி உடை அணிவதிலும் தவறு இல்லை. ஆனால் அடுத்தவர் கலாச்சாரத்தை இழித்துப் பேசி, அவர் மனம் புண்படுத்துவது நாகரிகமில்லாத செயல். கண்டிக்கத்தக்கதும் கூட. மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள் ஹூஸைனம்மா.

jali said...

அருமையான கட்டுரை இன்றைய உலகில் மிக முக்கியமான கருத்துக்களை தொகுத்து அளித்து இருக்கிறீர்கள் நன்றி!

ஷர்புதீன் said...

இஸ்லாமிய கருத்தில்/ பார்வையில் சொல்லவில்லை,பொதுவில் சொல்கிறேன்.

இன்றைய டிவி நிகழ்ச்சியில் ,((மிக முக்கியமாக - துப்பட்டா ) நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அணிந்து வரும் உடை,பல பெண்கள் ஒத்துகொண்ட மிக இயல்பான உடையாக கருதப்படுகிறது! ஆனால் அதே உடை எனது டீனேஜில்/காலத்தில் உடலை காட்டும் உடையாக கருதப்பட்டது.

அன்று நடிகை கவுதமி அணிந்துவந்தது மாடர்ன் டிரஸ், உடலை காட்டும் உடை என சொல்லபட்டது / கருதப்பட்டது . இன்று அந்த உடை அணிந்து வரும் நடிகைகள் டீசென்ட் டிரஸ் அணிபவராக கருதப்படுகிறது!

jali said...

அருமையான கட்டுரையின் வாயிலாக உறுதியான கருத்தை இந்த அவசர உலகத்தில் வாழும் இளம் தலைமுறையினற்க்கு தந்த தங்களின் முயற்சிக்கு பாராட்டு! பர்தாவின் பயனை மாற்றுமதத்தினரும் மதிக்க கற்றுகொண்டார்கள், இதுதான் இதன் சிறப்பு- நன்றி -அல்லாஹ் உங்களுக்கு நற்கிருபை செய்வானாக! ஆமீன்!

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

பர்தா பற்றிய பொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலாக இந்த பதிவு உள்ளது.

aaa said...

"என் அழகு, அந்தஸ்து, ஆபரணம், ஆடை, அளவுகள் ஆகியவற்றிற்காக நான் மதிக்கப்படாமல், பர்தாவை மீறி வெளியே தெரியும் என் அறிவு, அன்பு, பண்பு, குணம், கல்வி ஆகியவற்றிற்காக மட்டுமே மதிக்கப்படுவேன்."

GOLDEN WORDS SISTER

baleno said...

பர்தா உங்கள் மத கடமை. அதனால் உங்கள் பதிவு ஒகே.
எனது நிறுவனத்தில் ஒரு மொறெக்கோ, இரு துருக்கி பெண்கள் வேலை செய்கிறார்கள். பர்தா அணிவதில்லை. சென்றவாரம் பெண்களுக்கான உதைபந்தாட்டம் துருக்கியில் ஜேர்மனியுடன் நடைபெற்றது. துருக்கி பெண்கள் அணி பர்தா அணியவில்லை. கட்டாயப்படுத்தும் போது phobia வாக மாறிவிடுகிறது.

iRFAN said...

/* “உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”*/

அருமை...

கபிலன் said...

நைட்டி, சுடிதார், சேலை போல பர்தாவும் கண்ணியமான உடை தான் !
அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் !

முகுந்த்; Amma said...

Good post Hussainamma.

But the things you wrote about Burka will be applicable to only those countries where burka is known and accepted. In where we live, I see lot of Muslim women don't use burka or not even scarf. They dress like normal people. When I asked the reason they said if one wears Burka, in a country where it's not common, a girl becomes a easy target, people are looking and treating them differently.
I have a few Turkish and Jordan friends who say, burka is nOt mandatory in most of Turkish cities and Jordan cities. And most of the women dress like others

முகுந்த்; Amma said...

According to me, although I am a Indian and follow indian traditions, when it comes to work and work place I follow their attire and traditions. This doesn't mean that I forgot my culture and traditions, but mingling with crowds will make you not become an easy target of racism.

When you are in Rome, be a Roman.

நட்புடன் ஜமால் said...

சின்னச் சிறார்களுக்கும் இதுபோன்ற உடைகள் அணிவிப்பதுதான்!! இதனால், நம் உடல் தெரிய உடை அணிவது தவறொன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பிஞ்சு மனதில் பதிய வைப்பது ...

சரியா சொன்னீங்க,

அதுமட்டுமல்லாது தந்தை, சகோதரன் மற்றும் வீட்டுக்கு வரும் ஆண்களுக்கு முன்பு இப்படி சிறிய ஆடைகள் அணிவதால், பிற்காலத்தில் ஆண்கள் முன்னிலையில் அவ்வாறு செல்லும் போது உடம்பில் இயல்பாய் இருக்கும் கூச்சம் இருப்பதில்லை ...

எல்லாம் நாகரீக மோகம் :(

'பசி'பரமசிவம் said...

பர்தாவைச் சிலாகிப்பதற்காகவே இப்பதிவை நீங்கள் போட்டிருப்பதாகத் தெரிகிறதே!
கண்ணியமான, அதே நேரத்தில் உடுப்பதற்கு எளிமையான உடை அவசியம் என்று சொல்லியிருந்தால் போதுமே.
உடை விசயத்தில்கூட அல்லாவைச் சம்பந்தப் படுத்துகிறீர்களே, இது தேவையா சகோதரி?
தவறாகக் கேட்டிருந்தால் மன்னியுங்கள் உடன்பிறப்பே.

suvanappiriyan said...

சலாம் சகோதரி!


//நான் கல்லூரியில் வேலை பார்க்கும்போது, என் சக ஆசிரியை கேட்டார், “உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.//

பதிவு அருமை. அதிலும் இந்த கடைசி வரிகள் மிகவும் அருமை.

Nanditha said...

I cannot agree with Mukundamma! I work in a MNC and I'm a Hindu but I cannot leave all my traditions when it comes to my personal beliefs. I will still wear bindi and still do wear metti & thaali.
We are not in high school to worry about getting picked up. Again even if your children are in school, we need to remind/teach them that we live in a global village and everyone will have their own beliefs and we need to respect & accept it. My girl have to wear bindi to school, no matter what cos that's what we believe in and I'm teaching that to my child.
I totally agree with this author's post that a person should be judged by his/her brains, behavior etc and not by anything else. This is exactly what I teach my girl baby and she sees me the exact same way & cannot let others decide for you, FOR if you do you are letting them overtake your thoughts & beliefs and you are not YOU!
"When you are in Rome, be a Roman."- I don't believe or think that this quote is true any more but probably for previous centuries.
My 2 cents.

சிநேகிதன் அக்பர் said...

என்ன மாதிரியான டிரெஸ் போடுவது என்பது அவங்கவங்க விருப்பம். ஆனா யாரா இருந்தாலும் (அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) முழுதாக உடலை மறைக்கும் வண்ணம் உடுத்தினால் எல்லோருக்குமே நல்லது.

இதுதானே ஹுஸைனம்மா நீங்க சொல்ல வர்றது?

ammaar said...

