Pages

டிரங்குப் பொட்டி - 22

ராஜஸ்தான் ஹவா மஹல் - இதன் இன்னொரு பெயர், “பிங்க் மஹல்”. பேருக்கேத்த மாதிரி பிங்க் கலர்ல இருக்கிற இத வச்சுத்தான் ஜெய்ப்பூருக்கே “பிங்க் சிட்டி”னு பேர் வந்தது. இந்த மஹல், அப்போதைய அரசக் குடும்பத்துப் பெண்கள் நகரை வேடிக்கை பார்க்கப் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்டது. புராதனச் சின்னமான இக்கட்டிடம் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்நகரில் நடந்த NRIக்களின் தினமான ‘ப்ரவாசி பாரதிய திவஸ்”க்காக இந்நகரை அழகுபடுத்தினர். அப்போது, புறா எச்சங்களும் தூசியுமாய் இருந்த ஹவா மஹலையும் சுத்தம் செய்ய, தீயணைப்புக் குழாயால் நீரை வேகமாகப் பீச்சியடித்ததில், அதன் வெளிப்புறச் சுவரின் சில இடங்களில் காரை பெயர்ந்துவிட்டதாம்.

ஒரு புராதனக் கட்டிடத்தின்மீது இப்படிக் கடுமையான அழுத்தத்தில் நீரை அடித்துச் சுத்தம் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொல்பொருள் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இதுகூடத் தெரியாத குழந்தைகளா என்று ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
______________

காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்காக 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான EU, கடந்த ஜனவரி முதல் தம் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் விமான நிலையங்களைப் பயன்படுத்தும் விமானங்கள் வெளியிடும் புகையில் உள்ள நச்சுப்பொருளான கார்பன் அளவைப் பொறுத்து "Carbon tax" கட்ட வேண்டும் என்று EU சட்டம் நிறைவேற்றியுள்ளதற்கு, பல்வேறு விமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதை ஐரோப்பிய யூனியன் கண்டுகொள்ளாததால், விமான நிறுவனங்கள் இக்கட்டணத்தை விமான டிக்கட்டுகளில் ஏற்றி, பயணிகளின் தலையில் கட்டிவிட்டன!!

உலகில் வாகனப் பெருக்கம் அதிகமாகிவிட்டதன் ஒரு விளைவு இந்த “கார்பன்” emissions. இவை மிகக் கெடுதலானவை என்பதால், இதைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டிய சூழலில் இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் அத்தியாவசியமாகி வருகின்றன. இதற்கான இன்னொரு  நடவடிக்கையான "Carbon capture and storage" குறித்து WFES - 2011 பதிவில் முன்பே பார்த்திருக்கிறோம்.
______________________

ங்கே அமீரகத்தில் சமீபகாலமாக, பூட்டியிருக்கும் வீட்டில் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பாதிக்கப்படுபவை குறிப்பாக இந்தியர்களின் வீடுகளே மிகமிக அதிகம். அதுகுறித்து அமீரகக் காவல் துறை தலைவர் பேசும்போது குறிப்பிட்டதாக செய்தியில் படித்த விஷயத்தைப் பகிரவேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்திருந்தேன். ஆனால், அந்தச் செய்தியின் லிங்கைச் சேமித்துவைக்க மறந்துவிட்டதால், தற்போது தேடியபோது ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை அறியக் கிடைத்தது.

அதாவது அமீரகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும்கூட, இந்தியர்களின் வீடுகளே பெரும்பாலும் திருடர்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. காரணம், ஒன்றுதான்!! அதாவது, பெரும்பான்மையோர் தம் வீட்டுக்கதவுகளில் தாம் இந்தியர் என்று தெரியும் விதமான அடையாளங்களைச் செய்கின்றனர். அதாவது, கதவில் ஸ்வஸ்திக் வரைவது, மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, கோலங்கள் போடுவது போன்றவை மூலம் அது இந்தியர்களின் வீடுகள் என்று உறுதியாகத் தெரிய வருகிறதாம்.

