Pages

பூவோடு சேர்ந்த நார்...





எங்க வீட்டுல அன்னிக்கு மட்டன் குழம்பு. ( யார்றா இவ, இவளை எழுதவிட்டதே தப்பாப்போச்சு. என்ன எழுதன்னு தெரியாம, இன்னிக்கு மட்டன், நேத்திக்கு சிக்கன், நாளைக்கு மீனுன்னு எழுதிகிட்டு...ன்னு அலம்பல் பண்ணறவங்களுக்கு: மேலே, ஐ மீன், கீழே மீதியயும் படிச்சுட்டுச் சொல்லுங்க.)

எங்க வீட்ல மட்டன் குழம்புன்னா, அன்னிக்கு ஸ்பெஷல் சமையல்னுதான் அர்த்தம். ஏன்னா, மட்டன்லாம் அடிக்கடி வைக்கிறது கிடையாது. எனக்குச் சமைக்கத் தெரியாததுதான் இதுக்குக் காரணம்னு நினைப்பீங்க. ஒரு விஷயம் தெரியுமா, நான் -வெஜ்ஜை எப்படி சமைச்சாலும் டேஸ்டாத்தான் இருக்கும். வெஜ் சமைக்கறதுக்குத்தான் கொஞ்சம் தெறம வேணும்! பேக் டூ பாயிண்ட், எங்க வீட்டில மட்டன் அடிக்கடி வைக்கிறதில்லை. எல்லாம் இந்த டயட் பிரச்னையாலத்தான்.

ஆக்சுவலி,  குழப்பம் மட்டன்ல இல்லை. ஹலால் முறையில வெட்டப்படுவதால், அதிலிருக்கும் இரத்தம் நீக்கப்பட்டுவிடுகிறது.  மட்டனில் இருக்கும் கொழுப்பையும் நாம் சுத்தம் செய்யும்போது நீக்கிவிடுகிறோம். அதனால, நாம சமைக்கிற முறையிலத்தான் தவறு இருக்குன்னு நான் நினைக்கிறேன். ப்யூர் வெஜிட்டேரியன்களுக்கே பிபி, சுகர், கொலஸ்ட்ரால், ஹார்ட் ப்ராப்ளம்ஸ்னு வர்றதுக்கும் இதுவும் ஒரு காரணம்.  (தென்)இந்தியச் சமையல்ல பாத்தீங்கன்னா, எண்ணெய், நெய், வெண்ணெய், தேங்காய், முந்திரி போன்றவற்றின் ஆதிக்கம் அதிகம். அதுவும் என்ன மாதிரி ஆட்கள் தைரியமா சமைக்கவும் செய்றோம்னா, அது இதைல்லாம் நம்பித்தானே? அதோட, வழக்கமா ‘லிமிடட் மீல்ஸ்’ சாப்பிடுறவங்களும், மட்டன்னா ’ஃபுல் மீல்ஸ்’ அடிச்சுடுறாங்களா, அதுவேற எக்ஸ்ட்ரா ப்ராப்ளம் ஆகிடுது!!

அதனால, விருந்தாளிங்க வந்தா மட்டும்தான் மட்டன் வாங்குறது. அப்பவும் எண்ணிப் பாத்து, கரெக்டா தேவைக்கு எண்ணி எண்ணிதான் வாங்குவேன். ஆனாலும், சிக்கனம் பாக்கிற நம்ம கை சும்மா இருக்குமா, அதுல ரெண்டுமூணு  எலும்பை உருவி ஃப்ரீசர்ல வச்சுகிட்டா, இன்னொரு நாள் மட்டன் குழம்புக்கும் ஆச்சு, வீட்ல (பெரீய்ய) குழந்தை(ங்களு)க்கும் சந்தோஷம்!! ஒரே கல்லுல...