பரமசிவம் சகோதரருக்கு, // பரமசிவம் said...
பர்தாவைச் சிலாகிப்பதற்காகவே இப்பதிவை நீங்கள் போட்டிருப்பதாகத் தெரிகிறதே!
கண்ணியமான, அதே நேரத்தில் உடுப்பதற்கு எளிமையான உடை அவசியம் என்று சொல்லியிருந்தால் போதுமே.
உடை விசயத்தில்கூட அல்லாவைச் சம்பந்தப் படுத்துகிறீர்களே, இது தேவையா சகோதரி?
தவறாகக் கேட்டிருந்தால் மன்னியுங்கள் உடன்பிறப்பே//

நீங்கல் குறிப்பிட்
ட //.....கண்ணியமான, அதே நேரத்தில் உடுப்பதற்கு எளிமையான உடை அவசியம் என்று சொல்லியிருந்தால் போதுமே. உடை விசயத்தில்கூட அல்லாவைச் சம்பந்தப் படுத்துகிறீர்களே..// என்பது தொடர்பாக.

இந்த விடயம் இஸ்லாம் மார்க்கத்தில் (சுமார் 1400 வருடங்களுக்கு முன்னால்) கூறப்பட்டு விட்டது.இஸ்லாம் என்பது மனிதனின் முழு வாழ்க்கைக்குமான வலிகாட்டியாக இருக்கின்றது.(ஆடை அணிவது,உண்பது முதல் வாழ்வின் அனைத்துக்கும். குர்ஆனை எடுத்து வாசித்தால் அறிந்து கொள்வீர்கள்
).இங்கு கட்டுரையாலர் கூறியது இஸ்லாத்தில் உள்ளதையே,

ammaar said...

பரமசிவம் சகோதரருக்கு, // பரமசிவம் said...
பர்தாவைச் சிலாகிப்பதற்காகவே இப்பதிவை நீங்கள் போட்டிருப்பதாகத் தெரிகிறதே!
கண்ணியமான, அதே நேரத்தில் உடுப்பதற்கு எளிமையான உடை அவசியம் என்று சொல்லியிருந்தால் போதுமே.
உடை விசயத்தில்கூட அல்லாவைச் சம்பந்தப் படுத்துகிறீர்களே, இது தேவையா சகோதரி?
தவறாகக் கேட்டிருந்தால் மன்னியுங்கள் உடன்பிறப்பே//

நீங்கல் குறிப்பிட்
ட //.....கண்ணியமான, அதே நேரத்தில் உடுப்பதற்கு எளிமையான உடை அவசியம் என்று சொல்லியிருந்தால் போதுமே. உடை விசயத்தில்கூட அல்லாவைச் சம்பந்தப் படுத்துகிறீர்களே..// என்பது தொடர்பாக.

இந்த விடயம் இஸ்லாம் மார்க்கத்தில் (சுமார் 1400 வருடங்களுக்கு முன்னால்) கூறப்பட்டு விட்டது.இஸ்லாம் என்பது மனிதனின் முழு வாழ்க்கைக்குமான வலிகாட்டியாக இருக்கின்றது.(ஆடை அணிவது,உண்பது முதல் வாழ்வின் அனைத்துக்கும். குர்ஆனை எடுத்து வாசித்தால் அறிந்து கொள்வீர்கள்
).இங்கு கட்டுரையாலர் கூறியது இஸ்லாத்தில் உள்ளதையே,

வல்லிசிம்ஹன் said...

அழகாக விளக்கியிருக்கிறீர்கள் ஹுசைனம்மா. புடவையே என்னைப் பல இடங்களில் தடுக்கிவிட்டு இருக்கிறது:(
சௌகரியமான உடைதான். பர்தா.

ஹுஸைனம்மா said...

மதுரை சரவணன் - நன்றிங்க.

அம்பலத்தார் - நன்றிங்க.

பட்டர்-கட்டர்: நன்றிங்க.

ஜலீலாக்கா - ஆமா, நல்லா ஃப்ரீயா வசதியா இருக்கும்.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - நன்றிங்க. //கணவர் மேல் அலர்ஜி என்று ஏதோ சப்ஜெக்ட் என்று முதலில் நினைக்கத் தோன்றியது. கணவரை பர்த்தா என்றும் சொல்வார்களே.//
நல்ல குறும்பு!! :-)))))

பாசமலர் - ஆமா, அங்க கட்டாயம் என்பது தெரியும். ஆனா, ரியாத் தமிழ்ச்சங்க விழா
படங்கள் பார்த்தப்போ, அதில் பெண்கள் பர்தா அணியாமலும் இருக்கிறார்களே? கட்டடத்தின் உள்ளே (indoor function) என்பதால் அவசியம் இருந்திருக்காது என்று நினைக்கீறேன், இல்லியா?

ராம்விக்கா - நன்றி.

ஹுஸைனம்மா said...

கீதமஞ்சரி - ஆமாங்க, எல்லாருக்குமே நல்ல உடை அவசியம்.
//அடுத்தவர் கலாச்சாரத்தை இழித்துப் பேசி//
தவறான போக்கு. நமக்குப் பிடிப்பதை, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாத வகையில் செய்துகொள்ள வேண்டியதுதான்.

ஷர்ஃபுதீன் - அந்தக் காலம், இந்தக் காலம் என்றில்லாமல், சேலை அல்லது சுடிதார் போன்ற சாதாரண உடைகள் அணிவதில்கூட ஒரு common womanக்கும், நடிகைக்கும் வேறுபாடுகள் உண்டு.

//இன்று அந்த உடை அணிந்து வரும் நடிகைகள் டீசென்ட் டிரஸ் அணிபவராக கருதப்படுகிறது!//
காலம் அப்படியிருக்கு!! :-))))))

ஹுஸைனம்மா said...

பலேனோ - //பர்தா உங்கள் மத கடமை//
எந்த மதமும், கலாச்சாரமும் அடிப்படையில் உடல் தெரியும்படியான உடைகள் அணியச் சொல்வதில்லை என்பதே என் புரிதல்.

//கட்டாயப்படுத்தும் போது phobia வாக மாறிவிடுகிறது//
எடுத்துச் சொல்லிப் புரியவைத்தலே சரியான வழி.

கருத்துக்கு நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

கபிலன் - //நைட்டி, சுடிதார், சேலை போல பர்தாவும் கண்ணியமான உடை தான்//
ஆமாம், சரியான விதத்தில் அணிந்தால் எல்லாமே கண்ணியமான உடைதான்!! கருத்துக்கு நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

முகுந்த் அம்மா - இந்தப் பதிவில் நான் சொல்லியிருப்பது புர்காதான் அணியவேண்டும் என்பதல்ல. வெளியிடங்களில் முழு உடலை மறைக்கவும், என் வேலைகளைச் செய்யவும் எனக்கு புர்கா வசதியாயிருக்கிறது, அணிகிறேன். அதேபோல யாருக்கு எது வசதியோ அதை அணியலாம்.

//not become an easy target of racism//
நிச்சயமாக, நம் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே. அதற்கேற்றவாறும், அதே சமயம் நமது கொள்கையையும் விட்டுவிடாதவாறு உடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அவரவர் நம்பிக்கைகள், புரிதல் பொறுத்தது இது. உதாரணமாக, இந்திய சைவர்களில், உலகில் எங்கு சென்றாலும் சைவம் மட்டுமே உண்ணுபவர்களும் இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்தாலும்கூட சிலர் அசைவம் உண்பார்கள். அதுபோலத்தான் ஆடையும்.