சரி, அதனால் என்ன என்று தோன்றும். இந்தியர்களுக்குத்தான் நகைப் பற்று அதிகம். அதுவும் 22 காரட் நகைகளை இந்தியர்கள் மட்டுமே வாங்குவர். ஆங்கிலேயர்கள் 12 காரட், 14 காரட் நகைகளே பெரும்பாலும் வாங்குவர். அதன் மதிப்பு 22 காரட்டுக்கு முன் ஒன்றுக்கும் தேறாது. அதனால்தான்!!

தொடர்புடையச் சுட்டிகள்: 
1. http://aathimanithan.blogspot.com/2012/01/blog-post_08.html
2. http://uberdesi.com/blog/2009/08/12/burglarizing-ganesh/
3. http://www.dailymotion.com/video/xhohy3_homes-with-religious-symbol-meaning-good-targeted-by-burglars_news
 ___________________________

பெரியவனின் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி, வகுப்புகளில் சில அலங்கார வேலைகளைச் செய்யச் சொல்லியிருந்தனர். இவன் வகுப்பில், இவன் பொறுப்பெடுத்துச் சகமாணவர்களிடம் காசு வசூலித்துச் செய்தான். அப்போது வேலைகளையும், அதற்கான பணத்தையும் மாணவர்களோடு வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டி வந்ததில், பலரும் காசையும், வாங்கிய பொருட்களையும் ஆட்டையைப் போடுவதிலேயே குறியாக இருப்பதைப் பார்த்து நொந்துபோய் இருக்கிறான். “நீ தந்த காசைப் பையில் வச்சிருந்தேன். வகுப்பில் வச்சுக் காணாமப் போயிடுச்சு. அதனால் நான் பொறுப்பில்லை”; “வாங்கின ரிப்பனை வீட்டுல வச்சிருந்தேன்; தம்பி எடுத்துக் கிழிச்சிட்டான். ஒண்ணும் செய்ய முடியல”; “இன்னிக்கு லீவாயிருந்தாலும், உனக்கு உதவத்தான் வந்தேன், அதனால பெப்ஸி, சிப்ஸ் வாங்கக் காசு கொடு” - இதெல்லாம் சொல்லப்பட்டச் சில காரணங்கள். எதிர்கால இந்தியா!!

இதை மிஞ்சுற மாதிரி இன்னொன்ணு நேத்து கேள்விப்பட்டேன். திருச்சியில் முதலாமாண்டு பொறியியல் தேர்வில் மூன்று பாடங்கள் ஃபெயிலானதால் மாணவன் தற்கொலை செய்துகொண்டான். அதுவல்ல விஷயம் (!!). அவன் இறந்த சில நிமிடங்களில், அவனின் மொபைல் ஃபோன் காணாமல் போய்விட்டதாம்!!
__________________

”நண்பன்” படத்தில் எஸ்.ஜே. சூர்யாக்குப் பதிலாக விஜய் படிச்சு, பரிட்சை எழுதுவதை ரசித்துப் பாராட்டினோம். கல்வி முறை மாற வேண்டும் என்றெல்லாம் வீராவேசமாக வாதாடுகிறோம். ஏங்க, புதுச்சேரி மினிஸ்டரும், படிக்கக் கஷ்டமாயிருக்கப் போய்த்தானே ஆளு வச்சு பரிட்சை எழுதினார்? இத ஏன் யாரும் அந்தக் கோணத்துல யோசிக்கவேயில்லை? பாவம் அவரு!! :-)))))
________________

கடலூர்!!
ம்ம ஊர்ல சிலர், அவங்க விளைபொருட்களின் கொள்முதல் விலையைக் கூட்ட வேண்டும்னு போராட்டம் பண்றாங்க. உதாரணமா, பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தணும்; அரிசிக்கும் அதேபோலன்னு. எல்லாம் சரிங்க. ஆனா அதுக்கு ஏன் அந்தப் பாலையும், நெல்லையும், அரிசியையும் ரோட்டில கொட்டுறீங்க? முன்னெல்லாம் சினிமாவில் சண்டைக் காட்சியில்தான் இப்படி அநியாயம் பண்ணுவார்கள். இப்ப நிஜத்திலேயே!! :-((((
 

Post Comment

39 comments:

Thava said...