கல்யாணம் ஆன புதுசுல, என் மாமியார் வீட்டுச் சமையலைப் பாத்து எனக்கு ஒரே ஆச்சர்யம். ரொம்பவே டேஸ்டா இருக்கும். நானும் சமையல்கட்டு போயே ஆக வேண்டிய நிலையில, எப்படி சமைக்கிறாங்கன்னு பாத்தப்போதான் புரிஞ்சுது, ஏன் இவ்ளோ டேஸ்ட் வருதுன்னு!! தேங்காய், தேங்காய் எண்ணெய் ரெண்டும் கணக்கு வழக்கிலாம சேருது சமையல்ல. பொறியல் வச்சிருப்பாங்க, நானும் ’தேங்காய் பொறியல்’னு நினைச்சு சாப்பிடுவேன். பாத்தா, நடுவுல அங்கங்க ரெண்டுமூணு பீன்ஸ் அல்லது கேரட் தென்படும். எங்க வீட்ல பீன்ஸைப் பொறியல் வச்சு, அதில தேங்காய் தூவுவோம். இங்க தேங்காயப் பொறியல் செஞ்சு, அதுல பீன்ஸ் தூவிருக்காங்களேன்னு அப்பாவியா நினச்சுகிட்டு மாமியார்கிட்ட கேட்டா, அது பீன்ஸ் பொறியலேதானாம்!!

இப்படியே போனப்போதான் இறைவன் கணக்கு புரிஞ்சுது!! நல்லா சமைச்சுப் போடுற என் மாமியாரோட மகனுக்கு ஏன் ஆண்டவன் சமைக்கத் தெரியாத என்னை மனைவியாக்கினான்? அம்மாவைப் போலவே மனைவியும் நல்ல ருசியா, விதவிதமாச் சமைச்சுப் போட்டுகிட்டிருந்தா உடம்பு என்னத்துக்காகும்? இப்பத்தான் கணக்கு டேலியாகுது பாருங்க!! இத நான் அடிக்கடி எங்கூட்டுக்காரர்கிட்ட சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டுக்குவேன்: “பாருங்க, நீங்க எம்பூட்டு நல்லவரா இருக்கப் போய், உங்களுக்கு ரொம்ப நல்ல மனைவியா நான் வாய்ச்ச்சிருக்கேன்?” கரெக்ட்தானே?

அதான், அத அப்படியே மெயிண்டெய்ன் பண்ண ஆரம்பிச்சேன்.   எப்படின்னா, சமையல் கத்துகிட்டாத்தானே சமைக்கணும். அதனால, ரொம்ப கத்துகிடாம, ஏதோ தேவைக்கு - பசிக்குச் சாப்பிட்டுக்கிற மாதிரி - கொஞ்சமா சமைக்கக் கத்துகிட்டேன். (என்ன சத்தம்னு கேக்கிறீங்களா, அது இந்த ரங்க்ஸ்தான் “ஆமா, இன்னும் கையை வெட்டாம காய் நறுக்கவே கத்துக்கலன்னு சும்மா ஜோக் (நறநற....) அடிக்கிறார்...)

சரி, அப்படியே அந்த “டார்டாய்ஸ்” கொசுவத்தியக் கீழவச்சிட்டு, (பத்திரம், இனியும் தேவைப்படும்), “ஆல் அவுட்”டைக் கையில் எடுத்துக்கோங்க. அதாவது, ஃப்ளாஷ்பேக் முடிஞ்சுது, நிகழ்காலத்துக்கு வாங்கன்னு சொல்றேன். என்ன சொல்றீங்க? பவர்கட்டால, ’ஆல் அவுட்’ நிஜமாவே அவுட் ஆனதால, இப்பவும் ‘டார்டாய்ஸ்’தானா? அய்யோ பாவம்!!

ட்டன் குழம்பு வச்சு, (எண்ணெயில்லாத) சப்பாத்தி சாப்பிட்டுகிட்டிருந்த ரங்ஸ், இருந்தாப்ல  ”உங்க வீட்ல முன்னாடி மாட்டுப் பண்ணை வச்சிருந்தீங்களோ?”ன்னு கேக்கவும் எனக்கு அப்பிடியே ஜிவ்வுனு இருந்துச்சு. ஏன்னு கேப்பீங்களே? மறுபடி அந்த டார்டாய்ஸ், சரி, சரி..