மேலும், பர்தா/முழு ஆடை அணிய வேண்டும் என்பது islamic requirement. Not a nation-based policy. துருக்கி & ஜோர்டான் இரண்டுமே முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் வாழும் நாடு என்பதால், அவை secular (or pro-secular) states. அதனால் பர்தா அங்கு கட்டாயமல்ல. ஏன், இஸ்லாமிய நாடான அமீரகத்திலும்கூட சட்டப்படி பர்தா கட்டாயமல்ல.

நல்லவிதமாக என் பதிவினைப் புரிந்துகொண்டதற்கு மிகவும் நன்றி முகுந்த் அம்மா.

ஹுஸைனம்மா said...

பரமசிவம் ஐயா - ஐயா, என் பதிவின் நோக்கம் //கண்ணியமான, அதே நேரத்தில் உடுப்பதற்கு எளிமையான உடை அவசியம்// என்பதுதான்.
பர்தாவைச் சிலாகிக்கவில்லை. ஆனால், வசதியாக இருக்கீறதால் பர்தா அணிகிறேன் என்பதற்காகப் பழிக்கப்படுகிறேனே என்ற ஆதங்கப் பதிவும்கூட.

ஐயா, உடை மட்டுமல்ல, உணவு, உறைவிடம், உறவுகள், உய்யுதல், உள்ளக்கட்டுப்பாடு உட்பட வாழ்வியல் நெறிகள் எல்லாவற்றிற்கும் இஸ்லாம் ஒரு வழிகாட்டி. இதுவே இஸ்லாமின் தனித்துவமும் கூட.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.

ஹுஸைனம்மா said...

cc - நன்றிங்க, உங்கள் கருத்துக்கும், ஆதரவுக்கும்.

வல்லிமா - புடவை அணியும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் நடக்கணும். நன்றிமா கருத்துக்கு.

NKS.ஹாஜா மைதீன் said...

#தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளிகளில், பட்டிதொட்டிகள் இருப்பவை உட்பட அநேகமாக எல்லாவற்றிலும் சீருடையாகப்பட்டிருக்கின்றதே சுடிதார், அதென்ன சங்ககாலப் பெண்கள் போட்டிருந்த உடையா? #

சபாஷ் சரியான கேள்வி...

கிளியனூர் இஸ்மத் said...

தெளிவான பதிவு... அமீரகப்பதிவர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து தொடர்ந்து பதிவு எழுதிவரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

((நான் யூ டியூப் லிங்க் எதுக்கு குடுத்தேன் என்றால் .... ))

ஒருவர் இங்கே மெல்லியதாக ஒரு ஸாரி வாங்கினார் ..கேட்டேன் ஒரு ஹிந்தி சினிமாவில் ஐஸ்வர்யா ராய் போட்டமாடலாம் . கொடுமை...

இந்த பதிவுக்கு இது பொருத்தமாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் கணவரே இதுப்போல செய்கைக்கு துனை போகிறார்கள் .

ராஜ நடராஜன் said...

இந்த பதிவு பெண்கள் கருத்து பரிமாறல் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தாலும் யாரும் ஒரு கருத்தை முன் வைக்காத காரணத்தால் இந்த பின்னூட்டம்.

உடை,உணவு போன்றவை மண்,தட்ப வெட்ப நிலை சார்ந்த ஒன்று.பின் அதுவே காலப்போக்கில் கலாச்சாரமாக மாறி விடுகிறது.

இந்தியாவின் வெயிலின் சூட்டுக்கும்,வளைகுடா வெயிலின் சூட்டிற்கும் வித்தியாசமிருக்கிறது.இந்திய வெயில் வேர்வையை உருவாக்குவதாகவும்,வளைகுடா வெயில் வேர்க்கும் வேர்வையை உறிஞ்சி விடக்கூடிய தன்மை கொண்டது.எனவே நீண்ட அங்கி முறை உஷ்ணக்காற்று உடலுக்குள் ஊடுறவக்கூடாது என்ற அனுபவ ரீதியில் வளைகுடா நாடுகளுக்கு உருவானது.இந்தியா பல கால தட்ப வெட்ப நிலை கொண்டதும் உழைக்கும் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

Wearing sari gives a mejestic look,sex appeal,difficulties,time consuming,innocence,comfort,carefree and tradition.It depends on how you handle the attire.

பர்தா உடுத்த எளிமையானது என்ற போதில் சேலைக்கு மாற்றாக சல்வார் கமீஸ் மாற்றாக வந்தது போல் அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும்.மாற்றாக பர்தாவுக்குள் ஆணின் திமிர்த்தனமும்,மத அடக்கு முறையும் ஒளிந்து கொண்டிருக்கும் காரணம் பொருட்டே இது பரவலாக வில்லையென நினைக்கின்றேன்.

பிரியாணியை சுவிகரித்துக்கொண்ட இந்திய மக்கள் பர்தாவை தூக்கியெறிந்ததன் பின்புல மனோதத்துவம் இதுவாக இருக்கலாம்.

லுங்கி கட்டிகிட்டு வழியில் போனாலும் கூட மகாராஜா மாதிரிதான் உடுத்துபவனுக்கு தோன்றும்.ஆனால் அதன் பின் வர்க்க ரீதியான உணர்வு தொக்கி நிற்கிறது.அது போலவே பர்தாவும்.

ஊரான் said...

ஆணோ பெண்ணோ ஒருவருடைய உடை அவர் செய்கின்ற தொழிலுக்கு ஏற்றதாக வசதியாக இருக்க வேண்டும். எல்லா தொழிலுக்கும் ஒரே மாதிரியான உடை பொருந்தாது. மேலும் உடை என்பது அப்போதைய உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளோடு தொடர்புடையது. உற்பத்தி முறைகளும் உற்பத்தி உறவுகளும் மாறும் போது உடையும் மாறித்தான் ஆக வேண்டும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியின் தட்ப வெட்ப நிலைகளும் ஆடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.

இதற்கும் அப்பால் உடையில் ஆபாசத்தைத் தேடுபவர்கள் அளவில்தான் மாறுபடுகிறார்களேயொழிய தன்மையில் ஒரேமாதிரிதான் சிந்திக்கிறார்கள். மேலும் ஒரு உடை ஆபாசமானதா இல்லையா என்பதை தீர்மானிக்கிற அதிகாரத்தை ஆண்கள் எடுத்துக் கொள்வது ஆணாதிக்கத்தின் நீட்சிதானேயொழிய பெண்கள் மீதான அக்கறையினால் அல்ல. ஆடை விசயத்தில் தன்வீட்டுப் பெண்கள் கட்டுப் பெட்டியாக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு போடுகின்ற அதே ஆண்கள்தான் பிற பெண்களின் ஆடையினூடே எக்ஸ்ரே எடுக்கிறார்கள்.

பெண்களின் உடையைத் தீர்மானிக்கிற உரிமை பெண்களுக்குத்தான் உண்டேயோழிய அதில் ஆண்கள் தலையிட உரிமை கிடையாது. அப்படி அவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் பர்தாவிலும் ஆபாசத்தைத்தான் காண்பார்கள்.

அதேபோல ஆடை விசயத்தில் சாதி- மத ரீதியான கண்ணோட்டங்களும், ஒரு குறிப்பிட்ட உடையை கட்டாயப் படுத்துவதும் ஆதிக்கம் மற்றும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளே!

ஹுஸைனம்மா said...

திரு. ராஜ நடராஜன் -
என் பதிவை நீங்கள் சரியாக வாசிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. எந்த நாட்டில் தோன்றியதாக இருந்தாலும், ஒரு உடை மக்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே அது நிலைக்கும். அந்த வகையில் சுடிதார், ஜீன்ஸ், பர்தா ஆகியவை சேரும்.