நல்ல அருமையான பகிர்வு..வாழ்த்துக்களோடு நன்றி.

ப.கந்தசாமி said...

அநியாயமான செயல்கள் அதிகரித்து விட்டன. கலாசாரத் தேய்வு?

கீதமஞ்சரி said...

இன்னைக்கு டிரங்குப்பெட்டியில் வந்த செய்தி எல்லாமே மனசை பாதிச்ச செய்திகள். புராதானச் சின்னங்களைப் பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. இப்படி அழிவு ஏற்படுத்தாமல் இருக்கலாமே.

இந்தியர்களைக் குறிவைத்துக் கொள்ளையடிக்கும் திருடும் கூட்டம் இங்கும் உண்டு. முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டதால் நகைகளை மிகவும் கவனமாகத் தவிர்க்கிறேன்.

பள்ளியிலேயே பதுக்கல், லஞ்சம் போன்ற விவகாரங்கள் துவங்கிவிடுவதும், பால் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஆர்ப்பாட்டம் என்னும் பேரில் வீதியில் கொட்டி வீணடிப்பதுமான நிகழ்வுகள் மிகவும் வருத்தத்துக்குரியவை.

ADHI VENKAT said...

டிரங்குப் பொட்டி இந்த முறை சுவாரசியாமான செய்திகளோடு கனமா இருக்கு....

மூன்று வருடங்கள் முன்பு ஹாவா மெஹலில் மேல் வரை சென்று பார்த்து வந்தோம். இப்போ அனுமதி இல்லையாம்.....

இங்கயும் தென்னிந்தியர்கள் கொஞ்சமாவது தங்கம் போட்டிருப்பாங்கன்னு தான் திருடர்கள் தாலி சரடைக் கூட விட்டு வைப்பதில்லை.

பாச மலர் / Paasa Malar said...

தங்கம் இருக்கும் இடங்களில் எல்லாம் திருட்டுதான்...

சண்டைக்காட்சி அநியாயம் போதாது என்று நிஜத்தில் வேறா...

பாச மலர் / Paasa Malar said...

தங்கம் இருக்கும் இடங்களில் எல்லாம் திருட்டுதான்...

சண்டைக்காட்சி அநியாயம் போதாது என்று நிஜத்தில் வேறா...

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமான அலசல்.
வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பாழ் பண்ணுவதே நம் நாட்டின் சிறப்பு போல இருக்கு. வருத்தமாக இருக்கு ஹவா மஹால் விஷயம்.

//முன்னெல்லாம் சினிமாவில் சண்டைக் காட்சியில்தான் இப்படி அநியாயம் பண்ணுவார்கள். இப்ப நிஜத்திலேயே!//

சினிமாவப் பார்த்து நல்ல விஷயங்களை கத்துக்கணும். இப்படியா பொருட்களை பாழ் பண்ணுவது????

NKS.ஹாஜா மைதீன் said...

புராதன சின்னங்களின் மேல் எவ்வளவு அக்கறை தொல்பொருள் துறையினருக்கு !இவர்களுக்கு எல்லாம் இருக்கும்போது அதன் அருமை தெரியாது..

NKS.ஹாஜா மைதீன் said...

புராதன சின்னங்களின் மேல் எவ்வளவு அக்கறை தொல்பொருள் துறையினருக்கு !இவர்களுக்கு எல்லாம் இருக்கும்போது அதன் அருமை தெரியாது..

ஸாதிகா said...