நீங்க சில படங்கள்ல பாத்திருப்பீங்க, பட்டணத்துல பிறந்து, வளர்ந்த கதாநாயகியைக் கிராமத்துல பண்ணையார் வீட்டுல கட்டிக் கொடுப்பாய்ங்க. அந்தப் பொண்ணு, இலையில சாப்பிட ஸ்பூன், ஃபோர்க் கேட்கும்.
கல்யாணம் ஆகி வரும்போது என் நிலைமையும் அப்படித்தான் - ஆனா, தலைகீழா!! நான் கிராமம், கட்டுனது பட்டணத்துக்காரரை. (நோ, நோ, ஐயம் நாட் லைக் அருக்காணி!! ஐயம் எ கிராஜுவேட்,  யூநோ?)   ஒரு சின்ன உதாரணம் சொல்லணும்னா, அப்ப எங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் வாங்கி மூணு வருஷந்தான் ஆச்சு. ஆனா, அவங்க வீட்டுல ப்ரிஜ்ஜுக்கும் இருவத்தேழு வயசு, நான் கட்டிகிட்டவருக்கும் இருவத்தேழு வயசு!! இப்படி ஒவ்வொண்ணாப் பாத்து, அப்பவே நான் “டெக்னாலஜி இஸ் ஸோ இம்ப்ரூவ்ட் யா!!”ன்னு மூக்கில விரல் வச்சு ஆச்சர்யப்பட்டேன்னாப் பாருங்களேன்!

அப்புறம் சில வருஷத்துல, இயற்கை உணவு, சூரிய சக்தி, ஆர்கானிக் ஃபார்மிங் அப்படின்னெல்லாம் புரட்சி வந்துதா, எனக்குள்ள இருந்த கிராமத்தான் முழிச்சுகிட்டான்(ள்). முன்னொரு காலத்துல எங்க சொந்த வயல்ல இருந்தே நெல் வந்தது, வீட்டுல கோழி முட்டை போட்டது,  சொந்தமா மாடு வச்சிருந்தது இதெல்லாம் பத்திப் பேசிப்பேசியே, அப்படியே கொஞ்சகொஞ்சமா என்னவருக்கு வேப்பிலை அடிச்சு, ப்ரெய்ன் வாஷ் செஞ்சேன். அப்புறம் என்ன,  பூவோட சேந்த (கிழிஞ்ச)  நாரா,  இயற்கை முறைவாழ்வு நமக்குத் தேவைங்கிற அளவுக்கு இப்ப ”கொள்கையளவுல” ஒத்துகிட்டார். எனக்கும் ரொம்ப சந்தோஷம் ஆகிப்போயி,  ஒரு பத்து ஏக்கரா வயல் வாங்கி, அதுல அவர் மாட்டை ஓட்டிகிட்டே, தோள்ல மண்வெட்டியோட “விவசாயி... விவசாயி..”ன்னு பாடற மாதிரி கனவெல்லாம் கண்டுகிட்டேன். கனவு மட்டும்தான் இப்போதைக்கு...

பேக் டூ ”ஆல் அவுட்”!! (ஐயோ, எல்லாரும் வெளியே போங்கன்னு சொல்லல) இப்படி இந்த எண்ணங்கள்லயே இருந்ததுனால, அவர் “மாட்டுப் பண்ணை வச்சிருந்தீங்களா”ன்னு கேட்டதும், ரொம்ப உற்சாகமாகிப் போய் “எங்க ஆத்தா ஆடு வளத்தா, மாடு வளத்தா, கோழி வளத்தா”ன்னு ரொம்பப் பரவசமாச் சொல்லிகிட்டே வந்தேன். திடீர்னு, “கட்!! கட்!! கட்!! ஸ்ஸ்ஸப்பா.......!!  மாட்டுக்கு வைக்கோல்ல செஞ்ச கன்னுகுட்டியைக் காட்டி, பாலைக் கறப்பாங்களே. அதுமாதிரி, நாலே நாலு எலும்பைப் போட்டுட்டு, இதை மட்டன் குழம்புன்னு சொல்றியேன்னு கேட்க வந்தா.....!!”