இந்தியச் சூட்டிற்கு ஒத்துக் கொள்ளாது என்றால், முதலில் தடைசெய்ய வேண்டியது ஜீன்ஸைத்தான். நம் தட்பவெப்பத்திற்கேற்றவாறு வேட்டிதான் ஆண்கள் அணிய வேண்டிய உடை. மருத்துவர்களே ஜீன்ஸ் நல்லதல்ல என்று சொல்கிறார்கள்.

//Wearing sari gives a mejestic look,sex appeal,difficulties,time consuming,innocence,comfort,carefree and tradition.//

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. சேலை உடுத்துவதால் கிடைக்கும் வசதிகளாக நீங்கள் குறிப்பிட்டிருப்பவை, அதை அணியும் பெண்கள் சொன்னார்களா?

//பர்தாவுக்குள் ஆணின் திமிர்த்தனமும்,மத அடக்கு முறையும் ஒளிந்து கொண்டிருக்கும் காரணம் பொருட்டே//
பர்தாவை அது தரும் வசதி கருதி அணிவது பெண். அதில் ஆணின் திமிர்த்தனம் ஒளிந்துகொள்வதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

எனில், இந்தியப் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்பதற்கான காரணமாக நீங்கள் குறிப்பிடுவனற்றில் ஒன்றான //sex appeal// - இது யாரின் திமிர்த்தனத்தைக் குறிக்கிறது ஐயா?

//இந்திய மக்கள் பர்தாவை தூக்கியெறிந்ததன் பின்புல மனோதத்துவம் இதுவாக இருக்கலாம்.//
பதிவை மறுபடியும் நிதானமாக வாசியுங்கள் ஐயா. பர்தா ஏன் பிரபலமாகி வருகீறது என்பதையும், உடல் மறைக்கும் ஆடைகளின் அவசியம் குறித்தும்தான் இந்தப் பதிவு பேசுகிறது.

//அதன் பின் வர்க்க ரீதியான உணர்வு தொக்கி நிற்கிறது//
ஆமாம், முஸ்லிம்களுக்கான உடையாகவே அதை அனைவரும் பார்க்கின்றனர்.

நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

ஹுஸைனம்மா said...

திரு. ஊரான் - பர்தாதான் எத்தொழில் செய்வோருக்கும் பொருந்தும் உடையென நானும் சொல்லவில்லையே? என் கருத்து உடல் மறைக்கும் உடைதான் அவசியமென்பதே.

//ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியின் தட்ப வெட்ப நிலைகளும் ஆடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. //
எனில், முந்தைய கமெண்டில் சொன்னதுபோல, முதலில் தடை செய்ய வேண்டியது ஜீன்ஸைத்தான்.

பர்தா அணிந்தால் கட்டுப்பெட்டியென்று நீங்களே எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? முழுதும் மூடுபவர்கள் கட்டுப்பெட்டிகள் என்றால், எவ்வளவுக்கு உடல் தெரியும்படி பெண்கள் உடை அணிந்தால் ”புத்திசாலிகள்” என்று ஆணாகிய நீங்கள் சொல்வீர்கள்?

ஆண்கள்தான் பர்தா அணியச்சொல்லிக் கட்டாயப்படுத்துறாங்கன்னு சொல்லிகிட்டே ஆண்களாகிய நீங்களே “அணியக்கூடாது” என்கிற கருத்தைத் திணிக்க முயல்கிறீர்கள். என் நலனில் எந்த அக்கறையும் கொண்டிருக்க முடியாத யாரோ ஒருவரான நீங்கள் சொல்வதைக் கேட்டுப் பர்தாவை உதறுவது தவறில்லை; ஆனால், என் நலனில் அக்கறை கொண்ட என் குடும்பத்து உறுப்பினர்கள் - ஆணோ, பெண்ணோ - சொல்வதை நான் ஏற்றுக்கொண்டால் அது ஆதிக்கம், அடிமைத்தனம்!! நல்ல நியாயம்!!

//ஆடை விசயத்தில் சாதி- மத ரீதியான கண்ணோட்டங்களும், ஒரு குறிப்பிட்ட உடையை கட்டாயப் படுத்துவதும் ஆதிக்கம் மற்றும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளே//

அதைத்தான் நானும் சொல்கிறேன். முழு உடல் மறைக்கும் உடை/பர்தா என்பதாலேயே அதை எதிர்க்கும் உங்களைப் போன்றவர்களின் சாதி- மத ரீதியான கண்ணோட்டங்களும், அதை அணியக்கூடாது என்கிற கட்டாயப்படுத்துதலும்கூட ஆதிக்கம் மற்றும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளே!!

நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

அப்பாதுரை said...

விவரம் நிறைந்தக் கட்டுரை. நன்று.
பர்தாவோ புர்காவோ எதை அணிந்தாலும் நமது விருப்பத்துக்காக அணிய வேண்டுமே தவிர, அடுத்தவரிடமிருந்து பாதுகாப்பு என்ற காரணத்துக்காக அணிவது என்பது பிற்போக்கான காரணம் என்று நினைக்கிறேன். 'என் மீது நம்பிக்கை இருக்கிறது, அடுத்தவர் மீது நம்பிக்கை இல்லை' - இது உண்மையானால் எதற்காக எதையுமே அணிய வேண்டும்? பர்காவோ ஸ்விம் சூட்டோ எதை அணிந்தாலும் அடுத்தவர் கண்ணை உண்மையிலேயே மூட முடியுமா? சிகரெட் உதாரணமும் பர்தாவுக்குப் பொருந்தவில்லை என்று நினைக்கிறேன் :)

அப்பாதுரை said...

முழு உடை பிற்போக்கு என்ற கருத்து நிலவுகிறதா என்ன? உடையின் 'முழுமை' அவரவர் வசதி, விருப்பம், தேவைக்கேற்ப அமைந்திருப்பது இன்று நேற்றல்ல - காலங்காலமாகவே. மறுபடியும் உங்கள் கட்டுரையைப் படித்து ரசித்தேன். நிறைய விவரங்கள். சுடிதார் முகமதிய உடையலங்கார influence என்பது உண்மையென்றே நினைக்கிறேன். பர்தாவுக்கு இத்தனை பொருளா? இருந்தாலும் சங்க கால உடையலங்காரத்தை வம்புக்கு இழுக்குறீங்களே? :) சங்க காலத்துல எபப்டி உடையணிஞ்சாங்கன்னு யாருக்குத் தெரியும்.. ஒன்றிரண்டு சங்க நூல்கள் (அதுவும் புரிஞ்சாத்தான் :) இதைப் பத்தி சொல்லியிருந்தாலும் விவரங்கள் அதிகம் இல்லை. ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியைத் தொட்டிருக்கீங்கனு தோணுது. நானறிந்த தமிழ் இலக்கிய நூல்களிலோ, வடமொழி நூல்களிலோ ஆண்களின் உடைகள் பற்றி படித்த அளவுக்கு பெண்களின் உடைகள் பற்றி படித்த நினைவில்லை. பெண்களைப் பற்றி எழுதியதெல்லாம் நகை பொன் என்ற அளவிலேயே இருப்பதாக நினைவு.

அப்பாதுரை said...

கண்ணியம் உடையில் வருவதல்ல என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

VANJOOR அவர்களின் பின்னூட்டங்களை ரசித்துப் படித்தேன்.

just curious.. ஆண்களுக்கு உடை பற்றிய நியமங்கள் இஸ்லாத்தில் உண்டா?