ஆங்கிலேயர்கள் 12 காரட், 14 காரட் நகைகளே பெரும்பாலும் வாங்குவர். அதன் மதிப்பு 22 காரட்டுக்கு முன் ஒன்றுக்கும் தேறாது. //இனிப் நம்மவர்களும் இதைத்தான் கடைபிடிக்க வெண்டும் போலும்.ஊர் போகின்ற போக்கைப்பார்த்தால்:(

எதிர்கால இந்தியா!!//ஜூனியர் ஹுசைனம்மா கொக்கா?:)

ஆனா அதுக்கு ஏன் அந்தப் பாலையும், நெல்லையும், அரிசியையும் ரோட்டில கொட்டுறீங்க? //அதான் இந்தியா.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

//ஏங்க, புதுச்சேரி மினிஸ்டரும், படிக்கக் கஷ்டமாயிருக்கப் போய்த்தானே ஆளு வச்சு பரிட்சை எழுதினார்? இத ஏன் யாரும் அந்தக் கோணத்துல யோசிக்கவேயில்லை? பாவம் அவரு!! :-)))))///

ஹலோ சிஸ்டர், எங்க ஊரு ஆள பத்தி என்கிட்டே கேளுங்க :) :). ஒரு மக்கள் சேவைல இருக்குற தலைவர், மக்களுக்கு என்ன வேணும் ஏது வேணும்னு பார்த்து பணிகளை செய்வாரா, அல்லது அத விட்டுட்டு இந்த மாதிரி பிஸ்கோத்து பரீட்சை எழுதுறதுக்கு நேரத்த செலவளிப்பாரா? மக்கள் பணில பிஸியா இருந்ததாலே இன்னொருத்தர வச்சு டெஸ்ட் எழுதுனார். இதுல என்ன தப்பு? ஒரு சமூக நோக்கோடு சிந்தித்தவருக்கு இந்த உலகம் கொடுக்குற பட்டம் பித்தலாட்டகாரர், ஏமாற்று பேர்வழி இன்னும் என்ன என்னவோ? வாட் அ பிட்டி, வாட் அ பிட்டி....

அபுதபி-ல இருந்துக்கிட்டு பதிவு எழுதுறவங்களுக்கு எங்க ஆளுங்க இங்கே கஷ்டப்படுறது என்ன தெரியும்? :) :)

வஸ்ஸலாம்...

கவிதா | Kavitha said...

//ஒரு புராதனக் கட்டிடத்தின்மீது இப்படிக் கடுமையான அழுத்தத்தில் நீரை அடித்துச் சுத்தம் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது//

தாஜ்மகால் சென்று வந்ததிலிருந்து, எனக்கு இந்த யோசனை இருந்துக்கொண்டே இருக்கிறது. நல்லா தண்ணி ஊற்றி சுத்தம் செய்து, முழு மகாலையும் ,கண்ணாடியில் கவர் செய்து வெளியிலிருந்து மட்டும் பார்க்கும் படி வைக்கலாமே.. ரொம்ப பழுப்பேறி உலகத்தின் 7 ஆவது அதிசய்ம் வீணா போகுதேன்னு நினைப்பேன்.

நீங்க சொல்றாப்ல தண்ணி அடிச்சா கட்டிடம் தாங்காதோஓ?

ஸ்ரீராம். said...

//தொல்பொருள் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இதுகூடத் தெரியாத குழந்தைகளா//


சோம்பேறித்தனம்தான் காரணம்!

//அது இந்தியர்களின் வீடுகள் என்று உறுதியாகத் தெரிய வருகிறதாம்//

திருடர்கள்தான் என்னமா யோசிக்கறாய்ங்க........!

//அவன் இறந்த சில நிமிடங்களில், அவனின் மொபைல் ஃபோன் காணாமல் போய்விட்டதாம்!!//

பார்ரா,,,,எரியற வீட்டுல....? கொடுமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்தியாக்காரங்கன்னு தெரியறாப்பல நடக்கிறதுந்னு சொல்றீங்க.. இங்க தில்லியில் தமிழ்க்காரங்கன்னா தங்கம் வச்சிருப்பாங்க கண்டிப்பான்னு திருடுவாங்க.. இங்கயும் அதே கோலம் தான் காட்டிக்கொடுக்குது..

vanathy said...