???? !!!!! ???? !!!!! ???? !!!!! ???? !!!!!

Post Comment

42 comments:

ஹுஸைனம்மா said...

வீட்ல நெட் கட்டாகிடுச்சு; கமெண்ட்ஸ் போட்டு வைங்க, மொத்தமா பப்ளிஷ் பண்றேன், நாளைக்கு. இன்ஷா அல்லாஹ்.

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா...........

வாசிச்சுட்டு நல்லா வாய்விட்டுச் சிரிச்சுருக்கேன். (நோய் விட்டுப்போகுதான்னு பார்க்கணும்)

பத்து ஏக்கர் கனவு சூப்பர்ம்மா!!!! பக்கத்துலே இன்னொரு பத்து ஏக்கர் வாங்க நான் ரெடி. கனவு எனக்குமட்டும் வராதா:-))))))))

அப்புறம் ஒரு சின்ன விஷயம். கொசுவத்தி நம்ம கடையில்தான் ஹோல்ஸேல். நினைவு வச்சுக்குங்க. உங்களுக்குன்னு சகாயவிலையில் தருவேன்,ஆமாம்:-)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அடடே... மட்டன் இல்லாத மட்டன் குழம்பா!

ஸ்ரீராம். said...

வெஜ் ஐட்டம் சமைக்கத்தான் திறமை தேவை என்ற வரிகள் சந்தோஷத்தைக் கொடுத்தன. படிக்க சுவாரஸ்யமாத்தான் இருந்தது. ஆனால் என்ன சொல்ல வந்தீங்க, இன்னும் முடிக்கலையோ என்று தோன்றுகிறதே....

ரஹீம் கஸ்ஸாலி said...

ha..ha...ha

கோமதி அரசு said...

ஒரு பத்து ஏக்கரா வயல் வாங்கி, அதுல அவர் மாட்டை ஓட்டிகிட்டே, தோள்ல மண்வெட்டியோட “விவசாயி... விவசாயி..”ன்னு பாடற மாதிரி கனவெல்லாம் கண்டுகிட்டேன். கனவு மட்டும்தான் இப்போதைக்கு...

பேக் டூ ”ஆல் அவுட்”!! (ஐயோ, எல்லாரும் வெளியே போங்கன்னு சொல்லல) இப்படி இந்த எண்ணங்கள்லயே இருந்ததுனால, அவர் “மாட்டுப் பண்ணை வச்சிருந்தீங்களா”ன்னு கேட்டதும், ரொம்ப உற்சாகமாகிப் போய் “எங்க ஆத்தா ஆடு வளத்தா, மாடு வளத்தா, கோழி வளத்தா”ன்னு ரொம்பப் பரவசமாச் சொல்லிகிட்டே வந்தேன். திடீர்னு, “கட்!! கட்!! கட்!! ஸ்ஸ்ஸப்பா.......!! மாட்டுக்கு வைக்கோல்ல செஞ்ச கன்னுகுட்டியைக் காட்டி, பாலைக் கறப்பாங்களே. அதுமாதிரி, நாலே நாலு எலும்பைப் போட்டுட்டு, இதை மட்டன் குழம்புன்னு சொல்றியேன்னு கேட்க வந்தா.....!!”

???? !!!!! ???? !!!!! ???? !!!!! ???? !!!!!//

ஆஹா! நல்ல நசைச்சுவை பதிவு.
ஒவ்வொரு வரியும் சிரித்து மகிழ வைத்து விட்டது ஹுஸைனம்மா.

பூவோடு சேர்ந்த நார் மணக்கிறது.

Vidhya Chandrasekaran said...

\\அம்மாவைப் போலவே மனைவியும் நல்ல ருசியா, விதவிதமாச் சமைச்சுப் போட்டுகிட்டிருந்தா உடம்பு என்னத்துக்காகும்? இப்பத்தான் கணக்கு டேலியாகுது பாருங்க!! \\

ஆஹா என்னைப் போல் ஒருத்தி:)))))

அங்கங்க வாய்விட்டு சிரிச்சேன். நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

சுவையோ சுவை... :) உங்க எழுத்தினைச் சொன்னேன்...