'இப்படி வாழவேண்டும்' என்று மதம் சொல்கிறது என்றாலே எனக்கு நடுக்கம் தான் :)

சம்பத்குமார் said...

வணக்கம் சகோ ! இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகையை அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்
நன்றி
சம்பத்குமார்
மனம் கவர்ந்த பதிவுகள்

மும்தாஜ் said...

உண்மை சகோதரி...
புர்கா -இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு ஒரு கவசமாக வே உள்ளது என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை....
பதிவிற்கு நன்றி

ஹுஸைனம்மா said...

அப்பாதுரை சார் -

//எதை அணிந்தாலும் அடுத்தவர் கண்ணை உண்மையிலேயே மூட முடியுமா?//
பிறரின் அகக்கண்ணை எதைக் கொண்டும் மூடமுடியாது.

//அடுத்தவரிடமிருந்து பாதுகாப்பு என்ற காரணத்துக்காக அணிவது என்பது பிற்போக்கான காரணம்//
இந்தப் பதிவில் நான் லிங்க் கொடுத்திருக்கும் http://www.erodekathir.com/2010/01/blog-post_12.html என்ற பதிவைப் படித்துப் பாருங்கள்.

//முழு உடை பிற்போக்கு என்ற கருத்து நிலவுகிறதா என்ன?//
ஆமாங்க. பர்தா அணிவது கட்டுப்பெட்டித்தனம்; பர்தா அணிபவர்கள் பிற்போக்கானவர்கள் என்ற எண்ணம் நிலவுவது உண்மையே. பர்தா அணிந்தவர்களோடு (அலுவலகம், அண்டை வீடு, கல்லூரி, புத்தகங்கள்) பழகத் தொடங்கிய பின்னர் சிலர் இக்கருத்தை மாற்றிக் கொள்கின்றனர்.

//சுடிதார் முகமதிய உடையலங்கார influence என்பது உண்மையென்றே நினைக்கிறேன். //
அதாவது, சுடிதார் முகலாயர் காலத்து உடை என்று சொல்கிறீர்களோ? இருக்கலாம், பண்டைய முகலாயச் சித்திரங்களில் ஆண், பெண் இருபாலருமே இந்த உடைகளில்தான் காணப்படுகின்றனர் - எனக்குத் தெரிந்து.

சங்க கால உடை எதுவென்று எனக்கும் தெரியாது, உங்களைப் போலவே. பள்ளியில் செய்யுள்களில் இலக்கியம் படித்ததோடு சரி. ஆனால், அந்நியக் கலாச்சரம் தமிழகத்தில் திணிக்கப்படுகிறது என்ற வாதத்தை மறுக்கவே அப்படியொரு கேள்வி எழுப்பவேண்டியிருந்தது.

//கண்ணியம் உடையில் வருவதல்ல//
ஒரு மனிதரின் கண்ணியம் உடையினால் மட்டுமே வருவதல்ல என்று சொல்லலாம். உடையோடு, செயல், எண்ணம் எல்லாம் சேர்ந்துதான் ஒருவரை கண்ணியமானவர் என்று தீர்மானிக்கும். ஆனால், உடைக்கென்று இருக்கும் கண்ணியம் என்பதைத்தான் “கண்ணியமான உடை” என நான் சொல்வது.

//ஆண்களுக்கு உடை பற்றிய நியமங்கள்//
என் பதிவின் இறுதிப்பகுதியில் சொல்லியிருக்கிறேனே. இதற்கும் அதே ‘கண்ணியம்’தான் அளவுகோல்.

//'இப்படி வாழவேண்டும்' என்று மதம் சொல்கிறது என்றாலே எனக்கு நடுக்கம் தான்//
ஒவ்வொரு நாட்டிற்கென சட்டதிட்டங்களும் உண்டு; அந்த நாடுகளில் வாழும்போது அதை எதிர்க்கிறோமா?

“மதம் சொல்கிறது” என்று கேள்விப்படுவதைவிட, நீங்களே இஸ்லாமை வாசியுங்கள்.

விரிவான கருத்துகளுக்கு நன்றி சார்.

ஹுஸைனம்மா said...

சம்பத்குமார் - மிகவும் நன்றி. மகிழ்ச்சி.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வுங்க. நீங்க அழகா சொல்லியிருக்கீங்க...

எந்த உடையானாலும் அதை முழுதாக, ஒழுங்காக அணிந்தாலே பெரிய விஷயம் என்றாகி விட்டது.

baleno said...

அப்பாதுரை said... சிகரெட் உதாரணமும் பர்தாவுக்குப் பொருந்தவில்லை என்று நினைக்கிறேன்

மிகவும் ஆபத்தான நோய்களை மிக விரைவாக கொண்டுவந்து சேர்க்கும் சிகரெட் பிடிப்பதை தடுப்பதை பர்தாவுடன் ஒப்பிடுவது பொருத்தம் அற்றது. பதிவர் அவர்கள் தீவிரமான மத நம்பிக்க காரணமாக அப்படி சொல்கிறார் என்று நினைத்தேன். மதுரை சரவணன் சார் வந்து சிகரெட் - பர்தா உதாரணத்தை அருமை என்று கூறியது தான் மிக வேடிக்கையாக இருந்தது.

ஊரான் said...

திருமதி ஹீஸைனம்மா:

எனது பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டது இதுதான்:

"உடை என்பது அப்போதைய உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளோடு தொடர்புடையது. உற்பத்தி முறைகளும் உற்பத்தி உறவுகளும் மாறும் போது உடையும் மாறித்தான் ஆக வேண்டும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியின் தட்ப வெட்ப நிலைகளும் ஆடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன."

இந்த இரண்டு அம்சங்களே உடையை தீர்மானிப்பதில் பிரதான பங்காற்றுகின்றன.

இஸ்லாத்திற்கு முன் அரேபியச் சமூகத்தில் வாழ்ந்த நாடோடிகளான பதூயின் இன மக்கள் கடினமான பாலைவன நிலைமைகளுக்கு ஏற்ப ‘தவூத்’ என்ற நீண்ட ஆடையையும், இடுப்பில் அரைப்பட்டையும், மேலே நீண்டு தொங்கும் ‘அபா’ என்ற மேலாடையும் அவர்கள் அணிகிறார்கள். தலையை ‘கூஃபிய்யா’ என்ற துண்டினால் மூடி, ‘இகால்’ என்றழைக்கப்படும் கயிற்றால் கட்டிக்கொள்வார்கள். கால்சராய்கள் அணியும் வழக்கம் இல்லை.காலணிகளையும் அரிதாகவே பயன்படுத்துகிறார்கள்.” (இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்- ஒரு சமூக-பொருளாதாரப் பார்வை –அஸ்கர் அலி எஞ்ஜினியர்).

கடினமான பாலைவன நிலைமைகளுக்கு ஏற்பவே அவர்களது உடை அமைந்திருந்தது. அதைத் தவறு என்று எந்த முட்டாளும் கூறமாட்டான். பாலைவன நிலைமைகளுக்கு அதுதான் ஏற்ற உடை. அதையே உலகம் முழுக்க ஏற்ற எடை என வலியுறுத்த முடியுமா?