இந்த திருட்டு குணம் இந்தியாவில் மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் இருக்கு. என் டென்டிஸ்ட் ஒரு இந்தியப் பெண்மணி. அவர் இருப்பது மிக மிக வசதியானவர்கள் இருக்கும் பகுதி. அந்த ஏரியாப் பள்ளியில் வசதியானவர்கள் மட்டுமே படிக்க முடியும். அவர் மகளுக்கு லஞ்ச் சாப்பிட பணம் கொடுத்தாராம் ஒரு நாள். மகள் மீதி பணத்தினை மேசையில் வைத்து விட்டு திரும்பி பார்ப்பதற்குள் பணம் மாயமாகிவிட்டதாம். அதிகம் அமெரிக்க குழந்தைகள் இருக்கும் இடத்தில் திருட்டா என்று மனம் நொந்து போனார். அவர் ஒரு காசுப் பேய். நான் எதுவுமே சொல்லவில்லை.

நல்ல பதிவு.

Unknown said...

நிறைய விஷயங்களை சுவையாக அலசி அருமையான (டிரங்குப் பொட்டி) பதிவு!

வாழ்த்துக்கள்..

Vidhya Chandrasekaran said...

மகனின் பள்ளி சம்பவம்:(((

இதில் பெற்றோரின் பங்குமிருக்கிறது. குழந்தைகளுக்கு நல்லது கெட்டதை குறித்து தெளியச் செய்வது முக்கியம். இப்பல்லாம் ஸ்கூல்ல சேர்த்தா போதும்னே இருக்காங்க:((

பாண்டிச்சேரி முதல்வர் - விட்டா அவருக்கு டிகிரி கொடுக்கனும்ன்னு சொல்லுவீங்க போல:))))

வெங்கட் நாகராஜ் said...

டிரங்குப் பொட்டி விஷயங்கள் .... அருமை...

பகிர்வுக்கு மிக்க நன்றி.

suvanappiriyan said...

டிரெங்குப் பெட்டியில் பல கதம்பமான செய்திகள்.

Seeni said...

nalla thakavalkal!
pala visayam theriya mudinthathu!

அப்பாதுரை said...

சுவாரசியம்.

enrenrum16 said...

/இதை ஐரோப்பிய யூனியன் கண்டுகொள்ளாததால், விமான நிறுவனங்கள் இக்கட்டணத்தை விமான டிக்கட்டுகளில் ஏற்றி, பயணிகளின் தலையில் கட்டிவிட்டன!!/அவ்வ்வ்வ்வ்....

/“நீ தந்த காசைப் பையில் வச்சிருந்தேன். வகுப்பில் வச்சுக் காணாமப் போயிடுச்சு. அதனால் நான் பொறுப்பில்லை”; “வாங்கின ரிப்பனை வீட்டுல வச்சிருந்தேன்; தம்பி எடுத்துக் கிழிச்சிட்டான். ஒண்ணும் செய்ய முடியல”; “இன்னிக்கு லீவாயிருந்தாலும், உனக்கு உதவத்தான் வந்தேன், அதனால பெப்ஸி, சிப்ஸ் வாங்கக் காசு கொடு”/ இப்படி சொன்னது எல்லாருமே இந்தியர்கள் தானா?

/ஆனா அதுக்கு ஏன் அந்தப் பாலையும், நெல்லையும், அரிசியையும் ரோட்டில கொட்டுறீங்க?/ ஹ்.ம்.. அதுக்கப்புறம் அது எல்லாத்தையும் எடுத்திருப்பாங்கன்னு மனச தேத்திக்கவேண்டியதுதான்...

கோமதி அரசு said...