நல்ல நகைச்சுவையாக எழுதி இருக்கீங்க!

சாந்தி மாரியப்பன் said...

//அதுல அவர் மாட்டை ஓட்டிகிட்டே, தோள்ல மண்வெட்டியோட “விவசாயி... விவசாயி..”ன்னு பாடற மாதிரி கனவெல்லாம் கண்டுகிட்டேன்.//

அப்படியே,.. நீங்க கஞ்சிக்கலயம் கொண்டுட்டு போற மாதிரியும் கனவு வந்துருக்கணுமே :-)) அப்பத்தான் டேலி ஆகும். யூ நோ ;-)

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹா ஹா ஹா ஹா...

ரொம்ப கஷ்டம்பா எங்க மச்சான் நிலைமை... :) :)

வஸ்ஸலாம்...

Thava said...

அருமையான பகிர்வு சகோ..நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

ஸாதிகா said...

அதுவும் என்ன மாதிரி ஆட்கள் தைரியமா சமைக்கவும் செய்றோம்னா, அது இதைல்லாம் நம்பித்தானே? ///

இப்படியே சொல்லி சமாளித்து காலத்தை ஓட்டுங்க.:)

ஸாதிகா said...

தங்கச்சி தலைப்பு ரொம்ப ஓவரா இல்லை...?

ஸாதிகா said...

மாட்டுக்கு வைக்கோல்ல செஞ்ச கன்னுகுட்டியைக் காட்டி, பாலைக் கறப்பாங்களே. அதுமாதிரி, நாலே நாலு எலும்பைப் போட்டுட்டு, இதை மட்டன் குழம்புன்னு சொல்றியேன்னு கேட்க வந்தா.....!!”//

அடேங்கப்பா..கில்லாடி என்று திரும்ப திரும்ப நிரூபிக்கறீங்களேப்பா!

Avargal Unmaigal said...

இப்படி எல்லாம் நீங்க சமைக்க ஆரம்பிச்ச அண்ணாச்சி கையிலே கரண்டி பிடிக்கிற நேரம் வந்தாச்சின்னு அர்த்தம்... அண்ணா பொருத்தது போதும் கரண்டிய கையிலே எடு அண்ணா

Geetha6 said...

super!

கீதமஞ்சரி said...

படிக்கும்போதே சிரிப்பு தாளல. அதுவும் இறைவன் போட்டக் கணக்கைச் சொல்லி அசத்தினீங்களே... சபாஷ். கனவுப் பாட்டும் சூப்பர். கடைசியாக் கவுத்ததைத்தான் தாங்கமுடியல. நல்ல சுவாரசியமான எழுத்துநடை. பாராட்டுகள் ஹூஸைனம்மா.

ADHI VENKAT said...

உங்க எழுத்தை ரசித்தேன்.....

சிநேகிதன் அக்பர் said...

//அப்பவும் எண்ணிப் பாத்து, கரெக்டா தேவைக்கு எண்ணி எண்ணிதான் வாங்குவேன்.//

அத்தனை ஆடா வாங்குவீங்கன்னு பார்த்தா. எலும்புன்னு சொல்லி பட்டுன்னு ஒடிச்சிட்டிங்களே!

மேலப்பாளையத்து காராங்களுக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்றது நம்பும்படியா இல்லை! எங்கம்மா கூட உங்க ஊர்தான்.

சிநேகிதன் அக்பர் said...

//அப்பவும் எண்ணிப் பாத்து, கரெக்டா தேவைக்கு எண்ணி எண்ணிதான் வாங்குவேன்.//

அத்தனை ஆடா வாங்குவீங்கன்னு பார்த்தா. எலும்புன்னு சொல்லி பட்டுன்னு ஒடிச்சிட்டிங்களே!

மேலப்பாளையத்து காராங்களுக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்றது நம்பும்படியா இல்லை! எங்கம்மா கூட உங்க ஊர்தான்.