கடுங்குளிர் பிரதேசங்களில் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் உடலை முழமையாக மறைத்துத்தான் ஆகவேண்டும். கைகளில் மணிக்கட்டுக்குக் கீழேயும் கையுறை அணிய வேண்டும். கண்களைத் தவிர முகத்தையும் முழுமையாக மூடவேண்டும். மதம்-மொழி-இனம் எதுவாக இருந்தாலும் இதுதானே குளிர்பிரதேச மக்களுக்கு ஏற்ற உடை.

உடையை தீர்மானிப்பதற்கான வரலாற்று ரீதியானதும் (உற்பத்தி முறை- உற்பத்தி உறவுகள்) தட்ப வெட்ப நிலைமைகளுக்குமானதுமான காரணங்களை இப்படித்தான் பரிசீலிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

ஆண்கள் மத்தியில் நிலவும் பெண்கள் மீதான பாலியல் ரீதியான பார்வையிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அதற்கான உடையை தீர்மானிக்கவும் நடைமுறைப்படுத்தவுமான முழு உரிமை பெண்களுக்கு மட்டும்தான் உண்டு என்றுதான் நான் கூற விரும்புகிறேன். அது பர்தாவாகவோ அல்லது வேறு எந்த வடிவமாகவோ இருக்கலாம். அதை பெண்களே தீர்மானிக்கட்டும் என்பதே எனது கருத்து. எது ஆபாசம் எது ஆபாசமில்லை என்பதை ஒரு ஆண் தீர்மானிப்பது எப்படி சரியாக இருக்கும் என்கிற கேள்வியைத்தான் நான் மீண்டும் எழுப்புகிறேன்.

பர்தா பற்றி நான் சரி என்றோ தவறு என்றோ குறிப்பிடாத போது “பர்தா அணிந்தால் கட்டுப் பெட்டி“ என்றும் “பர்தா அணியக்கூடாது“ என்றும் என நான் தீர்மானித்ததாகவும் சில முன் முடிவுகளோடு (prejudice) பதில் அளித்துள்ளீர்கள்.

அது மட்டுமல்லாமல்

”என் நலனில் எந்த அக்கறையும் கொண்டிருக்க முடியாத யாரோ ஒருவரான நீங்கள் சொல்வதைக் கேட்டுப் பர்தாவை உதறுவது தவறில்லை; ஆனால், என் நலனில் அக்கறை கொண்ட என் குடும்பத்து உறுப்பினர்கள் - ஆணோ, பெண்ணோ - சொல்வதை நான் ஏற்றுக்கொண்டால் அது ஆதிக்கம், அடிமைத்தனம்!! நல்ல நியாயம்!!”

இவ்வாறு ஒரு கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

நீங்கள் பர்தாவை உதர வேண்டும் என நான் சொன்னதாக நீங்களே மற்றுமொரு முன்முடிவை எடுத்துள்ளீர்கள். அதுவும் 'யாரோ ஒருவரான நீங்கள் சொல்வதைக் கேட்டு' என விளித்துள்ளீர்கள். இதன் பொருள் என்னவோ!

நீங்கள் எழுதும் கட்டுரைகள் உங்கள் வீட்டு ஆண்களுக்கு மட்டுமல்ல- வலைதளத்தில் வந்துவிட்ட பிறகு இந்த உலகில் உள்ள அனைவருக்கும்தான். அப்படி இருக்கும் போது உங்கள் கட்டுரையின் மீது கருத்துச் சொல்ல உரிமை உண்டுதானே? கருத்து சரி என்றால் ஏற்றுக் கொள்வதும் சரி இல்லை என்றால் நிராகரிப்பதும் அவரவர் உரிமை. அப்படி இருக்க 'யாரோ' என விளிப்பது சரிதானா என வாசகர்களே முடிவு செய்யட்டும்.

பதில் அளித்தமைக்கு நன்றி!

நூறு பூக்கள் மலரட்டும்!

வாழ்த்துகள்!

SUMAZLA/சுமஜ்லா said...

அருமையான பதிவு. கடைசி வரிகள் நச்!!!

ஹுஸைனம்மா said...

திரு. ஊரான்:

உடைகள் தோற்றம் குறித்து நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். நான் மறுக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் உடை, உணவு, கலாச்சாரம் என்று எல்லாமே ஒரு இடத்துக்கானதாக மட்டும் இல்லாமல், பல இடங்களுக்கும் பரவுகின்றன. அவை மக்களின் விருப்பத்தை, வசதியைப் பொறுத்து நிலைத்து நிற்கின்றன அல்லது வழக்கொழிகின்றன. அதற்கான உதாரணம் நான் பதிவிலேயே சொன்னது போல, சுடிதாரும் ஒன்று, ஆண்கள் அணியும் பேண்ட்-ஷர்ட்-டை ஆகியவையும்தான்.

மேலும், இன்று பெருகிவரும் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு மருத்துவர்கள், அந்நிய உடையான ஜீன்ஸ் அணிவதும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறுகின்றனர். அதுபோல, எந்த பக்க விளைவுகளையும் பர்தா ஏற்படுத்திவிடவில்லையே எனும்போது ஏன் தவிர்க்க வேண்டும் என்பது என் கேள்வி.

//அதையே உலகம் முழுக்க ஏற்ற எடை என வலியுறுத்த முடியுமா?//
நான் சொல்லவேயில்லையே? விருப்பமுள்ளவர்கள் அணிகிறோம், அவ்வளவுதான். ஆனால், அது அரேபிய உடை அணியாதே என்று எழும் குரல்களைத்தான் ஏனென்று கேட்கிறேன். வசதிப்படாத உடை என்றால் யாரும் தொடர்ந்து அணிந்து வர மாட்டார்களே?

தம் உடை மட்டுமல்ல, கல்வி, வேலை, குடும்பம் என்று தீர்மானிப்பதில் பெண்களுக்கு முழு உரிமை வேண்டும் என்பதிலும் எனக்கு கருத்து வேற்றுமை இல்லை. ஆனால், அதற்காகப் பெண்கள் ஆண்களின் கருத்தை கேட்கவே கூடாதென்ற சிலரின் கருத்துதான் தவறென்கிறேன். ஆணும் பெண்ணும் தனித்தனி தீவல்ல இங்கு. இருவரும் இணைந்தே வாழ்ந்தாக வேண்டும் எனும்போது, தந்தை, சகோதரன், கணவன் என்கிற ஆண்களின் ஆலோசனையை - அது என்பால் கொண்ட அன்பினால், நிச்சயம் நல்லதாகத்தான் இருக்கும் எனும்போது -ஏற்பதில் தவறில்லையே? பல பொழுதுகளில் என் ஆலோசனையும் அவர்களால் ஏற்கப்படுகின்றனவே.

//எது ஆபாசம் எது ஆபாசமில்லை என்பதை ஒரு ஆண் தீர்மானிப்பது எப்படி சரியாக இருக்கும்//
ஒரு ஆணின் பார்வை எப்படி இருக்கும் என்பதை சக ஆண்தான் அறிவான். பாம்பின்கால் பாம்பறியும் என்பதைப் போல...

//“பர்தா அணிந்தால் கட்டுப் பெட்டி“ //
”ஆடை விசயத்தில் தன்வீட்டுப் பெண்கள் கட்டுப் பெட்டியாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் சொல்லியிருப்பது இந்த அர்த்தம் தந்ததால்தான் அப்படி எழுத நேர்ந்தது.