தீயணைப்புக் குழாயால் நீரை வேகமாகப் பீச்சியடித்ததில், அதன் வெளிப்புறச் சுவரின் சில இடங்களில் காரை பெயர்ந்துவிட்டதாம்.//

கேட்கவே கஷ்டமாய் உள்ளது.

நீங்கள் பகிர்ந்து கொண்ட செய்திகள் எல்லாம் மனதுக்கு வருத்தம் அளிப்பதாய் உள்ளது.

CS. Mohan Kumar said...

ஹவா மஹல் : வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கிருந்து பிடிக்கிறீங்க இது மாதிரி மேட்டர் எல்லாம்? (இணையம் என்பது சுட்டி மூலம் தெரிகிறது. இருந்தும், விஷயம் கிடைக்குதுல்ல அதை சொன்னேன் !)

//அமீரகத்தில் திருட்டுகள் // அங்கேயுமா? நகை பித்து.. இதுக்கு யாருங்க மேடம் காரணம் (ஆம்பிளைங்க : நாங்க இல்லீங்கோ)

//இறந்த சில நிமிடங்களில், அவனின் மொபைல் ஃபோன் காணாமல் போய்விட்டதாம்//
சாலையில் எந்த விபத்து நடந்தாலும் முதலில் பர்ஸ், மொபைல் திருட்டு போயிடும். இப்படியும் ஆளுங்க இருக்காங்க .

//எஸ்.ஜே. சூர்யா Vs, புதுச்சேரி மினிஸ்டர் // சூப்பரு :))
**
அப்பா: ஹுசைனம்மா மாதிரி விரிவா இன்னிக்கு தான் பின்னூட்டம் போட்டுருக்கேன் :))

சாந்தி மாரியப்பன் said...

புராதானக் களஞ்சியங்களை எப்படிப் பராமரிக்கணும்ன்னு நம்மூர்க் காரங்களுக்குத் தெரியறதேயில்லை.

நம் இந்தியர்களின் நகை மோகம்... ஒன்னும் சொல்றதுக்கில்லை ;-(

ஹுஸைனம்மா said...

குமரன் - நன்றிங்க.

கந்தசாமி ஐயா - நன்றிங்க.

கீதமஞ்சரி - ஆமாங்க, இந்த தடவை எல்லாமே வருத்தப்படற செய்திகளா இருக்கு. என்ன செய்ய...

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - வட இந்தியர்கள் தங்கம் அதிக போடுவதில்லையா? இங்கே நகைக் கடைகளில் அவர்களையும் நிறைய பார்க்கமுடிகீறதே?

பாசமலர் - படத்துல உணவு வீணாகறதப் பாக்கும்போதே பக்குன்னு இருக்கும். இங்கே - அதுவும், அவற்றின் உற்பத்திக்காகக் கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் - வீணாக்குவதைப் பார்க்கப் பொறுக்கவில்லை. பணக்காரர்கள் வீணாக்கினால், ‘பணத்திமிர், குடியானவன் கஷ்டம் அவனுக்கென்ன தெரியும்’ என்கிறோம். இதை என்னன்னு சொல்றது? :-((

ராம்விக்கா - புலம்பத்தான் முடியுது, என்ன செய்ய?

ஹாஜா - ஆமாங்க. நன்றிங்க

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - தங்கம் விலயேற ஆரம்பிச்சதிலிருந்து, நானும் கொஞ்சகொஞ்சமா 18 கேரட்டுக்கு மாறிட்டிருக்கேன்க்கா!!

ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம். அதானே, புதுச்சேரிக்காரங்க புத்திசாலிங்களாச்சே!!

ஹுஸைனம்மா said...

கவிதாக்கா - ஹவா மஹல் மேற்புறம் சாதாரண பெயிண்ட் அடிச்ச சுவர்ங்கிறதால இப்படி ஆகிடுச்சோ என்னவோ? தாஜ்மகால் மேலே பதிச்சிருக்க மார்பிள் கற்கள் இந்த அழுத்தத்திற்குத் தாங்குமா என்னன்னு தெரியலையே. ஆனா, சாதாரணமாக் கழுவி விடுவதுபோலச் செய்யலாம்னு நினைக்கிறேன்ப்பா.