சிநேகிதன் அக்பர் said...

//அப்பவும் எண்ணிப் பாத்து, கரெக்டா தேவைக்கு எண்ணி எண்ணிதான் வாங்குவேன்.//

அத்தனை ஆடா வாங்குவீங்கன்னு பார்த்தா. எலும்புன்னு சொல்லி பட்டுன்னு ஒடிச்சிட்டிங்களே!

மேலப்பாளையத்து காராங்களுக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்றது நம்பும்படியா இல்லை! எங்கம்மா கூட உங்க ஊர்தான்.

சிராஜ் said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க??? மட்டன் குழம்பு வச்சிங்களா வைக்கலையா???

அது என்ன எண்ணி எண்ணி மட்டன் வாங்குவீங்க?? ஒரு ஆளுக்கு ஒரு துண்டு என்றா???? அநியாயம். உங்க வீட்டுக்கு ஒரு தடவ வந்த கெஸ்ட் திரும்பி வந்து இருக்க மாட்டாங்களே???? கவனிச்சிங்களா???

ஹுஸைனம்மா said...

எல்லாருக்கும் நன்றிங்க. நெட் இன்னும் சரியாகலை. சரியானதும், தனித்தனியா பதில் எழுதுறேன், இன்ஷா அல்லாஹ்.

ஸாதிகா said...

///மேலப்பாளையத்து காராங்களுக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்றது நம்பும்படியா இல்லை! எங்கம்மா கூட உங்க ஊர்தான்.///

///அது என்ன எண்ணி எண்ணி மட்டன் வாங்குவீங்க?? ஒரு ஆளுக்கு ஒரு துண்டு என்றா???? அநியாயம். உங்க வீட்டுக்கு ஒரு தடவ வந்த கெஸ்ட் திரும்பி வந்து இருக்க மாட்டாங்களே???? கவனிச்சிங்களா???//

அதற்குத்தான் தங்கச்சி சமைக்க தெரியாது சமைக்க தெரியாது என்று அப்பப்ப டயலாக் விட்டுகொண்டு இருப்பதை நான் அப்பவே கண்டு பிடிச்சிட்டேனே.

ஹேமா said...

பாவம் உங்க வீட்டுக்காரர்.உங்க நகைச்சுவையே போதும் அவருக்கு வாழ்வு சுவைக்க !

ஜெய்லானி said...

//விருந்தாளிங்க வந்தா மட்டும்தான் மட்டன் வாங்குறது. அப்பவும் எண்ணிப் பாத்து, கரெக்டா தேவைக்கு எண்ணி எண்ணிதான் வாங்குவேன். ஆனாலும், சிக்கனம் பாக்கிற நம்ம கை சும்மா இருக்குமா, அதுல ரெண்டுமூணு எலும்பை உருவி ஃப்ரீசர்ல வச்சுகிட்டா, இன்னொரு நாள் மட்டன் குழம்புக்கும் ஆச்சு, வீட்ல (பெரீய்ய) குழந்தை(ங்களு)க்கும் சந்தோஷம்!! ஒரே கல்லுல //

இதை நினைச்சு பார்த்து சிரிச்ச சிரிப்புல கண்ணுல தண்ணியே வந்திடுச்சு ... முடியல்... ஹா..ஹா.....

இப்பவெல்லாம் 1கிலோ வாங்கினா அதுல அரை கிலோ எலும்புதானே வருது :-))).

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது. எனது பதிவுப் பக்கம் வந்து பெற்றுச் செல்லவும்

Seeni said...

sirippu!

Butter_cutter said...

மேட்டர் இல்லாம மோட்டார் ஓட்ட உங்களால் தான் முடியும் . அருமை ,வாழ்த்துக்கள் .

Jaleela Kamal said...

சரியான காமடி

ஆனால் என்னைய மாதிரியே

மொத்தமா செய்யும்போது நாலு எலும்ப அதெப்ப்படி உருவி வைக்கிறீஙக் ஹிஹி

எல்லாம் டயட் காரனமாக் தான் நாலு எலும்பு ஹிஹி

ஹுஸைனம்மா said...