//நீங்கள் பர்தாவை உதர வேண்டும் என நான் சொன்னதாக நீங்களே மற்றுமொரு முன்முடிவை எடுத்துள்ளீர்கள். அதுவும் 'யாரோ ஒருவரான நீங்கள் சொல்வதைக் கேட்டு' என விளித்துள்ளீர்கள்//

மன்னியுங்கள். இங்கே உங்களை அவமதிக்கும் எண்ணத்தில் அப்படிச் சொல்லவில்லை. இங்கே என் பதிவு, என் எண்ணங்களை மட்டுமல்லாமல், பர்தா அணியும் பலரின் கருத்துக்களையுமே பிரதிபலிப்பதுபோலவே, உங்கள் கருத்தையும், மொத்த பர்தா எதிர்ப்பாளர்களின் கருத்தாக எடுத்துக் கொண்டேன். எனும்பட்சத்தில், ’என் சூழ்நிலை குறித்து எதுவுமே அறிந்திராத ஒருவர் கூறும் அறிவுரைகளை நான் எப்படி ஏற்பது? அதுவும் என் நலன் குறித்து அக்கறை கிஞ்சித்தேனும் இருக்கக் கூடிய என் உறவுகள் சொல்லுவதை நான் தவிர்க்க வேண்டும் என்று சொல்லுபவர்களின் அறிவுரையை நான் எப்படி ஏற்பது’ என்ற எண்ணத்தில் எழுந்த ஆதங்கமே அது.

தனிப்பட்ட தாக்குதலாகத் தோன்றியமைக்கு வருந்துகிறேன். என் கருத்து, நாம் இருக்கும் உலகில் எல்லாருமே நல்லவர்களுமில்லை; தீயவர்களுமில்லை. நீங்கள் அறிந்து சொன்னதுபோல, “பிற பெண்களின் ஆடையினூடே எக்ஸ்ரே எடுக்கும்” சிலரிடமிருந்தேனும் பாதுகாத்துக் கொள்ள பர்தா அல்லது பர்தா முறையிலான முழு ஆடை எனக்கு உதவும் என்பதால் அதை விரும்பியே அணிகிறேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் கருத்துகளை மீண்டும் பகிர்ந்துகொண்டமைக்கு மிக நன்றிகள்.

ஹுஸைனம்மா said...

//baleno said...
மிகவும் ஆபத்தான நோய்களை மிக விரைவாக கொண்டுவந்து சேர்க்கும் சிகரெட் பிடிப்பதை தடுப்பதை பர்தாவுடன் ஒப்பிடுவது பொருத்தம் அற்றது.//

ஐயா, சிகரெட் உடல்நோய்கள் தரும். சில பாதிப்புகள் மனநோய் தரும். “குட் டச், பேட் டச்” சொல்லிக் கொடுக்கிறோமே ஏன்? அதுபோல முறையான ஆடையும் கற்பிக்கப் படவேண்டியதுதான். சிறு வயதில், இளம்பருவத்தில் இவ்வகையான பாதிப்புகள் ஏற்பட்டால், அது அப்பெண் குழந்தைகளின் மனதில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்த வலல்து - என்று நான் சொல்லவில்லை, மனநல மருத்துவர்கள் சொல்லியிருக்கீறார்கள்.

khaleel said...

//ஆண்கள்தான் பர்தா அணியச்சொல்லிக் கட்டாயப்படுத்துறாங்கன்னு சொல்லிகிட்டே ஆண்களாகிய நீங்களே “அணியக்கூடாது” என்கிற கருத்தைத் திணிக்க முயல்கிறீர்கள். என் நலனில் எந்த அக்கறையும் கொண்டிருக்க முடியாத யாரோ ஒருவரான நீங்கள் சொல்வதைக் கேட்டுப் பர்தாவை உதறுவது தவறில்லை; ஆனால், என் நலனில் அக்கறை கொண்ட என் குடும்பத்து உறுப்பினர்கள் - ஆணோ, பெண்ணோ - சொல்வதை நான் ஏற்றுக்கொண்டால் அது ஆதிக்கம், அடிமைத்தனம்!! நல்ல நியாயம்!!//


சம்மட்டியால் அடித்தார் போல இருக்கிறது உங்க reply. அவருக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன். உங்களுடைய பதிவும் அருமை. நீங்கள் குடுக்கும் விளக்கங்களும் அருமை.

Bucker said...

//ஆணோ, பெண்ணோ - சொல்வதை நான் ஏற்றுக்கொண்டால் அது ஆதிக்கம், அடிமைத்தனம்!! நல்ல நியாயம்!!//

ஹூசைனம்மா! உங்கள் வீட்டு ஆண்களுக்கு அவர்களுக்கு ஏற்ற உடை என்று உங்களது கருத்தைச் சொல்லிப் பாருங்களேன்.

ஹுஸைனம்மா said...

Bucker said...
ஹூசைனம்மா! உங்கள் வீட்டு ஆண்களுக்கு அவர்களுக்கு ஏற்ற உடை என்று உங்களது கருத்தைச் சொல்லிப் பாருங்களேன்.

@ Bucker
நீங்க என் பதிவை முழுமையாகப் படித்தீர்களா?

“எனவேதான் என் மகன்களுக்கும் கையில்லா சட்டைகளோ, அரை/முக்கால்/காலேஅரைக்கால் கால்சட்டைகளோ அணிவிப்பதில்லை. ஏன் என் கணவர், தந்தை, கஸின்ஸ் உட்பட என் குடும்பத்து ஆண்கள் யாரும் இவ்வாறு அணிவதில்லை.”

என்கிற வரிகளை கவனிக்கவில்லையா? :-)))))

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மிகவும் அருமையான பதிவு; மிகப் பொருத்தமான தலைப்பு.

கருத்துகளை வெளிப்படுத்துவதில் / முன்வைப்பதில் இயல்பான, எளிமையான போக்கை நேர்த்தியாகக் கடைப்பிடிப்பதற்கு வாழ்த்துகள்!

தங்களின் இந்தப் பதிவு சத்தியமார்க்கம்.காம் தளத்தில் மீள் பதிவிடப்பட்டுள்ளது.

Vijayan Durai said...

அக்கா எனக்கு பர்தா சம்பந்தமாக சில சந்தேகங்கள்,கட்டாயம் பதில் எதிர்பார்க்கிறேன்.
பர்தா உடை கருப்பு நிறத்தில் இருக்கிறது,கருப்பு நிறத்திற்கு வெப்பத்தை கிரகிக்கும் திறன் அதிகம்,வெப்ப நாடுகளில் இது போன்ற கருப்பு உடையை உடல் முழுக்க மூடிக்கொள்வது inconvenient ஆக இருக்காதா??
தன் உடலை முழுமையாக மறைக்கத்தான் பர்தாவை அணிகிறார்கள் என்கிறீர்கள்,ஏன் அவர்கள் சேலை,சுடிதார் போன்ற உடைகளை அணிந்து விட்டு பிறகு பர்தாவை கொண்டு அதை மூடி மறைக்க வேண்டும்.
தயவு செய்து பதில் தரவும்.

ஹுஸைனம்மா said...

விஜயன், கருத்துக்கும், கேள்விகளுக்கும் மிக்க நன்றி.

1. பர்தா உடை கருப்பு நிறத்தில் இருக்கிறது,கருப்பு நிறத்திற்கு வெப்பத்தை கிரகிக்கும் திறன் அதிகம்,வெப்ப நாடுகளில் இது போன்ற கருப்பு உடையை உடல் முழுக்க மூடிக்கொள்வது inconvenient ஆக இருக்காதா??