அப்புறம், தாஜ்மஹாலின் பழுப்பு நிறத்திற்குக் காரணம், அதைச் சுற்றியிருக்கும் ஆலை மற்றும் வாகனங்களின் புகை என்று படித்த ஞாபகம். (அதைத் தடுக்க அரசு ஒன்றும் செய்யாததை நீதிமன்றம்கூட கண்டித்தது) அதனால், தண்ணீரால் கழுவினாலும் பழுப்புநிறம் போகாது என்று நினைக்கீறேன்.

ஸ்ரீராம் சார் - வாங்க. //திருடர்கள்தான் என்னமா யோசிக்கறாய்ங்க//
ஒரு படத்துல சொன்ன மாதிரி, இக்காலத்து வில்லன்கள் ஹீரோவைவிட டெக்னிக்கும், டெக்னாலஜியும் அதிகம் தெரிஞ்சவங்களா இருக்காங்க.

ஹுஸைனம்மா said...

முத்தக்கா - வாங்கக்கா. //இங்கயும் அதே கோலம் தான் காட்டிக்கொடுக்குது// அப்படியா, வட இந்தியர்கள் கோலம் போட மாட்டாங்களா? இல்லை, வித்தியாசமா இருக்குமா?

வானதி - ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாதிரிச் சின்னச் சின்னத் திருட்டுகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் உண்டென்று.

செய்யது இப்ராம்ஷா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

வித்யா - //இதில் பெற்றோரின் பங்குமிருக்கிறது// நிச்சயமா. அதுவும் இந்தக் காலத்து curriculum-ல் நீதிபோதனை என்ற ஒன்றே இல்லாதபோது, பெற்றோரே இதற்குப் பொறுப்பெடுக்க வேண்டும்.

//பாண்டிச்சேரி முதல்வர்// - அவர் அமைச்சர்தான், அதுவும் கல்வித்துறைக்கு!! காசை விட்டெறிஞ்சா டாக்குட்டர் பட்டமே கிடைக்கும்போது, இவுரு என்னாத்துக்கு வெறும் டிகிரிக்கு ஆசப்பட்டாரோ? பாவம், அதுக்காகவாவது கொடுக்கலாம். :-))

ஹுஸைனம்மா said...

வெங்கட் நாகராஜ் - நன்றிங்க.

சுவனப்பிரியன் - நன்றிங்க.

சீனி - நன்றிங்க.

அப்பாதுரை - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - ஐரோப்பாவுக்குத்தானே விமானக் கட்டணத்தை ஏத்திருக்காங்க, நீங்க ஏன் /அவ்வ்வ்வ்/வுறீங்க? Europe tour போறீங்களா? :-)))

//இப்படி சொன்னது எல்லாருமே இந்தியர்கள் தானா?// ஆமாங்க, முக்கியமா தென்னிந்தியர்கள்தான்!! :-(((

//அந்தப் பாலையும், நெல்லையும், அரிசியையும் ரோட்டில கொட்டுறீங்க?/ ஹ்.ம்.. அதுக்கப்புறம் அது எல்லாத்தையும் எடுத்திருப்பாங்கன்னு// - பாலை அள்ள முடியாது. அரிசி கொட்டினது சகதியா இருக்க இடத்தில்!! நெல்லை மட்டும், ஒரு போலீஸ் அதிகாரி தன் சக அலுவலர்களைக் கொண்டு அள்ள வைத்தாராம். அதையும் குத்தி அரிசியாவா ஆக்கிருக்கப் போறாங்க? குப்பையிலத்தான் போட்டிருப்பாங்க!! ரொம்பக் கொடுமை!! :-((((

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - ஆமாக்கா. எல்லாமே ஆதங்கப்பட வைப்பவையாகத்தான் இருக்கின்றன.

மோகன்குமார் - வக்கீல் சார், பெரீய்ய்ய கமெண்டுக்கு தாங்கீஸ்!!