துளசி டீச்சர் - வாங்க.
//நோய் விட்டுப்போகுதான்னு//
பாத்துட்டுச் சொல்லுங்க, பில் அனுப்புறேன். :-))))

//பக்கத்துலே இன்னொரு பத்து ஏக்கர்// இது டீல், நீங்க வாங்கினாலும், நான் வாங்கினாலும் பக்கத்துப் பத்து ஏக்கரா நமக்குத்தான், ஓகே? (கனவுலகூட அப்படித்தான்!!)

பதிவுலகின், கொசுவத்தி ஹோல்சேல் டீலர் நீங்கதான். நாங்க சின்னப்பசங்களும் கொஞ்சம் உங்களை மாதிரி, கத்து(தி)க்கிறோமே. :-)))))

நிஜாம் பாய் -ககபோ, அதேதான்!! (உங்க வீட்லயும் அப்படித்தானா?) :-)))

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //வெஜ் ஐட்டம் சமைக்கத்தான் திறமை தேவை என்ற வரிகள் சந்தோஷத்தைக் கொடுத்தன//
பின்ன, வாரத்துல அஞ்சு நாளாவது நாங்களும் வெஜிட்டேரியன்தானே, அந்த அனுபவம்தான்!!

//என்ன சொல்ல வந்தீங்க, இன்னும் முடிக்கலையோ//
அவ்வ்வ்வ்.... அதுவந்து, இது எண்ண அலைகளைப் பகிர்ந்துகிட்டேன்னு வைங்களேன். அலைகளுக்கு முடிவேது? :-)))))

ஹுஸைனம்மா said...

ரஹீம் கஸாலி - வாங்க. நன்றி.

கோமதிக்கா - நன்றிக்கா. //பூவோடு சேர்ந்த நார் மணக்கிறது// இது என்னையா, அவரையா? :-))))

வித்யா - //ஆஹா என்னைப் போல் ஒருத்தி// நன்றிங்க, என்னைப் போலவும் நிறைய பேர் இருக்காங்கங்கிறது எவ்ளோ சந்தோஷமான விஷயம்!!

ஹுஸைனம்மா said...

வெங்கட் - //சுவையோ சுவை... :) உங்க எழுத்தினைச் சொன்னேன்// அதானே பாத்தேன்!!

அமைதிக்கா - /நீங்க கஞ்சிக்கலயம் கொண்டுட்டு போற மாதிரியும் கனவு வந்துருக்கணுமே//
அது எதுக்கு, வயல்ல இருக்க ரெண்டு இலை, தழைங்க, காய், கனியைத் தின்னுகிட்டா போதாது? ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம், நேரமும் மிச்சம். :-)))

ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம். அவருக்கென்னா கஷ்டம், சமைக்கிற எம்பாடுதான்... :-)))

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //தங்கச்சி தலைப்பு ரொம்ப ஓவரா இல்லை...?//
இல்லவே இல்லை, ஆண்கள் மனைவிங்கிற பூ வந்ததுக்கப்புறம்தான் மணக்க ஆரம்பிக்கீறாங்க!!

//கில்லாடி என்று திரும்ப திரும்ப நிரூபிக்கறீங்களேப்பா//
ஹி.. ஹி.. ரொம்பப் புகழ்றீங்க்க்கா..

அவர்கள் உண்மைகள் - ஹுக்கும், அது நடந்துட்டாலும்... இந்தப் பாடு படுத்தியும், நானே சமைக்கிறேன்னு ஒருநாள்கூடச் சொன்னதில்லை!!

கீதா6 - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

கீதமஞ்சரி - ”இன்னாருக்கு இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் அன்று” !! எங்கெல்லாமோ சுத்தி, நமக்குன்னு ஒருத்தர் அமையறார்னா, அது இறைவன் கணக்குதானேப்பா. (அப்படின்னு மனசைத் தேத்திக்கவும் செய்யலாம்) :-))))

//கடைசியாக் கவுத்ததைத்தான் தாங்கமுடியல.//
நான் பல்பு வாங்குறதுக்குன்னே பிறந்தவளோன்னு எனக்கே அப்பம்லாம் சந்தேகம் வரும்!!
ரொம்ப நன்றிப்பா.