பர்தாவைக் கறுப்பு நிறத்தில்தான் அணியவேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. எந்த நிறத்தில் வேண்டுமானாலும் அணியலாம். நான் பர்தா அணியத் தொடங்கிய காலத்தில், தமிழகத்தில் பர்தாக்கள் எல்லா நிறத்திலும் அணியப்பட்டுவந்தன. இருந்தாலும் கருப்பு நிறத்தைமட்டுமே அணிவது என்று முடிவெடுத்தேன். காரணம்: ஒன்று, பல்வேறு நிறங்களில் அணிவதைவிட கறுப்புதான் “மெஜஸ்டிக்”ஆகத் தெரிந்தது எனக்கு. (இன்று பலரும் ப்ளெயின் கறுப்பு உடைகள் அணிவதைப் பார்க்கலாம்) ரெண்டாவது, பல நிறங்களில் பர்தா அணியத் துவங்கினால், எல்லா நிறத்திலும் பர்தா வாங்கவேண்டிவர்லாம். (ஆசைக்காக அல்லது உடைக்கு மேட்சிங் போன்ற காரணத்தினால்!!)

கருப்பு நிறத்தில் பர்தா அணிந்தால் transparent-ஆக இருக்காது என்பதும் இன்னொரு காரணம் என்பது என் அனுமானம்.

பர்தா ஏன் ஆதிமுதலே கறுப்பு நிறத்தில் மட்டும் இருக்கிறது என்பதற்குச் சொல்லப்படும் இன்னொரு காரணம் வலையில் கண்டெடுத்தேன்:
Many people wondered why the most common colour in Abayas is BLACK? Well, the most probable answer is that black was a color that early women were able to easily create from the resources they had – goats mainly – and so black it was.

கறுப்பு வெப்பத்தை உறியும்தான், ஆனால் எனக்கு அத்தனை கஷ்டமாகத் தெரியுமளவு இல்லை. வெயிலுக்கு எடுத்துப் போகும் குடை ஏன் கறுப்பு நிறத்தில் உள்ளது? :-))))
அதேபோல, வெப்பமாக உணர்வதற்கு உண்மையான காரணம் - எந்த உடையாக இருந்தாலும்- வெயிலுக்கேற்ற மாதிரி பருத்தி கலந்த துணிகளை அணியாமல், கனத்த துணியில் செய்த உடைகளை அணிவதே. பர்தாவும் அப்படித்தான் - சிலர் சாட்டின் துணியில் அணிவார்கள். அது வேர்வையைத் தூண்டும். பருத்தி கலந்த துணியில் செய்த பர்தா அணிந்தால் வேர்க்காது.

பர்தா உடை கருப்பு நிறத்தில் இருக்கிறது,கருப்பு நிறத்திற்கு வெப்பத்தை கிரகிக்கும் திறன் அதிகம்,வெப்ப நாடுகளில் இது போன்ற கருப்பு உடையை உடல் முழுக்க மூடிக்கொள்வது inconvenient ஆக இருக்காதா??
தன் உடலை முழுமையாக மறைக்கத்தான் பர்தாவை அணிகிறார்கள் என்கிறீர்கள்,ஏன் அவர்கள் சேலை,சுடிதார் போன்ற உடைகளை அணிந்து விட்டு பிறகு பர்தாவை கொண்டு அதை மூடி மறைக்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

2. தன் உடலை முழுமையாக மறைக்கத்தான் பர்தாவை அணிகிறார்கள் என்கிறீர்கள்,ஏன் அவர்கள் சேலை,சுடிதார் போன்ற உடைகளை அணிந்து விட்டு பிறகு பர்தாவை கொண்டு அதை மூடி மறைக்க வேண்டும்.

இதற்கானக் காரணத்தை, நான் என் பதிவிலேயே சொல்லியிருக்கேனே? பர்தாவுக்குள் என்ன உடை அணிவது என்பது அவரவர் விருப்பம். சிலர் நைட்டிக்கு மேலேயே பர்தா அணிவார்கள். நெருங்கிய உறவு வீடுகளுக்குச் செல்லும் சிலர், நீண்ட நேரம் தங்க வேண்டி வந்தால், அங்கு பர்தாவைக் கழட்டி வைத்துவிட்டு, பின் கிளம்பும்போது அணிவார்கள். அதற்காக அதனுள் அவர்களுக்குப் பிடித்த ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இது அவரவர் தனிப்பட்ட விருப்பம் தம்பி.

தெளிவாகச் சொல்லிருக்கேன்னு நினைக்கீறேன். ரொம்ப நன்றிங்க.

Vijayan Durai said...

தங்களின் பதிலுக்கு நன்றி அக்கா.தங்களின் விளக்கங்கள் என் சந்தேகத்தை கொஞ்சம் குறைத்திருக்கிறது.

Vijayan Durai said...

பர்தா சம்பந்தமான பதிவு ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.

http://kalvetu.blogspot.in/2011/04/blog-post_11.html

Vijayan Durai said...

பர்தா பற்றிய ஒரு குறும்படம் யூ டியூப் வீடியோ.
http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls&feature=related

ஹுஸைனம்மா said...

விஜயன், சுட்டிக்கு நன்றி. அந்தப் பதிவிலும் என் பதிவின் லிங்கைத் தந்தீர்களா? அந்தப் பதிவருக்கும் உதவும். :-)))

வீடியோ: அந்தப் படத்தின் இசையானது, பெண்களை “கலர்”, “ஃபிகர்” என்று சொல்லிப் பழகிய ஆண்களின் மனதில் இடத்துக்கேற்றபடி ஒலிப்பதான இசையாகவே எனக்குப் படுகிறது. அதாவது ”கலர்களைப்” பார்க்கும்போது உற்சாகமாக இசைக்கும் சிலரின் மனது, பர்தாவைப் பார்க்கும்போது சோகமயமாகிவிடுகிறது!! சரிதானே? :-)))))))))

baleno said...

இன்று தமிழ் இணைய பக்கங்கள் மேய்ந்த போது உங்கள் புகை பிடிக்கும் கொடிய பழக்கத்தை விபரிக்கும் கட்டுரை கண்டேன். பாராட்டுகள்.

சிகரெட் பிடிப்பதை தடுப்பது வேறு,பர்தா அணியும் படி கூறுவது வேறு.

LKS.Meeran Mohideen said...

அழகான வார்த்தைகளால் அருமையான இடுகை.
பெண்ணுரிமை என்று பேசுபவர்கள் இதைப் பார்த்தால் உண்மையான பெண்ணுரிமை,அதுவும் கண்ணியப் பெண்ணுரிமை இது தான் என்று துணிந்து சொல்ல வைக்கும் அளவு அற்புதமான சொல் வீச்சு எழுத்து வண்ணத்தில்.
வாழ்க உங்கள் தொண்டு.

LKS.Meeran Mohideen said...

அழகான வார்த்தைகளால் அருமையான இடுகை.
பெண்ணுரிமை என்று பேசுபவர்கள் இதைப் பார்த்தால் உண்மையான பெண்ணுரிமை,அதுவும் கண்ணியப் பெண்ணுரிமை இது தான் என்று துணிந்து சொல்ல வைக்கும் அளவு அற்புதமான சொல் வீச்சு எழுத்து வண்ணத்தில்.
வாழ்க உங்கள் தொண்டு.

ஹுஸைனம்மா said...

//Blogger LKS Meeran said...//

மிகவும் நன்றி!!

T.N.Elangovan said...

நல்ல பதிவு. மீண்டும் ஒருமுறை விலாவாரியாகப் படிக்கணும்.

raja said...

masha allah... one of the best articles i have read