//இதுக்கு யாருங்க மேடம் காரணம் (ஆம்பிளைங்க : நாங்க இல்லீங்கோ)// - ஹலோ, திருடுறது ஆம்பிளைங்கதானாம்!! :-))))

சாலை விபத்துகளில் இப்படி நடக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். பெரிய பெரிய ரயில், பஸ் விபத்துகளிலேயே இதுக்குன்னே இருக்க ஆட்கள் இருக்காங்க. ஆனாலும், மாணவர்கள் மத்தியில் என்பதுதான் வருந்த வைக்கிறது.

//ஹுசைனம்மா மாதிரி விரிவா இன்னிக்கு தான் பின்னூட்டம்// - ஹிஹி.. நமக்கு நறுக்-சுறுக்னுப் பேச/எழுதத் தெரியாதுங்கோ.. அதான்...

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - ஹவா மஹல் - கொஞ்சம் நிதானிச்சு செஞ்சிருக்கலாம். போகட்டும், இனி கவனமாக இருப்பார்கள் என நம்புவோம்.

//இந்தியர்களின் நகை மோகம்// - பொதுவா இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, நகைகளை ஒரு சேமிப்பா நினைச்சுத்தான் பெரும்பாலோனோர் வாங்குவது. ஆனா, அதைத் தகுந்த பாதுகாப்புடன் (லாக்கர் போல) வைத்திருப்பதும் அவசியம். யானை வாங்கினவன், அங்குசம் வாங்க யோசிக்க மாதிரி, நம்மவர்கள் லாக்கருக்கு செலவழிக்க யோசிப்பதாலேயே இம்மாதிரி திருடர்களுக்கு யோகம் அடிக்கிறது.

மேலும் வெளிநாடுகளில் பாதுகாப்பு அதிகம் என்ற எண்ணத்தாலும் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். இதைத் தவிர்க்கக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்.

ஆதி மனிதன் said...

// தொல்பொருள் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இதுகூடத் தெரியாத குழந்தைகளா என்று ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.//

இதே போல் தான் சென்னையில் நடந்த ஒரு தீ விபத்தில் அதிக கவனம் எடுக்காமல் உள்ளே சென்று ஒரு தீயணைப்பு வீரர் பலியானார். ஒரு அதிகாரி கடும் தீ காயத்துக்கு உள்ளானார்.

//இங்கே அமீரகத்தில் சமீபகாலமாக, பூட்டியிருக்கும் வீட்டில் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பாதிக்கப்படுபவை குறிப்பாக இந்தியர்களின் வீடுகளே மிகமிக அதிகம். //

இதை படித்து விட்டு இதை பற்றிய என் பதிவை பகிரலாம் என நினைத்துக் கொண்டே கீழே பார்த்தால், அட டா, ஏற்கனவே சுட்டி காட்டி இருக்கிறீர்கள். நன்றி (லின்க்கை கொடுத்திருந்தால் இன்னும் ஈசியாக இருக்கும் படிப்பவர்களுக்கு).

//ஏங்க, புதுச்சேரி மினிஸ்டரும், படிக்கக் கஷ்டமாயிருக்கப் போய்த்தானே ஆளு வச்சு பரிட்சை எழுதினார்? இத ஏன் யாரும் அந்தக் கோணத்துல யோசிக்கவேயில்லை? பாவம் அவரு!!//

அது சரி!

Vidhya Chandrasekaran said...

Hv shared an award with you:)

http://vidhyascribbles.blogspot.in/2012/03/blog-post.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Superb asusual...:) Very true about home breakins, we hear a lot like that in some areas here as well... most of Indian houses...:(

ஹுஸைனம்மா said...

நன்றிங்க ஆதிமனிதன். லிங்க்-ஆவேக் கொடுக்கிற யோசனை வராமப் போச்சு!!

வித்யா - விருதுக்கு நன்றி!!

ATM - நன்றிப்பா.