கோவை2தில்லி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அக்பர் - சமைக்கத் தெரியாம இருக்க முடியுமா? சமைப்பேன், ஆனா என்னோட் கொள்கை “உணவே மருந்து” என்பதால், எல்லாமே அளவோடு இருக்கும்படி பார்த்துப்பேன்.

ஹுஸைனம்மா said...

சிராஜ் - தம்பி,
//மட்டன் குழம்பு வச்சிங்களா வைக்கலையா//
வச்சேன், ஆனா வைக்கலை. :-)))

//அது என்ன எண்ணி எண்ணி மட்டன் வாங்குவீங்க?? ஒரு ஆளுக்கு ஒரு துண்டு என்றா???? அநியாயம்//
அப்படி இல்லைங்க. இன்னிக்கு விருந்துங்கிற பேர்ல விதவிதமான ஐட்டஙக்ளை, அளவுக்கதிகமா சமைச்சுப்ப்போடுறதும்; அதை வ்ந்தவங்களின் உடல்நிலைக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சாக்கூட, “விருந்தோம்பல்”ங்கிற பேர்ல, அவங்களுக்குத் திணிக்கிறதும்; மிஞ்சினதில் இரண்டுமூணு நாள் நாமளே சாப்பிடுறது, மீதியைக் குப்பையில் போடுறது - இதெல்லாம் தவிர்க்கணும். அதுக்காகத்தான், முடிஞ்சவரைச் சரியான அள்வுல சமைக்க முயற்சிக்கீறது.

//உங்க வீட்டுக்கு ஒரு தடவ வந்த கெஸ்ட் திரும்பி வந்து இருக்க மாட்டாங்களே??//
அதெல்லாம் வருவாங்க. வர்றவங்களை, சாப்பிடுங்க, சாப்பிடுங்கன்னு நச்சரிக்க மாட்டேன். அதே சமயம், அவங்க சொந்த வீட்டுல சாப்பிடுற மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. இதை நீங்க எப்படி அர்த்தப்படுத்திகிட்டாலும் சரி. :-))))

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - //அதற்குத்தான் தங்கச்சி சமைக்க தெரியாது சமைக்க தெரியாது என்று அப்பப்ப டயலாக் விட்டுகொண்டு இருப்பதை//
ஒருவகையில், என் வீட்டிற்கு வருபவர்கள் ’ரொம்ப எதிர்பார்க்காம’ இருக்க என் ‘டயாலாக்குகள்’ உதவலாமே, அதுக்குத்தான்!! ;-)))))))

ஹேமா - இல்லைங்க, வீட்டுல அவருக்குத்தான் ‘ஜோக்கர்’ ரோல்; எனக்கு ‘ஹிட்லர்’ ரோல!! ;-))))

ஜெய்லானி - //1கிலோ வாங்கினா அதுல அரை கிலோ எலும்புதானே// ஆமாங்க, அரைகி எலும்பு, கால்கிலோ கொழுப்பு போக மீதி கா.கி.தான் கறி!! அந்த சோகம் தனிக்கதை!!

ஹுஸைனம்மா said...

வித்யா மேடம் - நன்றிங்க. ”குட்டி யானை” (Piaggio) எடுத்துகிட்டு வந்துட்டிருக்கேன், நாலு இடத்துல இருக்க விருதையும் எடுத்துட்டுப் போகணுமே!! :-)))))

சீனி - நன்றிங்க.

ஜலீலாக்கா - நாமல்லாம் தின்னவேலிக்காரங்க; சிக்கனம் கூடவே பிறந்ததாச்சே!! ;-)))

பட்டர்-கட்டர் - //மேட்டர் இல்லாம மோட்டார் ஓட்டுறது// அறிவாளிங்க நீங்க.... ;-)))))

பாச மலர் / Paasa Malar said...

கலக்கல் பதிவு..

Unknown said...

1000000 likes:)